“இந்த புடவை வேண்டா ப்ரியா மாவிலை பச்சை கலர்ல ஒரு பட்டுப்புடவை இருக்குமே அதை உடுத்திக் கோ.. அப்புறம் காதை ஒட்டி சின்னதா போட்டு இருக்க பாரு அந்த கம்மல் அதை கழட்டி வீசிட்டு நான் எடுத்து வைச்சு இருக்கிற ஜிமிக்கியை போட்டுக்கோ, அதே போல் கை நிறைச்சு கண்ணாடி வளையும் போட்டுக்கோடி, நான் போய் உன் டிரஸ் எல்லாம் பேக் பண்றேன்” என்ற கல்யாணி அங்கிருந்து சென்றார் அவருக்கு மகள் கணவன் வீட்டுக்கு போவதே மகிழ்ச்சி..
அங்கிருந்து அவர் நகர்ந்ததும் தனக்கு எதிரே அமர்ந்து இருந்த பார்த்தியை முறைத்தாள்..
அதை கண்டு கொள்ளாத பார்த்தி “சீக்கிரம் ரெடியாகு ப்ரியா” என்றான்..
“சரியான சுயநலவாதி டா நீ” திட்டிவிட்டு தன்னறைக்கு சென்றாள் விஷ்ணு கணவன் வீட்டிற்கே கிளம்புவதற்காக,
‘புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்கும் மத்த எதுல ஒத்து போகுதோ இல்லையோ என்ன சுயநலவாதின்னு சொல்வதில் பயங்கரமா ஒத்து போகுது’ என்று சிரித்த பார்த்தி சற்று முன்பு நடந்த கலவரத்தை நினைத்தான்..
ப்ரதாப்பை பார்த்து விட்டு கிளம்பிய பார்த்திக்கு ஒன்று புரிந்தது.. இங்கு புரிதலில் தான் பிழை என்பது, அவன் அப்புடி தான் நினைப்பான், பேசுவான், நடப்பான் என தாங்களாகவே ஒரு முடிவு செய்து விட்டு, இவ்வளவு நாளும் அவனை அழுத்தக்காரன், பிடிவாதக்காரன் கோபக்காரன் என்ற பட்டம் சூட்டி குறை கூறி இருக்கிறோம் என்பது தெரிந்தது.. அடுத்து தான் என்ன செய்ய வேண்டும் அதுவும் அவனுக்கு புரிந்தது.. அதான் வீட்டிற்கு வந்ததும் “ப்ரியா கிளம்பு உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விடுறேன்” என்றதும் முதலில் முடியாது என்றாள் விஷ்ணு..
அதை கேட்ட பார்த்திக்கு கோவம் வந்தது இவள் என்ன இப்புடி பேசுகிறாள் என்று, “ஏன் முடியாது? என்னைக்கா இருந்தாலும் நீ உன் புருஷன் வீட்டுக்கு போய் தானே ஆகனும்.. ஏன் அங்க போக உனக்கு விருப்பமில்லையா”? பார்த்தி கோவமாக கேட்க,
அவனை முறைத்தவள் “நான் அப்புடி சொன்னனா”? என அவனை போல் கோவமாகவே கேட்டாள்..
“பின்ன கிளம்பு சொன்னா தயங்குறியே, அப்ப நான் அப்புடி தானே நினைக்க முடியும்.. கிளம்பு ப்ரியா” என்றான்..
“என்னாச்சு பார்த்தி உனக்கு, தீடீர்னு என்னவாம், நேத்து நான் அழுததால் இப்புடி பண்றியா நலிந்த குரலில் கேட்டவள், இப்ப நான் ஓகே வா தான் இருக்கேன்.. எனக்காக நீ இறங்கி போக வேண்டாம்” என்றாள்..
