Home Novelsசெவ்வானம் தீண்டிய பனிக்காற்று

செவ்வானம் தீண்டிய பனிக்காற்று

3) செவ்வானம் தீண்டிய பனிக்காற்று

by Kowsalya Velmurugan
0
(0)

ஆரவின் தெள்ள தெளிவான பேச்சுகள் இன்னொரு பிரான்ச் ஓபன் செய்வதற்கு வழிவகை அமைத்தது.

 

சூப்பர் டா இன்னைக்கு உன் மீட்டிங்ல நானே இம்ப்ரெஸ் ஆயிட்டேன்.  நான் கூட நீ வந்த இலியூஷன்   உன்ன ரொம்ப பாதித்திருக்கும் என்று நினைத்தேன்.

 

எத்தனை டைம்தான் சொல்றது அதை இல்யூஷன் இல்ல.  கயல் இங்கதான் இருக்கான்னு எனக்கு உணர்த்தர என்னோட நேசம்.

 

யெப்பா சாமி உன் காதல் புராணத்தை பார்த்தா தல சுத்துது.  சரி சரி பிரான்ச் ஓப்பன் பண்ணிட்ட எனக்கு ட்ரீட் வை.

 

இது ஒன்ன புடிச்சுக்கோ. சரி கிளம்பு எந்த ஹோட்டல் போலாம்.

 

ஆர் கே புவன் ஹோட்டல்..

 

போரிங் டா..

 

என் ஆர் ஹோட்டல்…

 

உன் டேஸ்ட் ரொம்ப மட்டம்டா…

 

அப்ப தொரையே எங்க போலாம்னு சொல்லுங்க…

 

விண்மீன் தாபா போலாம்.

 

ஷோ ஹப்பா அந்த இடத்தை இன்னும் மறக்க மாட்டையா.

 

நான் உயிரோடு இல்லாதப்ப வேணும்னா மறப்பேன்.  என்னோட தேவதைய நான் சந்தித்த முதல் சந்திப்பு அங்க.  நானே மறந்தாலும் அந்த இடம் அவ்வளவு புத்துணர்ச்சியா ஸ்வீட்டா எனக்கு மெமரீஸ் சேர்த்து எடுத்து கொடுத்துடும்.

 

அந்த பொண்ணு உயிரோட இருந்தா உன் கூட ரொம்ப சந்தோஷமா வாழ்ந்திருப்பாடா.

 

கண்டிப்பா சக்தி.  என்னோட உள்ளங்கையில வச்சு நான் பாத்துட்டு இருந்திருப்பேன்.  ஆனா அவளும் இறந்து என் குழந்தையும் இறந்து இப்போ இவனை மட்டும் வச்சிட்டு நான் தவிக்கிற தவிப்பு நான் மட்டும் தான் அனுபவிக்க முடியும்.

 

அதே நேரம் ஆரவின் மொபைல் அடிக்கவும் அழைப்பை ஏற்றான்.

 

சொல்லு தங்கம் என்ன பண்ற?

 

தாடி நான் சோல் போயிட்டு வந்துட்டேன்.  இன்னிக்கு எங்க சோல்ல ( ஸ்கூல்) நிறைய ஹோம் ஒர்க் கொடுத்து இருக்காங்க.  நீ கொஞ்சம் சீக்கிரம் வந்து எனக்கு சொல்லிக் கொடு.

 

சரிடா தங்கம் கண்டிப்பா டாடி இன்னும் ஒரு த்ரீ ஹவர்ல வந்துருவேன்.  வந்ததும் உனக்கு வீட்டு பாடம் சொல்லி தரன்.

 

அதன்பின் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

 

இன்னைக்கு என் பையன் பைரவுக்கு ஸ்கூல்ல நிறைய ஹோம் ஒர்க் கொடுத்திருக்காங்களான்டா சக்தி.  சீக்கிரமா வர சொல்றான். நாளைக்கு ட்ரீட்ட சேஞ்ச் பண்ணி வச்சுக்கலாமா?

 

ம்… சக்தி அமைதியாக அதை ஏற்றுக் கொண்டான்.  பிஞ்சு குழந்தை கேட்கும் போது அவன் வேண்டாம் என்று தடுக்க அவன் ஒன்றும் இராவணன் அல்ல.

