Mr and Mrs விஷ்ணு 57

4.7
(55)

பாகம் 57

“நான் தப்புங்க பெரிய தப்பு பண்ணிட்டேன்.. சாரி சாரி சாரி என்னை மன்னிச்சுருங்க.. ப்ளீஸ் மன்னிச்சிடுங்க.. வந்துருங்க.. எங்க இருந்தாலும் வந்துருங்க.. எனக்கு பயமா இருக்கு..‌ ப்ளீஸ் வந்துருங்க எனக்காக” என அடுத்தடுத்து மெசேஜ் அனுப்பினாள்..

அனைத்தும் கேட்கப்பட்டதே தவிர ப்ரதாப் எந்த பதிலும் திருப்பி அனுப்பவில்லை..

விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே காரில் அமர்ந்து இருந்தவனால் அனைத்தும் கேட்கப்பட்டதே தவிர ப்ரதாப் எந்த பதிலும் திருப்பி அனுப்பவில்லை..

அன்று விஷ்ணு வீட்டிலிருந்து வெளி வந்தவனுக்கு அவ்வளவு கோவம் ஆத்திரம்.. கட்டியவள் மீது காட்ட முடியாத கோவத்தை கார் மீது காட்டி கொண்டு இருந்தான்.. கண்மண் தெரியாத வேகத்தில் கார் பறந்தது.. திருப்பதி மசாலா நம்பி வாங்கலாம் தரமானது.. உங்க கன்ஸ்ட்ரஜன்ல நம்பி பணம் போட்டு வீடு வாங்கலாம் தம்பி என் முன்பின் தெரியாதவர்கள் இடம் சம்பாதித்திருந்த நம்பிக்கையை மனைவியிடம் பெறவில்லையா தன் மீதும் கோவம் வந்தது..

அவனை பார்த்து என்ன வார்த்தை சொல்லி விட்டாள்.. ஏதோ இரண்டு போட்டோ வைத்து அவன் ஒழுக்கத்தை எடை போடுவாளா.. அவ்வளவு தான் அவன் மீது அவளுக்கு இருக்கும் நம்பிக்கையா? இதே போல் இரண்டு என்ன இரண்டாயிரம் போட்டோ இருந்தாலும் எத்தனை விதமாக யார் வந்து திரித்து கதை கூறி இருந்தாலும் என் புருஷனை பத்தி எனக்கு தெரியும் என சொன்னவர்கள் முகத்தில் அடித்து இருக்க வேணாமா?

உங்களை பத்தி எனக்கு தெரியும்..‌ஆனா இது என்ன போட்டோ நம்பிக்கை வைத்து அவனிடம் கேட்டு இருந்தால்.. இந்நேரம் எவ்வளவு கர்வமாக இருந்திருக்கும்.. பதில் சொல்லி இருப்பானே, அதோடு அவளை கொண்டாடியும் இருப்பானே, ஆனால் அவள் நீ தான் காரணம் என்று அல்லவா சொல்லி அவன் மனதையும் அவர்கள் உறவையும் உடைத்து போட்டு விட்டாள்..

எப்படி எப்படி ஒரு துளி கூடவா நம்பிக்கை இல்லை.. அப்படி நம்பிக்கை இல்லாமலா தன்னோடு வாழ்ந்தால், அவன் காட்டிய அன்பு அக்கறை காதல் எதுவுமே புரியவில்லையா இந்த முட்டாளுக்கு, இதுக்கு மேல் எப்புடி புரிய வைக்க கண்ணே மணியே என குழைஞ்சு குழைஞ்சு பேசுனா மட்டும் தான் அன்பு இருக்கிறதா அர்த்தமா? ஐ லவ் யூ ஐ லவ் யூ ஒரு நாளைக்கு நூறு தடவை சொன்னால் தான் காதல் இருக்கு என்று அர்த்தமா? முட்டாள் முட்டாள் என கடிந்தவன்,

கட்டியவள் இருக்கும் போது என்ன அவசிய ம***ர் வந்தது இன்னோருத்தியிடம் போக, அவ்வளவு தரம் தாழ்ந்தவனா நான், எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இவ்வளவு கீழாக தன்னை நினைத்து இருப்பாள் பல மடங்கு ஆத்திரம் விஷ்ணு மீது எழுந்தது.. அதை அவளிடம் காட்டி விட கூடாது என்றும் காதல் மனம் தடுத்தது.. இப்போது அடித்து விட்டு வந்து விட்டான் அவனுக்கும் சேர்த்து அல்லவா வலிக்கின்றது..

