Mr and Mrs விஷ்ணு 36

4.7
(48)

பாகம் 36

தன் முன்னாள் அமர்ந்து பேசி கொண்டு இருந்த பார்த்திபனை நேராக பார்க்க முடியாமல் திணறி கொண்டு  இருந்தாள் பவித்ரா..  அவன் பேசியதை கவனிக்கவும் முடியவில்லை.. எப்புடி இவனால் இவ்வளவு நார்மலா இருக்க முடியுது.. என்னால் ஏன் இருக்க முடியவில்லை என்ற கேள்வி வேறு அவள் மண்டையை குடைந்தது..

இன்னும் ஒரு வார காலத்திற்குள் திருப்பதி ஃபுட் ப்ராடாக்ட்ஸ்க்கு டேக்ஸ்(Tax) ஃபைல் பண்ண வேண்டும்.. அதற்குள் கணக்கு வழக்கு அனைத்தையும் சரி பார்க்க வேண்டும்.. அவர்கள் நிறுவனத்தின் ஆடிட்டர் பார்த்திபன்.. பார்த்தி வேண்டாம் என்ற பவித்ரா பேச்சை வேறு ப்ரதாப் கேட்க மாட்டேன் என்று விட்டான்..

சரி அப்ப நீங்களே இந்த தடவை இதை பார்த்துக்கோங்க என்னால் முடியாது என்று தேவகி மூலமாகக் ப்ரதாப்பிடம் சொல்லியதுக்கும் அவன் ஒத்துக் கொள்ளவில்லை.. 

நான்சென்ஸ் பிசினஸ் வேற பர்சனல் வேற, பிசினஸ்க்குள்ள பர்சனலை கொண்டு வரது எனக்கு பிடிக்காது.. அவளால் முடியாதுன்னா மொத்தமா பிசினஸை விட்டு வெளிய போக சொல்லுங்க என்று சத்தம் போட்டு விட்டான்… அதனால் வேறு வழியில்லாமல் பார்த்திபன் அலுவலகத்திற்கு பவித்ராவே வந்து விட்டாள்..

ஆனால் இந்த அலுவலகம் அதுவும் இந்த அறை சத்தியமாக இதில் பவித்ராவால் இயல்பாக இருக்க முடியவில்லை.. அவர்கள் காதலித்த காலங்கள் பழைய நினைவுகள் வந்து தாக்கியது.. மூச்சு முட்டுவது போல் இருந்தது.. 

பார்த்திபனுக்கு அப்புடி எல்லாம் எதுவும் இல்லை போல், எவ்வளவு இயல்பாக இருக்கின்றான்.. எப்புடி அதற்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டானா, நான் தான் பழசை நினைச்சி நினைச்சி கவலைப்பட்டுட்டு இருக்கேனா, அதுவும் உள்ளே வந்ததிலிருந்து அவன் குரல் காட்டும்  அந்நியம் அது பவித்ராவுக்கு புதிது.. நீ யாரோ நான் யாரோ என்ற அவனின் அந்நிய பார்வை அது பவித்ராவிற்கு என்னவோ போல் இருந்தது.. 

இது தானே நிஜம்.. இப்போது அவன் யாரோ நீ யாரோ தானே.. இதற்காக தானே பிடிவாதமாக நின்று விவாகரத்து வாங்கினாய்.. அப்புடி இருக்கையில் பார்த்திபனின் ஒதுக்கம் ஏன் உன்னை ஏன் பாதிக்கின்றது மனசாட்சி கேள்வி எழுப்ப அவளிடம் பதிலில்லை.. அதற்குள்ள எல்லாத்தையும் மறந்துட்டு இவன் மட்டும் சாதாரணமா இருக்கானே பார்த்திபன் மீது கோவம் வந்தது..

இப்போது அவன் மீது கோவம் படுவதற்கு கூட தனக்கு உரிமை இல்லை என்பதை மறந்து, கண்டதையும் யோசித்து யோசித்து இப்போது தலை வேறு வலிக்க ஆரம்பித்தது இருந்தது..

பார்த்திபன் ஏதோ ஒரு பில்லை எடுத்து காண்பித்து எதையோ கேட்க, ம்ஹும் பவித்ரா வால் இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.. 

“ப்ளீஸ் மீதியை நாளைக்கு பார்த்துக்கலாமா? என்னால் முடியலை” பார்த்திபனை பார்த்து கேட்டாள்.. 

