உயிர் போல காப்பேன்-15

5
(14)

அத்தியாயம்-15
ஆஸ்வதி இப்போது நடந்தது அனைத்தும் கனவா என்பது போல குழப்பத்தில் யோசிக்க… ஆதி அவளது குழப்ப முகத்தை பார்த்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டான் அவனும் ஒரு நிமிடம் தன்னவளின் அருகில் தன் வசத்தை இழந்து தான் போனான்.. ஆனால் அவனின் குறிக்கோள் அவனை மேலே செல்ல விடாமல் செய்துவிட்டது..
அவனுக்கும் தன்னவளுடன். அதும் தான் இத்தனை வருடம் மனதில் நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் காதல் கண்ணியவள் தன் அருகில் வந்தால் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனை செய்துதான் வைத்திருந்தான்.. ஆனால் அப்படி நினைக்கும் போது தான் இப்படி பட்ட சூழலில் சிக்குவான் என்று அவன் அப்போது அறிந்திருக்கவில்லையே..
“ஏஞ்சல்.. எனக்கு தூக்கம் வருது..”என்றான் சிணுங்கியவாறு.. ஆஸ்வதியின் இடையை இறுக்கப்பற்றிக்கொண்டு அவள் மீதே படுத்துவிட்டான்.. அதனை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆஸ்வதி அதிர்ச்சியுடன் ஆதியை பார்க்க….. அவனோ. தனக்கு மட்டும் சொந்தமான இடம் என்ற நினைப்பிலோ. இல்லை பல நாட்களுக்கு பிறகு கிடைத்த நிம்மதியிலோ அவள் இடையிலே தலை வைத்து ஆழ்ந்த நித்திரைக்கு சென்றுவிட்டான்.. ஆனால் ஆஸ்வதிக்கு தான் உறக்கமே வரவில்லை..
இன்று ஆதியின் நடவடிக்கைகளை பார்க்கும் போது ஆஸ்வதிக்கு ஆதியின் மனநிலை பற்றி சந்தேகம் வந்துவிட்டது கீழே டைனிங் டேபிளில் ஆதி தன் இடையை பிடித்துக்கொண்டு அவளை பார்த்த ஆழமான பார்வை.. அதும் கண்கள் முழுதும் காதல் ததும்பும் பார்வை அது அதில் ஆஸ்வதி வீழ்ந்து போனாள் என்று சொன்னால் மிகை ஆகாது.
இங்கு அறைக்கு வந்ததில் இருந்து நடந்தது அனைத்துமே ஆஸ்வதிக்கு நியாபகம் இருந்தது. அதும் அவளை முழு காதலுடன் கிறக்கமாக அழைத்த ஸ்வா.. என்ற அழைப்பு.. அதை இப்போது நினைத்தாலும் ஆஸ்வதி உடல் சிலிர்த்து போனது.. இப்படி யாரும் அவளை அழைத்தது இல்லை இதுவே முதல் முறை.. அதும் தன்னவன் தன்னை இப்படி அழைத்தது அவள் மனதிற்கு குதுகலமாக இருந்தது.. ஆனால் அடுத்த நொடியே ஆதியின் மாற்றம் அவளை இம்சித்தது.
ஆதி நொடியில் மாறியது ஆஸ்வதிக்கு கொஞ்சம் சந்தேகமாக தான் இருந்தது.. ஆனால் காலையில் நடந்ததை வைத்து பார்க்கும் போது அது அவனின் மனநிலை மாற்றமாக கூட இருக்கலாம் என்றே தோன்றியது.
