இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 20

4.9
(7)

செம்பாவும் கோகிலாவும் வீட்டிற்கு வந்து சேர வாசலிலே நின்றிருந்தனர் ராசாத்தி, சந்திரா, நல்லசிவம் மூவரும். சமர் அவர்களை வீட்டின் முன் விட்டுவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.

“ஏன்டி, இவ்வளவு நேரம் உங்களுக்கு வேலை அப்பவே முடிந்திருக்குமே, இவ்வளவு நேரம் அங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என ராசாத்தி கேட்க

“அம்மா கிளம்புற நேரத்துல ஒரு அவசர கேஸ் வந்தது, அதான் கொஞ்ச நேரம் ஆயிடுச்சு” என்றால் கோகிலா.

“சரி ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்” என ராசாத்தி சொல்லவும் அப்போதுதான் சந்திராவிற்கு ஞாபகம் வந்தது. இரண்டு தெரு தள்ளி ஒருவர் செம்பாவிடம் துணி தைக்க கொடுத்திருக்க, நாளைக்கு வெளியே செல்ல வேண்டும் துணி தைத்துவிட்டாளா?” என கேட்டு வந்தது..

செம்பா பக்கத்து தெரு வள்ளி அக்கா துணி தைக்க தந்தாங்கலாமே, நாளைக்கு வெளியே போறாங்களாம். வேணும்னு கேட்டாங்க, நீ தச்சு வச்சிருக்கியா? என‌ சந்திரா கேட்டதும்..

 “ஆமாம்மா…  பீரோ மேலே இருக்குற பையில் வைத்திருந்தேன். நீங்களே எடுத்து கொடுத்திருக்கலாம்ல”

 நானும் தேடிப் பார்த்தேன்டி எனக்கு எந்த துணிண்னு சரியா தெரியலை. அவளை வந்து பார்னு சொன்னால் எனக்கு நேரம் இல்லை செம்பா வந்தால் கொடுத்துவிட சொல்லுங்க காலையில் முதல் வண்டிக்கு போகனும்னு சொல்லிட்டு போறாள்..

அதை கொண்டு கொடுத்துட்டு வந்துடுறியா செம்பா என்றதும் கோகிலா

 “அத்தை அதை நான் கொண்டு கொடுக்கிறேன். செம்பா ரொம்ப டயர்டா இருக்காள் அவள் தூங்கட்டும்” என்றாள். 

செம்பா பைக்ல போய்ட்டு கொடுத்துட்டு வந்துருவா, நீ நடந்ததுல போகணும் உனக்கு வண்டி ஓட்ட வேற தெரியாது.

பக்கத்து தெருதானே அத்தை. நானே கொண்டு குடுத்துடுவேன்.

“சரி அப்போ சாப்பிட்டு போ” என இருவரும் தயாராகி உடையை மாற்றி விட்டு வர, சாப்பாடு பரிமாறினார் சந்திரா. கோகி சாப்பிட்டுவிட்டு துணியை வாங்கிக்கொண்டு கிளம்பினாள்.

துணியை கொடுத்துவிட்டு திரும்ப வரும்போது ஏதோ மனதிற்குள் லேசாக பயமாக இருந்தது. மனம் படபடவென அடிக்க “ஏன் ஒரு மாதிரியா பயமா இருக்கு, கோகி நீ பயப்படுற ஆள் இல்லையே” என்றவள் சுற்றிமுற்றி பார்த்தாள். யாரும் இருப்பது போல இல்லை. ஏதோ ஒரு சத்தம் கேட்பது போல இருக்க திரும்பி பார்த்தாள், அப்போதும் யாரும் இல்லை. மீண்டும் நடக்க ஆரம்பித்தவள் பயந்தபடியே “ஒரு பொண்ணு கொஞ்சம் அழகா இருந்துடகூடாது பேய், பிசாசுங்க கூட விட்டு வைக்க மாட்டாங்க போல, ஒருவேளை என் அழகுல மயங்கி பாலோவ் பண்றாங்களா இருக்குமோ” என நினைத்தபடியே செல்ல, மறுபடியும் யாரோ தன் பின்னால் வருவது போல தோன்ற கோகிலா திரும்பவும் அவள் வாயை பொத்திய மூவரில் ஒருவன், அவளை தூக்கி தோளில்    அப்படியே தூக்கிக் கொண்டு காட்டிற்குள் நுழைய, கால்களை அங்கும்மிங்கும் ஆட்டி தப்பிக்க பார்த்தாள். முடியாமல் போக அவளை தூக்கிருந்தவனின்  தோளில் பற்கள் தடம் பதித்து இரத்தம் வரும் அளவுக்கு கடிக்க,  வலி தாங்கமுடியாமல் அவளை கீழே போட்டான். உடனே சுதாரித்துக்கொண்டு ஓடினாள் கோகி.

