Mr and Mrs விஷ்ணு 54

4.6
(48)

பாகம் 54

விஷ்ணு நடத்தை சொல்லி முடிக்கவும்,

“சோ நீ சாலா சொன்னதை நம்பி இருக்க, என் அண்ணா டூ டேஸ் முன்னாடி உன்னை பார்க்க வந்த அப்ப இதை பத்தி கேட்டியா”? என வம்சி கேட்கவும்..

விஷ்ணு அன்று நடந்ததை சொன்னாள்.. கேட்ட வம்சி ஓங்கி அறைந்து இருந்தான்..

“என்னை எதுக்குடா அடிச்ச?” கன்னத்தை பொத்தியபடி கோவப்பட்டாள் நிவி..

“அவளை தான் அடிக்கனும்.. அண்ணன் ஃவொய்ப்பா போய்ட்டா அடிக்க முடியுமா? அதான் உன்னை அடிச்சேன்”..

“அதுக்கு நான் தான் கிடைச்சனாடா எருமை” என நிவி கத்த,

“டா, எருமை, உனக்கு அப்புறம் இருக்கு” நிவியை முறைத்து விட்டு, “உனக்கு ஆடு அளவுக்கு கூட மூளை இல்லையா ப்ரியா.. யாராவது ஏதாவது சொன்னா உடனே நம்பிடுவியா” என ப்ரியாவை  பார்க்க,

“இந்த போட்டோவை பார்க்கும் போது நம்பாம வேற என்ன பண்ண முடியும்” என்றது நிவியே தான்.. 

“ஆ.. இந்த கொசு வேற இடைஇடையே”  என்ற வம்சி “நீ முத வெளிய போ” என பின்னங்கழுத்தை பிடித்து தள்ள பார்க்க,

அதை தட்டி விட்டவள் “முடியாது நான் ஏன் போகனும்.. எல்லாரும் அவளையே தப்பு சொன்னா எப்புடி?, அவ சூழ்நிலையில் யார் இருந்தாலும் இதை எல்லாம் பார்க்கும் போது தப்பா நினைக்க தான் தோணும்.. அதுக்கு விளக்கம் கொடுக்காமா அடிக்கிறது எந்த விதத்தில் நியாயம்? என்று வம்சியிடம் எகிறினாள் நிவேதா..

“மூளை இல்லாத முட்டாளுங்க” என திட்டிய வம்சி.. போனை எடுத்து ராம்க்கு அழைத்தான்.. ப்ரியா வீட்டிற்கு வர சொல்லி, 

“ராமை வர சொல்லி இருக்கேன்.. அவனும் அண்ணா கூட போனான் தானே.. அவனுக்கு இந்த போட்டோவை பத்தி கேட்போம்.. இப்பவும் சொல்றேன் ப்ரியா நீ செஞ்சது பெரிய முட்டாள்தனம்.. சாலா சொல்லவும் எது உண்மைன்னு தெரிஞ்சிக்காமல் அப்புடியே நம்புவியா, அந்த சாலா அது எவ்ளோ பெரிய கேடி தெரியுமா”?

“லில்லியையும் வர சொல்லி இருக்கேன்.. அவங்க கிட்ட என்ன நடந்துச்சு கேட்ப்போம்.. இதை நீ அப்பவே செஞ்சு இருக்கனும்” ப்ரியா..

“நான் அவங்க சொன்னதை மட்டும் வச்சு நம்பலை வம்சி.. நீங்க எல்லாரும் சொல்ற போல நான் அந்தளவு முட்டாளும் இல்ல.. இதோ இதை பாருங்க” என அன்று ப்ரதாப்பிடம் காட்டிய காகிதத்தை வம்சியிடம் நீட்ட,

வம்சி அதை பிரித்து பார்க்க, எட்டி நிவேதாவும் பார்த்தாள்

அது ஒரு மெடிக்கல் ரிப்போர்ட்.. அதில் லீலா கர்ப்பம் பாசிட்டிவ் என்று இருந்தது.. இதை தான் அன்று ப்ரதாப் சந்தேகப்படுறீயா என கேட்க.. விஷ்ணு நம்புறேன் என்று சொன்னது..

