“ஆனாலும் இந்த காட்டமுத்து ரொம்ப ஸ்டிரிக்ட்ப்பா” சிரிப்போடு ப்ளுடூத் வழியாக மறுபுறம் லைனில் இருந்த வம்சி கிருஷ்ணா சிரித்தான்..
வம்சி விசாலாட்சியின் மகன்.. நம் ப்ரதாப்பின் தம்பி.. ராம்வோட நண்பன்..
“டேய்” என்று தானும் சிரித்த ராம்.. “இப்புடி இல்லைன்னா அவ்ளோ தான் நம்மளை ஏய்ச்சிட்டு போயிருவாங்கடா”
ஆனாலும் பாவம் டா அந்த ப்யூட்டி “என்ன பாடு படுத்திட்ட” வம்சி கவலைப்பட,
“பொண்ணுங்கன்னா போதுமே, ஆரம்பிச்சிருவியே ப்யூட்டி டியர்ன்னு, இந்த ப்யூட்டி ஆபிஸ்க்கு வந்த நோக்கம் தெரியும் தானே உனக்கு, அதுக்காகவே இன்னும் வச்சு செய்யனும்டா”, என்றான் ராம்..
“ம்.. தெரியும் தெரியும், ஆனா அந்த ப்யூட்டிக்கு தெரியலையே தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் மா அண்ணாய்யா கிட்ட அது எல்லாம் பலிக்க போறதில்லைன்னு” என்று சிரித்தான் வம்சி கிருஷ்ணா..
“பாவம் பல்பு வாங்க போகுது” என்றான் ராம்,
“ரொம்ப கவலைப்படற போல, பேசாம அந்த ப்யூட்டியை நீ கரெக்ட் பண்ணிடு” வம்சி சொல்ல
“அய்யயே” என ராம் அலற,
“என்னடா இப்புடி பதற, உனக்கு வேண்டாம்ன்னா விடு நான் வச்சுக்கிறேன்” என்றான் வம்சி.
“என்னமோ பண்ணு, நீதான் அதில் எல்லாம் எக்ஸ்பர்ட் ஆச்சே, பிஞ்சில்லயே பழுத்தவன்” என்ற ராம் “ப்ரியா தான் ரொம்ப கவலைப்படுறாடா பாவம்” என்றான்
“எதுக்கு கவலைப்படனும் பயப்படனும், அது தேவையில்லாதது, அவ சும்மா இருந்தாலும் கூடவே ஒன்னு சுத்துது பார்த்தியா நிவின்னு ஒன்னு அது வாயை வச்சிட்டு சும்மா இருக்காமா குட்டையை குழப்பி விட்டுட்டே இருக்கும்” என்றதும்..
“டேய் நிவியை இழுக்காத” என ராம் கோவப்பட்டான்
“நான் எங்கடா இழுக்குறேன், அது தான் சும்மா இருக்காமா, என் அண்ணன் குடும்பத்தை இழுத்து விஷ்ணுவுக்கு நல்லது பண்றேன்னு சொல்லி அவ மனசை கலைச்சு விடுது.. அதை அடக்கி வை.. இல்லன்னா நான் நாளைக்கு வந்ததுக்கு அப்புறம் இருக்கு உன்னோட நிவிக்கு”,
“டேய் வம்சி” ராம் சத்தம் போட,
சரி சரி உன்னோட பாவியை பத்தி டேய் மறுபடியும் ராம் சத்தம் போட
“சரிடா நிவியை ஒன்னும் சொல்ல மாட்டேன் போதுமா, அந்த விஷயத்தை விடு, நான் கால் பண்ண விஷயத்தை விட்டுட்டு ஏதேதோ பேசிட்டு இருக்கேன்..
