I Love You Dangerous Darling
அத்தியாயம் – 1
சென்னை MG காலேஜ்,
“என்னடா காலேஜ் முதல் நாளே ஒரே மொக்கையா இருக்கு.. கண்ணுக்கு குளிர்ச்சியா ஒண்ணுத்தையுமே காணல.. இன்னைக்கு புது புது ஃபிகரா வரும்னு நம்பி வந்தேனேடா..” கல்லூரி நுழைவில் டூவீலர்களை நிறுத்தி அதன்மீது அமர்ந்து, காலை அட்ராசிட்டிஸை தொடங்கியாச்சு படிக்க வந்த பக்கிகள்.
“கடுப்ப கிளப்பாத டா மூளை கெட்ட முட்டாகுரங்கே.. ஒன்பது மணி காலேஜ்க்கு ஏழு மணிக்கெல்லாம் சைட்டடிக்க ஓடி வந்ததும் இல்லாம, என்னைய வேற தரதரன்னு இழுத்துட்டு வந்து உக்கார வச்சிருக்க.. இதுல குளிர்ச்சி இல்ல சூடு இல்லைனு குறைவேற படுற..
உன்னால பல்லு கூட வெலக்கல டா நானு..” ஹாஆ.. கொட்டாவி விட்டபடியே அரை தூக்கத்தில் புலம்பினான், சபரி.
“நீ என்னைக்குடா பல்லு விலக்கி இருக்க விளக்கெண்ண, இன்னைக்கு புதுசா கவலை பட.. நான்லாம் ஜட்டியே போடாம வந்திருக்கேன் வாய தொறந்தேனா.. என்னவோ கலர் கலரா பொண்ணு வந்தா கண்ண மூடிட்டு கண்டுக்காக போறவன போலத்தா ஓவரா சிலுத்துக்குற”
சபரியை வாரிவிட்ட சிவா, அவனது முறைப்பை கண்டுகொள்ளாமல் குளிர் பெண்கள் வருகிறார்களா என எட்டி எட்டி பார்க்க, அவர்கள் முன்னே புழுதி பறக்க நின்றது ராயல் யமஹா எம்டி பைக்.
வந்த வேகத்தில் பைக்கை சைட் ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவன், அதே வேகத்தில் இறங்கி பைக்கின் சாய்வு பக்கம் அமர்ந்தவனாக தலைக்கவசத்தை நீக்கவும், சில்லென வீசிய குளுங்காற்றில் அலைமோதிய முன் நெற்றி சிகையை விரல்களால் கோதி பைக் மிர்ரர் வழியாக தன் முகம் பார்த்து சரி செய்துகொண்டவன்,
“என்ன மச்சா, குளுகுளு குலாபீஸ் வர்ற தொடங்கியாச்சா.. எத்தனை பீஸ் உள்ள போயிருக்கு” கருநீல நிறத்தில் நேர் கோடு போட்ட கேஷுவல் சட்டையில், முட்டிக்கை வரை மடக்கிவிட்டு, லட்சம் மதிப்புள்ள கிரோனஸ் ஆர்ட் வாட்ச்சில் மணி பார்த்தபடியே நண்பர்களை பார்த்தான் ரிஷிவர்தன்.
தனது பட்டபடிப்பை முடித்து விட்டு, தந்தைக்கு பிறகு தங்களின் தொழில்களை திறன்பட நடத்தவே, அடுத்தக்கட்ட படிப்பை தேர்ந்தெடுத்து, எம்பிஏ முதலாம் ஆண்டு பயிலும் 23 வயதான கல்லூரி மாணவன்.
ஆடம்பரத்தில் மிதக்கும் தங்கமீன் என்றாலும் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் இயல்பாக பழகும் ஜாலியான பையன் தான். அன்பை விதை அன்பையே பைரெடு என்ற தாயின் சொல்லுக்கு இணங்க பணிந்து போகும் ரிஷி, நண்பர்களோடு சேர்ந்து விட்டால் ஒரே குஷியாகி விடுவான்.
“யப்பா டேய் ரிஷி.. நல்லவேளை வந்த, இந்த உத்தம ராசா தொல்லை தாங்க முடியல டா.. என்னவோ வேண்டா வெறுப்புக்கு டாவடிக்க வந்தவன போல ஓவரா சீன் போடறான்டா” பெரிதாக அலுத்து குறை சொன்ன சிவாவை முறைத்து வைத்தான் சபரி.
