பவித்ரா காலில் விழுந்ததுமே பார்த்திபன் முதலில் பதறி விட்டான்.. என்ன இது இத்தனை பேர் முன்பு என, மற்றவர்கள் முன்பு காட்சி பொருளாகிறாளே என கோவமும் வர,
“பவித்ரா என்ன பண்றீங்க? எழுந்துருங்க” என பல்லை கடித்தபடி
சுற்றி அவனிடம் வேலை பார்ப்பவர்களை பார்க்க, நாகரீகம் தொரிந்தவர்கள் அவன் சொல்லும் முன்பு அலுவலகத்தை விட்டு வெளியேறி இருந்தனர்..
“பார்த்…தி சா.. சாரி , சாரி பார்..த்தி என்னை மன்னிச்சிடு சங்க” என்ற கேவலுடன் திரும்ப திரும்ப அதை தான் சொன்னாலே தவிர எழும்பவில்லை..
அந்த கண்ணீர் அவன் மனதையும் தாக்கியது.. “பவித்ரா எழுந்துருங்க, பவித்ரா எழுத்துரு.. எழுந்துருன்னு சொல்றேன்ல” என அவள் தோள்பட்டையை அழுத்தமாக பற்றி தூக்கியவன்,
“உனக்கு என்ன ஆச்சு, ஏன் இப்புடி கிறுக்கு தனம் பண்ற” என எச்சரிச்சலுடன் கேட்டான்.. அழுகையோடு சொல்ல ஆரம்பித்தாள்..
ராம் திருமணம் பேச்சு ஆரம்பித்திலிருந்தே.. அந்த ராம்க்கே கல்யாணம் அதுவும் அவ்ளோ பெரிய இடத்து பொண்ணு, என் பையனுக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்.. அதுவும் அந்த நாயுடு விட பெரிய இடமா பார்த்து என விசாலாட்சி வம்சிக்கு தீவிரமாக பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்து இருந்தார்..
அப்போது தான் ப்ரதாப் அம்மா தேவகிக்கு எல்லாரும் கல்யாணமாகி ஜோடியாக சந்தோஷமாக அவர்கள் வாழ்க்கையை வாழும் போது மகள் மட்டும் தனித்து விடுவாளோ என்ற கவலை ஆரம்பித்தது.. ஏற்கெனவே பவித்ராவிற்கு இரண்டாம் திருமணத்திற்காக அவரும் வரன் தேடிய வண்ணம் தான் இருக்கின்றார்..
ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை… அதோடு வரன் பேச போகும் இடத்தில் எல்லாம் ‘பர்ஸ்ட் மேரேஜ் ஏன் டிவோர்ஸ் வரை போச்சு.. உங்க பொண்ணுக்கும் வேற ஒருத்தருக்கும் அஃபர், அதனால் உண்டான கர்ப்பத்தை கலைக்க போய்.. அது புருஷனுக்கு தெரிஞ்சுதால் விவாகரத்து பண்ணிட்டானாமே,
இப்ப வரை அந்த அஃபர் உள்ள பையன் கூட தான் உங்க பொண்ணு சுத்தது தாமே’, என மகளை தரம் குறைத்து பேச தேவகியால் அதை தான் தாங்க முடியவில்லை.
“இல்லை அப்புடி எல்லாம் எதுவும் இல்லை” என அவர்களிடம் கோவப்பட,
“ புருஷனோட குழந்தைன்னா அதை கலைக்க ஏன் இன்னோருத்தனை கூட்டிட்டு போகனும்” என அதற்கும் குத்தல் பேச்சு தான்..
பார்த்திபன் கோவத்தில் ஒரு வார்த்தை தப்பா பேசியதிற்கே அவ்வளவு கோவம் வந்தது.. அதை தான் இன்று ஊர் முழுக்க பேசுகின்றார்கள்.. ப்ரதாப்பிடம் சொன்னால் பேசியவர்களை உண்டு இல்லை என்று பண்ணி விடுவான் தான்.. ஆனால் எத்தனை பேரை, ஊர் வாயை மூட முடியாதே தேவகிக்கு தன் தவறு புரிந்தது...
