கோழி முட்டை போல கண்ணை அகல விரித்து அவனை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டு இருந்தவளை இழுத்து இதழில் முத்தம் பதித்தான் ப்ரதாப்..
நேற்று மாலை விஷ்ணுவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்வதற்கு முன்பு அலுவலகத்தில் இருந்த ப்ரதாப்பிடம் ஆபிஸ் பாய் வந்து நகை கடையிலிருந்து கொடுத்து விட்டு போனதாக ஒரு பாக்சை கொடுத்து விட்டு போனான்..
அந்த பாக்சை கையில் வாங்கிய ப்ரதாப் முகத்தில் லேசான புன்னகை.. திறந்து பார்த்தான் புத்தம் புது டைமண்ட் நெக்லஸ்.. அவனின் அவளுக்காக வாங்கியது. நாளை அவளுக்கு பிறந்த நாள் அதற்காக பத்து நாள் முன்பே மார்க்கெட்டிற்கே இன்னும் வரதா புத்தம் புது டிசைனில் செய்ய சொல்லி வாங்கியது..
அவளுக்கு பிறந்த நாள் என அவள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே.. அவளை பற்றி அவனுக்கு தெரியாதது என ஒன்று உண்டா என்ன?
இந்த பரிசு அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்குமா.. நிச்சயம் இல்லை.. அவளுக்கு இப்போதைக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடிய ஒரே விஷயம் அவன் கோவத்தை விடுத்து பேசுவது,
கோவமா அது இருந்த இடம் தெரியாமல் போய் பல நாள் ஆகி விட்டது.. இருந்தும் அவள் பேச வைக்கிறேன் என்ற பெயரில் பண்ணும் சேட்டைகளுக்காக சீண்டுவதற்காக கோவம் என பாசாங்கு காட்டி கொண்டு திரிகின்றான்.
அவளோடு பேசாமல் இருப்பது அவனுக்கும் ஒரு விதத்தில் எரிச்சல் தான்.. ப்ரதாப் தன் இயல்பை மீறி அதிகமாக பேசுவது கேலி கிண்டல் செய்வது அனைத்தும் அவளிடம் தானே, இந்த நிலை அவனுக்கும் பிடித்தம் இல்லை தான்..
ஆனால் அவனின் மக்கு மனைவி மீண்டும் இது போல் என்றுமே புரிதல் இல்லாது தப்பு செய்ய கூடாது என்பதற்காகவே தான் இந்த முறை இவ்வளவு கடினமும் கண்டிப்பும்,
இனி அது தேவையில்லை.. அவளுக்கு இப்போது ஐந்தாம் மாதம் நடக்கின்றது. இனி அவனுடைய அரவணைப்பும் அன்பும் அவளுக்கு மிக மிக அவசியம் அதனால் பேச வேண்டும் என ஒரு வாரம் முன்பே முடிவெடுத்து விட்டான்..
பிறந்த நாளுக்காக தான் காத்து இருக்கின்றான்.. அன்று வாழ்த்து சொல்லி அவளை வியப்பில் ஆழ்த்த வேண்டும் என,
இத்தனை நாள் கழிச்சு பேசும் போது அவ எப்புடி ரியாக்ட் பண்ணுவா, நிச்சயம் அதிர்ச்சியில் அந்த முட்டை கண்ணை இன்னும் இரண்டு முட்டை சைஸ்க்கு விரிப்பா என நினைத்தவன் இதழ் பெரிதாக விரிந்தது..
அவ கூட சேர்ந்து சேர்ந்து நீயும் அவளை போல கிறுக்கு தனம் பண்ண ஆரம்பிச்சிட்ட ப்ரதாப் தனக்கு தானே கடிந்து கொண்டவன், அதன் பின்பு தான் அவளை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றது..