“ரிஷி மரியாதையா சொல்றேன், இந்த பயலோட சவகாசம் வச்சிக்காத.. மோசமானவன் எப்டிலாம் பொண்ணுங்கள சைட் அடிக்கிறான் தெரியுமா.. இவன் கூட சேர்ந்தா ஏதோ ஓரளவு படிக்கணும்னு நினைக்கிற நம்ம மனசையும் சேர்த்து சபலப்படுத்திபுடுவான், இந்த சபலபுத்திக்காரன்” என்ற சபரி, கல்லூரி வளாகத்தை கூட்டி பெருக்கும் ஆண்டியை பல்லை இளித்து பார்த்திருந்தவன் பின்னே ஒரு உதை விட்டான்.
“டேய்.. என்னடா பேசிட்டு இருக்கும் போது பின்னாடி உதைக்கிற, அந்த ஆண்டி மட்டும் திரும்பி பாத்திருந்தா என் இமேஜ் இந்நேரம் டேமேஜ் ஆகிருக்கும்..” பின்னால் தேய்த்தபடியே பற்களை கடித்தான் சிவா.
“போடாங்.. வயசுக்கு வந்த பொண்ணுல இருந்து வயசான ஆயா வரைக்கும் ஒரு பீஸ விட மாட்ற.. நீ இப்டியே சைட் அடிச்சிக்கிட்டே இரு, கடைசில பொண்ணு கிடைக்காம சிங்கிளாவே திரிய போற பாரு..”
“போடா போடா வயித்தெரிச்சல் புடிச்சவனே.. நீ ரொம்ப ரொம்ப நல்லவன் தான், பெருசா சாபம் குடுக்க வந்துட்டான்.. போடா டேய் உன் சாபமெல்லாம் எனக்கு பலிக்காது..” இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டிருக்க, பஞ்சாயத்து பண்ண வேண்டியவனோ கலர் கலர் உடையில் உள்ளே நுழையும் பெண்களை உன்னிப்பாக சைட் அடிப்பதில் கவனமாக இருந்தான்.
“அங்க பாரு டா நம்ம ரெண்டு பேத்தையும் அடிச்சிக்கவுட்டு அந்த நாய் பண்ற வேலைய” இருவரும் மூச்சி வாங்கும் வெறியோடு ரிஷி முன்னே வந்தனர்.
“ஆஹா.. புதுசா வர ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகமா இருக்கே..” கூலிங் க்ளாஸ் விகிதம் கண்ணியமாக சைட் கொண்டிருந்தவன், இரண்டு தொப்பை கண்ணை மறைக்கவும் நண்பர்களை நிமிர்ந்து பார்த்தான்.
“என்ன டா அதுக்குள்ள சமாதானமாகிடீங்க.. நானே டக்குனு வந்து உங்கள தடுக்கலாம்னு பாத்தேன் டா” என்றதும்,
“உன் டக்க நாங்களும் பாத்துட்டு தான் இருந்தோம்..” இருவரும் முறைப்பாக சொல்ல, அசடு வழிய இளித்து வைத்தான் ரிஷி.
“ஹாய் ரிஷி.. ஹாய் சபரி என்ன காலேஜ் முதல் நாளுன்னு எல்லாரும் சீக்கிரம் வந்தாச்சா..” அவன் க்ளாஸ்மேட் வந்தனா வந்து அவன் தோளை இடிக்க,
“ப்ச்.. டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணு வந்து, நியூ குலாபீஸ் பாக்க போது..” அவள் இடித்த தோளை தட்டிவிட்டு தள்ளி நிற்க, “ரொம்பத்தான்..” இதழ் கோணினாள் வந்தனா.
“நீ ஏன் வந்து, தள்ளி போற நாய் தோள உரசுர.. நீ சாய என் இதயக்கூட்டையே தரேன் வா வந்து, வந்து சாஞ்சிக்க..” இரு கைகளை விரித்தபடி வந்தனா முன் மண்டியிட்டு அமர்ந்த சிவாவை, கெட்ட வார்த்தையால் திட்ட வாயெடுத்த வந்தனா, ரிஷி சபரி இருப்பதை உணர்ந்தவளாக,
“மரியாதையா ஓடிடு சிவா, ஏற்கனவே உம்மேல செம்ம கடுப்புல இருக்கேன்.. திரும்ப திரும்ப என்ன சீண்டி விட்டு , வீணா அசிங்கபட்டு போகாத..” அவனுக்கு மட்டும் கேட்கும்படி பல்லை கடித்தாள்.
