முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 5

4.6
(16)

அரண் 5

 

கதவை இடித்து உடைக்க துருவனின் நண்பர்கள் கடப்பாறையை கதவின் அருகே கொண்டு செல்ல கதவு தானாக திறந்தது.

அனைவரும் இதோ கதவு உடைய போகின்றது உள்ளே அப்படி என்னதான் இருக்கின்றது என்று ஆவலுடன் சுற்றி நின்று பார்க்க,

அவர்களது ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வண்ணம் கதவு தானாகவே திறந்தது.

துருவன் இரண்டு கண்களையும் கசக்கிக் கொண்டு சிறுபிள்ளை போல வெளியே வந்து சரிவர கண்களை திறக்காமல்,

“அம்மா காபி..” என்று கூறி வளமை போல அருகில் உள்ள சோபாவில் அமரப்போக, அப்போதுதான் அதனை கவனித்தான்.

தனது அறையின் முன்பு அம்மா, அப்பா, நண்பர்கள் அனைவரும் நிற்பதை பார்த்த பின்பு தான் ஏன் நிற்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்க்கும் போதுதான் அவனுக்கு புரிந்தது. இன்று எனக்கு கல்யாணம்.

அனைவரும் ஏன் என்னுடைய அறையின் முன்னே நிற்கின்றார்கள் என்று புரியாமல் வைதேகியின் அருகில் போய் நின்று,

“அம்மா ஏன் எல்லோரும் இங்க நிக்கிறாங்க..?” என்று கேட்க வைதேகியிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போக,

“அம்மா சொல்லுங்க அம்மா..” என்று மீண்டும் துருவன் கேட்க,

வைதேகியோ எதுவும் பேசாமல் துருவனுக்கு பின் எதனையோ முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“எதுக்கு அம்மா இப்படி பாக்குறாங்க..” என்று முனகிக் கொண்டு துருவன் திரும்பி பார்க்க அவனது மெத்தையில் ஒரு அழகிய பெண் உறங்கிக் கொண்டிருந்தாள்.

அவனுக்கு அப்படியே உடல் விதிர்விதிர்த்துப் போனது. அப்படியே தலையில் யாரோ இடியை இறக்கியது போல் இருந்தது. சுற்றமும் மறந்து சிறிது நேரம் அப்படியே அதிர்ச்சியில் அசையாமல் நின்றான்.

‘எவ்வாறு, எப்படி என்னுடன் ஒரு பெண் அதுவும் எனது படுக்கையில் எதுவுமே புரியாமல் அன்னையின் கைகளைப் பிடித்து பயத்துடன்,

“அம்மா அந்தப் பொண்ணு யாருன்னு எனக்கு தெரியாது ப்ளீஸ் என்னை நம்புங்க..” என்று கூற,

வைதேகி ஒன்றும் பேசாமல் அவனது நடுங்கும் கரங்களில் இருந்து தனது கரத்தை உருவிக்கொண்டு வேறு பக்கம் திரும்பி நின்றார்.

“அம்மா ப்ளீஸ்மா என்ன நம்புங்க இவளை யாருன்னு எனக்கு தெரியாது..” என்றிட,

தனபால் தலையில் கை வைத்துக் கொண்டு அருகில் இருந்த சோபாவில் அப்படியே அமர்ந்து விட்டார்.

அங்கு வந்திருந்த உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் பிரமுகர்கள் அனைவரும் இங்கு நடந்த சம்பவத்தை பார்த்து வாய்க்கு வந்தபடி ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி பேச தொடங்கினர்.

ரேகாவிற்கு என்ன நடக்கின்றது என்றே புரியவில்லை.

துருவன் நண்பர்களில் ஒருவன்,

“என்ன மச்சி இது உன் கூட ஒரு பொண்ணு இருக்கா ஏன்டா இப்படி பண்ணின..?”

