Home Novelsஒரே காதல் ஒரு மணிநேர காதல்(OKOK)

ஒரே காதல் ஒரு மணிநேர காதல்(OKOK)

3) ஒரே காதல் ஒரு மணிநேர காதல் (OKOK)

by Kowsalya Velmurugan
5
(1)

அடுத்த நாள் விடியற்காலையில் எழுந்தவள், “தந்தை எழுவதற்கு முன்னரே வாசல் கூட்டி, சாணி தெளித்து, கோலமிட்டு, அதில் பூசணி பூவை சொருகி” வைத்திருந்தாள்.

 

இது அவருக்கு மிகவும் பிடித்தமான செயல்.  தினமும் செய்ய வேண்டும் என்பது அவரின் விருப்பம்.

 

அதனால் அர்ச்சனா தினந்தோறும் விடியற்காலையில் எழுந்து இதை செய்து விடுவாள்.

 

பணிக்கு செல்வதற்கு முன்பாக ஐம்பது தேங்காயை உளித்து வைத்துவிட்டு தான் செல்ல வேண்டும்.

 

ரிதன்யா எப்போதும் போல ஐம்பதும் சரியாக உள்ளதா என்று எண்ணிவிட்டு ஓடி சென்று மதுமிதாவிடம் சொல்ல சரி என்று தலையாட்டினார்.

 

நாரதர் வேலைய மட்டும் இவ விடவே மாட்டா என்று நினைத்த அர்ச்சனா நேரம் எட்டை தாண்டவும் வயல் வெளிக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றாள்.

 

அதே நேரம் கிருஷ்ணருக்கு அழைப்பு வந்தது அவரது தங்கையிடம் இருந்து.

 

ஏன் என்ன பண்றீங்க என்ற சிறு விசாரிப்போடு ஆரம்பித்தான்.

 

என்ன விஷயம்னு சொல்லு சந்திரிகா.

 

நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல அண்ணா.  என்னோட பையனுக்கு உன்னோட பொண்ண கொடுக்க முடியுமா?

 

சந்திரிகாவின் மகன் ராஜேஷ்.  சோம்பேறிகளிலே கடைந்து எடுத்தவன்.  குடி,கொள்ளை என்று திரிபவன்.  இதை அறிந்தும் பார்க்கலாம் கொஞ்ச நாள் போகட்டும் என்று மட்டும் பதில் அளித்தவர் அழைப்பை துண்டித்துக் கொண்டார்.

 

என்னங்க இதுக்கு மேல யோசிக்கிறீங்க.  சந்திரிகா வீட்ல இல்லாத சொத்தா.  அஞ்சு ஏக்கர் வச்சிருக்கா.  நாளு வீடு வேற.  தோட்டம் துரவுனு எல்லாம் இருக்கு.  சட்டுபுட்டுனு பேசி முடிச்சிடுங்க என்று அவரை தெளிவு படுத்தினால் மதுமிதா.

 

இதை அறியாத பேதயான அர்ச்சனா வயல்வெளிக்கு நீரினை பாய்ச்சி விட்டு வேகமாக வந்து சுடுதண்ணீர் காய வைத்தாள் விறகு அடுப்பில்.

 

காலை நேரத்திலே குளித்துக் கொள்ள வேண்டும் என்பது மதுமிதாவின் கட்டளை.

 

தாயும் தகப்பனும் சேர்ந்து தங்களை வைத்து பொம்மலாட்டம் ஆடிக்கொண்டிருப்பது அர்ச்சனா அறியாதவை அல்ல.  ஆனால் ஊர் பொதுமக்களுக்கு தந்தையின் மீது ஒரு மரியாதை உள்ளது என்பதை புரிந்த குழந்தை அவள். அதனால் அவர் சொல்லும் அனைத்தும் கேட்பாள்.

 

பணியை தவிர மற்ற அனைத்திலும் ஒளிவு மறைவு அல்ல.

 

இப்பணியில் மட்டும் ஆண்கள் இல்லை என்றும், அவளது வாயை வீட்டில் குறைவாக பேசியும் சமாளித்து  கொண்டு உள்ளாள்.

 

ரிதன்யா அவளின் அருகில் வந்து உன்னை அந்த ராஜேஷ்க்கு பேசி முடிக்கலாம்னு அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டு இருக்காங்க அக்கா.

 

என்ன அவனுக்கா என அதிர்ந்தாள்.

