Mr and Mrs விஷ்ணு 55

4.7
(51)

பாகம் 55

வாயை மூடு ப்ரியா.. என்ன பேசுற நீ.. இப்புடி பேச அசிங்கமா இல்லை.. அவளும் உன்ன போல ஒரு பொண்ணு தானே அவளை ஏன் இந்த பாடு படுத்துற” என விஷ்ணு கையை விலக்கி விட்டான் ராம்..

“இல்ல ராம் அண்ணா இவ” என்ற விஷ்ணுவை உதட்டின் மீது கை வைத்து பேசாதே என்ற ராம் லீலா முன்பு வந்து

“நீ கர்ப்பமா இருக்கியா லீலா” மென்மையாக கேட்டான், அவனை முறைத்தவள் எதுவும் பேசாது நகர பார்க்க, 

அவளை நகர விடாது கையை கெட்டியாக பிடித்தான் ராம், பதில் சொல்லு எனும் விதமாக, 

“அச்சோ அதை தானே சொல்லிட்டு இருக்கேன் ராம் அண்ணா இவ கர்ப்பமா இருக்கா.. அது தான் இங்க பிரச்சனையே நகருங்க.. நான் அவகிட்ட பேசிக்கிறேன்.. சொல்லுடி உன் கர்ப்பத்துக்கு யார் காரணம் சொல்லு” என ராமை மீறி லீலா அருகே விஷ்ணு வர,

அவளின் கைப்பிடித்து தடுத்த ராம்.. “ப்ரியா” என கடிந்தவன், “உன் புருஷனை நீ சந்தேகப்படு தப்பா பேசு, என்ன வேணா பண்ணு, ஆனால் இனி  லீலாவையோ பத்தியோ என் குழந்தையை பத்தியோ தப்பா ஒரு வார்த்தை நீ பேச கூடாது, நீ மட்டும் இல்லை யாரும் எதுவும் பேச கூடாது” என எச்சரித்த ராமை லில்லியை தவிர மற்ற மூவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்..

அந்த அறையே சில நிமிடம் பேரமைதியாக இருந்தது.. மற்றவர்களை விட நிவேதாவிற்கு தான் இது கூடுதல் அதிர்ச்சியான விஷயம்.. ராமா இப்புடி அவளால் நம்ப முடியவில்லை.. ராம்க்கு வம்சி எப்புடியோ அதே போல் தான் நிவேதாவும், இன்னும் சொல்ல போனால் வம்சியை விட ஒரு படி மேல் தான்.. நிவிக்கும் விஷ்ணுவை விட ராம் ஒரு படி மேல்.. 

விஷ்ணுவிற்கு தெரியாத நிவி ரகசியம் கூட அவனுக்கு தெரியும்.. ஆனால் இப்போது அவன் மீதும் அவளுக்கு கோவம் பேசுவதில்லை (அந்த கதை இப்ப வேணாம் இன்னோரு நாள் பார்ப்போம்) அதனால் ராமை அதிர்ச்சியாக பார்த்தாள்.. அவனோ அவளை பார்ப்பதை தவிர்த்தான்.. 

“டேய் ராம் என்ன இது” அதிர்ச்சியிலிருந்து மீண்ட வம்சி நம்ப முடியாது நண்பனிடம் கேட்க,

“இரண்டு பேருக்குள்ளயும் லவ் டா..  ஒரு கட்டத்தில் அது வந்து” சொல்ல முடியாமல் ராம் தடுமாற 

“விடுடா” என்றான் வம்சி.. லில்லி எதையும் மறுக்கவில்லை அமைதியாக தான் இருந்தாள்.. ஆனால் ராமை பார்க்கவும் இல்லை.. அதுவே இந்த விஷயத்தில் இன்னும் ஏதோ இருக்கிறது என வம்சிக்கு உரைத்தது.‌

நான் கிளம்புறேன் வம்சி என அவனிடம் மட்டும் சொல்லி விட்டு லில்லி வெளியேற, ராமும் அவள் பின்னே சென்றான்.. 

வம்சி திரும்பி விஷ்ணுவை பார்த்தான்.. அவள் எதுவும் பேசவில்லை.. அதான் நிறைய பேசி விட்டாளே இனி பேச என்ன இருக்கிறது.. அப்பிடியே சிலை போல் நின்று இருந்தாள்.. கண்ணிலிருந்து மட்டும் கண்ணீர் மட்டும் வழிந்த வண்ணம் இருந்தது.. பார்க்க கொஞ்சம் பாவமாக தான் இருந்தது.. ஆனால் அவனால் என்ன செய்ய முடியும்… காயப்படுத்தி விட்டு கண்ணீர் விடுகிறாள்.. காயப்பட்ட வன் கையில் தானே இனி எல்லாம் இருக்கிறது.. எதுவும் பேசாது அறையிலிருந்து வெளியேறினான்.. 

