Mr and Mrs விஷ்ணு 35

4.7
(49)

 

பாகம் 35

தேவுடா” என்று நெஞ்சில் கை வைத்து நிம்மதி மூச்சு விட்டாள் லீலா.. இப்போது தான் பெரிய அபார்ட்மெண்ட் ஒன்றின் வடிவமைப்பை முடித்து அதை ராமிற்கு அனுப்பி வைத்து இருந்தாள்.. அதை முடிப்பதற்குள் இந்த ராமிடம் எத்தனை திட்டு.. 

அவளுக்கு பொதுவாகவே வரைவது என்றால் ரொம்ப பிடித்தமான ஒன்று.. அதுவும் இப்போது ப்ரதாப்பிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் சாலா தினமும் இடைவிடாது மந்திரம் போல் இதை தானே அவள் காதில் ஓதி விடுகிறாள்.. அதுக்காவே கடுமையாகவே வேலையில் முனைப்பாக இருக்கிறாள் லில்லி..  வந்த ஒரு வாரத்திலே அவள் இதுவரை வடிவமைத்து கொடுத்த இரண்டு டிசைனையும் ப்ரதாப் ஓகே செய்து இருந்தான்.. 

லில்லி செம குஷி தான்.. ஆனால் இதில் அதிக கடுப்பில் இருந்தது விஷ்ணு என்றால் அவளை விட ஏகபோக கடுப்பானான் ராம்.. அதன் பின்பு விடுவானா லில்லியை வச்சு செய்து விட்டான்.. அதிலும் இன்னும் அந்த ஐந்து ரூபாய் கடனை வேறு லில்லி அடைத்தபாடில்லை.. சொல்லவா வேண்டும் ராமை அவன் காட்டில் மழை தான்.. 

“மேம் ராம் சார் அவர் கேபினுக்கு உங்களை வர சொன்னார்” ஆபிஸ் பாய் வந்து சொல்லி விட்டு போக,

“போச்சுடா இந்த ஆள் முப்பத்தாயிரம் புள்ளி வச்சு கோலம் போட்டு இருந்தாலும் நடுவில் வச்சு இருக்க மூணு புள்ளி கோணனையா இருக்கு அதை சரி பண்ணிட்டு வான்னு குறை சொல்ற டைப்.. இப்ப அந்த முட்ட கண்ணை வைச்சு எத்தனை மிஸ்டேக் கண்டுபிடிச்சு திட்ட போறானோ” என்று மனதில் ராமை திட்டிய படி செல்ல,

அங்கு அதே போல் தான் ராமும் ஒரு சின்ன குறையை சுட்டி காட்டி திட்டியவன் அதை சரி செய்து வரும்படி சொல்ல,

“இது ரொம்ப ரொம்ப சின்ன மிஸ்டேக் தான் ராம் சார்.. அது வெளியே பெரிசா தெரியாது.. உங்களை மாதிரி முட்டகண்ணு இருக்கிற யாராவது கண்ணில் விளக்கெண்ணெய் ஊத்தி பார்த்தா மட்டும் தான் தெரியும்.. இதை போய் பெரிசு பண்ணி திட்டி மாத்த சொல்றீங்களே போங்க ராம் சார்” லில்லி நொந்து கொள்ள,

“ஏய் யாரை முட்ட கண்ணு சொல்ற” ராம் கோவப்பட, 

அய்யயோ வாய்விட்டு மாட்டிக்கிட்டயே லில்லி என்றவள் “முட்ட கண்ணுனா தப்பா எடுத்துக்காதீங்க ராம் சார் முட்ட கண்ணு மீன்ஸ் நல்ல பெரிய அழகான கண்ணு ன்னு அர்த்தம்.. உங்க கண்ணு அழகுன்னு சொல்ல வந்தது தான் த்ங்க் ஸ்லிப் ஆகிடுச்சு ராம் சார்” என்று சமாளித்த வளை  

“நல்லா ஸ்லிப் ஆகும் உங்களுக்கு” என்று முறைத்தவன், “போங்க போய் மிஸ்டேக்கை சரி பண்ணிட்டு வாங்க” என்றான்..

