Mr and Mrs விஷ்ணு 69

4.8
(47)

பாகம் 69

“ப்ரோ என்னாச்சு?” ப்ரதாப் முகத்தில் இருந்த மாஸ்கக்கை பார்த்து அதிர்ந்த வம்சி கேட்டான்..

பக்கத்தில் வந்த விஷ்ணு உதடு கடித்து வந்த சிரிப்பை அடக்கி கொண்டு “அது வந்து வம்சி உதட்டில்ல” என  ஏதோ சொல்ல வர,

கண்டிப்பா விவகாரமா தான் எதையாவது சொல்லி மானத்தை வாங்குவாள்  என பயந்த ப்ரதாப் அவளின் கையை அழுத்தமாக பிடித்து முறைத்து சொல்ல விடாமல் தடுத்து விட்டு,

“இன்ஃபெக்ஷன்” என்றான்..

“இன்ஃபெக்ஷன்னா?

என்ன இன்ஃபெக்ஷன் ப்ரோ? மார்னிங் பார்க்கும் போது ஏதும் தெரியலையே, கொஞ்ச நேரம் முன்ன கூட கிளம்பிட்டிங்களான்னு கேட்க வீடியோ கால் பண்ணுனனே, கார்ல வந்துட்டு இருக்கேன் சொல்லும்  போது கூட ஃபேஸ் நல்லா தானே இருந்துச்சு ப்ரோ தீடீர்னு எப்புடி இன்ஃபெக்ஷன் வந்துச்சு”  என ப்ரதாப்பை ஒரு மாதிரியாக பார்த்து கேட்டான்.. 

‘அய்யோ இவன் வேற சி.ஐ.டி சங்கர் போல துருவி துருவி கேட்டுட்டு  என கடுப்பான ப்ரதாப்.. 

எப்புடியோ வந்துடுச்சு..  இந்த ஆராய்ச்சி உனக்கு ரொம்ப முக்கியமா? உள்ளே போகலாம் வாடா கேள்வி மேல்ல கேள்வியை கேட்டுட்டு” என்ற கடுப்பாக ப்ரதாப் கோவிலுக்குள் செல்ல,

‘ஒரு அக்கறையில் கேட்டா இவ்வளோ கோவப்படுறாரே’ என நினைத்த வம்சி, அங்கே சிரிப்பை அடக்கி நின்ற விஷ்ணுவை பார்த்து,

“அது எப்புடி பேபி தீடிர்னு இன்ஃபெக்ஷன் வரும்” என நாடியில் கை வைத்து யோசனையாக விஷ்ணுவிடம் கேட்க,

“அது எல்லாம் தெரிஞ்சிக்கிற அளவு நீங்க இன்னும் வளரல வம்சி” என்றவள், அதிர்ந்து நின்ற வம்சியை பார்த்து சிரித்து விட்டு உள்ளே சென்றாள்..

‘இதுக்கு மேலேயுமா வளரனும் என்னவோ இந்த இன்ஃபெக்ஷன்ல்ல இருக்கு கண்டுபிடிக்கிறேன்டா’ என்றபடி வம்சியும் உள்ளே சென்றான்..

கோவில் பிரகாரத்தில் சாமி சன்னதி முன்னே மாலையும் கழுத்துமாக ராம் லீலா நின்று இருந்தனர்.. அவர்களை சுற்றி இரு வீட்டு ஆட்கள் மற்றும் நெருங்கிய சில உறவுகள் மட்டும் நின்று இருந்தனர்.. ராம் அருகே வம்சி ப்ரதாப் நின்று இருந்தனர்.. லீலா அருகே விஷ்ணு நிவேதா நின்று இருந்தனர்..

ராம் முகத்தில் அவனின் அகத்தின்  மகிழ்ச்சி தெரிந்தது.. அருகில் இருந்த லீலா முகத்திலோ அவள் மனதின் குழப்பம் அப்பட்டமாக தெரிய,

“முகத்தை கொஞ்சம் சிரிச்ச போல வச்சுக்கோம்மா, பார்க்கிறாங்க நான் ஏதோ உன்னை மிரட்டி கல்யாணம் பண்றைன்னு நினைச்சுக்க போறாங்க” என ராம் சற்று லீலா புறம் குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொல்ல,

அதற்கு லீலா வலுக்கட்டாயமாக சிரித்த போல முகத்தை வைத்து கொள்ள, “இதுக்கு முன்ன இருந்த முகம் எவ்வளோவோ பெட்டர்” என்றான் மீண்டும் அதே குரலில்,

அவனை லீலா முறைக்கவும், ராம் பயந்த போல பாவனை செய்யவும், அதில் லீலாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.. 

