இதயமே இளகுமா அத்தியாயம் 10

4.8
(10)

காலை நேரம், மழை தூறல்கள் பூமியை தொட்டு தொட்டு உறவாடி கொண்டிருக்க, அந்த வேலையிலும் அம்பாளுக்கு பால்குடம் எடுத்து முடித்து, கோவில் சன்னதியில் அமர்ந்திருந்தனர் பாலா குடும்பத்தினர்.

சமரின் விழிகளோ செம்பாவை தேடிக் கொண்டிருந்தன, அவள் தான் கோவிலுக்கே வரவில்லையே பின் எங்கே அவன் விழிகளில் விழுவது. அவள் குடும்பத்தினர் அங்கே நிற்க, அவளும் நிற்கிறாளா? என பார்க்க அங்கேயும் இல்லை. பெண்ணவளை காணாமல் ஆனவனின் மனம் வாடியது.

திரும்பி பாலாவை பார்க்க அவன் யாரிடமுமே பேசுவதை கவனித்தவன். அவர்கள் அருகில் வந்தான். பாலா சந்தோசமாக சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். சமரும் அவரின் பின்புறத்தை வைத்து யாரென ஊகித்தவன் “அண்ணா” என அழைக்க திரும்பினான் குகன்.

“டேய்! சமர், எப்படி இருக்க? நல்லா இருக்கியா?

“சூப்பரா இருக்கோம் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க,” அம்மா எப்படி இருக்காங்க?”

“எல்லாரும் நல்லா இருக்கோம்டா.”

“என்ன சமர், அடிக்கடி வருவேன்னு சொல்லிட்டு போன ஆனால் வரவே இல்லை. ஒவ்வொரு தடவையும் பாலா ஊருக்கு வரும்போது கேட்பேன், இத்தனை வருஷம் கழிச்சுதான் எங்களை பாக்கணும்னு உனக்கு மனசு வந்துச்சா?”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லன்னா, வாழ்க்கையில் நம்ம எதிர்பார்க்காத விஷயம் எல்லாம் நிறைய நடந்துடுச்சி என்றவனின் முகத்தில் சில நொடி சோகத்தின் சாயல் வந்து சென்றது.”

“என்ன சமர், என்ன ஆச்சு?” உன் முகமே மாறிடுச்சி.

“ஒன்னும் இல்லண்ணா, அங்கே டாக்டர் படிச்சி முடிச்சு, அடுத்து படிப்பதற்காக பாரின் போனேன். படிப்பு முடிந்து வந்ததும் அப்பா, எனக்கு அப்புறம் ஹாஸ்பிடல் நீ தான் பாக்கணும்னு என்கிட்ட ஒப்படைச்சிட்டார். அதான் என்னால எங்கேயும் நகர முடியல”

“அதுவும் சரிதான், அவங்களுக்கு அப்புறம் நம்ம தானே எல்லாவற்றையும் நல்லா பாத்துக்கணும். அம்மா, அப்பா எப்படி இருக்காங்க சமர்”

“நல்லா இருக்காங்கண்ணா, நீங்க ஒரு தடவை கோயம்புத்தூர் வந்து பார்த்துட்டு வரலாம்ல,”

“உன் கல்யாணத்துக்கு சொல்லு, கண்டிப்பா வரேன்.”

“சிரித்தான் சமர்,எனக்கு கல்யாணம் ஆகுறது இருக்கட்டும். உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? அண்ணி எங்கே?”

“அண்ணியா? அவங்க வரும்போது வரட்டும் சமர்.” அதிலேயே புரிந்துகொண்டான். இன்னும் குகனுக்கு திருமணம் ஆகவில்லை என்று”

“அண்ணா, கண்டிப்பா உங்களுக்கு இந்த வருஷம் கல்யாணம் நடக்குது, நாங்கதான் முன்னாடி நின்று நடத்தி வைக்கிறோம்”, என்ன பாலா சரிதானே என்க,

“குகன் அண்ணா கல்யாணத்துக்கு பண்ணாமல் , வேற யாருக்கு பண்ணபோறோம் ஜமாய்ச்சிடலாம் சமர்” என்றான் பாலா.

“எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும்னு அவ்வளவா விருப்பம் இல்லடா, அம்மாவுக்காகதான் யோசிக்க வேண்டி இருக்கு. ஒரே பையனை பெத்து வச்சுட்டு கல்யாணம் ஆகவில்லை என்று ஒவ்வொருத்தங்ககிட்டயா தினமும் புலம்பிட்டு இருக்காங்க, என்னோட மனநிலை என்னன்னா, எனக்காக இல்லைனாலும் அம்மாவுக்காக கல்யாணம் பண்ணனும். தோட்டத்தையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்துட்டு ரொம்ப கஷ்டமா இருக்குடா, என்னை கல்யாணம் பண்றவங்க எல்லாத்தையும் பார்த்துக்க வேண்டிய அவசியம் கூட இல்லை, எனக்கு உதவியாக இருந்தால் கூட போதும். நானே எல்லாவற்றையும் சமாளிப்பேன்.

“நடக்கும் அண்ணா, கவலைப்படாதீங்க” என மூவரும் பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருக்க, கோவிலை சுற்றி பார்த்த தினேஷ், கோகுல், வித்யா, ஆத்வி மூவரும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர். அப்போது புதிதாக சமர், பாலாவிடம் பேசிக்கொண்டிருந்த குகனை பார்த்தால் ஆத்விகா.

“கருமை நிறத்தழகன்தான், அவன் நிறத்திற்கேற்ப அலை பாயும் கேசம், உழைத்து உரமேறிய உடற்கட்டு, திண்ணிய மார்புகள், கூர்மையான கண்கள், தேவைக்கு மட்டும் சிரிக்கும் இதழ்கள், கைகளில் வெள்ளி காப்பு என கிராமத்து ஆணழகனாக காட்சியளித்தவனை கூர்மையாக பார்த்தாள் ஆத்வி. முதல் முறையாக ஒரு ஆணவனை ஆழமாக ரசித்துப் பார்க்கிறாள். சமரை கூட இவ்வளவு தூரம் ஆழமாக பார்த்ததில்லை. சிறுவயதிலிருந்தே சமரை பார்த்திருந்ததால், அவனின் குடும்பமும், தங்களின் வசதிக்கு ஏற்றார் போல இருப்பதனால், சமரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழலாம் என நினைத்தாலே தவிர, அவள் மனதிற்குள் உண்மையான காதல் இருக்கிறதா, என்றால் கட்டாயமாக கேள்விக்குறிதான் ?. இன்று தன்னை அறியாமலே இன்னொரு ஆடவனை விழிகளால் படம் பிடிக்க, அடுத்த நொடியே ‘போயும் போயும் பட்டிக்காட்டான பாக்குற” என்று அவள் மனம் உணர்த்த, சட்டென பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்  ஆத்விகா.

செம்பாவும், கோகிலாவும் வேலைக்கு கிளம்பி நின்றனர்.

“ஏன்டி, மழை வருதுல்ல, கொஞ்ச நேரம் கழிச்சு போகலாம்ல்ல” என்ற சந்திராவிடம்

“அம்மா நாங்க என்ன சின்ன பாப்பாவா? லேசாதானே  தூறல் போடுது, அதெல்லாம் நாங்க பார்த்துப்போம்” என செம்பா ஸ்கூட்டியை ஸ்டார் செய்ய, கோகிலா பின்னால் ஏறி கொண்டாள்.

இருவரும் வீட்டை தாண்டி கொஞ்ச தூரம் வந்து கொண்டிருக்க, அவர்களின் முன்னாள் பைக்கில் நின்றவாரே, கை நீட்டி வழிமறித்தான் மருது.

