Mr and Mrs விஷ்ணு 61

4.8
(42)

பாகம் 61

லீலா ஒற்றை கையால் தலையை பிடித்தபடி கண்மூடி அமர்ந்து இருந்தாள்.. தலையே வெடித்து விடும் அளவுக்கு உள்ளுக்குள் அவ்வளவு போராட்டமும் குழப்பமும் இருக்கின்றது.. அது சிட்டியை தாண்டி அமைந்துள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனை.. அங்கு தான் வந்து இருக்கின்றாள்.. சிட்டிக்குள் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று தெரிந்தவர்கள் பார்த்து வீட்டிற்கு சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற பயம்..

ராம்க்கு அழைத்து ஹாஸ்பிடல் பெயரை சொல்லி அழைத்தாள்.. ராமோ லீலா ப்ளீஸ் வேண்டாம் நா.. என தொடங்க “வரீங்க” அவ்ளோ தான் என்பதோடு போனை வைத்து விட்டாள்..

குழந்தை வேண்டாம் கலைக்க வேண்டும் என்ற முடிவோடு தான் வந்தாள்.. ஆனால் இங்கு வந்த பின் இன்னும் கொஞ்சம் நேரம் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ண முடியவில்லை.‌ அவளும் பெண் தானே அவளுக்குள்ளும் தாய்மை இருக்கின்றதே, தனக்குள் துளிர் விட்டு உயிரை கலைக்க வேண்டிய இந்த சூழ்நிலையை நினைக்க நினைக்க நெஞ்சே வலித்தது..

கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்க பொது இடம் என்பதால் அடக்கி கொண்டு அமர்ந்து இருந்தாள்.. காதலில் கசிந்துருகி இந்நிலைக்கு வந்து இருந்தால் கூட பரவாயில்லை.. ஆனால் இங்கோ நிலைமை வேறு அல்லவா, இந்நிலைக்கு தள்ளிய ராம் மீது பயங்கர கோவம் வந்தது.. ராம் மட்டும் தான் இந்த நிலைக்கு காரணமா மனசாட்சி கேள்வி எழுப்ப, கூசி போனது அவளுக்கு அந்த கேள்வியில்,

அன்று சாலா உனக்கு சிங்கப்பூர்க்கு டிக்கெட் போட்டு இருக்கேன் ஒன் வீக் போய்டு வா லில்லி என சொன்ன போது, ஹப்பா கொஞ்ச நாள் இந்த பிரச்சினைகளிலிருந்து அம்மா திட்டிலிருந்து தப்பித்தோம் என நினைத்து சந்தோஷமாக கிளம்பினாள்.. அந்த சந்தோஷம் சிங்கப்பூர் சென்று இறங்கிய சில மணி நேரம் தான் நிலைத்தது.. அவள் சிங்கப்பூர் சென்று தரை இறங்கும் போது இரவாகி விட்டது..

அறைக்கு சென்று குளித்து சாப்பிட்டுவிட்டு படுத்தாள்.. மறுநாள் காலை எழுந்து ஜாலியாக ஊர் சுற்றி பார்க்கலாம் என எண்ணி,

ஆனால் மறுநாள் காலை அவள் எழுந்த போதே சாலாவிடமிருந்து அழைப்பு, ப்ரதாப்பும் சிங்கப்பூர் வந்து இருப்பதாகவும், அதுவும் அவள் தங்கி இருக்கும் அதே ஹோட்டலில் தங்கி இருப்பதாகவும் கூறியவர், ப்ரதாப்பை போய் பார்த்து பேசுமாறும் முடிந்தால் அவனோடு ஒன்றாக ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிடுமாறும் கூறினார்..

லீலாவுக்கு இப்போது புரிந்தது அவள் அம்மா பாசமாக சிங்கப்பூர் அனுப்பியது எதுற்கு என, அதே நேரம் அம்மாவின் செயல் அசிங்கமாகவும் இருந்தது..