“டேய் உண்மையில அந்த பொண்ணு யாருன்னு எனக்கு தெரியாதுடா அந்த பொண்ணு இங்க எப்படி வந்தான்னு எனக்குத் தெரியல.. ப்ளீஸ் டா என்ன நீயாவது நம்பு…” என்று கூறிக்கொண்டு அந்தப் பெண்ணின் அருகில் சென்று அவளை நன்கு தலையை ஒவ்வொரு கோணத்திலும் வைத்து உற்றுப் பார்த்தான்.

இதுவரை அந்தப் பெண்ணை எங்காவது பார்த்தது போல் இருக்கின்றதா என நன்கு கண்களை சுருக்கி விரித்து பார்த்தான் துருவன்.

ஆனால் அந்த முகத்தை எங்கும் பார்த்தது போல் அவனுக்கு ஞாபகம் இல்லை.

வைதேகி நட்டு வைத்த மரம் போல அதே இடத்தில் அசையாமல் அதிர்ச்சியுடன் நின்று துருவனை முறைத்துப் பார்க்க,

மீண்டும் துருவன் அன்னையின் அருகில் சென்று,

“அம்மா அப்படி என்ன பாக்காதீங்க நான் உண்மையிலேயே எந்த தப்பும் பண்ணல என்னை நம்புங்கம்மா..” என்று கூற,

அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ரேகாவிற்கு உண்மை உரைத்தது.

துருவன் யாரோ ஒரு பெண்ணுடன் தனது இரவு பொழுதை கழித்து இருக்கின்றான் என்ற விடயம் அவளது மூளைக்கு எட்டியது.

துருவனது கையைப் பிடித்து தர தர என இழுத்துக் கொண்டு அருகில் உள்ள அறைக்குள் ரேகா இழுத்துச் சென்று கதவை பூட்டினாள்.

அவள் இழுத்த இழுப்பிற்கு பின்னே சென்ற துருவன், அவளைப் பார்த்து எதுவும் கூற முடியாத நிலைமையில் நிற்க,

அதிகபட்ச கோபத்தில் ரேகா,

“துருவன் என்ன இது என்ன நடக்குது..?” என்று கோபத்தில் சீறினாள்.

“எனக்கே புரியல ரேகா..” என்று இரண்டு கைகளையும் விரித்துக் கூறினான் துருவன்.

“என்னது புரியலையா ஒரு பெண்ணோட நீங்க இரவு ஃபுல்லா இருந்திருக்கீங்க… என்ன தெரியலன்னு சொல்றீங்க…?”

“உண்மையிலேயே எனக்கு தெரியல..”

“என்னது துருவன் உங்களுக்கு பக்கத்துல ஒரு பெண் தூக்கிட்டு இருக்கா அது கூட உங்களுக்குத் தெரியலையா..?”

“ஆமா ரேகா நைட் பார்ட்டில பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து எனக்கு வாய்க்குள்ள சரக்கு ஊத்திடாங்க எனக்கு அதனால தலை சுற்றி என்னவெல்லாம் பண்ண நான் வந்து தூங்கிட்டேன் அதுக்கப்புறம் என்ன நடந்தது என்று தெரியாது..” என நடந்த விடயங்களை ஒவ்வொன்றாக கூறினான் துருவன்.

“ஆனா நைட் நீங்க..” என்று எதையோ சொல்ல வந்தவள். தான் வந்த விடயத்தை அவனிடம் கூறி விடக்கூடாது என்று அதனை மறைத்துக் கொண்டு சிந்தித்தாள்.

“ஆமா நான் நைட் வரும்போது துருவன் தனியாகத்தான் உறங்கிக் கொண்டிருந்தான் அப்போ திடீரென்று இந்த பொண்ணு எங்கே இருந்து வந்தது நித்திரையில் இருந்து எழுந்திருச்சு போய் கூட்டி வந்திருப்பானோ..’ என்று யோசித்தாள் ரேகா.