அங்கு நடந்த கூத்து தான் நமக்கே தெரியுமே, அதில் கோவம் வராமல் இல்லை.. அந்த நொடி பயங்கர கோவம் வந்தது ப்ரதாப்புக்கு, ஆனால் அவனின் கடுமை தானே அவளை அந்தளவுக்கு செய்ய வைத்து இருக்கிறது என்பதால் கொஞ்ச நேரத்திலே கோவம் போய் விட்டது..
இரவு வீடு வந்ததும் பேச நினைத்தவனுக்கு எதிர்பார்ப்புடன் அவன் முகத்தை பார்த்தவளிடம் கொஞ்சம் விளையாடி பார்க்க ஆசை எழ அமைதியாக இருந்தவன், கண்ணை கசக்க ஆரம்பிக்க மனம் கேட்கவில்லை..
அவளை இழுத்து அணைத்து முத்தமிட்ட ப்ரதாப் நிமிடங்கள் கடந்து அவளிடமிருந்து விலகி முகம் பார்க்க,
இன்னும் அதிர்ச்சி நீங்காது அவனையே பார்த்து கொண்டு இருந்தாள் விஷ்ணு….
“அவசரகுடுக்கை எல்லாத்துக்கும் அவசரம் தான்” என மீண்டும் அவள் தலையில் தட்ட, அதில் சுயம் உணர்ந்தவள்,
“உண்மையாவே நீங்க என்கூட பேசிட்டீங்களா?” இன்னும் நம்ப முடியாமல் அகல விரிந்த முட்டை கண்ணோடு வியப்புடன் விஷ்ணு கேட்க,
“ஆ… பொய்யா பேசுனேன் போடி”…
“அய்யோ அய்யோ பேசிட்டீங்க, நிஜமாவே நீங்க பேசிட்டிங்க என்னால்ல நம்பவே முடியலையே.. ஹே.. எனக்கு இப்ப எவ்வளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா” என மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் குதிக்க,
“ஏய் பாத்துடி குதிக்காத” அவள் கைப்பிடித்து தடுத்த ப்ரதாப் மெத்தையில் உட்கார வைத்தவன், அவளுக்கென வாங்கிய பரிசை கையில் கொடுக்க,
“இதை விட நீங்க பேசுனது தான் ரொம்ப சாம்பியா இருக்கு என்றவள் பரிசை பிரித்து பார்த்து.. நல்லா இருக்கு உங்களை போலவே” என்றாள்..
“என் மேல்ல இருந்த கோவம் எல்லாம் போய்ருச்சா “என கேட்டவளை இப்போது நன்றாக முறைத்த ப்ரதாப்,
“அது எல்லாம் போகலை அப்படியே தான் இருக்கு, ஆனா பாவம் சின்ன பொண்ணு அழறியேன்னு தான்” என்றதும், அவனை பாவமாக பார்த்தாள் விஷ்ணு..
“எப்புடி போகும்னு நினைக்கிற, நீ என்னை சந்தேகப்பட்டு இருக்க, இல்ல இல்ல சந்தேகம் இல்ல நான் தான் தப்பு பண்ணிருப்பேன் நம்புறேன் அடிச்சு சொல்லி இருக்க.. அதை எப்படி இவ்வளவு சீக்கிரம் என்னால் மறக்க முடியும்” என ப்ரதாப் அன்றைய நினைவில் கோவப்பட்டவன்,
“அதே கோவத்தோடு சொல்லுடி என்னை அவ்ளோ கேவலமா உன்னால் எப்புடி நினைக்க முடிஞ்சுது” விஷ்ணு புறம் திரும்பி கோவமாக கேட்டான்..
அவனும் அதை நினைக்க கூடாது பேச கூடாது என நினைத்தாலும், அன்றைய நாளின் ஏமாற்றம் அவனை பேசாமல் இருக்க விடவில்லை..
‘ஆத்தி மறுபடியும் முத இருந்தா, எனக்கு கண்ணை கட்டுதே’ என நினைத்த விஷ்ணு திருதிருவென விழித்து கொண்டு இருக்க,
பெருமூச்சு ஒன்றை இழுத்து கோவத்தை கட்டுபடுத்தியவன் “சொல்லு ஏன் அப்புடி பண்ணுன” என மென்மையாக கேட்டான்..
