அறையில் இருந்த தன்னுடைய கபோர்டில் இருந்த துணிகளை சீர்படுத்துக்கிறேன் என்ற பேரில் தலையை அரைமணி நேரமாகவே கபோர்டில் நுழைத்து இருந்தாள் விஷ்ணு..
ஏனெனில் அவளுக்கு நேர்எதிராக இருந்த ஷோபாவில் மார்புக்கு குறுக்கே கையை கட்டி கொண்டு அவளையே பார்த்த வண்ணம் இருந்தான் ப்ரதாப்..
தேவகி உள்ள போ என்றதும் அதிர்ச்சி நீங்காமலே அறைக்கு வந்தாள்.. கதவை திறந்து உள்ளே வர அறை எப்போதும் போல் அத்தனை சுத்தமாக இருந்தது.. அப்புடியே தொப்பென ஷோபாவில் கண்மூடி அமர்ந்து விட்டாள்.. அப்பாடா எப்புடியோ தப்பிட்டேன் என்று ஆசுவாசம் அடைய, சின்ன கண்டத்தில் இருந்து தான் தப்பி இருக்க, பெரிய கண்டம் ஒன்னு இருக்கே அதை எப்புடி சமாளிக்க போற என்றதுமே அதை நினைத்து இதயம் தாறுமாறாக வேகமாக துடிக்க அதை தடவியபடியே அப்புடியே கொஞ்ச நேரம் இருந்தவள்,
உடை மாற்றலாம் என்று எழுந்து கபோர்ட் அருகே வந்தாள்.. அதே நேரம் ப்ரதாப்பும் வந்து விட்டான்..
அவன் என்னவெல்லாம் கேட்பானோ, என்ன பதில் சொல்வது என்ற பயம்..இந்த கேள்விக்களுக்கு தானே இத்தனை நாளும் பயந்து இருந்தாள்.. இப்போதும் உள்ளுக்குள் பயமாக தான் இருந்தது.. அதான் தலையை கபோர்டிற்குள் நுழைத்து தப்பிக்க பார்க்கின்றாள்..
விடுவானா அவன், இன்னும் எவ்வளவு நேரத்திற்கு தான் அப்புடியே நிற்கிறேன்னு பார்க்கிறேன்டி எனும் விதமாக பார்வையை விலக்காமல் அவளையே பார்த்தபடி இருந்தான்..
எவ்வளவு நேரம் தான் இப்புடியே நிற்பது.. கால் வேறு வலிக்க ஆரம்பித்தது.. எதுக்கு பயப்படனும் அவர் மேல்ல மட்டும் தப்பு இல்லையா? அவர் நம்மளை ஏதாவது கேட்டா பதிலுக்கு நாமளும் கேட்போம் என்ற எண்ணம் வரவும் தான் கபோர்ட்டை அடைத்து விட்டு ப்ரதாப் புறம் திரும்பி நின்றாள்..
இரண்டு விநாடிகள் கடந்தும் ப்ரதாப் அப்புடியே தான் இருந்தான்….
எதுவும் பேசவில்லை.. அவனுக்கு நடந்த பழையதை பற்றி மீண்டும் பேசும் எண்ணம் இல்லை.. அதை பற்றி பேசினால் விஷ்ணு மீது இருக்கும் கோபத்திற்கு வார்த்தைகள் தடம் மாறும் மீண்டும் சண்டை வரும் அதனால் அமைதியாக இருக்கின்றான்..
இதை எப்புடி கடந்து வருவது அவனுக்கு தெரியவில்லை.. தொழில்முறை சிக்கலை எளிதாக கையாளுபவனுக்கு இந்த குடும்ப சிக்கலை எப்புடி கையாள்வது என்று தெரியவில்லை..