 

அவன் பண விசயத்தில் மட்டும் அல்ல குண விசயத்தில் கூட மோசம் என்பது அவள் அறிவாள்.  ஒரு முறை அவளிடம் அவன் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த போது சத்தமாக கத்தி அவனை ஓட விட்டவள் அர்ச்சனா.

 

தனது தாயும் தந்தையும் தவறான முடிவு எடுக்க மாட்டார்கள் என்ற தீர்மானத்துடன் குளியலறையில் நுழைந்து கொண்டாள்.

 

குளித்து உடை மாற்றி விட்டு வந்தவளின் காதில் விழுந்த செய்தி அவளை திகைக்க வைத்தது.  அவள் நினைத்தது போல நடக்காமல் தலைகீழாக நடக்க போவது அவளுடைய மனம் ஏற்க மறுத்தது‌.

 

மதுமிதா சந்திரிகாவின் எண்ணிற்கு அழைத்து வீட்டுக்கு பையனோட வா.  மத்தது எல்லாம் நம்ம நேருல பேசிக்கலாம்‌.  எல்லாம் நல்ல விஷயமானது தான் என்பதில் தான் அர்ச்சனாவிற்கு இப்போது களக்கம்.

 

தாயின் அருகில் சென்றவள் அம்மா அவன் ஒரு நாள் என்று இழுப்பதற்கு முன்பாக மதுமிதாவே என்ன உன்கிட்ட தப்பா நடந்துக்க பாத்தான் அதானடி.  அவனுக்கு நீ முறப்பொண்ணு‌. அந்த சந்தோச்சத்துல உன்கிட்ட பேசுறது, விறையாடுறது எல்லாம் வழக்கமானது தான்‌.

 

இப்ப கூட சந்திரிகாவா இந்த சம்மதத்த பேச தொடங்குனா‌. அந்த பையனுக்கு இந்த விசயமே தெரியாதாம் என்றாள்.

 

ஆனால் சந்திரிகாவின் முன் ஆவலாக இருந்தவன் அவர் கூறிய பதில் அவ எனக்கு தான்மா. என்ன எப்படி எல்லார் முன்னாடியும் அசிங்க படுத்துனானு உனக்கு தெரியும் தானம்மா‌. அதுக்கு அவ வட்டியும் முதலுமா அனுபவிப்பா.

 

இந்த கல்யாணம் கூட அதுக்காக நான் போட்ட வேலி என்று முறுவளித்தவன் தனது மீசையை நீவி விட்டு கண்ணாடி முன் நின்று அர்ச்சனா என்று ஆக்ரோசமாக கத்தினான். சந்திரிகாவும் தான் சிரித்தாள்.‌

 

அன்று அர்ச்சனாவின் உதட்டில் முத்தம் தர குவித்த அவனுக்கு தனது கையினால் குத்து விட்டதோடு அவனை கத்தி பெரியவர்கள் இடம் மாட்டி விட்டவளை வெறி தீர்க்க வேண்டும் என்ற ஆத்திரம் அது.

 

அவனின் சூட்சம குணம் அறியாத குழந்தை அல்ல அர்ச்சனா. தாயும் தந்தையும் எப்படியும் தன்னை அவனுக்கு மனம் முடித்து விட வேண்டும் என்று துடிக்கிறார்கள் என்றால் அது அவனிடம் உள்ள சொத்து பத்துக்காக மட்டும் என்பதை அறிவாள்‌.

 

ஆனால் எத்துனை பெரிய மோசக்காரன் என்று அறிந்தும் பிள்ளையின் வாழ்க்கையை பலிகடா ஆக்கி அந்த சொத்தை அடையும் பெற்றோரின் பழைய குணம் முன்பில் இருந்து இன்று வரை மாறவில்லை என்று நினைத்து தன்னை நொந்து கொண்டபடி சமையலறை நுழைந்து இரண்டு இட்லியை போட்டு சட்னியை ஊற்றி யோசனையோடு விண்டு முடித்தாள்.

 

மாலை ஐந்து மணிக்கு தயாராக ஆரம்பித்தவளின் நினைவு அவள் புறம் இல்லை.

 

என்னமா கிளம்பியாச்சா?  என்றபடி அவளது வீட்டினுள் நுழைந்தார் கண்ணம்மா என்ற தோட்டத்தில் பணிபுரியும் ஒரு பணிப்பெண்.

 

ஆமா கண்ணம்மா என்பதோடு மட்டும் அவள் நிறுத்தி கொள்ள,

 

அர்ச்சனாவின் அருகில் வந்து “இன்னைக்கு என்ன ஆச்சுமா. உங்க முகமே சரியில்ல” என்று சொன்னது தான் தாமதம் அவளை கட்டியணைத்து கொண்டு அழுக ஆரம்பித்தாள்.

