அரிமா – 9

4
(9)

“ரன் வேகமா வா மதி” என்று கத்தியபடி அவளை இழுத்துக்கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடிய ஆதித்யாவுக்கு தன் பின்னால், ஆட்கள்களின் தட தடக்கும் காலடி சத்தம் மற்றும் துப்பாக்கி சுடும் சத்தமும் கேட்க அவன் முகம் விகாரமானது.

உடனே தான் இருக்கும் இடத்தை ஒருமுறை நோட்டம் விட்டான். இருள் சூழ்ந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று எண்ணியவன், தன்னையே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருக்கும் மதுவை பார்த்தான்.

சட்டென்று அவன் கையை பிடித்தபடியே மண்டியிட்டு தரையில் விழுந்தாள், ஓடிய ஓட்டத்திற்கு அவளுக்கு மூச்சு வேகமாக வாங்கியது.

” வா கெட் அப் ” சுற்றும் முற்றும் பார்த்தபடி கூறினான் ஆதித்யா .

” ஐ.. ” நாசியாலும் வாயாலும் மூச்சை உள்ளிழுத்து வெளியிட்டவள் பேசமுடியாமல் தலையை மட்டும் மறுப்பாக அசைத்தாள் .

” மதி ” கோபமாக அழைத்தான் .

“என்னால முடியலங்க,  பார்த்தீங்கள்ல எவ்வளவு பேர் இருக்காங்க, நம்மள விட மாட்டாங்க இனி அவ்வளவு தான். உங்க ஒருத்தரால என்ன பண்ண முடியும். போலீஸ் வந்தா மட்டும் தான் நம்மள காப்பாத்த முடியும். நீங்க அர்ஜுன்க்கு கால் பண்ணிட்டு கிளம்புங்க என்னால உங்களுடைய உயிருக்கு ஏதும் ஆபத்து வந்துரக்கூடாது.” மூச்சிரைக்க கூறியவள் ஒரு மரத்தின் மீது சாய்ந்து படி கண்ணீருடன் கீழே அமர்ந்தாள் .

அர்ஜுனின் பெயரை கேட்டதுமே ஆதித்யாவுக்கு மீண்டும் கோபம் வந்தது. ‘ அதுவும் என்னால் முடியாது என்கிறாளே, அப்பொழுது அவனால் மட்டும் எல்லாம் முடியுமா என்ன?’  ஆத்திரத்தில் மதுவின் கரங்களை பற்றியவன். தர தரவென்று அவளை இழுத்து கொண்டு ஒரு மறைவான இடத்திற்கு சென்றான் .

 மதுவோ அவனது செய்கையில் அவனை அதிர்ந்து பார்க்க,

” உன்னை விட்டுட்டு போறதுக்காக நான் இங்க வரல ” ஆத்திரத்துடன் அவளது கண்களை பார்த்து கூறிய ஆதியின் கண்களில் தான் அத்தனை கோபம். அவனது சிவந்த விழிகளையே பார்த்துக் கொண்டிருந்த மதுமதியை  அவனது பார்வை அச்சுறுத்த, அன்று மழை இரவில் தான் கண்ட அதே மர்ம மனிதனின் கொடூர விழிகள் தான் அவளுக்கு இப்பொழுது நியாபகம் வந்தது.

அவ்வளவு தான் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் எண்ணிப் பார்த்தவளுக்கு ஏதோ ஒன்று புரிவது போல் தோன்ற, பயத்துடன் ஓரடி பின்னால் சென்றாள் மதுமதி.

 ‘ பயப்படுகிறாளா ? என்னை பார்த்தா ‘ என்று எண்ணியவன் தன் நெற்றியை நீவியபடி அவளைப் பார்த்தவனுக்கு அவள் இப்போது ஓடும் நிலையில் இல்லை என்பது நன்கு புரிய ,

” பத்து நிமிஷம் இங்கையே இரு. அதுக்குள்ள நான் வந்துருவேன் ஒருவேளை வரலைன்னா, பயப்படாத நீ பாதுகாப்பா இருக்கன்னு அர்த்தம்.” அதாவது என் உயிரைக் கொடுத்தாவது உனக்கு வரும் அத்தனை ஆபத்தையும் வீழ்த்தியிருப்பேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்க,

” அப்போ நீங்க ” என கேட்டவளின் கண்களில் தான் எத்தனை தவிப்பு.