சரியான அழுத்தம் பயங்கர களிஉளி மங்கன் இந்த ஊறுகாய் ஏதாவது பேசுவதா பாரு என்று திட்டியவளுக்கும் இதை எப்புடி கடப்பது என்று தெரியவில்லை…
“இப்ப தான் வந்தீங்களா, சாப்பிடுறீங்களா, சாப்பாடு எடுத்துட்டு வரட்டுமா” சாதாரணம் போல் கேட்டாள்.. என்ன பேசுவது என்ன செய்வது என தெரியவில்லை.. அவனாக ஏதாவது பேசி திட்டி சண்டையிட்டு இருந்தால் இவளும் பதிலுக்கு பதில் பேசி இதை கடந்து இருப்பாள்.. ஆனால் இப்போது அறையில் இயல்பாக இருக்க முடியவில்லை.. அதனால் இவளே தொடங்கினாள்.. சண்டை போட்டாவது இதை கடந்து விட்டு நாளையிலிருந்து இந்த பேச்சு மறுபடியும் வர கூடாது என எண்ணி,
அவளை முறைத்தவன் “ரொம்ப தான் அக்கறை வந்துட்டா, போடி” என்றான் கோவமாக,
அந்த கோவத்தில் பயம் வந்தாலும் அவளுக்கும் கோவம் இருக்கிறதே, அதனால் “எனக்கு ரொம்ப அக்கறை தான் இருக்கு.. ஆனா அந்த பக்கம் தான் என் மேல்ல கொஞ்ச கூட அக்கறை இல்லை” என்றாள் சலிப்பாக,
“அக்கறை இருக்கிறவ தான் இத்தனை மாசம் அச்சோ ம்”.. என்று பல்லை கடித்து வாய் வரை வரும் வார்த்தைகள் அடக்கியவன் “வேண்டான்டி அதை பத்தி பேச வேண்டாம்ன்னு ரொம்ப கண்ட்ரோல்லா இருக்கேன் என்னை பேச வைக்காத விஷ்ணு” என்றான் பல்லை கடித்தபடி,
“ஏன் கண்ட்ரோல் பண்றீங்க பேசுங்க.. நீங்க சொல்ற மாதிரி எனக்கு தான் அக்கறை இல்லை.. உங்களுக்கு தான் நிறைய அக்கறை பாசம் எல்லாம் இருக்கே, அப்புறம் ஏன் என்னை நீங்க இவ்வளவு நாள் எங்க வீட்டுலையே விட்டு வச்சு இருந்தீங்க” மனதில் இருந்த ஆதங்கத்தை கேட்டாள்..
‘இவ என்னை பொறுமையாவே போக விட மாட்ட போல’ என நினைத்து கண்ணை இறுக மூடி திறந்தவன் “நான் எதுக்குடி உன்னை வந்து கூப்டனும் நானா உன்னை போக சொன்னேன்” என கோவமாக சீற,
“ஆமா” என்றாள் ஒரே போடாக
“எதே நானா” என ப்ரதாப் அதிர்ச்சியாக,
“அட ஆமாங்க நான் எங்க வீட்டுக்கு போன அன்னைக்கு காலையில் நீங்க தானே சொன்னீங்க.. மறுந்துட்டிங்களா” என்று கேட்டாள்..
அவனுக்கு எப்புடி மறக்கும்.. அவர்கள் இருவருக்காமான சின்ன விஷயம் கூட அப்புடியே மனதில் பதிந்து போய் அல்லவா இருக்கின்றது.. அன்று இவள் வீட்டுக்கு போய் விடுவேன் என்று சொன்னதால் வந்த கோவத்தில் தானே போடி என்றான்.. அவன் கோவம் எதுக்கானது என்று புரியாத மரமண்டை அதையே பிடித்து கொண்டு இவ்வளவு நாள் வீட்டில் இருந்திருக்கின்றதே கோவம் பயங்கரமாக வந்தது..
“ஏய் நீ தானடி அன்னைக்கு வீட்டுக்கு போவேன் சொன்ன அதனால் கோவத்தில் தானே நான் சொன்னேன்” என்றதும்,
“எப்புடியோ சொன்னீங்க தானே, அப்புறம் என்ன எப்ப பாரு நான் உன்னை போ சொன்னேன்னா, போ சொன்னான்னு கேட்கிறீங்க”.. அவளை பொறுத்தவரை அது தானே உண்மை அவன் போன்னு சொன்னதால் வந்த கோவத்தில் தானே சென்றாள்..
“விஷ்ணு” பல்லை கடித்தான்.. வந்த கோவத்தை கட்டுபடுத்தியபடி,
“உண்மையை சொன்னா ஏன் கோவப்படுறீங்க.. நான் ஒரு தடவை தான் போறேன்னு சொன்னேன்.. ஆனா நீங்க தான் போடி போடின்னு நாலு தடவை சொன்னீங்க” என்று நான்கு விரலையும் காட்டியவள்,
“உங்க பேச்சை மீற கூடாதுன்னு தான் போனேன்” என்று சொன்னவளுக்கே சிரிப்பு வரத்தான் பார்த்தது.. இருந்தும் அடக்கி கொண்டு பேசினாள்.. அவள் கூறுவது பாதி பொய் பாதி மெய் தானே.. அவளை பொறுத்தவரை அவள் கணவன் பேச்சை கேட்டு தான் நடந்து இருப்பதாக நம்பி கொண்டு இருக்கிறாள்.. அதோடு இப்போது அவன் மீது தான் தவறு என்று இவள் அடித்து கூறினாள் தானே, கணவனிடமிருந்து திட்டு வாங்காமல் தப்பிக்க முடியும் அதனாலே இப்புடி மாற்றி பேசினாள்..
