“சாகறதுன்னா நடு ரோட்டில் போய் நிற்கனும் மிஸ்டர் வம்சி கிருஷ்ணா.. இப்புடி பார்க்கிங் வழியை மறிச்சிட்டு நிற்க கூடாது” என்றான் ராம்.. ப்ரதாப் சென்ற வழியையே பார்த்து கொண்டு நின்று இருந்த வம்சியிடம்,
அவனை வம்சி முறைக்க, ராம் தன் வண்டியை பார்க் செய்துவிட்டு வந்தவன்,
“முன்னால் தான் எந்த பொண்ணும் இல்லையே அப்புறம் யாரை இப்புடி வெறிச்சு வெறிச்சு பார்த்துட்டு வழியை மறிச்சிட்டு நிற்கிற” என கேட்க
“என் அண்ணாய்யாவடா” என்றான் வம்சி..
“ச்சீ ச்சீ முத தள்ளி நில்லு, ஒரு ஆம்பளையை அதுவும் அண்ணனை யாராவது இப்புடி வெறிச்சு வெறிச்சு பார்ப்பாங்களா, உன்கிட்ட இருந்து எட்டி இருக்கிறது தான் எனக்கு நல்லது போலயே” என்ற ராம் தன் சட்டையின் மேல் பட்டனை போட,
“அடிங்கக உன்னை, எங்க அம்மா அப்பவே சொன்னாங்கடா இந்த ராம் பையன் கூட சேராதன்னு, கேட்கமால் உன் கூட சுத்துறேன்ல எனக்கு இது தேவை தான்” என்று வம்சி முறைக்க,
“என்கிட்டயும் ஒருத்தவங்க சொன்னாங்கடா, இந்த வம்சி பய கூட சேராத ராம், அவன் உன்னை கெடுத்துருவான்னு.. நான் தான் அவங்க பேச்சை கேட்கல”..
“ஐய்ய உன்னையவா, வொக் ச்சீ, அந்த ஒருத்தவங்க கிட்ட சொல்லுடா எனக்கு ஒன்னும் அவ்ளோ மட்டமான டேஸ்ட் இல்லைன்னு” என்ற வம்சி ராமை வாறினாலும், அந்த ஒருத்தர் மீது சிறு கோவம் வந்தது.. ‘இருக்கு உனக்கு ஒரு நாளைக்கு’ என்றும் நினைத்து கொண்டான்..
“என்னடா வளவளன்னு பேசிட்டு இருந்தவன் அமைதியா கிட்ட” என்ன யோசனை” ராம் கேட்டதும்,
“எல்லாம் உன்னோட அந்த ஒருத்தரை என்ன பண்ணலாம்ங்கிற யோசனை தான்” என்றான் வம்சி..
‘அச்சோ மறந்து போய் இவன் முன்னாடி அந்த பேச்சை எடுத்துட்டனே’ என்று நினைத்த ராம் சமாளிக்கும் விதமாக, “அதை விடு நான் வரும் போது சிலையாட்ட நின்னுட்டு இருந்தியே என்ன விஷயம்” என்று கேட்க,
“ஓ.. பேச்சை மாத்துறியா?”
“நான் என்னத்தடா மாத்துருறேன்.. வந்ததுல இருந்து அதை தான் கேட்கிறேன்… நீ தான் எத ஏதோ பேசிட்டு இருக்க, சொல்ல விருப்பம் இருந்தா சொல்லு இல்லைன்னா வேண்டாம் நான் போறேன்” என்று ராம் நகர,
“ரொம்ப பண்ணாத” என்று அவனை தடுத்த வம்சி “எல்லாம் மா பெத்த நானா கொடுக்கு தான்டா, நல்லா குழப்பி விட்டுட்டு போய்ட்டார்” என்றான்..