“உன்னை நான் இப்ப கிளம்ப சொன்னேன் ப்ரியா, அதை விட்டுட்டு என்ன என்னவோ பேசிட்டு இருக்க, போ கிளம்பு” என்று சத்தம் போட்டான் அண்ணனாக, அப்போதும் அவள் அப்புடியே இருக்க,
“ஏன் தயங்குற ப்ரியாமா? அங்க போக உனக்கு விருப்பமில்லையா?, ப்ரதாப்பை உனக்கு பிடிக்கலையா? என மீண்டும் வேண்டுமென அண்ணன்காரன் கேட்க, அவனை பயங்கரமாக முறைத்தாள்..
அவளுக்காக விருப்பமில்லை, அவளுக்கு அங்கு செல்ல வேண்டும் ப்ரதாப்போடு வாழ வேண்டும் அதற்காக தான் ஏங்கி கொண்டு இருக்கிறாள்.. ஆனாலும் இத்தனை மாதங்களில் கணவன் தன்னை வந்து அழைத்து போகவில்லையே, ஏன் அலைபேசியில் கூட அழைத்து பேசவில்லையே என்ற மனதாங்கல், அதோடு நேற்று முன்பு வரை தன்னை கணவனுக்கு பிடிக்குமா இல்லையா என்ற குழப்பத்தில் இருந்தவளுக்கு, இப்போது ஒருவேளை லில்லியை பிடிக்குமோ அவள் சொன்னது உண்மையா பொய்யா என்ற குழப்பமும் வந்து சேர்ந்தது.. அதுவே அவளை அங்கு செல்ல தடுத்தது.. அதோடு அவர் வந்து கூப்பிடாமா நான் எப்புடி போவேன் என்று சின்ன ஈகோவும் அவளை தடுத்தது..
“கிளம்பு கிளம்புனா அவர் வந்து கூப்பிடாமா எப்புடி டா போக முடியும்? நான் அவர் வந்து கூப்பிட்டா தான் போவேன்” என்று இரைந்தாள்..
“ஏன் நீயா போன என்ன ப்ரியா? அதில் என்ன உனக்கு கௌரவ குறைச்சல்.. ப்ரதாப்பை வார்த்தைக்கு வார்த்தை ஈகோ பிடிச்சவன் சொல்லுறியே இப்ப நீ பண்றதுக்கு பேர் என்ன”? என கேட்டான்..
“அதுக்கு பேர் ஈகோ இல்ல பார்த்தி எதிர்பார்ப்பு, அவர்கிட்ட இருந்து எனக்காக பண்ணனும் நினைக்கிற என்னோட எதிர்பார்ப்பு.. இவ்வளோ பேசுறியே இத்தனை மாசத்தில் ஒரு தடவையாவது எனக்கு போன் பண்ணி பேசி இருப்பாரா, இல்ல வீட்டுக்கு வான்னு ஒரு வார்த்தையாவது கூப்பிட்டு இருப்பாரா, அவருக்கு என்ன பிடிக்காதுடா அப்புடி இருக்கும் போது நான் எப்புடி டா போக முடியும்”? என்றவளுக்கு லேசாக கண்ணும் கலங்க ஆரம்பித்தது..
“நீ பண்ணி இருக்கியா ப்ரியா”? பார்த்தி கேட்கவும் அவனை புரியாமல் பார்த்தவள் “என்ன”? என கேட்டாள்..
“இப்ப நீ சொன்னியே கால் பண்ணி பேசலை.. வான்னு கூப்பிடலைன்னு அதை எல்லாம் நீ பண்ணி இருக்கியா, என்னைக்காவது நீ போன் செய்து இருக்கியா, வந்து வீட்டுக்கு கூப்பிட்டு போங்கன்னு சொல்லி இருக்கியா”?, என கேட்கவும் இப்போது வாய் அடைத்து போவது விஷ்ணு முறையானது..
“அது அது” என்றவளுக்கு பேச முடியவில்லை..
“சோ நீயும் பண்ணது இல்லை.. அப்புறம் அவனை மட்டும் குறை சொல்றது என்ன நியாயம் ப்ரியா.. அவன் ஆபிஸிக்கே வேலைக்கு போய்ட்டு அவனை தெரியாத மாதிரி நீ நடந்துக்கிட்டா அவனும் அப்புடி தான் நடந்துப்பான்” என்றவனை அதிர்ந்து பார்த்தாள்..