“ம்பச் இதை மேலோட்டமா பார்த்தா மிஸ்டேக் தெரியலை ராம் சார்.. அதுவும் ஏதோ டிசைன் போல தான் இருக்கு.. இதை கண்டிப்பா கரெக்ட் பண்ணனுமா, நமக்கு தான் டைம் வேஸ்ட்” என லில்லி சொல்ல,

“இது வி.வி கன்ஸ்ட்ரக்ஸன் மேம் இங்க சின்ன புள்ளி அளவு கூட மிஸ்டேக் இருக்க கூடாது.. கஸ்டமர் கிட்ட வாங்குற காசுக்கு நேர்மையா வேலை செய்து கொடுக்கனும்… எல்லாம் பர்பெக்ட்டா இருக்கனும்.. பாஸ் அதை தான் லைக் பண்ணுவார்.. உங்க இரண்டு டிசைன்னை சார் செலக்ட் பண்ணினதால் நாமா பண்றது தான் சரி.. நாமா தான் பெரிய இதுங்கிற மாதிரி நடந்துக்காதீங்க.. போங்க எவ்ளோ டைம் ஆனாலும் பரவாயில்லை போய் கரெக்ட் பண்ணி டிசைன் அனுப்புங்க” என ராம் சொல்ல அவனை முறைத்தாள் லில்லி..

அதை பார்த்தவன் “என்ன?” என கேட்க,

“ஆனாலும் நீங்க இவ்வளோ அநியாயத்திற்கு விசுவாசியா இருக்க கூடாது ராம் சார்.. வாங்கிற சேலரிக்கு மேல்ல கூவுறீங்க” என்றாள் நக்தலாக்

“தாங்க்ஸ் உங்க பாராட்டுக்கு போய் வேலையை பாருங்க” என்றான் ராம்.. 

அவனை முறைத்த லில்லியும் அறையை விட்டு வெளியேற போனவள் நின்று “ராம் உங்க சேலரி எவ்ளோ?” என கேட்க

“ஏன் தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க”..

“ஒன்னும் பண்றதுக்கு கேட்கலை.. நான் இங்க பிசினஸ் கத்துக்கிட்டு புதுசா ஒரு கன்ஸ்ட்ரக்ஸன் ஆபிஸ் ஓபன் பண்ணினா நீங்களே எனக்கு பி.ஏ வந்துறீங்களா? இங்க கொடுக்கிறதை விட சேலரி டபுள் மடங்கு தரேன் என்ற லில்லியை பார்த்து சிரித்தான் ராம்..

“ஏன் சிரிக்கிற மேன்?” லில்லி கோவமாக கேட்க..

“ஓ… அப்ப நீங்க இங்க பிசினஸ் கத்துக்கிட்டு ஆபிஸ் ஓபன் பண்ற ஐடியாவுலையா வந்து இருக்கீங்களா” நக்கலாக ராம் சிரிக்க,

அதை பார்த்தவளுக்கு கோவம் வர,  “ஏன் நான் ஆபிஸ் ஓபன் பண்ண மாட்டேனா பண்ணி காட்டுறேன் பாருங்க” மூக்கு விடைக்க சொன்னாள்,

சிரித்த ராம் “ஆபிஸ் ஓபன் பண்றது எல்லாம் இருக்கட்டும் எங்க என் 5 ரூபா” என கேட்டான்..

“கையை நீட்டுங்க நான் எல்லாம் ரொம்ப ரோஷக்காரி இன்னையோட இதை முடிச்சுடுறேன்” கெத்தாக லீலா சொல்ல,

“பார்ரா” என்ற ராம் கையை நீட்ட  லில்லியும் அதன் மீது வைத்தாள்..

பார்த்தவன் “என்னது இது”? கோவமாக லில்லியை பார்த்து கேட்க,

“ஈட் ஃபைவ் ஸ்டார் டூ நத்திங் இதுவும் அஞ்சு ரூபா” தான் ராம் சார் என்றாள்..

“ஏய் விளையாடுறியா”? பல்லை கடித்தபடி ராம் கேட்க,

“சத்தியமா இல்ல ராம் சார்.. நீங்க தானே சொன்னீங்க பெட்டி கடைக்கு போனா அஞ்சு ரூபா கிடைக்கும்னு, நானும் நீங்க சொன்னது போல ஒரு பெட்டி கடைக்கு ஹண்டர் ரூபிஸ் எடுத்துட்டு போய் 95 ரூபிஸ்க்கும் ஸ்நாக்ஸ் வாங்கிட்டு மீதி ஃபைவ் ரூபிஸ் கேட்டா, அவர் என் கையில் இதை வச்சிட்டு இது தான் ஃபைவ் ரூப்பி ஈட் ஃபைவ் ஸ்டார் டூ நத்திங்ன்னு சொல்றார் ராம் சார்” பாவமாக முகத்தை வைத்து சொன்னாள் லில்லி, 

“ஏய் என்ன கதை கதையா சொல்ற?, நான் உன்கிட்ட மிட்டாய் கேட்டனா எனக்கு இது எல்லாம் வேண்டாம் எடுத்துட்டு போ.. எனக்கு என்” ராம் ஆரம்பிக்க அவனை கை நீட்டி தடுத்தவள்,

“உங்களோட அஞ்சு ரூபாய் தான் வேணும்.. அதானா” என லில்லி சொல்ல,

ஆமா எனும் விதமாக ராம் தலை அசைத்தான்..