“துருவன் என்கிட்ட நீங்க ஏற்கனவே சொல்லி இருக்கலாம் தானே இப்படி ஒரு பொண்ணு மேல எனக்கு கிரஸ் இருக்குன்னு… நான் என்ன மாட்டேன்னா சொல்லி இருப்பேன்..

இல்லன்னா நீங்க கல்யாணத்துக்கு பிறகு அந்த பொண்ணோட லிவிங் டு கெதர் ல இருக்கனும் என்று ஆசைப்பட்டு இருந்தீங்கன்னா என்கிட்ட சொல்லி இருக்கலாமே நான் அதுக்கு மறுப்பு தெரிவித்து இருக்க மாட்டேன்..

ஏன் இப்படி கல்யாணத்தன்னைக்கு என்னோட மானத்தை வாங்குறீங்க…

எல்லாருக்கும் முன்னுக்கு இப்படி செஞ்சிட்டிங்களே கல்யாணத்துக்கு பிறகு உங்களுக்கு எவ்வளவு டைம் இருக்கு உங்களை நான் கல்யாணத்துக்கு பிறகு கட்டுப்படுத்தி வைத்திருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா..?

நீங்க எந்த பொண்ணு கூடயும் ஃப்ரீயா சுத்தலாம் யாரோட வேணும்ன்னாலும் போகலாம், பழகலாம் நான் அதுக்கு எல்லாம் தடை விதிக்க மாட்டேன் நம்ம பிசினஸ் வேர்ல்டுல இதெல்லாம் சகஜம்..

நாம ப்ரீ பேர்ட்ஸ் யாரோட வேணும்னாலும் பழகலாம், சிரிக்கலாம் எதுவும் பண்ணலாம்…

கல்யாணத்துக்கு அப்புறம் எந்த பொண்ணுங்க கூடயும் பேசக்கூடாது பார்க்க கூடாது பழகக் கூடாது என்று மத்த வைப் மாதிரி நான் நடந்துப்பேன்னு நினைச்சீங்களா..? நான் அந்த டைப் பொண்ணு இல்ல.

ஆனா நீங்க இன்னைக்கு பண்ணினது ரொம்ப மோசம் துருவன் சரி சரி போய் அந்த பொண்ணுக்கு காசு கொடுத்து அனுப்பிட்டு வாங்க நாங்க கல்யாணம் பண்ணிக்கலாம்..” என்று கூற துருவனுக்கே ரேகாவை பார்க்க அருவருப்பாக இருந்தது.

அவளது கையை உதறித் தள்ளிவிட்டு,

“நீ எல்லாம் ஒரு பொண்ணா உன்ன போய் நான் கல்யாணம் கட்டிக்கணும்னு நினைச்சேனே என்ன சொல்லணும் என்ன நான் செருப்பாலே அடிச்சுக்கணும்

என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு இப்படி பேசுறத இப்பதான் நான் முதல்முறையா கேட்கிறேன்

கல்யாணம் கட்டிக்க போற ஒருத்தன் இன்னொரு பொண்ணோட இருக்கிறத பார்த்தா ஒரு பொண்ணுக்கு கோவம் தான் வரும் ஆனா நீ என்னன்னா காம்ப்ரமைஸ் பண்ற

அப்போ உனக்கு என்ன விட ஏதோ ஒரு முக்கியமான விஷயம் என்னிடம் இருக்கு அதனால தான் நீ இப்படி பண்ற இந்த உலகத்தில கல்யாணம் கட்டிக்க போறவன பாத்து இப்படி ஒரு வார்த்தை எந்த பொண்ணுமே சொல்ல மாட்டா.. அப்படின்னா நீ பொண்ணே இல்ல..”

“இல்ல துருவன்..” என்று அவள் இழுக்க

“கெட் லாஸ்ட் ரேகா…’ என்று அந்த அறை எதிரொலிக்கும் வண்ணம் கத்தினான்.

அவனது குரல் கேட்டு அறைக்கு வெளியே இருந்தவர்கள் அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.