“உனக்கு எப்புடி பார்த்தி” என அதிர்ந்து கேட்டவளிடம் அது இப்ப முக்கியமில்லை நீ கிளம்புறியா இல்லையா அவன் அதில்லே குறியாக இருக்க, விஷ்ணு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்..
“சோ உனக்கு அங்க போக விருப்பமில்லை.. ப்ரதாப்பை பிடிக்கலை அப்புடின்னு நான் இதை எடுத்துக்கிறேன்… பிடிக்காத வாழ்க்கையை நீ ஏன் கஷ்டப்பட்டு வாழனும் என்னோட வக்கில் ஆபிஸ் கிளம்பு ப்ரியா இன்னைக்கே டிவோர்ஸ்க்கு பேப்பர் ரெடி பண்ண சொல்லுவோம்” என்று பார்த்திபன் சொன்னதை கேட்டவளுக்கு தூக்கிவாரி போட்டது..
“பார்த்தி தேவையில்லாம லூசு போல பண்ணாத” ப்ரியா கத்த,
“உனக்கு வேற ஆப்சனே இல்ல ப்ரியாமா ஒன்னா கிளம்பு உன் புருஷன் வீட்டுக்கு நான் கொண்டு வந்து விடுறேன்..
இல்ல முடியாதுன்னா வக்கீல் வீட்டுக்கு கிளம்பு.. இரண்டுல எங்க போகுறதுன்னு நீ தான் முடிவு பண்ணனும்.. ஆனா கண்டிப்பா இந்த இரண்டில் ஒன்று இன்னைக்கு நடந்தே ஆகனும்” என்றான் பார்த்தி..
“உன்னை நான் கொல்ல போறேன் அது தான் இன்னைக்கு நடக்க போகுது” என்றவள் “பாருங்கம்மா கோர்ட் ,வக்கில், டிவோர்ஸ்ன்னு என்ன எல்லாம் பேசுறான்னு உடம்பு சரியில்லாதவளை போட்டு எப்புடி படுத்துறான்னு பாருங்க” என்று அருகே நின்று இருந்த கல்யாணியிடம் குறை சொன்னாள்..
வெளியூரிலிருந்து காலை வீடு திரும்பிய உதயகுமார் கல்யாணி இருவரும் வீட்டிற்கு வந்த போது கண்டது.. காய்ச்சலில் சுருண்டு சோர்ந்து போய் படுத்து இருந்த மகள் தான்.. அவளின் விழியின் இரத்த சிவப்பே கூறியது மகள் அழுது தூங்க மால் இருந்து இருக்கிறாள் என்று, ஹாஸ்பிடல் அழைத்தும் விஷ்ணு பிடிவாதமாக மறுத்து விட்டாள்..
வீட்டில் இருக்கும் மருந்து கசாயம் எல்லாம் கொடுத்த போதும் மதியம் தாண்டியும் எழுந்திருக்காத மகளை காண்கையில் மனம் பதறி தான் போனது கல்யாணிக்கு, அதன் பின் என்ன மாயமோ மாலை நிவேதா வந்து சென்றபின் எழுந்து கொண்டாள் முகத்திலும் தெளிவு வந்தது.. அதை பார்த்த பின்பு தான் இவர்களுக்கே நிம்மதியாக இருந்தது..
அதன் பின்பு வந்த பார்த்தி ப்ரதாப்பை சந்திக்க சென்றது அவன் பேசியது எல்லாத்தையும் சொல்லியவன் ப்ரியாவை அங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் சொல்ல உதயகுமாருக்கு அதுவே சரி என்று பட்டது..
