ஏய் அங்கேயே நில்லு உள்ள வராத” விசாலாட்சி சத்தம் போட,
உள்ளே வைக்க எடுத்த கால்லை பின்னே இழுத்து கொண்டாள் விஷ்ணு..
அந்த பயம் இருக்கனும் என்று வெற்றி சிரிப்பு விசாலாட்சி முகத்தில், ‘போனவ அப்புடியே போவான்னு பார்த்தா திரும்பவும் வந்து நிற்கிறாளே’ மனதிற்குள் பொறுமி கொண்டார்..
விஷ்ணுவோ “அச்சோ இடது காலை பர்ஸ்ட் வச்சு யாராவது உள்ள போவாங்களா, மக்கு விஷ்ணு” தலையில் தட்டியபடி வலது காலை முன் வைத்து உள்ளே வந்தாள்.. அவள் விசாலாட்சி பேச்சை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை..
அதை பார்த்த விசாலாட்சி “என்த்த தைரியம் நீக்கூ நான் சொல்ல சொல்ல உள்ள வர நில்லு” என விசாலாட்சி சத்தம் போட, அந்த சத்ததில் வீட்டிலுள்ள அனைவரும் ஹாலுக்கு வந்தனர்..
அவளை பார்த்த ரங்கநாயகி பாட்டிக்கோ வந்து விட்டாள் என்ற நிம்மதி பிறந்தது.. தேவகியோ விசாலாட்சி போல் ஏன்டா வந்தா என்ற கடுப்புடன் பார்க்க,” வாம்மா ப்ரியா நல்லா இருக்கியா”? அக்கறையாக விசாரித்தார் வெங்கடேஷ்..
நல்லா இருக்கேன் எனும் விதமாக விஷ்ணு தலை அசைத்தாள்..
“உனக்கு என்ன நீ நல்லா தான் இருப்ப.. புருஷன் ஒருத்தன் இருக்கான்ங்கிற அக்கறை கொஞ்சம் கூட இல்லாம இத்தனை மாசம் ஜாலியா அம்மா வீட்டுல இருந்திட்டு இப்ப எதுக்கு வந்தான்னு கேளுங்க அக்கா” என்று விசாலாட்சி தெலுங்கில் பேசி தேவகியை தூண்டி விட,
“விசா தேவை இல்லாதது எல்லாம் பேசாதா அமைதியா இரு” என்று வெங்கடேஷ் கண்டித்ததாலும் விசாலாட்சி அமைதியாகவில்லை.. இன்னும் இன்னும் பேசி தேவகியையும் பேச தூண்டினார்..
ஆனால் தேவகி பேசவில்லை..விசாலாட்சி தான் மீண்டும் எதுக்கு வந்த என கோவமாக கேட்டார்..
விஷ்ணுவுக்கு தெரியும் தன் மாமியார் இருவரும் கண்டிப்பாக இதை சொல்லி சொல்லியே மறுபடியும் தன்னை வம்புக்கு இழுப்பார்கள் என்று,
இப்போதும் கொஞ்சம் பயம் இருக்க தான் செய்கிறது, இருந்தும் அண்ணன்காரன் தைரியமா எல்லாரையும் பேஸ் பண்ணு ப்ரியா.. நீ அமைதியா இருக்க இருக்க தான் அவங்க உன் தலையில் தான் ஏறி உக்காரு வாங்க.. நீ எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டாவே அவங்க அமைதியா போய்ருவாங்க..
அநாவசியமா பேசுற எந்த பேச்சையும் நடத்தையும் சகிச்சுக்கனும்ங்கிற எந்த தலை எழுத்தும் உனக்கு இல்லை.. அது உன் வீடு, என்று காரில் வரும் போது பாடம் நடத்தியதும், அதோடு லில்லியை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்ததே இவர்கள் தானே என்ற கோவமும் சேர்ந்தது விசாலாட்சியை முறைத்தவள்,
“நீங்க எதுக்காக இந்த வீட்டுக்கு வந்தீங்களோ அதுக்காக தான் நானும் வந்து இருக்கேன்” என்றாள் கோவமும் நக்கலும் கலந்தபடி,
‘என்ன எதிர்த்து பேசுறா அப்புடி பேச மாட்டாளே’ என்று அதிர்ச்சியான விசாலாட்சி ‘இவளை விட கூடாது’ என்ற எண்ணத்தில், “நான் புருஷன் கூட நல்லபடியா வாழ்ந்து குடும்பத்தை தழைய வைக்கனும் நினைப்போடு வந்தவ, உன்னை பார்த்தா அப்புடி தெரியலையே” என்றார்..