“என்ன விஷயம் சொல்லுடா”
“நேனு ரேப்புக்கு வஸ்தாவுடா”(நான் நாளைக்கு வருவேன்) வம்சி சொல்ல
“யாரைடா” சிரித்தபடி ராம் கேட்டான்,
“ஆ… உன்னை தான்டா உன்ன விட்ட யாரும் எனக்கில்லை பாரு பாரு” வம்சி பாட,
“ச்சீ ச்சீ எருமை நான் அந்த மாதிரி ஆள் இல்ல ஆளை விடு” என்றதும் இருவரும் சிரித்தனர்,
“என்னடா தீடிர்னு காரணம் இல்லாம வர மாட்டியே என்ன விஷயம்” ராம் கேட்க,
“எல்லாம் அந்த ப்யூட்டிக்காக தான்.. அந்த ப்யூட்டியை பார்த்ததும் நான் கீழ விழுந்துட்டேன்.. அதான் அதை கரெக்ட் பண்ணலாம்னு வரேன்” வம்சி சொல்ல
“ஓ.. அது உன் அண்ணாய்யாவ கரெகட் பண்ண பார்க்க, நீ அதை கரெக்ட் பண்ண பார்க்க ஒரே கூத்தா இருக்க போகுது ஆபிஸில் அது தானே” ராம் சிரிக்க,
“அதே தான்” என்ற வம்சி சிரித்தான்,
“லில்லி பாவம்” ராம் சொல்ல,
“அப்ப லில்லியை உனக்கு கரெக்ட் பண்ணி விடுவா”..
“ஆளை விடுங்க டா” என்ற ராம் போனை வைத்து விட்டு சிரித்தான்.. அவனுக்கு தெரியுமே வம்சியை பற்றி, அவன் சொன்னது பொய்யான காரணம் என்று, பிஞ்சுல பழுத்தவன் என்றவன் வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டான்..
தலையை பிடித்தபடி விஷ்ணு அமர்ந்து இருந்தாள்.. நடப்பது எதையும் தடுக்க முடியவில்லையே என்ற இயலாமையில் தன் மீதே கோவம் வந்தது அவளுக்கு, ப்ரதாப்பை அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை, என்ன நினைக்கிறார், ஏன் இப்புடி பண்ணுறார் ஒன்னும் புரியலையே மண்டைக்குள் ஓடி கொண்டு இருக்க,
இங்கே நிவியோ, அவ பேர் என்ன என கேட்க,
“லில்லி” என்றாள் விஷ்ணு..
“அவ லில்லி இல்லைடி, உனக்கு வில்லி ஆக்குறதுக்காவே, அவளை உன் மாமியார் அனுப்பி இருக்கு, இப்ப கூட உனக்கு ரோஷம் வரலையா?” நிவி சத்தம் போட விஷ்ணு அமைதியாக இருந்தாள்.. இருவருமே ஆபிஸ் கேன்டீனில் அமர்ந்து இருந்தனர்..
லில்லியை வேலைக்கு அமர்த்தியது அதுக்கு சொல்லப்பட்ட காரணம், எல்லாம் விஷ்ணுவை விட நிவிக்கு தான் கோவத்தை கொடுத்தது.. அதிலும் விஷ்ணுவின் அமைதி அதை தான் அவளால் ஏற்க முடியவில்லை..
