அருவி போல் அன்பை பொழிவானே : 08

5
(7)

அருவி : 08

அமுதன் சொன்னதைக் கேட்டவன், “என்ன சொன்ன அமுதா… மூட்டையிலையா…?” என்று கேட்டவனுக்கு அவன் நைட் பார்த்தது ஞாபகம் வந்தது. உடனே அமுதனிடம், 

“அமுதா அந்த டெட்போடியை போஸ்மாட்டத்திற்கு அனுப்பியாச்சா…?”

“ஆமா யுவா, யமுனா ஹாஸ்பிடலுக்கு அனுப்பியாச்சி….”

“சரி நான் ஒரு வேலை விசயமா வெளியே வந்திருக்கிறன்… நீ போஸ்மாட்டம் ரிப்போர்ட் வந்ததும் எனக்கு அனுப்பு… நான் வந்திட்டு கால் பண்றன்…” 

“சரி யுவா….” என்ற அமுதன் தனது வேலையை பார்க்கச் சென்றான். 

இங்கே வாஷ்ரூம் போயிட்டு அவன் அருகில் வந்து நின்றாள் கார்த்தியாயினி. அவளை அழைத்துக் கொண்டு காரை எடுத்தான்.. இருவரும் சென்னை நோக்கி சென்றனர். 

………….………………………………………இங்கே யமுனா ஜனார்த்தனனுக்கும் ரகுவரனுக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டு இருந்தார். அப்போது ஜனார்த்தனன், “ரகு உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறன்… நீ என்னப்பா சொல்ற…?” என்றார். 

அதற்க்கு ரகு, “எனக்கு இப்போ எதுக்குப்பா கல்யாணம்… கொஞ்ச நாள் போகட்டுமே… நான் இன்னும் அதைப்பற்றி யோசிக்கலை அப்பா….” என்றான். 

“இல்லை ரகு.. ஒருத்தன் பண்ணின வேலையால இப்போ வரைக்கும் என்னால எந்த பெரிய விழாவுக்கும் போக முடியலை… உன்னோட கல்யாணத்தினால அந்த நிலை மாறணும்… என்னோட பிரண்ட் வசீகரன் இருக்கான்ல அவனோட பொண்ணு ஐஸ்வர்யா… அவளும் டாக்டர் தான்.. உன்னைப்போல அவ அப்பாவோட ஹாஸ்பிடலை பார்த்துக்கிறா…. நேற்று அவன்கிட்ட பேசினன்.. அவனுக்கும் இந்த கல்யாணத்தில சம்மதம்னு சொல்லிட்டான்… இன்னைக்கு சாயந்தரம் ஐந்து மணிக்கு பொண்ணு பார்க்க போறம்.. நீ நேரத்திற்கு வந்திடு ரகு…”

“சரி டாட்.. உங்களோட விருப்பம்.. உங்களுக்காக நான் வர்றேன்…”

“யமுனா நீ எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிடு ஓகே…”

“சரிங்க….” என்று கூறிவிட்டு தனது ஆஸ்தான பீடமான சமையலறைக்குள் சென்றுவிட்டார். 

ரகுவரனும் ஜனார்த்தனனும் ஹாஸ்பிடலுக்கு சென்றனர். 

அவர்கள் சென்றதும் தனது போனை எடுத்த யமுனா, வழமை போல தன் மூத்த மகன் யுவராஜ்க்கு போன் பண்ணினார். பாவம் யமுனா, யுவராஜ் வழமை போல அவருடைய போனை எடுக்க வில்லை. கட் பண்ணி விட்டான். கொஞ்ச நேரம் அழுது கொண்டு நின்ற யமுனா.. பின் தன் கணவர் சொன்ன வேலையை செய்ய சென்றார். 

……..…………………………………………. 

இங்கே காரில் யுவராஜ், சிறு பிள்ளை போல யன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு வரும் கார்த்தியாயினியைப் பார்த்தவன், “கார்த்தியாயினி…” என்றான். 

அவனது அழைப்பில் திரும்பிப் பார்த்தவள், “சொல்லுங்க மாமா…” என்றாள். 

“உனக்கு என்னை முன்னாடியே தெரியும்னு கல்யாண மண்டபத்தில சொன்னல்ல.. எப்பிடி என்னை தெரியும்….?” என்று கேட்டான். 

அவனைப் பார்த்து திருட்டு முழி முழித்தவள், “அது வந்து மாமா.. நான் சும்மா சொன்னேன்… ஊரையே தாண்டாத நான் உங்களை எப்படி பார்த்திருக்க முடியும்…? உங்களை முன்னாடியே தெரியும்னு சொன்னதாலதான் அவங்க மேலும் பிரச்சனை பண்ணலை.. நான் நீங்க காப்பாத்தி கூட்டிட்டு வருவீங்கனு நெனச்சா.. தாலியே கட்டிட்டீங்க மாமா….” என்றாள் வெகுளியாக.. 

அவளது வெகுளித்தனம் யுவராஜ்க்கு பிடித்திருந்தது. அவளிடம் சென்னை செல்லும் முன்னர் சில விஷயங்களை பேச வேண்டியிருந்தது. 

“கார்த்தியாயினி நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்… “

“பேசாலாமே…. என்கூட பேச உங்களை தவிர வேற யாரும் இல்லை மாமா… சொல்லுங்க மாமா….” என்றாள். 

