இங்கு ப்ரதாப் வீட்டிலோ ராம் திருமணத்திற்காக விஷ்ணு கிளம்பி கொண்டு இருந்தாள்.. தாமரை இதழ் நிறத்தில் பட்டு புடவை உடுத்தி உடைக்கு ஏற்ற போல் வைர நெக்லஸ் காதில் கம்மல் அணிந்தவளுக்கு சமீபகாலமாக மூக்குத்தி போட ஆசை.. மாசமா இருக்க இந்த நேரத்தில் மூக்கு குத்த கூடாது என பாட்டி சொல்லி இருந்ததால்.. ரெடிமேட் ஆன்டிக் மூக்குத்தி வாங்கி இருந்தவள் அதையும் இறுதியாக போட்டு கண்ணாடியில் தன்னை பார்த்தாள்..
அவளுக்கே தான் மிகவும் அழகாக இருப்பது போன்று இருந்தது.. கண்ணாடி வழியாக மெத்தையில் லேப்டாப்பை மடியில் வைத்து வேலை செய்து கொண்டு இருந்த கணவன் தெரிந்தான்..
“இப்புடி அழகா அம்சமா பொண்டாட்டி ரெடியாகிட்டு இருக்காளே, அவளை பார்த்து இந்த கலர் சாரி உனக்கு அழகா இருக்குடி, செமையா இருக்குடி, இந்த மூக்குத்தி அள்ளுதுடி இந்த மாதிரி ஏதும் சொல்லுதா பாரு.. எப்ப பார்த்தாலும் அந்த லேப்டாப்பையே தட்டிட்டு கிடக்கிறது.. என்னவோ உலகத்தில்லே இவர் மட்டும் தான் பிசினஸ் பண்ற போல ரொம்பத்தான்” என ப்ரதாப் காதில் விழுமாறு சத்தமாகவே புலம்பினாள்..
ப்ரதாப் அதை சட்டை செய்யவில்லை ஏன் நிமிரந்து கூட பார்க்கவில்லை.. விஷ்ணுவிற்கோ கோவம் கோவமாக வந்தது.. “சரியான களிமண்ணு” என திட்டியவள்
“இப்புடியே உக்கார்ந்து தட்டிட்டு இருந்தா ராம் அண்ணா கல்யாணத்திற்கு போக முடியாது.. அவர் குழந்தை காதுக்கு குத்துக்கு தான் போக முடியும்.. சீக்கிரம் கிளம்புங்க” என்றவள் அறையிலிருந்து வெளியேறும் முன்பு கூட “ஜடம் ஜடம்” என முணுமுணுத்து கொண்டே சென்றாள்..
அவள் சென்றதும் லேப்டாப்பை மூடி வைத்துவனுக்கோ சிரிப்பு எட்டி பார்த்தது. அது கள்ள சிரிப்பு.. அது எப்படி என்றோ ஒரு நாள் தான் அவன் மனைவியே புடவை உடுத்துவாள்.. அந்த தரிசனத்தை பார்க்கமால் தவற விட அவன் ஒன்றும் அவள் கூறுவது போன்று களிமண்ணோ ஜடமோ இல்லையே.. இவ்வளவு நேரம் அவன் என்ன லேப்டாப்பில் வேலை மட்டுமா பார்த்து கொண்டு இருந்தான்.. வேலையோடு சேர்த்து அவளையும் தான் கண்ணுக்குள் நிரப்பி கொண்டு இருந்தான்..
அவளை உச்சி முதல் பாதம் வரை அங்குலம் அங்குலாமாக திருட்டு தனமாக ரசித்து கொண்டு இருந்தான்.. பாவம் விஷ்ணு பாப்பாக்கு தான் அது தெரியவில்லை.. புலம்பி கொண்டு செல்கிறது..
