Mr and Mrs விஷ்ணு 47

4.7
(50)

பாகம் 47

வீட்டிலிருந்த விஷ்ணுவுக்கு வீட்டில் ஒரு வேலையும் இல்லை.. சரி அறைக்குள் படுத்து தூங்கலாம் என்றால், மெத்தையில் படுத்து கண்ணை மூடினால் நேற்று இந்த மெத்தையில் நடந்தது தான் நினைவு வந்தது.. 

ச்சே ச்சே ஒரே நாளில் இந்த ஊறுகாயை என்னை எப்புடி மாத்தி வச்சு இருக்கு.. தப்பு தப்பான நினைப்பு வருதே என்று அவனை திட்டினாலும் அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்று தோன்றும் எண்ணத்தையும் தடுக்க முடியவில்லை.. 

போன் பண்ணி பேசுவோமா என்ற எண்ணம் வர, வேண்டாம் வேண்டாம் நேத்திலிருந்து ரொம்ப ஓவரா பேசுறான்..  ஏதாவது பேசி கிண்டல் பண்ணுவார் என்றவளுக்கு அவன் பேசியதை நினைத்து சிரிப்பு வந்தது.. 

எவ்வளவு பேச்சு இவ்வளோ பேச தெரிஞ்சுதே ஒரு ஐ லவ் யூ சொல்லுச்சா பாரு என்று ப்ரதாப்புக்கு திட்ட,

அதுக்கு உன்னை லவ் பண்ணனும் பண்ணினா தானே சொல்றதுக்கு என்று அவளின் குறுக்கு புத்தி எடுத்து கொடுக்க,

பண்ணாமலா நேத்து அப்புடி நடந்துக்கிட்டாங்க.. அது எல்லாம் இருக்க போய் தான் அது நடந்துச்சு என்று விஷ்ணு வாதாட,

அது எல்லாம் நடக்க லவ் பண்ணனும்ங்கிற அவசியமே இல்லையே வழக்கம் போல் அவளின் குறுக்கு புத்தி அவளை குழப்ப ஆரம்பித்தது.. அவளும் யோசிக்க யோசனை எங்கெங்கோ சென்று லில்லியில் வந்து நின்றது..

ச்சே ச்சே இங்கிருந்து போ தப்பு தப்பா சொல்லி கொடுக்காத நானே இப்ப தான் சந்தோஷமா இருக்கேன் அதை கெடுக்காத என விரட்டியவளுக்கு இன்னுமே ப்ரதாப்புக்கு தன்னை பிடிக்குமா பிடிக்காதா என்ற குழப்ப நிலை தான்.. 

தனியா ரூமில் இருக்கிறதால் தான் இப்புடி தேவையில்லாத எண்ணம் வருது ஏதாவது வேலை பார்ப்போம் என அறையிலிருந்து வெளி வர, அந்த வீட்டில் பெரிதாக என்ன வேலை இருக்க போகின்றது.. அதனால் நேரமே போகவில்லை.. நாமளும் ஆபிஸ் போய் இருக்கலாம்.. இப்ப நேரமே போக மாட்டேங்குது.. இன்னைக்கு அவர்கிட்ட கேட்கனும் ஆபிஸ் போகிறதை பத்தி என்று நினைத்து கொண்டாள்..

இரவு ப்ரதாப் வீடு வந்ததும் அவனை பார்த்தவளுக்கு கேட்க வேண்டும் என்று நினைத்தது எல்லாம் மறந்து விட்டது.. அவனையே மலர்ந்த முகத்துடன் பார்த்து கொண்டு இருக்க,

அவனும் அவளையே பார்த்து கொண்டு “இந்தா” என ஒரு பார்சலை நீட்டினான்..

“எனக்கா” என கேட்க..

“ம்.. உன்னை தவிர இந்த ரூம்ல வேற யாராவது பத்து பதினைந்து பேர் இருக்காங்களா” என்ன? 

