Mr and Mrs விஷ்ணு 62

4.8
(52)

பாகம் 62

அதற்கு அடுத்து வந்த இரண்டு நாட்களும் லீலாவை ப்ரதாப் எங்கு செல்கிறானோ அதுக்கு அருகே இருக்கும் இடத்திற்கே சாலா போக சொன்னார்.. அந்த இடத்திற்கு சென்று செல்ஃபி எடுத்து அவளுடைய சமூக வலைதள பக்கத்தில் போட சொன்னார்.. அதை பார்த்து விஷ்ணு ஒரு புறம் குழப்பினால் புகைந்தால் என்றால், ராம்க்கும் இவ ஏன் இப்புடி பண்றா என பயங்கர கோவத்தை தான் கொடுத்தது.. 

ப்ரதாப்பிற்கு வந்த வேலை முடிந்தது மறுநாள் காலை ஊர் திரும்ப வேண்டும்.. இரவு ஒரு பிசினஸ் பார்ட்டி அவர்கள் தங்கிய ஹோட்டலில் தான்.. என்ன தான் பார்டி என்றாலும் ப்ரதாப் மது அருந்துவதில்லை.. அந்த பழக்கம் அவனுக்கு இல்லை.. அங்கும் லீலா சாலாவால் அனுப்பட்டாள்..

ப்ரதாப் அருகே சென்று நெருக்கமாக நிற்க வேண்டும்.. முடிந்தால் தவறி மேல் விழ வேண்டும் சாலாவின் கட்டளை.. லீலாவுக்கு நெஞ்சே அடைத்தது.. சாலா சொன்னதை கேட்டு, என்னால் முடியாது என்றாள்.. சாலாவோ அதட்டி மிரட்டி கடைசியாக நான் உன் அம்மா உனக்கு கெடுதல் செய்வேன்னா என்ற எமோஷனல் வசனம் பேசி லீலாவை செய்ய சொன்னார்..

லீலா வேண்டா வெறுப்பாக ப்ரதாப் அருகே சென்று நின்றாள்.. ப்ரதாப்போ அங்கு ஒருவருடன் பேச்சு சுவராசியத்தில் இருந்தவன் இதை கவனிக்கவில்லை..‌ அதுவும் அவர்கள் இருவரையும் சேர்ந்த போல போட்டோ எடுக்கப்பட்டது.. இந்த போட்டோக்கள் தான் அன்று விஷ்ணுவிடம் சாலா காட்டியது..

சாலாவிடமிருந்து மெசேஜ் இன்னும் நெருக்கமாக நிற்க சொல்லி, இங்க நடக்கிறதை எல்லாம் சொல்லி கொடுக்கிற ஸ்பை எவன் தான் அவளோ மனதிற்குள் திட்டி கொண்டு இன்னும் நெருக்கமாக நிற்க போக,

அவளை ஒரு கை தரதரவென இழுத்து வந்தது.. ராமை தவிர வேறு யாராக இருக்க முடியும்.. ப்ரதாப் விட்டு தள்ளி கொஞ்சம் தூரம் வந்து ஆட்கள் இல்லாத இடத்திற்கு வந்து அவள் கைகளை விட்டான் ராம்.. விட்டால் அவளை பார்வையால் பொசுக்கி விடும் அளவு அவன் கண்களில் அனல்..

“என்ன பண்ணிட்டு இருக்க நீ, இப்புடி எல்லாம் பண்ண உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா, நீ எல்லாம் என்ன பொண்ணு” சகட்டு மேனிக்கு அவனுக்கு வந்த கோவத்திற்கு திட்டு, லீலா கண்களில் கண்ணீர்.. அவனுக்கே கொஞ்சம் அதிகமாக திட்டியது போல தோன்றியது..

அவ பண்றது தப்பு, அதான் திட்டுறேன்,

அவ தப்பே பண்ணினாலும், நீ யார் திட்ட, அவளை மத்தவங்க தப்பா நினைக்க கூடாதுன்னு தான்,

நினைச்சா உனக்கு என்ன கவலை, இப்புடி பல கேள்விகள் போராட்டம் அவனுக்குள் நிகழ அங்கிருந்து சென்றான்..

லீலாவுக்கோ இங்கு சாலாவிடமிருந்து பயங்கர திட்டு.. ராமை விட அவர் அதிகமாக திட்டி இருந்தார்.. “எதுக்குமே லாயக்கு இல்லை.. அம்மா பேச்சை கேட்காத நீ எல்லாம் ஒரு பொண்ணா, இங்க வா இருக்கு உனக்கு” என்றவர் கடினமான வார்த்தைகளால் அவளை திட்டி விட்டு போனை வைத்தார்..

