அடுத்தடுத்த சடங்குகள் முடிய ராம் வீட்டிற்கு ராம் லீலா இருவரும் அழைத்து செல்லப்பட்டனர்.. அவளை ராம்க்கு கொண்டு வந்து விட அம்மா என்ற முறையில் சாலா வரவில்லை.. என்னால் எல்லாம் அங்க வர முடியாது.. அதே போல் மறுவீடு அது இதுன்னு அவனையும் அவளையும் இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வந்தீங்க அவ்ளோ தான்.. என்னை அவமானப்படுத்தின உங்க பொண்ணுக்கு இனி என் வீட்டில் இடமே இல்லை என இரைந்து விட்டு கோவிலிருந்து சாலா கிளம்பி விட்டார்.. அதுவே நல்லது என தான் பட்டது நாயுடுவிற்கு, சாலா வாய் சும்மா இருக்காது, மகள் புகுந்த வீட்டிலும் வந்து ஏதாவது பேசி அவர்கள் மனதை தோற்கடித்து விட்டால் என்ன செய்வது, அதனாலே சாலாவை அவர் வற்புறுத்தவில்லை..
ராம் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட லீலாவை விளக்கு ஏற்றி சாமி கும்பிட வைத்து பால் பழம் சடங்கு முடிய கொஞ்ச நேரம் இருந்த லீலா அப்பா நாயுடு மகளிடம் பார்த்து இருந்துக்கோம்மா என்ற அறிவுரையை வழங்கி விட்டு, ராமிடமும் அவன் பெற்றோரிடமும் சொல்லி விட்டு கிளம்பினார்.. நேற்று வரை வசதி குறைவு அதனால் மகள் அங்கு சங்கப்படுவாளோ என்ற மன வருத்தம் ஒரு ஓரம் இருந்தது.
ஆனால் இன்று ராமும் அவன் பெற்றோரும் மகளிடம் நடந்து கொண்ட முறையில் வசதி குறைவு என்றாலும் மகள் நிம்மதியான சந்தோஷமான வாழ்க்கையை தான் வாழுவாள் என்ற நம்பிக்கையை பெண்ணை பெற்றவருக்கு கொடுத்து இருந்தார்கள்.. ராமும் அவனின் அம்மா அப்பாவும்..
இரவு ராம் தன் அறையில் தலையில் இரண்டு கை வைத்து போச்சுடா என்ற ரிதியில் நின்று இருந்தவன்..
‘அச்சோ இன்னைக்கு கன்பார்மா லில்லி என்னை அடிச்சு சுவத்துல பல்லி போல ஒட்ட வைக்க போறா டேய் வம்சி கடன்காரா நீ உருப்படவே மாட்ட’ நண்பனை வேறு வாழ்த்தி கொண்டு இருந்தான்..
லீலா திருமணத்திற்கு முன்பே கல்யாணம் குழந்தைக்காக மட்டும் தான் வேற எதுவும் என்கிட்ட எதிர்பார்க்க கூடாது என்று சொல்லி விட்டாள்.. ராம் மீது பயங்கர கோவத்தில் உள்ளாள்..
அதை எல்லாம் விட அவள் மனநிலை உடல்நிலை இப்போது இருக்கும் நிலையில் முதல் இரவு ஏற்பாடு அவளை சங்கடப்படுத்தும்.. கொஞ்ச நாள் கழித்து அவள் மனம் மாறும் வரை இது வேண்டாம் என்ற முடிவில் இருந்தான்.. அதை வீட்டினரிடம் சொல்ல முடியாது… ஏன் என்ற கேள்வி எழும். அவர்களை பொறுத்தவரை இது காதல் திருமணம் தானே,
அதனால் இந்த அறையை அலங்கரிக்கும் பொறுப்பை கையில் கொடுத்த வம்சியிடம்.. “டேய் பெரிசா ஏதும் பண்ணிடாதடா சிம்பிளா போதும்” என்று ராம் சொல்லி வைக்க,
இதற்கு சொல்லாமலே இருந்திருக்கலாம் என ராம் எண்ணும் அளவுக்கு சிறப்பாக செய்து விட்டான் வம்சி.. அறை முழுக்க தொங்கும் சிவப்பு நிற லைட் செட்டிங், சுவர் முழுவதும் சிவப்பு வண்ண ரோஜா ஹார்ட் வடிவில் ஒற்றை வைத்து, தரை முழுவதும் சிவப்பு வண்ண ஹார்ட் பலூன்கள், கட்டில் அங்கு தான் பெரிய சூனியமே வச்சிட்டு போய் இருக்கான்.. கட்டிலே தெரியாத அளவு மல்லிக்கை பந்தல் போட்டு வைத்து இருக்கிறான்..