‘ஆமான்னு இரண்டு எழுத்தில் பதில் சொல்றதை விட்டுட்டு எவ்வளவு பெரிய டயலாக்’ உதட்டை சுளித்தவள் பார்சலை ஆர்வத்துடன் பிரித்து பார்த்தாள்.. டஜன் கணக்கில் வளையல் அதுவும் கண்ணாடி வளையல் இருந்தது.. 

‘எவ்ளோ வளையல் ஏதும் புது பிசினஸ்ஸா கடை வைக்க போறாரோ’ என்ற சந்தேகமே விஷ்ணுவுக்கு வந்தது..

அதை அவனிடமே கேட்டுவிட, சிரித்தவன் “அது எல்லாம் இல்ல உனக்கு தான்” என்றான்..

நேற்றைய கூடல் பொழுதுகளில் விஷ்ணு கையிலிருந்த வளையல் எழுப்பிய ஒலி ப்ரதாப்புக்கு பிடித்து இருந்தது.. அது ஒருவகை போதையையும் இனிமையும் அந்த நேரத்தில் சேர்ப்பது போல் இருந்தது. இன்றும் அதே இனிமை தேவை என தோன்றவே, வாங்கி வந்து விட்டான் வளையல் கடையை 

‘ஒரு வருஷத்திற்கு வளையல் வாங்கவே வேண்டாம் போலவே அவ்ளோ வளையல் இருக்கு’ என மனதில் நினைத்து கொண்டாள்..

“நல்லா இருக்கா விஷ்ணு? உனக்கு பிடிச்சு இருக்கா”? ப்ரதாப் கேட்க..

“ம்”.. என்றாள் கண்களை விரித்து, “எங்காவது போகும் போது போட்டுக்கிறேன்” என்றவள் வளையலை எடுத்து ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைக்க போக,

“ஏய் இரு இரு வெளியே போகும் போது போடுறதுக்காக வாங்கல.. இப்ப போடுறதுக்கா வாங்குனது.. போட்டுக்கோ” என்றான்..

“இந்த நைட் டைம்ல யாராவது கண்ணாடி வளையல் போடுவாங்களா”?..

“ஏன் போட கூடாதுன்னு, ஏதாவது சட்டம் போட்டு இருக்காங்களா வாசுகி மேடம்?.. சொல்ற எதையுமே கேட்கிறது கிடையாது இதில்ல வாசுகி டைப் வள்ளியம்மை டைப்ன்னு டயலாக்கு மட்டும் குறைச்சல் இல்லை” என கோபப்பட,

“இல்ல இப்ப போட்டா தூக்கத்தில் அப்புடி இப்புடின்னு உருளும் போது உடைஞ்சிறுமே” அப்பாவியாக விஷ்ணு சொல்ல,

“அதுக்கு தான்டி போட சொன்னதே என் மரமண்டை” என்றவன் அவனே வளையல்களை விஷ்ணு கையில் மாட்டிவிட்டு, அதை உடைக்கும் வேலையிலும் இறங்கினான்..

எப்போதும் போல் விஷ்ணுவுக்கு இப்போதும் லேட்டாக தான் புரிந்தது விஷ்ணுவுக்கு, அனைத்தும் முடிந்ததும் அவளை விட்டு விலகியவன் விஷ்ணு கையை பார்க்க மாட்டிய வளையல்களில் கால் வாசி இன்னும் மிச்சம் இருந்தது..

இன்னைக்கு இந்த வளையல்களை சும்மா விட மாட்டேன் என்றவன் மீண்டும் அதையும் உடைக்க களத்தில் இறங்க, இப்போது அதை உடைப்பதில் விஷ்ணுவின் ஒத்துழைப்பும் பெரிதாக இருந்தது.. 

அனைத்தும் முடிந்ததும் மனைவியை மார்பில் தாங்கியவன் “வளையல் உடைஞ்சுரும் போட்டுக்க மாட்டேன்னு கவலைப்பட்ட நீ தான்டி நாலு வளையலை உடைச்ச இருக்க” என விஷ்ணு காதில் கணக்கு சொல்ல, அவளுக்கு தான் வெட்கத்தில் அச்சோடா என்று இருந்தது.. இதுக்கு பேசாமா இவர் விரைப்பாவே சுத்தி இருக்கலாம் என்றும் தோன்றியது…

மறுநாள் காலையில் ப்ரதாப் ஆபிஸ் கிளம்பி கொண்டு இருக்க அப்போது தான் விஷ்ணுவுக்கு ஆபிஸ் செல்வது பற்றி கேட்க வேண்டும் என்ற நினைவே வந்தது..

