Mr and Mrs விஷ்ணு 7

4.5
(37)

பாகம் 7

“அய்யோ மானமே போச்சு போச்சு” என விஷ்ணு அவசரமாக எழ கீழே விழுந்ததில் பின் குத்தாமல் கட்டிய புடவை மடிப்பு அவிழ்ந்தது அதை குனிந்து பிடிக்க போக மாராப்பும் சரிந்தது.. அவளோ அதிர்ச்சியோடே ப்ரதாப்பை பார்க்க,

“மேடம் மேடம் நீங்க சொன்ன இடம் வந்துருச்சு” என்ற ஆட்டோகாரின் குரல் பழைய நினைவுகளில் இருந்தவளை கலைத்தது..

“ஆஹான்” என்று முழித்த விஷ்ணு வெளியே பார்க்க தன் வீட்டின் முன்பு ஆட்டோ நின்றது.. தன் தலையில் தட்டி கொண்டவள் கையிலிருந்த பர்ஸில் இருந்து ஆட்டோவுக்கான பணத்தை எடுத்து ட்ரைவர் கையில் கொடுத்து விட்டு கீழே இறங்கினாள்..

ஆட்டோ கிளம்பியதும் தன் வீட்டின் கேட்டை திறந்து உள்ளே சென்றவள் திரும்பி கேட்டை அடைக்கும் போது கண் தானாக எதிர்த்த வீட்டை பார்த்தது.. அங்கு தானே முன்பு ப்ரதாப்பும் அவன் வீட்டினர்ரும் இருந்தனர்.. இப்போது யாரும் அங்கு இல்லை பூட்டப்பட்டு இருந்தது.. அதை பார்த்து பெருமூச்சை ஒன்றை விட்டுட்டு வீட்டிற்குள் சென்றாள்..

வாசலில் செருப்பை கழட்டி விட்டு உள்ளே செல்ல அவளை பார்த்த கல்யாணி “பார்த்தி எங்கடி”? என்று வாசலை பார்க்க,

“கொஞ்ச நேரம் கழிச்சு வருவான்மா” என்ற விஷ்ணு ஹெக் பேக்கை கழட்டி போட்டு விட்டு ஷோபாவில் அமர்ந்தாள்..

“எத்தனை தடவை தான்டி உங்க இரண்டு பேருக்கும் மாறி மாறி போன் பண்றது.. எடுத்து பேசுனாதா என்ன?”என்றவர்

“அங்க என்ன ஆச்சுடி பார்த்தி எங்க போனான்” என்று மறுபடியும் கேட்டார்.. காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போதே இந்த விவகாரத்து எல்லாம் வேணாம் பார்த்தி எப்புடியாவது பவித்ராவை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வந்துரு,உன் தங்கச்சி வாழ்க்கையும் இதுல தான்டா இருக்கு என்று பார்த்திபனிடம் பல முறை கூறி தான் அனுப்பி இருந்தார்.. அப்புடி தான் நடந்திருக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு தான் இப்போது கேட்கிறார்..

விஷ்ணு பதிலளிக்காமல் அமைதியாக இருக்கவும் அவளின் முகம் சரியில்லை என்பதை உணர்ந்த உதயகுமார், “அங்க எதுவும் பிரச்சனையா ப்ரியாமா” என்று கேட்டார்..

ஆம் என்று தலையசைத்த விஷ்ணு அனைத்தையும் கூறி முடிக்க..

“அச்சோ” என்று அதிர்ந்த கல்யாணி நெஞ்சில் கை வைத்து ஷோபாவில் தொப்பென்று அமர்ந்தார் கல்யாணி..

அம்மா என்று விஷ்ணுவும், கலை என்று உதயகுமாரும் பதறியபடி அவர் அருகில் வந்தனர்..

“அம்மா ஒன்னுமில்ல எமோஷனல் ஆகாத, உனக்கு ப்ரெஷர் அதிகமாயிரும் “என்று அவரின் கைபிடித்தாள் விஷ்ணு..

“கலை பதட்டப்படாமல் இரு இந்தா தண்ணியை குடி” என்று உதயகுமார் தண்ணீர் பாட்டிலை கொடுத்தார்..