மெத்தையை பார்த்த ராம் உன் கிரியேட்டிவிட்டிலே தீயை வைக்க புலம்பினான்.. காரணம் இல்லாமாலா மெத்தை முழுக்க ரோஜா இதழால் நிரப்பியவன் மெத்தை நடுவே ஹார்ட் வடிவத்தில் இரண்டு பறவைகள் முத்தமிடுவது போல் அலங்கரித்து வைத்து இருந்தான்..
இதை எல்லாம் பார்த்தால் லீலா என்ன சொல்லி திட்டுவாளோ என்ற பயத்தில் ராம் தலையில் கை வைத்து நிற்க,
அறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது.. லீலா தான் வந்தது..
‘போச்சு போச்சு என்னென்ன சொல்லி திட்ட போறாளோ’ ராம் பயந்து நிற்க,
அவன் எதிர்பார்த்தது போலவே அவனை முறைத்தபடியே அறைக்குள் வந்தவள் கையிலிருந்த பால் செம்பை டேபிள் மீது வைத்து விட்டு,
அவனை நோக்கி கோவமாக வர, “இதோ பாரு லீலா இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. என் மேல்ல கோவப்படாத” என
“உங்க மேல்ல கோவப்படாம வேற யார் மேல்ல பட முடியும்.. எதுக்கு என்னை ஏமாத்துனீங்க” என கேட்டாள்..
இந்த சின்ன விஷயத்திற்கு ஏமாத்துனேன் அது இதுன்னு ஏன் இவ்வளோ பெரிய பெரிய வார்த்தையா? ராம் அதிர்ந்து போய் கேட்க
“எது சின்ன விஷயம் நிவியை லவ் பண்ணிட்டு குழந்தைக்காக என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது சின்ன விஷயமா?” லில்லி கோவமாக கேட்க
‘எதே நிவியை நான் லவ் பண்ணி ஏமாத்துனனா’ லீலா பேச்சில் முதலில் அதிர்ந்தவன், பின்பு கோவம் வர “லீலா வாயை மூடு இப்புடி எல்லாம் உன்கிட்ட யார் சொன்னது” என ராமும் கத்த,
“ஒருத்தரா இரண்டு பேரா நம்ம மேரேஜ்க்கு வந்த உங்க சொந்தக்காரங்க எல்லாரும் தான்” என்றதும்,
அவளை முறைத்தவன் “யார்ன்னு தெரியாத முன்ன பின்ன பார்க்கத் ஆளுங்க பேசினதை எல்லாம் நம்புவியா?”
“அவங்க மட்டும் இல்ல உங்க அம்மாவும் தான் நிவியை ராம்க்கு தான் கல்யாணம் பண்ணி வைக்கனும் ஆசையா இருந்தேன்.. ஆனா இப்புடி ஆகிடுச்சுன்னு உங்க சொந்தகாரங்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க” என்றாள் லீலா..