நிமிர்ந்து பவித்ராவை ஒரு வினாடி  பார்த்தவன் “ஓகே” என்று விட்டான்..

இந்த ஓகே பவித்ராவிற்கு ஏமாற்றத்தை கொடுத்தது.. ஏன் என்னாச்சு என்று பார்த்திபன் கேட்பானோ என்று எதிர்பார்த்தாளோ என்னவோ,

பவித்ரா கிளம்ப “நாளைக்கும் இதையே சொல்லாதீங்க.. இன்னும் ஒன் வீக்குள்ள எல்லாத்தையும் முடிக்கனும்.. உங்க ஒரு ஆபிஸ் பின்னாடி மட்டும் சுத்திட்டு  இருக்க முடியாது.. உங்களை போல் நிறைய ஆபிஸ்க்கு நான் ஆடிட்டிட் பண்ண வேண்டி இருக்கு.. அதனால் உங்களுக்கு கொடுத்த டைமிங்குள்ள கரெக்ட்டா வாங்க” என்று ஸ்டீரிட்டாக சொன்னவன் சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்தவன் எழுந்து கண்ணாடி தடுப்பு அருகே சென்றான்..

பவித்ரா அதிர்ச்சியாக பார்த்தாள்..  காதலிக்கும் காலத்திலே இனிமே சிகரெட் பிடிக்க கூடாது என்று அவள் தலையில் அல்லவா சத்தியம் வாங்கி இருந்தாள்.. அதை பார்த்திபனும் இதுவரை மீறியதில்லை ஆனால் இன்று அதிர்ச்சியாக பார்த்திபனை பார்த்து கொண்டு இருக்க, அவனோ கண்ணாடி தடுப்பை நகர்த்தி புகையை வெளியிட்டு கொண்டு இருந்தவன், எதையோ புருவம் சுருக்கி பார்த்தான் பின்பு பவித்ரா புறம் திரும்பி கேலியாக நக்கலாக இதழ் வளைத்தான்..

எதை பார்த்து இவ்வாறு நக்கலாக பார்க்கிறான் என்ற கோவம் வர பவியும் அவனருகே வந்து கீழே பார்க்க.. காரிலிருந்து இறங்கினான் ஷ்யாம்..

இதற்கு தான் இவ்வளோ நக்கலா பார்க்கிறானா என்று கோவம் வந்தது பார்த்திபன் மீது, 

“உன்னோட இந்த கேவலமான புத்தி தான் நம்மை இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு” என்று கோவமாக சொன்னாள்..

“எது கேவலம், ஆபிஸ் வேலையை பாதியிலேயே விட்டுட்டு அவனை வர சொல்லி கிளம்புறதை விடவா? என்னோட புத்தி கேவலமானது” பார்த்திபன் அதே நக்கல் குரலில் கேட்க,

“ஊர் சுத்துறதை நீ பார்த்தியா”! கோவமாக பார்த்திபன் முகத்திற்கு முன்பு கை நீட்டி கோவமாக கேட்டாள்..

“எனக்கு சம்மந்தம் இல்லாததை நான் ஏன் பார்க்கனும் எனக்கு வேற வேலை வெட்டி இல்லையா, அண்ட் இனிமே என் முன்னாடி கை நீட்டி பேசுறது, நீ வா போன்னு மரியாதை இல்லாம பேசுறது இது எல்லாம் வச்சுக்கிட்ட, பேசுறதுக்கு வாய்யும் நீட்றதுக்கு கையும் இருக்காது திஸ் யுலர்ஸ் லாஸ்ட் வார்னிங் மைண்ட் இட்” என்று எச்சரித்தான்.. தன்னை போல் கை கீழிறங்கியது.. 

“என்னோட முடிவு ரொம்ப சரியானதுன்னு, நீ நிருபிச்சுக்கிட்ட இருக்க பார்த்தி” என்றால் கீழ் இறங்கிய குரலில்,

“ரொம்ப தாங்க்ஸ் மிஸ் பவித்ரா” என்றான் அலட்சியமாக,

இப்புடிபட்ட பார்த்திபன் அவளுக்கு புதிது..இப்போது அவன் பேசியதில் கோவமும் கூட அழுகையும் சேர்ந்தே வந்தது.. தன்னுடைய கைப்பை எடுத்து கொண்டு கிளம்பினாள்..