புடைவை அவளை எப்போதும் அவன் கண்ணுக்கு பேரழகியாக காட்டும்.. போத குறைக்கு அந்த மூக்குத்தி இன்னும் இன்னும் அவளை அழகாக காட்டியது.. ‘இந்த மூக்குத்தி இன்னைக்கு நம்மளை கவுத்துடும் போலயே’ என புலம்ப, அவ உன்னை சந்தேகப்பட்டு இருக்க அதை அதுக்குள்ள மறந்திட்டியா அவனின் ஈகோ மனது எடுத்து கொடுக்க மீண்டும் இறுக்கமானவன் குளிக்க சென்றான்…
குளித்து முடித்து டவலோடு வெளியே வந்தவன் கபோர்டிலிருந்து ஒரு ஆடையை எடுத்து கபோர்ட்டை அடைத்து விட்டு திரும்ப, மெத்தையில் அவனுக்காக அவனின் மனையாள் ட்ரெஸ் எடுத்து வைத்து இருப்பதை இப்போது தான் பார்த்தான்.. அவள் புடவை நிறமான பேபி பிங்க் நிறத்தில் சர்ட் அதே நிறத்தில் பார்டர் வைத்த ஷேஷ்டி.. நன்றாகவே இருந்தது.. சரி அதையே உடுப்போம் என நினைக்க,
அப்போது கதவை படாரென திறந்து வேகமாக உள்ளே வந்தாள் விஷ்ணு… அவளுக்கு மூச்சு வாங்குவதிலே வேகமாக படிகளில் ஏறி வந்து இருக்கிறாள் என ப்ரதாப்புக்கு புரிந்தது.. அதனால் “ம்ப்ச்” என்றவன் முறைத்தான்..
ஆனால் விஷ்ணுவோ டவலோடு நிற்கும் போது உள்ளே வந்ததால் முறைக்கிறான் என நினைத்து கொண்டு,
“என்ன ம்ப்ச் அதான் டவல் இருக்குல்ல அப்புறம் என்ன? ஏதோ இதுவரை நான் பார்த்ததே இல்லாதது போல ரொம்ப்த்தான்.. இந்த டவலே இல்லாம கூட நிறைய முறை பார்த்து இருக்கேன்.. சும்மா சீன் போட்டுக்கிட்டு” என்றவளை இன்னும் முறைத்தவன்,
‘இவளுக்கு வர வர வாய் கூடி போய்ட்டு’ என நினைத்து கொண்டான்..,
அப்போது தான் அவன் கையிலிருந்த உடையை பார்த்த விஷ்ணு இப்போது அவனை முறைத்தாள்.. “இப்புடி ஏதும் பண்ணுவீங்கன்னு தான் இவ்வளவு வேகமாக ஓடி வந்தேன்.. நான் தான் ட்ரெஸ் எடுத்து வச்சு இருக்கேன்ல அதை போடுங்க “என்றாள்..
ப்ரதாப் அதை உடுக்கும் எண்ணத்தில் தான் இருந்தான்.. ஆனால் அவள் இப்போது வந்து அழுத்தமாக சொல்லவும்,
‘இவ சொன்னா நான் கேட்கனுமா?’ என்ற ஈகோ தலை தூக்க, கையிலிருந்த சர்ட்டை அணிய போனான்..
வெடுக்கென அதை அவனிடமிருந்து பறித்து எடுத்தாள்.. ப்ரதாப் பிடுங்க கிட்ட போக, அதை கபோர்டில் வைத்து கபோர்ட்டை பூட்டி கையில் சாவியை எடுத்தவள், “நான் எடுத்து வைச்ச ட்ரெஸ்சை தான் மாமா நீங்க போடனும்.. முடியாதுன்னா இப்புடியே தான் வரனும்” என்றவள் விறுவிறுவென அறையிலிருந்து வெளியேறினாள்..
“இம்சை இம்சை” என திட்டியவன் அவள் வைத்து சென்ற வேஷ்டி சட்டையையே அணிந்தான்..
ராம் திருமணத்திற்கு ப்ரதாப் விஷ்ணு வம்சி மட்டுமே செல்கின்றனர்.. பெரியவர்கள் ரிசப்ஷனிற்கு வருகிறோம் என சொல்லி இருந்தனர்.. வம்சி மாப்பிள்ளை தோழன் அல்லவா அதனால் காலை நேரமே சென்று விட்டான்..
தேவகியிடமும் பாட்டியிடமும் போய்டு வரேன் என்று கூறிய விஷ்ணு வெளியேறினாள்.. தேவகிக்கு தான் இன்று மனமே சரியில்லை.. பவித்ராவை விட சின்ன பையன் ராம் அவனுக்கு கூட திருமணம் நடக்க போகின்றது.. தன் மகள் வாழ்க்கை இப்புடியாகி விட்டதே என கவலைபப்ட்டவர்.. அவள் வாழ்க்கையை சீக்கிரம் சீர்படுத்த வேண்டும் என மனதிற்குள் உறுதி எடுத்தார்..