அவரின் கையை தட்டி விட்ட கல்யாணி, “எல்லாம் உங்களா தான் வந்தது.. நான் எவ்ளோ தலைபாடா அடிச்சுக்கிட்டேன்.. இந்த காதல் கண்றாவி எல்லாம் வேண்டாம்னு கேட்டிங்களா நீங்க, இப்ப என் பையன் பொண்ணு இரண்டு பேர் வாழ்க்கையும் வீணா போயிருச்சு” என்று அழ ஆரம்பித்தார்..

“மா எதுக்கு இப்ப அழற ஒன்னுமில்ல கொஞ்சம் அயைதியா இரு ,உடம்புக்கு ஏதாவது வந்துர போகுது” என்று விஷ்ணு சமாதானம் கூறினாலும் கல்யாணி கேட்கவில்லை..

“ஆமா கலை எல்லாம் சரியாகும் நீ கவலைப்படாதே” என்றார் உதயகுமார்..

“இனி சரியாக என்ன இருக்கு.. எதுவும் சரியாக போறதில்லை.. பார்த்தி அவன் வாழ்க்கையை தொலைச்சிட்டான்.. கூடவே ப்ரியா வாழ்க்கையையும் சேர்த்து பாழாக்கிட்டான்” என்றவர் இன்னும் அழுதவர்,

மேலும் “அவங்க பொண்ணு பவித்ரா கோவிச்சிட்டு அங்க போனதற்கு, இவளை இங்க அனுப்பி வச்சிட்டாங்க.. இப்ப பார்த்தி பவித்ராவை டைவர்ஸ் பண்ணிட்டான்.. அடுத்து நம்ம ப்ரியாவையும் மாப்பிள்ளை என்ற கல்யாணியை,

“அம்மா கொஞ்சம் அமைதியா இரு, நீயா எதையாவது கற்பனை பண்ணிட்டு கவலைப்படாத” என்று சத்தம் போட்டாள் விஷ்ணு..

“நான் என்னடி கற்பனை பண்ணி பேசுறேன்.. நீ இங்க வந்து ஏழு மாசமாகுது, இப்ப வரை கிணத்துல போட்ட கல்லாட்ட கிடக்கு உன் வாழ்க்கை” என்று மீண்டும் கல்யாணி புலம்ப துவங்க..

இருக்கிற கடுப்பு பத்தாதுன்னு இந்த கல்யாணி வேற என்று சலிப்பாக இருபுறமும் தலை அசைத்த விஷ்ணு,அப்போது தான் சுவரில் மாட்டி இருந்த கடிகாரத்தை பார்க்க மணி 11:45 என்று காட்டியது.. “அச்சச்சோ” என்று தலையில் கை வைத்தபடி அவசரமாக எழ,

“என்ன ப்ரியாமா என்ன ஆச்சு”? என்று உதயகுமார் பதறினார்..

இல்லப்பா ஆபிஸில் இன்னைக்கு லீவ் கிடைக்கல, டூ ஹவர்ஸ் பர்மிசன் தான் கொடுத்தாங்க.. 12 க்ளாக் ஆபிஸில் இருக்கனும்.. டைம் ஆகிருச்சு… இன்னைக்கு முக்கியமான மீட்டிங் வேற இருக்கு என்றவள்,

“அம்மா எழுந்திரு எனக்கு ஆபிஸ்க்கு டைம் ஆச்சு என் ஹேன்ட் பேக் மேல்ல தான் நீ உட்கார்ந்திட்டு இருக்க” என்றாள் விஷ்ணு..

அதை கேட்ட கல்யாணியோ, “ஏன்டி நான் இங்க உன் வாழ்க்கை இப்புடி போயிருச்சேன்னு கவலைப்பட்டு இருக்கேன்.. ஆனா உனக்கு அந்த கவலை எதுவும் இல்லாமா ஆபிஸ்க்கு லேட்டாயிருச்சுன்னு கவலைப்பட்டு இருக்க, உனக்கு இப்ப ஆபிஸ் தான் முக்கியமான போச்சா” என கோவப்பட்டார்..