‘ஐயோ எந்த எடுபட்ட நாயிங்கன்னு தெரியலையே, என்னை ஏன் துரத்துறாங்க? அம்மா தாயே!,  நானே ஒரு ப்ளோவ்ல ஓடுறேன். யாரும் குறுக்க வந்துடாமல் இருக்கனும். ஒடு கோகி ஓடு” என கூறியபடி வேகமாக ஓடினாள்.

“டேய் ஓடுறாள். அவளை புடிங்க, அவளை மட்டும் இன்னைக்கு விட்டுட்டோம். மருதுக்கு பதில் சொல்ல முடியாது போங்கடா” என தன் அடியாட்களை விரட்டினர் மருதுவின் அடியாட்கள்.

கோகிலா அதற்கு மேல் ஓட முடியாமல் ஒரு மரத்தின் மூட்டிற்குள் ஒதுங்கி நின்று கொண்டாள். ஊரை விட்டு தள்ளியிருந்த வயல்வெளி பகுதியில் நின்றிருந்தாள். அவர்களில் ஒருவன் கோகி ஒளிந்து இருப்பதை பார்த்துவிட்டு மெதுவாக பின்புறம் வர, அங்கே கிடந்த சருகை அவன் மிதித்ததும் சத்தம் கேட்டு திரும்பியவள், தன்னை ஒருவன் நெருங்கி விட்டான் என நினைத்தது மறுபடியும் ஓட்டம் பிடித்தாள், மூச்சு வாங்கியபடி ஓடி வரும் போது தன் முன்னாள் வந்தவன் மீது மோதி இருவரும் கீழே விழுந்தனர்.

விழுந்ததில் இருவரின் கால், கைகளிலும் லேசான சிராய்ப்பு ஏற்பட “எவன்டா அவன் நானே உயிரை கையில பிடிச்சிட்டு ஓடுறேன். இடையிலே இந்த கௌசிக் வருவேன்ற மாதிரி வந்தது” என பொங்கி எழுந்தால் கோகி. அங்கே நின்றிருந்தவனை பார்த்து “ஏன்டா நெட்டமரம் உனக்கு கண்ணு தெரியலையா, இப்படித்தான் கரடி மாதிரி வந்து மோதுவியா, அவ அவ உயிர கையில பிடிச்சு ஓடிட்டு இருக்காள் இவன் என்னனா, விளக்கெண்ணெய் மாதிரி வந்து நிக்கிறான் விளக்கெண்ணெய், சுத்தி பார்க்க வேற இடமே கிடைக்கலையா” என மூச்சி விடாமல் அவனை திட்ட, அவனோ யார்ரா இந்த பைத்தியம் என அவளை மேலும் கீழும் பார்த்தான். அவனின் தோள்பட்டை உயரம் கூட இருக்க மாட்டாள் கோகி.

“யார விளக்கெண்ணெய்னு சொன்ன, ஓங்கி ஒரு அரை விட்டேன்னு வச்சுக்கோ உன் முகரை பேந்துரும். ஆளை பாரு, இந்த இருட்டுல நீ இப்படி பேய் மாதிரி ஓடி வருவன்னு  நான் என்ன கனவா கண்டேன் குள்ள கத்திரிக்கா”.

“ஏய் யார பார்த்துடா குள்ள கத்திரிக்காய்ன்னு சொன்ன?”

“டாவா, இங்கே நீ மட்டுதான்டி நிற்க்கிற, உன்னை பார்த்து தான் சொன்னேன்டி. குள்ள கத்திரிக்கா குள்ள கத்திரிக்காய்டிடிடிடி” என சத்தமாக குரல் கொடுக்க,

“உன்னை” என அங்கே கோகி கல்லை தேட, அவளை துரத்திக் கொண்டு வந்தவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் பயந்து அவனின் பின்னால் சென்று நின்றாள்.

“இப்போ எதுக்கு என் பின்னாடி வந்து நிற்கிறிங்க ஹிரோயின் மேடம். அவனுங்களை நான் அடிக்க மாட்டேன். நான் ஒன்னும் ஹீரோ கிடையாது.”

