Mr and Mrs விஷ்ணு 66

4.9
(43)

பாகம் 66

தன்னறையில் கோவமாக நகத்தை கடித்தபடி அமர்ந்து இருந்தாள் விஷ்ணு.‌

கோவம் வரமால் எப்படி? அவள் அனுப்பிய தூது ஒன்று கூட அவள் கணவனிடத்தில் வேலை செய்யவில்லையே,

இரவு அவன் வந்து பேசுவான் என்ற எதிர்பார்ப்போடு அவள் இருக்க, அவனோ வந்தவன் குளித்து சாப்பிட்டுவிட்டு, அவள் இரவு உண்ண வேண்டிய மாத்திரை எடுத்து டேபிள் மீது வைத்து விட்டு, லேப்டாப்போடு அந்த அறையை ஒட்டி இருந்த சிறு அறைக்குள் நுழைய போக,

அவன் கைப்பிடித்து தடுத்தவள், ப்ளீஸ் இப்புடி நடந்துக்காதீங்க.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் தப்பு பண்ணிட்டேன் தான்.. அது தான் சாரி சொல்றேன்னே, சாரிங்க மன்னிச்சிடுங்க, இப்புடி பேசாம இருக்கிறது எனக்கு என்னவோ போல் இருக்கு என கவலைப்பட,

ப்ரதாப்போ அதை சட்டை செய்யாது அவளை தாண்டி அறைக்குள் சென்று விட்டான்..

இவ்வளோ கெஞ்சுறேன்னே கொஞ்சமாவது கரையுறான்னா பாரு கல்நெஞ்சக்காரன் என்றவள், டேபிளில் அவன் எடுத்த வைத்த மாத்திரை பார்த்தாள்.. இந்த அக்கறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என திட்டிய அவளுக்கு பயங்கர கோவம் வந்தது.‌

அடுத்து என்ன செய்வது என யோசித்தபடி அமர்ந்து இருக்க.. வேலையை முடித்துவிட்டு அறைக்குள் வந்த ப்ரதாப், 12 மணியாகியும் இன்னும் தூங்காமல் இருப்பவளை யோசனையோடு பார்த்தபடி வந்தவன், டேபிளில் அவன் எடுத்த வைத்த மாத்திரை உட்கொள்ளாமல் அப்புடியே இருக்க, விஷ்ணுவை முறைத்தான்..

நீங்க பேசுனா தான் சாப்பிடுவேன் என்றாள்..

ஒழுங்கா மாத்திரை சாப்பிடு என்ற கண்டிப்பான பார்வை பார்க்க,

முடியாது பேசுனா தான் சாப்பிடுவேன்.‌ இல்லைன்னா சாப்பிட மாட்டேன் என்றாள் பிடிவாதமாக,

ப்ரதாப்பிற்கோ குழந்தை விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பது கோவத்தை அதிகரித்தது..

அவனுக்கு மட்டும் இந்த நிலை பிடித்து இருக்கிறதா, இப்புடி கொண்டு வந்து நிறுத்தியவளே அவள் தானே.. அவனால் தன்னை தன் ஒழுக்கத்தை சந்தேகித்ததை சாதரணமாக எடுத்து கொள்ள முடியவில்லை.‌. எப்புடி இவ சந்தேகப்படலாம்..

அவ்ளோ கீழ்தரமானவன நான்.. என்னை பத்தி மனசில் இவ்வளவு தப்பான எண்ணத்தை வைத்து கொண்டு தான் மெத்தையில் கொஞ்சி குழாவினாளா.. ஓ.. இதுக்கு தானே அவன் வாயை இறுக மூடி கொண்டு இருக்கின்றான்..