“வீட்டில் டைம் போகவே மாட்டேங்குது நானும் ஆபிஸ் வரவா?” என கேட்க,

“அதை ஏன் என்கிட்ட கேட்கிற, பர்ஸ்ட் வேலைக்கு போக முடிவு எடுக்கும் போது என்கிட்டயா கேட்டுட்டு போன, இப்ப மட்டும் ஏன் கேட்கிற” என்ற  ப்ரதாப் ஆபிஸ் சென்று விட்டான்.. 

விஷ்ணுவுக்கு தான் கஷ்டமாகி விட்டது அவன் பேசியது, இப்ப என்ன பண்ணுவது என தெரியாமல் அப்புடியே அமர்ந்து இருந்தாள்.. அரைமணி நேரம் கழித்து இருக்கும் விஷ்ணு மொபைல் அடித்தது.. 

அவளவன் தான் அழைத்து இருந்தான்.. அவசரமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் “சொல்லுங்க” என்றாள்.. 

“நான் என்னத்தை சொல்றது ஆபிஸ் வர ஐடியா இருக்கா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும் மிசஸ் விஷ்ணு.. ஏற்கொனவே டூ த்ரி டேஸ் எந்த இன்பர்மெசனும் இல்லாம உங்க இஷ்டத்திற்கு லீவ் போட்டு இருக்கீங்க.. இன்னைக்கும் டைம் இவ்வளோ ஆகியும் ஆபிஸ் வரலை.. உங்க இஷ்டத்திற்கு ஆடறதுக்கு இது என்ன உங்க புருஷன் வீட்டு ஆபிஸா” என ப்ரதாப் சத்தம் போட,

விஷ்ணுவுக்கு கோவம் வந்து விட்டது.. “நான் இதை தானே காலையில் உங்ககிட்ட கேட்டேன்.. அப்ப ஒரு மாதிரி சொல்லிட்டு இப்ப இப்புடி பேசுறீங்க”..

“நான் இந்த ஆபிஸ் எம்.டி… சொல்லலாமா கொள்ளலாமா லீவ் போட்டா இப்புடி தான் பேசுவேன்.. இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு இன்னும் அரைமணி நேரத்தில் ஆபிஸில் இருக்கனும்” என்றவன் போனை வைத்து விட்டான்..

“அட மலகுரங்கே, எருமை எருமை” என் திட்டி விட்டு போனை வைத்தவளுக்கு, ஒன்று புரிந்தது ஆபிஸ் வேறு வீடு வேறு, அங்கு மத்தவங்க மாதிரி தான் நீயும்னு சொல்லாம சொல்லுறார் என்றபடி அவசர அவசரமாக ஆபிஸிக்கு கிளம்பினாள்..

அலுவலகத்தில் நுழைந்தவளை பார்த்தவர்கள் அனைவரும் அவளுக்கு விஷ் செய்ததோடு மட்டுமல்லாது ஒரு வித பயத்தோடு அவளை பார்த்தனர்.. 

அவளுக்கு ஏன் என்று தெரியவில்லை… 

“நிவி பார்த்தியா இந்த ப்ரியாவை இவ்வளோ க்ளோசா பழகியும் அவ யார்ங்கிற விஷயத்தை நம்ம கிட்ட சொல்லாம மறைச்சு இருக்கா” பூரணி சொல்ல,

“ஆமா ஆமா சாரோட வொய்ப்ன்னு சொல்லிருந்தா நான் இப்படி எல்லாம் பண்ணி இருப்பானா, அக்ஷ பயத்தோடு அஸ்வின் புலம்ப