உடனே வெளியே வந்த ரேகா துருவன் அவமானப்படுத்தியது தாங்க முடியாமல் அதனை மறைக்க, வைதேகியிடம் சென்று,

“இப்படிப்பட்ட ஒரு ஆள நான் பார்த்ததே இல்லை ஆன்ட்டி இவன் எனக்கு வேணாம் நீங்க என்ன விட்டா காணும்.. நல்லவேளை இவருடைய உண்மையான குணம் கல்யாணத்துக்கு முன்னுக்கே எனக்குத் தெரிய வந்தது..” என்று கூறி கண்களில் இருந்து வராத கண்ணீரை துடைப்பவள் போல பாசாங்கு செய்து நாடகம் ஒன்றை அரங்கேற்றி விட்டு அங்கிருப்பவர்களுக்கு உள்ளே தங்களுக்குள் பேசிக் கொண்டது என்னவென்று தெரியாது தானே அதனால் துருவன் மீது பழியை போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.

அவளுக்கு பெரும் ஏமாற்றம் தான் துருவனை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று எப்படியாவது அவனை காம்ப்ரமைஸ் பண்ணி இந்த கல்யாணத்தை நடத்தி முடிச்சிடலாம் என்று தான் தனியாக துருவனை அழைத்துச் சென்றாள்.

ஆனால் அது நடக்காது இனி நடக்கவும் வாய்ப்பில்லை என அறிந்த பின்பு துருவனின் வெறுப்பான பேச்சுக்களைக் கேட்டு இனியும் அங்கிருக்க அவளுக்கு என்ன பைத்தியமா இந்தக் கல்யாணம் இதற்கு மேலும் நடக்காது என்று அறிந்த பிறகும் அவனின் காலை பிடித்து என்ன பிரயோசனம் என்று வெளியே வந்தவள்.

வைதேகி அங்கு உள்ளவர்களிடம் அப்பாவியாக தன்னை காட்டிவிட்டு சென்று விட்டாள்.

ரேகா அங்கிருந்து சென்ற பின் துருவன் வெளியே வர தனபால் துருவனின் அருகில் சென்று,

“என்ன துருவன் இதெல்லாம்.. என்னோட பையனா நீ இதை நான் கொஞ்சம் கூட உன்கிட்ட எதிர்பார்க்கல..” என்று அருகில் உள்ள கதிரையை தனது கோபம் தீர காலால் உதைத்தார். அந்தக் கதிரை எதிரில் உள்ள சுவற்றில் மோதி கீழே விழுந்தது.

தந்தையின் இந்த கோபமான முகத்தை காணாத துருவனுக்கு தன் மீதே அந்நேரம் பல மடங்கு கோபம் வந்தது.

நேற்று மது அருந்தியதால் தானே இவ்வளவு பிரச்சனை அப்பொழுதே வேண்டாம் என்று தான் சொன்னேன் இந்த நண்பர்களால் வந்த வினை என்று எண்ணிக் கொண்டு மது அருந்தியதை நினைத்து மீண்டும் மீண்டும் மனம் வருந்தினான்.

தனபால் வைதேகியைப் பார்த்து,

“வைதேகி அந்த பொண்ண போய் முதல் எழுப்பு..” என்று கட்டளையிட, உள்ளே சென்று மெத்தையில் படுத்திருந்த அந்த அழகிய பெண்ணை அருகில் சென்று பார்த்த வைதேகி அவளது அழகில் ஒரு நிமிடம் சொக்கிப் போய் தான் நின்றாள்.

மெதுவாக அவளது தோளில் கை வைத்து தட்டி,

“ஏம்மா பொண்ணு எழுந்திரு… எழுந்திருமா…” என்று

இரண்டு, மூன்று தடவை தோளில் தட்டிய பிறகு அந்த அழகிய பெண் துயில் நீங்கி தனது பனிமலர் பூத்த கண்களைத் திறந்தாள்.

யார் அந்தப் பெண் எவ்வாறு துருவனின் படுக்கை அறையில் புகுந்தாள் என்று அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!