 

பின்பு சென்னை அண்ணா விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த விமானத்தில் ஏறியவனுக்கு மீண்டும் ஏதோ உள்ளுணர்வு செய்தது.

 

அவ்வப்போது வந்து செல்லும் இந்த இடத்தில் இப்படி ஒரு உள்ளுணர்வு அவனுக்கு இப்போதுதான் முதல் முறை.  சக்திவேலிடம் அவன் சொல்லவும் மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா சாமி.  கொஞ்ச நேரம் இந்த சீட்ல சாஞ்சு அப்படியே கண்ண மூடி படுத்து தூங்கு.  இல்ல என்னையாவது தூங்க விடு.  சும்மா அந்த நினைப்பு வந்துச்சு இந்த ஞாபகம் தூண்டிச்சுன்னு பிளேடு போடாதடா முடியல…

 

மானசீகமாகவே கெஞ்சி விட்டான் சக்திவேல்!

 

அதே விமானத்தில் பயணிகளை நலம் விசாரிப்பதில் மும்முறமாக ஆழ்ந்திருந்தால் கயல்.

 

மேனேஜர் பொசிஷனில் இருப்பவள் இதிலும் பொறுப்பாக நடந்து கொள்ளும் தன்மையின் காரணத்தால் தான் இந்த இரண்டு ஆண்டுகளாக மேனேஜர் பொசிஷனை தன் வசம் வைத்துள்ளாள்.

 

பயணிகள் அனைவரையும் உபசரித்து விட்டு அன்றைய தனது டியூட்டியை முடிக்கும் தருணம் அது.  இறுதி விமான செக்கப் என்பதால் ஆர்வத்துடன் நுழைந்தவளுக்கு வரும் ஆபத்து என்பது தெரியாதது.

 

வணக்கம் சார் உங்களுக்கு என்ன தேவைனாலும் எங்களை நீங்க கேட்கலாம்.  பிளைட்ல ஏதாவது சேஞ்சஸ் இருந்தா நீங்க பயப்படாம என்கிட்ட இன்பார்ம் பண்ணாலே போதும் நாங்க அதுக்கான சொல்யூஷன் என்னன்னு பார்ப்போம்.  என்ஜாய் யுவர் டிரைவ் சார்…

 

பின் மாஸ்க் அணிந்த முகத்தோடு ஒவ்வொரு பயணியையும் கவனித்தாள்.

 

கண்ணயர்ந்து தன் கனவு உலகில் அடி எடுத்து வைத்து இருந்தான் ஆரவ்.

 

சிரித்தபடி மலர் வளையத்தோடு தன் அருகாமையில் வந்து நின்ற ஒரு பெண்ணின் தலையை வருடிவிட்ட ஆரவ் வந்துட்டையா என் செல்ல குட்டி என்று அவளின் உச்சி நெத்தியில் முத்தமிடுவது போல காட்சி வரவும்,

 

ஆர் யூ மேட்?  டிஸ்கஸ்டிங்.. எந்த வேலைக்கு வரீங்களோ அதை மட்டும் உங்களால செய்ய முடியாதா?  என்று ஒரு பயணியை திட்டி கொண்டு இருந்தால் கயல்.

 

விமான பயணத்தில் வெகு ஆர்வமாக இருந்த ஒரு இளைஞன் அவளின் மாஸ்கினை கழட்டி விட்டான்.

 

அதன் பயனே அவள் அவனைத் திட்டிக் கொண்டிருப்பது தான்.

 

இவ்வளவு க்யூட்டான ஃபேச மாஸ்க் போட்டு கெடுத்து வச்சிட்டு இருக்கீங்களே மேடம்.  இந்த மாதிரி அழகான ஃபேச எங்களுக்கு ஒரு டைமாவது காட்டணுமா வேண்டாவா?

 

இவ்வாறு சொல்லிக்கொண்டே அவனது கண் பார்வை முகத்தை தாண்டி வேறு புறம் சென்றது.

 

அதை அறிந்த கயல் தனது மேல் அதிகாரியிடம் அழைத்து பேசுவதற்காக மொபைலை எடுத்தாள்.

 

விடுக்கென அந்த மொபைலை பிடுங்கியவன் தனது இருக்கையில் போட்டு அமர்ந்து கொண்டான்.

