Love and Romantic

அத்தியாயம் 16

காலைப்பொழுது விடிய ஆதவன் அவன் வேலையை செவ்வன செய்து கொண்டிருக்க, வழமை போல் காலை நேர ஓட்ட பயிற்சியினை முடித்துவிட்டு தனது அலைபேசியை காற்றலையில் இணைத்து அதனுடன் செவி மடலில் காதொலிப்பானுடன் இணைத்து இருந்தான் இன்னுழவன். உடையவள் குரல் இன்று அவன் செவிகளில் எட்டப் போவதில்லை என்று ஏற்கனவே யூகித்தவன், இருந்தாலும் ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் காற்றலையில் சிந்தையை செலுத்தினான். கவனம் செவிமடலில் ஒலிக்க இருக்கும் சப்த குரலில் இருந்தாலும், விழிகளோ தொடுதிரையில் முன்தினம் உடையவள் […]

அத்தியாயம் 16 Read More »

14. சிறையிடாதே கருடா

கருடா 14   எங்கிருந்து சூரியன் உதயமாவதைப் பார்த்தாலும், உற்சாகம் பிறப்பெடுப்பதைத் தடுக்க முடியாது. அதுவும், கடற்கரையிலிருந்து உதயமாவதைப் பார்ப்பது போல் ஒரு பேரின்பம் வேறில்லை. எப்போதாவது கடற்கரை சென்று மகிழும் கருடேந்திரனுக்கு, இங்கு வந்த நாள் முதல் அந்தத் தரிசனம் கிடைக்கிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்தச் சூரிய உதயத்தைக் கண்ணாடி வழியாகப் பிடிக்கவில்லை. சுதந்திரமாக ரசிக்க வேண்டியதைச் சிறையிட்டு ரசிப்பது போல் தெரிகிறது.   கண்ணாடியில், ஐவிரல்களைப் பதிய வைத்துத் தலை கவிழ்ந்து நின்றிருக்கிறான்.

14. சிறையிடாதே கருடா Read More »

11. சிறைமிடாதே கருடா

கருடா 11 அமர்க்களத்திற்குக் குறைவில்லாமல் விடிந்தது விடியல். நேற்று இரவு முழுவதும் இருவரும் தூங்காமல் இரவிற்குத் துணை இருக்க, எனக்கும் வேண்டும் என்று வரவேற்றது விடியல். நான்கு மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவன், கன்னியப்பன் நினைவோடு ஏங்கிக் கொண்டிருக்க, பலத்த சிந்தனையோடு கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனைச் சிறிதும் கணக்கில் கொள்ளாது கிளம்பத் தயாராகினாள் ரிது. படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலையில் போதுமான வருமானம் இல்லை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாடகைக்கு எடுத்த

11. சிறைமிடாதே கருடா Read More »

8. சிறையிடாதே கருடா

கருடா 8 “ஹே…” என்ற பெரும் அதிர்வோடு வண்டியை ஓரம் நிறுத்திய கருடேந்திரன், காரை நோக்கி ஓடினான். நெடுஞ்சாலைக்கு நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, புகைச்சலுக்குள் காணாமல் போனது அவன் மனைவி ஓட்டிச் சென்ற கார். அவனுக்குள் உண்டான அதிர்வு, அதிவேகத்தில் ஓட வைத்தது. அதற்குள் வாகன ஓட்டிகள் அந்தக் காரைச் சூழ்ந்தனர். பயத்தின் ஒலச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அருகில் வந்தவன், “ரிது!” என அழைத்துக் கொண்டு ஆள்களை விலக்கிட, சிறு ரத்தக் காயங்களோடு

8. சிறையிடாதே கருடா Read More »

என் தேடலின் முடிவு நீயா – 27

தேடல் 27 அந்த உடைந்த கப்பல் இருக்கும் இடத்தை சுற்றி கேமரா கண்காணிப்பு வேலைகள் நடைபெற்று முடியும்போதே மின்னல் வேகத்தில் ஒரு வாரம் கழிந்து விட்டது… அவ் இடத்தை சூழ நடக்கும் விடயங்களை தங்களால் முடிந்த மட்டும் அவதானித்து தகவல்களை திரட்டி இருந்தனர். கரனிற்கு ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது ஓரளவு நன்றாகி விட்டது…. இப்பொழுது பிசியோதெரபி எடுத்துக் கொண்டிருந்தான். மூன்றாம் தளத்திலிருந்த வெட்ட வெளியில் கரனை அமர்த்தி வைத்து விட்டு மீதி ஐந்து பேரும் கடலைப்

என் தேடலின் முடிவு நீயா – 27 Read More »