ப்ரதாப்போ பெயருக்கு கொஞ்ச நேரம் இருந்து விட்டு அங்கிருந்து தன் அறைக்கு சென்று விட்டான்.. இதுக்கு மேல் போட்டோ எடுக்க முடியாது என்பதால் வந்த கோவத்தை சாலா லீலா மீது கொட்டினார்..

லீலாவுக்கோ அழுகை கோவம் ஆத்திரமாக வந்தது.. சாலாவிடம் காட்ட முடியாதே, அவரிடம் அப்புடி பட்ட பேச்சு வாங்கி கொடுத்த ராம் மீது திரும்பியது.‌ அவனும் தப்பாக தானே பேசினான்.. அவனிடம் சென்று சண்டை போட வேண்டும் என்னை எப்புடி அவன் தப்பா பேசலாம்.. அதோட அவனால் தான் அம்மா கிட்ட இவ்வளோ பேச்சு வாங்க வேண்டியதா போயிட்டு என தோன்றியது.. ஆனால் அவன் முன்பு சென்று சண்டை போட தைரியம் வரவில்லை..

அப்போது தான் பார்ட்டியில் அனைவர் கையிலும் இருந்த மது கண்ணில் பட்டது.. அவளுக்கு அழுத்தம் கோவம் எல்லாம் இருக்க.. இதை குடித்து தைரியம் வரவழைத்து கொண்டு ராமிடம் சண்டை போட வேண்டும் என நினைத்து.. மது அருந்தினாள்.. “என்ன பண்ற” அவளை பார்த்து கொண்டு இருந்த ராம் வந்து தடுத்தான்..

“நான் என்ன வேணா பண்ணுவேன்.. அதை தடுக்க நீ யார்?” என எடுத்தெறிந்து பேசியவள், மற்றோரு க்ளாஸ் அருந்தினாள்..

‘என்னவோ பண்ணு எனக்கு என்ன’கோவம் வந்த ராமும் தன்றைக்கு சென்று விட்டான்.. ஒரு ஐந்து நிமிடம் கூட கடந்து இருக்காது ‘குடிக்க வேற செய்ற, சரியா ரூம்க்கு போய்டுவாளா, இப்புடி தனியா விட்டுட்டு வந்து இருக்க கூடாது’ என மனம் அடித்து கொள்ள, கீழே லீலா அருகே செல்லலாம் என ராம் எழுந்து இருக்க,

லீலாவே அவன் அறை கதவை திறந்து உள்ளே வந்தாள்.. அவளை பார்த்தவனுக்கு தெரிந்தது கண் மண் தெரியாமல் நிறைய குடித்து போதையில் இருக்கிறாள் என,

“லீலா” என கோவமாக பேச வந்தவன் அதை விடுத்து “இங்க எதுக்கு வந்து இருக்க, வா உன் ரூம்ல விடுறேன்” என கைபிடிக்க,

அவன் கையை தட்டி விட்டவள், “உன் கூட சண்…டை போட.. இங்க தானே வரரரரரரனும் மேன், வேற எங்க போக முடியும்”.. போதையில் வார்த்தை குழறியது..

“காலையில் சண்டை போட்டுக்கலாம் வா” என லீலா கையை ராம் பிடிக்க,

“முடியாது நான் இப்ப தான் போடுவேன்”.. என அவன் கையை தட்டி விட்டு,

“நீ யா..ர் மேன் என்னை தப்பா பேச, உன்ன உன்னால் தான் என் மம்மி என்னை திட்டுச்சு உன்ன உன்ன, உன்னை சும்மா விட மாட்டேன், சண்டை போடுவேன்”, அவனின் டீசர்ட்டை மார்போடு பிடித்து இழுத்தவள், கீழே விழ போக, அவள் விழுந்து விட கூடாது என்ற எண்ணத்தில் இடையோடு கை போட்டு தடுத்து நிறுத்த பார்த்தும் பயனில்லை.. லீலா மெத்தை மீது விழுந்து இருக்க, அவள் மீது ராம்..

