கதவு தொடர்ந்து தட்டும் ஓசையில் எரிச்சலான விஷ்ணு, கதவை திறந்து கோவமாக பார்க்க,
அறை வாசலில் நின்று இருந்த கல்யாணியோ “எத்தனை தடவை தான் சாப்பிட கூப்பிடுவது, வந்து சாப்பிடு அந்த ஒன்றையாவது உருப்படியா பண்ணு” கோவமாக சொன்னார்..
விஷ்ணு மீது அவருக்கு கோவம்.. மூன்று நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்தவள் இன்னும் அவள் வீட்டிற்கு செல்லவில்லை என்ற கோவம்,
மூன்று நாட்களுக்கு முன் மதியம் போல வீட்டிற்குள் வேகமாக வந்தாள்,
“என்னடி” என கல்யாணி கேட்க,
“என்ன, என்னடி ஏன் நான் இந்த வீட்டிற்கு வர கூடாதா?” என்று எரிந்து விழுந்து விட்டு அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்..
சாப்பிட அழைத்தும் வேண்டாம் என்று விட்டாள்.. மாலையானதும் “நேரம் ஆகிட்டுடி பார்த்தி வேணா வர சொல்லி உங்க வீட்டுல விட சொல்லவா” கல்யாணி கேட்க,
“ஏன் என்னை இப்புடி துரத்துற, ஒரு நாள் கூட நான் இங்க இருக்க கூடாதா” அதற்கும் கத்தினாள்..
கல்யாணிக்கோ பயம் போன முறையும் இப்புடி தான் இரண்டு நாள் இருக்கிறேன் என வந்தவள் மாதக்கணக்கில் இங்கேயே தங்கி விட்டாள்.. அது போல் ஏதும் ஆகி விடுமோ என அவர் பயந்தது போல நான்கு நாட்களாகியும் வீடு செல்லவில்லை..
பார்த்தியும் சரி அவள் அப்பா உதயகுமாரும் சரி என்னம்மா ஏதாவது பிரச்சினையா என்று கேட்க, ஒன்னுமில்லை சும்மா தான் இருக்கேன், ஏன் நான் இங்க வர கூடாதா இருக்க கூடாதா, ஏன் எல்லாரும் போ போன்னு சொல்றீங்க என அவர்களிடமும் கத்த அவர்களுக்கு தான் ஒன்றும் புரியவில்லை.. சரி என்று அமைதியாகி விட்டனர்..
பார்த்தி வம்சியை அழைத்து அங்க எதுவும் ப்ராப்ளமா என விசாரிக்க அவனோ எனக்கு தெரிஞ்ச வரை அப்புடி எதுவும் இல்லையே மாமா என்றான்..
ஆனால் ஏதோ இருக்கின்றது என சொன்னது தங்கையின் பொலிவு இல்லாத முகம், வந்ததிலிருந்து சரியாக சாப்பிட கூட இல்லாது அறைக்குள்ளே அடைந்து கிடக்கின்றாள்.. ப்ரதாப்பிடம் கேட்க முடியாது.. நிச்சயம் அவன் மீது எந்த தவறும் இருக்காது பார்த்திபன் ஆணித்தரமாக நம்பினான்.. இந்த நம்பிக்கை அவன் தங்கையிடம் இல்லாது போனது தான் இங்கு பிர்ச்சினையே,
“எனக்கு எதுவும் வேண்டாம் என்ன தொந்தரவு பண்ணாம போ” என கல்யாணியிடம் இரைந்து விட்டு கதவை சாத்தினாள்..
உள்ளே வந்து தலையணையில் முகத்தை புதைத்து கொண்டாள்.. கண்ணில் கண்ணீர் வழிந்தது..
கதவை திறக்கும் சத்தம் கேட்டது கல்யாணி தான் என நினைத்து கண்ணை துடைத்து கொண்டு “உனக்கு என்ன தான்மா பிரச்சினை ஏன் என்னை தொந்தரவு பண்ற” என கேட்டபடி எழுந்து அமர, வந்தது கல்யாணி அல்ல ப்ரதாப்.. அவளை பயங்கரமாக முறைத்தபடி நின்று இருந்தான்..