அவளை இன்னும் நன்றாக முறைத்த ராம் “அவங்க ஆசை பட்டேன் மட்டும் தானே சொல்லி இருக்காங்க.. நான் ஆசைப்பட்டேன்னு சொல்லலையே” என ராம் முழுதாக பேசி முடிப்பதற்குள்,
“உங்களுக்கு விருப்பம் இல்லைமையா அவங்க அப்புடி நினைச்சு இருப்பாங்க” என்ற லீலாவை
இன்னும் இன்னும் முறைத்து தள்ளியவன் “லூசு லில்லி முழுசா சொல்ல விடு” என அவள் தலையில் லேசாக கொட்டியவன், நிவி அம்மா அப்பா பற்றி விவரம், அவன் அம்மாவுக்கு இருந்த ஆசை, அதோடு வம்சி நிவி பற்றிய முழு விவரம் என அனைத்தையும் சொல்லி முடித்தவன், அவன் மொபைலிருந்த நிவி வம்சி திருமணம் நடந்த அன்று ரிஜிஸ்டர் ஆபிஸில் வைத்து எடுத்து கொண்ட போட்டோவையும் காண்பிக்க
அவனையே பார்த்து கொண்டு லீலா அமைதியாக நிற்க, “என்ன ஓகே வா நம்பறியா?” என கேட்டான்..
ம்… என தலை மட்டும் ஆட்டியவள், ஒரு நொடி கழித்து மீண்டும் அவனை முறைக்க,
“மறுபடியுமா நான் சொன்னதை நீ நம்பலையா?”
“அது இல்லை என்ன இது என அறையை சுட்டி காட்டியவள் நான் உங்ககிட்ட அன்னைக்கே என்ன சொன்னேன்” என ஆரம்பிக்க,
“யம்மாடி லில்லி போதும் விட்டுரு முடியலை ஏற்கெனவே ஒரு விஷயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல்ல உனக்கு விளக்கம் கொடுத்து இருக்கேன்.. மறுபடியும் புதுசா ஒன்னா வேணாம் நான் அழுதுருவேன்” என தலைக்கு மேல் கை எடுத்து கும்பிட்டபடி சொல்ல,
அதில் லீலாவுக்கு லேசாக சிரிப்பு எட்டி பார்த்து..
ராம் கண்ணிலும் அதுப்பட, ஹப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டவன், சரி லில்லி வா படுக்கலாம் என்றது,
என்னது என லீலா முறைக்க,
“அய்யோ தூங்கலாம்ன்னு கேட்க வந்தேன்ம்மா”..
“ஓ.. சாரி” என்றவள் மெத்தையில் படுக்க போக,
“ஏய் லீலா இப்புடியே படுக்காத புடவையை கழட்டி”,
என்ன சொன்னீங்க ராம் லீலா பல்லை கடிக்க
“கடவுளே” என தலையில் அடித்து கொண்டவன் “புடவையில் தூங்க கஷ்டமா இருக்குமே.. அதான் வேற ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்து படுக்க சொன்னேன் எல்லாத்தையும் தப்பா எடுத்தா எப்புடி?”
“ம்.. உங்க சிங்கப்பூர் எஸ்டிடி அப்புடி நான் என்ன பண்றது” என்றபடி லீலா நகர
“பர்ஸ்ட் எல்லாம் என்னை பார்த்து இவ பயப்படுவ.. இப்ப நான் பயப்பட வேண்டி இருக்கு எல்லாம் என் நேரம்” ராம் புலம்ப,
அது லீலா காதிலும் விழுந்தது.. தனக்குள் சிரித்தபடி சென்றவள் உடை மாற்றி விட்டு வந்து படுத்த பத்து நிமிடத்தில் தூங்கி விட்டாள்..
அருகில் படுத்து இருந்தவனுக்கு தான் தூக்கம் வருவேன்னா என்றது, புது மனைவி அதுவும் காதல் மனைவி, அவள் தலையிலும் கட்டிலிலும் இருந்த மனதை மயக்கும் மல்லிகையின் மணம், இந்த இரவை பற்றி அவனுக்கு முன்பு இருந்த ஆசை, சிங்கப்பூரின் இரவின் தாக்கம், அதோடு வம்சி அறையில் செய்து வைத்து இருக்கும் அலங்காரம் அனைத்துமே அவன் உணர்வை தூண்டி விட்டு இருந்தது..