இருவரின் மேனியும் உரசி கொண்டு இருந்தது.. போதையில் இருந்தவளுக்கு அது தெரியவில்லை.. ஆனால் ராமிற்கோ அவள் மொத்த மேனியும் அவனை உரசியதில் உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள்.. .இதுவரை அவன் அறியாத சில உணர்ச்சி நரம்புகளை அவள் தூண்டி விட்டு கொண்டு இருந்தாள்.. அவன் ஒன்றும் முற்றும் துறந்த முனி அல்லவே.. சாதாரணமான ஆண் மகன்.. அவள் நெருக்கம் அவனுக்கு அவஸ்தையாக இருந்தது.. இந்த நெருக்கம் ஆபத்து எனவும் பட்டது..

அவளிலிருந்து எழ ராம் முயற்சித்தான்.. அவளுக்கு முதுக்கு பின்னே அவன் கை ஒன்று மாட்டி கொண்டு இருந்ததால் எடுக்க முயற்சிக்க, அவள் விட்டால் தானே, இவ்வளவு நேரம் கோவத்தை காட்டிய கண்கள், இப்பொழுது வேறு ஒரு உணர்வை காட்டி ராமை தூண்டி விட்டது..

ஒற்றை விரல் கொண்டு அவன் முகத்தை வருடினாள்.. என்றோ ஒரு நாள் “அங்க பாரு ராம் எவ்வளவு அழகு, உனக்கு ராம் தான் கரெக்ட் லில்லி” என விஷ்ணு கூறியது.. அவள் மனதில் பதிந்து இருந்தது இப்போது லீலாவுக்கு நியாபகம் வந்தது.

“நீ ரொம்ப அழகா ஹீரோ போல இருக்க.. நிறைய நாள் சொல்ல நினைச்சு இருக்கேன்.. ஆனா சொல்லலை.. உனக்கு தெரியுமா உன்னை பல நாள் சைட் அடிச்சு இருக்கேன்… நீ ரொம்ப நல்ல பையன், லவ் பண்ணலாம்ன்னு கூட நினைச்சு இருக்கேன்.. ஆனா என் அம்மா நினைச்சு பயம் அதான் விட்டுட்டேன்”.‌ போதையில் மனதில் இருந்ததை உளறுகிறேன் என்ற பெயரில் அவனுக்குள் எரிய தொடங்கிய மோகத்தீக்கு எண்ணெய் ஊற்றி கொண்டு இருந்தாள்..

“உன் கண்ணு அவ்வளவு அழகு.. ஆனா அதை நேரா பார்க்க எனக்கு பயம்.. இதோ என்னை கோவமா பார்க்கும் போது சிவக்குதே இந்த மூக்கு அதை கடிக்கனும் போல இருக்கும்” என்றவள், “அடுத்து இந்த உதடு” என்றவள் அடுத்து பேசவில்லை அதை தன் இதழ் கொண்டு அடைத்து இருந்தாள்..

இந்த முத்தம் இவ்வளவு நேரம் ராம் அடக்க நினைத்த உணர்வுகளை உடைப்பெடுக்க வைத்தது.. அவனும் அந்த முத்ததில் மயங்கி பதிலுக்கு ஆழமாக அழுத்தமாக முத்தமிட தொடங்கி இருந்தான்.. அவன் கைகளோ எல்லை மீற தொடங்கி இருந்தது.. லீலாவின் கைகளும் அவனை முதுகை அணைத்து கொண்டது.. இதழிலிருந்து விலகி கழுத்தில் முகம் புதைத்து கொண்டான்..

ராம் என்ற அவளின் முனகல் அவனை அடுத்த கட்டத்துக்கு இழுத்தது..

மறுநாள் காலை கண் விழித்த லீலாவுக்கு தலை பாரமாக இருந்தது.. தலையை பிடித்து கொண்டே அவள் தங்கி இருந்த அறை போல இல்லவே என்ற குழப்பத்தோடு எழ பார்க்க அப்போது தான் அவள் இருக்கும் கோலம் கண்டு அதிர்ந்தாள்.. போர்வையை நெஞ்சோடு இறுக்கி கொண்டாள்..

என்ன நடந்தது என கண்ணை மூடி யோசித்து பார்க்க குடித்தது, ராம் அறைக்கு வந்தது அவனை முத்தமிட்டது, பதிலுக்கு அவன் முத்தமிட்டது வரை தான் தியாகம் வந்தது.‌ அதன் பிறகு என்ன நடந்தது என நினைவில் இல்லை.‌ ஆனால் அவள் இருக்கும் கோலமே சொன்னது அடுத்து என்ன நடந்து இருக்கும் என,

தன் முட்டாள் தனமான செய்கையை நினைத்து அவள் அம்மாவுக்கு தெரிந்தால் என்னவாகுமோ நினைத்து வாய்விட்டு அழுதாள்..

