“மனுஷனா அவன், பேர் தான் ராம் சாமி பேர்.. பண்றது எல்லாம் அரக்க வேலை.. பிச்சி, வெரிவாடு, ****,****” என்று இரண்டு மூணு கெட்ட வார்த்தைகளில் திட்டியவள் சேரில் அமர்ந்து நெஞ்சில் கை வைத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் லீலா..
அப்போது அவள் போன் அடித்தது.. எடுத்து பார்த்தாள்.. அவளின் தாய் சாலா தான் அழைத்து இருந்தார்..
போனை ஏற்று காதில் வைத்தாள்.. “லில்லி ஆபிஸ் போய்ட்டியா”..
“ஆ.. மம்மி வந்துட்டேன்”..
“லேட்டாகலையே கரெக்ட் டைம்க்கு போய்ட்டியா”,
“எஸ் மம்மி சீக்கிரமாகவே வந்துட்டேன் தான் சொல்லனும்.. ஒன்னு இரண்டு பேர் தான் வந்து இருக்காங்க.. இனிமே தான் ஒவ்வொருத்தரா வருவாங்க போல”,
“ப்ரதாப் வந்தாச்சா?” சாலா கேட்க..
“ஓ… அவங்க முன்னவே வந்து இருப்பாங்க போல மம்மி அப்புறம்” என லில்லி பேச வர,
“ப்ரதாப்கிட்ட போய் நீ பேசுனியா?” சாலா அவசரமாக கேட்டார்.
“இல்ல” என்றாள் லீலா..
“என்ன லில்லி ஆபிஸ்ல இன்னும் ஆளுங்க வரலைன்னு சொல்ற, ப்ரதாப் வேற தனியா இருக்கான்னு சொல்ற போய் பேச வேண்டியது தானே, நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் தானே, ப்ரதாப் கண்ணில் அடிக்கடி பட்டுட்டே இருன்னு, இப்புடி நீ எட்டவே இருந்தா எப்புடி ப்ரதாப்புக்கு உன்னை பிடிக்கும்.. போய் பேசு” சாலா சொல்ல,
“என்ன பேசுறது மம்மி காரணம் இல்லாம எப்புடி பேசறது” லீலா தயங்கினாள்..
“ம்பச் லில்லி, இதை எல்லாம் நானா உனக்கு சொல்லி கொடுக்க முடியும்.. ஏதாவது பேசு, எப்புடி இருக்கீங்க, சாப்பிடிங்களா, இல்ல குட் மார்னிங் இந்த மாதிரி ஏதாவது, போ போய் பேசு” சாலா வற்புறுத்தினார்..
“மம்மி நானாவே வழிய போய் எப்புடி பேசுறது” லீலாவுக்கு இது சற்று சங்கடமாக இருந்தது.. லில்லி என்ற சாலா கோவபட,
“ஓகே மம்மி நீங்க சொல்ற மாதிரி பண்றேன்” என்ற லீலா போனை வைத்து விட்டு தலையில் கை வைத்து கொண்டாள்.. அவளுக்கு ப்ரதாப்பிடம் வழிய சென்று பேச விருப்பமில்லை, ஆனால் அவள் தாய் கட்டாயப்படுத்துகிறார், என்ன செய்வது என இரண்டு நொடி அப்புடியே அமர்ந்து இருக்க மீண்டும் லீலா போன் அடித்தது.. சாலா தான் அடித்து இருந்தார்..’ச்சே இவங்க விட மாட்டாங்க’ என்று சலித்து கொண்ட லீலா ப்ரதாப் அறைக்கு சென்றாள்..
கதவை தட்டி அனுமதி கேட்டு விட்டு உள்ளே நுழைந்தாள்..
“சார்” லீலா அழைக்க,
“எஸ்” என்றான் ப்ரதாப் கணினியில் தலையை புதைத்து வேலை பார்த்தபடி,
“இடியட், ஆர் யூ மேட், இது என்ன ஸ்கூலா தேடி வந்து குட் மார்னிங் சொல்லிட்டு இருக்க, இந்த மாதிரி கிறுக்குதனம் எதுவும் பண்ணாமா வேலை பார்க்கிறதா இருந்தா, பாருங்க மிஸ்.லீலா.. இல்லைன்னா வேலையை விட்டுட்டு போய்ருங்க” என்று கத்த,
லில்லிக்கு அழுகையே வரும் போல் இருந்தது.. “சாரி” என்றாள்
“திஸ் இஸ் லாஸ்ட் வார்னிங், இன்னோரு தடவை இந்த மாதிரி எதுவும் நடந்தது அவ்ளோ தான்” என்று எச்சரித்த ப்ரதாப்.. “கெட் லாஸ்ட் “என்றான்..
