அருவி போல் அன்பை பொழிவானே : 11

4.9
(8)

அருவி : 11

அறையைப் பார்த்தவனுக்கு தனது அறைதானா என்று இருந்தது. அவளது வேலைதான் என்று நினைத்தவன் சிரித்துக் கொண்டு, குளித்துவிட்டு வெளியே வந்து, சமையலறைக்குச் சென்று, காப்பி போட்டு இருவருக்கும் எடுத்து வந்து, மேசையில் வைத்துவிட்டு கார்த்தியாயினியை எழுப்பினான். 

அவன் எழுப்பியதும் கண்களைக் கூட அவள் திறக்காது, “அத்தை மன்னிச்சுடுங்க.. உடம்பெல்லாம் களைப்பா இருந்திச்சி அதுதான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டன் அத்தை…” என்று பயந்து கத்திக் கொண்டு எழுந்தாள். அவளைப் பார்த்த யுவராஜ்க்கு மிகவும் பாவமாக இருந்தது. 

“இங்க பாரு கார்த்தியாயினி, நான்தான் உன்னை எழுப்பினன்… காப்பி குடிச்சிட்டு தூங்கு…” என்றான். 

அவனைப் பார்த்தவள், “மாமா நீங்க வந்திட்டீங்களா….? என்னை எழுப்பியிருக்கலாம்ல நானே காப்பி போட்டிருப்பன்…” என்றாள். 

அதற்கு யுவராஜ், “பரவாயில்லை டா, நீ தூங்கிட்டு இருந்த அதனால எழுப்பல. இந்தா காப்பி….” என்றான். 

எழுந்து முகம் கழுவி விட்டு வந்து காப்பியை குடித்தாள். இருவரும் குடித்த கப்பை எடுத்து கழுவி வைத்துவிட்டு வந்து, அவன் அருகில் இருந்தாள். 

“கார்த்தியாயினி இனிமேல் கதவை சாத்தி தாழ்ப்பாள் போடாம தூங்கக் கூடாது சரியா….? இங்க பயம் இல்லைதான்…. இருந்தாலும் நாமளும் கவனமாக இருக்கிறது நல்லது சரியா….?” என்றான் சிறுபிள்ளைக்குச் சொல்வது போல.. 

அவளும் சமத்தாக தலையை ஆட்டினாள். அப்போதுதான் அவளை நன்றாக பார்த்தான். அவன் அழைத்து வரும் போது இருந்த உடையிலேயே இருந்தாள். அப்போதுதான் அவளுக்கு உடை வாங்கிக் கொடுக்க வேண்டும் என நினைவு வந்தது. கார்த்தியாயினியைப் பார்த்து, “சாரி நான் வேலையில இருந்ததனால, உனக்கு டிரஸ் எடுத்து தரணும்னு மறந்திட்டேன்…. வா இப்பவே போய் எடுத்திட்டு வந்திடலாமா….” என்றான்.

அதற்கு கார்த்தியாயினி, “பரவாயில்லை மாமா உங்களுக்கு வேலை இருந்திருக்கும்…. அதுக்கென்ன அப்புறம் வாங்கிக்கலாம் மாமா…. ” என்றாள். 

அவளைப் பார்த்து சிரித்து விட்டு, “அதுக்காக நான் வேற டிரஸ் வாங்கித்தர்ற வரைக்கும் இப்பிடியே வா உட்கார்ந்து இருக்க போற….? நான் போய் உனக்கு ஒரு டிரஸ் வாங்கிட்டு வர்றன்…. அதை போட்டுக்க. நாளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய டிரஸ் வாங்கிட்டு வரலாம் சரியா…?” என்றான். 

அதைக் கேட்டவள், தனது முட்டை கண்களை நன்றாக விரித்து அவனைப் பார்த்து, “நெஜமா நாளைக்கு எனக்கு டிரஸ் எடுக்க என்னை கூட்டிட்டு போவியா மாமா…?” என அவனை ஒருமையில் அழைத்தாள். அவளது ஒருமை அழைப்பு அவனுக்கு பிடித்தது. 

“ஆமா, நெஜமா உன்னை கூட்டிட்டு போய் வாங்கித் தர்றேன்… இப்போ நான் மட்டும் போய் உனக்கு வாங்கிட்டு வந்திடுறன்… கவனமா இரு…” என்றவன் ரெடியாகி வெளியே செல்ல வர, 

அவனருகில் வந்தவள், “மாமா சீக்கிரமா வந்திடுங்க…” என்றாள். சரி என்று சொல்லிவிட்டு, அந்ந நகரின் பிரபல்யமான துணிக்கடை ஒன்றிற்கு வந்தான். 

………..………..………..………..………..…ஐஸ்வர்யாவை பெண் பார்த்து விட்டு, கல்யாணத்தை பற்றி மேற்கொண்டு பேசிவிட்டு ஜனார்த்தனன், யமுனா, ரகுவரன் மூவரும் வீட்டிற்கு வரும் வழியில் ரகு, “டாட் கொஞ்சம் டிரஸ் வாங்கிட்டு போலாமா….” என கேட்க, ஜனார்த்தனனும் சரி என்று சொன்னதும் மூவரும் டிரஸ் எடுக்க யுவராஜ் வந்திருந்த துணிக்கடைக்கே வந்திருந்தனர். 

