Mr and Mrs விஷ்ணு 58

4.8
(55)

பாகம் 58

நன்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிவி வீட்டிற்கு வெளியே காய்கறிக்காரன் போட்ட சத்தத்தில் படக்கென கண் விழித்தாள்.. அவசரமாக எழுந்து மணியை பார்க்க அது ஏழுரை என்று காட்டியது.. ஓ.. ச்சே என்ற கட்டிலை அடித்தாள்.. கடன்காரன் கண்டதையும் பேசி நைட் எல்லாம் தூங்க விடமா பண்ணிட்டான்.. எழுந்துக்க லேட்டு ஆகிட்டு இப்ப எல்லாம் அதிரிபுதிரியா பண்ணிட்டு ஆபிஸ் ஓடனும் என வம்சியை திட்டி விட்டு, பாத்ரூம் சென்று பல் துலக்கி முகம் கழுவி விட்டு வந்தவள்,

‘ச்சே இந்த காலையில் எழுந்ததும் வாசல் தெளித்து கோலம் போடனும்ங்கிறதை எல்லாம் யார் தான் கண்டு பிடிச்சாங்களோ’ நொந்தபடி வீட்டு கதவை திறந்து வெளி வர வாசலை அழகான கோலம் நிறைத்து இருந்தது.. 

‘அப்பாடா ஒரு வேலை குறைந்தது’ நிம்மதி பெருமூச்சு நிவேதாவிடம், யார் என்ற சந்தேகம் எல்லாம் எழவில்லை.. சாவி இல்லன்னா கல்யாணி அத்தை(விஷ்ணு அம்மா) இரண்டு பேரில் யாராவது ஒருவராக தான் இருக்க முடியும்.. மனதிற்குள் அவர்களுக்கு நன்றியை சொல்லி விட்டு,

கேட்டில் தொங்க விடப்பட்டு இருந்த பையில் இருந்த பால் பாக்கெட்டை எடுத்து கொண்டு கிச்சன் சென்றவள், பாலை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து பற்ற வைத்தால், அது எரியவில்லை, லைட்டரில் தான் பிரச்சினையோ என நினைத்து தீப்பெட்டி எடுத்து பற்ற வைத்தால், அப்போதும் எரியவில்லை.. சிலிண்டர் தீர்ந்து விட்டது போல, ‘ச்சே இதுவும் சதி பண்ணுது’ என சிலிண்டரரை கோவத்தில் எட்டி உதைத்தாள்.. அவளுக்கு சிலிண்டர் மாற்றுவது குதிரை கொம்பான விஷயம், மற்றவர் உதவியை தான் நாடுவாள்..

விறுவிறுவென தன் வீட்டு கேட்டை திறந்து வெளி வந்தவள் எதிர்வீட்டுக்குள் சென்றாள்.. “குட் மார்னிங்” என்ற ராமை சட்டை செய்யாது கிச்சனுக்குள் நுழைந்தாள்.. அங்கு பரபரப்பாக வேலை செய்து கொண்டு இருந்த ராமின் அம்மா சாவித்ரி நிவியை கண்டதும், 

“பாருடா கோவம் போய்ட்டு போல காலையில்லே என்னை பார்க்க வந்து இருக்க” என சிரித்தபடி சொன்ன சாவித்ரி சூடான பாலில் கப்பில் ஊற்றி காபி பொடி சர்க்கரை கலந்து நிவேதாவிடம் நீட்ட, 

அதை வாங்காமல் முகத்தை திருப்பிய நிவேதா “சிலிண்டர் மாத்தனும்” என்று மட்டும் சொன்னாள்..