“இந்த நாய் , ஏன்டி நம்ம பாதையில குறுக்க நிக்குது”

“நாய்தானே அதான் குறுக்கால வருது. இந்த மருது நம்ம கிட்ட காலையிலேயே வாங்கி கட்டதான் வந்து நிற்கிறான். நீ நிறுத்தாமல் போ செம்பா” என்றாள் கோகி.

“செம்பா வண்டியை நிறுத்த மாட்டாள், என்பதை உணர்ந்தவன் அவர்கள் வருவதற்கு நேராக குறுக்கே பைக்கை கொண்டு நிறுத்த, இதை எதிர்பாக்காதவள் சட்டென பிரேக் போட்டு ஸ்கூட்டியை நிறுத்தினாள்.!”

“உனக்கு என்ன பைத்தியமா?, காலையில சாகுறதா இருந்தால் வேற எதுலையாவது விழுந்து சாக வேண்டியதுதானே, இப்படி நாங்க வரும்போது குறுக்க வந்து விழுகிற”

“நான் ஏன் செம்பா சாகணும், உன் கூட நூறு வருஷம் வாழனும்”

“நீ உருட்டு ராசா, உருட்டு, நல்லா உருட்டு” என கோகி நக்கல் அடிக்க…

“கோகி அமைதியா இருடி” என்றாள் செம்பா.

“ஆமா அமைதியா இரு கோகி. நான் என் உயிர் கிட்ட பேசிட்டு இருக்கேன்” என்றான் மருது.

“இதோடா, உசுராம்ல அவ உன்ன ம…றா கூட மதிக்க மாட்டீங்கறா, நீ உசுரு, ம..றுன்னு டயலாக் விட்டுட்டு இருக்கிற மங்கூஸ் மண்டையா”

“கோகி” என செம்பா பல்லை கடித்தபடி அழுத்தமாக சொல்ல

“வாய மூடிக் கொண்டாள்” கோகி.

“ சொம்பா உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்.”

முதல்முறையாக இன்றைக்கு தான் வேலைக்கு செல்வதால், இவனிடம் சண்டையிட்டு தன்னுடைய மனநிலை மாற்ற விரும்பவில்லை அவள், “என்ன சொல்லு” என்றாள் அமைதியாக…

“ஊர்ல திருவிழான்னு வத்தால், ஆயிரம் பேர் வர தான் செய்வாங்க, வர்றவங்க அழகாவும் இருப்பாங்க, பணக்காரனாகவும் இருப்பாங்க, அதுக்காக அவங்க பின்னாடியே நீ போயிடக் கூடாது இல்லையா, உனக்காக இந்த மருந்து காத்திட்டு இருக்கான்னு உனக்கு தெரிய வேண்டாமா?”

“இவன் என்ன பேசுறான்” என செம்பா நினைக்க….

“ஆமா நீ ஏன் வந்ததுல இருந்து பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க, புரியற மாதிரி பேசமாட்டியா” என்றாள் கோகி.

“கோகி” என மீண்டும் செம்பா அழுத்தமாக சொல்ல…

காதை கையை வைத்து பொத்தியபடி நின்றாள்‌. அவன் பேசுவது காதில் விழுவதால்தானே திரும்ப பதில் பேசவேண்டியிருக்கிறது.

செம்பா அமைதியாக மருதுவை பார்க்க, அவனும் அவளைதான் பார்த்து சிரித்தான்.

“ நான் ஏன் இப்படி பேசுறேன்னு உனக்கு தெரியலையா செம்பா?”

“இல்லை” என தலையசைக்க…

“அந்த நிலா வெளிச்சத்தில், நீ சந்துல சிந்து பாடுனது நானும் பாத்துட்டேன் தங்கம்” என கேலியாக சிரித்தான்‌.

புரிந்துவிட்டது செம்பாவிற்கு, சமருடன் நின்று பேசியதை கவனித்திருக்கிறான் என்று.

