அலுவலகம் செல்ல தயாராகி அறையிலிருந்து வெளி வந்த பார்த்திபன் முன்பு ஒரு போட்டோவை நீட்டியபடி வந்து நின்றார் கல்யாணி..
“என்னம்மா இது”
“போட்டோ டா உனக்கு பார்த்து இருக்கிற பொண்ணோட போட்டோ, இன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் நேரமா வந்துரு பொண்ணு வீட்டுக்கு போய் உறுதி பண்ணிட்டு வந்துரலாம்” என்றார் சிரித்தபடி,
“அம்மா விளையாடத” பார்த்திபன் பல்லை கடிக்க,
“விளையாடுறது நான் இல்லடா.. நீ தான்.. ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கேன்னே, நேத்து நைட்டு கூட சொல்லி இருந்தேன்னேடா”..
“அம்மா ஏன் இப்புடி பண்ற, எனக்கு எதுவும் வேண்டாம்ன்னு சொன்னேனே உனக்கு புரியலையா?”
“உனக்கு தான்டா புரிய மாட்டேங்குது.. இப்புடியே கடைசி வரை தனியா இருந்திர முடியாது.. நீ இப்புடியே இருப்பேன்னு அடம்மா நின்னாலும் என்னால் அப்புடி விட முடியாது”..
“உனக்கு வேலை இருக்கு வர முடியலைன்னா பரவாயில்லை.. நான் அப்பா ப்ரியா மட்டும் போய்ட்டு வரோம்” என்ற கல்யாணி, “அம்மா அம்மா” என்ற பார்த்திபன் பேச்சை நின்று கேட்காது அவர் வேலையை பார்க்க சென்று விட்டார்..
அப்பா நீங்களாவது அம்மாகிட்ட பேசி என பேப்பர் படித்து கொண்டு இருந்த உதயகுமார் பக்கம் திரும்பி ஆரம்பிக்கும் போதே அவர் பேப்பரால் முகத்தை மறைத்து கொண்டு திரும்பி கொண்டார்..
ச்சே என காலால் தரையில் உதைத்தவன் வீட்டிலிருந்து வெளியேறினான்..
அலுவலகம் சென்றவனுக்கு தன்னை கொஞ்சமும் புரிந்து கொள்ளாது நடந்து கொள்ளும் அம்மா அப்பா மீது கோவம் வந்தது.. அதை விட அதிகமாக பவித்ரா மீது வந்தது..
அவளால் தானே இந்த நிலைக்கு காரணம்..
அவள் அலுவலகம் வந்து மன்னிப்பு கேட்டு ஒரு மாதம் கடந்து இருக்கும்..
அன்று பவித்ரா அலுவலகம் வந்து மன்னிப்பு கேட்டு அழுது கொண்டு இருக்க, பார்த்திபன் என்ன நடந்தது என கேட்ட பின்பு,
பவித்ரா நடந்ததை
சொல்ல சொல்ல கேட்ட பார்த்திபனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.. என்ன எல்லாம் செய்து இருக்கின்றான்... இப்போது எப்புடி இருக்க வேண்டிய இவர்கள் வாழ்க்கையில் விளையாண்டு எந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கின்றான்… அந்த ஷ்யாமை அடித்து கொல்லும் அளவு கொலைவெறியே வந்தது..
எதிரே நின்று இருந்தவளை பார்த்தான்… தலை முடி களைந்து கண்ணில் கண்ணீர் வழிய அழுதழுது சிவந்த முகத்தோடு அவள் நின்ற கோலம் பார்த்திபன் மனதை அசைத்தது.. ஒரு விநாடி அவள் மீது காதல் கொண்ட மனம் இளக பார்க்க, அதை ம்ஹீம் என இறுக்கி பிடித்தவன், அங்கிருந்து நகர,
“பார்த்தி பார்த்தி சாரி சாரி என்னை மன்னிச்சிடுசங்க” பவித்ரா அவன் கைப்பிடிக்க,
வேகமாக அதை உதறி தள்ளியவன், “சாரி என்னடி சாரி? இல்ல என்ன சாரி?”
“செய்றதை எல்லாம் செஞ்சிட்டு சாரியாம் பெரிய சாரி.. உன் சாரியால்ல எல்லாம் சரியாகிடுமா?”
“சொல்லுடி சரியாகிடுமா?”
“நான் பட்ட கஷ்டம், வலி, அவமானம் எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா?.. என் அம்மா அப்பா என்னை நினைச்சு பட்ட கவலை வருத்தமும் தான் இல்லைன்னு ஆகிடுமா?”
“அதை எல்லாத்தையும் விட எனக்கே தெரியாம என் கையை விட்டு போன குழந்தை தான் திரும்ப வந்துருமா?”
