உயிர் 12:
அடுத்த ஒரு வாரத்தில் ஊரிலிருந்து சற்று தூரத்தில் உள்ள இடத்தை மருத்துவமனை கட்டுவதற்காக தேர்ந்தெடுத்து விட்டான்.
துரையின் நிலத்தை விட அதிக பரப்பளவு கொண்டது.
பூமி பூசைக்கான நாளை ஈஸ்வரன் குறித்து விட்டான் . அவன் குறித்த அதே நாளிலே ஆதியும் பூமி பூசைக்கான நாளைக் குறித்தான்.
இடைப்பட்ட பத்து நாட்களில் ஈஸ்வரனை மீனாட்சி பார்க்கவேயில்லை.
அவ்வளவு தூரம் அலைந்து திரிந்து நிலத்தை வாங்கி விட்டான்.
சங்கர பாண்டியனோ,
கோமதியிடமும் மீனாட்சியிடமும் ஈஸ்வரனுடைய பூமி பூசைக்கு செல்லக்கூடாது என்று கறாராகக் கூறிவிட்டார்.
வேறு வழியின்றி இருவரும் ஆதியின் தலைமையில் தொடங்கப்படும் பள்ளிக்கூடத்திற்கானபூமி பூசைக்கு கிளம்பிச் சென்றனர்.
தங்களுக்கும் இதற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்பது போல் நின்றிருந்தார்கள்.
வடிவாம்பாள் தான் முதல் ஆளாக பூசையை துவக்கி வைக்க அடுத்து மயில்வாகனம், சங்கரபாண்டியன், நேஹா என அனைவரும் வந்து மலர் தூவி வணங்கினர்.
மீனாட்சிக்கும் கோமதிக்கும் ஈஸ்வரனது நினைவாகவே இருந்தது.
இங்கோ ஈஸ்வரன் மற்றும் அவனது குடும்பத்தார் பூசையை நெருங்கிய சொந்த பந்தங்கள் இல்லாமல்
நண்பர்கள் மற்றும் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் சிலரை மட்டுமே அழைத்து பூசையை முடித்திருந்தனர்..
இரு நாட்கள் சென்றிருந்தது.
மீனாட்சி ஈஸ்வரனைத் காண வயற்காட்டிற்குச் சென்றாள்.
கயிற்றுக் கட்டிலில் அமர்ந்து கட்டிட வேலைகளை வேகமாக தொடங்குவதற்கான ஏற்பாடுகளை பற்றி கட்டிடப் பொறியாளரிடம் விவாதித்து கொண்டிருந்தான்.
அருகிலேயே புகழனியும் இருந்தாள்.
பேசி முடித்து விட்டு பொறியாளர் கிளம்பினார்.
புகழனியும் ,” சீக்கிரம் ஆரம்பிச்சடலாம்ண்ணே . பணம் எதுவும் பத்தலைன்னா சொல்லுண்ணே… என்னோட நகையும் தர்றேன். அது சும்மாதானே கிடக்கு. அதை பேங்குல வச்சு பணம் வாங்கிக்கலாம். அப்பறமா மீட்டுக்கலாம். “ என்றாள்.
ஈஸ்வரனோ சிரித்தபடி, “ நீயும் உங்கண்ணனை வக்கில்லாதவனா நினைச்சிட்டியா டா… உனக்கு செய்யாம வேற யாருக்குச் செய்யப் போறேன். நீ எதுக்கும் விசனப்படாம இரு. எல்லாத்தையும் அண்ணன் பாத்துப்பேன். வெளியில எங்கனையும் பணம் வாங்க வேண்டாம். புரியுதா…?” என்று அவளது தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான்.
புழனியும் சிரித
“சரிண்ணே…அதை கொஞ்சம் நல்லவிதமா தான் சொல்லேன். கடுகடுன்னு தான் பெரிய வார்த்தையா சொல்லனுமா..? பாவம் மீனாட்சி உன் கூட எப்படிதான் குப்பை கொட்டுப் போவுதோ…?” என சொல்லி முடிப்பதற்குள் அவளை வந்ததை கவனித்து விட்ட புகழனி , “ அடியேய்…மீனு குட்டி உனக்கு ஆயுசு நூறு டி…. கரெக்டா எப்படி உன்னை பத்தி பேசும் போது வர்ற ….வா.. டி ஏன் அங்கனயே நிக்க…? நான் கிளம்புறேன். நீ பேசிட்டு வா…எனக்கு கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணனும். நான் அப்பறமா உன் கிட்ட பேசுறேன் …” என நாசூக்காக அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு சென்றாள்.