“இப்புடியே தாலி கட்டுற வர முகம் வச்சிக்கோம்மா போதும்” என்றான் ராம்.. லீலாவும் மனதில் இருக்கும் குழப்பங்களை தற்போது தள்ளி வைத்து விட்டு ராம் சொன்னது போன்று இயல்பாக முகத்தை வைத்து கொண்டாள்.. 

சற்று நேரத்தில் சாமி பாதத்தில் வைத்து எடுக்கப்பட்ட மங்கல நாணை ஐயர் ராம் கையில் கொடுக்க, அதை கையில் வாங்கி கண்மூடி ஒரு நொடி கடவுளை வேண்டிய ராம், அவன் மனம் நிறைந்தவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னவளாக்கி கொண்டான்.. லீலாவும் மனமுவந்து அதை ஏற்று கொண்டாள்.. கண் ஓரத்தில் கண்ணீர்  வந்து எட்டி பார்க்க கஷ்டப்பட்டு உள்ளுழுத்து கொண்டாள்.. 

அந்த இடத்தில் இருந்த அனைவரும் மனம் நிறைந்த சந்தோஷத்துடன் அர்ச்சதை தூவி ஆசிர்வதிக்க, சாலாவுக்கு மட்டும் தான் இதை இன்னும் ஏற்க முடியவில்லை.. 

இதை பார்க்க பார்க்க மனம் கொதித்தது.. ராம் லீலா மீது கோவம் கோவமாக வந்தது.. அதை விட ராம் அருகே நின்று இருந்த ப்ரதாப்பை பார்க்கையில் பற்றி கொண்டு வந்தது.. லீலா கல்யாணம் விஷயம் கேள்விப்பட்ட அவரின் சொந்தங்கள் தோழிகள் என எத்தனை பேர் அவரை அழைத்து ஏன் என்னாச்சு என அக்கறையாக விசாரிப்பது போன்று எத்தனை கேலி கிண்டல் அவமானம் அத்தனைக்கும் இந்த ப்ரதாப் தானே காரணம்.. அவன் மீது கோவம் கோவமாக வந்தது.. ஒரு நாள் கிடைக்கும் அப்ப இந்த ப்ரதாப்பை கலங்க வைக்கிறேன் என்றவர் பார்வை ப்ரதாப் அருகே சிரித்தபடி நின்று இருந்த விஷ்ணு மீது படிந்தது… 

விஷ்ணுவையும் அவள் அருகே நின்று இருந்த ப்ரதாப்பையுமே சிறிது நேரம் கவனித்து கொண்டு இருந்தார்.. அவள் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.. ஆனால் அவள்  முகத்தின் ஏற்படும் சின்ன மாற்றத்தை வைத்தே அவளுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து ப்ரதாப் தண்ணி கொடுப்பது மற்றவர்கள் பார்க்கின்றார்கள் என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாது கூட்டத்திற்குள் நிற்பவளுக்கு வியர்க்கவே கட்சிப் கொண்டு துடைத்து விடுவது என யாருடன் நின்று பேசி கோண்டு இருந்தாலும் ப்ரதாப்பின் பார்வை, கவனம் எல்லாம் அவளிடம் மட்டுமே.. 

ப்ரதாப்பை கலங்க வைக்கும் துடிக்க வைக்கும் ஆயுதம் எது என்பது சாலாவுக்கு தெரிந்தது.. நேரம் காலம் கூடி வரட்டும் இரண்டு பேருக்கும் இருக்கு என தேவையில்லாத வன்மத்தை வளர்த்து கொண்டார் சாலா..

அடுத்தடுத்த சடங்குகள் முடிய ராம் லீலா இருவரையும் ஒவ்வொருவராக அருகே வந்து வாழ்த்தினார்.. 