அவள் மீது இன்னும் கோவம் இருக்கும் போது அவனால் இயல்பாக எப்புடி பேச முடியும்… கோவத்தில் வார்த்தையை விட்டு விடுவோமோ என்ற பயத்தில் தான் அமைதியாக இருக்கின்றான்.. கொஞ்ச நாள் தள்ளி இருந்தால் கோவம் குறையும் என நினைத்த சமயம்.. அவள் கர்ப்பமாக இருக்கின்றாள் என்ற செய்தி வந்தது.‌

தனியே விட மனதில்லை.. கூட்டி வந்து விட்டான்.‌ ஆனால் கோவம் குறைய கொஞ்ச காலம் எடுக்கும்.‌ அதை புரியாமல் பேசு பேசுன்னு தொல்லை செய்கின்ளாள்.. செய்றதை எல்லாம் செய்து விட்டு சாரின்னு இவ சொல்லுவா உடனே நான் பேசனுமா என்ற அவனுடைய இயல்பான பிடிவாதம் சேர்ந்து கொண்டு அவனை மேலும் இறுக செய்தது..

கோவமாக தன் போனை எடுத்து டயல் செய்து காதில் வைத்தான்.. மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும்,

உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்க, நீ இதுவரை பண்ணினதும் சரி கிடையாது..இப்ப பண்றதும் சரி கிடையாது.. எனக்கு இப்ப இருக்கிறது கோவம் தான்..கோவம் மட்டும் தான், அதை உன்னோட அர்த்தம் இல்லாத பிடிவாதத்தில் வெறுப்பா மாத்திடாத, கோவமாக விஷ்ணுவை பார்த்து கொண்டே பேசினான்.‌

மறுமுனையில் இருந்த வம்சியோ நான் என்ன தப்பு பண்ணுனேன்.. இந்த டைம்ல கால் பண்ணி என்ன என்னவோ சொல்லி திட்டுறார் என்ற குழப்பத்தில் முழித்தான்..

இந்த திட்டு தனக்கு தான் என விஷ்ணுவிற்கு புரிந்தது.‌ கோவமாக மாத்திரையை எடுத்து விழுங்கியவள்,

போதுமா இப்ப சந்தோஷமா கோவமாக கேட்டாள்.. ப்ரதாப் விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்து கொண்டான்..

கருங்கல்லு கருங்கல்லு, மாசமா இருக்க பொண்ணு இவ்ளோ கெஞ்சுறாளேன்னு பாவம் பார்க்காம அப்புடி என்னய்யா ஈகோ ஊறுகாய் ஊறுகாய் என்றாள் கோவத்தில், இப்புடி பேசினாலாவது கோவத்தில் பேசுவான் என அவள் நினைக்க, ப்ரதாப்பிடம் பலிக்குமா,

கண்ணை மூடி படுத்து இருக்க,

ஆ.. எதுக்குமே மசிய மாட்டேங்கிறாரே இந்த மனுஷன், உன்னை என்றவள் அருகே இருந்த தலையணை எடுத்து அடிக்க போனவள், ச்சே என அதை கீழே வைத்து விட்டு,

யோவ் ஊறுகாய் ரொம்ப ஓவரா பண்ற இரு இரு உனக்கு இருக்கு, இனி நோ சாரி, நோ கெஞ்சல், நோ கண்ணீர், நாளையிலிருந்து நான் பண்ற டார்ச்சர்ல நீயாகவே பேசுவ, பேச வைக்கிறேன் பாரு என வீரசபதம் எடுக்க,

போடி என்ன வேணா பண்ணு என அலட்சியமாக நினைத்தவன் தூங்கி விட்டான்..

காலை அலாரம் அடிக்கும் சத்தம் கேட்க ப்ரதாப் கண் விழித்தான்.. மணியை பார்க்க ஐந்து என காட்டியது.. அவன் அலாரம் வைக்க வில்லை.‌.. விஷ்ணுவின் மொபைலில் அடித்தது.. இவ எதுக்கு அலாரம் வச்சு இருக்கா என்ற யோசனையோடு தொடர்ந்து அடித்து கொண்டு இருப்பதை அணைக்கலாம் என கை நீட்ட,

அச்சோ டைமாச்சு என நெற்றியில் அடித்து கொண்டு எழுந்தவள் அலாரத்தை அணைத்து விட்டு பாத்ரூம்க்குள் நுழைந்து கொண்டாள்..

