அருவி போல் அன்பை பொழிவானே : 03

5
(9)

அருவி : 03

நீண்ட நேரமாக சிந்தனையில் இருந்தவனை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது அவனின் போனின் சத்தம். எடுத்துப் பார்க்க, புதிய நம்பராக இருந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவன் பின்னர், ஒருவேளை ஏதாவது முக்கியமான விஷயமாக இருந்தாலும் என்று நினைத்து போனை எடுத்து “ஹலோ யுவராஜ் பேசுறன் நீங்க யாரு…. ?” என்றான் தனது கம்பீரமான குரலில். 

மறுபக்கம் இருந்தவர், “ஐயா நான் செழும்பூரில் இருந்து சந்திரமோகன்… செழும்பூரில் இருக்கிற *****பள்ளிக்கூடத்தோட தலைமை ஆசிரியர் பேசுறன்… உங்களோட உதவி எனக்கு வேணும் ஐயா…” என்றார். 

“சொல்லுங்க சார்… நான் என்ன உதவி செய்யணும்…?” என்று சட்டென்று விஷயத்துக்கு வந்தான் யுவராஜ். 

“ஐயா, எங்களோட பள்ளிக்கூடத்தில பிளஸ்டூ தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து மாவட்டத்தில் முதல் இடம் வந்த மாணவி கார்த்தியாயினி…. அந்த பிள்ளைக்கு டாக்டருக்கு படிக்க ரொம்ப ஆசை…. ஆனால் அந்த பொண்ணோட அத்தை அவங்களோட குடிகார பையனுக்கு இந்த பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க பார்க்கிறாங்க ஐயா… இதை எப்பிடியாவது தடுத்து நிறுத்த வேண்டும்… எனக்கு யார்க்கிட்டையும் இதைப் பற்றி பேச பயமா இருக்கு… அதுதான் உங்களுக்கு கால் பண்ணேன்…. ” என்றார். 

அவர் கூறியதைக் கேட்ட யுவராஜ், “உங்களோட ஊர்ல இருக்கிற போலிஸ் ஸ்டேஷன்லயே சொல்லியிருக்கலாமே… அவங்க நடவடிக்கை எடுத்திருப்பாங்க…” என்றான். 

அவன் அப்படி சொன்னதும் சந்திரமோகனுக்கு பயம் வந்து விட்டது. உடனே பதற்றத்தோடு,”ஐயா அந்த பொம்பளையை பார்த்தா எங்களோட ஊர்ல எல்லோருக்கும் பயம்…. போலிஸ்காரங்களும் அவங்க குடுக்கிற பணத்தை வாங்கிட்டு எதுவும் பேசாமல் போயிடுவாங்க…. அவங்களுக்கு எதிரா நான் உங்ககிட்ட பேசுறது அவங்களுக்கு தெரிஞ்சாலும் என்னோட உயிரை எடுத்துடுவாங்க ஐயா…. உங்களைத்தான் நம்பி இருக்கிறன் ஐயா.. அந்த பிள்ளை ரொம்ப நல்ல பிள்ளை, எப்படியாவது அவளை காப்பாத்துங்க ஐயா…. ஒரு பொம்பளைப் பிள்ளையோட வாழ்க்கை நாசமா போகக்கூடாது ஐயா… உஙஉங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்றேன்.. உங்களை விட்டா வேற யார்க்கிட்டையும் இதைப் பற்றி பேச பயமா இருக்கு ஐயா…” என்று போனில் கெஞ்சினார் சந்திரமோகன். 

அவரது கெஞ்சலைக் கேட்ட யுவராஜ்க்கு ஒரு மாதிரியாகிவிட்டது. ஒரு பள்ளிக்கூடத்தோட அதிபர் அவரோட மாணவிக்காக இப்படி ரிஸ்க் எடுக்கிறாறேனு. உடனே அவன், “எப்போ கல்யாணம் வச்சிருக்கிறாங்க…. ?” என்றான். 

“நாளைக்கு காலையில வச்சிருக்கிறாங்க ஐயா…..” 

“கல்யாணம் எங்க நடக்குது….?” என்று மறு கேள்வி கேட்டான். 

“எங்க ஊர்ல இருக்கிற ****மண்டபத்தில் நடக்க இருக்கு ஐயா….” 

“சரி நான் நான் காலையில அங்க இருப்பேன்….” என்றான். 

“ஐயா, உங்களோட வார்த்தையை நம்புறேன்…. நான் உங்களுக்கு போன் பண்ண விஷயம் எந்த காரணத்திற்காகவும் யாருக்கும் தெரிய வேண்டாம் ஐயா….”

“நான் யார்க்கிட்டையும் சொல்ல மாட்டேன்… என்னை நீங்க தாராளமாக நம்பலாம்….” 

“சரி ஐயா…. ரொம்ப நன்றி… இந்த உதவியை எப்பவும் நான் மறக்க மாட்டேன்….” என்றவர் போனை வைத்தார். …………………………………………………. 

அமுதன் வீட்டிற்கும் செல்லாது காலையில் கடத்தப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தான். மிகவும் போராட்டத்தின் மத்தியில் அந்த வேன் ஒரு வீதியோரத்தில் நிறுத்தி இருந்ததை அறிந்து அவ் இடத்திற்கு விரைந்து சென்றான். 