விஷ்ணுவை முறைத்தான் வம்சி.. “இதை யார் சாலா கொடுத்ததா, இது பொய் ரிப்போர்ட்டா கூட இருக்கலாம்.. இதை வச்சு என் அண்ணனை சந்தேகப்படுவியா? வம்சிக்கே விஷ்ணு மீது அவ்ளோ கோவம் வந்தது..

“இதை அவங்க கொடுக்கலை வம்சி.. என்ன முழுசா சொல்ல விடுங்க.. பர்ஸ்ட் லில்லி அம்மா சொன்ன அப்ப நம்பினேன் தான்.. ஆனாலும் நீங்க சொன்ன போல அவங்க பொய் சொல்லி இருக்க வாய்ப்பு இருக்கேன்னு எனக்கும் தோணுச்சு.. லில்லியை நேரா பார்த்து என்னன்னு கேட்கவும் தோணுச்சு, நிவியையும் கூட அழைச்சிட்டு போகலாம் சொல்லி அவளுக்கு கால் பண்ணினேன்”..

“அப்ப காவேரி அத்தையை கூப்பிட்டு அவ ஹாஸ்பிடல் போய் இருக்கேன் சொன்னா, சரி அங்க இருந்தே அவளை அழைச்சிட்டு போகனும்னு நானும் நிவி சொன்ன ஹாஸ்பிடல் போனேன்”..

“அங்க லில்லியும் இருந்தா.. அவளை பார்த்ததும் கோவம் வந்து என்ன ஏதுன்னு கேட்கலாம்னு கோவமா அவ பக்கம் போறதுக்குள்ள, அவ அங்கு இருந்து போயிட்டா.. லீலா லீலான்னு அவளை நான் கூப்பிட்டது கூட அவ காதில் விழவில்லை.. அதே நேரம் ஒரு நர்ஸூம் மேடம் மேடம் அவளை கூப்பிட்டு என் பக்கம் வந்தாங்க”..

“ஏன் என்னாச்சுன்னு?” நான் கேட்கவும்..

“ரிப்போர்ட் மெடிசின் எதுவும் வாங்காமல் போறாங்க மேடம்” என்ற நர்ஸ்.. நான் அவ பேர் சொல்லி கூப்பிடதை பார்த்ததுட்டு “நீங்க அவங்க கூட வந்தவங்களா இந்தாங்கன்னு இதில் மெடிசின் எல்லாம் எப்பிடி சாப்பிடனும் இருக்கும்னு” கொடுத்துட்டு போனாங்க.. அதில் தான் இந்த ரிப்போர்ட் இருந்துச்சு “லில்லி கர்ப்பமா இருக்கா இதான் உண்மை.. இப்ப சொல்லுங்க இதை பார்க்கும் போது சந்தேகம் வராம என்ன செய்யும்”..

கேட்ட வம்சிக்கோ பயங்கர அதிர்ச்சி.. லில்லி கர்ப்பமா என நினைத்து,

வ கர்ப்பமாவே இருக்கட்டும் அதுக்கு என் அண்ணனை சந்தேகப்படுவியா, அவர் என்ன நினைச்ச அதிர்ச்சி நீங்கிய வம்சி கோபப்பட்டான்..

அதானே என்ற நிவி சாரை ஏன்டா சந்தேகப்படுற, வேற யாரா வேணா இருக்கலாம் என  வம்சியை சந்தேக பார்வை பார்க்க,

“ஏய் சாவடிச்சிருவேன் உன்னை, அமைதியா இருடி” என்றவன், லீலாவை வர சொல்லி இருக்கேன்.. அவகிட்டயே நேரிடையாக கேட்கலாம் என்றான்

கொஞ்ச நேரத்திலே லில்லி வந்து சேர்ந்தாள்.‌.. விஷ்ணு நிவி அவளை முறைக்க, வம்சி மட்டும் சிநேகமாக புன்னகைத்தான்..