 

சார் நீங்க பண்றது ரொம்ப மோசம்…

 

நீங்க பண்றது தான் ரொம்ப மோசம் மேம்.  எங்க கிட்ட நீங்க ஒழுங்கா ரெஸ்பான்ஸ் பண்ணிங்கனா உங்க மேல நாங்க கம்ப்ளைண்ட் பண்ணலாம்.

 

இதுக்கெல்லாம் அசர ஆள் நான் இல்லை.  நீ எங்க வேணா கம்ப்ளைன்ட் ரெய்ஸ் பண்ணு. என்ன உன்னால ஒண்ணுமே பண்ண முடியாது…

 

தெள்ளத் தெளிவாக அவனிடம் சண்டையிட்டால் அவள்.

 

சென்னையில் முக்கியமான தொழிலதிகாரியின் மகன் தான் அந்த முப்பதைத் தொட்ட ஆண்.

 

அதற்காக எல்லாம் வளைந்து கொடுத்து செல்லும் அனைவரையும் போல கயல் ஒன்றும் பயந்த சுபாவம் கொண்ட பெண் இல்லை.

 

எதற்காக வேண்டுமானலும் குரல் உசத்தும் ரகம். இன்றும் அவள் அப்படி குரல் உயர்த்தி பேசிய தருணம் ஆரவ்வின் துயில் கலைந்து அவனின் இரு விழிகளும் அவளை கண்டது.

 

கயல்……

 

அவளை யாரோ அழைப்பது போன்று இருக்கு தலையை அங்கும் இங்கும் அசைத்து துலாவினாள்.

 

அவனை பார்த்ததும், ஆரவ் என்று எச்சில் விழுங்கியவளின் கண்ணில் பயம், பதட்டம் அத்தனை!

 

ஆரவோ அவள் உயிரோடு இருக்கின்றால் என்று கத்த கண்ணயர்ந்து இருந்த சக்தி திடுக்கிட்டு முழித்தான்.

 

இதுவரை அவன் சொல்வது அனைத்தும் அவனது கனவு லோகம் என்று சொல்லியவனுக்கு கயல் முன் நிற்கவும் வாயடைத்து போனான்.

 

அந்த இளைஞனிடமிருந்து நகர்ந்து வெகுவேகமாக நடந்து ஆரவை கடந்து தங்கள் கேபினுள் நுழைந்தவளை தனது சீட் பெல்ட் அனைத்தையும் கழட்டி விட்டு ஓடி வந்து பார்த்தான்.

 

கேபின் வெளியே கயல் கதவ திற.  என்ன பாரு கயல்.  நான் உன் ஆரவ் கயல்.  என்கிட்ட பேசு கயல்.  என்ன பாரு கயல் என்று ஆதங்கத்துடன் தொடங்கியவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்து அழுகை வந்தது.

 

வேகமாக பயத்துடன் உள் நுழைந்தவளுக்கு ஆரவ் பின் தொடர்ந்து வருவான் என்பது தெரிந்த விஷயம்.  யார் கண்களில் இத்தனை நாள் படக்கூடாது என்று தவிர்த்து இருந்தாலோ அவனிடமே மாட்டி கொண்டாள்.

 

யாரின் முன் அவள் சென்று நிற்க கூடாது என்று இத்தனை நாளும் பயத்துடன் நாட்களை கடத்தினாலோ அந்த பயம் இன்று நடந்து விட்டது.

 

கேபினுள் உள்ள பாத்ரூமில் சென்று அங்கிருந்த கண்ணாடியின் முன் நின்று அழுதாள்.

 

ஏன் ஆரவ். இப்படி சின்ன பைய மாதிரி கெஞ்சிட்டு இருக்க.  எவ்ளோ பெரிய பிஸ்னஷ் மேன்டா நீ.  ஒரு ஒரு நாளும் டீவில உன்ன பாக்குறப்ப அவ்ளோ சந்தோஷமா இருக்கும்.  ஆனா இன்னைக்கு ஏன்டா என்ன நேருல பாத்த.

தூரத்துல நீ இருந்தா தான் மாமா நல்லது.  உன் கிட்ட வர எனக்கு விருப்பம் இல்ல.  போயிடு….

