Mr and Mrs விஷ்ணு 60

4.6
(42)

பாகம் 60

அன்றே விஷ்ணுவை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என மருத்துவர் இந்திரா கூறி விட விஷ்ணு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.. வீட்டிற்கு வந்தவளை அமர வைத்து அப்புடி நடந்துக்கனும் இப்புடி நடக்க கூடாது.. இதை செய்ய கூடாது.. ஒரு பக்கமா தான் படுக்கனும், வேகமா நடக்க கூடாது என தேவகி, அவள் அம்மா கல்யாணி, பாட்டி என ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பிடித்து அவளுக்கு ஆயிரத்தெட்டு அறிவுரை..

விஷ்ணுவோ ப்ரதாப்பிடம் பேச காத்திருக்க இவங்க வேற விட மாட்றாங்கப்பா என சலிப்பு வந்தது அவளுக்கு,

ஒருவழியாக இரவு சாப்பிட்டு அறைக்குள் விஷ்ணு காத்திருக்க, அவள் கண்ணாளனும் வந்து சேர்ந்தான்.. வந்தவன் அவள் இரவு சாப்பிட வேண்டிய மாத்திரையை நீட்டினான்.. இதுவரை அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை ஏன் முகம் கூட பார்க்கவில்லை அவன்.. விஷ்ணுவிற்கு வருத்தமாக இருந்தது..

அவன் கையை மாத்திரைகளோடு பற்றி கொண்டவள், “சாரிங்க நான் தெரியாம பேசிட்டேன்.. என்னை திட்டுங்க ஏன் அடிக்க கூட செய்க இப்புடி பேசாமா இருக்காதீங்க, கஷ்டமா இருக்கு என்றாள் கலங்கிய கண்களோடு,

தன் கையை அவளிடமிருந்து உருவியவன் மெத்தையின் அருகே இருந்த டேபிளின் மீது மாத்திரையும் வாட்டர் பாட்டிலையும் வைத்து விட்டு எதுவும் பேசாது மெத்தையின் அடுத்த பக்கம் சென்று படுத்து கொண்டான்..

“இப்புடி பண்ணாதீங்க ப்ளீஸ் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்றாள் கண்ணில் வழிந்த நீரை துடைத்தபடி, ப்ரதாப்போ அவள் புறம் திரும்பவேயில்லை.. அவனின் நடவடிக்கை விஷ்ணுவை வருத்தியது.. அவள் மீது தான் தவறு என்றாலும் ப்ரதாப்பின் இந்த விலகல் அவளை மிகவும் வருந்தியது..

திருமணமான புதிது கூட சரியாக பேச மாட்டான் தான்.. ஆனால் விஷ்ணு தன் வீட்டிலிருந்து திரும்ப இங்கு வந்த நாளிலிருந்து அவன் பேசிய பேச்சுகள் வாசுகி மேடம் என சீண்டுவது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.. அதை அவ்வளவு ரசித்து இருக்கிறாள்.. இது எல்லாம் இனி எப்போதோ பெருமூச்சு ஒன்றை விட்டவள் ப்ரதாப் கொடுத்த மாத்திரையை விழுங்கி விட்டு படுத்து கொண்டாள்..

ப்ரதாப்பிற்கோ இன்னும் அவள் மீது கோவம் இருக்கின்றது.. இந்த நேரத்தில் பேசி ஏதும் வாய் விட்டு விட கூடாது என்பதால் அமைதியாக இருந்தான்.. அதே நேரம் இத்தனையும் செய்துட்டு வந்து பேசுன்னா பேசனுமா முடியாது போடி என் பேபிக்காக மட்டும் தான் உன்கூட இருக்கேன் என்ற பிடிவாதமும் அவனுக்கு இருந்தது..

அடுத்த நாள் விஷ்ணு எழும்போது அவன் இல்லை அலுவலகம் கிளம்பி இருந்தான்.. ம்பச் என்று சலித்துக் கொண்டவள்

எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு ப்ரதாப்பை எப்புடி சமாதானம் பண்ணுவது என யோசித்து கொண்டு இருக்க, அப்போது அவளைப் பார்க்க நிவி வந்து இருந்தாள்..