“என்னவாம்” ராம் கேட்க, வம்சியும் ப்ரதாப் சொல்லி சென்றதை சொல்ல,
ஹா ஹா என்று சிரித்த ராம் “யாரு அவருக்கு ப்ரியாவை பிடிக்காதமா”,
“ஆமா அப்புடி தான்டா சொல்லிட்டு போறார்..ஒரு வேளை நாமா தான் தப்பா புரிஞ்சிட்டு இருக்கமோ, உண்மையாவே ப்ரியாவை அவருக்கு பிடிக்கலையோ”,
“போடாங்க லூசு, உன் அண்ணாய்யா இஷ்டத்திற்கு உன்கிட்ட அளந்து விட்டுட்டு போய் இருக்கார். நீயும் அதை நம்பிக்கிட்டு”,
“பிடிக்கலைன்னு சொல்லிட்டு போன, உன் அண்ணாகிட்ட போய் பிடிக்காத பொண்ணு உங்களுக்கு எதுக்கு டிவோர்ஸ் பண்ணிடுங்கன்னு சொல்லி பாரு, அப்ப தெரியும்டா உன் அண்ணாய்யாவை பத்தி,
அன்னைக்கே உனக்கு தெவசத்துக்கு ரெடி பண்ணிடுவார்டா உன் பெத்த நானா கொடுக்கு, அவர் பிடிக்கலைன்னு சொன்னாராம் இவரும் நம்புறாராம்” என்று ராம் கேலி செய்ய,
“அப்புடிங்கிற”,
“அப்புடியே தான்டா.. உன் அண்ணாய்யா ஒரு காதல் தீவிரவாதி பொண்டாட்டியை காதலிக்கிறேன்ங்கிற பேர்ல அராஜகம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கார்.. நீயும் அதை போக போக பார்க்க தானே போற” என்ற ராம்,
“சரி வா வா டைம் ஆகுது லேட்டான்னா என் பாஸ் சத்தம் போட ஆரம்பிச்சுருவார்” என சொல்ல, வம்சி போன் அடித்தது..
“நீ போடா முக்கியமான கால் நான் பேசிட்டு வரேன்” என்று வம்சி சற்று தள்ளி சென்றான்..
ராம் நடக்க ஆரம்பிக்க அப்போது எதிரே வந்த டூவிலர் அவனை லேசாக இடித்தது, தடுமாறிய ராம் கீழே விழாமல் பக்கத்திலிருந்த வண்டியை பிடிமானத்துக்கு பிடித்து கொண்டான்..
“அய்யோ சாரி சாரி ராம் சார்.. அடி ரொம்ப பலமா” கேட்டது வேறு யார் லீலா என்கிற லில்லி தான்.. வண்டியிலிருந்து கீழே விழாதாவாறு கால்லை ஒரு பக்கம் ஊன்றியபடியே கேட்டாள்..
“உனக்கு கண்ணு தெரியுமா? தெரியாதா? இப்புடி வந்து இடிக்கிற” காலில் லேசாக வலி இருந்தது.. அந்த எரிச்சலில் ராம் கேட்க,
“சாரி ராம் சார்.. கண்ணு எல்லாம் நல்லா தெரியுது ராம் சார்.. ப்ரேக் தான் ரைட்டா லேப்ட்டான்னு தெரியலை அதான்” பாவமாக முகத்தை வைத்து கொண்டு சொல்ல,
“ஏன் தெரியாம, நல்லாவே தெரியும்” என்ற லில்லியை ராம் முறைக்க, “பொறுங்க பொறுங்க உடனே திட்ட வேண்டாம்” என்று கை நீட்டி தடுத்தவள், “கார் ட்ரைவிங் நல்லா தெரியும்னு சொன்னேன்”..
“அச்சசோ ராம் சார், காட் ப்ராமிஸ் நான் வேணும்னு எதுவும் பண்ணலை.. எனக்கு ஸ்கூட்டி ஓட்டி பழக்கம் இல்லை.. அதோட உங்க பார்க்கிங் வேற அண்டர் க்ரவுண்ட்ல வச்சு இருக்கீங்களா? அதான் பேலன்ஸ் பண்ண முடியலை” ராம் சார்..
“ஹேய் உன்னை” என்ற ராம் “திரும்ப திரும்ப பொய் சொல்லாத” என்று கோவப்பட,
“டேய் விடுடா,அதான் ப்யூட்டி சொல்றாங்களே வேணும்னு பண்ணலைன்னு, அப்புறம் ஏன்டா கோவப்படற விடு” என்றான் தூரத்தில் போன் பேசி கொண்டு இருந்த வம்சி இங்க நடந்ததை பார்த்து கிட்ட வந்தவன் கேட்டான்..