வம்சி ப்ரதாப் விஷ்ணு என அங்கிருந்த ஒவ்வொருவராக வாழ்த்து சொல்ல,

அடுத்து இவர்கள் அருகே வந்த நிவி லீலா கையில் கொண்டு வந்து இருந்த பரிசு பொருளை கொடுத்தவள், “இவன் பண்ணுன வேலைக்கு ரேப் கேஸ் போட்டு உள்ள தள்ளிருதை விட்டுட்டு கல்யாணம் பண்ணி இருக்கியே உனக்கே எல்லாம் மூளை இருக்கா” லீலாவை முறைத்தபடி நிவேதா கேட்க,

அதில் அதிர்ந்த ராம் சுற்றி முற்றி பார்த்தான்.. நல்ல வேளை இவர்களை சுற்றி யாரும் இல்லை.‌ சற்று தள்ளி தான் நின்று இருந்தனர்.. வம்சி மட்டும் இவர்கள் அருகே நின்று இருந்தான்.. நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டான்.. இவள் பேசியது மட்டும் யார் காலத்திலாவது விழுந்து இருந்தால் என்ன செய்வது, 

“இவளை” பல்லை கடித்த வம்சியோ “வா” என கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றான்.. 

“விடுங்க வம்சி”..

“கை வலிக்குது வம்சி”..

“விடு”.. 

“விடுடா”.. நிவி கத்தியும் பயனில்லை.. 

கோவில் பின்புறம் வந்ததும் கையை விட்ட வம்சி, “இன்னோரு தரம் டா சொன்ன பல்லை பேத்து கையில் கொடுப்பேன் டி”..

“என்னை எதுக்கு இப்புடி இழுத்துட்டு வந்த” என கத்தியவள் வம்சி யின் முறைப்பில் வந்தீங்க என மரியாதையுடன் முடிக்க.

“உனக்கு கொஞ்ச கூட அறிவே இல்லையா நிவி, அப்புடி தான் பேசுவியா” வம்சி கோபப்பட,

“உண்மையை தானே சொன்னேன்.. அதில் ஒன்னும் பொய் இல்லையே”,

“அம்மா உண்மை விளிம்பி தான் நீங்க.. அதை எல்லாம் எல்லா பக்கமும் காட்ட வேண்டாம்.. உனக்கு எத்தனை தரம் சொல்றது.. அடுத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்காதன்னு” என கோவப்பட்டவன்,

பின்பு “அவங்க அவங்க வாழ்க்கையை அவங்க அவங்க பார்த்துப்பாங்க.. சரி பண்ணிப்பாங்க.. நாமா நம்ம வாழ்க்கையை சரி பண்றதை பத்தி பார்ப்பாமா” அவள் அருகே வந்து இரண்டு கையை பற்றியபடி வம்சி கேட்க,

“அவன் கைகளிலிருந்து தன் கையை உருவி எடுத்தவள் நம்ம வாழ்க்கையா?  எதுக்கு சேர்த்தி சொல்றீங்க.. உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க.. என் வாழ்க்கையை நான் பார்த்துக்கிறேன்” எடுத்தெறிந்து அலட்சியமாக பதில் அளித்தாள்.. 

“கல்யாணம் ஆகிட்டு டி நமக்கு, இனி உன் வாழ்க்கை என் வாழ்க்கைன்னு பிரிச்சு பேச கூடாதுடி மண்டு” அவள் தலையில் கொட்டியபடி சொல்ல,

“அதையே திரும்ப திரும்ப ஏன் சொல்றீங்க வம்சி? அது முடிஞ்சு போன விஷயம் திரும்ப அதை ஆரம்பிக்காதீங்க.. வேணாம் விட்டுருங்க” என்றவள் கைப்பிடித்து இழுத்து நெருக்கமாக நிற்க வைத்து கன்னத்தை கைகளில் ஏந்தியவன்,

“திரும்ப திரும்ப வேணாம் வேணாம்ன்னு சொல்லதடி, உண்மையா நீ அதை சொல்லும் போது கோவத்தை விட அதிகமா வலிக்குதுடி, சாரி ரொம்ப சாரி, நாலு வருஷம் முன்னாடி நீ ஏதோ உன் அப்பா விஷயத்தில் உண்டான குழப்பத்தில் வேணாம்ன்னு, நீ என்ன ஏமாத்திருவ.. வேற பொண்ணுங்கிட்ட போவன்னு சொன்ன போது நான் பொறுமையா புரிய வச்சு இருக்கனும்.‌ ஆனா நானும் நீ வேண்டான்னு சொன்ன கோவத்தில் போடின்னு சொல்லிட்டு போய்ட்டேன்”.. 