அவளுக்கு நேற்றிரவு விஷயம் கேள்விப்பட்டதும் பயங்கர மகிழ்ச்சி.. விஷ்ணுவை உடனே பார்க்க வேண்டும் என தோன்றியது.. இப்போதைக்கு அவள் அலுவலகத்திற்கும் வர மாட்டாள்.. ப்ரதாப் வீட்டிற்கு சென்று பார்க்க அவளுக்கு பிடிக்கவில்லை.. அங்கு வம்சி இருப்பான் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்ல.. விசாலாட்சி இருப்பாரே அவர் எப்போதும் நிவேதாவையும் சரி அவள் அம்மா காவேரியையும் சரி கீழாக தான் பார்ப்பார்.. அது நிவேதாவிற்கு பிடிக்காது.‌ அதோடு கோபத்தையும் கொடுக்கும்.. இது எல்லாம் தேவையா என்ற யோசனை எழுந்தாலும், அதை விட விஷ்ணுவையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்க இதோ அலுவலகம் செல்லும் முன்பு வந்து விட்டாள்..

விஷ்ணு நலத்தை விசாரித்து விட்டு “சார் கூட சமாதானமாகிட்டாயா” என நிவேதா அக்கறையாக கேட்க..

“ம்பச் அதை ஏன்டி கேட்கிற முகத்தை தூக்கி வச்சிட்டு பேசவே மாட்டேங்கிறார்.‌ நானும் ஏகப்பட்ட தடவை மன்னிப்பு கேட்டுட்டேன்.. மனுஷன் இறங்கியே வர மாட்டேங்கிறார்.. என்ன பண்றதுன்னு தெரியலை நிவி.. அவர் அப்புடி என்னோட பேசாம இருக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்குடி” என விஷ்ணு கவலைப்பட்டாள்..

அதை பார்த்த நிவேதாவிற்கும் கஷ்டமாக தான் இருந்தது.. எப்புடி சந்தோஷமா இருந்த பொண்ணு இந்த கல்யாணத்தையும் காதலையும் பண்ணிட்டு எவ்ளோ கஷ்டப்படுறா என்ற எண்ணம் தான் ஓடியது.. “ஏதோ தெரியாம பேசிட்ட, இந்த சின்ன விஷயத்திற்கு சார் இவ்வளோ கோவமா, அநியாயமா இருக்குடா” என்றாள்..

“அநியாயம் எல்லாம் இல்லை.. தப்பு பண்ணாதவங்களுக்கு வர நியாயமான கோவம் தான்” என்றாள் விஷ்ணு..

“அது சரி புருஷனுக்கு சப்போர்ட்டா, இதுக்கு தான் இந்த மாதிரி கல்யாணமான ஆன்டிங்க கூட எல்லாம் சேர் கூடாதுங்கிறது”..

“யாரை பார்த்துடி ஆன்டி சொல்லுற” விஷ்ணு கோவப்பட,

“உன்னை தான் கல்யாணமானலே இப்ப எல்லாம் ஆன்டி தான்.. குழந்தையே பிறக்க போகுது அப்ப உன்னை ஆன்டி சொல்லாம வேற என்ன சொல்லுவாங்க” என்றதும்

“போடி எருமை எருமை

இன்னும் கொஞ்ச நாள் தான் அப்புறம் உனக்கும் கல்யாணமாகும் குழந்தை பிறக்கும்.. அப்ப நானும் உன்னை ஆன்டி சொல்லுவேன் பாருடி” என்றாள்..

“ஹா ஹா கல்யாணம் குழந்தை அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை.. நான் எப்பவும் சிங்கிள் கேர்ள் தான்.. நீ ஆன்டி தான்” என நிவி சிரிக்க.. எருமை என்ற விஷ்ணு அங்கிருந்த தலையணையை தூக்கி அவள் மீது எறிந்தாள்..

அது அங்கு வந்த வம்சி மீது பட்டது.. “என்ன பஞ்சாயத்து” என கேட்டபடி வந்தான்..

வம்சியை பார்த்ததுமே நிவேதா வாய் மூடி கொண்டது..

“பாருங்க வம்சி என்னை பார்த்து கல்யாணமாகிட்டு குழந்தை பிறக்க போகுது நீ ஆன்டி சொல்றா?” விஷ்ணு சிணுங்க..