“கல்யாணி கடுப்பாக்காத, லேட்டா போனா என் எம்.டி காய்ச்சி எடுத்துருவாரு.. அவரை பத்தி உனக்கு என்ன தெரியும் .. ஒரு நாள் வந்து திட்டு வாங்கி பாரு அப்ப தான் உனக்கு என் கஷ்டம் தெரியும் என்றவள் ஹேண்ட் பேக்கையும் வண்டி சாவியையும் எடுத்து கொண்டு வெளியேற,ம்

“உன்னை யாருடி அவ்ளோ கஷ்டபட சொல்றா,வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்க வேண்டியது தானே, இங்கிருந்து நீ இப்புடி வேலைக்கு போறதுக்கு, மாப்பிள்ளையும் அவங்க வீட்டு ஆளுங்களும் எங்களை தான் தப்பா எடுத்துப்பாங்க.. எத்தனை தடவை சொல்றேன் வேலையும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம்னு சொல்ற பேச்சை கேட்கிறயா நீ” என்று கல்யாணி கடிந்து கொள்ள,

“அப்பா”என்று விஷ்ணு உதயகுமாரை பார்க்க,

“நான் பார்த்துக்கிறேன் மா நீ கிளம்பு” எனும் வகையில் அவர் தலை அசைக்க, விஷ்ணுவும் தனது பேண்ட் பேக்கை எடுத்து கொண்டு வெளியே வந்தவள் அங்கு நின்றிருந்த தனது வண்டியில் வேகமாக கிளம்பினாள்..

“எப்புடி நான் சொல்ல சொல்ல என் பேச்சை கேட்கமா போறா பாருங்க” என்றார் கல்யாணி…

“கலை கொஞ்சம் அமைதியா இரு.. அவ இப்ப இருக்க மன நிலைமைக்கு வேலைக்கு போறது தான் சரியா இருக்கும்.. ப்ரியா வாழ்க்கையை நினைச்சு நீ கவலைப்படாத, இத்தனை மாசமும் அதுவா சரியாகும் நினைச்சு அமைதியா இருந்தேன்.. நான் நாளைக்கே மாப்பிள்ளையை நேர்ல போய் பார்த்து பேசுறேன்.. அவர் என்ன முடிவில் இருக்காங்கன்னு கேட்டுட்டு வரேன்” என்றார் உதயகுமார்..

“இல்லைங்க இப்ப நீங்க போக வேண்டாங்க.. பவித்ரா விவகாரத்து விஷயத்தில் கோவமா இருப்பாங்க.. கொஞ்ச நாள் போகட்டும் அவங்க கோவம் குறைஞ்சதும் மாப்பிள்ளை கிட்ட பேசுங்க” என்று கல்யாணி கூறியதும் அதுவே சரியென உதயகுமார்க்கும் பட்டது..

ப்ரதாப் வீட்டிலிருந்து இங்கு வந்த இரண்டு மாதத்திலே அவளது படிப்பு முடிந்தது.. அதன் பிறகு ஒரு மாதம் வீட்டில் இருந்தவளுக்கு சும்மாவே இருப்பது கடினமாக இருந்தது.. திருமணத்திற்கு முன்பு போல் படம் பாட்டு கொரியன் சீரியஸ் என்று பொழுதை கழிக்கலாம் என்றால் மனம் எதிலுமே லயிக்கவில்லை.. நினைவில் ஏதேதோ தோன்றி அலைகழித்தது.. வீட்டில் சும்மா இருந்தால் இப்புடி தான் தோன்றும் என்று விஷ்ணு ஒரு கன்ஸ்டரக்ஷன் கம்பெனியில் வேலைக்கு அப்பளை செய்ய கிடைத்து விட்டது..