“ஓ.. அப்ப வேற யாரோட வொய்ப்பா இருந்தா பண்ணுவியா? நிவி கேட்க, 

“ஏன்டி நீ வேற சும்மா விளையாடிகிட்டு”என சலித்து அஸ்வின் “அதான் சார் என்னை பார்க்கிற நேரம் எல்லாம் அந்த வாங்கு வாங்கிறார் போல எல்லாம் இந்த லூசு ப்ரியா வால் ஆ… இல்ல இல்ல ப்ரியா மேடத்தால்” என மீண்டும் புலம்ப 

நிவி சிரித்தாள்.. “உனக்கு ப்ரியா மறைச்சிட்டாளேன்னு அவ மேல கோவம் இல்லையா”? பூரணி கேட்க, 

“இல்லையே ஏன்னா மணப்பெண் தோழியா நின்னதே நான் தானே” என்ற நிவி சிரிக்க,

“துரோகி” என்ற பூரணியும் அஸ்வினும் அவளை அடிக்க, அதே நேரம் விஷ்ணுவும் அங்கு வந்து சேர்ந்தாள்…

“இங்கு என்ன கலாட்டா நடக்குது” என கேட்டப்படி விஷ்ணு தன் இருக்கையில் அமர,

“ஒன்னும் இல்லடி” பழக்க தோஷத்தில் சொன்ன அஸ்வின், “அச்சோ சாரி மேடம் சாரி ஒன்னும் இல்ல மேடம்” என்றபடி தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.. 

“டேய் என்னடா புதுசா மேடம்ங்கிற” விஷ்ணு கேட்க, அஸ்வின் அவள் புறம் திரும்பவே இல்லையே, 

“ஏய் பூரணி இவனுக்கு என்னாச்சுடி புதுசா மேட்ம்ங்கிறான்”..

“அவன் கிட்டயே கேட்டுக்கோங்க மேடம்” என்றாள் அவள்…

“என்னாச்சு” வாய் அசைத்து மெதுவாக நிவியிடம் கேட்க..

“நீங்க தான் மிசஸ் விஷ்ணுங்கிறது தெரிந்து விட்டது அதான்” என்றாள் அவளும் அதே போல் மெதுவாக

“எப்புடி” ஆச்சர்யமாக கேட்டாள்.. ப்ரதாப் தான் வெளிப்படுத்தி இருப்பானோ என்ற ஆசையில்,

ஆனால் ராம் லீலாவிடம் சொல்ல அது அப்புடியே ஆபிஸ் முழுவதும் பரவி இருந்தது.. நிவி அதை சொல்ல விஷ்ணுவுக்கு முகம் சுருங்கியது..

“ஏய் பூரணி எப்பவும் போலவே என்கிட்ட பேசுடி இந்த மேடம் கீடம் எல்லாம் வேணாம்”..

“அது எப்புடி மேடம், நீங்க யார்னு தெரிஞ்ச அப்புறம் அப்புடி பேச முடியும்” அஸ்வின் கேட்க

“அதானே” என்றாள் பூரணி… 

“இப்புடி பேசாதடி நல்லாவே இல்லை.. யாரோ போல ஃபீல் ஆகுது” விஷ்ணு வருத்தமாக கூற,

“நீங்க ஆல்ரெடி யாரோ போல நினைச்சதால் தான் மேடம் எங்ககிட்ட இருந்து எல்லாத்தையும் மறைச்சு இருக்கீங்க”.. விஷ்ணு மறைத்தது கோவம் அதனால் பூரணி அப்புடி கூற,

“ம்பச் அப்புடி எல்லாம் எதும் இல்லை பூரணி.. நான் வேணும்னு சொல்லாம இல்லை.. அப்ப என் சூழ்நிலையே வேற” என்றவள் அவர்களின் திருமணம் பிரிவு பற்றி அனைத்தையும் கூறி பூரணியை சமாதானம் செய்ய,

“ஆனாலும் நீ மறைச்சு இருக்க கூடாது”.. 

“அய்யோ அதை விடுடி இப்ப ஓகே வா.. கோவம் போய்ட்டா” என விஷ்ணு கேட்க..