வெளியேறும் முன்பு இதுக்கு நீயும் ஒரு முக்கியமான காரணம் எனும் விதமாக நிவியை அழுத்தமாக பார்த்து முறைத்து விட்டு சென்றான்.. அவளுக்கும் இப்போது குற்ற உணர்வாகி போனது.. குழம்பி அதற்கு விடை தேடி தன்னிடம் வந்தவளை நாமும் சேர்ந்து குழப்பி விட்டோமோ, தோழியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தானும் ஒரு காரணமோ என, “அழாதடி” என விஷ்ணுவை ஆறுதல் படுத்த நெருங்க.. 

விஷ்ணுவிற்கோ தன் முட்டாள் தனத்தை எண்ணி இன்னும் அழுகை கூடியது.. “என்னை கொஞ்சம் நேரம் தனியா விடு நீ கிளம்பு” என்றாள் விஷ்ணு.. நிவிக்கு மனது இல்லை என்றாலும் இந்நிலையில் அவளுக்கு  தனிமை தேவை என எண்ணி வெளியேறினாள்..

“லீலா கொஞ்சம் நில்லு” என ராம் அழைக்க,

நிற்காது விறுவிறுவென நடந்தாள் லீலா…

“லீலா ப்ளீஸ் கொஞ்சம் நில்லு” என எட்டி ராம் அவள் கடைப்பிடிக்க,

“விடுங்க” என்றாள் லீலா அவனிடமிருந்து கையை விடுவிக்க போராடிய படி,

“ஏன் என்கிட்ட இந்த விஷயத்தை சொல்லலை” என கேட்க, அவனை தீயாய் முறைத்தவள்,

“நம்ம இரண்டு பேரும் லவ் பண்றோமா எப்ப இருந்து ராம்” என கோவமாக கேட்டாலும் கண்ணீலிருந்து கண்ணீர் வழிந்தது.. 

அதை பார்த்த ராம்க்கு மனம் கஷ்டமாகி போக “லில்லி ப்ளீஸ் அழாத” என கண்ணீரை துடைக்க அவளருகே உரிமையாக கையை நீட்ட, அதை தட்டி விட்டவள் “டோன்ட் டச் மீ” என கோவமானவள்

“என்கிட்ட ஏன் சொல்லலைன்னு கேட்டிங்க தானே, சொல்லனும்ன்னு தான் நினைச்சேன் நல்ல ஹாஸ்பிடல் பாருங்க அபார்ஷன் பண்றதுக்கு சொல்லனும் தான் நினைச்சேன் அதுக்குள்ள உங்களுக்கே தெரிஞ்சிட்டு பரவாயில்லை நல்ல ஹாஸ்பிடல் பாருங்க” என்றவளை அதிர்ந்து பார்த்த ராம்,

“ லில்லி ஏன் இப்புடி பேசுற உன் கோவம் எனக்கு புரியுது.‌ நாமா உட்கார்ந்து பேசலாம்.. எல்லாத்தையும் சரி பண்ணலாம், நீ சட்டுன்னு எந்த தப்பான முடிவுக்கும் வராத ப்ளீஸ் லில்லி” என்றான் கெஞ்சுதலாக..

அவன் குரலில் கெஞ்சல் இருந்தது.. அதை லில்லியாலும் உணர முடிந்தது.. அதுக்கும் அவன் மீது கோவம் தான் வந்தது.. முன்பு எல்லாம் பார்க்கும் நேரம் எரிந்து விழுபவன் திட்டி கொண்டே இருப்பவன், இப்போது காட்டும் மென்மை எதுக்கென புரிந்தது.. வயிற்றில் கை வைத்தவளுக்கு கோவம் கோவமாக வந்தது ராம் மீது,

“என்ன புதுசா இருக்கு, உங்களுக்கு என்னை கண்டாலே ஆகாது எப்பவும் எரிஞ்சு விழுந்துட்டு திட்டிட்டே இருப்பீங்க.. இப்ப மட்டும் என்ன புதுசா இந்த கரிசனம் எதனால்” என  கேட்டவள் கீழே குனிந்து வயிற்றை பார்த்து “இதுக்காகவா” என்று கேள்வி கேட்பவளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் ராம் தடுமாற,