இப்போது என்ன? அவன் மீது தவறு இல்லையென நிருபிக்க வேணுமா.. அப்புடி நிருபித்து வாழ வேண்டுமா.. எந்த அவசியமும் அவனுக்கு இல்லை..

ஆ…. அடக்க முடியாத ஆத்திரத்தை ஸ்டேரியரிங் மீது காட்டினான்.. அப்புடி வாழ வேண்டியது இல்லை இந்த வாழ்க்கை தேவையில்லை அவள் தேவையில்லை வேண்டாமென விட்டு போக முடியுமா? அப்புடிபட்ட உறவா இது?

பல சிந்தனைகளோடு

காரும் கை போன போக்கில் சென்றது.. மாலை தொடங்கி இரவு முழுவதும் காரை ஓட்டியவன் மனதோடு சேர்த்து உடலும் சோர்ந்து போக காரை நிறுத்தினான்.. பொழுது புலர ஆரம்பித்து இருந்தது.. இருக்கும் இடத்தை பார்த்தான்.. காரிலே விசாகப்பட்டினம் வரை வந்து இருப்பது தெரிந்தது.. திரும்பி வீடு போகும் எண்ணம் இல்லை.. கோவம் ஆத்திரத்தோடு ஏமாற்றமும் வெறுமையும் சேர்ந்து இருந்தது..

விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வண்டியை திருப்பினான்.. அவர்களுக்கு கடல் வாணிகமும் இருந்தது.. அதனால் அங்கு இருப்பவர்கள் நல்ல பழக்கம்.. அவர்களை படகை எடுக்க சொல்லி ஏறி கடலுக்குள் சென்று விட்டான்.. நடுக்கடலில் சுற்றி இருக்கும் நீரின் குளுமை கொதிக்கும் மனதை ஆற்றும் என அவன் நினைக்க, அது எங்கு அடங்கியது.. மீண்டும் மீண்டும் விஷ்ணு பேசியது தான் நினைவுக்கு வந்தது..

இரண்டு நாட்கள் கடல் வாசம் தான்.. அதனால் தான் வம்சி தொடர்பு கொண்ட போது மொபைல் ரீச்சாகவில்லை… அப்புடியே இருக்க முடியாதே, தொழில் வேலை எல்லாம் பார்க்க வேண்டுமே, அது மட்டுமல்ல அவன் இப்புடி யாரையும் தொடர்பு கொள்ளாது இருந்தால்.. வீட்டில் இருப்பவர்கள் பயப்படுவார்கள்.. அதோடு விஷ்ணுவுக்கும் தனக்கும் ஏதோ பிரச்சினை என யூகித்து அவளையும் ஏதாவது சொல்ல கூடும்.. அதனால் படகை கரைக்கு திருப்ப சொல்லி கரைக்கு வந்தவன், தன் காரில் ஏறி போனை ஆன் செய்து வம்சிக்கு அழைத்தான்..

“அண்ணாய்யா எங்க போனீங்க? ரீச் பண்ண முடியலை.. உங்களுக்கு ஏதும் பிர்ச்சினை இல்லையே” மறுமுனையில் வம்சியின் பதட்டமான குரல்,

“ஐயம் ஓகே, டூ டேஸ் வேற ஒரு வொர்க் போன இடத்தில் சிக்னல் இல்லை வம்சி அதான் கான்டெக்ட் பண்ண முடியலை” என்ற ப்ரதாப்.. “இங்க ஆந்திரா ப்ரான்ச்ல சில சேன்ஜஸ் பண்ண வேண்டி இருக்கு.. அதனால் வம்சி நான் கொஞ்ச நாள் இங்க இருக்க வேண்டி வரும் நினைக்கிறேன்.. நீயும் பவித்ராவும் அங்க கம்பெனி ஃபாக்டரியை பார்த்துக்குங்க.. ராமை கன்ஸ்ட்ரக்சனை பார்த்துக்க சொல்லு” என்றான்..