‘அந்த பார்த்திபனை விட்டா என் பொண்ணுக்கு வேற ஆள் கிடைக்காத, லைன் கட்டி நிற்பாங்க.. நான் கொண்டு வருவேன்’ என அன்று மகள் விவாகரத்து பண்ண போகிறேன் என குதிக்கும் போது அவளுக்கு புத்தி சொல்லி பார்த்திபனோடே அனுப்பு என்ற கணவர் வெங்கடேஷிம் வீராப்பு பேசியது இப்போது நியாயமாகப் வந்தது.. தப்பு செய்து விட்டோமோ காலம் கடந்த யோசனை வந்தது…
அடுத்து என்ன செய்வது பவித்ரா வாழ்க்கையை எப்புடி சரியாக்குவது என்ற தவித்து நின்றவருக்கு தோன்றியது அந்த எண்ணம்.. ஷ்யாம் பவித்ரா திருமணம் பற்றி, முதலில் ப்ரதாப்பிடம் இதை பற்றி பேசினார்.. ப்ரதாப்பும் இதை தான் எதிர்பார்த்து காத்து இருந்தான்..
இந்த கல்யாண பேச்சை ஷ்யாம் ஏற்பானா? இல்லையா? இதில் தெரிந்து விடுமே அவனின் நோக்கம் என்ன என்பது, அதுக்காக தானே வம்சியை வைத்து பவித்ரா கல்யாண பேச்சையே ஆரம்பித்தது.. அதனால் “நல்ல முடிவு தான் ஷ்யாம் பவிக்கு ஓகேன்னா எனக்கு ஓகே தான்” என்றான்..
அடுத்து தேவகி ஷ்யாமிடம் நேரிடையாக சென்று பேசினார்..அந்த நடிப்புக்காரன் இதுக்கு தானே இத்தனை நாள் காத்து இருந்தான்.. ஆனாலும் முதலில் அதிர்ந்து அச்சோ ஆன்டி வேண்டாம்.. நான் பவித்ராவை ப்ரெண்ட்டா தான் பார்க்கிறேன்.. வேற எண்ணம் இல்லை என நடித்து கொட்டி, அதன் பின்பு தேவகி இவ்வளவு கெஞ்சவதால் சரி என்று ஒப்பு கொள்வது போல் பாவனை காட்டினான்..
அவன் சம்மதம் என்றவுடன் பவித்ரா விடம் விஷயத்தை சொல்ல, அவளுக்கோ ஷ்யாம் சரின்னு சொன்னது பயங்கர அதிர்ச்சி.. “எனக்கு கல்யாணம் எல்லாம் ஒன்னும் வேண்டாம்.. ஷ்யாம் எனக்கு ப்ரெண்ட் மட்டும் தான்.. அவனை கல்யாணம் பண்ண எனக்கு விருப்பமில்லை விட்டுருங்க” என கத்த,
“ஏற்கெனவே உன் விருப்பத்திற்கு உன்னை விட்டு தான், நீ இந்த நிலைமையில் நிற்கிற, அதனால் இந்த தடவை உன் இஷ்டத்திற்கு விட முடியாது. நீ இன்னொரு கல்யாணம் பண்ணியே ஆகனும், ஷ்யாம்ற்கும் உனக்கும் அடுத்த முகூர்த்தில் கல்யாணம்” என உறுதியாக தேவகி சொல்லி விட்டார்...
இந்த பேச்சு வார்த்தையை அடுத்த கட்டத்திற்கு செல்ல விடக்கூடாது என்றால் ஷ்யாம் வேண்டாம் என சொல்ல வேண்டும் அப்போது தான் அம்மா விடுவார் பவித்ராவிற்கு புரிய, ஷ்யாமிற்கு அழைத்தாள்.. போன் எடுக்கப்படவில்லை..
“பாஸ் நினைச்சதை சாதிச்சுட்டிங்க ஷ்யாமின் பி.ஏ நவின்” சொல்லி சிரிக்க,
“சாதிக்கலை நவின், சாதிக்க போறேன்.. இப்போதைக்கு பர்ஸ்ட் ஸ்டேஜ்ல்லா தான் இருக்கு.. அதையும் அந்த பவித்ரா லூசு கெடுக்க பார்க்கிறா”,
“நைட்டுலிருந்து ஃபோர் ஃபைவ் டைம்ஸ் கால் பண்ணிட்டா”,
“ஏன் பாஸ் நீங்க போன் எடுக்கலை?”
“எடுத்தா அவ்ளோ தான், ஷ்யாம் நீ ஏன் அம்மாகிட்ட மேரேஜ்க்கு ஓகே சொன்ன, எனக்கு இதில் இஷ்டமில்லை.. நான் உன்னை ஃப்ரெண்ட் டா மட்டும் தான் பார்க்கிறேன்.. இந்த மேரேஜ்ஜில் இஷ்டம் இல்லைன்னு அம்மாகிட்ட சொல்லுன்னு சொல்லுவா டா.. அப்புடி அவ சொன்ன பிறகு நான் அதை செய்யல்லைன்னா என் மேல் சந்தேகப்பட வாய்ப்பு இருக்குடா”..