“வேற எப்புடி தெரியுது சின்ன அத்தை” என்று மீண்டும் நக்கல் தொனியில் கேட்டாள் விஷ்ணு ,
விசாலாட்சிக்கு கோவம் கோவமாக வந்தது.. “ஏய் என்ன நக்கல் பண்றியா? இந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காத, புருஷன் மேலே கொஞ்சம் கூட பாசம் அக்கறை எதுவுமே இல்லாமா, எனக்கு என்ன வந்ததுன்னு அம்மா வீட்டுல போய் அஞ்சாறு மாசம் இருந்திட்ட, யார்க் கிட்டயும் எதுவும் சொல்லவும் இல்லை.. இது குடும்பமா இல்லை சத்திரம் சாவடியா உன் இஷ்டத்திற்கு போறதுக்கும் வரதுக்கும், ஒழுங்கா நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு”” என்று கோவபட்டார்..
“நீங்க கேட்கிறதுக்கு நான் ஏன் பதில் சொல்லனும்” என்ற விஷ்ணுவின் பேச்சு அவருக்கு திமிராக தோன்றியது..
“ஓ.. பதில் சொல்ல முடியாதா, சொல்லி தான் ஆகனும் நீ, இல்லைன்னா வீட்டை விட்டு வெளியே போ” என சத்தம் போட்டார் விசாலாட்சி..
“அதை நீங்க சொல்லாதீங்க, என்னை கேள்வி கேட்கவோ, வெளிய போன்னு சொல்லவோ உங்களுக்கு ரைட்ஸ் கிடையாது.. கேட்க வேண்டியவங்க கேட்கட்டும் அவங்களுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன்” என்றாள்.. அங்கு நின்று இருந்த ரங்கநாயகி பாட்டி மற்றும் தன் மாமனார் மாமியாரை பார்த்தபடி,
“எனக்கு உரிமை இல்லையாம், பார்த்தீங்களா அக்கா இவ எப்புடி பேசிட்டு இருக்கான்னு, நீங்க ஏன்க்கா பார்த்துட்டு அமைதியா இருக்கீங்க.. கேளூங்க என்னை விட இவ மேல்ல நீங்க தானே அதிக கோவத்தில் இருக்கீங்க கேளுங்க” என்று தூண்டி விட்டார் விசாலாட்சி.. அவரை தவிர மற்ற இருவரும் விஷ்ணுவிடம் எதுவும் கேட்க மாட்டார்கள் என்பது தெரியுமே அதான் தேவகியை தூண்டி விட்டார்..
தேவகியும் விஷ்ணு அருகே அவள் முன்பு வந்து நின்றார்.. விசாலாட்சி வாயை அடக்க தான் விஷ்ணு அப்புடி கூறினாள்.. ஆனால் இப்போது தேவகி கேட்டால் நிச்சயம் பதில் சொல்ல தானே வேண்டும் என்ன சொல்வது என்று கலக்கமாக இருந்தது..
என்னையைவே எதிர்த்து எதிர்த்து எவ்ளோ தைரியம் இருந்தா பேசுவா, நிச்சயம் இன்னைக்கு அக்காவை விட்டு பேச வச்சு மறுபடியும் சண்டை வரவச்சு இவளை வீட்டை விட்டு தூரத்தி விடனும் விசாலாட்சி வன்மத்துடன் இருவரையும் நோக்க,
தேவகியோ “உன் அண்ணன் பண்ண வேலைக்கும், அதை விட நீ பண்ணனதுக்கும் நிறைய கோவத்தில் இருக்கேன்.. விசா சொன்னது போல் உன்னை வீட்டுக்குள் விடவே கூடாது” என்றதும்,
‘போச்சுடா’ என்று விஷ்ணுவும், “அப்புடி சொல்லுங்க்கா” என்று விசாலாட்சியும் ஒரு சேர நினைத்தவர்கள் அடுத்து தேவகி ஒரு ஆட்டமே ஆட போகிறார் என்று நினைத்திருக்க, ஆனால் அவர் சொன்னதை கேட்ட இருவருக்கும் பயங்கர அதிர்ச்சி தான்..
தேவகி ஆனா போனா போகுதுன்னு இந்த ஒரு தடவை நான் உன்னை மன்னிக்கிறேன்.. இனிமே இப்புடி உன் இஷ்டத்திற்கு ஆடுன அவ்வளவு தான் என்று எச்சரித்தவர் உள்ள போ என்றும் அல்லவா சொன்னார்.. அதை கேட்டு இவர்கள் அதிராமல் இருந்தால் தானே அதிசயம்..
இதை பார்த்து கொண்டு இருந்த வெங்கடேஷ்க்கு பரவாயில்லையே மகன் மனைவிக்கு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் நன்றாக வேலை செய்கிறதே என்று நினைத்து சிரித்து கொண்டார்..