லில்லிக்கு அவமானமாக இருந்தது.. ‘ச்சே இந்த ஆபிஸில் சுத்தி சுத்தி அடிக்கிறாங்களே’ நொந்தபடி ப்ரதாப் அறையிலிருந்து வெளி வந்தாள் லீலா..
இது சரியாக அப்போது தான் அலுவலகத்தில் நுழைந்த நம் விஷ்ணு கண்ணில் பட்டது.. பார்த்தவளுக்கு முதலில் அதிர்ச்சி, பின்பு ‘இவ எதுக்கு அவர் ரூம்க்கு காலையிலேயே போனா’ என்ற கோவம்,
அதே கோபத்தோடு லீலா அருகே வந்தவள், “நீ எதுக்கு உள்ள போன” ப்ரதாப் அறையை கை நீட்டி காட்டியபடி கேட்டாள்..
“சார்க்கு குட்மார்னிங் சொல்ல போனேன்” என்றாள் லீலா..
விஷ்ணுவுக்கு எரிச்சல் வந்தது.. இவளை என்றவள் “நீ என்ன ஸ்கூல் பப்பாவா டீச்சரை தேடி போய் குட் மார்னிங் சொல்றதுக்கு” என்று கேட்டவள், “திரும்ப என்ன ரிப்ளே வந்தது “என்று கொஞ்சம் நக்கலாகவே கேட்டாள்.. ப்ரதாப் திட்டி தான் அனுப்பி இருப்பான் என்ற நம்பிக்கையில்..
உண்மையை சொன்னா இவ கிண்டல் பண்ணுவாளே என்று நினைத்த லில்லி.. “திரும்ப குட்மார்னிங்” சொன்னாங்க என்றாள்..
என்னது கேட்ட விஷ்ணு அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து கொண்டாள்.. “உண்மையாவா” விஷ்ணு கொஞ்சம் சந்தேகத்தோடு கேட்க..
“நான் ஏன் பொய் சொல்ல போறேன்.. நிஜமாவே தான்.. உனக்கு டவுட்டா இருந்தா சார்க் கிட்ட போய் கேட்டுக்கோ” என்ற லில்லி அங்கிருந்து சென்று விட்டாள்…
இப்போது விஷ்ணுவுக்கு தான் ப்ரதாப் மீது கோவமான கோவம் வந்தது.. அதெப்படி நான் எத்தனை நாள் குட்மார்னிங் சொல்லி இருக்கேன்.. அதுக்கு லேசா தலை அசைக்கிறது.. இல்லைன்னா முறைக்கிறது.. சில சமயம் இரண்டுமே இல்ல.. கண்டுக்காமல் போய்டறது.. இவளுக்கு மட்டும் குட் மார்னிஙா, இன்னைக்கு இவரை என்றவள் அவன் அறை கதவை திறந்து அவசரமாக உள்ளே போனாள்..
கதவை தட்டாமல் வந்ததிலே தன்னவள் தான் என்று புரிந்த ப்ரதாப் நிமிர்ந்து பார்த்தான்..
விஷ்ணு மூக்கு நுனி சிவக்க கோவத்தில் சிவந்து இருந்தாள். கணவன் அவனுக்கு மனைவியின் கோவம் தெரியவில்லை.. அழகு தான் தெரிந்தது..’இன்னைக்கு என்னாச்சு இவளுக்கு, மற்ற நாளை விட இன்று ரொம்ப அழகா இருக்கா’ என்று தோன்றியது.. கண்ணை சிமிட்டாமல் பார்த்து கொண்டு இல்லை இல்லை ரசித்து கொண்டு இருந்தான்.. அதுவும் அந்த மூக்கு நல்லா குண்டூர் மிளகாய் போல் (ஊறுகாய் விற்கிறவன்னு எப்புடி நிருப்பிக்கிறான் பார்த்தீங்களா மக்களே) சிவந்து அழகா இருப்பதாய் தோன்றியது.. அதை கிள்ள சொல்லி கை பரபரக்க கட்டுபடுத்தி கொண்டு அமர்ந்தபடி மனைவியை பார்த்து கொண்டு இல்லை சைட் அடித்து கொண்டு இருந்தான்..
கோவமா கேட்க போறேன்னு என்று வந்த விஷ்ணுவுக்கு ப்ரதாப்பை பார்த்ததும் அவளுக்கு நாக்கு சதி செய்தது.. மேல் அன்னத்தில் ஓட்டி கொண்டு பேசுவேன்னா என்று சதி செய்தது.. என்ன கேட்க எப்புடி கேட்பது என்ற குழப்பம்.. ஏதாவது சத்தம் போடுவானோ திட்டுவானோ என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது.. பேசாமா திரும்ப போய்டலாமா என்று கூட ஒரு எண்ணம் வர, லீலா முகம் வந்து போனது.. ம்ஹும் விட கூடாது என்றவள்,
“குட் மார்னிங் சொன்னீங்களா?” ப்ரதாப்பை பார்த்து கேட்டாள் முகம் எல்லாம் கோவமாக தான் இருந்தது.. குரலில் தான் அந்த தீவிரம் இல்லை.. நலிந்து வந்தது..