அங்கே எதுவும் இல்லை. வெற்று வேன் மட்டுமே இருந்தது. அதைப் பார்த்து குழம்பமடைந்தான். கடந்த சில கடத்தல்களில் இப்படித்தான் நடக்கிறது. பெண்கள் கடத்தப்படும் வேன் தூரத்தில் எங்கோ நிறுத்தப்பட்டிருக்கும். ஆனால் அதற்குள் எவ்வித தடயமும் இருக்காது. அமுதனுக்கு அந்த கடத்தல்காரன் மீது கோபமாக வந்தது. கோபத்தில் தனது காலால் வேனை உதைத்தான். பின் அங்கிருந்து யுவராஜைப் பார்க்க வந்தான். 

இங்கே யுவராஜ் மீண்டும் அவனது கேஸில் மூழ்கிவிட்டான். அவனது அறைக்குள் வந்த அமுதன் அந்த அறையையே சுற்றிச் சுற்றி பார்த்தான். அவன் வந்ததை உணர்ந்த யுவராஜ் திரும்பாமலே ” என்ன அமுதா சுற்றி சுற்றி பார்க்கிற? என்ன வேன் கிடைச்சிதா…?” என்றான். 

அமுதனோ, “கிடைச்சது எப்பவும் போல எதுவும் இல்லாத வெறும் வேனாக… எனக்கு வர்ற கோபத்துக்கு அந்த கடத்தல்காரன் கையில கிடைச்சான் அவனை அடிச்சே கொன்னுடுவன்…” என்றான் கோபத்தில். 

அவன் சொன்னதைக் கேட்ட யுவராஜ் ஒரு வித சிரிப்போடு, “ரொம்ப கோபப்படாத அமுதா, கோபத்தை வெளியே காட்டாத… உனக்குள்ளே கோபத்தை வச்சிக்க…. எப்போ சரியான நேரம் வருதோ, அவன் நம்ம கையில கிடைக்கிறானோ… அப்போ உன்னோட மொத்த கோபத்தையும் அவன் மேல காட்டு….” என்றான். 

இதைக் கேட்ட அமுதன், மெல்ல யுவராஜ் அருகில் வந்து அவனது தோளைத் தொட்டவன், “யுவா அப்போ உன் வீட்ல இருக்கிறவங்க மேல உள்ள கோபத்தை உனக்குள்ளே வச்சிருக்கியா…?” என்றான். 

தனது கண்கள் சிவக்க நண்பனை பார்த்தவன், “நான் முதல்ல எப்படி இருந்தேன்னு உனக்கு தெரியும்… அந்த சம்பவத்துக்கு பிறகு எப்பிடி இருக்கிறன் என்றும் உனக்கு தெரியும்… அப்படி இருக்கும் போது நீ என்கிட்ட இதை ஏன் கேட்கிற…?” என்ற யுவராஜின் பதிலில் அவனை அதிர்ந்து பார்த்தான் அமுதன். 

“யுவா.. அவங்க சொன்னாங்கனா என்னடா…? நீ எப்பிடினு உனக்கு தெரியும்… எத்தனை நாளுக்கு நீ அதையே நினைச்சிட்டு இருக்க போற? உனக்குனு ஒரு வாழ்க்கை….” என்றதை அமுதன் முடிக்கும் முன்பே தனது கணீர் குரலில் கர்ஜித்தான் யுவராஜ். 

“நிறுத்து அமுதா.. நீ என்ன சொல்லப்போறனு எனக்கு புரியுது… நீ ஒண்ணை மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சிக்கோ… என்னோட வாழ்க்கை போலிஸ் வேலைக்காக மட்டும்தான்… அதில எந்த பொண்ணுக்கும் இடமே இல்லை…” என்றான். 

அவனை அந்த கடவுள் நினைச்சா மட்டும்தான் மாத்த முடியும். நாம ஏதாச்சும் பேசினா.. அது தப்பாத்தான் போகும். என நினைத்த எதுவும் பேசாது,”நான் போயிட்டு வர்றன் டா.. நாளைக்கு மீனாட்சியை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறன்.. லேட்டாத்தான் ஸ்டேஷன் வருவன்….”

” ஏன்டா என்னாச்சி மீனாட்சிக்கு…?” 

“பயப்படற மாதிரி ஒண்ணுமில்லை டா… வழமையான செக்கப் தான் நாலாவது மாசம்ல அதுதான்…” 

“ம்.. சரிடா பத்திரமா பார்த்துக்க…” 

“ஓகே டா நான் வர்றன்…”

” சரி டா” என்றான். 

அமுதன் சென்றதும் வழமை போல தனது கேஸ் ஃபைல்ஸ் இருந்த அறைக்கு வந்தவன். கடத்தல் கேஸ் சம்பந்தப்பட்ட ஃபைல்லை எடுத்தான். இதுவரை கிடைத்த தகவல்களை ஒன்றாக திரட்டி ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டு இருந்தான். எழுத எழுத அவனது முகத்தில் குழப்ப ரேகைகள் வந்து சென்றன. 

…………………………………………………அங்கயற்கண்ணி நாளை திருமணம் என்று சொன்னதை கேட்டதில் இருந்து, தனது அறைக்குள்ளே இருந்தாள் கார்த்தியாயினி. விழிகள் விழிநீரை சுரந்து கொண்டு இருந்தன.. இறந்து போன தனது தாய், தந்தையை நினைத்து அழுதாள். அவர்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் எனக்கு இந்த நிலமை வந்திருக்காது என்று நினைத்து நினைத்து அழுதாள். 

கதை எப்பிடி இருக்குனு சொல்லிட்டு ரேட்டிங்கையும் கொடுத்திட்டு போனால் மீ ஹாப்பியாவன்ல செல்லம்ஸ்… 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!