திரும்பி திரும்பி படுத்து தன்னை எழுந்து அமர்ந்து அறையில் நடந்து என உணர்வுகளை கஷ்டப்பட்டு சமன்படுத்தியவன், மெத்தையில் லீலாவை பார்த்தபடி படுத்தான்.. லவ் யூ டி ரொம்ப கஷ்டமா இருக்குடி.. சீக்கிரமா என் மேல்ல இருக்க கோவத்தை விட்டு மனசு மாறு என அவள் நெற்றியிலும் வயிற்றிலும் முத்தமிட்டவன்.. சிறிது நேரத்தில் உறங்கியும் போனான்..
நாட்கள் யாருக்கும் நில்லாது வாரங்களாக மாதங்களாக வேகமாக நகர்ந்தது.. இரண்டு மாதங்களுக்கு பிறகு…
பார்த்திபன் அவன் அலுவலகத்தில் பயங்கர கடுப்பில் அமர்ந்து இருந்தான்.. கொஞ்ச நேரம் முன்பு அவனின் பழைய க்ளைண்ட் ஒருவர் வந்து இருந்தார்.. அவர் கம்பெனி கணக்கு வழக்கை பார்க்க மாட்டேன்.. உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது சார் என அவன் கழித்து கட்டிய ஆளு அவர்.. தொழில் சுத்தம் அவரிடம் கிடையாது.. அவர் தேடி வந்து இருந்தார்..
மூன்று வருடமும் அரசுங்கத்தேக்கே ஒழுங்காக டேக்ஸ் காட்டததால் அரசாங்கம் நோட்டிஸ் அனுப்பி இருக்க, அந்த பிரச்சினை எப்புடி சரி செய்து கொடுக்குமாறு பார்த்திபனின் கேட்க வந்து இருந்தார்..
வந்தவர் அவரின் அலுவலக வேலையை பற்றி மட்டும் பேசி விட்டு சென்று இருந்தால் பரவாயில்லை.. பார்த்திபன் பவித்ரா விவாகரத்து விஷயத்தை இழுத்தார்.. அதோடு விடாமல் பார்த்திபனுக்கு ஐஸ் வைக்கிறேன் என்ற பெயரில் அவர் பவித்ராவை பற்றி தப்பாக பேச ஆரம்பித்து பவித்ரா ஷ்யாம் இருவரையும் சேர்த்து வைத்து வேற பேச,
யோவ் உனக்கு தெரியுமா? நீ பார்த்தியா? இன்னோரு வார்த்தை அவளை தப்பா பேசுன பல்லை பேத்துடுவேன் வெளிய போயா, என அந்த ஆளை திட்டி அனுப்பி விட்டான் தான்.. ஆனாலும் கோவம் கோவம் பவித்ரா மேல் அவ்வளவு கோவம் வந்தது.. இப்புடி கண்ட கண்ட நாய் எல்லாம் விமர்சனம் பண்ற அளவு கொண்டு வந்து விட்டாளே என,
ம்ஹீம் மனம் சமன்பட மறுக்க, ஆபிஸ்லிரூந்து கிளம்பலாம் என லேப்டாப்பை மூடி வைத்து விட்டு அவனின் அறையிலிருந்து வெளி வந்தவன்,
அவனிடம் வேலை பார்க்கும் பெண்ணிடம் வெளியே போறேன் ஆபிஸை பார்த்துக்குங்க என்றவன் திரும்ப,
அவன் முன்பு மூச்சு இரைக்க, வேர்த்து பூத்து கண்ணில் வழியும் கண்ணீரோடு நின்று இருந்தாள் பவித்ரா, பார்த்தி என்னை மன்னிச்சிடு என படக்கென அவன் காலில் விழுந்து விட்டாள்..
பார்த்திபன் மட்டும் அதிர்ச்சியாக வில்லை.. அங்கு அவனிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் கூட அதிர்ச்சியாகி விட்டனர் அவளின் செயலில்