என்  பாதுகாப்பை குறித்து கவலை படுகிறாளா ! என்று எண்ணியவனின் இரும்பு இதயத்தில் இதம் பரவியது.

”  நான் வரலன்னா இங்க இருந்து நீ கிளம்பிரு, கொஞ்ச தூரத்துல என் கார் இருக்கும்.. இது என் கார் கீ. இது என்னுடைய ஃபோன் இதுல இருந்து உன் அர்ஜுன்க்கு கால் பண்ணி உன்னை கூட்டிட்டு போக சொல்லு.” ‘ உன் அர்ஜுனுக்கு ‘ என்ற வார்த்தையில் அவன் கொடுத்த அழுத்தம் ஏனோ அவளை வருத்தியது .

” மாட்டேன் நீங்களும் போகாதீங்க ” என்றவள் பிடிவாதமாய் அங்கையே அமர்ந்தாள்.

” ப்ச் ” எரிச்சல் அடைந்தவன் தன் கார் கீயையும் அலைபேசியையும் அவள் அருகில் வைத்தான். பின்பு அவளை பார்த்தபடியே தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை உருவிய ஆதித்யா,

” டென் மினிட்ஸ்ல நான் வரலன்னா நீ எனக்காக காத்திருக்க கூடாது ” என்று மீண்டும் கட்டளையாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தான்.

அவன் கையில் இருந்த பிஸ்டல் அவன் கண்களில் தெரிந்த வெறி மதுவின் மனதை மிகவும் உறுத்தியது. அர்ஜுன் சந்தியாவின் வார்த்தைகளை எண்ணிப்பார்த்தவளுக்கு ‘இவன் நல்ல மனிதன் தானா? ‘ என்கின்ற சந்தேகம் எழுந்தது.

‘ இவனை நம்பலாமா ?? ” என்ற கேள்வி அவளது மனதை போட்டு குடைந்தெடுக்க. அலைபேசியையே வெறித்து பார்த்தவள் சில நொடிகள் கழித்து அதை தன் கையில் எடுத்தாள்.

இங்கே இவள் அவன் விட்டு சென்ற அலைபேசியை எடுத்த மறுநொடி, ‘டுமீல் டுமீல் ‘ என தொடர் துப்பாக்கி சுடும் சத்தம் மதுவின் காதில் இடி முழக்கம் போல கேட்க, பயத்தில் தன் இரெண்டு காதையும் மூடியவளின் இதயம் தாறுமாறாக துடித்தது.

 அப்படியே மடிந்து தரையில் அமர்ந்தவள் தான் இருக்கும் நிலையை எண்ணி அழுதாள். அவள் உடல் வேகமாக நடுங்கியது.

“இவன் வேற அங்க போயிருக்கானே ஏதாவது ஆகிருக்குமோ ?? “ என்று எண்ணியவளின் கண்களில் கண்ணீர் திரண்டது.

ஆதித்யா மறைவான இடத்தில இருந்து வெளியே சென்ற மறுநொடி அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்தையுமே யார் பார்த்தாலும் வேகமாக ஃபார்வர்ட் செய்யப்பட்ட காணொளி காட்சி என்று தான் நினைப்பர். யார் யாரை சுடுகிறார்கள் என்று யாரும் கணிப்பதற்குள் காட்சிகள் எல்லாம் கணப்பொழுதில் மாறியிருந்தன.

துப்பாக்கியின் சத்தம் படி படியாக குறைந்திருக்க. திடிரென்று அங்கே மயான அமைதி.