“அம்மா இது எல்லாம் எதற்கு வேண்டாமே லீலா தயங்க, நான் சொல்றதை செய் லில்லி” என ஒரே அதட்டு, லீலா அமைதியாகி விட்டாள்.. சின்ன பிள்ளையிலிருந்தே லீலா தாய் சொல்லை தட்டாமல் செய்வாள்.. அப்புடி செய்ய வில்லை என்றால் சாலா அடிக்க எல்லாம் மாட்டார்.. சின்ன குழந்தையான லீலாவிடம் பேசுவதை தவிர்த்து விடுவார்.. சாரிமா பேசுங்கம்மா என குழந்தை அழுது கூறினாலும் குறை பட்சம் ஒரு வாரத்திற்காவது பேசாமல் குழந்தையை தவிக்க விடுவார் சாலா.. அதற்கு பயந்தே குழந்தையிலிருந்தே சாலா என்ன சொன்னாலும் மறுக்காது செய்து பழகி விட்டாள் லீலா…

அவளின் வாழ்வின் அனைத்தும் முடிவும் படிப்பு, உடை, ஏன் சாப்பாடு விஷயம் கூட சாலாவால் மட்டுமே எடுக்கப்பட்டது.. லீலாவும் அம்மா தனக்கு நல்லதுக்கு மட்டுமே செய்வார் என அவரின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடந்து இருக்கிறாள்..

ஆனால் ப்ரதாப் விஷயம் ஆரம்பத்திலிருந்தே லீலாவுக்கு நெருடல் இருந்த போதும் செய்தாள்..‌இப்போது தான் விஷ்ணு ப்ரதாப் சேர்ந்த பின்பு நிம்மதியானாள்.. ஆனால் இப்போது மறுபடியும் சாலா செய்ய சொல்வது செய்ய பிடிக்கவில்லை.. மனம் வரவில்லை.. என்ன செய்ய என அப்புடியே யோசனையோடு சிறிது நேரம் அமர்ந்து இருக்க..

மீண்டும் சாலா அழைத்தார்.. அழைப்பை ஏற்றவள் அம்மா நீங்க சொன்ன போல ப்ரதாப் கிட்ட பேச போனேன்.. எப்பவும் போல அவங்க முகத்தை திருப்பிட்டு போய்ட்டாங்க பேசலை பொய் சொன்னாள்…

மறுமுனையில் இருந்த சாலாவோ “எப்ப இருந்து லில்லி என்கிட்ட நீ பொய் சொல்ல ஆரம்பிச்ச, நீ ரூம்மை விட்டு வெளியவே போகலை அது எனக்கு தெரியும்.. சீக்கிரமா ரூம்மை விட்டு கீழே ரெஸ்டாரன்ட் போ அங்க ப்ரதாப் இருக்கான்.. என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது அவனோட தான் சேர்ந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிடனும்” என்றதும் “அம்மா” லீலா தயங்க..

“முடியலைன்னா ஜஸ்ட் 5 மினிட்ஸ் அவன் டேபிளில் அமர்ந்து சாப்பிடுற போல நடி அது போதும்..

மறுபடியும் அங்க போகமலே என்கிட்ட பொய் சொல்லாத லில்லி நீ அங்க என்ன பண்ணினாலும் அது எனக்கு தெரிஞ்சிடும் பார்த்து நான் சொல்ற போல நடந்துக்கோ” என்று உத்தரவிட்டார் சாலா..

“தான் பொய் சொன்னது, ப்ரதாப் ரெஸ்டாரன்டில் இருப்பது, எப்புடி அம்மாவுக்கு தெரியுது.. ஒரு வேளை இந்த ஹோட்டலில் ஸ்பை வச்சு இருக்காங்களோ” தோன்றியது..

போகவில்லை என்றால் சாலா விடமாட்டார் என்பதால் அறையை விட்டு வெளியேறி ரெஸ்டாரன்ட் சென்றாள், அங்கு ப்ரதாப்பையும் பார்த்து விட்டாள்..‌ அவன் டேபிள் அருகே செல்ல, அவனோடு அமர்ந்து இருந்த ராமை பார்த்தவளுக்கு பக்கென்று இருந்தது.. இப்போது ப்ரதாப்பை விட ராம்க்கு தான் அதிகம் பயந்தாள்..