அவள் அமைதியாகவே நிற்க, “நான் கோவப்பட மாட்டேன் விஷ்ணு, சொல்லு இன்னைக்கே பேசி முடிச்சிடலாம்.. நாமா சின்ன சின்ன விஷயங்களை பேசமா பிரச்சினை வரும்னு நினைச்சு தவிர்த்தது தான் பெரிய பிரச்சினை வர காரணமே” அதனால் பேசு என்றவன்,
மீண்டும் “என்னை ஏன் சந்தேகப்பட்ட” அதே கேள்வியில் வந்து நிற்க
“உங்களுக்கு என்னை பிடிக்காதன்னு”
“அப்புடின்னு நான் சொன்னனா” ப்ரதாப் கேட்க,
இல்லை என வேகமாக முதலில் தலை ஆட்டியவள் பின்பு ஆம் என மெதுவாக தலை அசைக்க,
“எப்போ” ப்ரதாப் கேட்டான்,
“கல்யாணத்திற்கு முத உங்க ஆபிஸ்க்கு வந்த டைம் சொன்னீங்களே”,
“நீயும் தான் அப்ப என்னை பிடிக்காதன்னு சொன்ன”,
“அது நான்.. அப்ப ஏதோ” என்றவள் இழுக்க,
“அப்ப எனக்கு உண்மையாவே உன்னை பிடிக்காது டி அதான் சொன்னேன்.. ஆனா நம்ம மேரேஜ்க்கு அப்புறம் நான் எப்பவாவது உன்னை பிடிக்கலைன்னு சொல்லி இருக்கன்னா?” ப்ரதாப் கேட்க,
இல்லை என தலை ஆட்டியவள்.. “பிடிக்கும்னு சொன்னது இல்லை” என மெதுவாக கூறினாள்..
அவளை ஒரு நொடி அமைதியாக பார்த்தவன் “நீயும் சொன்னது இல்லையே விஷ்ணு, ஆனா அதற்காக என்னை உனக்கு பிடிக்காதுன்னு நானா கற்பனை பண்ணிட்டு சந்தேகப்படவா செஞ்சேன்”...
“விஷ்ணு பிடித்தம்ங்கிறது வார்த்தையில் இல்லை.. வாழுற வாழ்க்கையில் இருக்கு.. பிடித்ததோட அளவை வார்த்தையால் சொல்றதை விட, வாழ்ந்து உணர்த்தறதில் தான் இருக்குன்னு நினைக்கிறவன் நான்.. அப்புடி தான் நடந்தும் இருக்கேன் நினைக்கிறேன்”..
“சொல்லு என்னைக்காவது தேவையில்லாம உன்னை திட்டி இருக்கன்னே இல்லை அடிச்சு இருக்கான்னா”..
“திட்டியும் இருக்கீங்க அடிச்சு இருக்கீங்க” வேகமாக சொன்னாள்..
ஆமா இரண்டுமே பண்ணி இருக்கேன்.. ஆனா அதில் தப்பு என் மேல்லேயா என கேட்க,
இல்லை என தலை அசைத்தாள் என்னோடது தான் என தன்னை நோக்கி விரல் நீட்டி காண்பித்தாள்..
“நான் திட்னது அடிச்சது கூட உன் மேல் இருக்க அக்கறையில் தான்.. நான் உன்னை திட்டி இருக்கேன்.. ஆனா இந்த வீட்டில் இருக்க யாரையாவது திட்ட விட்டு இருக்குன்னா.. இல்ல திட்டுன என் சித்தியை தான் சும்மா விட்டு இருக்கன்னா”...