நான் வேணா அங்க இருக்க வொர்க்கை பார்த்துக்கிறேன்.. நீங்க இங்க வந்துடுங்க”என்ற வம்சியிடம்,

“வம்சி நான் என்ன சொல்றேன்னோ அதை மட்டும் கேளு” என்ற அந்த பேச்சை முடித்த ப்ரதாப் போனை கட் செய்ய, அந்த நேரம் தான் விஷ்ணுவிடமிருந்து அழைப்பும் மெசேஜ்களும் வந்தது..

அனைத்தையும் கேட்டவன் அப்புடியே கார் சீட்டில் சாய்ந்து கண்ணை மூடினான்.. அவ்வளவு கோவமான கோவம் மனைவி மீது இருந்தது.. இருந்தும் அவளின் அழுகுரல் அவனை பாதித்தது..

சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பேசிட்டா மன்னச்சிடு காதல் மனம் அவளுக்காக வரிந்து கொண்டு வர, முடியாது உன் ஒழுக்கத்தையே சந்தேகித்து இருக்கின்றாள் எப்புடி மன்னிக்க முடியும், மன்னிக்காத என்றது அவனின் இயல்பான பிடிவாத குணம்..

தொழில் தன்னை ஒருவர் சின்னதாக சந்தேக கண் கொண்டு பார்த்தால் கூட அது எவ்வளவு கோடி கணக்கில் லாபம் தர கூடியவர்களாக இருந்தாலும் கூட அவர்களோடு தொழில் செய்ய மாட்டான்.. உறவை முறித்து கொள்வான்..

முறித்து கொள்ளவோ தள்ளி வைக்கவோ கூடிய உறவா அவள்.. கடைசி காலம் வரை துணை இருப்பேன் என சத்தியம் செய்து கரம்பிடித்தவள்.. அவனின் காதலும் வாழ்க்கையும் அவள் தான்… ஆனால் இப்போதைக்கு அவள் மீது இந்த கடல் அளவு கோவம் இருக்கின்றது.. என்ன செய்ய அவளை தூர நிறுத்தவும் அவனால் முடியாது அதே சமயம் இப்போதைக்கு சேர்த்து கொள்ளவும் முடியாது.. கொஞ்ச நாள் தள்ளி இருந்தாலாவது கோவம் குறையுதா பார்க்கலாம் என நினைத்தவன் காரை கிளப்பி ஆந்திராவில் இருக்கும் அவர்கள் வீட்டுக்கு சென்றான்..

இங்கு விஷ்ணுவோ ப்ரதாப்பிடமிருந்து எந்த பதிலும் வராது போகவே சோர்ந்து விட்டாள்.. அழுகையும் வந்தது.. இதுக்கேவா இன்னும் இருக்கே உப்பு தின்னா தண்ணி குடிச்சு தான் ஆகனும் என்றது மனது.. உண்மை தானே,

அனைத்தையும் கலைத்து போட்டு விட்டு, உடனே சரியாக வேண்டும் என நினைத்தால் ஆகுமா? கலைத்த தான் தான் சரி செய்ய வேண்டும் என்பதும் புரிந்தது..

அவசரமாக கண்ணை துடைத்து விட்டு எழுந்தவள், பாத்ரூம் சென்று குளித்து விட்டு ப்ரோவில் இருந்த தன்னுடைய சுடிதார் ஒன்றை அணிந்தவள் தன்னுடைய கைப்பை தோளில் மாட்டி கொண்டு கதவை திறந்து வெளிவர அப்போதும் தான் வெளியே சென்று இருந்த கல்யாணி வந்தார்..

“எங்கடி போற?” கல்யாணி கேட்டார்.. இரண்டு மூணு நாள் அறையை விட்டு வராமல் அழுது வடிந்தவள், இப்போது இப்புடி கிளம்பி இருக்கின்றாளே என கேட்டார்..

“என் வீட்டுக்கும்மா” என்றாள்..

கொஞ்ச நேரம் முன்பு வரை அந்த வீட்டுக்கு போக மாட்டேன் என்றவள் கிளம்புறாளே மாப்பிள்ளையும் மகளும் ராசியாகி விட்டார்களோ கல்யாணிக்கு சந்தோஷம், அதை விஷ்ணுவிடமும் கேட்டு விட,

“அதுக்காக தான் வீட்டுக்கு போறேன்ம்மா வரேன்” என விஷ்ணு கிளம்ப,

“கொஞ்ச நேரம் இரு ப்ரியா அப்பாவோ பார்த்தியோ யாராவது வரட்டும் அவங்களை கொண்டு வந்தது விட சொல்றேன்” என கல்யாணி கூற,

“என் வீட்டுக்கு போறதுக்கு எதுக்கும்மா எனக்கு துணை அது எல்லாம் வேணாம்.. நானே போய்க்கிறேன்.. பார்த்தி அப்பா இரண்டு பேர்க்கிட்டயும் சொல்லிருங்க” என்றவள் தன் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்..