“உன் மேல்ல இருக்கிற கோவத்தை அவங்க வீட்டு ஆளுங்க ப்ரியா மேல்ல காட்டுனா என்னடா பண்றது”? என கல்யாணி தயங்க,
“சமாளிக்க சொல்லுங்கம்மா.. தேவையில்லாம யாராவது பேசினா பதிலுக்கு பதில் கொடுக்க சொல்லுங்க.. இவளுக்கும் வாய் இருக்கு தானே” என்று பார்த்தி கூறிய போதும் அவர் முகம் தெளிவு இல்லாமல் இருக்க
“இதுக்கு எல்லாம் பயந்துட்டு இவளை அங்க அனுப்பாமா காலத்திற்கும் இங்கையே வச்சு இருக்க போறீங்களமா”? என்ற பார்த்தி யின் கேள்வியில்,
“நான் எப்போடா அப்புடி சொன்னேன்” என்று பதறிய கல்யாணி, “மாப்பிளை என்ன நினைச்சிட்டு இருக்காங்க அவங்க மனசில்ல என்ன இருக்கு உன் விஷயத்தால் அவருக்கும் இவ மேல்ல கோவம் இருக்கா இல்லையான்னு தெரியாமா எப்புடி அனுப்புறதுன்னு தான்டா சின்ன தயக்கமா இருக்கு”,
கோவமா அவனுக்கா அப்புடி தானே பார்த்தியும் காலை தன் மச்சானை சந்திக்கும் வரை நினைத்து இருந்தான்.. ஆனால் அவனோ அப்புடி எல்லாம் எதுவும் இல்லைடா வெண்ணெய்ன்னு நெத்தி பொட்டில் அடித்தாற் போல் அல்லவா சொல்லாமல் சொல்லி விட்டான்..
ப்ரதாப் பேசும் விதம் முதலில் தங்கை மீது நிரம்ப கோவம் இருப்பது போலவும் அவளை பிடிக்காது பேசுவது போல் தான் தோன்றியது.. ஆனால் போக போக அதுவும் பார்த்தி அறையை விட்டு வெளியேறும் போது,
“உன் தங்கச்சிக்கு இப்ப எப்புடி இருக்கு.. பைத்தியக்காரி எதையாவது தானவே யோசிச்சு அழுது இழுத்து வச்சுப்பா” என்று கடிந்தாலும், அதில் இருக்கும் நேசம் அக்கறை அதை பார்த்திக்கு புரிந்தது.. அது ஒன்றே தங்கையை அவள் கணவன் வீட்டுக்கு இன்றே அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்தது..
“அவனுக்கு அப்புடி எல்லாம் எதுவும் இல்லம்மா.. ப்ரியாவை நல்லா பாத்துப்பான்” என்ற பார்த்திபன் முதுகில் அடித்த கல்யாணி “அது என்னடா மாப்பிளைங்கிற மரியாதை இல்லாம பேசுற” என்று கோவபட்டார்..
“அவர்ர்ர்ர் இவர்ர்ர போதுமாம்மா” என்ற பார்த்தி தன் முதுகை தேய்த்து கொண்டே “இப்ப இந்த ர்… ரொம்ப முக்கியமாம்மா” என்றும் கேட்டு கொண்டான்..
பார்த்தி சொல்றதும் சரி தானே ப்ரியா கல்யாணி சொல்லி விட, உதயகுமாரும் அதையே தான் சொன்னார்..
அதன் பிறகு தான் விஷ்ணுவை கிளம்ப சொல்ல அவள் இவ்வளவு அலப்பரையும் செய்து கொண்டு இருக்கிறாள்..
தன்னறையில் கல்யாணி கூறியது போல் புடவை ஜிமிக்கி வளையல் எல்லாம் அணிந்து ரெடியானவள் டேபிள் மீது வைக்கப்பட்டு இருந்த பூவை பார்த்தாள்..
எப்புடியும் ஐந்தாறு முழம் இருக்கும்.. ‘மறு வீட்டுக்கு வந்த புது பொண்ணா நான் எதுக்கு இவ்வளோ ப’ சலித்து கொண்டாலும் தலையில் வைத்து கொண்டாள்..