 

கண்ணாடி முன் நின்று அழுதவண்ணத்தில் இருந்தவளை ஓடிவந்து அணைத்தாள் சுபா.

 

 

சுபா….

 

அக்கா பயப்படாத.  நான் பாத்துக்கிறேன்..

 

அழுதவாறே வேண்டாம் சுபா.  இனிமேல் ஆரவ் சும்மா இருக்க மாட்டான்.  நடக்க கூடாதது எல்லாம் நடந்து போச்சு.  இனிமேலும் நம்ம இங்கையே இருந்தால் அவன் இடத்துக்கு நம்மள தூக்கிட்டு போயிடுவான்.  உடனே சார் சொன்ன தாய்லாந்து ஃப்ளைட் மேனேஜர் பொசிஷனுக்கு நானே போறேன்.

 

அக்கா அது ரொம்ப தூரம்‌. நானும் நீயும் சந்திக்க கூட முடியாதுக்கா.

 

அதான்டி வேணும்‌.  உனக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை கூட இல்லைனு அவன் நம்பனும்.  அவன மட்டும் எப்படியாவது நீ நம்ப வச்சிட்டால் இன்னைக்கு என்ன பார்த்தது அவனோட இலியூஷன்னு நெனச்சிப்பான்.

 

அக்கா என்று இருவரும் அணைத்து அழுதனர்.

இப்ப எப்படிக்கா அவர சமாளிக்கிறது?

 

மைதிலிட்ட சொல்லுடி…

 

அய்யோ மக்கு அக்கா அவதான் இன்னைக்கு லீவாச்சே.

 

அச்சோ மறந்தே போயிட்டன் இரு சார்க்கே கால் பண்ற…

 

அழைத்தவள் அனைத்தையும் சொல்லி செய்ய வேண்டியதையும் சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தாள்.

 

அதன்பின் ஆரவிடம் வந்த தயாளன் சார் நீங்க ஏன் இவ்வளவு சத்தம் போடுறிங்க.  நீங்க சொல்ற பேருல இங்க எந்த ஸ்டாஃப்பும் இல்ல.  சோ வாங்க சார் வந்து உட்காருங்க…

 

சக்திவேலும் குழம்பி இருந்த தருணம்!

 

அவனுக்கு கயல் தெரிவது ஒரு பிரம்மையாக இருந்தாலும் கூட பரவாயில்லை எனக்கு ஏன் அப்படி இருக்க வேண்டும்.

 

காதல் வயப்பட்ட அவனுக்காக அந்த பெண் தெரிவதை இத்தனை நாள் நானும் கேளி செய்து கொண்டு இருந்தாலும் இப்போது எனக்கு தெரிந்ததும் பிரம்மையா?

 

நிச்சயமாக இருக்காது அது கயலே தான்!

 

அடித்து பேசியவன் ஸ்டாஃப் லிஸ்ட்டை காட்டுமாறு நின்றான்.

 

கயல் அப்படி யாரும் இல்லை என்று சொல்லிவிட்டால் சென்று விடுவார்கள் என்றால்.  இப்போது தயாளன் என்ன செய்வான்.

 

சார் காட்டி விடுங்க.  நான் மேனேஜர் தானே அது தனி லிஸ்ட்ல இருக்கும்ல.

 

பதட்டத்துல மறந்துட்டமா…

 

அதன் பின் எடுத்துக் காட்டியதில் கயல் பெயர் இல்லாமல் சுபா பெயர் இருந்தது.

 

சுபா கயலின் தங்கை.  இந்த பொண்ணு இன்னைக்கு டியூட்டில இருந்தா வரச்சொல்லுங்க?

 

மீண்டும் தயாளனுக்கு அந்த ஏசி விமானத்திலும் வியர்த்து கொட்டியது.

 

கயல் இதை சிறிதும் யோசிக்காமல் போக மாட்டிப்போம் போலடி.  ரொம்ப டென்ஷனா இருக்கு….

 

அக்கா அவரு உன் புருஷன்க்கா.

 

இல்லடி என்னோட முன்னால் புருஷன்.  இப்ப அவரு இன்னொரு பொண்ணோட கணவர்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

You may also like

Leave a Comment

Best Tamil Novels

error: Content is protected !!