“லைட்டா” என பூரணி சொல்ல, 

“அப்புறமா உனக்கு கேண்டினில் சமோசா வாங்கி தரேன் டி” என்றாள் விஷ்ணு..

“இரண்டா வாங்கி கொடு அப்ப தான் கோவம் குறையும்” என்றாள் பூரணி..

“இரண்டு என்ன நாலே வாங்கி தரேன்டி செல்லம்” என்றாள் விஷ்ணு..

“அஸ்வின் உனக்கு என்ன வேணும்டா” விஷ்ணு அவனிடம் கேட்க, 

“ஆத்தா ஆளை விடுமா தாயே நீ இருக்க பக்கம் கூட வர மாட்டேன்” என்ற அஸ்வின் திரும்பவே இல்லை.. அதை பார்த்து நிவி, விஷ்ணு, பூரணி மூவரும் சிரித்தனர்.. 

மீட்டிங் தொடங்கியது.. ப்ரதாப் எதிர்ப்புறம் நின்று அடுத்தடுத்து என்ன வேலைகள் செய்ய வேண்டும் யார் யார் எதை எல்லாம் முடிக்க வேண்டும் என தீவிரமாக சொல்லி கொண்டு இருந்தான்… அனைவரும் அவனையே இமைக்காமல் கவனித்து கொண்டு இருக்க,

விஷ்ணுவுக்கோ தூக்கம் கண்ணை சுழற்றியது.. இமை தட்டி தட்டி அதை விரட்டியவளுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் போக.. கண் அயர்ந்தாள்..

இரண்டு நொடி கூட இருக்காது.. “விஷ்ணு” என்ற ப்ரதாப் சத்ததிலும் டேபிளை அவன் தட்டிய அதிர்விலும் கண்ணை திறந்தவள் பதட்டதுடனும் பயத்துடனும் பார்க்க, ப்ரதாப் அவளை தீயாய் முறைத்து கொண்டு இருந்தான்..

போச்சுடா என்ற ரீதியில் விஷ்ணு நிற்க, 

“ஆல்ரெடி சொல்லலாமா கொள்ளலாம  ஏகப்பட்ட லீவ்.. உனக்கு கொடுத்த வேலையில் முக்கால்வாசி முடிக்காம பென்டிங் போட்டு வச்சு இருக்க.. இதில் மீட்டிங் ஹாலில் உட்கார்ந்து தூக்கம் வேறு, இடியட் தூங்கறதா இருந்தா வீட்டில் இருந்தே தூங்க வேண்டியது தானே எதுக்கு ஆபிஸ் வந்த” என ப்ரதாப் கத்த,

“நீங்க தானே வர சொன்னீங்க சார்” என்றாள் உள் போன குரலில்,

“வந்து இப்புடி தூங்க சொன்னனா?, என மீண்டும் சத்தம் போட, அதில் பயந்தவள் “சாரி சார் நைட்டு எல்லாம் தூக்கம் இல்ல” அதான் என்றதும் சுற்றி இருந்தவர்கள் வந்த சிரிப்பை அடக்கியபடி கஷ்டப்பட்டு அமர்ந்து இருக்க, ப்ரதாப்போ இன்னும் தீயாய் அவளை முறைத்தான்..

‘அய்யோ முறைக்கிறாரே முறைக்கிறாரே என் வாய் தான் என் எனிமி எல்லாரும் என்னை நினைப்பாங்க’ என தன்னை கடிந்தபடி, “சாரி” என்று சத்தம் வராமல் ப்ரதாப்பை பார்த்து வாய் அசைத்து பாவமாக பார்க்க, அவனும் அவளை முறைத்து படி அடுத்தடுத்து பேச ஆரம்பித்து விட்டான்.. 

மீட்டிங் முடிந்து அனைவரும் ஹாலை விட்டு சென்றபின் அங்கிருந்த டேபிளில் சாய்ந்து நின்று இருந்த ப்ரதாப் அருகே வந்தவள் “சாரி” என்றாள்..