“இப்ப மாத்தி எப்படி சமைப்ப, ஆபிஸ்க்கு லேட்டாகாதா, வாசல்ல கோலம் இல்லாததை பார்த்ததுமே நீ எழுந்துக்கலைன்னு தெரிஞ்சுது.. அதான் உனக்கும் காவேரிக்கும் சேர்த்தே சமைச்சுட்டேன்.. குக்கர் சத்தம் போட்டதும் காபியை வச்சிட்டு வந்து உன்னை எழுப்பனும் நினைச்சேன் அதுக்குள்ள நீயே வந்துட்ட, இப்ப நீ காபி குடிச்சிட்டு, காவேரிக்கு பால் கலந்து தரேன் கொண்டு போய் கொடுத்துட்டு, குளிச்சு கிளம்பி வா, டிபன் பேக் பண்ணி வைக்கிறேன்” என்றார் சாவித்ரி 

“தேவையில்லை” என்றாள் முகத்தில் அடித்தாற் போன்று,

சாவித்ரி முகம் மாறவில்லை அதே சிரிப்புடன் நிவேதாவை பார்த்தவர் “மேடம்க்கு இன்னும் என் மேல்ல கோவம் குறையலை போல” என கேட்டார்..

“சிலிண்டர் மாத்தனும் ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதா? வேற கதை வேண்டாம்” என்றாள் கோவமாக முகத்தை வைத்து கொண்டு,

“ராங்கி” என திட்டிய சாவித்ரி “ராம்” என அழைக்க,

“அவன் வேண்டாம்” என்றாள்.. 

“என் மேல்ல தான் கோவம் அவன் மேலேயுமா”,

“நேத்து வரை கோவம் மட்டும் தான் இருந்துச்சு.. நேத்து அவன் பண்ண ஒரு விஷயம் கேள்விபட்டதிலிருந்து கோவம் கொலை வெறியா மாறிட்டு அதனால் அவன் வேண்டாம்” என்றாள்..

“அப்புடி என்னடி பண்ணுனான் என் பையன்” சாவித்ரி கேட்க,

“ம்… சொல்ல முடியாது அதை அவன்கிட்டயே கேளுங்க.. நான் உங்க மேல்ல கோவமா இருக்கேன்.. சீக்கிரமா மாமாவை அனுப்பி விடுங்க.. எனக்கு லேட்டாகுது” என்று சொல்லி விட்டு கிளம்பி விட,

“சரியான திமிர்பிடிச்சவ” என நிவியை செல்லமாக திட்டிய சாவித்ரி, “என்னடா என்னவோ பண்ணிட்டன்னு சொல்றா, அப்புடி என்ன பண்ணு” என சமையலறையில் இருந்த ஜன்னல் வழியாக ஹாலில் நின்று இருந்த ராமிடம் விசாரிக்க,

ராம்க்கு தான் தூக்கிவாரி போட்டது.. பெற்றவரிடம் சொல்லவா முடியும்.. கல்யாணம் பண்ணாமலே அப்பாவாகிட்டேன் என்று, அதனால் திருதிருவென முழித்தவன், சாவித்ரி அவனை குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்து, 

“அவளுக்கு வேற வேலை என்ன? எப்ப பாரு யாரை மேலேயாவது கோபப்பட வேண்டியது.. இப்ப உங்க மேல்ல கூட கோவமா தானே இருக்கா, அந்த கோவத்தில் கொஞ்சமாவது நியாயம் இருக்கா.. அவ சொல்றான்னு என்னை கேள்வி கேட்கிறீங்க”

“கண்டிப்பா நியாயம் இருக்கு” என்றார் கணேசன் ராமின் தந்தை.. “உன் அம்மா பண்ணுன வேலைக்கு கண்டிப்பா கோவிச்சுக்கனும்.. என் நிவிக்குட்டி கோவம் எப்பவும் நியாயமா மட்டும் தான் இருக்கும்.. நீயும் ஏதோ வேலை பண்ணி இருப்ப அதான் கோவமா இருக்கா, அது என்னன்னு தெரியாமையா போய்டும் பார்த்துக்கலாம்” என்று ராமை பார்த்து பேசியவர் இப்போது செய்தி சேனலை பார்க்க ஆரம்பிக்க,