“ஓ.. கல்யாணமான ஆன்டியா?” வம்சி சந்தேகமாக கேட்க..

“அப்புடி தான் சொல்றா வம்சி இவளுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைக்கனும்.. ப்ரெக்னன்ட் ஆன டைம் நானும் இவளை பார்த்து ஆன்டி சொல்லனும்” விஷ்ணு சொல்ல..

“மாசமா இருக்க பொண்ணு ஆசைப்படற, சீக்கிரமே நிறைவேத்துறேன்” என வம்சி சொன்னதின் அர்த்தம் புரியாத விஷ்ணு சிரித்தாள்… நிவியோ விஷ்ணு அறியாத நேரம் அவனை முறைக்க, அவனோ கண்ணடித்தான்..

வம்சி மீது எழுந்த கோவத்தை அடக்கி கொண்ட நிவி, “சரிடா நான் கிளம்புறேன்” என்றாள்..

“என்ன கோவமா? விளையாட்டுக்குடி” என விஷ்ணு சமாதானம் செய்தாள்.. நிவி கோவத்தில் தான் கிளம்புகிறாளோ என எண்ணி,

“அட அது எல்லாம் இல்லைடா.. ஆபிஸ்க்கு டைம்மாச்சு, லேட்டா போய் உன் வீட்டுக்கார்க்கிட்ட யார் திட்டு வாங்கிறது அதான், நான் கிளம்புறேன் உடம்பை பார்த்துக்கோ, நல்லா சாப்பிடு”, என்ற நிவி விஷ்ணுவை ஒருமுறை அணைத்து விட்டு வம்சியை முறைத்து விட்டு வெளியேறினாள்..

“இந்தா இதில் ஒரு சைன் பண்ணு”என பேப்பர்சை வம்சி நீட்ட,

“என்ன இது”? விஷ்ணு கேட்டாள்..

“தெரியலைம்மா உன் ஆத்துக்காரர் தான் ஆபிஸ் போக முன்னாடி என்கிட்ட கொடுத்து சைன் வாங்கிட்டு வர சொன்னார்” என்றான் வம்சி..

“ஏன் ஆபிஸ் கிளம்புற வரை இந்த ரூமில் தானே இருந்தார்.. அவரே என்கிட்ட கொடுக்க மாட்டாராம்.. இடையில் நீங்க எதுக்கு” கோவப்பட்டாள் விஷ்ணு..

இதை தானே வம்சி மும் கொஞ்ச நேரம் முன்னாடி அண்ணன்காரனிடம் கேட்டு அவன் முறைப்பை சொல்றதை செய் என்ற திட்டையும் வாங்கி கட்டி கொண்டான்.. இப்போது விஷ்ணு கோவப்படுகிறாள்..

‘அச்சோ இதுங்க சண்டையில் நம்மளை போட்டு படுத்துங்களே’ நொந்து கொண்டான் வம்சி..

“சைன் எல்லாம் பண்ண முடியாது.. அவரை வந்து கொடுக்க சொல்லுங்க அப்ப தான் சைன் பண்ணுவேன்” என்றாள்..

“யம்மா தாயே அதை நீயே சொல்லிட்டு,புருஷன் பொண்டாட்டி உங்க சண்டையில் என் மண்டையை உருட்டாதீங்க.. உங்க பிரச்சினையை நீங்க பாருங்க.. எனக்குன்னு இருக்க என் பிரச்சினை பின்னாடி நான் போறேன்” என்ற வம்சியும் வெளியேறினான்..

“யோவ் முசுடு ஏதோ சின்ன பொண்ணு தெரியாம பேசிட்டா, மன்னிப்போம் மறப்போம்ன்னு பெரிய மனுஷனா நடக்காம ரொம்பத்தான்யா பண்றா” என சலித்து கொண்டாள் விஷ்ணு..

“ஓய் நில்லு” என்றபடி நிவி முன்பு வந்து நின்ற வம்சி “எப்ப இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்” என கேட்டான்..

நிவி என்ன பேசுகிறான் என புரியாது அவனை பார்த்தாள்..