“உண்மையாவே உன் மாமியார் சார்க்கு அம்மா தானே, இல்லை வேற ஏதுமா, இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்குதே அதான் டவுட்டா இருக்குது” நிவி விஷ்ணுவிடம் கேட்க
“போ போய் அவங்க கிட்ட கேளு, ஏன் என்கிட்ட கேட்கிற” எரிந்து விழுந்தாள் விஷ்ணு,
“நான் ஏன்டி கேட்கனும், என் மாமியாரா அது, நீ போய் கேளு, என்ன வேலை பார்க்கிறங்கன்னு சத்தம் போடு” என்றவள் “அது சரி நீ கேட்டுட்டாலும்” என்று சலித்து கொண்டாள்..,
“ம்பச் நானே செம கடுப்பில் உட்கார்ந்து இருக்கேன்.. நீ வேற போடி” விஷ்ணு எரிந்து விழ,
“இதை எல்லாம் என்கிட்ட காட்டு, காட்ட வேண்டியவங்கிட்ட கோட்டை விட்டுரு என கோவப்பட்ட நிவி, “எனக்கே நடக்கிறதை எல்லாம் பார்த்திட்டு சும்மா இருக்க முடியலை,
உன்னால் மட்டும் எப்புடி தான் அமைதியா வேடிக்கை பார்த்துட்டு இருக்க முடியுதோ”,
“வேற என்ன பண்ண சொல்ற, நான் சொன்னா மட்டும் அதை அப்புடியே கேட்கவா போறார்” சலித்து கொண்டாள்..
“ஒரு தடவையாவது சொல்லி தான் பாரேன், அப்ப தானே கேட்குறாங்களா இல்லைன்னா தெரியும்”..
“போடி அது எல்லாம் கேட்க மாட்டார், அந்த ஊறுகாய் நான் சொன்னதுக்காகவே வேணும்னு செய்யுற மனுஷன் டி, அதோட அவர் மனசில் என்ன இருக்கு என்ன நினைக்குறார்னே தெரியலை.. அவரோட அமைதியை நான் எப்புடி எடுத்துக்கிறதுன்னே புரியாமா சுத்திட்டு இருக்கேன் நிவி, இதில் இடையில்ல இந்த கௌசிக் வந்தா அப்புடிங்கிற மாதிரி இந்த லில்லி பல்லி வேற ச்சே” என்றவள்
“வேலைக்கு மட்டும் தானே சேர்த்து இருக்கார் பார்ப்போம் ,என்ன நடக்குதுன்னு” என்று நிவிக்கு சமாதானம் சொல்வது போல் தனக்கு தானே சொல்லி கொண்டாள்..
“நீ என்ன நடக்குதுன்னு பார்த்துட்டே இருடி .. அந்த கேப்ல அவ மிசஸ் விஷ்ணுவாகி உன்ன எக்ஸ் விஷ்ணுவா” ஆக்க போறா, என நிவி சொல்லவும்,
“நிவேதா” என பல்லை கடித்து விஷ்ணு முறைக்க,
“எதுக்கு முறைக்கிற, நான் உண்மையை தான் சொல்றேன்.. ஜென்ஸ் ஆல்வேஸ் ஜென்ஸ் தான்டி, சபலபுத்திக்காரங்க..
கிளி மாதிரி வொய்ப் இருந்தாலும் குரங்கு மாதிரி கீப் வச்சுப்பாங்கன்னு பழமொழியே இருக்கு..
ஆல்ரெடியே நீ கிளி மாதிரி இல்ல”,
“ஏய் உன்னை” விஷ்ணு அடிக்க கிட்ட வர
“கிளி மாதிரி இல்லைன்னு சொன்னேன் குரங்குன்னு சொன்னனா”, அடங்கு, என்றாள் நிவி..
“அவர்கிட்ட அது எல்லாம் நடக்காது அவர் நெருப்பு, நீ என்னை குழப்பாத” என்றாள் விஷ்ணு..
“அதை தெரிஞ்சு தான் உன் மாமியார் பஞ்சை பக்கத்தில் அனுப்பி இருக்கு”..
“நீ இப்ப வாயை மூடல அவ்ளோ தான்”..