பாத்ரூம் போறதுக்கா அலாரம் வச்சா என்ற ப்ரதாப் படுத்து இருக்க அரை மணி நேரமாகியும் விஷ்ணு வெளியே வரவில்லை..

இவ்ளோ நேரம் என்ன பண்றா, பயப்பட்ட ப்ரதாப் பாத்ரூம் கதவை தட்ட, பதில் இல்லை.‌..

வாமிட், தலை சுத்து என்னவோ என் பதறிய ப்ரதாப் மீண்டும் வேகமாக கதவை தட்ட,

வரேன் வரேன் இந்த அக்கறைக்கு மட்டும் குறைச்சலும் இல்லை என்ற அவள் குரல் கேட்க நிம்மதியானவன் சென்று கட்டிலில் அமர,

இரண்டு நொடி கழிந்து பாத்ரூம் கதவை திறந்து வெளி வந்தாள் விஷ்ணு..

அவளை பார்த்தவன் அதிர்ச்சி அடைந்தான்.. அதிர்ச்சியாகமல் என்ன? இந்நேரத்திற்கே தலை குளித்து புடவை கட்டி வந்தாள்..

இந்நேரத்திற்கு இவ ஏன் அதுவும் தலையோட குளிச்சு இருக்கா.. சளி பிடிச்சா என்னாகுறது, இவளை என அவன் கோபப்பட, அடுத்து அவள் சொன்ன வார்த்தையில் கோவம் இருந்த இடம் தெரியாமல் போனது..

குட்மார்னிங் மாமா என்றாளே பார்க்கலாம்.. அந்த மாமாவிலே ப்ரதாப் கண்கள் அகல விரிய, அடுத்து அவள் செய்த காரியத்தில் ப்ரதாப்பிற்கு நெஞ்சு வலியே வரும் போல இருந்தது…

அருகே வந்தவள் சட்டென அவன் காலுக்கு கீழ் அமர, ஏதாவது கீழ போட்டுட்டாளா என ப்ரதாப் பார்க்க,

அவன் கால்லை தொட்டு கும்பிட்டவள் ப்ளவுஸ்க்குள் இருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்ற, ப்ரதாப் இவளுக்கு பைத்தியமா என்ற ரீதியில் பார்த்து கொண்டு இருக்க,

அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள், இருக்க மாமா உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன் என்றவள் கீழே செல்ல,

தலையை உலர்த்தாமா ஈரதலையோடு போது பாரு எருமை எருமை, உடம்புக்கு ஏதும் வந்தா என்ன பண்றது என ப்ரதாப் அவள் பின்னே செல்ல,

அவள் சாம்பிராணி போடுகிறேன் என்ற பேரில் வீட்டை புகையில் முழ்கடித்து கொண்டு இருந்தாள்..

இவளுக்கு ஏதும் பைத்தியம் பிடிச்சிட்டா, இப்ப எதுக்கு இவ்ளோ க்ரின்ஜ் பண்றா என கடுப்பாக பார்த்தான்.‌.

அந்த பார்வை அர்த்தம் புரிந்தவன் நான் இதுவரை உங்களுக்கு சரியான பொண்டாட்டியா நடந்துக்கலையாம்.. அப்புடி நடந்துக்கிட்ட உங்களுக்கு என் மேல்ல இருக்க கோவம் போய்டுமா பாட்டி தான் சொன்னாங்க என ரங்கநாயகியை இழுத்து விட,

பாட்டியை முறைத்தான் ப்ரதாப்..