“லீலா அழாதா” என்ற ராம் குரல் கேட்க, நிமிரந்து அவனை பார்த்தவள் பார்வையால் எரித்தாள்.. அவனோ குற்ற உணர்வில் தலையை குனிந்து கொள்ள

அவன் கன்னத்தில் அறைந்தவள் “வெளிய போடா” என கத்தினாள்..

“லீலா சாரி” என்ற போது மீண்டும் அறைந்தவள்.. “நான் தான் போதையில் புத்தி தடுமாறி ச்சே” என தன் தலையில் அடித்து கொண்டவள், “நீ நினைச்சா தடுத்து இருக்கலாமே, உன்னை நான் என்னவோ நினைச்சேன்.. ஆனா நீ கிடைச்ச சந்தர்பத்தை யூஸ் பண்ணி இருக்க.. அசிங்கமா இல்லை வெளிய போ” மீண்டும் கத்தியவள் அழ ஆரம்பித்தாள்..

ஏற்கெனவே குற்ற உணர்வில் இருந்த ராம் வெளி வந்து விட்டான்..

தன் உடைகளை சரி செய்து விட்டு அழுதபடி அறையிலிருந்து வெளி வந்த லீலா ராம் முகத்தை பார்க்காமலே தன்னறைக்கு சென்றாள்..

அவளை வேதனையை தாங்கிய முகத்தோடு பார்த்தான்.. அவனுக்கு தெரியும் அவன் செய்தது எவ்ளோ பெரிய தவறு என்று, எந்த இடத்தில் இடறினான் அவனுக்குமே நிதானம் இல்லை.. நிதானம் இல்லை போதை என்று சொல்லி தவறுக்கு காரணம் காட்ட நினைக்கவில்லை..

ஆனால் அவன் செய்தது தவறு தானே தன் மீதே கோவம் வர சுவற்றில் ஓங்கி கை காயம்படும் அளவு திரும்ப திரும்ப குத்தி கொண்டு இருந்தான்…

ராம் அவன் கை பிடித்து தடுத்தான் ப்ரதாப்.. இன்று ஊருக்கு செல்லலாம் என்றால் வேறு ஒரு முக்கியமான ப்ராஜக்ட் ஒன்று வந்து இருக்கிறது.. அதற்கான மீட்டிங் ஈவ்னிங் இருக்கிறது.. அதனால் ஃப்ளைட் டிக்கெட் கேன்சல் பண்ணிடு நாளைக்கு டிக்கெட் புக் பண்ணு என சொல்ல அத்தனை முறை அழைத்தும் போன் எடுக்கவில்லை..

அதனால் ப்ரதாப்பே தேடி வர, அவன் கண்ணில் பட்டது, லீலா ராம் அறையிலிருந்து வெளியேறிதும் ராம் தன்னை காயப்படுத்தி கொள்வதும் தான்..

என்னாச்சு என ப்ரதாப் கேட்க.. ராம் தலை குனிந்தபடி நடந்ததை சொன்னான்.. ப்ரதாப்பிடம் மட்டும் உண்மையை சொன்னான்..

ப்ரதாப்போ ஓங்கி ராமை தான் அறைந்தான்.. யூ இடியட் என்ன காரியம் பண்ணி இருக்க.. ப்ரதாப்புக்கு பயங்கர கோவம் வந்தது.. வம்சி போல் ராமை நினைத்து இருக்க அவன் இப்புடி ஒரு காரியம் செய்து விட்டானே என,

சார் என விளக்கம் சொல்ல வந்தவனை என்கிட்ட பேசாத என்ற ப்ரதாப்

ஒரு வார்த்தை பேசுன அவ்ளோ தான் என்றவன்

 “அந்த பொண்ணு இந்தியா கிளம்புறா, இப்ப அந்த பொண்ணு இருக்க மனநிலைக்கு தனியா விடுறது நல்லதில்லை.‌ நீயும் கிளம்பி இந்தியா போ.. எனக்கு வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்” என்றான் ப்ரதாப்.. இதனால் தான் அவன் பொண்டாட்டி விஷ்ணு அவனை தவறாக நினைக்க வந்தது..

ராமிற்கு அதிர்ச்சி லீலா கர்ப்பமானது.. ஆனால் அந்நொடியே அவளும் குழந்தையும் தனக்கானவர்கள் விட கூடாது என்ற வைராக்கியமும் வந்து சேர்ந்தது.. லீலா கர்ப்பமாகமல் இருந்தாலும் எப்புடியாவது அவளை திருமணம் செய்து இருப்பான்..

