அருவி போல் அன்பை பொழிவானே : 10

4.9
(14)

அருவி : 10

அன்னைக்கு அந்த மீனாட்சி ஹாஸ்டலுக்கு முன்னாடி இருந்து எனக்கு ஒரு மோதிரம் கிடைச்சிது. அந்த மோதிரத்தை நான் எங்கேயோ பார்த்திருக்கிறன். எங்கனு ஞாபகம் இல்லை. நான் நேற்று செழுப்பூர் போகும் போது சிட்டிக்கு வெளியே *****இந்த நம்பர் உடைய கார்ல இருந்து ஒருத்தன் மூட்டையை எடுத்து அந்த குப்பைக்கு பக்கத்தில போட்டான். நீ சொல்றதை பார்த்தா, இந்த பொண்ணோட டெட்பாடியைத்தான் அவன் அங்க போட்டிருக்கிறனான் போல…. முதல்ல அவனை பிடிக்கணும்.. அப்புறம்தான் நமக்கு தேவையானது கிடைக்கும்…..”

“சரி யுவா.. அடுத்தது ஜேபி. இவனோட ஆளுங்க இன்னைக்கு போதைப் பொருள் கடத்துறதா இன்ஃபர்மேஷன் வந்திருக்கு. சமூகத்தில் நல்ல இடத்தில இருக்கிற இந்த நாய் என்ன வேலை பார்க்குது பாரு யுவா.. இவனை எல்லாம் சுட்டுத் தள்ளனும்…..”

“அமுதா. இன்னைக்கு அவனோட லாரியை பிடிக்கிறம்…. அந்த லாரி மட்டும் சிட்டிக்குள்ள வந்தா எத்தனை பேருக்கு ஆபத்து…. அதை எப்பிடியாவது தடுத்தாகணும்… அதுக்குரிய வேலையை பார்க்கலாம்.…” 

“சரி யுவா….”

இருவரும் இன்று இரவு வரும் போதைப் பொருள் இருக்கிற லாரியை பிடிக்க திட்டம் போட்டனர். 

………………………………………………

தனது அறையில் இருந்து போனை எடுத்த ரகுவரன் தனது நண்பனுக்கு கால் பண்ணினான். 

“கௌதம் நீ சொன்ன மாதிரியே உன்னோட பிளான் சரியா வேலை செய்து, இப்போ இந்த கேஸ்ஸ அண்ணன் யுவராஜ் எடுத்திருக்கிறான்… அதனால நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்… கொஞ்ச நாளுக்கு இதை நிறுத்தி வைப்போம். சரியா….?” 

“என்ன ரகு பயந்திட்டியா…? அவன் எல்லாம் ஒரு ஆளாடா…?”

“உனக்கு அவனை பற்றி தெரியலை. அவன் எடுத்த கேஸ் எதுலையும் தோத்ததே இல்லை. நான் சொல்றதை கேளு.. கொஞ்ச நாளைக்கு எதுவும் வேண்டாம்…”

“சரி சரி நீ இவ்வளவு சொல்றதனால, அப்பிடியே செய்யலாம்… ஆனால் நீ நம்மளோட டீம்மை விட்டுட்டு விலகிடலாம்னு நினைச்ச உன்னோட உயிர் உனக்கு சொந்தம் இல்லை… அதஅதை எப்பவும் மறந்திடாத…” என்றான் கறாரான குரலில்.

“ஓகே.. அது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு… நான் போனை வைக்கிறன்….” என்றவன் போனை கட் பண்ணினான். 

“எவ்வளவு நல்லா போகுது இந்த பிஸ்னஸ்னால எவ்வளவு சம்பாதிக்க முடியுது. மனுசனோட உடல் உள் உறுப்புகளுக்கு வெளிநாட்ல இருக்கிற வேல்யூ இங்க இல்லையே.. இங்க இருந்திருந்தா ரிஸ்க்கும் குறைவா இருக்கும்..” என புலம்பினான் கௌத்தம். 

…………..……………………………………யமுனா பொண்ணு பார்க்க போக எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார். மனசில் தனது மூத்த மகனை பற்றிய சிந்தனையே ஓடிக் கொண்டிருந்தது. 

ஜனார்த்தனனும் ரகுவரனும் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். இருவரும் ரெடியாகி வர, அவர்களுக்கு காப்பி கொடுத்தார் யமுனா. அதை வாங்கி குடித்து விட்டு பொண்ணு பார்க்க மூவரும் சென்றனர். 

வசீகரனும் அவரது மனைவி கீதாவும் வாசல் வரை வந்து இவர்களை வரவேற்றனர். எல்லோரும் ஹாலில் பேசிக் கொண்டு இருந்தனர். 

யமுனா ஐஸ்வர்யாவை பார்க்கணும் என்று சொல்ல, கீதா சென்று ஐஸ்வர்யாவை கூட்டி வந்தார். பார்க்க அழகாக இருந்தாள். வேலைக்காரர் கொண்டு வந்து கொடுத்த டீயை வாங்கி அனைவருக்கும் கொடுத்தாள். 