“சொல்லு வந்திடுமா? உன் சாரியால் எல்லாம் சரிமாகும்னா சொல்லு உன் சாரியை நான்.. அக்சப்ட் பண்ணிக்கிறேன்” என்றதும்
பதில் சொல்ல முடியாது அப்புடியே அழுதபடி நிற்க,
“பவித்ரா என் குழந்தையை உன் வயிற்றில் சுமக்க முடியாதுன்னு என்கிட்ட கூட சொல்லாம கலைச்சு இருக்க, அதுவும் என் இடத்தில் இன்னோருத்தனை நிற்க வச்சு பண்ணி இருக்க, அது ஒரு ஆம்பிளையா எனக்கு எவ்ளோ பெரிய அசிங்கம் தெரியுமா? அதை விட அது எவ்ளோ வலிக்கும் தெரியுமாடி”
“ஆனா நீ அவ்ளோ பண்ணியும் கூட நீ டீவோர்ஸ் கேட்டப்ப, அது எல்லாம் வேணாம் பவின்னு எவ்ளோ கெஞ்சினேன்.. அது என் தங்கச்சிக்காகன்னு அப்ப நீ அவமானப்படுத்துன… ஆனா உனக்காக தான்டி.. நீ இல்லாம என்னால் இருக்க முடியாதுங்கிறதால் தான்டி உன்கிட்ட கெஞ்சினது.. அப்ப எடுத்தெறிந்து தூக்கி வீசிட்டு போய்ட்டு”,
“இப்ப எல்லாம் முடிஞ்ச அப்புறம் தப்பு பண்ணிட்டேன் சாரின்னு வந்து நிற்கிற”,
“பார்த்தி அந்த ஷ்யாம் அவன்” என்றவளை கை நீட்டி தடுத்த பார்த்திபன்,
“நீ உறுதியா இருந்திருந்தா ஒரு ஷ்யாம் இல்ல ஆயிரம் ஷ்யாம் வந்து குழப்பி இருந்தாலும் ஒன்னும் ஆகி இருக்காது”..
“உனக்கு என் மேல் இருந்த காதல்ல உறுதி இல்ல.. என் காதல் மேல்ல நம்பிக்கை இல்லை.. அதான் இடையில் ஒருத்தன் ஈசியா புகுந்துட்டான்”..
“இதோ பாரு நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போயிட்டு, இனிமே நீ மன்னிச்சிடுங்கன்னு பத்து பேர் என்ன பத்தாயிரம் பேர் முன்ன காலில் விழுந்தாலும் என் மனசு மாறாது.. ஏன்னா நீ இல்லாம நான் வாழ பழகிட்டேன்.. உடைஞ்சது உடைஞ்சது தான் அப்புடியே விட்டுரு”,
“மறுபடியும் மன்னிப்பு ம்ணணாச்கட்டின்னு என் முன்ன வந்து நிற்காத வந்தேன்னே அவ்ளோ தான்” என இவ்வளவு நாள் அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தை கோவமாக கொட்டி விட்டு கிளம்பி விட்டான்..
ப்ரதாப் வீட்டிலும் பவித்ரா விஷயம் கேள்விப்பட்டு அனைவருக்கும் ஷ்யாம் மீது கோவமும் பவித்ரா நினைத்து வருத்ததிலும் இருந்தனர்.. அதிலும் தேவகி ரொம்பவே உடைந்து போனார் மகளை நினைத்து,
“அவனை சும்மாவா விட்டிங்க வம்சி” விஷ்ணு கோவமாக கேட்க,
“இப்ப ஹாஸ்பிடலில் இருக்கான்.. எழுந்து வரவே மாச கணக்காகும்” வம்சி கூற யாருக்குமே அவன் மீது பாவப்பட தோணவில்லை..
அடுத்தடுத்த நாட்களில் என் முன் வராதே என்று பார்த்திபன் சொன்னாலும் போய் நின்றாள்.. தப்பு செய்தது அவள் தானே திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டாலும் அவன் கண்டு கொள்ளவே இல்லை..
மனம் வலித்தது.. இப்புடி தானே அவனுக்கு வலித்திருக்கும்.. இப்போது உரைத்தது.. ஆபிஸ் கூட செல்லாமல் வீட்டிற்குள்ளேயே உயிர்ப்பு இல்லாது இருந்த மகளை பார்க்க பார்க்க மனம் வெதும்பியது தேவகிக்கு,
அதனால் அவரே பார்த்திபனிடம் நேரே சென்று மன்னிப்பு கேட்க, அவன் பதிலே சொல்லவில்லை அமைதியாக தான் இருந்தான்..