ஈஸ்வரன் தலைக்கு கைகளை முட்டுக் கெடுத்துக் கொண்டு படுத்திருந்தான்.
அவனருகே வந்து அமர்ந்து ,” பூமி பூசை நல்லபடியா முடிஞ்சுதா…? ” என்றாள்.
அவனோ எடக்காக ,
“ உங்க வூட்டு ஆளுங்களோட பூமி பூசையெல்லாம் நல்லபடியா முடிச்சி கொடுத்துட்டு வந்துருக்க போல. என்ன தான் இருந்தாலும் நானெல்லாம் அன்னக்காவடி தானே..? எதுக்கு திரும்ப மன்னிப்பு கேக்க வந்துருக்கவ…?” என அவளை குத்திக் காட்டியவாறே சரியாக அவள் வந்திருக்கும் காரணத்தையும் கணித்தான்.
எந்தளவிற்கு அவளை புரிந்து வைத்திருந்தானோ அந்த அளவிற்கு அவளிடம் கடுகடுவென எரிந்து விழுந்தான்.
கண்கள் கலங்கினாலும் மெதுவாக சிரித்தபடியே, “ அதான் நீயே சொல்லுதியே மன்னிப்பு கேக்கன்னு. அதுக்குதேன் வந்துருக்கேன். மன்னிச்சிடு மாமா. அவரு பண்ணுனது தப்புதேன். அவருக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மன்னிச்சிடு மாமா. இப்படி ரெண்டு பேரும் அடிச்சிட்டு இருந்தா என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சி பாரு..உனக்காக மட்டுந்தேன் இந்த உயிரை சுமந்துட்டு இருக்கேன். அதை மட்டும் மனசுல வச்சிக்க…”என்று கூறினாள்.
அவனோ அவளது முகத்தைப் பார்த்தான்.
அதில் பரிதவிப்பும் அவனுக்குண்டான நேசமும் போட்டி போட்டுக் கொண்டு இருந்தது.
இருப்பினும் தனது நிலையை எடுத்துக் கூறி வேண்டிய நிரபந்தத்தினால் ,
“ இங்க பாரு மீனாட்சி… என் குணம் இது தான்.
யாருக்காகவும் என்னை நான் மாத்திக்க மாட்டேன் . இவ்வளவு வருஷத்துல உங்க அப்பா கொஞ்சமாவது மாறியிருப்பாருன்னு நினைச்சேன். ஆனா கொஞ்சம் கூட மாறல . நீ என் மேல வச்சிருக்குற பாசம் உண்மை தான். அந்த விஷயத்துல என்னைய போல குடுத்து வச்சவன் யாருமில்லை. ஆனா என்னால சில விஷயங்களை யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது. புரிஞ்சிக்க…. வசதியில வேணா நாங்க குறைவா இருக்கலாம். ஆனா அன்புல என்னிக்குமே உசந்தவய்ங்க தான். எங்களுக்கு இருக்குற ஒரே சொத்து எங்களோட மானம் மருவாதி தான் . அதை மட்டும் விட்டுட சொல்லாத. கவலைப்படாத உனக்காக ஒரே ஒரு தரம் உங்க அப்பா கிட்ட நான் வந்து பேசுறேன். அதுவும் உன்னையே பொண்ணு கேட்க….” என்றவுடன் அவளது முகம் பூவாக மலர்ந்தது.
ஆனால் அவன் கூறிய அடுத்த வார்த்தையில் சுணங்கியது…
அவனோ ,”உங்க அப்பா என்கிட்ட வேணாம்….
எங்கப்பா கிட்ட மன்னிப்பு கேட்கச் சொல்லு…. அதுவும் இந்த ஊர் சனங்க முன்னாடி. அடுத்த நிமிசம் என் மீனாட்சியை என் கிட்ட கொடுங்கன்னு நெஞ்சை நிமித்திட்டு கேக்குறேன். “ என்றான்.
அவளுக்கோ கோபம் வந்து விட்டது.
“ என்னது… எங்க அப்பா மன்னிப்பு கேக்கனுமா…? இதெல்லாம் நடக்கிற காரியமா..?” என காட்டமாக கேட்டாள்.