“அதான் எனக்கு தெரியுமே, நீங்க ஒன்னும் ஹீரோ கிடையாது. காமெடிமேன். ஒழுங்கா அவங்களை விரட்டி விடுங்க”

“ஏய் அவனுங்களை பார்த்தியா எப்படி இருக்காங்கன்னு, அங்கே பாரு ஜிம் பாடி மாதிரி இருக்கானுங்க. நான் நோஞ்சான் மாதிரி இருக்கிறேன்”

“திங்கிற சோறு எல்லாம் நீ பனைமரம் வளத்தியில் வளர்றதுக்கு போய்ருக்கும்”

“ஆமாம்மா தாயே!, ஆளை விடு” என அவன் விலக பார்க்க…” ப்ளீஸ் எனக்காக ஹெல்ப் பண்ணுங்களேன், அவங்க எனக்கு யாருன்னு தெரியலை, போகும் போது வாயை பொத்தி கடத்திட்டு போக பார்க்கிறாங்க, ‌ கடத்திட்டு போய் எங்கேயாவது வித்துட்டாங்கன்னா, நான் என்ன பண்றது? நான் பாவம் இல்லையா.” என முகத்தை பச்சகுழந்தைபோல கோகி செய்ய,

“நீ உன் வாயை முதல்ல திறந்து பேசிருந்தால் அவனுங்க உன்னை கடைத்திருக்கவே மாட்டானுங்களே”

“அவனை முறைத்தாள் கோகி.”

“என்ன முறைக்கிற, உதவி கேட்பது இப்படியா கேட்பாங்க,”

“வேற எப்படி கேட்பார்களாம்?”

“பவ்யமாக, மரியாதையா கேட்கனும் குள்ள கத்திரிக்காய்”

“எனக்கெல்லாம் சாதாரணமா பேச வராது, நான் இப்படித்தான் பேசுவேன்”

“நல்லா பேசின போ” என சலித்து கொண்டான் கோகுல்.

“யோவ் இப்ப காப்பாற்றுவியா மாட்டியா?”

“மரியாதை, மரியாதை”

“ப்ளீஸ் சார் கொஞ்சம் காப்பாத்துங்களேன், அவங்களை விரட்டி விடுங்களேன்” என கோகி கெஞ்சுவது போல் பாவ்லா செய்ய,

“அவர்களின் புறம் திரும்பினான், யாருடா நீங்க உங்களை யாருடா அனுப்பி வச்சது”

“ஆமா உன்கிட்ட விலாவரியா அட்ரஸ் கொடுத்திட்டுதான் அடிப்பாங்க” என கோகி நக்கல் செய்ய

“ஏய் நீ என்ன சும்மா சும்மா அடி அடின்ற, அவங்களை பாரு அவங்களை அடிக்க முடியுமா? அவனுங்க ஒன்னா சேர்ந்து என்னை கைமா பண்ணிடுவாங்க”

“அதெல்லாம் பண்ண மாட்டாங்க பாக்க அப்படி இருந்தாங்கன்னா அவங்கள வீக்காதான் இருப்பாங்க. நீ ஒல்லியா இருந்தாலும் ஸ்ட்ராங்கா இருப்ப” என கோகி கோகுலுக்கு பாடம் எடுக்க…

“பரவாயில்லையே நல்லா மோட்டிவேஷன் பண்றியே!”

“நான் நர்ஸ் இல்லையா” என கெத்து காட்டினாள் கோகி…

“ ஓஹ்… நீங்க நர்ஸா சூப்பர். நான் டாக்டர்”

“எதே!”

“என்னை நீ பார்த்தது இல்லையா, ஆனால் நான் உன்னை பார்த்திருக்கேனே”

“என்னை நீ எப்போ பார்த்த, நான் ஏன் உன்னைய பாக்கணும்”

“நீ என்ன பாக்க வேண்டாம் நான் உன்னை பார்த்து இருக்கேன்னு சொன்னேன்” என்றான் கோகுல்.

“என்னை நீ எப்போ பார்த்த?”

“உங்க ஊர் திருவிழாவுல”

“ஓஹ் திருவிழாவுல வர்ற அழகான பொண்ணுங்களை சைட் அடிச்சிட்டு இருந்தியா”

“கண்ணுக்கு அழகா பொண்ணுங்க போகும்போது ரசிக்கிறது தப்பில்லையே. தப்பா தான் நடந்துக்க கூடாது. அந்த அழகான பொண்ணுங்க கூட்டத்துல உன் முகம் எப்படி என் கண்ணுல பட்டதூன்னு இப்போ வரைக்கும் தெரியலை‌.”

