நயமொடு காதல் : 01
நயமொடு காதல் அத்தியாயம்-1 நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது.. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது. நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…. நானும், என் டேட்டும் மட்டுமே.. தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ.. என்று அந்த நியூயார்க் சிட்டியின் இரவு நிசப்த்தத்தை கெடுக்கும் அளவிற்கு கொடூரமாக பாடிக்கொண்டிருந்தான் ரோகித். அதுவும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு தன் அன்னையின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தவாறே மெத்தையில் உருண்டு புரள.. அவன் கண்களோ பார்க்க வேண்டியவர்கள் பார்க்கிறார்களா […]