கணவரை முறைத்த சாவித்ரி, “போங்க போய் உங்க குட்டிக்கு போய் சிலிண்டர் மாற்றி கொடுத்துட்டு வாங்க” என்றார் சின்ன முறைப்புடன்,

கேரட் பீன்ஸ் வெங்காயம் என வெஜிடபிள் புலாவ்க்கு காய்கறிகளை வேகமாக நிவேதா நறுக்கி கொண்டு இருக்க, யாரோ வரும் அரவம், மாமா தான் இருப்பாங்கன்னு நினைத்து நிமிர வந்தது வம்சி..

அவனை பார்த்து அதிர்ச்சியானவள் “நீங்க எப்புடி? பர்ஸ்ட் வெளியே போங்க.. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.. மாமா வேற வருவாங்க” என பதற,

உன் மாமா தான்டி அனுப்பி  வச்சதே தள்ளு என அவளை நகர்த்தி விட்டு காலி சிலிண்டரை அப்புறபடுத்தி விட்டு வேற சிலிண்டரை மாற்றி கொடுத்தான்.. 

தான் சென்ற சமயம் இவனும் ராம் வீட்டில் தான் இருந்திருப்பான் போல நிவேதா நினைக்க..

“எஸ் அங்க தான் இருந்தேன்.. கிளம்புன உன் மாமாவை சமாளிச்சு உட்கார வச்சிட்டு வரதுக்குள்ள ரொம்ப கஷ்டம்ப்பா” என சலித்து கொண்டான்..

“உங்களை நான் வர சொல்லவே இல்லையே ஏன் வந்தீங்க?” 

“நீ கேட்காமலேயே உதவி பண்ணனும் அது தானே நல்ல புருஷனுக்கு லட்சணம் ப்ரியத்தம்மா” என்றான் கண்ணடித்து,

அதில் விழ துடித்த மனதை இறுக பிடித்தவள், “வந்த வேலை முடிஞ்சுது இல்ல கிளம்புங்க ரொம்ப தாங்க்ஸ்” என்றாள்..

“என்னடி வேறு தாங்க்ஸ் மட்டும் தானா வேற எதுவும் இல்லையா” என அவள் முகத்தை அழுத்தமாக பார்த்தபடி கேட்டவனை நிவேதா முறைக்க,

“நான் காபி தண்ணி எதுவும் இல்லையான்னு தான்டி கேட்டேன் உன் மைண்ட் தான் டர்ட்டி தப்பு தப்பா யோசிக்குது” என்றான் உதடு கடித்து சிரிப்பை அடக்கியபடி,

மறுபடியும் அவனை முறைத்தவள் ஒரு அடுப்பில் பாலை ஏற்றி கொதிக்க வைத்தாள்..  பால் கொதித்ததும் கப்பில் ஊற்றி காபி பொடி சர்க்கரை எல்லாம் கலக்க, வம்சி அதை வாங்க கையை நீட்ட, 

அவளோ அதை கண்டுக்காது காபியை பருக ஆரம்பித்தாள்..

“எனக்கு இல்லையாடி”,

“உங்களுக்கு வேணும்னா உங்க வீட்டுல போய் குடிங்க.. இல்லைன்னா காலணி பக்கத்தில் ஒரு டீ கடை இருக்கும் அங்க போய் குடிங்க” என அலட்சியமாக பதிலளித்து விட்டு காபி கப்பை உதட்டுக்கு அருகே கொண்டு செல்ல,

அவளிடம் இருந்து கப்பை பிடுங்கிய வம்சி குடிக்க ஆரம்பித்தான்..