“என்னாச்சு ?? திடீர்ன்னு எந்த சத்தமும் கேட்கல, ஒருவேளை அவனுக்கு ஏதாவது ஆகிருக்குமா” என்று பயந்தவளை இந்த அமைதி கூட  வெகுவாக அச்சுறுத்த, அவளது இதயம் இன்னும் வேகமாக துடித்தது.

உயிரை கையில் பிடித்து கொண்டு மறைவில் இருந்து வெளியே வந்தவள் அவனை தேடினாள். கண் தெரியும் தூரம் வரை ஒரே இருள், அவன் எங்க ?? என்று அவள் உள்ளம் நிஜமாகவே துடித்தது .ஏனோ கண்ணீர் விடாமல் வழிந்தது . துடைத்து கொண்டே தேடினாள்.

அப்பொழுது யாரோ அவள் தோளை தொட்ட அதிர்ச்சியில் பதறி திரும்பியவள் ஆதித்யாவை கண்டதும், அவன் மேல் தனக்கு எழுந்த சந்தேகம் உட்பட அனைத்தையும் மறந்து, அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள் .

இருவரின் இதயமும் வேகமாக துடித்தது. சில நொடிகள் கழித்து மெல்ல அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன் தன் தோளில் குருதி வழிய அவளை பார்த்தான் .

” ஐயோ என்னாச்சு.” பதறியபடி அவனிடம் நெருங்கிய மது காயப்பட்ட அவன் தோளில் தன் கைவைத்து,

 ” உங்களை சுட்டுட்டாங்களா !” மிரட்சியுடன் வினவினாள் .

அவன் அப்படியே கீழே அமர்ந்தான். ரத்தம் தாறுமாறாய் வழிந்தது,

” இப்ப என்ன பண்றது” கத்தினாள்.

” நீங்க ஏன் அங்க போனீங்க ?? ” தவிப்புடன் கேட்டவளின் விரிந்த கண்களில் தான் எவ்வளவு நீர் .

” ஆ ஆ ஷட் அப் ” அவளது புலம்பலை கண்டு எரிச்சலடைந்த ஆதித்யா தன் சுட்டு விரலை நீட்டி அமைதியாக இருக்குமாறு எச்சரித்தான்.

மறுநொடியே அடங்கியவள் மீண்டும்,

 ” ரொம்ப ப்ளட் வருது ” பயத்துடன் கூறினாள். அவள் விழிகள் மட்டும் அல்ல அவள் இதயமும் அழுதது .அது அவனது செவிக்கும் கேட்டது .

அப்பொழுது, “ அவன் அங்க தான் இருக்கனும் சீக்கிரம் டா “என்று யாரோ பேசும் சத்தம் கேட்க.மீண்டும் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதில் மதி அலறி தன் கண்களை மூடினாள் .

” மதி அவங்களுக்கு நான் தான் வேணும், ஸோ நான் கிடைக்கிற வரைக்கு அவங்க விடமாட்டாங்க. கொஞ்ச பேர் தான் இப்போ இருக்காங்க, சோ நீ பயப்படாதே நான் அவங்கள சமாளிச்சுக்குவேன். நீ இந்த வழியா அப்படியே ஓடு. நான் உன் கூட இருந்தா உனக்கு தான் ஆபத்து, நீ என்கூட வராம இருக்கிறது தான் நல்லது ” என்றவன் அவள் கையில் கார் சாவியை கொடுத்து ,

 ” எவ்வளவு முடியுமா அவ்வளவு வேகமா ஓடு, கொஞ்ச தூரத்துல என் கார் இருக்கும். நீ தப்பிச்சு போய்டலாம், இதோ இந்த வழியா போ ” தான் இருக்கும் எதிர் திசையை காட்டி அவளை துரிதப்படுத்தினான் .

“ம்ஹூம் நீங்களும் வாங்க  ” அழுது கொண்டே அவனை அழைத்தாள்  .