“ஆனா போன கொஞ்ச நாளிலே எனக்கு தெரிஞ்சு போயிட்டு, என்னால் உன்னை விட்டுட்டு இருக்க முடியாதுன்னு.. உடனே வந்து உன்கிட்ட இதை எல்லாம் சொல்லனும் வரும்னு தோணுச்சு, ஆனா வந்து நான் எவ்ளோ சொன்னாலும் அப்ப நீ இருந்த மனநிலைக்கு புரியாது.. கொஞ்ச நாள் போனா வயசு அதிகமாக அதிகமாக பக்குவப்படுவன்னு பார்த்தா, என் வேதாளம் ஏறுன மரத்திலிருந்து இறங்கவே மாட்டேன்னு அடம் பிடிக்குது”..

“நிவி நான் பொண்ணுங்க கிட்ட ஜாலியா பேசலாம்.. விளையாடலாம்.. ஏன் கடலை கூட போடலாம் ஆனா அது எல்லாம் வேற, அது எல்லாம் சும்மா அந்த நிமிஷ சந்தோஷம் அவ்ளோ தான்.‌ அதை எல்லாம் நான் அப்பவே மறந்திருவேன்டி”.. 

“ஆனா நீ வேற, உன்னோட நான் பழகினது வெறும் ஜாலிக்காக மட்டும் இல்லை.. நீ என்கிட்ட பேசுன ஒரு ஒரு வார்த்தையும் எனக்கு மனப்பாடம்.‌ அவ்ளோ நியாபக்ததில் இருக்கு.. நீ என் கண்ணுக்குள்ள இருக்கடி.. அப்புடி இருக்கையில் உன்னை தாண்டி நான் எப்புடி டி போவேன்.. நான் கடைசி வரை உன் கூட இருப்பேன்.. என்னை நம்புடி ப்ளீஸ்.. நுவே மா ப்ரியத்தம்மா.. நுவே மா ப்ரேமா.. நுவே மா ப்ராணன்.. ஐ லவ் யூடி மை வேதாளம்” என அவள் நெற்றி முட்டியவன் 

“நிவி என் கண்ணை பாருடி.. அதில் உனக்கான காதல் தவிப்பு அதில் இருக்க உண்மை தெரியலையாடி” என கேட்க, அவன் கண்ணை பார்த்தபடி நின்றாள்.. அதில் தெரிந்த தனக்கான காதலை பார்க்கும் பொழுது கர்வமாக இருந்தது.. வம்சியை பார்த்தப்படியே நின்றாள்.. நினைவு பின்னோக்கி அவனோடு சுற்றி திரிந்த காலத்துக்கு சென்றது.. அந்த நினைவு அவளை கொஞ்சம் கொஞ்சமாக கரைக்க பார்த்தது..

ஆனால் அதை கெடுக்கும் விதமாக அவள் தந்தை நினைவடுக்கில் வந்தார்.‌ அவர் தாய்க்கு செய்த துரோகம்.. கோர்டில் வைத்து பேசிய வார்த்தைகள் முன்னுக்கு வந்து அவளை எச்சரிக்க கன்னத்தில் இருந்த வம்சி கையை தட்டி விட்டவள் விலக பார்க்க,

இவ்வளோ சொல்லியும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறாளே ஆதங்கமாக இருந்தது வம்சிக்கு.. இருந்தும் நிவி “புரிஞ்சிக்கோடி என் அம்மா ராம் கல்யாண விஷயம் கேள்விப்பட்டதிலிருந்து என் கல்யாண பேச்சை ஆரம்பிச்சுட்டாங்க.‌ தீவிரமா பொண்ணு பார்க்கிறாங்கடி, புரிஞ்சுக்கோடி.. ப்ளீஸ் என்னை நம்புடி” என அவள் மனதை எப்புடியாவது மாத்த வேண்டும் என அவன் கிட்டதட்ட கெஞ்சும் நிலைக்கு வந்து விட,