அவனோ சிரித்தபடி, “தப்பு பண்ணுனவங்க தான் மன்னிப்பு கேக்கனும் மீனாட்சி. இதுல இம்புட்டு கோபப்பட என்ன இருக்குது…? நான் சொல்றது எனக்கு தப்பா தெரியலை. உனக்காக எம்புட்டு வருசமானலும் காத்துக் கிடக்கேன் . வெயில் ஏறிட்டே இருக்குது. சீக்கிரம் கிளம்பு மா…” என்றான்.
பெண்ணவளோ மனம் வெறுத்துப் போனாள்.
ஆண்கள் யாருக்குமே
பெண்ணின் மெல்லிய உணர்வுகள் புரிவதேயில்லை.
சற்று நிதானித்தவளுக்கு அவன் தரப்பு நியாயமும் புரிந்தது.
எனவே எப்பாடு பட்டாவது தந்தையை இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் . நாமும் கொஞ்சமாவது போராட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க “ சரி மாமா…எங்க அப்பா மன்னிப்பு கண்டிப்பா கேப்பாரு வாரேன் மாமா…” என்று கூறி விட்டு திரும்பி பார்க்காமல் வரப்பில் நடந்தாள் மீனாட்சி.
அவளது மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
ஏதோ யோசனையுடன் நடந்தவள் எதிரே வந்தவனை கவனியாமல் அவன் மீதே மோதி இடப்பக்க வரப்பில் விழப்போனாள்.
அவளது இடையை பிடித்துத் தாங்கினான் ஆதி.
“தாங்கியது யாரென..?” விதிர்த்து போய் நிமிர்ந்தாள் மீனாட்சி.
ஆதியே தான் … அவளது மதி வதனத்தையே காதல் பொங்க பார்த்திருந்தான்.
திக்கென்றது அவளுக்கு.
“ என்ன பார்வை இது…?” என்ற எண்ணம் தோன்றி அவளை பயமுறுத்தியது.
சட்டென அவனை விட்டு விலகினாள்.
தூரத்தில் இருந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரனோ தாவி எழுந்து அவளை நோக்கி ஓடினான்.
அவளை தன் பக்கமாக இழுத்துக் கொண்டு ,” எம்புட்டு வருசமா இங்கன வந்து போறவ …கண்ணை என்ன புடதியிலா வச்சுட்டு போற…?பார்த்து நேரா போ…” என அதட்டினான்.
மீனாட்சிக்கு சற்று முன்பிருந்த இருந்த மனக்கலக்கம் நீங்கியது போல் இருந்தது. ஈஸ்வரன் அவளைத் திட்டியது கூட அவளுக்கு தேனாக இனித்தது.
ஆனால் ஆதிக்கோ கடுப்பனாது. மீனாட்சியையே பின் தொடர்ககன்றானே என்றகோபம். புத்திக்கு தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் மனம் அதனை ஏற்க மறுத்தது.
மீனாட்சி சற்று தெளிந்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் ஆதியின் அருகில் வந்து அவனது சட்டையை சரி செய்வது போல் நீவி விட்டவிறே , “நீங்க இந்த ஊருக்கு விருந்தாளியா வந்துருக்கீக…. அதனால வந்த வேலையை மட்டும் பாத்துட்டு போயிட்டே இருக்கனும். அடுத்தவன் சொத்துக்கு கண்ணு வைக்கக் கூடாது. நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கேன். பாத்து நடந்துக்குங்க…” என்று கூறி விட்டு மீனாட்சி சென்ற திசையிலேயே சென்றான் ஈஸ்வரன்.
ஆதியிடம் என்னதான் தெனாவெட்டாக ஈஸ்வரன் பேசினாலும் ஆதியின் பார்வை மீனாட்சியை வண்டாக மொய்த்ததை கண்டு கொண்டான் ஈஸ்வரன்.
முதன்முறையாக கலக்கம் தோன்றியது ஈஸ்வரனுக்கு.
எதற்கும் கலங்காதவனது இரும்பை ஒத்த மனதினுள் நெருப்பு துண்டுகளாக ஆதியின் வருகை.
ஆதியோ தனது தாடியை நீவியபடி ஏதோ திட்டத்துடன் அடுத்த ஆட்டத்துக்கு தயாரானான்.
.