“இல்லன்னா அதை செய் இதை செய், இந்த வீட்டிற்கு ஆக அப்புடி மாறு அப்புடி மாறுன்னு கண்டிசன் போட்டு இருக்குன்னா.. உன்னை எந்த விதத்திலும் இந்த வீட்டிற்காக மாற சொல்லலை. ஆனா இந்த வீட்டையே உனக்காக மாத்தி இருக்கேன்டி”
“என்னை விட்டு தள்ளி போன உன்னை ஒவ்வொரு தடவையும் போக விடாம இறுக பிடிச்சு இருக்கேன்”..
“இப்புடி செயல்ல கன்வே பண்ண தான் எனக்கு தெரியும்”..
“நீ நினைக்கிற மாதிரி ரோஜா பூவை கையில் வச்சி முட்டி போட்டு ஐ லவ் யூ, இல்ல சோஷியல் மீடியாவில் மத்தவங்க பார்க்கனும்னு மை வொஃய்ப் இஸ் மை லைஃப் நீ என் உயிர்… ம….ர்ன்னு எல்லாம் சுகர் கோட் போட்டு பேச எல்லாம் எனக்கு வராது நான் இப்புடி தான்” சத்தமாக ப்ரதாப் சொல்ல,
“கோபப்பட மாட்டேன்னு சொன்னீங்களே?”
“இது கோவம் இல்லடி ஆதங்கம்.. என் பொண்டாட்டிக்கு என் மேல்ல நம்பிக்கை இல்லாம போய்ட்டேங்கிற ஆதங்கம்.. இதுக்காக தான் இத்தனை நாள் நான் பேசாம இருந்தது.. அந்த டைம்லேயே நான் பேசி இருந்தா, கோவத்தில் என் வாயிலிருந்து வார்த்தை தாறுமாறாக வந்து இருக்கும் அதனால் தான் கோவம் போற வரை அமைதியா இருந்தேன்” என் மீண்டும் ப்ரதாப் கோவப்பட,
“சாரி எனக்கு புரியுது, உங்களை நான் நிறையவே கஷ்டப்படுத்திட்டேன்.. இனிமே உங்களை கோவப்படுத்துற மாதிரி நடந்துக்க மாட்டேன்” என்றாள்.. அவனை அணைத்துப் படி அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து,
“அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்லை” என்றான் ப்ரதாப் உறுதியாக,
“அது எல்லாம் வாய்ப்பு இருக்கு.. நீங்க வேணா பாருங்க இனி நான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்னா இல்லையான்னு” என முகத்தை நிமிர்த்தி ரோஷமாக சொல்ல,
“நீ ஒன்னும் எனக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க வேணா.. என்னை புரிஞ்சிக்க ட்ரை பண்ணு, வயசுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் மெச்சூர்ட்டா நடந்துக்கோ அது போதும்” என்றான்…
“அதையும் பார்க்க தானே போறேன்” என்றவன், “சரி சரி டைம் ஆகுது படுத்துக்கோ” என்றான்..
“படுத்துக்கிறதா அவ்வளவு தானா வேற எதுவும் இல்லையா? “
“வேற என்ன விஷ் பண்ணியாச்சு பேச வேண்டியதை பேசி தீர்த்தாச்சு… அவ்வளவு தானே, வேற என்ன கேக்கா,
நைட்டு டைம்ல அதை சாப்பிட்டு தூக்கம் வராம சுத்தவா அது எல்லாம் கிடையாது படுடி என்றான்..
“ம்பச் அய்யோ கேக் இல்லைங்க… வேற வேற” என தலை சாய்த்து விஷ்ணு கேட்டதிலே அவள் கண்களிலே தெரிந்தது ப்ரதாப்பிற்கு அவளின் எதிர்பார்ப்பு,
அவனுக்கும் அந்த எண்ணம் எழாமல் இல்லை.. இத்தனை நாள் கோவம் என்ற முகமூடியை போட்டு உணர்வுகளை அடக்கி வைத்து இருந்தான்… ஆனால் இப்போதோ பிரிவு ஏக்கம் அடக்கி வைத்து இருந்த உணர்வுகள் என அனைத்தும் சேர்ந்து அவனிடம் மென்மை வெளிப்படாது.. உணர்வு மிகுதியில் வேகம் கூடினால் அவள் இப்போது இருக்கும் நிலைக்கு சரிப்பட்டு வராது என அமைதியாக இருக்கின்றான்..