ரகுவுக்கு ஐஸ்வர்யாவை பிடித்திருந்தது. ஐஸ்வர்யாக்கும் ரகுவை பிடித்திருக்க, கல்யாணத் தேதி முடிவு செய்வது வரை பேச்சுவார்த்தை சென்றது. அப்போது ரகு குடிப்பதற்கு தண்ணீர் கேட்க, வேலைக்காரர் ஒருவர் எடுத்து வந்தார். 

அவர் ரகுவிடம் கொடுக்கும் போது கை தவறி ரகுவின் மீது தண்ணீர் தெறித்தது. அதைப் பார்த்த ஐஸ்வர்யா எழுந்து வந்து, அந்த வேலைக்காரரை அறைந்தாள். யூ இடியட்.. உனக்கு கண்ணு தெரியல.. எனக்கு வர்ற கோபத்துக்கு போ இங்க இருந்து…. ” என்றாள். 

இதைப் பார்த்த யமுனாக்கு ‘இது ஒரு சாதாரணமான விஷயம். இதுக்கு எதுக்கு இந்த பொண்ணு இப்பிடி நடந்துக்கிறா’ என நினைக்க, மற்றவர்கள், “இதுதான் சரி ஐஸ்வர்யா…. வேலைக்காரர்களை அவங்களோட இடத்தில வைக்கணும். இல்லைனா நமக்குத்தான் ஆபத்து…” என்றனர். யமுனாக்கு இந்த சம்பந்தமே பிடிக்கவில்லை. விதியே என்று இருந்தார். 

………..………..………..………..………..…சென்னையில் கொடி கட்டிப் பறக்கும் பிஸ்னஸ் மேன்களுள் ஒருவர்தான் ஜேபி. இவர் உணவுப் பொருட்களை தயாரிக்கும் கம்பனி வைத்துள்ளார். இவரது கம்பனி உற்பத்திகளுக்கு அதிக கேள்வி உள்ளது. 

இவர் தயாரிக்கும் சாக்லேட்க்கு சிறியோர் முதல் பெரியோர் வரை அடிமைகள். ஒரு முறை இவரது சாக்லேட் சாப்பிட்டால். அந்த சுவைக்கு நாக்கு அடிமையாகிவிடும். 

இது அவரது பிஸ்னஸ்ஸாக இருந்தாலும், சட்டவிரோதமாக போதைப் பொருள் விற்பனையும் செய்து வருகிறார். ஆனால் இது யாருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாது.. ஆனால் நம்ம ஹீரோ யுவராஜ்க்கு தெரியும். இவரை கையோடு பிடிப்பதுதான் யுவராஜ்ஜின் இலட்சியம். 

………..………..………..………..………..…மாலை யுவராஜிடம் வந்த அமுதன் வீட்டிற்கு போயிட்டு நைட் வருவதாக சொன்னான். சரி என்றவனைப் பார்த்த அமுதன், “யுவா இந்த ஜேபியை பற்றியே இவ்வளவு நேரமா தேடிட்டு இருக்க….?” 

“ஆமா டா, நெட்ல அவனை பற்றி போட்டுருக்கிறதை பார்த்திட்டு இருந்தேன். டைம் போனதே தெரியலை….” 

“சரி பார்த்தது போதும் நீயும் வீட்டுக்கு போயிட்டு நைட் வா…..” 

“உனக்கு வீட்ல மீனாட்சி இருக்கா.. எனக்கு யாரு இருக்கா….? அங்க போறதுக்கு இங்கேயே இருக்கலாம்…” என்றவனை பார்த்து முறைத்தவன், “ஏண்டா டேய்.. உனக்கு காலையில கல்யாணம் நடந்திச்சிடா.. உனக்காக ஒரு பொண்ணு வீட்டில பார்த்திட்டு இருக்கிறா அதையும் மறந்திட்டியா….?” என்றான். 

அப்போது தான் யுவராஜ்க்கு கார்த்தியாயினியோட ஞாபகம் வந்தது. “ஐயோ! நான் அவளை மறந்தே போயிட்டன் அமுதா.. சரி நான் உடனே போய் பார்க்கிறன்…” என்றவன் அமுதனின் பதிலுக்கு காத்திருக்காமல் சென்றான். 

வேக வேகமாக தனது குவாட்டஸ்கு வந்தான் யுவராஜ். கதவைத் தட்டினான். சத்தம் இல்லை. இன்னும் வேகமாக கதவைத் தட்ட கதவு தானாக திறந்து கொண்டது. யுவராஜ் பயந்து விட்டான். 

இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு வந்தவன், ஹோலில் படுத்திருந்தான் கார்த்தியாயினியை பார்த்தும் துப்பாக்கியை மீண்டும் இடுப்பில் வைத்து விட்டு அவள் அருகே வந்தான். 

நன்றாக தூங்கும் அவளைப் பார்த்தான். பால்முகம் மாறாத குழந்தை போல இருந்தது அவளது முகம். அவளை எழுப்பி, அவளது தூக்கத்தை கலைக்காமல் தனது அறைக்குச் குளித்து விட்டு வரலாம் என்று அவனது அறைக்குச் சென்றான். 

கதை எப்பிடி இருக்குனு சொல்லிட்டு போங்க பட்டூஸ்… நாளைக்கு பெரிய யூடியோட வர்றன் 

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

1 thought on “அருவி போல் அன்பை பொழிவானே : 10”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!