“கொடுக்கிறேன் சீக்கிரமா கொடுக்கிறேன்” என்றாள்…

“கொடுத்துட்டாலும்” ராம் நக்கலாக சொல்ல, 

“கொடுத்துட்டு அப்புறம் பேசிக்கிறேன் உங்களை” என்ற லில்லி வெளியேற போக,

“ஹலோ இந்தாங்க உங்க சாக்லேட் இதை எடுத்துட்டு போங்க”..

“மாட்டேன் உங்க கடனை நான் அடைக்கிற வரை அந்த சாக்லேட் அடமானமா உங்க கிட்டயே இருக்கட்டும்.. அஞ்சு ரூபாயை கொடுத்துட்டு வாங்கிக்கிறேன்” என்றவள் அங்கிருந்து வெளியே செல்ல, நிவி வந்தாள்..

அவளை பார்த்த ராம் “ஹாய்” என சிரித்தபடி கை அசைத்தவன் அவள் முறைப்பதை பார்த்ததும் கையை கீழ் இறக்கினான்..

‘அய்யோ எதுக்கு இந்த முறைப்புன்னு தெரியலையே’ மனதிற்குள் புலம்பியவன்,

“என்னம்மா” என கேட்க, 

“உனக்கு இந்த லில்லி கூட என்ன பேச்சு” கோவமாக கேட்டாள் நிவேதா..

“அதுவா ஒன்னுமில்லை சும்மா ஆபிஸ் விஷயமாக தான்” என்று இவ்வளவு நேரம் லீலாவிடம் எகிறியவன் நிவியிடம் பம்மியபடி சொன்னான்.. அவன் கையிலிருந்த சாக்லேட்டை பார்த்து விட்டு அவனை முறைத்த நிவி, “இதுவும் ஆபிஸ் விஷயமா”? என கேட்க,

“இல்லை இது வந்து” ராம் சமாளிக்க முடியாமல் திணற அவனை உக்கிரமாக முறைத்தாள் நிவி,

“இன்னோரு தடவை இந்த லில்லி கூட சேர்த்து வச்சு உங்களை பார்த்தேன் அவ்ளோ தான் சொல்லிட்டேன் ராம்”.. அவ ஆளும் மூஞ்சியும்” என கோவப்பட

“ரொம்ப மோசம்ன்னு சொல்ல முடியாது.. பார்க்க அழகா தான் இருக்கு” என்று சொன்ன ராம் உக்கிரமாக தன்னை முறைக்கும் நிவியை பார்த்து ஸ்.. என நாக்கை கடித்து கண்ணை மூடிய ராம் “உனக்கு டைம் சரி இல்ல போலடா” என சொல்ல,

“ஓ…ஓஹோ கதை அப்புடி போகுதா”?..

“எப்புடியும் போகலை ஜென்ரலா தான் சொன்னேன் அவ்ளோ தான், நீ டென்ஷன் ஆகாதா ஒன்னும் இல்ல” என்றான்.. 

“பார்த்து நடந்துக்கோ ராம்”? என்ற நிவி.. ஹாஃப் டே எனக்கு லீவ் வேணும் முறைப்புடனே கேட்க..

“எடுத்துக்கோ.. பாஸ்கிட்ட நான் சொல்லிக்கிறேன்” என்றதும் வெளியேற போன நிவி, ராம் கையிலிருந்த சாக்லேட்டை பார்க்க, அதை உடனே டேபிள் மீது போட்டவன் “ச்சை” என்றான்.. நிவியும் அங்கிருந்து வெளியேறினாள்… உஃப் என்று பெருமூச்சு ஒன்றை விட்டான் ராம்…

ராம் கேபினிலிருந்து வெளி வந்த நிவேதா விஷ்ணுவிடம் சொல்லி விட்டு ஆபிஸ் நுழைவு வாயில் நோக்கி நடக்க ஆரம்பிக்க, காலில் எதோ தடுப்பது போல் இருக்க கீழே பார்த்தபடி சென்றவள் எதிரே வந்தவர்களை கவனிக்காமல் இடித்தும் விட்டாள்..