ஏதோ பிரச்சினை லில்லிக்கு புரிந்தது.. மூவரையும் பார்த்தே மெலிதாக சிரித்தாள்.. அவள் உதட்டில் இருந்த சிரிப்பு கண்ணில் இல்லை.. முகமே வாடி கிடந்தது.. வம்சி அதை கவனித்தான்..

“என்ன வம்சி எதுக்கு வர சொன்னீங்க?” லில்லி கேட்கவும்,

“அது வந்து.. லில்லி நீ”.. அவனுக்கு நேரிடையாக கேட்க முடியவில்லை.. ஒரு பெண்ணிடம் அதுவும் கல்யாணம் ஆகாத பெண்ணிடம் நீ கர்ப்பமா இருக்கியா என எப்புடி கேட்பது, அவனுக்கு தயக்கமாக இருக்க,

“ஏய் நீ ப்ரெக்னன்ட்டா இருக்கியா?” முந்திரி கொட்டை  நிவி தான் லீலா வை முறைத்தபடி கேட்டாள்..

“உனக்கு எப்புடி தெரியும்” அதிர்ச்சியானாள் லில்லி..

வம்சிக்கும் அதிர்ச்சி தான்.. என்ன தான் ரிப்போர்ட் காட்டினாலும் அவள் வாயால் ஒப்பு கொண்டாலே,

பார்த்தியா என்ற பார்வை பார்த்தாள் விஷ்ணு..

“எங்களுக்கு தெரியுறது இருக்கட்டும்.. உங்க அம்மாவுக்கும் இந்த விஷயம் தெரியுமா”? என நிவி கேட்க,

“என்ன அம்மாவுக்கு தெரியுமா? அவங்களுக்கு எப்புடி”? என பயந்தபடி அதிர்ச்சியோடும் கேட்டாள் லில்லி.. அந்த பயமே சொல்லியது சாலா தானாக அளந்து விட்டு இருக்கிறார் என வம்சிக்கு,

“தெரியுமான்னு எங்ககிட்ட கேட்கிற, தெரியாம தான் உங்க அம்மா என்கிட்ட வந்து சொன்னாங்களா” இப்போது விஷ்ணு லில்லியிடம் கோவப்பட்டாள்..

“நீ என்ன சொல்ற ப்ரியா அம்மா வந்து உன்கிட்ட சொன்னாங்களா? என்ன சொன்னாங்க புரியாத, பாவையவள் கேட்க,

“என்ன சொன்னாங்கன்னா கேட்கிற” என் குடியே நீ கெடுத்தன்னு சொன்னாங்கடி என்று கோவத்தில் சாலா சொன்னதை சொல்ல,

அதிர்ச்சியில் சிலையாகி விட்டாள் லீலா.‌ அம்மாவே தன்னை பற்றி கட்டிய கட்டு கதையை கேட்டு,

“சொல்லுடி உன் அம்மா வந்து சொன்னது எல்லாம் உண்மையா, அவள் கையை பிடித்து கோவத்தில் உலுக்க ஆரம்பித்த விஷ்ணு உன் கர்ப்பத்துக்கு அவர்..

“வாயை மூடு ப்ரியா.. என்ன பேசுற நீ.. இப்புடி பேச அசிங்கமா இல்லை.. அவளும் உன்ன போல ஒரு பொண்ணு தானே அவளை ஏன் இந்த பாடு படுத்துற” என விஷ்ணு கையை விலக்கி விட்டவன்,

“இனி லீலாவையோ என் குழந்தையைவோ நீயும் சரி வேற யாரும் எதுவும் சொல்லவும் கூடாது, வேற யார் கூடவும் சேர்த்து வச்சு பேச கூடாது, இனி யாரைச்சும் பேசுனா அவ்வளவு தான் என விரல் நீட்டி மிரட்டிய ராமை லில்லியை தவிர மற்ற மூவரும் அதிர்ச்சியாக பார்க்க..,

லீலாவோ அவனை பயங்கரமாக முறைத்தாள்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 48

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!