“இங்க பாரு எங்க பாட்டி சொல்லி இருக்காங்க.. மாசமா இருக்க பொண்ணு ஏதாவது ஆசைப்பட்டா, அதை உடனே நடத்தி கொடுக்கனுமா இல்லைன்னா பிறக்கிற குழந்தை காதில் சீல் வடியுமாம், உனக்கு எப்புடியோப்பா ஆனா எனக்கு என் அண்ணா குழந்தை ஆரோக்கியத்து மேல்ல ரொம்ப அக்கறை, அதனால் ப்ரியா என்ன சொன்ன போல கல்யாணம் அதான் பண்ணியாச்சே, அதற்கு அடுத்து குழந்தை,அந்த ப்ராஸசஸ் எப்ப ஸ்டார்ட் பண்ணலாம் கேட்கிறேன்” என கண் அடித்து கேட்க..

அவனை தீயாய் முறைத்தவள் கோவமாக பேச வாயெடுக்க அதற்குள் அங்கு வந்த ப்ரதாப் அப்பா வெங்கடேஷ் “நிவேதா எப்புடி மா இருக்க?, உங்கம்மா எப்புடி இருக்காங்க?”என கேட்டார்..

“நல்லா இருக்கேன் அம்மாவும் நல்லா இருக்காங்க சார்” என்றாள்..

“ப்ரியாவை பார்க்க வந்தியா?* என அவர் கேட்க, “ஆமா சார் ஆபிஸ்க்கு டைம்மாச்சு கிளம்புறேன்” என்றதும் வெங்கடேஷும் சரி என்பது போல் தலையசைத்தார்..

நிவேதா மாடியிலிருந்து கீழ் இறங்க எதிரே விசாலாட்சி, விசாலாட்சி நிவேதாவை பார்த்த பார்வை ஏதோ காண கூடாத, தீண்ட தகாத ஒரு பொருளை பார்ப்பது போன்று இருந்தது.. அது நிவேதாவுக்கு கோவத்தை கொடுத்தது.. வம்சிக்கும் தாயின் பார்வை கோவத்தை தான் கொடுத்தது…

நிவேதாவுக்கு விசாலாட்சியை இப்புடியே விட்டு செல்ல மனமில்லை.. அதனால் அருகே நின்ற வம்சி புறம் திரும்பி “பாய் வம்சி” ஆபிஸில் பார்க்கலாம் என சிரித்தபடி சொல்லியதோடு அல்லாமல் தோளை வேண்டுமென்றே இடித்து கொண்டு செல்ல, விசாலாட்சிக்கு அங்கு எரிந்தது.. இப்போது அவளை ஒன்றும் சொல்ல முடியாதே, ப்ரதுப் அப்பா நிற்பதால் மட்டுமில்லை.. ஏற்கெனவே நிவேதாவையும் அவள் அம்மா காவேரியையும் கேலி செய்வது போல் பேசி அதுக்கு நிவேதாவிடம் நன்றாக வாங்கி கட்டி இருக்கிறார்..

அதனால் அமைதியாக அவளை முறைக்க, விசாலாட்சியை டென்ஷன் படுத்திய திருப்தியில் நிவேதாவும் அங்கிருந்து சென்றாள்..

“வம்சி அந்த பொண்ணுக்கிட்ட உனக்கு என்ன பேச்சு? இனிமே அவகிட்ட பேசாத” என்றார் விசாலாட்சி.. அவர் ஏன் அப்புடி சொல்கிறார் என்ற காரணம் தெரிந்த வம்சிக்கு கோவம் வந்தது..

“ஏன் பேச கூடாது?” என கேட்டான் கோவத்தை அடக்கி கொண்டு,

“அவ குடும்பம் சரி கிடையாதுடா.. அவ அப்பா கதை உனக்கு தெரியாதா என்ன?” விசாலாட்சி கேட்க

அவரை முறைத்தவன், “அவ அப்பா பண்ணுனதுக்கு அவ என்ன பண்ணுவா? இனிமே இப்புடி பேசாதீங்க.. இப்ப பார்த்தீங்களே அந்த மாதிரி பார்க்கவும் செய்யாதீங்க.. குடும்பத்துக்குள்ள நல்லா இருக்காது” என்ற வம்சி அங்கிருந்து சென்றான்.. விசாலாட்சிக்கு தான் அவன் கோவம் எதுக்கு என புரியாது நின்று இருந்தார்…

வி.வி. கன்ஸ்ட்ரக்சன் ப்ரதாப் தனது இருக்கையில் அமர்ந்து இருக்க எதிரே ராம் நின்று இருந்தான்.. அவன் அருகே வம்சி..

