அருவி போல் அன்பை பொழிவானே : 04

5
(12)

அருவி : 04

கண்கள் இரண்டும் கோவைப் பழங்களைப் போன்று சிவந்து, கார் கூந்தல் நன்கு கலைந்து சுவரில் சாய்ந்து தனது நிலையை எண்ணியபடி அழுது கொண்டு இருந்தவளை பார்க்கவே பாவமாக இருந்து. அப்போது வெளியே இருந்து அங்கயற்கண்ணியின் சத்தம் கேட்டது. 

“ஏய் கழுத அங்கே உள்ளே இருந்து என்னடி பண்ற வெளியே வாடி….?” என்று சத்தம் போட்டார். இதுவரை அவர், ஏய் என்று அழைத்தாலே அவரது காலடியில் நிற்பவள், இன்று அவர் அழைப்பது அவளது செவியை சென்றடையவில்லை என்பது போல 

அவளது தனி உலகத்தில் இருந்தாள். 

அங்கயற்கண்ணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வர, அந்த தேக்கு மரத்தினாலான கதவை உடைப்பவள் போல தட்டினாள்,”ஏய் இப்போ வெளியே வர போறியா இல்லையா…? நீயா வந்து கதவை திறந்த தப்பிச்ச… இல்லைனு வச்சிக்கோ நானா வந்து கதவை திறந்து உள்ளே வந்தன் நீ செத்த…” என்றவள் சத்தம் கேட்டு தனது உலகத்தில் இருந்து வெளியே வந்தவள் பயத்தில் அடித்துப் பிடித்து ஓடி வந்து அறைக் கதவை திறந்தாள். 

அறைக் கதவை திறந்தவள் கூந்தலை இறுக்கிப் பிடித்த அங்கயற்கண்ணி அவளது கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள். “ஏன்டி நாயே.. நான் அந்த கத்து கத்துறன் உனக்கு கேட்கலயா.. கதவை திறக்காமல் என்னடி பண்ண…? என்ன கொழுப்பு ஏறிடிச்சா” என மீண்டும் அறைந்தாள். 

கார்த்தியாயினியின் கன்னங்களில் அங்கயற்கண்ணியின் கைவிரல்கள் தமது தடங்களை பதிந்திருக்க, கண்ணீர் அத் தடங்கள் மீது பட அவளுக்கு மிகவும் வலித்தது. வலியில், “அத்தை வேண்டாம் அடிக்காதீங்க.. எனக்கு ரொம்ப வலிக்குது….” என்று கை எடுத்து கும்பிட்டு அங்கயற்கண்ணியின் காலில் விழுந்தாள். 

காலில் விழுந்தவள் மீது கொஞ்சமும் கருணை காட்டாது, தனது காலால் எட்டி உதைத்தாள். “இங்க பாருடி நாளைக்கு ஒழுங்கு மரியாதையா இந்த சேலையை கட்டித்து வந்து மணவறையில் என் பையன் பக்கத்துல வந்து உட்காரு… இல்லை நடக்கிறதே வேற.. இங்க இருந்து உன்னால தப்பிக்க முடியாது… அதை ஞாபகம் வச்சிக்கோ…” என்றவள் அவளை மீண்டும் பிடித்து தள்ளி விட்டு சென்றாள். 

தன் மீது இருந்த சேலையை தூக்கி தூர எறிந்துவிட்டு, அறையின் ஒரு மூலையில் ஒதுங்கி இருந்தாள் கார்த்தியாயினி. 

…………………………………………………சென்னை சிட்டி இரவின் பிடியில் இருக்க, அந்த நகரத்தின் பெயர் பெற்ற ஹாஸ்பிடலில் இருந்த ஒரு இரகசிய அறையில் நான்கு பேர் தமது வேலையை செய்து கொண்டு இருந்தனர். 

அப்போது அடியாள் தோற்றத்தில் இருந்த ஒருத்தன் அவ் அறைக்குள் வந்தான். அங்கிருந்த நால்வரையும் பார்த்து வணக்கம் வைத்தான். பின், “பாஸ் நீங்க சொன்ன மாதிரி சரக்கை கொண்டு வந்திருக்கிறன் பாஸ்….” என்றான். 

அதற்கு அங்கிருந்த ஒருவன், “சீக்கிரம் எடுத்து வா…” என்று சொல்ல, அடியாள் காலையில் கடத்திய பெண்ணை கொண்டு வந்து அங்கிருந்த கட்டிலில் படுக்க வைத்தான். 

“சரி நீ போகலாம்.. நாங்க போன் பண்ணதும் வா…” என்றதும் அவன் தலையசைத்து விட்டு வெளியே சென்றான். 

” மச்சான், பார்க்க தளதளனு தக்காளி போல இருக்காடா.. அவளை கொல்லத்தானே போறம். அதுக்கு முன்னாடி ஜாலியா இருந்தா என்னடா….?” என்று கேட்க, 

“ஆமா டா.. எனக்கும் அதுதான் தோணுது என பல்லிளித்தான் மற்றுமொருவன். 

அங்கிருந்த மூவருக்கும் அந்த பெண்ணின் மீது கண் இருக்க, மற்றொருவனோ, “ஏன்டா உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா….? நாம எதுக்காக அந்த பொண்ணை கடத்தியிருக்கிறம்னு உங்களுக்கு தெரியும்…. பிறகு எதுக்குடா இப்படி கேட்கிறீங்க…? அந்த பொண்ணோட போஸ்மாட்டம் ரிப்போர்ட்ல நீங்க மாட்டிக்க போறீங்களா….? அவளோட கற்புக்கு எதுவும் நடக்காத வரைக்கும் நமக்கு எதுவும் நடக்காது…. நமக்கு தேவையானதை எடுத்திட்டு தூக்கிப் போட்டுடுவம்…”

“ஆனால் மச்சான்.. இந்த பொண்ணு….”