கேட்டவனுக்கு தான் இவளை நாலு சாத்து சாத்துனா தான் என்ன என்று தோன்றியது.. அப்புடியே மொத்த பழியையும் தூக்கி அவன் மீது அல்லவா போடுகிறாள்..
“அப்புடியே நான் சொன்னது எல்லாத்தையும் கேட்டு கிழிக்கறவ தான் நீ” என்றான் கடுப்பாக,
“இல்லையா பின்ன, எப்ப எந்த விஷயத்தில் உங்க பேச்சை கேட்காமல் விட்டேன் சொல்லுங்க பார்க்கலாம், நான் எல்லாம் புருஷன் பேச்சை கேட்டு நடக்கிறதில் வாசுகி டைப்” என்றாள்..
“வாசுகியா ஹூஸ் தட்” அவனுக்கு அவள் சொன்னது புரியவில்லை..
“வாசுகி அவங்களை தெரியாத உங்களுக்கு, ஓ.. நீங்க தெலுங்கு தானே, தமிழ் சப்ஜெக்ட் அவ்வளவு தெரியாது இல்ல, டூ யூ நோ திருக்குறள் அண்ட் திருவள்ளுவர்” என் கேட்க ப்ரதாப் தெரியும் என தலை ஆட்டினான்..
“திருவள்ளுவரோட மிசஸ் தான் வாசுகி.. அவங்க ஒரு நாள் கிணத்து அடியில்” என விஷ்ணு ஆரம்பிக்கும் போதே, கை நீட்டி தடுத்தவன் எனக்கு தெரியும் அந்த கதை என்றான்..
அவன் என்ன தான் பிறப்பால் தெலுங்கு என்றாளும், சென்னையில் தான் வாசம் என்பதால் தமிழ் பாடத்தையும் விரும்பியே படித்தவன்.. அதனால் வள்ளுவன் வாசுகி கதை தெரியும்.. கொஞ்சம் கூட வாய் கூசாம பொய் பேசுறாளே என மனைவியையும் முறைக்க தவறவில்லை..
“ஓ.. உங்களுக்கும் தெரியுமா.. நானும் அவங்களை போல் தான் புருஷன் பேச்சை தட்டாம நடக்கிற பதிவிரதை” என்றவளை முறைக்க மட்டும் தானே அவனால் முடியும்..
முதலில் முறைத்தவன் பின்பு ஏதோ ஒன்று தோன்ற இதழ்களை மெலிதாக வளைத்தவன், “நான் சொன்னதால் தான் நீ உன் வீட்டுக்கு போன”, நான் சொல்லைன்னா போய் இருக்க மாட்ட அப்புடி தானே” என் கேட்கவும்
“எஸ்” என்றாள்..
“அப்ப நான் என்ன சொன்னாலும் கேட்ப அப்புடி தானே”,
“எஸ் எஸ்” என்றாள் இரண்டு கண்ணையும் சிமிட்டி
“நான் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வ அப்புடி தானே”,
“ம்”…
“என்ன சொன்னாலும் “ ப்ரதாப் மீண்டும் ஒரு முறை அதையே அழுத்தி கேட்க
“அட ஆமாங்கிறேன்” என்றாள் அவன் விரிக்கும் வலை தெரியாதவள்
“கிட்ட வா” ப்ரதாப் அழைக்கவும், இடைவெளி விட்டு அருகே வந்து நின்றாள்..
“பேச்சு மாற கூடாது விஷ்ணு” என்றவனை முறைத்தவள்,
“நான் அப்பவே சொல்லிட்டேன்.. நான் வாசுகி டைப்ன்னு அப்புறம் என்ன, என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க” என்றாள்.. அவன் கள்ளத்தனம் புரியாமல்,
‘மாட்டினடி என் மக்கு பொண்டாட்டி’ என்று பொங்கி வந்த சிரிப்பை இதழ் கடித்து அடக்கியவன்,
“எங்க என்னை டைட்டா கட்டி புடிச்சு, டீப்பா லிப் டூ லிப் கிஸ் ஒன்னு கொடு” என்றானே பார்க்கலாம் கேட்டவளுக்கு தான் இதயமே ஒரு நொடி நின்று துடித்தது.. கருவிழியே தெறித்து விடும் அளவு அதிர்ச்சியில் முட்டை கண்ணை விரித்து பார்த்தபடி நின்றவளை பார்க்க பார்க்க சிரிப்பு பொங்கியது..
“ம்… கமான் சீக்கிரம் விஷ்ணு.. நீ தான் வாசுகி டைப்.. புருஷன் பேச்சை தட்டாத பதிவிரதையாச்சே இப்புடியே நின்னுட்டு இருந்தா எப்புடி? சீக்கிரம் சீக்கிரம்” என்றான்.. இதழ் கடித்து சிரிப்பை அடக்கிய படி,