“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால அங்க வரலை…. உன்னை காப்பாத்தணும்னு தான் வந்தேன்… ஆனால் அவங்க ரொம்ப தப்பா பேசினாங்க.. தப்பே பண்ணாம குற்றவாளியாக நிற்கும் போது ஏற்படும் வலி அதிகம்.. அதை அனுப்பவிச்சவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.. அந்த வலியை உனக்கு தரக்கூடாதுனு நினைச்சேன்… அதனால் தான் தாலி கட்டினேன்….” என்றான். 

இதைக் கேட்ட கார்த்தியாயினியின் முகம் வாடியது. தலையை குனிந்து தன் மடி மீது இருந்த விரல்களால் புடவையின் முந்தானையைப் பிடித்து பிசைந்து கொண்டு இருந்தாள். அவளது தவிப்பை பார்த்த யுவராஜ், 

“ஆனால் ஒண்ணு, உனக்கு தாலி கட்டும் போது, இனிமே என்னோட வாழ்க்கை உன்கூடத்தான். உன்னை பத்திரமா பார்த்துக்கணும்னு நினைச்சிதான் தாலி கட்டினேன். இனிமேல் நீ என்னோட பொறுப்பு சரியா. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரு.. நீ ஆசைப்பட்ட மாதிரியே டாக்டராகிடலாம். உனக்கு என்னை பிடிக்கலனா உன்னை ஹாஸ்டல்ல சேர்த்து படிக்க வைக்கிறன். அப்புறம் நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறன்….” என்று அவளது தலையை தடவிக் கொடுத்தான். 

அவன் முதலில் சொன்னதை கேட்டதும் மலர்ந்த கார்த்தியாயினியின் முகம் அவன் இறுதியாக கூறியதைக் கேட்டதும் வாடியது. 

“இங்க பாருங்க மாமா.. நான் உங்களை சும்மா மாமா மாமானு கூப்பிடலை… எங்க ஊருல தாலி கட்டின புருஷனைத்தான் மாமானு கூப்பிடுவாங்க. நீங்க எப்போ என் கழுத்தில தாலி கட்டினீங்களோ அப்பவே உங்களை என்னோட புருஷனா ஏத்துக்கிட்டேன்… உங்களுக்கு என்னை பிடிக்கலனா நான் உங்களை விட்டு ஒதுங்கிடுறன். அத்தை சொல்ற மாதிரி அநாதையாகவே வாழ்ந்திடுறன்…” என்றாள் கண்களில் நீருடன். 

இதைக் கேட்ட யுவராஜ்க்கு உயிர் வரை வலித்தது. அவளை தோளோடு அணைத்துக் கொண்டவன், “நான் இருக்கிற வரைக்கும் நீ அநாதை இல்லை. சரியா.. இனிமே உனக்காக எப்பவும் நான் இருப்பேன்….” என்றான். 

அதைக் கேட்ட பின்தான் கார்த்தியாயினி முகம் மலர்ந்தது. அவனைப் பார்த்து கண்களால் சிரித்தாள்.

“நீ என்கிட்ட ஏதாச்சும் கேட்கணுமா…?”

“ம்.. “

“என்ன கேக்கணும்…?”

“உங்க பேரு என்ன? நீங்க என்ன செய்றீங்க….? உங்களை பற்றி தெரிஞ்சிகக்கணும்னுதான் கேட்டேன். உங்களை சந்தேகப்படலை….” என்றாள் அவசரமாக, எங்கே தன்னை தப்பாக நினைத்து விடுவானோ என்று. 

அவள் இப்படி கேட்டதும் யுவராஜ்க்கு சிரிப்பு வந்தது.. நீண்ட நாட்களுக்கு பிறகு வாய் விட்டு சிரித்தான். அவன் சிரிக்கும் போது கன்னங்களில் குழி விழுந்தது. 

அதைப் பார்த்ததும், “உங்களோட சிரிப்பு ரொம்ப அழகா இருக்கு…” என்றாள். அதைக் கேட்டு மேலும் சிரித்தவன். 

“என்னோட பேரு யுவராஜ். நான் ஏசிபியா இருக்கிறன். அவ்வளவுதான்…” 

“என்ன நீங்க போலிஸா….” என்று தனது கோலிகுண்டு கண்களை உருட்டிக் கேட்டாள். 

“ஆமா..” என்றான். 

“சூப்பர்… சூப்பர்… எனக்கு சின்ன வயசில இருந்தே போலிஸ்னா ரொம்பபபபபபப பிடிக்கும்….” என்று குதூகலித்தாள். 

“அப்டியா… சரி நீ கொஞ்ச நேரம் தூங்கு நான் சென்னை போனதும் எழுப்பி விடுறன்….”

“இல்லை.. இல்லை…. நான் இதுதான் முதல் தடவையா எங்க ஊரை விட்டு வெளியே வர்றன்…. வெளியே பார்க்காமல் எப்பிடி தூங்குறது….? நான் வெளியே பார்த்திட்டு வர்றனே மாமா.. ” என்றாள். 

அவனும் அதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் சம்மதம் தெரிவிக்க, மகிழ்ச்சியாக வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள் கார்த்தியாயினி.. 

அடுத்த யூடி மாலை வரும் பட்டூஸ்… உங்களோட கருத்துக்களையும் ரேட்டிங்கையும் குடுத்திட்டு போனால் மீ ஹாப்பி 😊😊

உங்கள் அன்புத்தோழி

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

1 thought on “அருவி போல் அன்பை பொழிவானே : 08”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!