“அதுக்கு நான் என்ன பண்றது அது உங்க பிரச்சினை”  என்ற அவளின் அலட்சியமான பதிலில் வம்சிக்கு  சுர்ரென்று ஏற,

“உன்கிட்ட எல்லாம் போய் இவ்வளோ உருக்கமா காதல் வசனம் பேசுவேன் பாரு, என்னை தான்டி செருப்பால் அடிக்கனும், நீ எதுவும் பண்ணி கிழிக்க வேணாம்.‌ நான் பேச வேண்டியவங்கிட்ட பேசிக்கிறேன்.‌.. கிளம்பு” என அவள் தலையில் அடித்து தள்ளி விட,

“யாருகிட்ட”நிவேதா கேட்டாள்..

“ஹான் என் மாமியார் கிட்ட தான்”..

“வம்சி வேணாம் வேணாம் அம்மாகிட்ட எதுவும் சொல்லாதீங்க ப்ளீஸ்”.. 

“முடியாது முடியாது போடி அசாலாட்டாவ பேசுற.. நான் போறேன் காவேரிக்கிட்ட, உங்க பொண்ணு என்னை காதலிச்சு ஏமாத்திட்டா எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்கன்னு கேட்கிறேன்” என வம்சி அங்கிருந்து நகர,

அவன் கைப்பிடித்து தடுத்த நிவேதாவோ “வம்சி ப்ளீஸ் வேணாம் அம்மாகிட்ட எதுவும் சொல்லாதீங்க.. ஏதோ வயசு கோளாறில் லவ் பண்றேன்னு அப்ப சொல்லிட்டேன்.. இப்ப உண்மையாவே அப்புடி ஒரு பீலிங்கிஸ் உங்க மேல்ல இல்லை.. நான் எல்லாத்தையும் மறந்துட்டேன்.. நீங்களும் மறந்துருங்க.. அம்மாகிட்ட எதுவும் சொல்லாதீங்க ப்ளீஸ் ப்ளீஸ்” என கெஞ்ச,

“ஆ.. நீ பேச பேச எனக்கு வெறியாகுது.. என் கையை விட்டு என்கிட்ட பேசாத அப்புறம் கோவத்தில் கல்லை எடுத்து மண்டையை உடைச்சாலும் உடைச்சிடுவேன் போடி” வம்சி கோபப்பட,

“அம்மாகிட்ட சொல்ல மாட்டேன் சொல்லுங்க அப்ப தான் விடுவேன்”.‌ 

“முடியாது டி சொல்லுவேன்”.. 

“வம்சி ப்ளீஸ் நாம இதை பத்தி இன்னோரு நாள் பேசுவோமே.. இப்ப வேணாம் அம்மா கிட்ட எதுவும் சொல்லாதீங்க ப்ளீஸ் வம்சி ப்ளீஸ் ப்ளீஸ் என நிவி பாவமாக முகத்தை வைத்து கெஞ்ச,

பாவமாக இருந்தது.. அவனுக்கும் காவேரியிடம் இதை இப்ப சொல்ல விருப்பமில்லை..  முதலில் நிவியை சமாதானம் பண்ணி பின்பு தன் வீட்டில் சொல்லி  அம்மாவை சம்ம்திக்க வச்சு அதன் பின்பே காவேரியிடம் முறையாக சொல்லும் முடிவு தான்.. 

ஆனால் நிவி பேசிய கோவத்தில் அவ்வாறு சொன்னான்.. 

“ம்…  நீ பேசி பேசி என்னை ரொம்ப டென்ஷன் பண்ணிட்ட, அதனால்ல அந்த டென்ஷனை குறைக்க  ஒரு முத்தம் கொடு.. அப்ப வேணா சொல்லலாம் வோணாமான்னு யோசிக்கிறேன்” வம்சி அவள் ஏற்படுத்திய கடுப்பில் அவ்வாறு கூற,

அதில் கடுப்பான நிவேதா “பொறுக்கி” என திட்ட,

“இது சரிப்பட்டு வராது.. மாமியாரேரேரே” வம்சி நகர,

“வம்சி ப்ளீஸ் வேணாம்.. உங்களை பிடிக்கலைன்னு சொல்ற பொண்ணுக்கிட்ட போய் இப்புடி கேட்றீங்களே, பொண்டாட்டியா இருந்தாலும் நோ மீன்ஸ் நோ தான்”..