இருந்தும் மனைவியை சீண்டும் எண்ணம் தலை தூக்க,
“வேற என்ன?” என கேட்டான்
“வேறன்னா வேற தான்… உங்களுக்கு புரியலையா?”,
“ம்.. புரியலை.. புரியுற மாதிரி சொல்லு” என்றான் பொங்கி வரும் சிரிப்பை உதடு மடித்து அடக்கியபடி,
“ம்பச் அச்சோ நான் எப்புடி சொல்லுவேன்”..
“வாயால தான்”…
“ஆ.. அப்பப்ப தங்கதுரைக்கு தம்பியா மாறிடுவாரு” என பல்லை கடித்தவள், வாயால தானே சொல்லனும் இப்ப சொல்றேன் என அவன் பனியனை பிடித்து தன் புறம் இழுத்து உதட்டோடு உதட்டை பொருத்தியவள், மெல்ல மெல்ல அடுத்த கட்டத்திற்கு முன்னேற, மனைவியிடம் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து இருந்தான் கணவனவன்..
அன்பு காதல் காமம் அனைத்திலும் கொடுப்பத்தில் மட்டும் இல்லை பெறுவதிலும் இன்பம் நிறையவே இருக்கின்றது என்பதை இன்று தெரிந்து கொண்டான் ப்ரதாப்…
மறுநாள் காலை கண் விழித்தாள் விஷ்ணு…. இரவு நடந்தது அனைத்துமே நினைத்து பார்த்தவள் மனதில் அளவு கடந்த மகிழ்ச்சியும் இதழோரம் வெட்க புன்னகையும் தோன்றியது…. ப்ரதாப்பை பார்க்க வேண்டும் என்ற ஆசை எழ, படுக்கையிலிருந்து எழுந்தாள்..
அதே நேரம் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு ப்ரதாப் வந்தான்… அவனை பார்த்தவளுக்கு நேற்றைய நிகழ்வால் வெட்கம் வர அவனை பார்த்து சிரித்தாள்...
ப்ரதாப்போ அவளை முறைத்து கொண்டே ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்ன போய் நின்றான்…
‘என்ன மறுபடியும் முறைக்கிறாரு…. நைட்டு தான் எல்லாம் பேசி ராசி ஆகியாச்சே.. அப்புறம் ஏன் மறுபடியும் முறைக்கி… நைட்டு நடந்தது எல்லாம் உண்மையா இல்ல ஒரு வேளை கனவா இருக்குமோ.. இல்ல இல்ல நிஜம் தான்’ என தனக்குள் குழம்பியவள்,
“ஏங்க என்னாச்சே ஏன் முறைக்கிறீங்க “என மீண்டும் ப்ரதாப்பை நோக்கி பயத்தோடு கேட்க,
அதுக்கும் அவனிடமிருந்து முறைப்பே பதிலாக வர,
‘அச்சோ போச்சு போச்சு அப்ப எல்லாம் கனவு தான் போல, அவர் என்கிட்ட பேசவே இல்லையா’ என வழக்கம் போல் விஷ்ணு பாப்பா தனக்கு தானே குழம்பி கொள்ள,
அதை கண்ணாடி வழியே பார்த்த ப்ரதாப்போ
இது எல்லாம் கடைசி வரை திருந்தவே திருந்தாது எல்லாம் என் நேரம் என கையில் வைத்திருந்த சீப்பால் நெற்றியில் அடித்து கொண்டான்..
தொடரும்…
உங்க எல்லாருக்கும் ஒரு ஹாப்பி நியூஸ் இன்னும் இரண்டே எபி கதை முடிஞ்சிடும்… ஹே ஜாலி தான்…
Lovlyyyyyyyyyy epiiiiii ❤️❤️❤️❤️