ஆதியின் மூச்சிக்காற்று ஆஸ்வதியின் வெற்றிடையில் படிய….. அதில் ஆஸ்வதி தடுமாறி போனாள். அவளால் ஒழுங்காக மூச்சை கூட இழுத்துவிட முடியவில்லை.. எங்கே தான் மூச்சை இழுத்துவிட்டாள் ஆதி கண் விழித்துவிடுவானோ.. என்று சிரமப்பட்டு மூச்சை வெளிவிட்டுக்கொண்டு இருந்தாள். ஆதி தன் முழு எடையும் அவள் மீது விழாமல் அவளின் இருபக்கமும் கால்களால் கட்டிலில் சப்போர்ட் கொடுத்து தான் அவள் இடையை அணைத்தபடி படித்திருந்தான்.. அதனால் அவளுக்கு கொஞ்சம் இலகுவாக இருந்தது..
இங்கு அனிஷா வெளியில் வந்து தனக்காக காரில் காத்துக்கொண்டு இருக்கும் விதுனை கண்களில் காதல் வழிய பார்த்தாள். ஆனால் விதுன் காரில் உட்கார்ந்தவாறு எதோ தீவிரமாக யோசனை செய்துக்கொண்டு இருந்தான்.. அனிஷா காரின் கதவை திறந்து விதுனின் அருகில் உட்கார….. அவள் வந்ததை அப்போது தான் உணர்ந்த விதுன் அவளை பார்க்காமல் காரை ஸ்டார்ட் செய்தான்.. இதில் அனியின் முகம் சுருங்க….. அதை விதுன் காண தான் செய்தான்,. அவனுக்கு அவளில் முகம் சுருக்கல் வலிக்கதான் செய்தது.. ஆனால் விதுன் அவளிடம் நெருங்க முடியாத சூழலில் இருக்கிறான்.
அனியோ. விதுனை தான் பார்த்துக்கொண்டு வந்தாள்.. அவளுக்கும் விதுனை சிறு வயதில் இருந்தே பிடிக்கும். அவனின் அமைதி.. அதும் அவன் ஆதியுடன் மட்டும் நெருக்கமாக இருப்பதை பார்த்து அனி அவனின் மீது விருப்பம் கொண்டாள்..
அதும் அவனின் மீது காதல் அது இப்போது வந்ததில்லை சிறு வயதில் இருந்து.. ஆதியை தவிர விதுனை அந்த வீட்டில் யாருக்கும் பிடிக்காது ஆதியின் அப்பாவிற்கு விதுன் இன்னொரு மகனாக நினைத்தார் ஆனால் அனிக்கு என்னவோ விதுனை பிடிக்கவில்லை. அதும் அவன் ஆதியிடம் எப்போதும் சேர்ந்தே இருப்பது அவளுக்கு எரிச்சலை தான் தரும். அப்போதெல்லாம் அவள் விதுனை முறைத்துக்கொண்டே சுற்றுவாள் விதுனும் அவள் பார்வையை கண்டுக்கொண்டாந்தான் ஆனால் அவளது சிறுபிள்ளை தனமான முறைப்பு அவனை புன்னகைக்க தான் வைத்தது
ஆதி இல்லாத நேரம் எல்லாம் அனி விதுனை திட்டிக்கொண்டே தான் சுற்றுவாள்.. அதும் இஷானா விதுனை பற்றி தவறாக அனியின் மனதில் பதித்துவிட்டாள்.”அவங்க உன் அண்ணன ஏமாத்துறாங்க அனி.. படிக்க வைக்க காசு இல்ல அதுக்கு காசு இல்ல இதுக்கு காசு இல்லனு ஏமாத்தி பாரு ஒன்னும் இல்லாத அவனும் ஆதிக்கூட கான்வென்ட் ஸ்கூல ஜாய்ன் பண்ணிட்டான். இப்டியே அவன் உன் அண்ண… அப்பாவ ஏமாத்தி எல்லாத்தையும் பறிச்சிடுவாங்க பாரு.”என்றாள் விதுன் ஆதியின் நட்பில் உள்ளம் வஞ்சமாக
அதனை உணராத அனியும் தன் அண்ணனை ஏமாற்றும் விதுனை வெறுக்க ஆரம்பித்தாள் அன்று அப்படிதான். ஆதிக்கு அன்று 16ஆம் வயது பிறந்தநாள் வீட்டில் பெரிதாக பர்த்டே பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. அது அந்த குடும்பத்தின் வழக்கம்.. யாருக்கு பிறந்தநாள் என்றாலும் வீட்டில் சிறப்பாக கொண்டாடுவார்கள்.. அது போல தான் அன்றும் வீட்டின் வெளியில் தோட்டத்தில் அழகாக குடில் அமைத்து.. வண்ண பூக்களால் அலங்கரித்து.. சிறிதாக மேடை அமைத்து பலூன்கள் கட்டப்பட்டு வீடே ஜொலித்தது.