“எனக்கு என்மேல்ல கோபப்பட்டு திட்டிடே இருந்த ராமை கூட பிடிச்சுது அவர் மேல் ஒரு மரியாதையும் இருந்தது.. ஆனா இப்ப என் முன்னாடி மென்மையா பேசி கெஞ்சிட்டு இருக்க இந்த ராமை என பிடிக்கலை.. உங்க தீடிர் அன்பு கரிசனம் கணிவு எதுவும் வேண்டாம்.. இதுவும் வேண்டாம்” என வயிற்றை காண்பித்து சொன்னவள், 

“சீக்கிரம் நல்லா ஹாஸ்பிடல்லா பார்த்துட்டு கால் பண்ணுங்க ராம்” என தன்னை மீறி வரும் அழுகையை அடக்கிய படி சொல்லி விட்டு விறுவிறுவென அங்கிருந்து சென்றாள்.. 

அடுத்து என்ன செய்வது என தெரியாது செல்பவளையே பார்த்து கொண்டு நின்ற ராம் அருகே வம்சி வந்தான்.. அவனை ராம் பார்க்க வம்சி எதுவும் கேட்கவில்லை.. அமைதியாக நின்றான்.. தோளில் கைப்போட்டு ஆறுதலாக, 

“அவ கோவத்தில் நியாயம் இருக்குடா” என்ற ராமை தடுத்த வம்சி.. 

“எதுவும் சொல்ல வேணாம் உன் தனிபட்ட விஷயம் இது” என்றான்.. 

இல்லை என தலை அசைத்த ராம் “ஒரு மாதமா உள்ள வைச்சு ரொம்ப அழுத்திட்டு இருக்குடா.. ரொம்ப குற்ற உணர்வா இருக்கு” என நடந்ததை மேலோட்டமாக சொல்லி முடிக்க,

கேட்ட வம்சி ராம் கன்னத்தில் பளாரென அறைந்து இருந்தான்.. 

அவன் சொன்னதை கேட்டு அவ்வளவு கோவம் வம்சிக்கு, தன் நண்பனா இப்புடி என்ற அதிர்ச்சியும் கோவமும் வந்தது.. 

“டேய்” என கோவமாக திட்ட துவங்குவதற்குள், ராமின் மறுகன்னத்தில் அறைந்து இருந்தாள் நிவேதா..

விஷ்ணு வீட்டில் இருந்து வெளி வந்தவள் காதில் லீலா ராமிடம் கோவப்பட்டு பேசியது.. இப்போது வம்சியிடம் ராம் சொன்னது அனைத்துமே காதில் விழுந்ததே.. ராமா இப்புடி அவளுக்கும் நம்ப முடியாத அதிர்ச்சி..

“ஏய்.. எதுக்குடி அடிச்ச” என சீறிய வம்சியை முறைத்தவள் “உங்களுக்கு அவனை அடிக்க எவ்ளோ உரிமை இருக்கோ அதை விட அதிகம் இருக்கு எனக்கு, எனக்கும் அவருக்கும் இடையில் நீங்க வராதீங்க” என கோவமாக உரைத்து விட்டு  

அவளை எதிர்நோக்க முடியாமல் தலை குனிந்தபடி நின்று இருந்த ராமை பார்த்து,

“நீயா இப்புடி? என்னால் நம்பவே முடியலை ராம்? உனக்கு அசிங்கமாவே இல்லையா? இப்புடி ஒரு வேலையை பண்ணி இருக்க? லவ் பண்ணுற பொண்ணுக்கிட்டேயே இப்புடி நடந்தா அது மிகப்பெரிய தப்பு.. இதில் நீ லவ் பண்ணாத பொண்ணு அவ.. அவகிட்ட போய் ச்சீ” முகத்தை சுளித்தாள் நிவேதா.. 

“இல்ல நிவி நான்” என ராம் ஏதோ சொல்ல வர,

“வாயை மூடு பேசாத, லவ் பண்ணுனேன்.. பயங்கர காதல்.. லவ் ஓவர் ப்ளோ ஆனதால் தான் இப்புடி நடந்துக்கிட்டேன் சப்பை கட்டு கட்ட பார்க்காத, உனக்கு லவ் இல்லை லஸ்ட் தான்.. அந்த இடத்தில் லில்லி இல்ல யார் இருந்தாலும் ஏன் நான் இருந்திருந்தா கூட நீ இப்புடி தான்” என்று நிதானம் இல்லாமல் படபடத்து கொண்டு இருந்தவள்  பேச்சு நின்றது.. வம்சி அடித்த அடியில்,

நண்பன் செய்தது தவறு தான்.. அதுக்காக வார்த்தைகளை இவள் அள்ளி வீசுவாளா என்ற கோவம் வம்சிக்கு, 

“தொலைச்சிருவேன் ராஸ்கல்.. விட்டா ஓவரா பேசுற”, என மீண்டும் அவளை அடிக்க கையை வம்சி ஓங்க,

அவனை தடுத்த ராம் “எதுக்குடா அவளை அடிக்கிற” என கோவப்பட்டான்… நிவி பேசியது அவனுக்கு வருத்தத்தை அளித்தாலும் அவளை அடி வாங்க விட்டு வேடிக்கை பார்க்க ராமால் முடியுமா?