“பஞ்சு நெருப்பும் பக்கத்து பக்கத்தில் இருந்தா பத்திக்கும்னு நான் சொல்றேன், இல்லைன்னு நீ சொல்ற”, ஒரு வேளை பத்திக்கிட்டா,
“போடி அதுக்கு எல்லாம் பத்திக்க வாய்ப்பே இல்லை.. இதை விட பக்கத்தில் அந்த நெருப்போடு நான் இருந்து இருக்கேன்.. .. அப்புடி ஒன்னும் பத்திக்கலையே” என்றதும்
“ஆ… நீ நீர்த்து போன பஞ்சா இருந்திருப்பா, ஆனா லில்லி அப்புடியா” என்ற நிவி கழுத்தை பிடித்த விஷ்ணு,
“உன்னை இப்ப நான் கொல்ல போறேன்.. எதையாவது சொல்லி என்னை குழப்பமா இரு”
“ஆ.. கொலை கொலை” நிவி கத்தினாள்.. அவள் மீதிருந்த கையை எடுத்து விட்டு விஷ்ணு கலங்கி அமர,
“உன்னை கஷ்டப்படுத்தனும்னு நான் எதையும் சொல்லலடா, நீ பார்த்துட்டு இருக்க தானே இப்ப நாட்டுல நடக்கிறதை, எத்தனை எத்தனை நியூஸ் ஓடுது..
லவ் பண்ணி கல்யாணம் பண்ணி பசங்க காலேஜ் போற வயசு வந்த அப்புறம் கூட இன்னோரு பொண்ணு மேல்ல லவ்வு சொல்லி சொந்த மனைவி பசங்ககளை விட்டுட்டு போறவங்க இருக்காங்க.. அது உனக்கும் தெரியும் தானே, நீ நேராவே பார்த்து இருக்க”
“ஆம்பங்களை அப்புடி தான்.. உன் வாழ்க்கையும் நல்லா இருக்கனும் தான் நான் சொல்றேன்.. அமைதியா இருந்து வாழ்க்கையை தொலைச்சிரதா, ஏன்னா உன்னால் சாரை விட்டு இருக்க முடியாதுன்னு எனக்கு தெரியும்.. அதை உரியவங்க கிட்ட மனசை விட்டு சொல்லு,இப்புடி அமைதியாகவே இருந்து இன்னோரு காவேரியாய் மாறிடதா என்ற நிவி அங்கிருந்து சென்றாள்.. அவள் கண்ணும் கலங்கி இருந்தது..
“போச்சு போச்சு இவளை என் அண்ணா குடும்பத்தை கண்டதையும் சொல்லி நடு ரோட்டில் நிற்க வச்சுறவ போலயே என புலம்பினான் வம்சி..மொபைலில் கனெக்ட் செய்யப்பட்டு இருந்த சிசிடிவி வீடியோ வழியாக இவர்களை பார்த்து கொண்டே,
“கைஸ் ராம் அழைக்க, விஷ்ணு நிவி அஸ்வின் பூரணி அனைவரும் நிமிர்ந்து பார்க்க ராம் அருகே லில்லி நின்று இருந்தாள்.. “இவங்க லீலா உங்க ஆர்க்கிடெக் டிபார்ட்மென்ட்ல சேர்த்துக்கோங்க.. என்ன என்ன வொர்க்கோ சொல்லி கொடுங்க என்று கூற,
அவனை விஷ்ணு முறைத்தாள்… அதை பார்த்தவனோ எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார் தான் என்றபடி தலை அசைத்தவன் அங்கிருந்து நகர்ந்து விட்டான்..
“பார்த்தியா ராம் அண்ணா ராம் அண்ணா சொல்லுவ எப்புடி எட்டப்பன் வேலை பார்த்திட்டு போறான்னு நிவி கூற,
விஷ்ணு எப்போதும் போல் அவள் கோவத்தை எல்லாம் அந்த பாவப்பட்ட கீபோர்ட் மீது காட்டி கொண்டு இருந்தாள்..
“ஹாய் கைஸ் ஐயம் லில்லி” என்று லில்லி கை அசைக்க, ஐயம் பூரணி என்று பூரணி ஆர்வமாக அறிமுகமாகி படுத்தி கொண்டாள், அஸ்வினும் நிவியும் கூட தங்கள் பெயரை சொல்லி அறிமுகமாகி கொண்டனர்..