தவறி விட்டான் அதை அவள் கையில் காலில் விழுந்தாலும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஓடி கொண்டே இருந்தது.. ஆனால் தானாக சென்று பேச சின்ன தயக்கம்.. ஏதோ ஒரு சின்ன ஈர்ப்பு இல்லாது இப்புடி நடந்து இருக்காது.. அந்த ஈர்ப்பும் பிடித்தமுமே நாளடைவில் காதலாக மாறியது…

பழையதை நினைத்து பார்த்து வண்டியில் வந்த ராம் லீலா சொன்ன மருத்துவமனை அடைந்தான்.. அவளை தேடி கண்டுபிடித்து அவள் முன்பு நின்றான்..

கலங்கிய கண்ணோடு அவனை ஏறிட்டவள் கை பிடித்து தனியா பேசலாம் வா என மருத்துவமனை கார்டனுக்கு அழைத்து சென்றான்..

கார்டனில் யாரும் இல்லாத இடத்தில் அங்கு இருந்த சிமெண்ட் பெஞ்சில் லீலாவை அமர வைத்து அவள் இரு கைகளையும் பிடித்தவன் “குழந்தையை கலைக்க தானே வந்த அப்புறம் ஏன் அழுற லீலா குழந்தையை கலைக்க மனசு வரலையா” என கேட்டான்..

எதுவுமே லீலா பேசவில்லை ஆனால் அவன் பிடித்த கரங்களில் அவளின் கண்ணீர் பட்டது.. உடனே அவள் கன்னம் பற்றி கண்களை துடைத்து விட்டவன்.. “கல்யாணம் பண்ணிக்கலாமா” என கேட்டான்..

இதை கேட்ட லீலா அதிர்ச்சியாகவில்லை விரக்தியாக சிரித்தாள்.. “ராம் இதை தான் கேட்பான்” என ஏற்கெனவே அவள் நினைத்து இருந்தாள்.. “உங்க குழந்தைக்காகவா” என கேட்டாள்..

பெருமூச்சு ஒன்றை விட்ட ராம், “இப்ப நான் எது சொன்னாலும் நீ நம்ப போறது இல்லை.. அதனால் அதை விடு கல்யாணம் பண்ணிக்கலாமா?” மீண்டும் அதையே கேட்டான்..

அவனை நிமிர்ந்து பார்த்தவள் “இதை கொஞ்ச நாள் முன்னாடியோ, இல்ல நான் ஆபிஸ் வந்த டைம் கேட்டு இருக்கலாமே ராம்.. அப்ப கேட்டு இருந்தா சந்தோஷப்பட்டு இருப்பேன்.. ஆனா இப்ப நீங்க கேட்கும் போது வருத்தமா இருக்கு வேண்டாம் சொல்ல தான் தோணுது” என்றாள்..

மேலும் “ஏன் இப்புடி பண்ணீங்க ராம்.. உங்களை நான் வேற லெவல் திங்க் பண்ணி வச்சு இருந்தேன்.. ஆனா நீங்க நார்மல் ஆம்பளைங்க போல ச்சே எனக்கு உங்க மேல்ல கோவத்தை விட வருத்தம் தான் அதிகம் இருக்கு”.

“நான் பர்ஸ்ட் டைம் பார்த்த ராம் நான் பார்த்திலே ரொம்ப நல்ல ஆம்பளை அவர் தான்.. அவரோட குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவர் மேல்ல நான் ரொம்ப மரியாதை வச்சு இருந்தேன்.. ஆனா அது எல்லாத்தையும் உடைச்சிட்டிங்களே, என்னை எப்பவும் கோவமா பார்த்து திட்டுற ராமை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருந்தது.. இப்ப அன்பா பார்க்கிற பாசமா பேசுற இந்த ராமை எனக்கு பிடிக்கலை” என்றாள்..

மேலும் “குழந்தையை கலைக்கனும் நினைச்சு தான் வந்தேன்.. ஆனா இப்ப அதுக்கும் மனசு வர மாட்டேங்குது.. என்னை இப்புடி ஒரு நிலைமையில் நிற்க வச்சிட்டிங்களே ராம்.. எனக்கு இப்ப என்ன பண்றதுன்னு தெரியலை” என அழுதாள்..

இதுக்கு ராம் எதுவும் சொல்லவில்லை.. சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 52

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!