“போ வந்து எப்பப்பாரு என்னைய திட்டிட்டே இருக்க.. இந்த காலேஜ்லே உன் அளவுக்கு அழகி யாருமில்லைனு தானே உன்னையே நான் சுத்தி சுத்தி வரேன்.. ஆனா நீ என்னைய கொஞ்சம் கூட கண்டுக்கவே மாட்டேங்குற..” பாவமாக முகத்தை வைத்து அவள் கையில் வைத்திருந்த புத்தகத்தை நகத்தால் சுரண்டி சுரண்டி சிணுங்கியவன் கையில் அடி போட்ட வந்தனா,
“இன்னும் இந்த வீணா போன டைலாக்க மாத்தலையா நீ.. உன் கண்ணுக்கு நான் எத்தனை ஆயிரமாவது அழகியோ, போடா சொரணை கெட்ட மாடு..” வாய்க்கு வந்ததை திட்டி விட்டு, அவளின் பெண் தோழியோடு ஓடி விட்டாள்.
“என்ன ரிஷி, வந்த முதல் நாலே வந்தனா இவங்கிட்ட இப்டி சீறிட்டு போறா” இருவருக்கும் நடந்த சண்டை புரியாமல் சபரி தான் கேட்டது.
“எல்லா பொண்ணுங்ககிட்டயும் சொல்ற அதே அதர பழைய டைலாக்க பிசுரு தட்டாம சொல்லி, நல்லா வாங்கி கட்டிட்டு இருப்பான் சபரி.. நீ அந்த நாய கண்டுக்காத..” என்ற ரிஷி சைட் அடிப்பதை மட்டும் நிறுத்தினான் இல்லை.
சைட்டிங் மன்னன் ரிஷி, பெண் தோழிகள் ஏராளம் என்றாலும் அளவுகோலோடு பழகும் ரகமவன். ரிஷியின் பணத்திற்கும் அழகிற்கும் மயங்கி பல பெண்கள் காதலை சொன்னாலும், சிரித்துக்கொண்டே அப்பெண்களை கடந்து விடுவதில் கில்லாடி.
இதுவரை காதல் எனும் கடலில் பயணிக்காத இவன், இனி காதலின் ஆழ்கடலில் மூழ்கி மூச்சி முட்டும் அளவிற்கு திண்டாடுவானா..? அல்லது நிதானமாக நீந்தி காதலை கையாளுவானா..?
ரிஷியின் எல்லைக்கோட்டை கலைக்கவே பச்சை கிளி ஒன்று கல்லூரியை வந்தடைந்ததுவோ! ஃபெராரி காரில் இருந்து நீள் முடி கற்றையாக முகத்தில் மோத, கிளி பச்சை சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி ஒயிலாக இறங்கினாள். இந்த ரதிதேவி தான் ரிஷியின் தவத்தை கலைக்க வந்த டேஞ்சரஸ் டார்லிங்கோ!
“மச்சா அங்க பார்ரா புதுசா ஒரு குலாபி ஒன்னு இறங்கி இருக்கு..” ஜொள் வாயன் சிவா கை நீட்டி சொன்ன பக்கம் மற்ற இருவரும் ஒருசேர திரும்பி பார்க்க, பச்சை கிளியின் பின் பக்கம் மட்டும் தான் தரிசமளித்தது.
“பார்ட்டி நல்ல வசதி போல டா, ஃபெராரில வந்திருக்கு..” சபரி சொல்ல, ரிஷியின் பார்வை மௌனமாக அவளையே தொடர்ந்தன.
ட்ரைவர் சீட்டில் இருந்து நெடியவன் இறங்க, கூடவே ஐந்து வயது பொடியனும் வேகமாக இறங்கி பச்சை கிளி இடையில் அமர்ந்துகொள்ள, அதனை பார்த்த மூவருக்கும் நிலைகொள்ளவில்லை.
“என்னடா இவ்ளோ பெரிய பையன் அவகிட்ட தாவுறான் ஒருவேளை, கல்யாணம் ஆகிடுச்சோ..” யோசனையாக சிவா கேட்டிட, பள்ளி சீருடையில் இருந்த குட்டி பையன், பச்சைகிளி கன்னத்தை எச்சில் செய்கிறான் என்பது பின்னிருந்து பார்க்கும் போதே உணர முடிந்தது அவர்களால்.
“இரு மச்சா, அவசரப்பட்டு நீயா எதையும் முடிவு பண்ணாத.. எனக்கென்னவோ அவ கூட இருக்கவன், அவ அண்ணனா இருக்குமோனு தோணுது.. அந்த சின்ன பையன் அவனோட பையனா இருக்கும்” யூகமாக சபரி சொன்னாலும் அதுதான் உண்மை என்பதை உணர்த்தியது, அடுத்தடுத்த செயல்.
“அத்தை உங்களுக்கு எப்போ காலேஜ் முடியும்..” சோகமாக கேட்ட சிறுவனின் குரல் அங்கிருப்போரின் செவிகளுக்கு நன்றாகவே கேட்டது.