அவளுக்கு மட்டும் இன்று ஆபிஸ் போகும் மனநிலையிலா இருக்கிறாள்.. நேற்றே அவள் எம்.டியிடம் லீவ் கேட்க, அந்த சிடுமூஞ்சி எம்.டியோ லீவ் எல்லாம் கிடையாது என ஸ்ட்ரிட்டாக கூறி விட,

அய்யோ சார் ரொம்ப அவசரம் கோர்ட் அண்ணா டிவோர்ஸ் கேஸ் ஹியரிங் வருது என சொல்ல,

“உன் அண்ணா டிவோர்ஸ் தானே, உன்னதில்லையே நீ ஏன் போகனும், லீவ் எல்லாம் கிடையாதுது என்றவரிடம், கெஞ்சி கூத்தாடா,

மனமிறங்கிய அந்த மகா பிரபுவோ கொடுத்தது என்னவோ இரண்டு மணி நேர பர்மிஷன்.. டூ ஹவர்ஸ் தாண்டி ஒன் மினிட் லேட்டானாலும் அவ்வளவு தான் என மிரட்ட வேறு செய்திருந்தார்..

“எனக்கு புருஷனும் சரியா அமையலை.. எம்.டியூம் சரியா அமையலை” என புலம்பியவள் “தாங்க் யூ சார் ஓகே சார்” என்று இருந்தாள்.. இப்போதோ கண்டிப்பாக லேட் ஆகி விடும்.. கண்டபடி திட்டு விழ போகுது என்றபடி வண்டியை வேகமாக முறுக்கினாள்..

வி.வி கன்ஸ்டரக்ஷன் என்று பெயர் பலகை போடப்பட்டு இருந்த கட்டிடத்துக்குள் வண்டியை செலுத்தினாள்.. இங்கு தான் 4 மாதமாக ஆர்க்கிடெக்காக பணிபுரிகிறாள்.. பார்க்கிங் ஏரியாவில் வண்டியை அவசர அவசரமாக நிறுத்தி விட்டு கை கடிகாரத்தில் மணியை பார்க்க 12:15 என்று காட்டியது.. அச்சச்சோ போச்சு போச்சு இன்னைக்கு திட்டு கன்பார்ம் என்று தன் தலையில் அடித்து கொண்டவள், எனக்கு புருஷனும் சரியா அமையலை.. அவசர அவசரமாக அலுவலகத்துக்குள் நுழைந்து தனது இருக்கைக்கு செல்ல,

ப்ரியா உங்க டிபார்ட்மெண்ட்க்கு தான் மீட்டிங் எல்லாரும் மீட்டிங் ஹால்ல இருக்காங்க சீக்கிரம் போ என்று அக்கௌவுன்டனாக பணிபுரியும் நீலா சொல்ல, எனக்கு வேகமாக ஓடி மீட்டிங் ஹால் கதவை தட்டி விட்டு உள்ளே சென்றாள் விஷ்ணு..

விஷ்ணுவோடு சேர்ந்து அவள் டிபார்ட்மெண்டில் மொத்தம் ஐந்து பேர்.. மற்ற நால்வரும் அந்த நீள் டேபிளின் இருபுறமும் இரண்டு இரண்டு பேராக அமர்ந்து இருந்தனர்..

நீள் டேபிளின் முன்பு போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த அவளின் எம்.டியோ அனல் தெறிக்க விஷ்ணுவை முறைத்து பார்க்க..

சாரி சார் லேட்டா ஆகிருச்சு ஹெவி ட்ராஃபிக் அதான் என்றாள்.. ஓடி வந்ததில் மூச்சு இரைத்தபடி,

எதிரில் இருந்தவனோ இடியட் இது ஆபிஸ் ஸ்கூல் கிடையாது நீ எக்ஸ்கீயூஸ் சொல்றதுக்கு, இங்க எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ் தான்.. டூ ஹவர்ஸ் பர்மிஷன்னா தான் உனக்கு நான் கொடுத்தது.. இப்ப டைம் என்னாகுது என சீறியவன்

 உன் இஷ்டத்துக்கு வரதுக்கும் போறதுக்கும் இது என்ன உன் புருஷன் வீட்டு ஆபிசா என்று கோவமாக திட்டினான்..

ஆமா புருஷன் வீட்டு ஆபிஸ் தான்.. என வாய்க்குள் முணுமுணுத்தவள் வெளியே பாவமாக முகத்தை வைத்து கொண்டு ப்ரதாப் திட்டை வாங்கி கொண்டு நின்றாள்..

தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this post.

1 thought on “Mr and Mrs விஷ்ணு 7”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!