ப்ரதாப்புக்கு மீண்டும் தன்னிடம் சொல்லாமல் அம்மா வீட்டிற்கு சென்று விட்டாளே கோவம் வந்தது, இவளை என கால் செய்ய போனை அணைத்து வைத்து இருந்தாள்..
ப்ரதாப் பல்லை கடித்தான்.. வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி விட்டது புரிந்தது அவனுக்கு, ஆனால் ஏன் காலை வரை நல்லா தானே இருந்தாள். தீடிரென என்ன வந்து தொலைத்தது இவளுக்கு,
இனிமே வரவே வேண்டாம் என்று கோவத்தினால் நினைத்தவனால், போன தடவை போல அவளாக வரட்டும் என இருக்க முடியவில்லை.. அதனால் அவனே வந்து விட்டான் மனைவியை தேடி,
கதவை தாளிட்டு விஷ்ணு அருகே நடந்து வந்தான்..
அவனை பார்த்ததும் நேற்று
சாலா பேசியது நினைவுக்கு வந்தது.. அவர் பேச பேச ஜிவு ஜிவவென விஷ்ணுவுக்கு கோவம் எகிறியது.. “நீங்க சொல்றது எல்லாம் பொய் நான் நம்ப மாட்டேன்” என பொங்கி எழுந்தாள்..
“உன்னை விருப்பட்டு ப்ரதாப் கல்யாணம் பண்ணலையே”
“லில்லியை ஏன் ப்ரதாப் நீ இருக்க ஆபிஸ்லேயே வேலைக்கு எடுக்கனும்”..
“கோவிச்சுட்டு அம்மா வீட்டில் இருந்த உன்னை ப்ரதாப்பா வந்து கூப்பிட்டாரா இல்லையே, நீயா தானே திரும்ப வந்த, அதிலிருந்தே தெரியலையா உன்னை வீட்டிற்கு கூப்பிடறதில் ப்ரதாப்புக்கு விருப்பமில்லைன்னு”,
“பவிக்காக அவ வாழ்க்கைகாக தான் உன்னை சகிச்சுக்கிறாரோ என்னவோ?”
அடுத்தடுத்து சாலா இவ்வாறு பேசவும்.. சும்மாவே குழம்பும் விஷ்ணுவுக்கு இது போதாதா, சாலா விரித்த வலையில் விழுந்து விட்டாள்..
ஆராயாமலே ப்ரதாப் மீது தான் தவறு என நம்பியும் விட்டாள்.. பவி அண்ணிக்கா தான் எல்லாமேவா அப்புடி கஷ்டப்பட்டு யாரும் என்னை சகிச்சுக்க வேண்டாம்.. என்னை பிடிக்காதவரோட நான் இருக்க மாட்டேன் என வீட்டுக்கு வந்தது விட்டாள் பைத்தியகாரி..
“கிளம்பு வீட்டுக்கு போகலாம்” என்றான்..
“நான் நா..ன் வரலை” என்றாள்..
“இப்பவா இல்லை எப்பவுமேவா” ப்ரதாப் கேட்க..
“எப்பவுமே தான் உங்க ஆசையும் அதானே” இப்போது பயம் இல்லை தன்னை ஏமாற்றி விட்டான் என்ற கோவத்தில் தாரளமாக பேச்சு வந்தது..
கோவம் வந்தது அவனுக்கு, அவன் ஆசையாமே விரக்தியாக சிரித்து கொண்டான்.. அவனை புரிந்து கொள்ளவில்லையே என நினைத்து,
முன்பு என்றால் இருவரும் ஒன்றாக வாழவில்லை அதனால் அவளுக்கு புரிதல் இல்லை என்று இருந்தான்.. ஆனால் இப்போது இவ்வளவு நெருக்கமாக வாழ தொடங்கிய பிறகும் தன்னை புரிந்து கொள்ளவில்லையா இவள், என்ன தான் இந்த மரமண்டைக்கு பிரச்சினை அவனுக்கு தெரிய வேண்டும்..
“ஏன்”? ப்ரதாப் கேட்கவும் பதில் சொல்லவில்லை அவள்..
அவள் பதில் சொல்லாது நிற்கவும், “ஏன்னு கேட்டேன்” கொஞ்சம் சத்தமாக கேட்டான்..