“அந்த ஈரவெங்காயம் எல்லாம் எங்களுக்கு தெரியும்.. நீ சொல்றதை செய்.. இல்லைன்னா நான்”..

“அச்சோ சரி சரி என்றவள் கோவில் வச்சு விவஸ்தை இல்லாம என்ன பண்ண சொல்றான் பாரு” என புலம்ப..

“ஆமா இதுக்கு முன்ன கோவிலுக்கு பின்ன வச்சு முத்தம் கொடுக்காதவ போல ரொம்ப சீன் போடாதடி”

“கன்னத்தில் தான் ஓகேவா” நிவி கேட்க.. 

“ம்க்கும் கன்னத்திற்கே  ஒருமணி நேரத்திற்கு போராடி வேண்டி இருக்கு என நிலைமை குடுத்து தொலை” வம்சி கன்னத்தை காட்ட, 

சுற்றி முற்றியும் பார்த்து கொண்டு அவன் கன்னத்து அருகே நெருங்கி வந்தாள் நிவி..

“ஆ… எருமை எருமை” கத்தியபடி கன்னத்தை பிடித்தான் வம்சி.. வலிக்கும் படி தன் பற்தடம் பதியும் படி கடித்து வைத்த நிவேதா.. 

“இனிமே முத்தம் அது இதுன்னு கிட்ட வந்து அவ்ளோ தான்” என்று மிரட்டியவள் அங்கிருந்து ஓட,

“எனக்கு ஒரு நேரம் வரும்டி அப்ப இதுக்கு எல்லாம் சேர்த்து உனக்கு இருக்குடி” என்ற கன்னத்தை பற்றிய வம்சி.. 

அய்யோ வலிக்குதே வலிக்குதே என்றபடி தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்து அதன் ஸ்கீரினில் முகத்தை பார்க்க, வட்டமாக நன்றாகவே பதிந்து இருந்தது நிவியின் பல்தடம்.. 

அண்ணன்காரனுக்கு வந்த தீடீர் இன்ஃபெக்ஷன் எப்புடி என்பது இப்போது விளங்கியது.. 

எங்க போனீங்க வம்சி  இவ்வளோ நேரமா காணோம்.. ஆமா ஏன் கன்னத்தில் கை வச்சு இருக்கீங்க விஷ்ணு தான் கேட்டது.. 

கன்னத்தை கை கொண்டு மறைத்தபடி வந்த வம்சியிடம்,

அது வந்து  இன்னோரு மாஸ்க் வச்சு இருக்கீங்களா அண்ணன்யா விஷ்ணு அருகே அமர்ந்து இருந்த ப்ரதாப்பிடம்  வம்சி கேட்க,

எதுக்கு? விஷ்ணு தான் கேட்டது.‌ ப்ரதாப் அழுத்தமாக பார்த்து கொண்டு மட்டும் தான் இருந்தான்..

“அது அது எனக்கும் இன்பெக்ஷன் வந்துட்டு அதான் வம்சி சொல்ல, 

“அது எப்புடி தீடீர்னு வரும்” ப்ரதாப் கொஞ்சம் கோவமாக கேட்க.. 

“உங்களுக்கு தீடீர்னு வந்த போல எனக்கும் தீடீர்னு வந்துட்டு ப்ரோ” என்ற பதிலில் 

விஷ்ணு விழுந்து விழுந்து சிரிக்க, ப்ரதாப்போ ஏகத்துக்கும் முறைத்தான்… 

“உங்ககிட்ட மாஸ்க் இல்லை போல நான் வேற யார்க் கிட்டயாவது வாங்கிக்கிறேன்” என வம்சி விட்டால் போதும் என்ற குறையாக ஓடினான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 47

No votes so far! Be the first to rate this post.

1 thought on “Mr and Mrs விஷ்ணு 69”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!