“ஐய்ய ச்சீ என் எச்சி” என நிவேதா முகம் சுளிக்க,

“உன் எச்சி எனக்கு என்ன புதுசாடி” என கேட்டான் அவளின் இதழை பார்த்தப்படி,

‘கடன்காரன் கடன்காரன் காலங்காத்தால எப்புடி கவுச்சியா பேசுறான் பாரு’ மனதுக்குள் திட்டியவள், அவனிடம் மறுபடியும் பேசினாளோ இல்லை பார்த்தலோ பழையதை பேசி பழைய நினைவுகளை கிளப்பி விடுவான் என அதை தவிர்க்க அவனை பார்ப்பதையும் பேசுவதையும் நிறுத்தி விட்டு வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள்..

அவளின் நிலை புரிந்தவன் மெலிதாக சிரித்தான்.. பின்பு “அத்தம்மா இன்னும் எழும்பலையா”, நிவேதா அம்மா காவேரியை பற்றி விசாரித்தான்.. “நைட் எல்லாம் தூங்கலை.. இப்ப தான் விடியுற நேரம் தூங்க ஆரம்பிச்சு இருக்காங்க” என்றாள்.. 

“சாவித்ரி ஆன்டி கிட்ட என்ன பிரச்சினை உனக்கு, பெரியவங்க கிட்ட அப்புடி தான் முகத்தில் அடித்த போல பேசுவாங்களா” காபி பருகிய படி கேட்க..

“காபியை குடிச்சிட்டா கிளம்புங்க தேவையில்லாதது எல்லாம் பேச வேணாம்.. அவங்க என் அத்தை  எப்புடி வேணா பேசுவேன்” என்று எகிற, வம்சி முறைத்தான் 

அதில் பயந்தவள் “அந்த ஆளை பார்க்க அம்மாவை அழைச்சிட்டு போய் இருக்காங்க.. அவனை பார்த்திலிருந்து அம்மா பழைய போல தொண்டை அடைத்தது சரி செய்து கொண்டு,  இரண்டு தூக்க மாத்திரை போட்டு கூட தூங்கலை அவங்க, ரொம்ப கஷ்டப்படுறாங்க எனக்கு கோவம் வர தானே செய்யும்” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி,

“ஆன்டி ஏதோ நல்லது நினைச்சு செய்து இருப்பாங்க.. ஆனா இப்புடியாகும்னு நினைச்சு இருக்க மாட்டாங்கடி” என்ற வம்சியின் பேச்சை கை நீட்டி தடுத்தவள்,

“தெரியும் அவங்க எங்களுக்கு நல்லது தான் செய்ய நினைப்பாங்கன்னு, ஆனா இது நல்லது கிடையாதே வம்சி.. அம்மாக்கு  இந்த நாலு வருஷத்தில் எவ்வளவு வேதனை கஷ்டம், இப்பவுமே அவங்களா சரியா சாப்பிடாம தூங்காம அந்த துரோகத்தை தாங்க முடியாமா, அதை கடந்தும் வர முடியாமா ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க.. அது சாவித்ரி அத்தைக்கும் தெரியுமே, அப்புறம் ஏன் இப்புடி பண்ணாங்க வம்சி” என கேட்டாள் தழுதழுத்த குரலிலீ அதிலே உடைந்து விட்டாள் என வம்சிக்கு புரிய,

“நிவி” என அருகே இருந்தவளின் கையை ஆறுதலாக பிடிக்க, அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் இன்னுமே அழுகை அதிகமானது.. கடந்த காலத்தில் நடந்ததை  நினைத்து, அதனால் அவள் அன்னை படும் வேதனையை நினைத்து, நிவேதா என்ன தான் வெளியே சிரித்து கலாட்டா செய்தாலும், அவளுக்குள்ளும் கவலையும் கஷ்டமும் இருக்க தான் செய்கிறது.. பெரும்பாலும் வெளியே அதை அவள் காட்டி கொள்வதில்லை.. அவளை சுற்றி உள்ளவர்கள் ராம் விஷ்ணு  முடிந்தவரை அவளை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்பதால் அதை பற்றி பேசுவதில்லை..  