 

பெற்றோரின் அதிகாரங்கள் தன் மீது திணிக்கப்படுவதையும் அவனின் குணாதிசியங்களையும் அவளிடம் சொல்லி அழ ஆர தழுவி அர்ச்சனாவை அமைதி படுத்தினாள் கண்ணம்மா.

 

கடவுள் எல்லாத்தையும் பாத்துட்டு தான் இருப்பார் கண்ணு.  தயவு பண்ணி வருத்தப்படாத.   நீ வேலைக்கு போ என்றவரிடம்,

 

இந்த வேலையை கூட நான் போராடி  பெற்றது என்னும் போது திருமண உறவையும் போராடித்தான் பெற வேண்டுமா கண்ணம்மா என்று மீண்டும் அழுதாள்.

 

அவளிடம் மட்டும் ஒளிவு மறைவு இன்றி அனைத்தும் பகிரும் வண்ணம் நீண்ட நாட்களாக அவள் வீட்டில் பணிபுரியும் கண்ணம்மா என்றவள் அர்ச்சனாவின் நட்பு வட்டத்தில் மாபெரும் இடத்தை பிடிப்பவள் ஆவாள்.

 

“அழறது போதும்மா‌, முதல்ல வேலைக்கு கிளம்பு”

 

என அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தவள் மதுமிதாவின் முன் சென்று நின்றாள்.

 

சமையலில் கணவருக்காக தோசை ஊற்றி கொண்டு இருந்தவளிடம் நீங்க பண்றது சரியில்லமா.  அவன் எப்படி பட்ட

 

என ஆரம்பிக்கும் முன்னமே நீ இந்த வீட்ல வேலை செய்யுறவ மட்டும் தான்.  அது மட்டும் செஞ்சு கொடுத்தால் போதும்.  தேவையில்லாமல் என் வீட்டு விஷயத்துல மூக்க நுழைக்காத என்று முகத்தில் அடித்தார் போல அவள் சொல்லி விடவும் கண்ணம்மா அமைதியான முறையில் வெளியேறினாள்.

 

மாலை வீட்டு வாசலை தாண்டிய பின்பு சிறகொடிந்த பறவைக்கு மீண்டும் இறக்கை முளைத்தது போல பறக்க துவங்கினாள்.

 

பிரியா எஃப்.எம்:

 

நேரம் ஏழை தொட்டு விட எப்போதும் போல அவளுடைய சோ ஆரம்பித்தது.

 

வணக்கம்.  நான் உங்க ஆர்.ஜே அர்ச்சனா என்று அரம்பித்தவள் நேற்றைய தினம் அழைப்பில் பேசியவர் சொன்ன இடத்தில் உண்டதை சொல்லி சிலாகித்தாள்.

 

அத்தோடு இன்று மருத்துவ முறை என்றும் சொல்லி சோவை ஆரம்பித்தாள்.

 

“இதுல ரொம்ப முக்கியமானது மாத்திரை, மருத்துவர் கவனம், செவிலியர்கள் கவனம் என்று விஸ்வாமித்திரன் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

 

அதே நேரம் இப்போது பாடலுக்கான கேப் என்பதை உணர்ந்து பாடலிசைத்து விட்டு சோக முகத்துடன் திரும்பினாள் மையூரியிடம்.

 

அன்று நடந்த அனைத்தையும் சொல்லும் போது அனைவருக்கும் அவளின் அவல நிலை புரிந்தாலும் உதவி செய்யும் நிலையில் ஒருவரும் இல்லை.

 

ஆனால் ஷாலினி தான் நடக்குறது எல்லாம் அது பாட்டுக்கு நடக்கட்டும்டி.  உனக்கும் இதுல விருப்பம் மாதிரி மட்டும் நடந்துக்கோ.  மத்தத நாம எல்லாம் சேர்ந்து பாத்துக்கலாம் என்றவளை சிநேக முகத்துடன் ஆர தழுவினாள்‌.

 

அதே நேரம் விஸ்வாமித்திரன் என்ற அழைப்பு  வரவும் மையூரியும் ஷாலினியும் விழித்தார்கள்.

 

மையூரி முன்பு அர்ச்சனா சொல்லி புலம்பியவன் இவன் தான் என்று எண்ணி அழைப்பை ஏற்று அறிவு இல்ல உனக்கு.  சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறையா இல்லையா? என திட்டி தீர்த்தாள்.