“உன்னை யார் இங்க வர சொன்னா?, நீ கேட்ட போது நான் பார்த்துக்கிறேன் நீ வராதேன்னு தானே சொன்னேன்..ஏன் வந்த ஷ்யாம்” என்றாள் மிதமிஞ்சிய கோவத்தில், இவனால் தானே பார்த்திபன் அப்புடி பேசினான் அதுவும் அவன் பார்த்த நக்கல் பார்வை அதை அவளால் தாங்க முடியவில்லை.. அந்த கோவத்தை ஷ்யாமிடம் காட்டினாள்..

“ஹேய்  என்னாச்சு எதுக்கு இவ்வளோ கோவப்படற, உனக்காக தானே,  நீ தனியா எப்புடி மேனேஜ் பண்ணுவ, உனக்கு கஷ்டமா இருக்குமேன்னு” என்றவனை 

“ஸ்டாப் இட் ஷ்யாம், நான் ஒன்னும் குழந்தை இல்ல, எதையும் மேனேஜ் பண்ண முடியாத அளவுக்கு, என்னால் என்னை பார்த்துக்க முடியும்.. நீ சும்மா எனக்காக எனக்கான்னு அதிக பிரசங்கி வேலை பண்ணாத” என்றாள் கோவம் குறையாமல், 

ஷ்யாமிற்கு கோவமாக வந்தது.. இருந்தும் அடக்கி கொண்டான் இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு பின்னாடி இவளை கவனித்து கொள்ளலாம் என்று நினைத்தவன்,

“நீ ஏன் இவ்வளோ கோவப்படற பவி? பார்த்தி ஏதும் சொன்னானா, அவன் ஏன் தான் அப்புடி பண்றானோ ச்சே “என்ற ஷ்யாம் மேலும் பார்த்திபனை ஏதோ சொல்ல வர பவி முறைத்தாள்..

இப்போது பார்த்திபனை பற்றி பேசுவது தனக்கு நல்லது அல்ல என்பதை புரிந்து ஷ்யாம் அமைதியானன், “ஓகே ஓகே சாரி சாரி நான் வந்து இருக்க கூடாது தான்.. உன் மேல்ல இருக்க அக்கரையில் தான் வந்துட்டேன்.. ஆனா உன்னை டிஸ்டர்ப் பண்ணனும் வரலை சாரி” முகத்தை பாவமாக வைத்து சொல்லவும், 

பவிக்கு கஷ்டமாகி போனது.. அந்த பார்த்தி தப்பா பேசினதுக்கு அவனை சத்தம் போடாமல் வந்துட்டு, உனக்காக வந்து இருக்க ஷ்யாம்கிட்ட கோவப்படுறியே என்று தன்னையே நொந்தவள்,

“சாரி நான் வேற ஒரு டென்சன்ல சாரி ஷ்யாம்” என்று கோவத்தை விடுத்து மன்னிப்பு கேட்க..

‘இது இது தான்டி வேணும்.. நீ இவ்வளோ முட்டாளா இருக்கிற வரை நான் நினைக்கிறது எல்லாம் சீக்கிரம் நடக்கும்’ என்ற நினைத்தவன்,

“இட்ஸ் ஓகே பவி கிளம்பலமா”?  ஷ்யாம் கேட்க,

“நானும் கார்ல தான் வந்து இருக்கேன் ஷ்யாம் நான் அதிலே போய்க்கிறேன்.. ஆபிஸ்லையும் கொஞ்சம் வேலை இருக்கு” என்று பவித்ரா மறுக்க.. 

“ம்பச் நீ இப்ப தானே சொன்ன கொஞ்சம் டென்ஷனா இருக்கேன்னு, இந்த டென்சனோட ட்ரைவ் பண்றது நாட் குட், வா நானே உன் ஆபிஸ்ல ட்ராப் பண்றேன்” 

“அப்ப என் காரை என்ன பண்றது” பவி மீண்டும் மறுக்க,

“அதை அப்புறமா ட்ரைவரை விட்டு எடுத்துக்கலாம்” என்ற ஷ்யாம்,  அவள் மறுக்க மறுக்க கைபிடித்து  தன் வண்டியில் ஏற்றினான்.. மேலே நின்று பார்த்திபன்  பார்த்து கொண்டு இருப்பதால், அவன் முன்னால் இருவரும் ஒன்றாக செல்ல வேண்டும் என்பதால், ஷ்யாம் அவ்வாறு செய்தான்..

பவியை காரில் ஏற்றி விட்டு அவன் காரில் ஏறப்போக அப்போது எதிர்ப்புறம் ஒரு கார் வந்தது.. 