கல்யாணி உதயகுமாரும் கூட பார்த்தி ஏதோ கெட்ட நேரம் இப்புடி எல்லாம் நடந்திருச்சு, எல்லாத்தையும் மறந்துட்டு பழையபடி பவித்ரா கூட சேர்ந்து வாழலாம்ல பார்த்தி.. தப்பு உணர்ந்து அந்த பொண்ணும் எவ்வளவு தடவை மன்னிப்பு கெட்டுருச்சு.. ஏன்டா இவ்வளோ பிடிவாதமா இருக்க என பேசி பார்க்க,
அவனோ இனி அந்த பேச்சை பேசாதீங்க.. எனக்கு விருப்பமில்லை அவ்ளோ தான் விட்டுருங்க என்று விட்டான்.
“அண்ணன்ய்யா மாமா கிட்ட நீங்க கொஞ்சம் பேசுங்க..நீங்க சொன்னா கண்டிப்பா அவர் கேட்பார்.. அக்காவை பார்க்க பார்க்க கஷ்டமா இருக்கு” வம்சி ப்ரதாப்பிடம் சொல்ல,
“எனக்கும் கஷ்டமா தான் இருக்கு வம்சி.. ஆனா ஒருத்தனை பேசி வற்புறுத்தி வாழ வைக்க முடியுமா.. அது நல்லா இருக்காது அவனே மனசு மாறனும்.. நம்ம வீட்டு பொண்ணால் அவன் ரொம்ப காயப்பட்டு இருக்கான்.. அது ஆற கொஞ்சம் டைம் கொடுக்கனும்.. எல்லாரும் அவனுக்கு டைம் கொடுக்காமா போய் பேச பேசத்தான் அவனுக்கு கோவம் வருது” வம்சி..
“அண்ணா நீங்க பேசுனா?”
“விஷ்ணுவை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் வம்சி.. இந்த விஷயமா பார்த்திகிட்ட நான் பேச போனா, ஏதோ ஒரு வகையில் மறைமுகமாக விஷ்ணுவை வச்சு அவனை கட்டாயப்படுத்துற ஃபீல் அவனுக்கு கொடுக்கும்.. அதனால் தான் சொல்றேன் வம்சி.. கொஞ்ச நாள் அவனை ஃப்ரியா விடுங்க”..
“கொஞ்ச நாள் கழிச்சு மாமா கோவம் போயிருமா அண்ணா”..
“போகனும்.. என் ஆசையும் அது தான்.. நம்புவோம் வம்சி மறுபடி மறுபடி இந்த விஷயமா அவன்கிட்ட போய் யாரும் பேசாதீங்க.. பவியும் அவனுமே பேசி சரி பண்ணிப்பாங்க” என்றான் ப்ரதாப்..
அவன் சொன்னதை அவன் வீட்டிலுள்ள அனைவரும் கேட்பர் அவன் மனைவி கேட்பாளா என்ன?
“அந்த பார்த்திக்கு என்ன அவ்ளோ அடம் யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்னு.. நான் போய் பேசுறேன்.. ஏன்னா நான் அவனோட பாசமலர்.. என் மேல்ல அம்புட்டு பாசம்.. நான் சொன்னா கண்டிப்பா கேட்பான்” என வம்சி ப்ரதாப்பிடம் வீரவசனம் பேசி விட்டு பார்த்தியை சென்று பார்க்க,
“வெளிய போடி முத, இனிமே இந்த விஷயமா பேச வந்த மாசமா இருக்க பொண்ணுன்னு கூட பார்க்க மாட்டேன் போடி” என திட்டி அனுப்பி விட்டான்..
அதை கேட்டு வம்சி தான் விழுந்து விழுந்து சிரித்தான்.. ப்ரதாப்போ எழுந்த சிரிப்பை அடக்கி நக்கலாக மனையாளை பார்த்தான்..
‘டேய் பார்த்தி நீ என்ன திட்னது கூட பரவாயில்லைடா.. ஆனா இதை இவர்கிட்ட அதை சொல்லி மானத்தை வாங்கிட்டியேடா உன்னை’ மனதுக்குள் பார்த்திபனை அர்ச்சித்தாள்..
முதலில் பவித்ராவுக்காக பேசிய கல்யாணி நாட்கள் நகர நகர பார்த்திபன் மனம் மாறாது உறுதியாக நிற்கவும்,
பவித்ராவை ஏத்துக்கலைன்னாலும் பரவாயில்லை.. வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ பார்த்தி.. இப்புடியே விட்டா நீ காலம் முழுகக் இப்புடியே தனியா இருந்துடுவியோன்னு பயமா இருக்கு என முதலில்கெஞ்சலில் ஆரம்பித்தவர், கடந்த ஒரு வார காலமாக இன்னோரு கல்யாணம் பண்ணியே ஆகனும் பொண்ணு எல்லாம் பார்த்தாச்சு என உறுதியாக நிற்கின்றார்..
Ram lila epo varuvanga
Vamchi nivi next strot a