” ம…தி ப்ளீஸ் ரன், நான் உன் கூட வந்தா உன்னையும் கொன்னுடுவாங்க”

“இல்லை நீங்களும் வாங்க” அழுது கொண்டே மறுத்தாள்.

”  சரி அட்லீஸ்ட் நீ இங்க இருந்து காருக்காவது போ, நான் வந்திடுறேன்” அடுத்த தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திய படி கூறினான் ஆதித்யா.

ஆனால் அதை தன் கருத்தில் கொள்ளாதவள் ,

” ப்ளீஸ் நீங்களும் வந்திடுங்க” விழிகள் கலங்கியபடி கூறினாள். குழந்தை போல அழுபவளிடம் எரிச்சல் பட விரும்பாதவன், கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு,

” கண்டிப்பா வந்துருவேன் மதி ” என்றான், ஆனால் அவளோ போகாமல் இருக்க,

” என்னை நம்புறியா மதி ” என்று வினவினான் ஆதித்யா.

” இப்போ எதுக்கு இதை கேட்குறீங்க “

” பதில் சொல்லு”

“———–“ஆம் என தலையசைத்தாள்.

” அப்போ போ.” தன்மையோடு கூறினான்.

” முடியாது ” பிடிவாதமாக கூறினாள்.

சட்டென்று எழுந்தவன் அவளது கரத்தை வேகமாக பிடித்து, ” போ..ரன்” என அடிக்குரலில் இருந்து கத்தவும், அதேநேரம் அவர்களை தூரமிருந்தே கண்டு கொண்ட சிவகுரு ஆதித்யாவை நோக்கி துப்பாக்கி நீட்டியவன் அவனை சுட போக, அதைக்கண்டு கொண்ட மதுவோ ,

” ஏய் வேண்டாம் ” என கத்திக்கொண்டு ஆதியை காப்பாற்றும் பொருட்டு அவனை தள்ளியபடி குறுக்கே விழுந்தாள்.

இதை கண்ட சிவகுரு ,

” ச்ச ” என தன் குறி தவறியதை எண்ணி கோபம் கொள்ள, தன் முகத்தில் தெறித்த ரத்தத்தில் மதியின் நிலையை பார்த்த ஆதித்யாவின் கண்கள் இரண்டும் நின்று போயின, அவனது இதயமும் தான் .

ஆதித்யாவின் உடம்பில் பாய வேண்டிய தோட்டா மதியின் மார்பில் பாய்ந்தது. அவளது மானத்தை காத்த அவனது கவசம் அவளது உயிரை காக்க தவற, வெள்ளை நிற சட்டை சிவப்பு நிற மாக மாறிவிட, வலியில் துடிதுடித்து அவன் மார்பின் மீதே விழுந்தாள் மதுமதி.

வலியில் துடித்தவளை தன் கண்கள் வெறிக்க பார்த்த ஆதியின் முகமும் விழிகளும் அக்னி குண்டம் போல தகித்தது. அவளது குருதி அவன் கையில் பிசுபிசுக்க, அவனுக்குள் ஏதோ செய்தது.

தன் வாழ்நாளில் எவ்வளவோ ரத்தத்தை பார்த்து உணர்ச்சியற்று இருந்தவனால் இப்பொழுது முடியவில்லை, இதயமும் கண்களுக்கும் கனக்க, ஒருவித வலி அவன் நெஞ்சை பிடித்து அழுத்தியது.

அது, அவனையே அறியாமல் அவனது இதயத்திற்குள் நுழைந்து அதன் துடிப்பாகவே மாறி போன அவனது மின்னல் ஒளி நிலவழகி மதுமதி அவனுக்கு கொடுத்த  வலி ஆகும்.

பற்களை கடித்தபடி, ” சிவ குரு ” என கர்ஜித்த ஆதித்யா, நொடி தாமதிக்காது தன் துப்பாக்கியை அவனை நோக்கி நீட்டினான்.