“ஏற்கனவே சொன்னேனே ஷாம், இன்னைக்கு ஃபர்ஸ்ட் டே சோ மதியமெல்லாம் காலேஜ் முடிஞ்சிடும்..” பச்சை கிளியின் குரல் அத்தனை இனிப்பாக கரைந்தன.
“ஓகே.. அப்ப ஸ்கூல் முடிச்சிட்டு நானே டேடியோட வந்து உங்கள பிக்கப் பண்ணிக்கிறேன், எனக்காக வெயிட் பண்ணுங்க சரியா அத்தை..” அவள் கழுத்தை கட்டிக்கொண்டு பெரிய மனிதன் உத்தரவிட,
“சரிங்க சார், காக்க வைக்காம சீக்கிரம் வந்திடுங்க..” அவன் நெற்றி முட்டி கொஞ்சினாள்.
“ஷாம் ஸ்கூல்க்கு டைமாச்சி, கோ அண்ட் சிட் இன் த கார் சீட்..” ஸ்ட்ரிக்ட் ஆபிஸராக கை கடிகாரத்தை பார்த்தபடியே ராகவ் சொல்லவும், சமத்து பிள்ளையாக அத்தையிடமிருந்து இறங்கி காருக்குள் அமர்ந்துகொள்ள, இங்கிருந்தே முத்தத்தை பறக்க விட்டாள் அவள்.
“லுக் ஆரு, ஒழுங்கா காலேஜ்க்கு வந்தோமா படிச்சிச்சோமானு உன் வேலைய மட்டும் தான் பாக்கணும்.. தேவை இல்லாத பசங்களோட பிரண்ட்ஷிப் வச்சிக்கிறது, நம்பர் கொடுக்குறது எதுவும் இருக்க கூடாது புரிஞ்சிதா..” கண்டிப்புடன் கேட்ட ராகவனை சற்று பயம் கலந்த பார்வை பார்த்தவளாக,
“புரிஞ்சிது அண்ணா, படிப்புல மட்டும் கவனம் செலுத்துறேன்” என்றாள் பணிவாக.
“ம்ம்.. குட், உள்ள கொண்டு வந்து விடவா இல்ல நீயே போய்டுறியா..” என்றவனுக்கு தங்கையை உள்வரை அழைத்து செல்ல எண்ணம் தான், ஆனாலும் ஆபிஸ் மீட்டிங் வேறு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்க, அவசரமாக செல்ல வேண்டிய நிலை.
“இல்ல ண்ணா, நானே போய்டுறேன்.. உங்களுக்கு மீட்டிங்க்கு டைம் ஆச்சி நீங்க போங்க..”
“ஆர் யூ ஷுர்..”
“எஸ் அண்ணா”
“ஓகே ஆரு டேக் கேர்..” என்றவன் காரில் ஏறி பறந்து விட, இப்போது தான் ரதிதேவியின் முன் பக்க தரிசனத்தை மூவரும் கண்டனர். பார்த்த மாத்திரத்தில்
“ப்பாஆஆ.. என்னா பொண்ணு டா..” சிவா சபரி வாய் திறந்தே சொல்லிட, ரிஷியின் பார்வையோ அவளிடத்தில் தான் குத்த வைத்து இருந்தது.
கல்லூரி வளாகத்தில் நிறைய சீனியர் பசங்க ரேகிகிங்கில் ஈடுபட்டு இருந்தாலும், ரிஷி அண்ட் டீம் மட்டும் சைட் அடிச்சோமா இடத்தை காலி பண்ணோமா என்றிருப்பர். அப்பேர்ப்பட்டவனுக்கு இன்று என்னானதோ!
“ஹேய் கேர்ள்..” பச்சை கிளியை சொடக்கிட்டு யோசிக்காமல் அழைத்தே விட்டான்.
புதிய கல்லூரி, புதிய மாணவர்கள், எப்படி சமாளிக்க போகிறோம் என ஏற்கனவே தயக்கத்தில் இருந்தவளுக்கு, ரிஷியின் அழைப்பில் மலங்க மலங்க விழித்தபடி அன்னநடையிட்டே கொள்ளையடித்தாள் ஆண் மனதை.
“டேய் எதுக்கு டா அந்த பொண்ண இங்க கூப்பிடற..” முதல் முறையாக ஒரு பெண்ணை அவனே அழைப்பதை பார்த்த நண்பர்கள் இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவர்களாக, வாய்விட்டே கேட்டு விட்டனர்.
“ப்ச்.. கிட்ட வந்துட்டா கொஞ்ச நேரம் மூடிட்டு நில்லுங்க டா..” அவசரமாக உரைத்த ரிஷியின் புதிய பரிமானத்தில் இருவரும் புரியாமல் நிற்க, வசிய விழிக்காரி அவன் முன் நின்றாள்.
தொடரும்.