“சரிதான். எனக்கு நான் அழகுதான் டாக்டரே”

“நைஸ். நான் இந்த ஊர்ல  பாலா இருக்கான்ல, அவங்க வீட்டுக்கு வந்து இருக்கேன் என் பெயர் கோகுல்” என்றதும் நன்றாக புரிந்து கொண்டால் சமருடன் மெடிக்கல் கேம்புக்காக வந்த டாக்டர்கள்” என்று

நைஸ் மீட்டிங் டாக்டரே,என்னை காப்பாற்ற கடவுளா உன்னை அனுப்பி வச்சிருக்கார்”

 

“நான் ரூம்ல இருக்க போர் அடிக்கிதுன்னு அப்படியே வாக்கிங் வந்தேன் உன்னை காப்பாற்ற வரலை” என்றான் கோகுல்

“டேய் நீங்க ரெண்டு பேரும் பேசறதை முதல்ல விட்டுட்டு, எங்களுக்கு பதில் சொல்லுங்கடா” என்றனர் அடியாட்க்கள் இருவரும்

“ஓஹ் சாரி உங்களை மறந்துட்டேன். என்ன கேட்டிங்க பதில் தானே சொல்லிட்டா போச்சு, என அவர்கள் முன் வந்து நின்று என்ன பதில் சொல்லணும் கேள்வி கேளு பதில் சொல்றேன்” என்றான் கோகுல்

கேள்வியா? என கையிலிருந்த அருவாளை எடுத்து கோகுலை வெட்டப் போக, சட்டென அடியாளின் ஒருவன் மணிக்கட்டில் ஓங்கி குத்த வலியில் துடித்தபடி கீழே விழுந்தான் அவன். “உடம்பு பெருசா இருக்கிறது முக்கியம் இல்லை, ஸ்ட்ராங்கா இருக்கணும் பார்த்தியா, எப்படி நான் அடிச்ச ஒரே அடியில் விழுந்துட்டான்” என கோகுல் சிரிக்க,

அவனை கேவலமாக பார்த்தாள் கோகி.

அவள் பார்வை சென்ற இடத்தை பார்க்க அவன் பின்னால் நின்றிருந்தான் சமர்.

“ஓஹ் அப்போ நான் அடிச்சதில் விழலைய்யா, நான்கூட தீடிர்னு எப்படி இவ்வளவு சக்தி வந்ததுக்கு நினைச்சேன். சமர் வந்தால் சக்தி தானாவே வருமே” என கோகுல் சிரிக்க…

“யோவ் போதும் நீ மொக்கை போட்டது. சமர் அண்ணா தனியா அவனுங்களை அடிக்கிறார். நீயும் போய்யா” என்றதும் கோகுல் கையை கட்டியபடி வேடிக்கை பார்த்தான்.

என்ன டாக்டரே போகாமல் நிற்குற? “அந்த அண்ணா பாவம் இல்லையா”

“அவன் எத்தனை பேர் வந்தாலும் சமாளிப்பான். நீ கவலை படாதே”

அதே நேரம் சமர் இன்னொருவனின் வயிற்றில் குத்த கீழே விழுந்தான் அவன். மூவரையும் அடியில் வெறுத்தான் சமர். ஒருவனின் கையை முறுக்கி முதுக்கு பின் வளைக்க வலியில் துடித்தான் மற்றொருவனின் முகத்தில் குத்த பொலபொலவென இரத்தம் வழிந்தது. மூவரும் தப்பித்தால் போதுமென ஓடினர். சமர் சிறிது தூரம் அவர்கள் பின் சென்றவன் அவர்கள் சென்றுவிட கோகுல் கோகி இருக்கும் இடத்தை நோக்கி வந்தான்‌ சமர்.

கோகுல் சமரிடம் செல்ல போக,

“யோவ் எங்கையா போற பயமா இருக்குல்ல, அந்த அண்ணா வரத்தானே செய்றாங்க” என்றாள் கோகி

“ஏய்!, கொஞ்சம் டீசண்டா பேசு, அது என்ன யோவ், வாடா, போடா மரியாதைனா என்னன்னு தெரியாதா உனக்கு? என கோகுல் உண்மையாவே கோபத்தில் கத்திவிட…

“சாரி சார்” என்றாள் இவ்வளவு நேரம் இருந்த துடுக்குதனத்தை மறைத்து.