அதேநேரம், ” வேண்….டாம் ப்ளீ..ஸ் ” என தடுத்த மதியை அள்ளி தன் மார்போடு இறுக்கமாக அவள் பார்க்காத வண்ணம் அணைத்துக்கொண்ட ஆதித்யா, சிவ குருவின் நெத்தி பொட்டில் சுட்டு அவனை மண்ணில் வீழ்த்தினான் .

” உனக்கு என்ன தியாகின்னு நினைப்பா ” மதியின் கன்னங்களை தட்டியபடி அழைத்தான் ஆதித்யா.

” அவன் சுட வந்ததும், உங்களுக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு அப்படி பண்ணிட்டேன். ஆனா இப்போ ரொம்ப வலிக்குது ” என்றவளின் கண்கள் சொருக ஆரம்பித்தது .

உடனே அவள் அணிந்திருந்த சட்டையை வேகமாக விலக்கிய ஆதித்யா. குண்டடி எங்கே பட்டிருக்கின்றது என்பதை ஆராய்ந்தான் .நல்ல வேலை கழுத்தில் இல்லை. கழுத்துக்கு கீழே மார்புக்கும் கைக்கும் நடுவே பட்டிருந்தது. ஆனாலும் பட்ட இடம் ஆபத்தானது. புல்லட்டை எடுக்கா விட்டால் வலியில் மூச்சு விட சிரமம் ஏற்படும். உயிருக்கு ஆபத்தாக முடியலாம்? போர்க்கலையின் நிபுணனுக்கு எல்லாம் புரிந்தது.

 உடனே அவளை தூக்கிக்கொண்டு காரை நோக்கி வேகமாக ஓடினான் .

அவளோ வலியில் முனங்கி கொண்டு அவனது கரத்தில் பாதி சுயநினைவுடன் கிடந்தாள்.

” மதி கண்ணை மூடாத ” என்று சொல்லியபடி வேகமாக நடக்க, இதுவரை எதற்கும் அஞ்சாத ஆதித்யா இப்பொழுது அஞ்சினான். அரிமா அவனின் கைகள் கூட இப்பொழுது நடுங்கியது.

” ம…தி ஓபன். கண்ணை திற “

” வலிக்குது  “

” இதோ இன்னும் கொஞ்ச நேரம் தான் “

 என்றவன் நீண்ட ஓட்டத்திற்கு பின் காரை நெருங்கி,  முன் இருக்கையில் அவளை உட்காரவைத்து அவனும் காரில் ஏறினான்.

” நான் செத்துருவேனா ” பயத்தில் உளறினாள் மது.

” ப்ச் உன்னை யாரு அப்படி செய்ய சொன்னா ?? ” கோபத்தில் கத்தினான் ஆதித்யா .

“……..” அவளது கண்கள் சொருகியது.

” நோ பாரு ” அவளது கன்னத்தில் ஓங்கி அடிக்க ஆரம்பித்தான் ,

” ஏய் கண்ண மூடாத, பேபி ப்ளீஸ் “- அவளது கண்களை பார்த்தபடியே கூறினான். கோபமாக ஆரம்பித்த அவனது குரல் இறுதியில் கரகரத்தது.

மதுவுக்கு திடிரென்று மூச்சு விடுவதே சிரமமாக. அவளுக்கு மேலும் கீழும் மூச்சு இழுக்க ஆரம்பிக்க, மூச்சுக்கு ஏங்கியவளை பரிதாபத்துடன் பார்த்தான் ஆதி .

” பயமா இருக்கு. நான். சாகப்போறேன்னு நினைக்கிறன் ” என முணுமுணுத்துக் கொண்டே இருந்த அவளது உதடுகள், திடிரென்று மெளனமாக சட்டென்று அவள் உதட்டுடன் தன் உதட்டை பொருத்தியவன். தன் மூச்சை அவள் உயிர் கூட்டிற்குள் செலுத்தினான்.

 உடனே அவள் நெஞ்சாங்கூடு அவனது சுவாச காற்றால் ஏறி இறங்க,

சிறிது நொடியில் மீண்டும் அவளுக்கு கண்கள் சொருகியது.

