அருவி போல் அன்பை பொழிவானே : 09

5
(14)

அருவி : 09

அமுதன் யமுனா ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்ற டெட்பாடியின் போஸ்மாட்டத்தை வாங்க வந்திருந்தான். அங்கே வந்த ரகுவரன், 

“ஹாய் அமுதன்.. என்ன இந்தப் பக்கம்…..?” 

“போஸ்மாட்டம் ரிப்போர்ட்டை வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்….” 

“ஓ.. அப்டியா…. சரி அப்போ அந்த சைட் வெயிட் பண்ணுங்க.. ரிப்போர்ட்ட் இப்போ வந்திடும்….” 

“ஓகே ரகுவரன்..” என்ற அமுதன் போஸ்மாட்ட ரிப்போர்ட்காக காத்திருந்தான். 

அப்போது முகத்திற்கு மாஸ்க் போட்டவாறு இருமிக் கொண்டு வந்த இருவர் ரகுவரனின் அறைக்குள் சென்றனர். அவர்களை பார்க்க வித்தியாசமாக வட நாட்டுக்காரர்கள் போல இருந்தனர். அமுதன் அதை பெரிது படுத்தாது, ரிப்போர்ட்காக காத்திருந்தான். 

கொஞ்ச நேரத்தில் நர்ஸ் ஒருவர் வந்து ரிப்போர்ட்டை கொடுக்க, அதை எடுத்துக் கொண்டு டாக்டர் ஒருவரிடம் சென்றான்.  

“குட் மார்னிங் சார்….” 

“குட் மார்னிங் அமுதன் வாங்க, உட்காருங்க….” 

“சார் இந்த போஸ்டம் ரிப்போர்ட்ல என்ன இருக்குனு சொல்ல முடியுமா…. ?” 

“கண்டிப்பா….” என்ற டாக்டர் அந்த ரிப்போர்ட்டை அமுதனிடம் இருந்து வாங்கிப் பார்த்தார். பார்த்த பின்னர் அமுதனிடம் “அந்த பொண்ணை கழுத்தை நெரித்து கொன்றிருக்கிறாங்க.. ” என்றார். 

“என்ன டாக்டர் கழுத்தை நெரித்தா? சரி அந்த பொண்ணுக்கு தப்பா நடந்திருக்கா…. ?”

“இல்லை அமுதன்.. நீங்க நினைக்கிற மாதிரி அந்த பொண்ணுக்கு தப்பா ஏதும் நடக்கல… ” 

“ஓகே டாக்டர்.. தேங்க்ஸ்….” என்றுவிட்டு, ஹாஸ்பிடலை விட்டு கடுப்புடன் வெளியே வந்தான். 

அவனுக்கு சரியான தகவல் கிடைக்காதை நினைத்து ஜன்னல் ஓரமாக நின்ற ஒரு உருவம் சிரித்தது. 

வெளியே வந்த அமுதன் யுவராஜ்க்கு கால் பண்ணி ரிப்போர்ட்டை பற்றி சொன்னான். அதற்கு யுவராஜ் தான் சென்னைக்கு வந்துவிட்டதாகவும் கொஞ்ச நேரத்தில் ஸ்டேஷன் வந்திவிடுவதாகவும் சொன்னான். 

…………..…………………………………

காருக்கு வெளியே பார்த்துக் கொண்டு வந்த கார்த்தியாயினி, தன்னை அறியாமல் அந்த பயணத்தில் தூங்கி விட்டாள். தனது குவாட்டஸ்க்கு வந்ததும், இறங்கிய யுவராஜ், கார்த்தியாயினியின் பக்கம் வந்து அவளை எழுப்பினான். தூக்கத்தில் இருந்து திடீரென விழித்தவளுக்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. தனது கண்களை நன்றாக கசக்கிவிட்டு பார்த்தாள். 

யுவராஜ்ஜைப் பார்த்து சிரித்தவள், “உங்க வீட்டுக்கு வந்தாச்சா மாமா…?” என்று கேட்டபடி காரில் இருந்து இறங்கினாள். அவளது கேள்விக்கு பதில் சொல்லியபடி கதவைத் திறந்தான். 

“ஆமா, ஆனால் இது நினைக்கிற மாதிரி வீடு இல்லை… இது போலிஸ் குவாட்டஸ்… இங்கதான் நான் தங்கியிருக்கிறன்… உள்ளே வா…” என்று அவளையும் அழைத்துச் சென்றான். 

வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் வந்தாள் கார்த்தியாயினி. வீட்டை தனது கண்களால் சுற்றி பார்த்தாள். அவள் பார்ப்பதை பார்த்த யுவராஜ், “கார்த்தியாயினி வா வீட்டை சுற்றி காட்டுறன்….” என்றவன். சமையலறை, பாத்ரூம், அவனது அறை, அதற்கு பக்கத்தில் இருந்த அறை என அனைத்தையும் காட்டி விட்டு, ஹாலுக்கு கூட்டி வந்தான். 

அங்கிருந்த சோபாவில் அவளுடன் இருந்தான். “கார்த்தியாயினி உனக்கு தனி அறை வேணும்னாலும் நீ எடுத்துக்க, இல்லை என்னோட அறையில இருக்க விருப்பம்னாலும் எனக்கு பிரச்சனை இல்லை…” என்றான். 