அதில் பயம் எழுந்தாலும் “பிடிக்கலை” என்றாள் முகத்தை திருப்பி,
கோவம் ஏகத்துக்கும் எகிறியது ப்ரதாப்புக்கு, அவளின் கைபிடித்து தன்னை நோக்கி திருப்பியவன், “இத்தனை நாளும் நீ நடந்துக்கிட்டதை பார்த்தா பிடிக்காது போல தெரியலை.. இப்ப மட்டும் என்ன வந்தது.. தீடிர்னு பிடிக்காம போகுதுன்னா, அப்ப வேற யாரையோ பிடிச்சு இருக்கோ” என கேட்டான்.. அவளை பேச வைக்க வேண்டும் அவள் மனதில் இருப்பதை அறிய வேண்டும் என்பதற்காகவே நெருப்பாய் வந்து விழுந்தது வார்த்தைகள்
அந்த வார்த்தையை கேட்டதும் கொதித்து விட்டாள்.. யாரை பார்த்து இப்புடி கேட்கிறான் என, இவ்வளவு நாள் மனதில் அடக்கி வைத்ததை எல்லாம் கொட்டினாள்.. வார்த்தைகளை கொட்டினாள் திரும்ப அள்ள முடியாது என்பதை மறந்து, ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள், அப்புடி அவள் விடும் வார்த்தைகளே அவளை உயிரோடு கொல்ல போகின்றது என்பதை அறியாமல்,
“யாரை பார்த்து இப்புடி கேட்கிறீங்க.. மனசாட்சி இல்லையா உங்களுக்கு, என்ன பார்த்து இப்புடி கேட்க”,
“உங்க உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை வேறு ஒருத்தரை பிடிச்சு இருக்கு, அதான் இங்க பிரச்சினையே”,
“ச்சே நான் ஏன் தான் கல்யாணத்தை நிறுத்துங்கன்னு சொல்ல உங்களை பார்க்க உங்க ஆபிஸ்க்கு வந்தேனோ, வந்து இருக்கவே கூடாது வந்ததால் தானே இப்ப இவ்வளோ கஷ்டப்படுறேன்” என தலையில் அடித்து கொண்டாள்..
எனக்கு பிடிச்ச அந்த வேற ஒருத்தர் யார், அதை சொல்லு நானும் தெரிஞ்சிக்கிறேன் பொறுமையை இழுத்து பிடித்து ப்ரதாப் கேட்க,
“சும்மா நடிக்க வேணாம்.. நான் இடைஞ்சலாக வர மாட்டேன்.. உங்களுக்கு அந்த லில்லியை தான் பிடிச்சு இருக்குன்னா, அதை மறைமுகமா என்கிட்ட சொல்ல தான் ஆபிஸ்க்கு வேலைக்கு எடுத்து இருக்கீங்க.. அவளை பிடிக்கும்னா என் கூட ஏன் அவ்ளோ க்ளோசா, எல்லாமே நடிப்பா”,
ஆனா நான் ஒரு பைத்தியம் அதை தெரியாம உங்க கூட திரும்ப வந்து வாழ ஆரம்பிச்சு இருக்கேன் என்றாள் அழுகையோடு,
இவ்வளவு நேரம் பல்லை கடித்து அவள் பேசியதை கேட்டவன் “பைத்தியம் போல் ஏன்டி உளறிட்டு இருக்காதடி, அடி வாங்கவ”
“அடிங்க நல்லா அடிங்க.. நான் பைத்தியம் தான் பைத்தியமே தான்” என்றவள்,
“நீங்க சிங்கப்பூர் போன அதே நேரம் அவளும் அங்க வந்து இருக்கா, உங்களை பிடிக்கும்னு என்கிட்டே சொல்லி இருக்கா, ஆனா அதை பத்தி உங்க கிட்ட ஒன்னும் கேட்காம, நீங்க இழுத்த இழுப்புக்கு எல்லாம் வந்து இருக்கேன் பாருங்க நான் பைத்தியம் தான்”
“விஷ்ணு வேண்டான்டி எனக்கு செய் கோவம் வருது.. ஆனா என் இயல்பை மீறி என்னை நானே கண்ட்ரோல் பண்ணிட்டு நிற்கிறேன்.. எதுவும் தெரியாமா புரியாமா உளறிட்டு அடி வாங்காத, வீட்டுக்கு போகலாம் அங்க போய் பேசிக்கலாம் வா” என அவள் கைபிடிக்க
தட்டி விட்டவள், மெத்தைக்கு அடியில் இருந்த ஒரு கவரை எடுத்து அவனிடம் நீட்டினாள்..