சும்மா இருந்தவளை பேசி பேசி இப்புடி அழ வைச்சிட்டியேடா என தன்னை கடிந்த வம்சி அவளை அணைத்து முதுகை தடவி “கண்ட்ரோல் பண்ணுடி அழாதடி” என ஆறுதல் படுத்த முயன்றான்.. 

“இப்புடி எல்லாம் நடந்து இருக்கவே வேண்டாம்.. ஏன் நடந்துச்சு? எல்லாம் சரியா இருந்திருந்தா நமக்குள்ளயும் பிரச்சினை வந்து இருக்காதுல்ல” அவனின் முகம் பார்த்து கேட்டாள்.. அவளின் அடி மனது எண்ணம் ஆசை அவளை மீறி வார்த்தைகளாய் வெளிப்பட்டது.. 

அதை கேட்டு மெலிதாக சிரித்த வம்சி அவள் கண்ணீரை துடைத்து விட்டவன்  “நீ மனசு வச்சா போதும்டி நமக்குள்ள எல்லாம் சரியாகிடும்” என்றான்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே நின்றனர்.. நான்கு விழிகளும் ஒன்றோடு ஒன்று கலந்தது‌. அவள் கன்னத்தை இரு கைகளால் தாங்கிய வம்சி நெற்றியில் இதழ் பதித்தான்.. நிவியின் விழிகள் தானாக மூட, மூடிய விழிகளுக்கும் முத்தம்.. அடுத்து கன்னம் மூக்கு என இதழ் நோக்கி வம்சியின் உதடு பயணிக்க, அடுப்பில் இருந்த குக்கர் சத்தம் போட்டது.. 

அந்த சத்தத்தில் தன்னிலை அடைந்த நிவி வம்சியை தள்ளி இரண்டடி தள்ளி நின்று அவனை முறைத்தாள்..

கத்துனது தான் கத்துன  ஒரு இரண்டு நிமிஷம் கழிச்சு கத்தி இருக்க கூடாதா முத்தம் பறி போன கவலையில் குக்கரை திட்டும் நிலை அவனுக்கு பாவம்,

என்னடி பண்ணி வச்சு இருக்க தன்னை தானே கடிந்தவள் “இதான் சாக்குன்னு வந்து ஒட்டிக்க வேணாம்” என வம்சியை திட்டினாள்..

“அடிப்பாவி கரெக்ட்டா சொல்லு ஒட்டிக்கிட்டது நானா இல்ல நீயா” என வம்சி கேட்க,

கடவுளே இவனோட என பல்லை கடித்தவள் “நீ முத வெளிய போயா காலங்காத்தால் வந்து இம்சை பண்ணிக்கிட்டு” என கத்த,

“ஓகே ஓகே கூல் கூல் இப்ப கிளம்புறேன்  நாளைக்கு வரேன்..

“நாளைக்கு எதுக்கு வருவ? வர கூடாது?” என்றாள் நிவேதா..

“கண்டிப்பா வருவேன்டி நாளைக்கு என் மாமியாரை ஹாஸ்பிடலுக்கு கவுன்சிலிங் அழைச்சிட்டு போற நாள் நான் வராமல் எப்புடி?”

வர தேவையில்லை.. நீ யார் என் அம்மாவை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போக, என் அம்மாவை பார்த்துக்க எனக்கு தெரியும்..  இத்தனை நாள் நீ தான் வந்து ஹாஸ்பிடல் கூப்பிட்டு போனியா? வந்துட்டான் புதுசா அக்கறை சர்க்கரைன்னு”  நிவேதா கோவப்பட,

“ஓ.. அது தான் பாவா மேல்ல கோவமா டா உனக்கு?”

“அதான் இப்ப வந்துட்டனே இனி பாவா நேனு குடும்பன்னி சூஸ்குண்டான்னு, நுவு சின்டின்சக்கு ப்ரியதம்மா”( மாமா நான் குடும்பத்தை பார்த்துக்கிறேன்.. நீ கவலைப்படாத டார்லிங்) என்றான் சிரித்தபடி,

“உன்னை” என அவனை அடிக்க ஏதாவது தேடியவள் கையில் தோசை கரண்டியை சிக்க எடுத்து திரும்பி   பார்க்க அவனை காணவில்லை.. 