அய்யோ நான் சொன்னது வேற ப்ரதாப் இப்புடி எல்லாம் பண்ண சொல்லலை கண்ணா என்றார் பயந்தபடி,

லூசு லூசு என திட்டியவன் என்னவோ பண்ணி தொலைக்கட்டும் என டவலை எடுத்து கொண்டு குளிக்க செல்ல,

நான் தான் உங்களை குளிக்க வைப்பேன் மாமா என விஷ்ணு பாத்ரூம்க்குள் வந்து நிற்க, முறைத்துக் கொண்டு நிற்க, இந்த முறைப்புக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் மாமா.. இது எல்லாம் என் கடமை மாமா.‌ இத்தனை நாள் இது தெரியாம இருந்துட்டேன்.. இனி ஒரு நாளும் கடமை தவற மாட்டேன் மாமா என நிற்க, ப்ரதாப்புக்கு தான் அய்யோட என்று இருந்தது.. என்ன மாமா நின்னுட்டு இருக்கீங்க.. டீ சர்ட் கழட்டுங்க என கிட்ட வர,

ப்ரதாப் அவள் கையை தட்டி விட்டான்.. கூச்சப்படாதீங்க மாமா..

நீங்க அன்னைக்கு நான் குளிக்கும் போது உள்ள வந்து சில்மிஷம் பண்ணுனா போல எல்லாம் நான் சில்மிஷம் பண்ண மாட்டேன்.. நான் ரொம்ப நல்ல பொண்ணு என நெருங்கியவளை பிடித்து வெளியே தள்ளி விடுவதற்குள் ப்ரதாப்புக்கு போதும் போதுமென்றாகி விட்டது.‌

ஒருவழியாக குளித்து அலுவலகத்திற்கு கிளம்பி கீழே வர, சாப்பிடுங்க மாமா நான் உங்களுக்காக ஆசையா சமைச்சு இருக்கேன் என விஷ்ணு வந்து நின்றாள்..

குளிக்க வைப்பேன் என வந்து நின்றது போல, இத்தனை பேர் முன் ஊட்டி விடுவேன் என வம்பு செய்வாளோ என பயந்தவன் வேண்டாம் என நகர பார்க்க,

இத்தனை பேர் முன்ன அப்புடி எல்லாம் பண்ண மாட்டேன் மாமா என அவனின் எண்ணம் அறிந்து சொல்ல, நம்பி அமர்ந்தான் ப்ரதாப்.. ஆனால் அவளோ பரிமாறுகிறேன் அருகே அமர்ந்து உண்ணுக்கிறேன் என்ற பெயரில் இடுப்பை கிள்ளுவது தன் கால் கொண்டு அவன் கால்லை உரசுவது என எல்லா சில்மிஷம் வேலையையும் செய்தாள்..

டைனிங் டேபிளில் சுத்தி எல்லாரும் இருக்க இடத்தில் வைத்து என்ன வேலை பார்க்கிறா கோவம் வந்தது திரும்பி அவளை முறைக்க, கண் அடித்தது மட்டுமல்லாது உதடு குவித்து முத்தம் தர,

வம்சி பல்லை கடித்தான் ப்ரதாப்.. பார்வை விஷ்ணுவிடம்,

சொல்லுங்க ப்ரோ என்றான் ப்ரதாப்பின் மறுபுறம் அமர்ந்திருந்த வம்ச ..

முட்டாள் வம்சி என்றான் அடக்கப்பட்ட கோவத்தோடு ப்ரதாப்..

எதே முட்டாளா நானா என்ன ப்ரோ அதிர்ந்தான் வம்சி..