“எல்லார் முன்னாடியும் இப்புடி தான் பேசுவியா” கோபப்பட,

“சாரி பதட்டத்தில் வாய் தவறிட்டு, இனிமே இப்புடி பேசவும் மாட்டேன், இப்புடி தூங்கவும் மாட்டேன் சாரி” என கண்ணை சுருக்கி கேட்டத்தில் ப்ரதாப் கோவம் குறைந்தது.. ஆனால் அருகே நின்றவளை பார்த்தவன் உணர்வுகள் தூண்டப்பட,

இருக்குமிடம் மறந்து ஒற்றை விரல் கொண்டு கன்னத்தில் வருட, விஷ்ணு கண்கள் தன்னை போல் மூடியது… “இந்த வாய் இனி தவறவே கூடாது.. அதுக்கு ஒரு பனிஷ்மென்ட்” என்று ப்ரதாப் சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் மொபைல் சிணுங்கியது..

திரையில் வம்சி பெயர் வர, இவனுக்கு வேற வேலையில்லை என அதை கட் செய்த ப்ரதாப், விட்ட வேலையை தொடர பார்க்க, மறுபடியும் வம்சி அழைத்தான்.. 

‘இவனை’ என்று கடுப்பான ப்ரதாப் “என்ன வம்சி” என எரிச்சலுடன் கேட்க, அந்த சத்ததில் விஷ்ணு மோனநிலை கலைந்து கண்ணை திறந்தாள்..

“ப்ரோ மீட்டிங் ஹாலில் கேமரா இருக்கு” என வம்சி சொல்ல, அதை “எதுக்கு கால் பண்ணி சொல்ற வம்சி” என்ற ப்ரதாப்புக்கு விஷயம் உரைக்க, 

“வம்சி” என்று பல்லை கடிக்க.. 

“ப்ரோ நீங்க தானே zoom la மீட்டிங் அட்டன் பண்ண சொன்னீங்க.. மீட்டிங் முடிஞ்சதும் ஏதோ சொல்லனும்னு வெயிட் பண்ண சொன்னீங்க.. நான் எதையும் கேட்கவும் இல்லப்பா  பார்க்கவும் இல்லப்பா”..

“வம்சி உன்னை” என்றதும் வம்சி கால்லை கட் செய்து இருந்தான்.. ப்ரதாப் நெற்றியை கீறினான்.. அவன் தான் வம்சியிடம் மீட்டிங் தொடங்கும் போது அவ்வாறு கூறியது.. 

“ம்.. மறுபடியும் மறுபடியும் மானம் போகுதே” என புலம்ப..

விஷ்ணு சிரித்தாள்..

“என்னடி சிரிப்பு.. எல்லாம் உன்னால் தான் எதுக்குடி தூங்குன்ன”..

“நைட்டு எல்லாம் தூங்க விட்ட தானே, அதான் டயர்டுல தூக்கம் வந்துட்டு”,

“உனக்கு என்னடி டயர்டு மாங்கு மாங்குன்னு நைட்டு எல்லாம் வொர்க் அவுட் பண்ணுன நானே தூங்கலை.. சும்மா இருந்த உனக்கு தூக்கம் வருதா” ப்ரதாப் கேட்க..

அதில் விஷ்ணுவுக்கு ரோஷம் வந்து விட்டது.. “உங்க அளவுக்கு இல்லைன்னாலும் நானும் ஓரளவு வொர்க் பண்ணி இருக்கேன்” என்றாள்..

“ஓ.. பார்க்கலாம் டி இன்னைக்கு நைட்டு நீ எந்த அளவு வொர்க் பண்றன்னு” என சொல்ல..

“பார்க்கலாம்” என்று உதட்டை சுளித்தாள்..

“இதுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றவன் “தூங்காமல் போய் வேலை பாருடி” என்றான்..

“எனக்கு தெரியும்” என்று வெளியேறிவள் இதழ்கள் விரிந்து இருந்தது.. ப்ரதாப்பும் சிரித்தபடி இருந்தான்..

இப்புடியே இவர்கள் வாழ்க்கை ஒரு வாரமும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக கேலியும் கிண்டலுமாக அவர்கள் சொல்லி கொள்ளாத காதலுடன் கழிந்தது..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 50

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!