கரண்டியை எடுத்த இடத்தில் வைத்து விட்டாள்..

“புருசனை அடிச்சா பாவம் வந்து சேரும் டி பெரியவங்க சொல்லி இருக்காங்க”.. வாசல் பக்கம் இருந்து சத்தம் வந்தது.. கதவை தன்னை மறைத்தபடி தலையை மட்டும் நீட்டியபடி வம்சி தான்..

“நான் பாவியாவே இருந்திட்டு போறேன்டா” என்றவள் கரண்டியை எடுத்து வீச, குறியும் தப்பி விட்டது.. வம்சியும் ஓடி விட்டான்…

“இம்சை” முணுமுணுத்த நிவிக்கு ஒன்று புரிந்தது.. இத்தனை நாள் போல் வம்சி இனி அமைதியாக இருக்க போவதில்லை என்று,

என்ன செய்வது அவளுக்கு தெரியவில்லை.. அவளுக்கு இந்த காதல் கல்யாணம் வேண்டாம்.. அதை செய்து கொண்டு தன் முன்னே தான் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள்.. காதல் மகிழ்ச்சியை மட்டுமா கொடுக்கிறது.. கூடவே வலியும் வேதனையும் அல்லவா தருகின்றது.. அது தனக்கு வேண்டாம்.. அதோடு அவளுக்கு அவள் அம்மாவையும் பார்த்து கொள்ள வேண்டும்.. அவரை தனியே விட்டு செல்ல முடியாது.. அதனால் எதுவுமே வேண்டாம்.. 

வம்சி தன்னை நெருங்க விடாது விலக்கி வைக்க வேண்டும்.. அப்புடி அவன் நெருங்கினாள் இவள் நிலை என்னவென்று தான் அவளுக்கு அடிக்கடி நிருப்பிக்கின்றானே, எப்புடி அவனிடமிருந்து தப்பிக்க தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்.. பதின்பருவத்தில் அவன் மேல் உதித்த காதல், அந்த காதலை கல்யாண பந்தமாகவும் மாற்றி கொண்டு விலகி விடு என்றால் விலகுவானா வம்சி?

வம்சி நிவி வீட்டிலிருந்து வெளியே வர, “என்ன கால்ல விழுந்து எழுந்துச்சா தன் வீட்டு வாசலில் பைக் அருகே நின்று இருந்த ராம் நக்கலடித்தான்.. என்ன விழுந்தும்  இரக்கம் இல்லாம வீட்டை விட்டு துரத்தி விட்டு இருப்பாளே” என ராம் சிரிக்க,

“நேரம் டா” என்றான் வம்சி, அப்போது ராம் போன் ஒலிக்க எடுத்த பார்த்த ராமின் முகம் மாறியது.. பயப்படவும் செய்தான்.. 

வம்சி எட்டி அழைத்தது யார் என பார்க்க, ராம்லீலா என்ற பெயர் சேவ் செய்யப்பட்டு இருக்க, அது லீலா அழைப்பு என்பது புரிந்தது வம்சிக்கு,

“ஓ… அப்புடியா விசயம் ராம்லீலா ம்.. பேஸ் பேஸ், மச்சான் இப்ப உன் டெர்ன் போ போ போய் கால்ல விழு” என்றான் வம்சி கேலியாக, அவன் முதுகில் அடித்த  ராம் வண்டியில் ஏறி கிளம்பினான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 55

No votes so far! Be the first to rate this post.

1 thought on “Mr and Mrs விஷ்ணு 58”

  1. Intresting epiiiii……
    Hi sis pratilipi la nxt epiii upload panungaaaa sissss waiting…….. ❤️❤️❤️❤️❤️❤️

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!