யுவராஜ், தனது மனைவிக்கு என்ன வாங்கலாம் என்று யோசித்தவாறு நின்றிருந்தவன், அவளுக்கு பாவாடை சட்டை எடுத்தான். அதோடு ஒரு சுடி செட்டும் எடுத்தான். இரண்டையும் கையில் வைத்து அவளுக்கு பொருத்தமாக இருக்குமா என்று கற்பனை பண்ணிப் பார்த்தவாறு நின்றிருந்தவனை பார்த்தான் ரகுவரன். 

அப்பாவிடமும் அம்மாவிடமும் போய் அவர்களுக்கு தேவையானதை எடுக்குமாறு சொல்லி அனுப்பி விட்டு யுவராஜ் அருகில் வந்தான். கண்விழித்த யுவராஜ் பார்த்தது, தன்னை இழிவாக பார்த்துக் கொண்டு நின்ற ரகுவரனைத்தான். 

எதுவும் பேசாமல், தான் எடுத்த உடைகளை அங்கிருந்த பணியாளிடம் கொடுத்து பில் போட சொன்னான். அதை பார்த்த ரகுவரன், “என்ன போலிஸ் சார், இப்போ எல்லாம் பணம் கொடுக்காம, டிரஸ் கொடுக்கிறது புது பேஷன்னா…?” என்று அவனை தப்பாக பேசினான். இதைக் கேட்ட யுவராஜ்க்கு கோபம் வர அவனை ஓங்கி அறைந்தான். அவனது அறை சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் ரகுவரனை திரும்பி பார்த்தனர். வாங்கிய அறையில் ரகுவரனின் உதடு கிழிந்தது இரத்தம் வந்தது. 

அவனை அவமானப்படுத்தலாம் என்று நினைத்தால், அவன் என்னை அவமானப்படுத்தி விட்டானே என மனதிற்குள் பேசியவன், யுவராஜ்ஜை மேலும் அவமானப்படுத்த நினைத்து, “நீ என்னை அடிச்சா பெரியாளா…? இங்க பாரு எனக்கு கல்யாணம் நிச்சயமாகியிருக்கு… இந்த சிட்டியே மூக்கு மேல விரலை வைக்கிற மாதிரி கல்யாணம் நடக்கும்… ஆனால் நீதான் பாவம்… உனக்கு வாழ்க்கையில கல்யாணம் என்ற ஒன்று நடக்காது…. உன்ன மாதிரி பொம்பளை பொறுக்கிய கல்யாணம் பண்ணிக்க யாரு வருவா….?” என்று அவனை பார்த்து நக்கலாக கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டான். 

‘எனக்கு கல்யாணம் நடந்தது இந்த லூசுக்கு தெரியலை… அது தெரிஞ்சா இவனோட மூஞ்சி எப்பிடி மாறும்…?’ என நினைத்து சிரித்தவன் பில் போடச் சென்றான். யுவராஜ் பில் போட்டுட்டு வரும் போது, அவனை அங்கிருந்த தூணின் மறைவில் நின்று பார்த்த யமுனா. கலங்கிய தனது கண்களை துடைத்துக் கொண்டு, அங்கிருந்து சென்றார். அவரை பார்த்ததும் பார்க்காதவாறு அங்கேயே போன் பேசுவது போல நின்றிருந்த யுவராஜ், அவருடன் செல்லத் துடித்த கால்களை அடக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றான். 

வரும் வழியில் அமுதன் அழைத்து, குறிப்பிட்ட ஒரு செக் போஸ்டை சொல்லி அங்கே வருமாறு சொன்னான். வரும் வழியில் சாப்பாடு வாங்கிக் கொண்டு, யுவராஜ் குவாட்டஸ்கு சென்று, கார்த்தியாயினியிடம் பையையும் சாப்பாட்டையும் கொடுத்து, வேலை இருப்பதாகவும், அவளை கவனமாக இருக்குமாறும் கூறி விட்டு சென்று விட்டான். 

கார்த்தியாயினி குளித்து விட்டு, தன்னவன் வாங்கிக் கொடுத்த பாவாடை சட்டையை அணிந்து கொண்டு, சாப்பிட்டு விட்டு, அங்கிருந்த டீவியில் படம் பார்த்துக் கொண்டு இருந்தாள். 

………..………..………..………..………..…

ஜேபி தனது ஆட்களிடம் போதை பொருள் அடங்கிய லாரியை, யுவராஜ் கண்ணில் படாமல் கஸ்டமரிடம் சேர்க்கும் படி கூறினார். அதற்கு அவரது ஆட்கள், “என்ன சார் நீங்க….? அவன்லாம் ஒரு ஆளுன்னு பயப்படுறீங்க….? இவனை மாதிரி எத்தனை பேரை நாங்க பார்த்திருப்பம்…. இவன் எல்லாம் எங்களுக்கு பெரியாளா…?” என்றான் நக்கலாக. அவனுடன் இருந்த மற்றவனும் அவனுக்கு ஒத்து ஊதினான். 

உங்களோட கருத்துக்களை சொல்லிட்டு அப்பிடியே ரேட்டிங்கையும் குடுத்திட்டு போங்க பட்டூஸ் 😊😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!