 

எதிர்ப்புறம் இருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

அர்ச்சனா தான் ஏன்டி இவன திட்டுற என்றிட,

 

“அப்ப நீ சொன்னது இவன இல்லையா?”

 

என்று கேட்டு முளித்தாள் மையூரி.

 

அது இவன் இல்லடி.  இவன் நேத்து பஸ்ல பாத்த அந்த முட்டக்கண்ணன் என்று சொல்லவும் ஷாலினியும், மையூரியும் கோண வாயால் சிரித்தார்கள்.

 

உடனே அர்ச்சனாவிடம் மொபைலை கொடுத்தாள்.

 

வாங்கியதும் ” சொல்லு மேன் .  உனக்கு ஃபோன் பண்ண நேர காலமே கிடையாதா” என்றாள்‌.

 

என்னங்க நைட் கூப்பிட்டாலும் கோவப்படுறீங்க.  ஈவ்னிங் கூப்பிட்டாலும் கோவப்படுறீங்க‌. எப்ப தாங்க உங்களுக்கு கூப்பிடனும் என்று மென்மையாக பேசினான்‌.

 

அவனின் இந்த பரிதவிப்பு அவளுக்கு புரிய எதுக்கு மேன் நீ எனக்கு ஃபோன் பண்ணும்.  உனக்கு டைம் பாஸ் ஆகலைனா ஃபோன் பண்ணி என்னை மாட்டிவிடுவையா” என  நேற்று இரவு நடந்ததை உலர

 

நான் உங்கள மாட்டி விட்டேனா, என்ன பேசுறீங்க.  நான் உங்க குடைய எப்படி கொடுக்குறதுனு கேட்க தான் கூப்பிட்டன்.  இந்த மாதிரி நீங்க பேசுவிங்கனு தெரிஞ்சு இருந்தால் நான் நேற்று குடைய வாங்கி இருக்க கூட மாட்டேன் என்று மனதார வருந்தினான்.

 

அவனுடைய தோய்ந்த குரலால் அரச்சனாவும் பாதிக்கப்பட்டு மீண்டாள்‌.

 

“குடைய டுடே நைட் நைன் ஓ கிளாக்ல ப்ரியா பஸ்ல வாங்கிக்குறேன்”

 

என்ன ஒன்பது மணிக்கா?  அந்த நேரத்துல உங்களுக்கு பயமா இருக்காதா என தவிப்போடு கேட்க,

 

பயமா எனக்கா நான் யாருன்னு தெரியுமா என்று கேட்டவளின் முதுகுபுறம் இருந்த ஷாலினி அவ குடும்பத்துக்கு மட்டும் தான் பயப்படுவாடா என்று முணுமுணுத்தாள்.

 

அது அர்ச்சனாவிற்கும் கேட்டு விட உன்னை வச்சுக்குறேன்டி என்றாள்.

 

அழைப்பில் இருந்தவனுக்கும் அது கேட்க, என்னங்க சொன்னீங்க என்னும் போது சோவில் பாடல் முடிந்து இப்போது பேசும் தருணம்.

 

வணக்கம் ‌.  பார்மஸினு சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வந்தது நேற்றைய பேருந்து சந்திப்பின் போது நான் சந்தித்த மூன்றாம் நபரின் பணிச்சுமை.  அவரும் என்னிடம் அவரது பார்மஸி டெவலப்மெண்ட் பற்றி இந்த எப்எம்மில் பேசும் படி கேட்டுக் கொண்டதால் சொல்கிறேன்.

 

அங்கு சென்று அனைத்து மருந்துகளையும் பெற்று அவரின் தொழில் வளர்ச்சிக்கு உதவுங்கள் என்றதோடு மீண்டும் ஒரு பாடலை இசைக்க வைத்தாள்.

 

அழைப்பில் இதை கேட்டு கொண்டிருந்தவனுக்கு எதோ சந்தோசம்.  தன் தொழிலில் இந்த ஜீவனாவது உதவுகிறது என்று.

 

நன்றி என்று மட்டும் அவன் முடிக்க இருந்த தருணத்தில் உங்க நன்றிலாம் எங்களுக்கு வேணாம்.  ட்ரீட் வை என்றாள் ஷாலினி.

 

கண்டிப்பா வச்சிடலாம் என்றவன் இன்னும் இரு மணி நேரம் கழிவதற்க்காக காத்திருக்க துவங்கினான்.

 

அர்ச்சனா, ஷாலினி மற்றும் மையூரி மூவரும் இன்னைக்கு ஒரு புடி என்று கை கோர்த்தார்கள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!