“இவன் என்ன சொல்றான் என்றபடி கோகி செம்பாவை பார்க்க, செம்பா முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அமைதியாகவே தான் அவனை பார்த்தபடி நின்றாள்”

“ஏன்டி, அவன் பைத்தியம் மாதிரி ஏதேதோ சொல்றேன், நீ என்ன அமைதியா நிக்கிற, என்னையும் வாய் திறக்க கூடாதுன்னு சொல்ற” என கேகி செம்பாவிடம் சண்டைக்கு வர….

“அதான் அவன் பைத்தியம்னு நீயே சொல்றியே அப்புறம் என்ன? விடுடி” என்றாள் செம்பா,

“நான் பைத்தியமா, நல்லா இருக்கே உங்க கதை. இத்தனை நாள் இலவு காத்த கிளி மாதிரி நான் காத்துட்டு இருக்க, உன்னை எவனோ வந்து கொத்திட்டு போக, நான் விடுவேனா, இங்கன பாரு செம்பா! உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ என்கிட்ட கேளு, உன்னை பணத்தாலே குளிப்பாட்டுறேன். ஆனால், இந்த பட்டணத்துக்காரனுங்க சகவாசம் வேணாம். ஆளு பார்க்க கொஞ்சம் நிறமா, அழகா இருந்தால் அவனுங்க பின்னாடி போய்டுவிங்களோ?”

“அட உண்மையாவே நீ பைத்தியம் தானா”, என்ற கோகியை பார்த்து

சத்தமாக சிரித்தான் மருது. “நான் பைத்தியமாவே இருந்துட்டு போறேன். உன் உயிர் தோழி பைத்தியமா அலைஞ்சிடாம பார்த்துக்கோ, அதே மாதிரி இன்னொன்னு சொல்றேன் நல்ல அவளை ஞாபகம் வைக்க சொல்லு, எனக்கு கிடைக்காத அவளை யாருக்கும் கிடைக்க விட மாட்டேன் என ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டியவன். அவளை மட்டும் இல்லை, அவளை சுத்தி வரவங்களையும்தான். பார்த்து சூதானமா இருந்துக்க சொல்லு, எப்பவும் பல்லை காட்டிட்டு சுத்துறேன்னு நினைப்பிங்க, எப்பவும் ஒரே மாதிரி தெரிய மாட்டேன். வெட்டி கூறு போட்டுடுவேன். நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்” என்றவனின் முகம் கோரமாக மாறியது. அவளை பார்த்து முறைத்தவன் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

செம்பா அப்படியே ரோட்டில் நிற்க, செம்பா எல்லாரும் நம்மளைதான் பாக்குறாங்க, வண்டியை எடு நேரம் வேற ஆயிடுச்சு என்றாள்” கோகி.

“செம்பா ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி, அவள் மருத்துவமனை வந்து சேரும் வரை இருவருமே பேசவில்லை. மருத்துவமனைக்குள் வந்துதான் மௌனத்தை கலைத்தால் செம்பா”

“கோகி”

“சொல்லு செம்பா”

“மருது பேசுவதை பற்றி என்கிட்ட கேட்கணும் உனக்கு தோணலையா?”

“என் செம்பாவை பற்றி எனக்கு தெரியும். என்கிட்ட ஏதாவது சொல்லனும்னு நினைத்து இருந்தால், அப்பவே நீ சொல்லி இருப்பியே, அந்த விஷயம் தேவையில்லாததுன்னு நீ நினைத்து இருக்கலாம். அதனால நீ என்கிட்ட எதுவும் சொல்லாம இருக்கலாம். நீ எதையும் போட்டு மனச குழப்பிக்காத, முதல் தடவை வேலைக்கு வந்து இருக்கோம். எதையுமே முழு மனசோட செய்யணும்னு சொல்லுவல்ல செம்பா ” வா என இருவரும் அங்கிருந்த பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தங்கள் வேலையை தொடங்கினர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!