 ” பேபி ப்ளீஸ் கண்ணை மூடாத”

” அன்னைக்கு நைட் அந்த பில்டிங்ள நான் பார்த்தது உன்னை தானே?? ” வார்த்தைகளை சிரமத்துடன் கோர்த்து கேட்டாள் .

” கண்ணை மட்டும் மூடாத பேசிட்டே இரு “

” ப்ளீஸ் பதில் சொல்லுங்க

 அன்னைக்கு நைட் ஏன் என்னை காப்பாத்துனீங்க ஆ ஆ ஆ ஆ ஆ ?? ” மூச்சு விட முடியாமல் வலியில் கத்தியபடி கேட்டாள்.

உடனே அவளது இதழை தன் வசப்படுத்தி, சொல்ல வேண்டிய பதிலை தனக்கு தெரிந்த மொழியில் கூறினான் அந்த முரடன் .

பின்பு மெல்ல மதுவை தன் மேல் சாய்த்து கொண்டவன். தன்னிடம் இருக்கும் சிறு கத்தியை எடுத்து அவளது உடலில் பாய்ந்த தோட்டாவை எடுக்க முயற்சிதான், ஆனால் வலியில் அவனுக்கு ஒத்துழைக்காமல் அவள் தேகம் உதறி துடிக்கவும் அவள் இதழில் தன் இதழை பெருத்தியவன், தோட்டாவை நீக்கும் வரை தன் இதழ் அணைப்பை விடாது தொடர்ந்து,  மிகவும் சிரமப்பட்டு அவள் உடம்பில் இருந்த தோட்டாவை நீக்கினான்.

தோட்டா இருக்கும் வரை வலியில் அவளால் சீரான மூச்சை வெளியிட முடியாது என்பதற்காகவே இப்படி செய்தான். ஒருவழியாக வலியில் துடித்து துடித்து தன் மீதே வலுவின்றி பாதி மயக்கத்தில் சாய்ந்திருந்த மதிக்கு தற்காலிக முதலுதவி செய்தான் ஆதித்யா .

அப்பொழுது  தனக்கு முதலுதவி செய்து கொண்டிருக்கும் ஆதித்யாவின் கலங்கிய விழிகளை பார்த்தவள்,

“உங்க பேர் என்ன ஆ ஆ ஆ ஆ ஆ ஆ” வலியில் துடித்தபடி கேட்டாள்.

 மதி கேட்கவும் நிமிர்ந்த ஆதித்யா, கண்கள் சொருக தன் மார்பில் கிடந்தவளின்  விழிகளை ஒரு கணம் பார்த்தவன், குனிந்து அவளது காதுக்குள் தன் இதழ்களை பொருத்தி  ” ஆதித்யா” என்று சொல்ல,

 தன் உயிர் வரை தொட்டுச் சென்ற அவனது அழுத்தமான குரலை கேட்ட மது மதி, “ஆதித்யா ” என்று குளறலாக அவனது பெயரை உச்சரித்தாள்.

 அப்பொழுது மதுவுக்கு, வலி தாங்காது  கண்கள் மெல்ல சொருகி தலை தொங்கிவிட, அவள் முகத்தை தன் கையில் ஏந்திய ஆதி,

” சீக்கிரமா போய்டலாம் பேபி ” என்று அவளின் நெற்றி முட்டியவனின் கண்களில் இருந்து சொட்டாக சில கண்ணீர் துளிகள் உடைப்பெடுத்து அவள் மீது பட, அவளை இழுத்து தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக் கொண்ட ஆதித்யா அவள் நெற்றியில் தன் இதழ்களை பதிக்க, இப்பொழுது மதி முழுவதுமாக மயக்க நிலையை அடைந்திருந்தாலும் அவளால் எந்த வித சிரமமும் இன்றி மூச்சு விட முடிந்தது .

அரிமா வருவான்..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!