அவன் புறம் பார்வையை திருப்பாமல் ப்ரதாப்பை பார்த்து “ஹலோ சார்” என்றாள்

நிமிர்ந்து பார்த்தானே தவிர ப்ரதாப் பேசவில்லை.. மேற்கொண்டு பேச லீலாவுக்கு அசிங்கமாக தான் இருந்தது.. இருந்தாலும் வேறு வழியில்லையே,

“இங்க பிசினஸ் விஷயமா வந்தீங்களா, நான் சும்மா ஜாலி டீரிப்பா வந்து இருக்கேன்.. சாப்பிடாலாம் வந்தா நீங்க இங்க இருந்துங்க..

தெரிஞ்சவங்களை பார்த்ததுட்டு பேசாம கண்டுக்காத போல இருக்க முடியலை.. அதான் பேசலாம் வந்தேன்” என்றாள்.. ப்ரதாப்போ சரி எனும் விதமாக தலை அசைத்தான் அவ்வளவு தான் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை..

“உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லைன்னா நானும் இங்க இந்த டேபிளில் உங்களோட ஜாயின்ட் பண்ணிக்கலாமா.. தனியா உட்கார்ந்து சாப்பிட ஒரு மாதிரி இருக்கு அதான்” என்றாள் தயங்கி தயங்கி அவளுக்கே இப்புடி தன் நிலை இறங்கி பேச அசிங்கமாக தான் உணர்ந்தாள்..

“சிங்கப்பூருக்கு தனியா தானே வந்த, இப்ப எங்களை பார்க்கலைன்னா தனியா தானே உட்கார்ந்து இருப்ப, இப்ப மட்டும் என்னவாம்”, ராம் தான் அடக்கப்பட்ட கோவத்தோடு கேட்டது.‌

அவனுக்கு லீலா இப்புடி தன் நிலை இறங்கி பேசுவது நடப்பது எல்லாம் அவ்வளவு கோவத்தை கொடுத்தது.. ஏன் இந்த கோவம் என்ற கேள்வி எழ, ப்ரியாவிற்காக அவள் வாழ்க்கைக்காக அவனுக்கு அவனே சொல்லி கொண்டான்..

மேலும் ராம் ஏதோ சொல்ல வர அதற்குள் ப்ரதாப் “நோ ப்ராப்ளம்” என்று விட்டான்.. லீலாவும் அமர்ந்து விட்டாள்.. ராம்க்கு ப்ரதாப்பை மீறி பேச முடியவில்லை.. அவன் கண்களின் அனலை அருகே இருந்தவளால் உணர முடிந்தது..

தெரியாத நாடு, தனியாக வந்து இருக்கிறேன் என்று சொல்கிறாள், தெரிந்த பெண் வேறு, அவளாக வந்து இப்புடி கேட்கும் போது ப்ரதாப்பால் மறுக்க தோணவில்லை.‌.

ஆனால் அவன் நல்ல எண்ணமே அவனுக்கு பிரச்சினையாக திரும்பியது.. ப்ரதாப்க்கு வலது புறம் இருந்த இருக்கையில் ராம் அமர்ந்து இருக்க, நேரெதிர் இருக்கையில் லீலா அமர்ந்து இருந்தாள்..‌ராமை தவிர்த்து ப்ரதாப் லீலா மட்டும் அமர்ந்து இருப்பது போல் போட்டோ எடுக்கப்பட்டு சாலாவுக்கு அனுப்பிட்டது.. பாவம் அது லீலாவுக்கு தெரியாது..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 42

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “Mr and Mrs விஷ்ணு 61”

  1. ராம் க்கு லீலா க்கு சீன் அதிகமாக கொடுக்க முடியுமா

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!