அதை பார்த்தான் ஒன்றிரண்டு போட்டோ அவனும் லில்லியும் ஒன்றாக ரெஸ்டாரெண்டில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது போன்று, அருகருகே சிரித்தபடி நின்று இருப்பது போன்று,
விஷ்ணுவை பார்த்தான்.. மார்பிங் இல்ல ஒரிஜினல் போட்டோ என்றாள் கண்ணில் வரும் கண்ணீரை துடைத்தபடி, “அடுத்து பாருங்க” என்றாள் பார்த்தவனுக்கு அதிர்ச்சியும் அதே நேரம் பயங்கர கோவமும், தன்னை பற்றி இவள் எண்ணம் தப்பாக இருக்குமோ என,
நிமிர்ந்து மனைவியை பார்த்தவன் அந்த காகிதத்தை காட்டி “சந்தேகப்படுறியாடி” என உச்சகட்ட கோவத்தில் கேட்டான்,
இல்லை என தலை அசைத்தாள்.. நிம்மதி பெருமூச்சு அவன் விடுவதற்குள்,
“நம்புறேன் நீங்க தான் அவ”.. அதற்கு மேல் பேச முடியவில்லை.. கழுத்தை பிடித்து சுவரோடு சாத்தி இருந்தான்.. அவன் கோவம் எல்லையை கடந்து இருந்தது.. என்ன வார்த்தை சொல்ல வந்தாள்.. தன்னை இவ்வளவு கீழாக நினைக்க எப்புடி முடிந்தது இவளால் முதன் முறை அவனுக்கு வலித்தது..
விஷ்ணுவிற்கோ அவன் கழுத்தை பிடித்ததுமே ரொம்ப பயந்து விட்டாள்.. மூச்சு விடவே முடியவில்லை.. தன் கையால் எடுத்து விட முயற்சி செய்ய கையை அசைக்க கூட முடியவில்லை..
கண்விழி பிதுங்கி கையை சுவற்றில் அடிக்க அவனுக்கு உணர்வு வந்து அவள் நிலை உரைத்தது.. கண் விழி பிதுங்கி கண்ணீர் வழிய மூச்சு விட சிரமபட்டு கொண்டு இருந்தாள்..
வேகமாக கையை எடுக்க, தொப்பென சரிந்து நிலத்தில் விழுந்தாள்.. ‘என்ன இப்புடி செய்ய வைச்சிட்டியேடி’ என்ற கோவம் வர சுவற்றில் ஓங்கி குத்தினான்.. விஷ்ணு இன்னும் பயந்து போக,
அங்கிருந்து கோவமாக கதவு வரை சென்றவன் காதில் தொண்டையை பிடித்து கொண்டு விஷ்ணு இரும ஆரம்பித்தது விழுந்தது.. மனம் கேட்கவில்லை.. விஷ்ணுவை தூக்கி கட்டிலில் அமர வைத்து குடிக்க தண்ணீர் கொடுத்தான்.. அழுகையோடு அவனை பார்க்க,
“நீ ஏன்டி என்னை பார்க்க ஆபிஸ் வந்த, வராமலே இருந்து இருக்கலாம்” என்றான் அவளை பார்த்து குரல் உடைந்து இருந்தது..
என்ன இது இந்த குரலும் பார்வையும் ப்ரதாப்பிடம் இதுவரை அவள் பார்த்து இல்லை.. இந்த குரலிலும் கண்ணில் பிரதிபலித்த உணர்வும் தான் எங்கோ தவறி விட்டோமோ என்பதை உரைத்தது.. காலம் கடந்து வரும் ஞானோதயம், கடலில் கரைத்த பெருங்காயம் போன்று பலன் அளிக்காதே,