“டேய் உங்களுக்கு பொண்ணுதானே வேணும்.. இந்த விசயத்தை முடிங்க.. நான் உங்களுக்கு வேற பொண்ணுக்கு ஏற்பாடு பண்றன்…”

“சரி மச்சான்…” என்று பல்லிளித்தனர் மற்றவர்கள். 

நால்வரும் சேர்ந்து தமக்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்ட பின்னர், அடியாளை கூப்பிட்டு கிளீன் பண்ண சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றனர். 

அடியாளும் அவர்கள் சொன்னபடி, அந்த பொண்ணோட டெட்பாடியை ஒரு பேக்கில் போட்டு கட்டி எடுத்துக் கொண்டு வெளியே சென்று, அங்கிருந்த தனது வண்டியில் அந்த மூட்டையை போட்டுக் கொண்டு சென்றான்.. 

…………………………………………………இங்கே யுவராஜ்க்கு போன் பண்ணினார் சந்திரமோகன். அதை எடுத்த யுவராஜ், “ஹலோ யாரு….?” என்றான். 

“சேர் நான்தான் சந்திரமோகன்.. காலையில பேசினேன்.. எங்க ஊர்ல உள்ள ஒரு பொண்ணுக்கு பலவந்தமாக கல்யாணம் பண்ணி வைக்கப்போறாங்கனு….” என அவர் சொல்லும் போதே, இடையில் நிறுத்திய யுவராஜ்,

“எனக்கு ஞாபகம் இருக்கு சார். நான் காலையில அங்க இருப்பேன்….” 

“சார் உங்களை மட்டுமே நான் நம்பிருக்கிறன் சார்….”

“என்னை நம்பினவங்களை நான் எப்பவும் கைவிட்டதில்லை.. நீங்க கவலைப்படாதீங்க….”

“ரொம்ப நன்றி சார்.. சார் நான் அந்த பிள்ளையோட போட்டோவை உங்களுக்கு அனுப்பி வைக்கிறன் சார்….”

“சரி நீங்க அனுப்புங்க.. நான் பார்க்கிறன்.. அவங்களோட டீட்டெல்ஸூம் வேணும்….”

“சரி சார்… நான் போனை வச்சிடுறன்…”

“சரி.. “

சில நிமிடங்களில் கார்த்தியாயினியோட போட்டோவும் அவளது விபரமும் யுவராஜின் போனுக்கு வந்து சேர்ந்தது. மெசேஜ் வந்ததும், அவளது போட்டோவை பார்த்தான். கள்ளங் கபடம் இல்லாமல், சிறு பிள்ளை போல, இரட்டை ஜடையுடன், பள்ளிக்கூடத்தின் சீருடையில், போட்டோவில் சிரித்துக் கொண்டு இருந்தாள் கார்த்தியாயினி. சிரிக்கும் போது குழிவிழும் கண்கள் அவளுக்கு மேலும் அழகு சேர்த்தது.. 

போட்டோவை பார்த்த யுவராஜ், ‘என்னடா இது…? பார்க்க ரொம்ப சின்னப் பொண்ணா இருக்கா.. இவளுக்கு கல்யாணமா…? சிரிக்கும் போது டால் மாதிரி அழகா இருக்கா….’ என்றவன் விரல்கள் அவனைறியாமலே அவளது புகைப்படத்தை தொட்டுப் பார்த்தன. அதை உணர்ந்தவன் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான்.

யுவா உனக்கு என்னாச்சி? நீ ஏன் இப்பிடி பண்ற? பீ போல்ட்.. என்று தனக்கு தானே கூறியவன் விழிகள் மீண்டும் கார்த்தியாயினி போட்டோவிடம் செல்ல முயன்றன, உடனே போனை அணைத்து விட்டான். 

பின் நேரத்தை பார்த்தவன், இப்போது புறப்பட்டால்தான் காலையில் அவ் ஊருக்கு செல்லலாம் என்று நினைத்தவன், தயாராகச் சென்றான். 

கொஞ்ச நேரத்திலும் தயாராகி வந்த யுவராஜ், தனது போனை எடுத்துக் கொண்டு, குவார்ட்ஸை கதவை பூட்டிவிட்டு வந்து காரில் ஏறினான். 

போனை எடுத்து கார்த்தியாயினியின் தகவல்களை பார்த்துவிட்டு செழும்பூருக்கு அருகில் இருக்கும் சோலையூரில் இப்போது போலிஸாக இருக்கும் அவனது பேட்ச் நண்பன் ஒருவனுக்கு அழைத்து, கார்த்தியாயினி பற்றி சுருக்கமாக கூறி, அவளை பற்றிய முழு விபரமும் தான் செழும்பூருக்கு வருவதற்கு முன்னர் வேண்டும் என கூறினான். அவனும், “சரி….” என்று கூறிவிட்டு யுவராஜ் கேட்ட தகவல்களை அறிய சென்றான். 

உங்களை வெயிட் பண்ண வைச்சதுக்கு ரொம்ப சாரி பட்டூஸ் 😔😔 இன்னைக்கு ரெண்டு யூடி இருக்கு.. படிச்சிட்டு கமெண்ட் அண்ட் ரேட்டிங் கொடுத்திடுங்க 😍

உங்கள் அன்புத்தோழி

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!