காரில் ஏறி ப்ரதாப் வருவதற்காக காத்து இருந்தாள் விஷ்ணு.. ரெடியாகி வந்த ப்ரதாப் காரில் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்..
அவனை திருமணத்திற்கு பிறகு இன்று தான் வேஷ்டி சட்டையில் பார்க்கின்றாள்.. திருமணத்தின் போது அவனை ரசிக்கும் மனநிலையிலா அவள் இருந்தாள்.. ஆனால் இப்போது அவனை பார்க்கையில் ஆல்ரெடியே அவன் ஆறடி உயரத்தில் அம்சமாக தான் இருப்பான்.. இந்த ஷேஷ்டி சர்ட் அவனை இன்னும் கம்பீரமாக ஆணழகானாக காட்டியது..
பார்வையால் ரசித்ததை வாய் வார்த்தையாக சொல்லலாம் என நினைத்தால், காரில் ஏறியதிலிருந்தே ப்ரதாப்புக்கு போன் கால் வந்த வண்ணமாக இருந்தது..
விஷ்ணு வால் பேச முடியவில்லை..
கோவில் வந்து அடைந்ததும் காரை நிறுத்திய ப்ரதாப் சீட் பெல்ட்டை கழட்டி விட்டு இறங்க போக,
அவன் கைப்பிடித்து இழுத்தாள் விஷ்ணு.. “உங்களுக்கு வேஷ்டி சர்ட் செமையா இருக்கு.. இதில் உங்களை பார்க்கும் போது எனக்கு எனக்கு” என்றவள் சட்டென ப்ரதாப் எதிர்பார்க்காத நேரம் இதழோடு இதழை ஒற்றி எடுத்தாள்…
காருக்குள் வைத்து தான் என்றாலும், வெளியே யாருக்கும் காருக்குள் நடப்பது தெரியாது தான் என்றாலும், பொது இடம் அதோடு கோவில் வாசலில் வைத்து இப்புடி செய்கிளாளே என ப்ரதாப் ம்ப்ச் என உதட்டை புறங்கையால் துடைத்தபடி முறைக்க,
தான் முத்தம் கொடுத்ததும் ப்ரதாப் இப்புடி உதட்டை துடைப்பது விஷ்ணுவிற்கு ஒரு வித வலியையும் அதே நேரம் கோவத்தையும் கொடுத்தது.. காலையிலிருந்தே ப்ரதாப் எதார்த்த செயல்கள் அவளுக்கு கோவத்தை தான் கொடுத்தது..
அதனால் அப்புடி தான் முத்தம் கொடுப்பேன் என்ன பண்ணுவீங்க என்றவள் மீண்டும் அவன் சர்ட்டை பிடித்து இழுத்து இம்முறை ஆழமாகவும் அழுத்தமாகவும் முத்தமிட்டவள் ப்ரதாப் மீது இருக்கும் கோவத்திலும் உணர்வு மிகுதியிலும் உதட்டை நன்றாக கடித்து இரத்தம் வருமளவு காயம் செய்த பின்னே விடுவித்தாள்…
ப்ரதாப் தீயாய் அவளை முறைக்க.. அவளோ “ப்பா ஊறுகாய் சாப்பிட்டா காரமான தானே இருக்கும்.. ஆனா இந்த ஊறுகாய் மட்டும் இனிப்பான இருக்கே என்ன மாயம் ஊறுகாய் கடை முதலாளி” என அவன் இதழை பார்த்து கண்ணடித்து சொன்னவள் ப்ரதாப் கோவம் எகிறி கொண்டே செல்வது தெரிந்து வேகமாக காரிலிருந்து இறங்கினாள்..
கார் மிரர் வழியாக இரத்ததை துடைத்த ப்ரதாப் சிவந்து காயமாக இருந்த இதழை பார்த்து, ‘எருமை எருமை என்ன வேலை பார்த்து வச்சு இருக்கா பாரு, வெறி பிடிச்ச பொம்மேரியன் டாக் போல கடிச்சு வச்சு இருக்கா, இப்புடியே வெளிய போனா மானம் போகும், இவளை வச்சிட்டு சரியான இம்சை நானே தேடிக்கிட்ட இம்சை’ என மனையாளை திட்டி கொண்டே டேஷ் போர்டில் இருந்த மாஸ்க்கை அணிந்து கொண்டு கீழே இறங்கினான் ப்ரதாப்..