“இதுக்காவா நான் இவ்வளவு நாள் வெயிட் பண்ணுனேன்” என ஷ்யாம் கூற..
“அதானே நீங்க இந்த பவித்ராங்கற மீனை பிடிக்க எவ்ளோ நாள் தூண்டில் போட்டு காத்து இருக்கீங்க பாஸ்.. இதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கீங்க.. ஆள் செட் பண்ணி அர்த்த ராத்திரியில் அவங்களை ஆபத்தில் சிக்க வச்சு, அந்த நேரம் பார்த்திபன் வராது போல அவனை ஆக்சிடென்ட் பண்ணி, ஹாஸ்பிடல்ல சேர்த்து விட்டு, அவங்களை நீங்க காப்பாத்துற போல நடிச்சி, ஃப்ரெண்ட் பிடிச்சு”,
“கஷ்டப்பட்டு அந்த பார்த்திபனை டீவோர்ஸ் பண்ண வச்சு, அதே நேரம் இவ்வளோ நாள் நல்லவன் போல் அவங்க முன்ன நடிச்சு, ஸ்ப்ப்பா எவ்ளோ கஷ்டம் பாஸ் உங்களுக்கு”
“அந்த கஷ்டம் எல்லாம் பவித்ரா அழகு முன்ன ஒன்னும் இல்லைடா.. அவளுக்காக எத்தனை நாள் வேணாலும் காத்து இருக்கலாம்.. அவ்வளவு வொர்த் பீஸ் தான் அவ.. அழகு மட்டுமா அவளை மட்டும் கல்யாணம் பண்ணினேன் வை.. ப்ரதாப் குரூப் போட டைஅப் போட்டு பிசினஸையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்ட்டாலாம்.. ஆனா அதுக்கு இந்த பவித்ராவை கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கனும்.. அவ வாயாலே ஓகேன்னு சொல்ல வைக்கனும் டா” .
“இவ்வளவு பண்ணுன நீங்க அதுக்கும் ஒரு ஃப்ளான் வச்சு இருப்பீங்களே பாஸ்”..
“எதுவும் தோணலைடா.. அதான் பவித்ரா போன் எடுக்கலை.. பிசி ஒரு நாள் கழிச்சு நேரில் மீட் பண்ணலாம் சொல்லி இருக்கேன்.. அந்த பலியாடு பார்த்திபனை வச்சு தான் ஏதாவது பண்ணனும்.. அந்த பலியாடை வச்சு இந்த லூசு பவித்ராவை தூண்டி விடனும்.. அதுக்கு தான் என்ன பண்ணலாம் யோசிச்சிட்டு இருக்கேன்” என்ற ஷ்யாம் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு இருந்தாள் பவித்ரா…
இரவு போன் செய்தும் எடுக்கவில்லை.. இரண்டு நாள் கழிச்சு பார்க்கலாம் பிசி என்று விட்டான்.. இரண்டு நாள் வரை பொறுமையாக இருக்க முடியவில்லை.. சீக்கிரம் இதை சரி செய்ய வேண்டும்.. அதனால் வீட்டில் இருக்கிறானா என பார்த்து பத்து நிமிடத்தில் பேசி விட்டு போகலாம் என போன் செய்யாமல் வந்ததில் தானே இவ்வளவு பெரிய உண்மை தெரிய வந்து இருக்கின்றது..
அவனை அடித்தாலும் கண்ணீர் வழிந்த வண்ணம் நின்று இருந்தாள்… உடையவனும் உடன் பிறந்தவனும் அவ்வளவு சொன்னார்களே கேட்கவில்லையே.. இவனை இவன் பேச்சை இவன் செய்த மூளை சளைவில் மதி இழந்து, அவளுடையை வாழ்க்கையை, பார்த்தியை இழந்து விட்டேனே மனம் கதறியது..
இழந்தது பார்த்திபனை மட்டுமா? நினைக்கும் போதே அடி வயிறு சுள்ளென்று வலித்தது.. எவ்வளவு பெரிய பாவத்தை செய்து விட்டேன்.. இன்னேரம் பொக்கை வாய் போட்டு சிரித்து கைகளில் தவழ்ந்து இருக்குமே, செய்த முட்டாள் தனத்தை நினைத்து நெஞ்சே வெடிப்பது போன்று இருந்தது..
அதே நேரம் இந்த ஷ்யாமை கொன்று போடும் ஆத்திரம் வந்தது..
துரோகி ஏன்டா இப்புடி பண்ணுன என மீண்டும் அறைய முயல, அவளுக்கு தெரிந்து விட்டதே என ஒரே நொடி தான் அதிர்ந்து நின்றான் ஷ்யாம்..