“ப்யூட்டியா?” லில்லி கேள்வியாக பார்க்க..
“ஆமா நீங்க தான் ப்யூட்டி.. ப்யூட்டி யா தானே இருக்கீங்க” என்றான் வம்சி..
“பொண்ணுனா போதும் முத ஆளா வந்திருவாயே” என்ற ராம் பேச்சை வம்சி சட்டை செய்யவே இல்லை.. அவனின் ப்யூட்டியிடம் கடலை போட தயராக இருந்தான்..
“நீங்க யார்?” என்று லில்லி வம்சியை பார்த்து கேட்க,
“என்ன? என்னை தெரியலையா? என்ன ப்யூட்டி நீங்க.. எங்க வீட்டுக்கு வரம்னு ஆசைப்படற உங்களுக்கு என்னை தெரியலையா? சோ சேட்” என்றவன்..
“நேனு வம்சி, வம்சி கிருஷ்ணா” என்று அறிமுகப்படுத்தி கொள்ளவும் லீலாவுக்கு விசாலாட்சி மகன் என்று தன் அம்மா சொன்னது நியாபகம் வந்தது..
“ஹாய்” என்றவள் நா,
“லீலா அலைஸ் லில்லி கரெக்ட்டா” வம்சி கேட்க, லீலா சரி என்று தலையாட்டியவள் எஸ் க்யூஸ் கேட்டு விட்டு தன்னுடைய வண்டியை ஸ்டேண்ட் போட்டு நிறுத்த வம்சி உதவி செய்தான்..
“டூவிலர் ஓட்ட தெரியாதுன்னா,ஏன் இதை எடுத்துட்டு வந்தீங்க?” லீலாவிடம் வம்சி கேட்க,
“அதுவா நான் இங்க வெறும் வொர்க்கர் தான், உங்க அண்ணாய்யா சொல்லிட்டாங்க.. இங்க வொர்க் பண்ற எல்லாரும் டூவிலர்ல் தான் வராங்க.. நான் மட்டும் கார்ல வந்தா சீன் போடற மாதிரி இருக்கும்ல அதான்” என்று லில்லி சொல்ல,
“பார்ரா சிம்ளி சிட்டியை”வம்சி சொல்ல,
“இருக்கிறதலையே இது தான் பெரிய சீன்” என்றான் ராம்..
அவனை முறைத்த லில்லி அங்கிருந்து செல்ல போக,
“ஹலோ சிம்ளி சிட்டி மேடம் ஒரு நிமிஷம்” என்ற ராம் “என்ன மறந்துட்டிங்களா கொடுங்க?” என்று கையை நீட்டினான்..
“அச்சோ ராம் சார், நீங்க இன்னுமா என்னை நம்பலை, ப்ராமிஸ்ஸா எனக்கு டூவிலர் ஓட்ட தெரியாது.. நான் வேணும்னு பண்ணலை” என்று கையில் சத்தியம் செய்ய,
“அடச்சை நான் கேட்டது இது இல்லைங்க” என்று கையை தட்டி விட்ட ராம், “நேத்து என்கிட்ட வாங்குனீங்களே அந்த பைசா அதை தான் கேட்டேன்” என்றான்..
“ஹா ஹா அதுவா” என்று அசடு வழிந்தவள், “இன்னைக்கும் என்கிட்ட சேன்ஜ் இல்ல ராம் சார்.. ஐநூறு, நூறு ரூபாய் நோட் தான் இருக்கு”என்று தன்னுடைய பேக்கில் இருந்து ஒரு நூறு ரூபாய் எடுத்து நீட்ட, அவளை முறைத்தான் ராம்..
“நேத்தே நான் சொல்லிட்டேன் மேடம்.. எனக்கு உங்க ஆயிரம் ஐநூறு எல்லாம் வேண்டாம்.. என் அஞ்சு ரூபாய் மட்டும் போதும்னு, மறுபடியும் இப்புடி பண்ணுனா என்ன அர்த்தம்”..
“டேய் விட்றா அஞ்சு ரூபா தானே” வம்சி சொல்ல,
“நீ மூடு உனக்கு அஞ்சு ரூபா சாதரணமா இருக்கலாம்.. ஆனா எனக்கு நான் சம்பாதிச்ச ஒத்த பைசானாலும் அது எனக்கு உசத்தி தான்” என்று ராம் சத்தம் போட வம்சி அமைதியாகி விட்டான்..