அந்த காரிலிருந்து வம்சி இறங்க, அவனை பார்த்த பவித்ரா, “வம்சி” என்று சந்தோஷத்தில் கத்தியபடி ஷ்யாம் காரிலிருந்து இறங்கி அவன் அருகே சென்றவள் அவனை அணைத்து கொண்டாள்.. 

கண்கள் கலங்கியது அவளுக்கு, அவளுக்கென்று துணைக்கு ஒரு ஆள் வந்தது போன்று இருந்தது.. மனது அளவில் ரொம்ப ரொம்ப பலவீனமாக தான் இப்போது இருக்கின்றாள்.. அதை அவளும் உணர தான் செய்கின்றாள்.. 

அவளுக்கு தன்னுடைய அப்பா அம்மாவை விட அதிகம் பிடித்தது பார்த்திபன் ப்ரதாப் அதற்கு அடுத்து அவளின் தம்பி வம்சியே..  மூவரில்  இருவர் இப்போது அவளிடம் இல்லை.. 

பார்த்தி அவன் பொய்த்து போனதாக அவளே நினைத்து கொண்டு இருக்கிறாள்… ப்ரதாப் அவன் முன்பிருந்தே பாசமாக  பேச மாட்டான் தான்.. ஆனாலும் தன் மீதான அவனின் அக்கறை அதை பவி உணர்வாள்.. எங்கு சென்றாலும் அவனின் துணை தன்னோடு இருப்பது போல் இருக்கும்.. ஆனால்  இப்போது என் வாழ்க்கையில் நீ தலையிடாத என்று அவள் சொன்ன நாளிலிருந்து ப்ரதாப் தள்ளியே நிற்கின்றான்.. தள்ளி இருந்தாலும் இப்போதும் அவள் மீதும் அவளின் வாழ்க்கை மீதும் அவனுக்கு அக்கறை இருக்கின்றது.. அதனால் தான் அவளுக்கு துணைக்கு வம்சியை வரவழைத்து இருக்கின்றான் என்பது அவளுக்கு தெரியவில்லை..

வம்சியும் இங்கில்லை.. கொஞ்ச நாளாகவே மனதில் அவளுக்கு அமைதியில்லை.. தனக்கென யாருமே இல்லாதது போன்று ஒரு உணர்வு.. ரொம்ப வெறுமையாக உணர, இந்த சமயத்தில் வம்சி வந்து இருப்பது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.. அதுவே கண்ணீராக வெளி வந்தது.. 

“அடடடா எதுக்கு இப்ப என் சட்டையை நனைக்கிற பவி அக்கா” என்ற வம்சி அவளை விலக்க,

“நீ எப்படா வந்த”? 

“காலையில் தான் வந்தேன் என் அக்காவை பார்க்கலாம்னு, ஆனா என்னோட சின்சியர் அக்கா மார்னிங் நேராமாவே ஆபிஸ் வொர்க் பார்க்க கிளம்பிட்டாங்கன்னு  சொன்னாங்க அதான் ஓடி வந்துட்டேன்” என் அக்காவை பார்க்க என் வம்சி சொல்ல,

“பொய் சொல்லாதடா உன் அண்ணாய்யா கூட சுத்திட்டு கடைசியாக தான் என்னை பார்க்க வந்துருப்ப தெரியாதா உன்னை பத்தி” 

“சரி விடு உனக்கு வொர்க் முடிஞ்சுதா” என வம்சி கேட்க

“இல்லைடா எனக்கு தான் தலைவலி அதான் நாளைக்கு பார்த்துக்கலாம் பாதியிலேயே கிளம்பிட்டேன்” என்றாள் பவித்ரா..

“அப்ப போகலாமா”? வம்சி கேட்க..