“இந்த நேரத்துல, நீ இங்கே என்ன பண்ற” என்றான் சமர்.

‘அவள் வந்த விஷயத்தைகூற, காலம் ரொம்ப கெட்டு போய்டுச்சி, இனிமே தனியா வரவேண்டாம் புரியிதா”

“புரியிதுண்ணா”

“சரி வா, நான் உன்னை வீட்ல கொண்டு விடுறேன்.”

“இல்லண்ணா வேணாம். நானே போய்டுவேன் “

“நீ ஊருக்குள்ள இல்லைம்மா. அவனுங்க உன்னை துரத்தியதில் ஊரைவிட்டு வெளியே நிற்கிற, உன்னை தனியா அனுப்புறதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனால் நானே உன்னை கொண்டு விடுவேன்” என்றதும்…

“சரிண்ணா” என்றாள். அந்த நேரம் சமரின் அப்பாவிடம் இருந்து அழைப்பு வர அதை பார்த்த கோகுல் “நீ பேசு சமர். நான் இந்த பொண்ணை விட்ல விட்டுடுறேன்” என்றான் கோகுல்.

சமர் அழைப்பை ஏற்றவன் தன் அப்பாவிடம் சில நிமிடங்கள் கழித்து பேசுவதாக அழைப்பை துண்டித்தான்.

“இரண்டுபேருமே கோகியை வீட்ல விட்டு போகலாம்” என்றான் சமர்.

சமர் கோகுல் பேசியபடி வர, கோகி அமைதியாக வந்தாள்.

“கோகி இப்போ நடந்த விஷயத்தை” என சமர் ஆரம்பிக்க

“எங்க வீட்ல சொல்லகூடாது சொன்னால் பயந்துடுவாங்க, அதைதானே சொல்ல வந்திங்க அண்ணா என்க”

“முந்திரிகொட்டை வாயை வச்சிட்டு அமைதியா இருக்க மாட்டியா. இன்னும் முழுசா சொல்லலை அதுக்குள்ள அவங்களே அடுத்தவங்க என்ன சொல்ல வாறாங்கன்னு முடிவு பண்ணிடுவாங்க” என கோகுல் திட்ட அவனை எரிப்பது போல பார்த்தவள் சமரிடம் “சொல்லுங்க அண்ணா” என்றாள்.

“இப்போ நடந்த விஷயத்தை ஒன்னும் விடாமல் உங்க வீட்ல சொல்லிடு. அவங்க பயப்படுவாங்கன்னு மறைக்க கூடாது. யார் என்னனு விசாரிப்பாங்க, உனக்கு பாதுகாப்பா இருப்பாங்க. அதனால் உன் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் உன் அப்பா, அம்மாகிட்ட மட்டும் மறைக்க கூடாது புரியிதா”.

“புரியிது அண்ணா.”

“சரி, நான் பாலா கிட்ட நடந்ததை சொல்லி யாராக இருக்கும்னு விசாரிக்க சொல்றேன். நீ பயப்படாமல் தைரியமாக இரு. இதை பற்றி கவலைப்படவேண்டாம்”

சரி என தலையசைத்தாள். பத்து நிமிடத்தில் கோகியின் வீடு வந்தது.

பக்கத்தில் இருந்த செம்பா வீட்டை சமர் பார்த்தான். பக்கத்தில் கோகுல் இருப்பதால் செம்பா தூங்கிவிட்டாள் என சொல்லாமல் நின்றாள்.

 “கோகி இரண்டு ஆண்களுடன் வந்து நிற்பதை பார்த்த ராசாத்தியும் சந்திராவும் பதற, “பயப்பட வேண்டாம்” என நடந்த விஷயத்தை அவர்களுக்கு புரியும்படி எடுத்து சொன்னதும் “ரொம்ப நன்றி தம்பி” என்றனர் சந்திராவும் ராசாத்தியும். நல்லசிவம், செம்பாவும் தூங்கிருந்தனர்‌.

“சரிம்மா, கோகியை கடத்துனவங்க யாருன்னு நாங்க பார்த்துக்றோம். நீங்க அதைப்பற்றி யோசிக்காதிங்க நாங்க வர்றோம்” என சமரும், கோகுலும் கிளம்பினர்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

1 thought on “இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 20”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!