அத்தியாயம் 15

“வாடா வீட்டுல பஞ்சாயத்து” என வீட்டை அடைந்திருந்தனர் இன்னுழவன் அகரனும். இன்னுழவன் வீட்டிற்குள் நுழைய அவன் பின் அகரன் நுழைய.. வீட்டு நடுக்கூடத்தில் சக்திவேல் மற்றும் தங்கமணி அவரின் கணவன் ராஜசேகர் அமர்ந்திருக்க, வீங்கிய கன்னங்களுடன் விழிகளில் நீருடன் நின்று கொண்டிருந்தாள் நந்தனா. நந்தனாவின் விழிகளோ முதலில் வந்த இன்னுழவனைத் தாண்டி பின்னால் வந்த அகரனின் மீது படிந்தது ஏக்கமாய். அகரனும் அவளை தான் பார்த்தான் விழி அதிர்வுடன். தன்னவள் கலங்கிய விழி கண்டு உள்ளமது பதைபதைத்தாலும்

அத்தியாயம் 15 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 26

தேடல் 26 அடுத்த நாள் காலையிலே எல்லோரும் கரனது அறையில் தான் அமர்ந்திருந்தனர்… அவனது அறையிலே அனைத்து கேமரா திரைகளும் பொருந்தப் பட்டிருந்தன… ராகவ், கரன் கடலுக்கு சென்ற அன்று கேமராவில் பதிவான காட்சிகளை திரையில் போட்டான்… அந்த உயிரினம் எவ்ளோ பெரிதாக இருந்ததோ அதை விட அதன் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தது… அதன் வேகத்தில் நீரும் மங்கலாகி விட திரையில் காட்சிகள் சரியாக புலப்படவில்லை… எவ்வளவு தான் திரையில் ஓடிக் கொண்டிருந்த கட்சிகளை

என் தேடலின் முடிவு நீயா – 26 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 25

தேடல் 25 அபின்ஞானும் மகாதேவும் ஒருவருக்கு முன் ஒருவர் நின்றிருந்தனர்… கரன் கட்டிலில் படித்தபடியே இவர்களை பார்த்துக் கொண்டிருக்க, அவன் அருகே கட்டிலில் ஒரு ஓரத்தில் ராகவும் அமர்ந்திருந்தான். சண்டை பிடிப்பதற்காக வாயை திறந்தவர்களுக்கு சாதாரணமாக ஒரு வார்த்தை பேச வாயை திறக்க முடியவில்லை… சலிப்பாக தலையை ஆட்டிய மகிமா, “இவனுங்க பேச மாட்டானுங்க” என்று சஞ்சனாவிடம் கூறிவிட்டு, “அண்ணா உன்கிட்ட இவர் ஒன்னு கேட்க வந்திருக்கிறார்… நீயா அந்த சயின்ஸ் டீச்சருக்கு லெட்டர் கொடுத்தது” என்று

என் தேடலின் முடிவு நீயா – 25 Read More »

7. சிறையிடாதே கருடா

கருடா 7 குளிக்கும் நீரில் கூட உயர் ரகத்தை வைத்திருந்தவள் மேனியெங்கும் சந்தன வாசனை. அவை போதாது என்று செயற்கை வாசத்தை ஆடையாகத் தெளித்துக் கொண்டவள், பருத்தி ஆடையை அதற்கு ஆடையாக மேல் உடுத்தி, மீண்டும் ஒரு திரவியத்தைப் பட்டும் படாமலும் தெளித்தாள். கண்ணாடி முன் நின்று தன் அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டவளுக்கு, கழுத்தில் இருக்கும் மஞ்சள் கயிறு அசிங்கமாகத் தெரிந்தது. அதையே பார்த்துக் கொண்டிருந்த அவள் எண்ணத்தில் அவன். கண்ணாடியில், சிரித்த முகமாக நின்றிருந்தவன் உருவத்தைக்

7. சிறையிடாதே கருடா Read More »

அத்தியாயம் 14

அவள் பேச… அவன் இரசிக்க… குறுக்கே கரடியாய் அழைதிருந்தார் மைதிலி அவளை போனின் வாயிலாக. அவ்வளவு நேரம் இன்னுழவனுடன் புதிதாய் பூத்த மலராய் பேசிக் கொண்டிருந்தவள் முகமது அலைபேசியின் திரையை பார்த்தவுடன் சுருங்கியது. முகம் மட்டும் சுருங்கவில்லை குரலும் தளர்ந்தது. அனைத்தையும் மறந்து பேசியவள் மனமும் விழிகளும் வெறுமையை உமிழ்ந்தது. இன்னுழவன் கண்ணில் இருந்து அதுவும் தப்பவில்லை. இன்னுழவனை ஏறெடுத்து பார்த்தவளோ “சரிங்க நீங்க பாத்து போங்க இருங்க. எனக்கு டைம் ஆச்சு நான் கிளம்பனும். சாரி

அத்தியாயம் 14 Read More »

error: Content is protected !!