மீண்டும் விஷ்ணு கால்லை சுரண்ட, அறிவுக்கெட்ட வம்சி என்ன வேலை பார்க்கிறா என்றான்

அறிவுக்கெட்டவனா என அதிர்ந்தாலும் சாப்பிடுறேன் ப்ரோ என்றான் பாவப்பட்ட வம்சி பாவமாக,

திரும்பவும் விஷ்ணு லீலை தொடர, கடுப்பான ப்ரதாப், திரும்ப திரும்ப தப்பு பண்ணி என்னை கடுப்பேத்துற வம்சி இது நல்லதுக்கு இல்ல என கோவமாக பேசி விட்டு ப்ரதாப் எழுந்து கை கழுவ சென்று விட,

சாப்பிடறது ஒரு குத்தமா அதுவும் சரியா ரைட் ஹேண்ட்ல தானே சாப்பிடுறேன்.. அப்புறம் எதுக்கு திட்டுறார்.. திரும்ப திரும்ப தப்பு பண்றான்னா அப்புடி என்ன செஞ்சேன்.. திட்டுறது கூட வலிக்குல்ல.. ஆனா எதுக்குன்னு சொல்லலாமா திட்டுவது தான்யா வலிக்கு என வம்சி புலம்பினான்..

திட்டு தனக்கானது என்பது விஷ்ணுவிற்கு தெரியும்.. ஆனாலும் இடையில் வம்சி மாட்டி கொண்டது நினைத்து சிரிப்பு வந்தது..

ப்ரதாப் குரலில் கோவம் இருந்தாலும் மெதுவாக தான் பேசினான்.. அதனால் விஷ்ணு வம்சியை தவிர மற்றவர்களுக்கு அது கேட்க வில்லை.. அவர்களுக்குள் ஏதோ பேசி கொள்கிறார்கள் என பெரியவர்கள் நினைத்து கொண்டனர்..

வீட்டில் தான் இம்ச்சை பண்றான்னு பார்த்தால், வீட்டில் சும்மாவே இருக்க போர் அடிக்கு.. எனக்கு தான் வாந்தி மயக்கம் எதுவும் இல்லை.. அதனால் நானும் ஆபிஸ் போய்ட்டு வரேன் பாட்டி என்றவள் இங்கும் வந்து விட்டாள் இம்சிக்கவே..

இது தான் இது தான் ப்ரதாப்பை பயங்கர கடுப்பாக்கிய விஷயம்..

வீட்டிலையே அவ்வளவு பண்ணும் அவன் தர்மபத்தினி இங்கு அடங்குவாளா என்ன?

இதோ அவன் எதிரே கன்னத்தில் கை வைத்துப் படி அவனையே பார்த்தபடி மாமா உன் பேரே நெஞ்சுக்குள்ள பச்சை குத்தி வச்சேன் என்ற பாட்டை பாட,

ராம் என கத்தினான்.‌ வீட்டில் வம்சி என்றால் இங்கு ராம் சிக்கி கொண்டான்..

அவனையும் புருஷன் பொண்டாட்டி இருவரும் சேர்ந்து படுத்தி எடுக்க..

வம்சி என்னை இவங்க கிட்ட இருந்து காப்பாத்துடா ராம் கதற,

அட போடா என்னையை காப்பாத்தவே ஆளு இல்லம்மா மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்.. வந்துட்டான் என்ற வம்சி தனக்கு நடந்ததை சொல்ல,

மறுபடியும் ப்ரதாப் அறையிலிருந்து ராம் என்ற சத்தம் கேட்டது..

அய்யோ நானே வேற ஒரு மன உளைச்சல் இருக்கிறேன்டா இவங்க வேற புலம்பிய படி ராம் உள்ளே செல்ல,

விஷ்ணுவோ பேச மாட்டிங்களா, எப்புடி பேசாம போறீங்கன்னு பார்க்கிறேன் என மாமாமாவில் தொடங்கும் அனைத்து பாட்டையும் வரிசையாக பாடி ப்ரதாப்பை வெறுப்பேற்றி கொண்டு இருந்தாள்..

அவனோ

நீ என்ன வேணா பண்ணுடி நான் இப்புடி தான் இருப்பேன்.. பார்த்துக்கலாம்டி நீயா நானான்னு என்ற பிடிவாதத்தில் இருக்க..

இவர்கள் இடையில் வம்சியும் ராமும் தான் மாற்றிக்கொண்டு முழித்தார்கள்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!