என்ன தான் சிணுங்கி கொண்டே கிளம்பினாலும் அலங்காரம் வழக்கத்தை விட படு தூக்கலாக தான் செய்து இருந்தாள்.. லிப்ஸ்டிக் கூட அதிகமாக இப்பதாக தோன்றினாலும் அதுவும் அழகாக தான் இருந்தது.. கணவன் வீட்டுக்கு செல்ல போகிறோம் என்றதும் உள்ளுக்குள் மனது ரண்டக்க ரண்டக்க என்று துள்ளி கொண்டு தான் இருக்கிறது மகிழ்ச்சியில், அதே சமயம் அதே அளவு பயமும் குழப்பமும் சிந்தையில் இருந்தது..
இப்ப போனா என்னென்ன கேள்வி எழுமோ, என்ன சொல்வது, கோவப்படுவாரோ, திட்டுவாரா, ஒரு வேளை ஏன் வந்தாய் என்று கேட்பாரோ என்ற பல யோசனை, அதை விட லில்லி அவள் மூளைக்குள் ஓரமாக குடைந்து கொண்டு தான் இருந்தாள்..
சாயங்காலம் வந்த நிவி லில்லியை வேலையை விட்டு சார் அனுப்பிட்டாங்க என்று சொல்லும் போதே காய்ச்சலும் கவலையும் மறைந்து போனது..
ஆனாலும் அவள் சொன்ன விஷயம் என்னை அவர்க்கு பிடிக்கும் என்று சொன்னாலே, அது உண்மையா பொய்யா மண்டைக்குள் ஓடியது.. அது என்னவேணா இருந்திட்டு போகட்டும் அது எல்லாம் கல்யாணத்திற்கு முன்ன சொன்னது தானே, அதை எல்லாம் பெரிசா எடுத்துக்காத, இப்ப சார் உன் புருஷன் உனக்கு மட்டும் தான்.. இடையில் இந்த லில்லி எல்லாம் வர விடாத,
நீ இப்புடி தள்ளியே இருக்கிறதால் தான் இடையில் லில்லி பல்லி எல்லாம் வாலாட்ட நினைக்குது.. நீ உன் வீட்டில் இருக்கிறவரை லில்லி பிரச்சினை எல்லாம் வந்ததா, நீ வீட்டை விட்டு வர போய் தானே இது எல்லாம்.. அதனால் நீ வீட்டுக்கு போ என்று நிவேதா சொல்லி விட்டு போனாள்.. அதுவும் சரியாக தான் பட்டது.. கிளம்ப முடிவு செய்து விட்டாள்..
ப்ரதாப் வீட்டின் முன்பு வண்டியை நிறுத்தினான் பார்த்தி.. தோள் பைப்யை மாடியப்படி வண்டியிலிருந்து இறங்கிய விஷ்ணு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.. பார்த்தியும் கூட வர,
“நீ எங்க வர”?
“உன்னை உள்ள கொண்டு வந்து விட வேண்டாமா”? பார்த்தி கேட்க,
“வேணாம் நீ போ” என்றாள் கோவமாக,
“இல்லடா நான் வந்து சொல்லி” என்றவனை முறைத்தவள்,
“நீங்க ஒரு ஆணியும் புடுங்க வேணாம்.. நாங்களே பார்த்துக்கிறோம் கிளம்பு டா” என்றவள் விறுவிறுவென கேட்டை திறந்து உள்ளே சென்றாள்..
பார்த்தி வந்தால் நிச்சயம் அவனை இரண்டு மாமியாரும் சேர்ந்து எதையாவது பேசி அசிங்கப்படுத்த முயற்சி செய்வார்கள் அதனால் தான் பார்த்தியை வர வேண்டாம் என்றவள் வேகமாக உள்ளேயும் வந்தாள்..
மாடியில் நின்று இருந்த விசாலாட்சி கண்ணில் இது எல்லாம் பட தான் செய்தது..
அவர் அவசரமாக கீழ் இறங்கி வர விஷ்ணுவும் வீட்டுக்குள் வந்தாள்..
“ஏய் அங்கேயே நில்லு உள்ள வராத” விசாலாட்சி சத்தம் போட,
உள்ளே வைக்க எடுத்த கால்லை பின்னே இழுத்து கொண்டாள் விஷ்ணு..