இப்போது அடிக்க ஓங்கிய அவள் கையை இறக்கி பிடித்தவன் பி.ஏவுக்கு கண்ணை காட்ட அவன் வெளியேறி விட்டான்..
அவனிடமிருந்து கையை உருவ முயன்றவள் “என் கையை விடுடா துரோகி, எதுக்குடா இப்புடி எல்லாம் பண்ணுன” என கத்த,
“உனக்காக தான் பவி.. உன் மேல்ல இருக்க லவ்வுக்காக தான்” என்றான்..
“ச்சீ… நீ பண்றதுக்கு பேர் லவ்வா?”.
“பின்ன நீ பண்ணுனியே பார்த்திபனை அதுக்கு பேர் லவ்வா?” அவன் கேட்டு விட பவித்ராவுக்கு அசிங்கமாகி போனது..
“உண்மை தானே அவள் பண்ணியதற்கு பேர் காதலா.. அப்புடி உண்மையாக பார்த்திபன் மீது காதல் இருந்திருந்தால் இப்புடி இவன் பேச்சுக்கு மதியை விட்டு பார்த்திபனை விட்டு வந்து இருப்பாளா” பவித்ரா அமைதியாகி விட,
“இங்க பாரு பவி உன்னை பார்த்ததுமே உன்கிட்ட நான் மயங்கிட்டேன்.. விசாரிச்சா நீ கல்யாணமானவ சொன்னாங்க… அதான் இப்புடி எல்லாம் பண்ண வேண்டியதா போய்ட்டு.. ஏன்னா நான் இதுவரை ஆசைப்பட்ட பொண்ணை தொடாம விட்டதில்லை”..
“உன்னையும் எப்பவோ முடிச்சு இருப்பேன்.. ஆனா உன் அண்ணனும் குடும்ப பேக்ரவுண்டும் உன்னை கல்யாணம் பண்ணினா எனக்கு வர போற இலாபமும் தான் என்னை பொறுமையா இருக்க வச்சது” என்றவனை மீண்டுமொருமுறை அறைந்த பவித்ரா விட்டு பவித்ரா வெளியேற பார்க்க,
அவளை பிடித்து வேகமாக இழுத்து சுவற்றில் சாய்த்த ஷ்யாம் “எங்க போற பவித்ரா அந்த பார்த்திபன்கிட்டயா, அவன்கிட்ட போய் இப்ப நீ மன்னிப்பு கேட்டு அழுது உருண்டு புரண்டாலும் அவன் சேர்த்துப்பான் நினைக்கிறியா.. செருப்பால் தான் அடிப்பான்.. ஏன்னா நீ அவனை அவ்ளோ அசிங்கப்படுத்தி இருக்க” என்றதும்..
அவளுக்கு அதை நினைத்து இப்போது வலித்தது… கண்ணீர் நிற்காமல் வடிந்தது..
“உனக்கு இப்ப என்னை விட்டா வேற யாரும் இல்லை பவித்ரா.. அதோட ஊருக்குள்ள உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு காஃசிப் ஸ்பேர்ட் பண்ணி விட்டு இருக்கேன்.. சோ ஒருத்தனும் உன்னை சீண்ட மாட்டான்.. சோ நீ என்னை கல்யாணம் பண்ணி தான் ஆகனும் உனக்கு வேற வழி இல்லை”..
“அது இந்த ஜென்மத்தில் நடக்காது டா.. நீ பண்ணினது எல்லாம் என் அண்ணாவுக்கு தெரிஞ்சா” அடுத்த நிமிஷம்,
இந்த வீடியோ ரிலிஸ் ஆகும்.. என அவன் மொபைலை காட்டினான்… அதை பார்த்தவளுக்கு குமட்டி கொண்டு வந்தது.. அதில் இந்த ஷ்யாம் இவளும் சேர்ந்து இருப்பது போன்ற வீடியோ மார்பிங் செய்து வைத்து இருந்தான்.. அது அவள் இல்லை.. மார்பிங் இதை இந்த ஊரும் உலகமும் நம்புமா..
இதை இவன் வெளியிட்டால் இவனை அவள் அண்ணன் உயிரோடு விட மாட்டான்.. ஆனால் அவள் குடும்பத்திற்கு உள்ள மானம் மரியாதை அண்ணனின் கௌரவம் அனைத்தும் என்னாவது அவள் அதிர்ந்து போய் நிற்க,
“பேபி ஏன் என்ன வில்லனை போல பேச வைக்கிற, நான் உன் மேல்ல எவ்ளோ லவ் வச்சு இருக்கேன் தெரியுமா? உன்னை பார்த்த அப்புறம் நான் எந்த பொண்ணு கூட இருந்தாலும் என் கண்ணுக்கு நீயா தான் தெரிவ” என அவள் கன்னத்தை கையால் வருட,
அடுத்த நொடி ஷ்யாமின் பின் மண்டை தரையில் அடித்ததில் அம்மா என்ற அவன் அலறல் சத்தம் கேட்டது..