“ம்.. நான் ரெடி வா போகலாம்” என்ற பவி வம்சி காரில் ஏற போக,

“ஆமா இது யாரு”? வம்சி வேண்டுமென்றே அங்கு நின்றிருந்த ஷ்யாமை தெரியாதது போல் கேட்க,

“ஷ்…. சாரிடா இன்டியூட்ஸ் பண்ண மறந்துட்டேன் என்று தலையில் அடித்து கொண்டவள்,  இது ஷ்யாம் என் ஃப்ரெண்ட் நான் இவரை பத்தி உனக்கு நிறையா சொல்லி இருக்கனே, எனக்கு கஷ்டமான நேரத்தில் ஹெல்ப் பண்ண நல்ல ஃப்ரெண்ட்ன்னு மறந்துட்டியா”?,

“ஓ… அவரா இவர், இவரை மறக்க முடியுமா, உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணி இருக்கார் அதை எல்லாம் மறக்க முடியுமா”? என்றான் வம்சி அந்த ஹெல்ப்பில் ஒரு அழுத்தை கொடுத்து ஷ்யாமை பவி பார்க்காத போது முறைத்தப்படி, 

ஷ்யாம் அருகே சென்று “ஹலோ சார் ஐயம் வம்சி வம்சி கிருஷ்ணா.. நீங்க என் அக்காவுக்கு எவ்வளவோ ஹெல்ப் பண்ணி இருக்கீங்க அதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.. நீங்க செய்த உதவிக்கு எல்லாம் கைமாறு செய்ய தான் நானும் என் அண்ணனும் சான்ஸ் எதிர்பார்த்து காத்துட்டு இருக்கோம்.. சான்ஸ் கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு பாருங்க” என்று சிரித்தபடி தான் பேசினான்.. ஆனால் அதில் உள்ளர்த்தம் உள்ளது என்பது ஷ்யாமிற்கும் புரிந்தது..

இருந்தும் அவனும் சிரித்தபடியே “கண்டிப்பா வம்சி” என்றான்.. 

“நீங்க கிளம்புங்க ஷ்யாம் சார் அதான் நான் வந்துட்டனே என் அக்காவை இனிமே நான் பார்த்துக்கிறேன்.. நீங்க இப்புடி என் அக்காவுக்காக  உங்க வேலையை பிசினஸ் எல்லாம் எல்லாம் விட்டுட்டு வர வேண்டியது  இல்லை நான் பார்த்துக்கிறேன்” என்றான்.. 

அதில் இனிமே நீ என் அக்கா பக்கம் வரவே கூடாது டா என்ற மறைமுக எச்சரிக்கை இருந்தது.. ஷ்யாமால் சிரிப்பதை தவிர வேறு எதுவும் பண்ண முடியவில்லை.. “ஓகே பவி நான் கிளம்புறேன்” என்றவன் வம்சியை முறைத்தடி அங்கிருந்து சென்றான்..

“வம்சி நாமும் கிளம்பலாமா”? என்  பவித்ரா கேட்க,

“போலாம்க்கா ஒரு டூ மினிட்ஸ் நான் போய் பார்த்தி பாவாவை பார்த்ததுட்டு வரேன்” என்றவன்  வேண்டாம் என பவித்ரா மறுப்பதற்குள் அலுவலகத்திற்குள் சென்றான்..

“ஹாய் பாவா” என பார்த்தியை அழைத்தபடி அவன் அறைக்குள் நுழைய,

பார்த்திபன் எதுவும் பேசவில்லை.. அவன் வேலையை மட்டும் பார்த்தது கொண்டு இருந்தான்..

“அட என்ன பாவா கால் பண்ணினா, மெசேஜ் பண்ணினா மட்டும் தான் அவாய்ட் பண்றீங்கன்னு நேர்ல வந்தா இப்பவும் அவாய்ட் பண்றீங்களே பாவா நியாயமா”? 

“இத்தனை நாள் கழிச்சு வந்து இருக்கனே, எப்புடி இருக்கடா எப்ப வந்தடான்னு ஒரு வார்த்தை பேச கூடாதா பாவா, போங்க உங்க கூட டூ நான் கோவமா போறேன்”

“முதல்ல கிளம்பு உன்னை யார் இங்க வர சொன்னது” பார்த்திபன்  கோவமாக கேட்டான்,

“நீங்களா கோபால் இது நீங்களா என்னை பார்த்து யார் வர சொன்னா கிளம்பு என்று சொன்னது நீங்களா கோபால், ஐய்யோ என்னால் நம்ப முடியலையே கோபால் கோபால்” என்று அந்த கால நடிகைகள் போல் பொய்யாக அதிர்ச்சியாகி பேச,

“டேய் நிறுத்திக்கோ, இல்லைன்னா அவ்ளோ தான் பார்த்தி மிரட்ட, ஓகே கூல் கூல் பாவா நிறுத்திக்கிறேன்.. எப்புடி இருக்கீங்க பாவா? என் நலம் விசாரித்தான்” வம்சி..