அவனைப் பார்த்தவள், “மாமா நான் உங்ககூட தங்கிக்கிறனே…..” 

“சரி.. நான் ஸ்டேஷனுக்கு போகணும்.. வேலை இருக்கு. உனக்கு மத்தியானத்துக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணியிருக்கிறன்.. வந்ததும் நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு.. நான் நைட் தான் வருவன் சரியா…. ?”

“மாமா இங்க தனியாவா இருக்கணும்.. எனக்கு பயமா இருக்கு….” என்றாள் பயத்துடன். 

“இங்க பாரு மா.. இங்க பக்கத்தில இருக்கிற எல்லோரும் போலிஸ்காரவங்க குடும்பம்தான். இங்க எதுக்கும் பயப்பட தேவையில்லை. என்னோட வேலை இப்பிடித்தான் இருக்கும். அதனால பயப்படாம தைரியமாக இருக்கணும் சரியா….?”. என்று கூற, தலையை ஆட்டி வைத்தாள். 

பின் தனது அறைக்குச் சென்று குளித்து விட்டு கார்த்தியாயினியிடம் பத்திரமாக இருக்க சொல்லிவிட்டு, சென்றான். 

அவன் சென்றதும், அந்த வீட்டை சுத்தம் செய்து, சமையலறைக்குச் சென்று பாத்திரங்களை எல்லாம் கழுவி அதையும் சுத்தம் செய்து விட்டு, அவனது அறைக்குள் தயக்கத்துடன் சென்றாள். 

அங்கே கட்டிலில் அவனது உடைகள் இருந்தன, அறையின் மூலையில் இருந்த கூடையில் அவனது அழுக்கு உடைகளும் இருக்க, அதைப் பார்த்தவள், உடைகளை எடுத்து கழுவி காயப்போட்டாள். அறையில் இருந்த துணிகளை ஒழுங்காக மடித்து அலுமாரியினுள் வைத்தாள். பெட்சீட்டை மாற்றினாள். 

இவற்றை எல்லாம் செய்து முடிக்க அவளுக்கான சாப்பாடு வந்தது. அதை வாங்கி மேசையில் வைத்து விட்டு, முகத்தை கழுவிக் கொண்டு வந்து சாப்பாட்டை சாப்பிட்டாள். சோபாவில் வந்து இருந்தவளுக்கு தூக்கம் வர அங்கேயே தூங்கிவிட்டாள். 

…………………………………………………யுவராஜ்க்காக ஸ்டேஷனில் காத்திருந்தான் அமுதன். யுவராஜ் வந்ததும், “எங்கடா போன..?” என்றான். 

“உள்ளே வா சொல்றன்…” என்றவன் தனது இருக்கையில் இருந்தான். அவனுக்கு முன்னால் இருந்த கதிரையில் அமுதனை உட்கார சொன்னன், தான் செழும்பூருக்கு சென்றது, கார்த்தியாயினியுடன் நடந்த திருமணம், அவளை இங்கே அழைத்து வந்தது என அனைத்தையும் சொல்ல, இதைக் கேட்ட அமுதனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. 

ஒருவாறு தன்னை மீட்டுக் கொண்டவன், “யுவா நெஜமாத்தான் சொல்றியா…..?” என்று கேட்டான். 

“ஆமா, அமுதா.. நான் சொல்றது உண்மைதான்…..” என்றதும், எழுந்து வந்த அமுதன் யுவாவை அணைத்துக் கொண்டான். நண்பனை புரிந்து கொண்ட யுவராஜ் அவனது முதுகை தட்டிக் கொடுத்தான். 

“உண்மையில ரொம்ப சந்தோசமா இருக்கிறன் யுவா. எங்க உன்னோட வாழ்க்கை இப்பிடியே போயிடுமோனு பயந்திட்டே இருந்தன். யுவா அந்த பொண்ணை விட்டுட மாட்டல்ல… ” 

“என் உயிருள்ள வரைக்கும் அவ என்கூட தான் இருப்பா.. அவளுக்கும் இந்த கல்யாணத்தில விருப்பம் தான்… ஆனால் அவ சின்னப் பொண்ணுடா.. அதனால அவளை அவ ஆசைப்பட்ட மாதிரி டாக்டராக்கிட்டுதான், எங்களோட வாழ்க்கையை ஆரம்பிக்கணும்னு முடிவு எடுத்திருக்கிறேன்….”

“உன்னை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு டா…..”

“போதும் போதும் புகழ்ந்தது. சரி கேஸை பற்றி பார்க்கலாம்…” 

அமுதனும் யுவராஜிடம் கேஸை பற்றி கூறினான். அவன் சொன்னதை எல்லாம் நன்றாக கேட்ட யுவராஜ்க்கு ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. 

“அமுதா, நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ.. பொண்ணுங்களை கடத்தினவனுங்க பொண்ணை ரேப் பண்ணலை, கழுத்தை நெரித்து கொலை செய்றானுங்க.. இதுக்கு என்ன காரணமா இருக்கும். அவனுங்களுக்கு தேவையானது எது…? எதுக்காக இந்த கடத்தல் நடக்குது….? என்று கண்டுபிடிக்கணும். 

உங்களோட கருத்துக்களையும் சொல்லிட்டுப் போங்க பட்டூஸ் 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!