முதன் முறை என் வீடு உரிமையான பேச்சு விஷ்ணுவிடமிருந்து இனி மகள் வாழ்க்கல சரியாகி விடும்..‌அவள் சரி செய்து கொள்வாள் நம்பிக்கையும் கூடவே சந்தோஷமும் வந்தது கல்யாணிக்கு,

ப்ரதாப் வீட்டுக்கும் வந்து விட்டாள்.. ஹாலில் தான் அவளின் மாமனார் மாமியார் பாட்டி விசாலாட்சி என அனைவரும் இருந்தனர்.. காபி குடித்து கொண்டு இருந்தனர்.. அவர்களை பார்த்து தயங்கியபடியே விஷ்ணு வீட்டிற்குள் வந்தாள்..

அவளை பார்த்து விசாலாட்சி தவிர மற்றவர்கள் மெலிதாக சிரித்தனர்.. “காபி குடிக்கிறியா?” அவள் மாமியார் தேவகி தான் கேட்டது.. இப்போது எல்லாம் பாசமான மாமியார் ஆகி விட்டார்.. வேணாம் என தலை அசைத்தவள் ரூம்க்கு போறேன் என சொல்லி விட்டு மாடியேறினாள்..

அவள் வீட்டை விட்டு சென்று ஒரு வாரமாகியது.. ஏன் போன்? எதுக்கு போன? யாரும் எதுவும் கேட்கவில்லை.. காரணம் அவள் கணவன் தான்.. அவளை யாராவது ஒரு வார்த்தை சொல்லி விட முடியுமா? சொல்லி விட்டால் சும்மா தான் விடுவானா? தனக்காக தேவகியிடமும் விசாலாட்சியிடமும் எவ்வளவு சண்டை போட்டு இருப்பான்.. அவ்வளவு அன்பு தன் மீது முன்பு புரியாதது இப்போது விஷ்ணுவுக்கு புரிந்தது..

கதவை திறந்து அறைக்குள் வந்தாள்.. அவள் தங்கி இருந்த அறை தான் ஆனால் இன்று ஏனோ புதிதாகவும் அழகாகவும் அவள் கண்ணுக்கு தெரிந்தது.. அறை அறையை ரசித்தபடி மெத்தையில் வந்து அமர, வம்சியிடமிருந்து அழைப்பு வந்தது..

விஷ்ணு அழைப்பை ஏற்றதும் ப்ரதாப் கூறியதை வம்சி சொல்ல கேட்டவளுக்கு மனம் பாரமாகி போனது..

தன்னால் தான் என்ற கவலையும் வந்தது.. இங்கு வந்தால் தன் மீது கோவத்தை காட்டி விடுவோம் என்ற எண்ணத்தில் தான் வர மாட்டேன்ங்கிறார் என முதன் முறை விஷ்ணு ப்ரதாப்பை சரியாக புரிந்து கொண்டாள்.. ஆனால் இப்போது புரிந்து என்ன செய்ய, வருத்தமும் அழுகையும் வந்தது..

மீண்டும் போனை எடுத்தவள் “சாரி ப்ளீஸ் வாங்க.. வந்து திட்டுங்க அடிங்க இப்புடி பண்ணாதீங்க” என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி கொண்டே இருந்தாள்.. ப்ரதாப்போ பிடிவாதமாக வர மாட்டேன் என்று தான் இருந்தான்..

இரண்டு நாள் தான் அப்புடி அவனால் பிடிவாதமாக இருக்க முடிந்தது.. மூன்றாம் நாள் வந்து விட்டான்..

ப்ரதாப் சிறந்த கணவன் யாராலும் அதை மறுக்க முடியாது.. சிறந்த தந்தை என நிருபிக்க வேணாமா? அதனால் வந்து இருந்தான்.. விஷ்ணுவால் வர வைக்க முடியாதவனை அவர்களின் மகவின் வரவு வரவழைத்து இருந்தது..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 55

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!