ப்ரதாப் சீறும் வேங்கையாக அவன் முன்பு நின்று இருந்தான்..
அண்… என்றவளுக்கு அதுக்கு மேல் வார்த்தை வரவில்லை அழுகைமிலும் குற்ற உணர்விலும்,
இதற்கு இதற்காக தானே ப்ரதாப் இத்தனை நாள் இந்த ஷ்யாமை கண்டுக்காதது போல விட்டு வைத்தது.. தங்கை அவளாகவே இவனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என,
இன்று ஷ்யாமை சந்திக்க தங்கை செல்வாள் என்ற யுகம் அவனுக்கு முன்பே, அதோடு என்னவோ உறுத்தல் அதனால் லே அலுவலகம் செல்லாது இந்த ஏரியாவை சுற்றி வர, அவன் கணித்தது போல பவித்ரா வந்தாள்..
ஆனால் இவன் இவ்வளவு பண்ணி இருப்பான் என ப்ரதாப்பே நினைத்து பார்க்கவில்லை..
பவித்ரா விவாகரத்து வாங்கியதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறோனோ என சந்தேகிக்க, இவனோ அவளை சாதகமாக பயன்படுத்த தங்கை வாழ்க்கையில் எவ்வளவு விளையாண்டு இருக்கான்.. தாங்க முடியவில்லை ப்ரதாப்புக்கு அவ்வளவு வெறி வந்தது..
அதோடு அவன் தங்கையைவே வீடியோ ரீலிஸ் பண்ணுவேன் என்றதோடு தொட வேற முயற்சிக்கின்றான்.. கொன்று போடும் ஆத்திரம் வந்தது.. கீழே விழுந்தவன் சட்டையை பற்றி எழுப்பியவன் அடி நைய புடைத்து விட்டான்…
மூக்கு வாய் கிழிந்து இரத்தம் கொட்டியது.. தங்கையை தொட நினைத்த கையை வேறு உடைத்து விட்டு இருந்தான்.. ஆத்திரம் தாங்காது இன்னும் இன்னும் அவனை அடிக்க,
“அண்ணன்ய்யா போதும் விடுங்க.. விடுங்க” அங்கு வந்த வம்சி தடுக்க..
ப்ரதாப் விடவில்லை..
“போதும் அண்ணன்ய்யா போதும், எனக்கும் கொஞ்சம் அடிக்க இடம் விட்டு வைங்க, நீங்களே எல்லா பார்ட்டையும் அடிச்சு உடைச்சிட்டா நான் என்ன பண்றது என தடுத்து அமைதிப்படுத்திய வம்சியும் அவன் பங்குக்கு ஷ்யாம்ற்கு செய்ய வேண்டிய செய்முறையை சிறப்பாக செய்தான்..
ச்சே என கையை உதறி அவனை விடுவித்த ப்ரதாப்பிற்கு ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை..
அதுவும் பவித்ரா இப்புடி தலை குனிந்து அழுது கொண்டு இருப்பது அண்ணனாக அவனுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது..
“பவி போதும் வா வீட்டுக்கு போகலாம்.. உன்னோட காரை ட்ரைவர் விட்டு எடுத்துக்கலாம்.. நீ வம்சியோட வீட்டுக்கு கிளம்பு ” என்றதும், அவனை நிமிர்ந்து பார்த்த பவித்ராவிற்கு இன்னுமே குற்ற உணர்வுகி போனது அண்ணன்காரனின் சகஜமான பேச்சால்,
வம்சி நான் பார்த்தியை பார்க்கனும் என்றவள் அவனை தேடி வந்து விட்டாள்.. ஏனெனில் அவள் செய்த முட்டாள் தனத்தில் முழுவதும் பாதிக்கப்பட்டது அவன் தானே.. அவள் மீது காதலையும் அன்பையும் பொழிந்தவனை புரிந்து கொள்ளாது விஷப்பாம்பு ஒன்றின் பேச்சை நம்பி, அவனை அவமானப்படுத்தியதிற்கும் கஷ்டப்படுத்தியற்கும் இப்போது அவன் மன்னிப்பை வேண்டி காலிலே விழுந்து விட்டாள்…