“சாரிங்க சாரி கவனிக்கலை தெரியாம இடிச்சுட்டேன் சாரி” என்றாள்..

“பார்ரா எங்க நிவேதாவுக்கு கூட சாரி எல்லாம் சொல்ல தெரியுது ஆச்சர்யமா இருக்கு” என்ற குரல் கேட்டது..

அந்த குரலிலே அது யார் என அவளுக்கு தெரிந்தது.. இருந்தும் உறுதி படுத்தி கொள்ள நிமிர்ந்து பார்த்தவள், 

இவனா என முகம் அஷ்டகோணலானது நிவிக்கு… 

எதிரே வம்சி நின்று இருந்தான் சிரித்தபடி, “ஹாய் நிவி” என்றபடி

‘இருக்கிற பிரச்சினை பத்தாதுன்னு இவனும் வேறயா, இப்புடி எல்லாம் பணிஞ்சு பேசுற ஆளு கிடையாதே இவன்’ என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே,

அவளின் முகத்துக்கு முன்பு கையை ஆட்டிய வம்சி, என்னம்மா என்னை பார்த்ததும் ஷாக் அடிச்ச மாதிரி நிற்கிற? இன்ப அதிர்ச்சியா! சிரித்தபடி  கேட்டான் வம்சி.. 

“ரொம்ப ஆசை தான் நான் ஏன் உங்களை பார்த்ததும் ஷாக் ஆக போறேன் அது எல்லாம் இல்ல” அலட்சியமாக சொன்ன நிவி கிளம்ப,

“எப்புடி இருக்க நிவேதா” என்று நலம் விசாரித்தான் வம்சி கிருஷ்ணா..

“ம்… நல்லா இருக்கேன்” என நின்று பதில் அளித்தாள் நிவி..

“பார்க்க சுமாரா இருக்க, கேட்டா நல்லா இருக்கேன்னு சொல்ற? என்  வம்சி சொல்லவும் நிவிக்கு ஜிவு ஜிவு என்று ஏறினாலும் கட்டுபடுத்தி கொண்டு நின்றாள்..

“அய்ய மொக்கை காமெடி, இன்னுமா இந்த மாதிரி காமெடி எல்லாம் புதைச்சு போகாமா புழக்கத்தில் இருக்கு.. நீங்க இன்னும் அப்டெட் ஆகலை போகல.. ஓல்ட் காமெடி எல்லாம் போட்டுட்டு சுத்துறீங்க” என வம்சியை கேலி செய்ய,

“காமெடி பழசு தான் ஆனா சொன்னதும் உனக்கு கடுப்பு ஆச்சுல அதான் வேணும் எனக்கு” என்ற வம்சி உதட்டை மடித்து நக்கலாக சிரித்தான்..

“வேண்டாம் வம்சி என்னை டென்ஷன் பண்ணாதீங்க..

என்கிட்ட பிரச்சினை பண்ணாதீங்க, 

உங்க  வழியை பார்த்துட்டு போங்க.. எந்த பிரச்சினை வேண்டாம்.. ஒதுங்கியே இருங்க அது தான் நல்லது” கோவமாக வம்சியை முறைத்தபடி நிவி சொன்னாள்..

“முடியாதுடி, கண்டிப்பா முடியாது என்ற வம்சி நிவி அருகே வந்தான்.. நான்கடி தூரத்தில் நின்று இருந்தவர்கள் இடைவெளியை இரண்டடி ஆக்கினான்..

 பிரச்சினை தான்  பண்ணுவேன்.. கண்டிப்பா பண்ணுவேன்.. இந்த முறை பொறுத்து போகவோ ஒதுங்கி போகவோ மாட்டேன்” என்றான் கோவமாக நிவேதாவை முறைத்தபடி,

“பொறுக்கி” வார்த்தையை விட்டாள் நிவேதா..

“இதோ இந்த வாய்க்கு இதுக்காகவே  இருக்குடி உனக்கு, அண்ணா அக்கா ப்ராப்ளம் எல்லாம் சால்வ் ஆகட்டும் அப்புறம் இருக்குடி மகளே உனக்கு கச்சேரி”  என்ற வம்சி அவளை கடந்து செல்ல அதிர்ச்சியில் அவன் சென்ற வழியை பார்த்தபடி நின்றாள் நிவேதா..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 49

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!