“ம்பச் பர்ஸ்ட் இந்த பாவான்னு கூப்பிடறதை நிறுத்துடா”! என்றான் பார்த்திபன் எரிச்சலாக,

“ஏன் கல்யாண டைம்ல நீங்க தானே என்னை மாமான்னு கூப்பிட்டு வம்சி அது தான் சரியான முறைன்னு சொன்னீங்க”.. 

“அது அப்ப பார்த்தி சொல்ல”

“ஏன் இப்ப என்ன”? 

“உன் அக்காவுக்கும் எனக்குமே எந்த உறவும் இல்லைன்னு ஆகிட்டு அப்புறம் இந்த முறை கிறை எல்லாம் எதுக்கு”  பார்த்திபனுக்கு எரிச்சலாக வந்தது..

“ம்.. நீங்க சொல்றதும் பாதி சரி தான் பாவா.. என் அக்காவுக்கும் உங்களுக்கும் இடையில் எதுவும் இல்லை தான்.. ஆனா என் அண்ணாவுக்கும் உங்களுக்கும் இடையில் மாமன் மச்சான்கிற உறவு இன்னும் அப்புடியே தானே இருக்கு.. அது படி பார்த்தா நான் உங்களை பாவா சொல்றது சரி தானே”..

“உன் அண்ணனை பத்தி பேசாதா, நான் ஏற்கெனவே அவன் மேல்ல செம கோவத்தில் இருக்கேன்”..

“என்ன நினைச்சிட்டு இருக்கான் அவன் மனசில்ல, என் தங்கச்சி பத்தியும் அவ வாழ்க்கையை பத்தியும்”, 

“வீட்டுக்கு கூட்டிட்டு போகற ஐடியா இருக்கா.. இல்லை வேண்டாம்னு கழட்டி விட நினைக்கிறானா.. இரண்டில் எதையாவது ஒன்ன தெளிவா சொல்லி வேண்டியது தானே,  என்ன தான்டா நினைச்சிட்டு இருக்கீங்க”? கோவமான பார்த்தி வம்சி சட்டையை பற்றி கேட்க..

“பாவா சட்டையை புடிச்சு கேட்ட கேள்வி எல்லாம் கரெக்ட்டு, ஆனா சட்டையை பிடிச்ச ஆளு தான் தப்பு.. நீங்க இதை எல்லாம் கேட்க வேண்டியது என் பெத்த நானா கொடுக்கு கிட்ட, என்கிட்ட இல்ல” என்றதும்

“ஏன் கேட்க மாட்டேனா, எனக்கு தைரியம் இல்லைன்னு நினைக்கிறியா, கேட்பேன்டா உன் அண்ணா கிட்ட அவன் சட்டையை புடுச்சு கேள்வி கேட்கிறேன் பாரு”,

“நான் பொறுமையா இருக்கிறது என் ப்ரியாவுக்காக.. என் பொறுமை என்னைக்கும் போகுதோ அன்னைக்கு இருக்குடா உன் அண்ணாவுக்கு” பார்த்தியின் கோவம் அதிகரித்தது..

“கேளுங்க யார் கேட்க வேணாம் சொன்னது.. அப்புடி கேட்க போற நாள் என்கிட்ட சொல்லிட்டு போங்க.. ஏன்னா உங்களுக்கு சேதாரம் கம்மியா இருக்கும்னு கருமாரி அம்மன் கிட்ட வேண்டுதல் வைக்கனும் அதுக்கு தான்” என்ற வம்சி அங்கிருந்து கிளம்பினான்..

வம்சியிடம் சொன்னது போல ஒரு வாரம் கழித்து  ப்ரதாப் முன்பு நின்றான் பார்த்திபன்.. 

தங்கைகாக அவனின் சட்டை பிடித்து கேள்வி கேட்க வேண்டும் என்று, அப்புடி ஒரு சூழ்நிலை வந்தது…

இவன் ப்ரதாப்பை உண்டு இல்லைன்னு பண்ணனும் ஒரு வழி ஆக்க வேண்டும் என்று முடிவோடு வந்து இருக்க.. இங்கு கதையே மாறியது…

 ப்ரதாப் கேட்ட முதல் கேள்வியிலே பார்த்திபன்  க்ளீன் போல்ட் ஆகி இருந்தான்.. அடுத்தடுத்து ப்ரதாப்  கேட்ட கேள்வியில் பார்த்திபன் தான் ஒரு வழி ஆகி இருந்தான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 48

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!