அவனுக்கு தெரிந்தது லீலாவை ஒரு வழியாக்காமல் நண்பன் அடங்க மாட்டான் என்று,
“எனக்கு என் அஞ்சு ரூபா தான் வேணும்” ராம் விடமாட்டேன் என்பது போல் நிற்க,
“இதோ இதில் தான் உங்க அஞ்சு ரூபாயும் இருக்கு ராம் சார்.. அதை எடுத்துட்டு எனக்கு மீதி சேன்ஜ் கொடுங்க போதும்” என்றவளை மீண்டும் ராம் முறைத்தான்..
“ஏன் நீங்க பெரிய லாடு வீட்டு கொழாப்புட்டா, பெட்டி கடை மளிகை கடைக்கு எல்லாம் போய் சேன்ஜ் மாத்திட்டு வந்து தர மாட்டிங்களோ?” ராம் நக்கலாக கேட்டான்…
“ச்சே இவன் ஒருத்தன் சரியான பிச்சி, கஞ்சன் அஞ்சு ரூபாய்க்கு எப்புடி படுத்துறான்” என்று நொந்த லில்லி வாட்சை பார்த்தாள்.. ஏதாவது கடை தேடி சேன்ஜ் மாத்திட்டு வருவதற்குள் ஆபிஸ்க்கு லேட்டாகிரும்.. முதல் நாளே ப்ரதாப்பிடம் கெட்ட பெயர் ஆகிவிடும்..
‘ச்சே ச்சே கூடவே கூடாது அம்மா அவங்க கிட்ட நல்ல பெயர் வாங்கனும்.. அவங்களே பாராட்ட மாதிரி பிரமிக்கிற மாதிரி நடந்துக்கனும்னு சொல்லி இருக்காங்க.. ஆனா இவனை என்ன பண்றது’ என்று யோசித்தவள் தன்னுடைய போனை எடுத்தாள்..
“உங்க கூகுள் பே இல்ல, போன் பே நம்பர் சொல்லுங்க சென்ட் பண்ணி விடுறேன்” என சொல்ல,
“சாரி” என்றான் ராம்..
“ஏன் உங்க கிட்ட கூகுள் பே போன் பே இல்லையா?”..
“இருக்கு”..
“அப்புறம் என்ன?”
“முன்ன பின்ன தெரியாத, உங்ககிட்ட எப்புடி என் நம்பர் தரது” என்றவன் மேல் லீலாவுக்கு பயங்கர கோவம் வந்தது..
“என்னை உங்களுக்கு முன்னபின்ன தெரியாதா?”கோவத்தில் மூச்சு வாங்க கேட்க,
“தெரியாதே, நான் உங்களை பார்த்ததே நேத்து தான்.. அதுவும் நமக்குள்ள ஏழாம் பொருத்தமா இருக்கு.. ஒரு நாள் பழக்கத்தை மட்டும் வச்சு எப்புடி நம்பர் தரது.. அது எனக்கு அவ்ளோ சேஃப்பா இருக்குமா” என்றவனை முறைத்த லீலா.. இவனை டூவிலரை வச்சு இல்ல லாரியை விட்டு ஏத்தி இருக்கனும் லீலாவுக்கு புசு புசுவென கோவம் வந்தது..
“இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியலையா ராம் சார்”..
“என் சேஃப்டி என் கையில் மேம்” என்றான் ராம்.. இன்னும் கொஞ்ச நேரம் இவன் கூட பேசிட்டு இருந்தா ஹை பிபி வந்து செத்தாலும் செத்துறவன் போலயே என்று தோன்றியது லீலாவுக்கு,
“அய்யா ராம் அய்யா அந்த ஏழு மலையான் மேல்ல சத்தியமா நாளைக்கு மறக்காமா உங்க அஞ்சு ரூபாயை கொண்டு வந்து தந்துருவேன்.. இப்ப என்னை விட்டுட்ங்க அய்யா” என்று லீலா கையை தலைக்கு மேல் வைத்து கும்பிட, வம்சி பட்டென சிரித்து விட்டான்..