போச்சு போச்சு இவன் பண்ணுன வேலைக்கு அண்ணா என்ன சொல்லி திட்ட போறாரோ வம்சிக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.. ப்ரதாப்பிற்கு ஒழுக்கம் தவறிய செயல் பிடிக்காது.. அதனால் ராமை என்ன பண்ண போறாரோ என்ற பயத்தோடு வம்சி நின்று இருந்தான்..

“சார் சாரி என்னால தான் ப்ரியா உங்களை” என்ற ராமை கை நீட்டி தடுத்த ப்ரதாப்..

“அடுத்து நீ என்ன பண்றதா இருக்க” ராம் என கேட்டான்..

“லீலாவை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு” தயங்கியபடி சொன்னான்..

அவனை முறைத்த ப்ரதாப் “எதையும் அவசரப்பட்டு லீலா கர்ப்பமா இருக்கிறதாலையோ இல்ல குற்ற உணர்விலோ எமோஷனாலா எடுக்க கூடாது ராம்.. இது வாழ்க்கை நல்லா யோசிச்சு”,

“சார் குழந்தைக்காவோ குற்ற உணர்விலோ லீலாவை கல்யாணம் பண்ண நினைக்கலை.. லீலா மேல்ல இருக்க காதலுக்காக, இப்ப மட்டும் இல்லை வாழ்க்கை முழுக்க இதே காதலோடு அவளை சந்தோஷமா பார்த்துக்குவேன் சார்” என்றான்..

ராமை நிமிர்ந்த பார்த்தான் ப்ரதாப்.. அவன் மீது ப்ரதாப்புக்கு கோவம் மித மிஞ்சிய கோவம் இருந்தது.. அப்புடி ஒரு தப்பை சொத்து விட்டானே என, இரூந்தும் தப்பை நிச்சயம் சரி செய்வான் என்று நம்பிக்கை அதை விட இருந்தது.. இதோ நிருபித்து விட்டான்.. இதை தான் சொல்லுவான் என்று தெரியும்.. இருந்தாலும் தெளிவுப்படுத்தி கொள்ள தான் கேட்டது.. ராம்க்காக மட்டுமே சாலா ப்ரியாவிடம் லீலாவோடு தன்னை இணைத்து பேசியதற்காக அவரை விட்டு வைத்து இருக்கின்றான்..

வம்சிக்கோ இங்க என்னடா நடக்குது என்ற குழப்பம் தான்.. தன் அண்ணா கோவப்படவில்லை என்பது முதல் அதிர்ச்சி என்றால், இவர்கள் பேசியதை வைத்து ராம் விஷயம் முன்னவே தெரியும் போல அல்லவா தெரிக்கின்றது.. அவன் இருவரையும் அமைதியாக பார்த்து கொண்டு இருக்க,

ராம் போன் இசைத்தது.. பார்த்தால் லீலா அழைத்து இருந்தாள்..

எஸ்கீயூஸ் மீ சார் என்ற ராம் சற்று தள்ளி சென்று அழைப்பை ஏற்க,

மறுமுனையில் லீலா என்ன சொன்னாளோ இங்கு ராம் “லீலா ப்ளீஸ் வேண்டாம்” என பதறியது.. ப்ரதாப் வம்சி இருவருக்கும் கேட்டது.. “லீலா லீலா” என இங்கு ராம் கத்த போன் வைக்க பட்டு விட்டது போல, ச்சே கண்ணை மூடி பெருமூச்சு விட்டு ஆசுவாசப்படுத்தி கொண்டவன்,

“சார் ஒரு ஒன் ஹவர்”

“இன்னைக்கு லீவ் எடுத்துக்கோ கிளம்பு ராம்” என்றான் ப்ரதாப் அவன் சூழ்நிலை அறிந்து, “தாங்க் யூ சார்” என்ற ராம் அவசரமாக அங்கிருந்து ஓடினான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 42

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!