“ஹாய் நீங்க” விஷ்ணு அருகே வந்து லில்லி கை நீட்ட, வேறு வழியில்லாமல் விஷ்ணுப்ரியா என்று கூறிய விஷ்ணு மீண்டும் கீபோர்ட் டை தட்டிய தட்டில் லில்லியே பயந்து விட்டாள்..
“இவங்க எப்பவும் இப்புடி தான் டெர்ரா” பூரணியிடம் லில்லி கேட்க.. “ச்சே ச்சே அவ ஒரு டம்மி பாவா” என்றதும் சிரித்த நிவி ஆ.. என்று கத்தினாள் வேறு என்னவாக இருக்கும் விஷ்ணுவின் ஹீல்ஸ் தான்..
“என்னாச்சு லில்லி கேட்க.. குத்துனது நண்பனா இருந்தா செத்தா கூட வெளிய சொல்ல கூடாதுமா” என்று தன் கால்லை உதறி கொண்டே நிவி சொல்ல அவள் தான் புரியமால் பார்த்தாள்..
“அவங்க இரண்டு பேரும் எப்பவும் இப்புடி தான் லூசு மாதிரி உளறிட்டே இருக்கும்.. நீங்க வாங்க” என்ற பூரணி, “உங்களை மார்னிங் பார்க்கும் போது என்ன என்னவோ நினைச்சேன் தெரியுமா”,
“என்ன நினைச்ச லில்லி கேட்க, அதை எல்லாம் ப்ரி டைம் அப்புறம் பேசலாம் இல்லன்னா இந்த ராம் சார் கத்துவார் என்ற பூரணி..
“நிவி நீதான் டுடே வொர்க் முடிச்சிட்டட தானே, இவங்களுக்கு என்ன என்ன பண்ணனும் சொல்லி கொடுத்துரேன்.. நான் இன்னும் பாதி கூட முடிக்கலைடி” என்ற பூரணி தன் வேலையை கவனிக்க ஆரம்பிக்க,
“ம்”.. என்ற பெருமூச்சு விட்ட நிவி,
“வாங்க” என்ற நிவி சிஸ்டம்மை ஓபன் செய்ய, “எனக்கு இதை பத்தி எல்லாம் சொல்லி தர வேண்டாம்.. ஒன்னே ஒன்றை பற்றி மட்டும் சொல்லுங்க” என கேட்டாள் லில்லி..
“எதை பத்தி” நிவி கேட்க..
“உங்க சாரை பத்தி தான் நான் வந்த வேலையே அதுக்கு தானே என் கண் அடித்து கேட்க,
விஷ்ணு நிமிர்ந்து லில்லியை பார்த்தாள், நிவி தான் வந்த சிரிப்பை உதடு மடிக்கி அடக்கியவள், “எனக்கு அவரை பத்தி சரியா தெரியாது, இந்த ஆபிஸ்லியே இவளுக்கு மட்டும் தான் நல்லா தெரியும்” என்று விஷ்ணுவை கை காட்டியவள், “அவகிட்ட கேட்டுக்கோங்க விட்ராதீங்க இவளுக்கு நிறையா தெரியும்” என்றதும் விஷ்ணுவை லில்லி ஆர்வமாக பார்க்க,
நிவியை முறைத்த விஷ்ணு அதே முறைப்போடு “அவர்க்கு கல்யாணம் ஆகிடுச்சு உனக்கு தெரியுமா?” என் கேட்க
“டிவோர்ஸ்ஸே ஆக போகுது அது உனக்கு தெரியுமா” லில்லி கேட்க,
ஆஹா ஆஹா கில்லியா சொல்லி அடிக்கிறா இல்ல இந்த லில்லி என்ற நிவி இன்னோரு கால்லையும் உதறினாள்… விஷ்ணுவின் ஹீல்ஸ் உபயத்தால்,