விஷ்ணுவை அழைத்து கொண்டு பார்த்தி வீட்டிலிருந்து கிளம்பும் முன்பே வம்சிக்கு அழைத்து சொல்லி இருந்தான்.. “உன் அண்ணன் கிட்ட சொல்லுடா இனிமே என் தங்கச்சிக்கு எங்க வீட்டிற்கே வரனும்ங்கிற நினைப்பு கூட வராத மாதிரி நல்ல பார்த்துக்கனும் சொல்லு, வாய் வலிக்க பேசுனா மட்டும் போதாது அதை செய்கையில் காட்ட சொல்லு” என்றான்..
“நீயே சொல்ல வேண்டியது தானே மாமா, அதை ஏன்யா என்கிட்ட சொல்லுற, உனக்கு எப்ப பார்த்தாலும் ராங் மெம்பர்க்கு கால் பண்றதே வேலையா போயிருச்சு, இதை எங்க அண்ணன் கிட்ட நீயே சொல்ல வேண்டியது தானே, இடையில் நான் என்ன தூதுபுறாவா” வம்சி கேட்க,
“என்னால் எல்லாம் அவன்கிட்ட பேச முடியாதுடா, சரியான கோளாறு புடிச்சவன் நீயே சொல்லிரு என்றதும்,
சிரித்த வம்சி என்ன மாமா மா பெத்த நானா கொடுக்கு மச்சானுக்கு சிறப்பான கவனிப்பு கவனிச்சார் போலயே என சிரிக்க,
அவன் பெத்த நானா கொடுக்கு இல்லடா, சரியான தேள் கொடுக்கு என்ற பார்த்தி போனை வைத்து விட்டான்..
இதை வம்சி ப்ரதாப்பிடம் சொல்ல ‘பரவாயில்லையே பொண்டாட்டி அளவுக்கு மச்சான் ட்யூப் லைட் இல்லை போல’ என நினைத்தவனுக்கு மனம் ஒரு புறம் துள்ளி குதித்தாலும், இப்ப கூட அவளா வரலை பார்த்தி தான் ஏதோ சொல்லி அழைத்து வருகிறான் என்பது கோவத்தை கொடுத்தது..அதனால் சாதரணமாக எப்போதும் போல் தான் இருந்தான்.. உடனே தன் அன்னை தேவகிக்கு கால் செய்தான்,
விஷ்ணு வரும் விஷயத்தை கூறியவன் “அவகிட்ட நீங்க யாரும் எந்த கேள்வியும் கேட்க கூடாது, பார்த்தி பவித்ரா விஷயத்தை இழுக்க கூடாது,வீண்பேச்சு எதுவுமே பேச கூடாதுமா, சித்தியையும் பேச விடாம நீங்க தான் கண்ட்ரோல் பண்ணனும்” என்று தன் அம்மாவை பற்றி அறிந்தவன் ஸ்ட்டீரிக்ட்டாக சொன்னவன், “நான் இவ்வளவு சொல்லியும் கேட்காம ஏதாவது பிரச்சினை பண்ணுனீங்க, நான் எதுவும் உங்களை திட்ட மாட்டேன்.. சண்டை போட மாட்டோன்.. வெரி சிம்பிள்மா அவளை கூட்டிட்டு நான் தனியா போய்டுவேன்” என்று ப்ரதாப் மிரட்டியது தேவியிடம் நன்றாகவே வேலை செய்தது..
“அக்கா என்ன இப்புடி சொல்றீங்க” விசாலாட்சி அதிர்ச்சி நீங்கி ஏமாற்றத்துடன் கேட்க,
“விடு விசா எதுவும் பேசாதே” என்று தேவகிக்கும் விஷ்ணு வந்தது ஏகபோக கடுப்பு தான்.. இருந்தும் என்ன பண்ண மகனை மீறி எதுவும் செய்ய முடியாதே, தன்னறைக்கு சென்று விட்டார்..
‘ச்சே இந்த தேவகி இப்புடி சொதப்பிட்டாளே’ என்ற விசாலாட்சிக்கு இது ஏமாற்றமாக இருந்தது.. அதுவும் இன்றைக்கு எதிர்த்து பேசிய விஷ்ணுவை பார்க்க பார்க்க கோவம் இருமடங்கானது.. இருக்கட்டும் இங்க தானே இருப்பா பார்த்துக்கலாம் என்று இப்போது அமைதியானார்..
ஒரு வழியா சின்ன கண்டத்தில் இருந்து தப்பிட்ட விஷ்ணு, இன்னும் பெரிய கண்டம் ஒன்னு இருக்கே அதில் இருந்து எப்புடி தப்பிக்க போற என கணவனை நினைத்து பயத்தோடு தன் அறைக்கு சென்றாள்..