தீவிரமாக மனைவியை சைட் அடித்து கொண்டு இருந்த ப்ரதாப்புக்கு அவள் என்ன கேட்டாள் என்பது எல்லாம் கேட்கவில்லை.. இருந்தும் ம்.. என்றான் தோள் குலுக்கி,
இந்த ம்…ல் விஷ்ணுவுக்கு இன்னும் இன்னும் புசு புசுவென கோவம் வந்தது.. “ஏன் சொன்னீங்க?” இந்த முறை கொஞ்சம் சத்தமாகவே கேட்டாள்..
அதில் தெளிந்தவன் “ஹான்” என்ன என கேட்கவும்,
இன்னுமே விஷ்ணுவிற்கு கோவம் வந்தது.. ஏன் சொன்னீங்க?, எதுக்கு சொன்னீங்கன்னு? கேட்டேன் இப்போது இன்னும் அதிகம் சத்தமாக கேட்டாள்..
ப்ரதாப்புக்கு விஷ்ணுவின் இந்த கோவமும் சத்தமும் புதிதாகவும் ஆச்சர்யமாகவும் அதே சமயம் பிடித்தும் இருந்தது.. இப்போதும் அவள் என்ன கேட்கிறாள் என்று ப்ரதாப்புக்கு தெரியவில்லை..
இருந்தும் அவளை சீண்டி பார்க்க பதில் சொன்னான் ஏன் சொல்ல கூடாது? எதுக்கு சொல்ல கூடாது? என்று கேட்டான்..
இந்த பதில் விஷ்ணுவிற்கு தான் லில்லிக்கு குட் மார்னிங் ஏன் சொல்ல கூடாதுன்னு கேட்கிறாரே என்று சங்கடமாகவும் இருந்தது அதே சமயம் கோவமான கோவமும் வந்தது..
“இப்ப வரை எனக்கு மட்டும் சொன்னதே இல்லை.. ஏன் சொல்லலை எதுக்கு சொல்லலை” என்று கோவத்தில் ப்ரதாப்பின் டேபிளில் இரு கையையும் ஊன்றி சற்று குனிந்து அமர்ந்து இருக்கும் ப்ரதாப் முகத்திற்கு நேராக நெருக்கமாக வந்து கேட்டாள்..
விஷ்ணுவிற்கு கோவத்தில் அந்த நெருக்கத்தை உணரவில்லை.. ப்ரதாப் அதை உணர்ந்தான்.. மனது ஏதேதோ செய்தது.. இருக்கும் இடம் மறந்தான்.. டேபிளில் கையை வைத்து முன்னோக்கி வந்து நெருக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியபடி “இப்ப சொல்லிட்டா போச்சு, என சொல்லனும் சொல்லு சொல்றேன், இல்லை ஏதாவது செய்யனும்னாலும் சொல்லு செய்ய நான் ரெடி” என்றான் குழைவான குரலில்,
இதுவரை விஷ்ணு ப்ரதாப்பிடம் அறியாத குரல் இது, இந்த குரலே உடல்லை சிலிர்க்க செய்தது.. இந்த குரலின் மாயத்தில் கோவம் மறைந்தது.. இப்போதும் தான் நெருக்கம் புரிந்தது.. விலக தோன்றவில்லை…கட்டுண்டு அதே நிலையில் இருந்தாள்.. ப்ரதாப் மேலும் அந்த நெருக்கத்தை குறைக்க முன்னேற, இருவரின் முகம் அருகருகே மூக்கு உரசியும் உரசாமலும் இருந்தது.. முன்பு கோவத்தில் சிவந்து இருந்த விஷ்ணுவின் நுனி மூக்கு, இப்போதும் சிவந்து தான் இருந்தது குண்டூர் கார மிளகாய் போல்.. ஆனால் கோவத்தினால் அல்ல.. கணவனின் மூச்சு காற்று முகத்தில்பட்டதால், முன்பு கிள்ள வேண்டும் என்று தோன்றிய குண்டூர் கார மிளகாயை இப்போது ப்ரதாப்புக்கு கடித்து பார்க்க ஆசை வந்தது.. மூக்கை மட்டுமல்ல அதை விட சிவந்து துடித்து கொண்டு இருந்த இதழையும்,