“அவளை அடிக்க கூடாது டா அவளுக்கு இவ்ளோ இடம் கொடுத்து வச்சு இருக்க உன்னை தான் அடிக்கனும்” என்றான் வம்சி.. 

“தப்பு செஞ்சா ஏன்னு கேட்க கூடாதா”? கனன்த்தில் கை வைத்தபடி நிவி தான் கேட்டது..

“கேட்கலாம் நீ இல்லை.. லில்லி கேட்கலாம்.. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டது அவ தான்.. இது இரண்டு பேரோட தனிபட்ட விஷயம்.. நீ எப்போதும் போல் முந்திரி கொட்டை மாதிரி மூக்கை நுழைக்காத.. அவனை இந்த விஷயத்தில் கேள்வி கேட்க உனக்கு உரிமையில்லை.. நீ யார் அவனுக்கு” என கோவமாக கேட்டான் வம்சி..

அன்றோரு நாள் இதே இடத்தில் வைத்து என் விஷயத்தில் கேள்வி கேட்கவும் எனக்கு அறிவுரை சொல்லவும் நீ யார் என கேட்டு இருந்தால் நிவி ராமை பார்த்து அதை தான் இப்போது குத்தி காட்டுகிறான் வம்சி என நிவேதாவுக்கு புரிந்தது.. 

“டேய் அடங்குடா என்ன கேள்வி கேட்க அடிக்க நிவிக்கு எல்லா ரைட்ஸ் இருக்கு” என்ற ராம் “அவன் கிடக்குறான் நிவிம்மா” என அவள் அருகே வர,

“யாரோ எப்புடி வேணா போகட்டும் எனக்கு என்ன வந்தது.. உங்களையை அடிச்சத்துக்கும் திட்டுனதுக்கும் சாரி ராம் சார்” என்று கோவமாக உரைத்தாள் நிவி..

“நிவி ஏன்மா இப்புடி பேசுற”

என்ற ராமை கண்டுகொள்ளாது அங்கிருந்து நகர்ந்தாள்.. விஷ்ணு வீடு அருகே தானே அவள் வீடும்.. வம்சியை கடந்து தான் இப்போது செல்ல வேண்டும்.. வழியில் நிற்கின்றான்.. 

அவன் அருகே வந்ததும் நின்றவள் “ராம் சார் விஷயத்தில் தலையிட எப்புடி எனக்கு உரிமை இல்லையோ அதே போல என்னை அடிக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது,  என்று வம்சியை பார்த்து சொல்லி விட்டு நகர,

அவளின் கைப்பிடித்து நிறுத்தியவன் “என்ன சொன்ன உன்னை அடிக்க எனக்கு உரிமை இல்லையா நல்ல ஜோக்” என ஹா ஹா என சிரித்தவன்,

“ உன்னை அடிக்க மட்டும் இல்ல அணைக்க கொஞ்ச லவ் பண்ண முத்தம் கொடுக்க மேற்படி மேற்படி விஷயம் எல்லாத்துக்கும் எனக்கு மட்டும் தான்டி உரிமை இருக்கு.. மீரு நா பார்யா” மறந்து போயிருச்சா,  

“சாட்சிக்கு சாட்சி கையேழுத்து போட்டவனும் இருக்கான்” என ராமை கை நீட்டி காண்பித்து விட்டு “சர்டிபிகேட்டும் இருக்கு தப்பிக்க வழியே இல்லை மிசஸ் வம்சி” என கண் சிமிட்டினான்..

“அது முடிஞ்சு போன கதை” என்றாள் நிவி வம்சியை முறைத்தபடி,

“ம்ஹும் இன்னும் ஆரம்பிக்காத கதைடி.. என் அண்ணன் அக்கா கதை முடிஞ்சதும் நம்ம கதை தான்.. ரெடியா இரு மா ப்ரியத்தம்மா” என அவள் கன்னத்தை கிள்ள, அவன் கையை தட்டி விட்டு கோவமாக தன் வீட்டிற்குள் சென்று விட்டாள்.. செல்பவளை சிரித்தபடி பார்த்து நின்றான் வம்சி..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 51

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!