ஆதிக்கும் அழகான இளம் பிங்க் நிற சர்வானியை அவன் தந்தை அவனுக்கு கொடுத்து அணிந்து வர சொன்னார் அவனும் அதனை அழகாக அணிந்துக்கொண்டு மிடுக்காக படிகளில் இறங்கி வந்தான் பின் தன் உயிர் நண்பன் விதுனை பார்க்க…. அவனோ அவன் அப்பாவிற்கு உதவியாக வேலை செய்துக்கொண்டு இருந்தான்.. அதனை பார்த்த ஆதி புன்னகைத்தான். இது வருடம் வருடம் நடப்பது தான்..
ஆதி “இந்த வேலையிலா நீ செய்யனும்னு என்ன இருக்கு. அதா வேல செய்ய அவ்வளவு ஆள் இருக்காங்களே…”என்று கோவமாக கேட்க…..
அதற்கு விதுன் புன்னகையுடன்…”இல்ல ஆதித் எனக்கு எவ்வளவோ உதவிகள் செஞ்சிருக்க நீ ஏன் இதுவர ஒரு வேல கூட என்ன செய்ய விட்டது இல்லை..ஆனா என் நண்பனோட பிறந்தநாளுக்கான ஏற்பாட நான் தான் செய்வேன் அது இன்னிக்கினு இல்ல நா பெரிய டாக்டர் ஆனாலும் இப்டிதான் பண்ணுவேன். நீ அதுல தலையிட கூடாது…”என்று கட்டளையாக கூற…. அதற்கு மேல் ஆதியால் அவனை கட்டாயப்படுத்த முடியவில்லை
அதில் இருந்து ஆதி விதுனின் இந்த விசுவாசத்தை கண்டு பூரித்துள்ளான். இன்றும் அப்படிதான் ஆதி விதுனை கவனித்துக்கொண்டிருக்க….. அப்போது அந்த பக்கமாக சென்ற அனி விதுனை முறைத்துக்கொண்டே அவன் பக்கம் வந்தாள்.. அதை பார்த்த விதுன் அவளை என்ன என்பது போல பார்க்க…..
“உனக்கு கொஞ்சமாச்சும் எதாவது இருக்கா.. நா தான் எங்க அண்ண கூட இருந்து விலகுனு சொல்றேன். நீ என்னனா கேட்காம உன் இஷ்டம் போல அவன் பின்னாடியே சுத்துற… என்ன அவன எங்கிட்ட இருந்து பிரிக்க பார்க்கிறீயா.”என்றாள் 10 வயதே ஆன அனி.
அவள் பேசுவதை கேட்ட விதுன் அவளை பார்த்து புன்னகைக்க……அதில் கடுப்பானவள்.
“உன்ன பத்தி தெரியும்,. நீ எங்க கிட்ட இருக்க பணத்தலா புடிகிட்டு எங்கள ஏமாத்ததானே பாக்குற…. அதுக்கு உன்ன நா விடமாட்டேன்..”என்று அனி கோவத்தில் பக்கத்தில் அலங்காரத்திற்கு என்று வைக்கப்பட்ட பூஜாடியை தள்ளிவிட அது சரியாக விதுனின் காலில் விழுந்தது..
அதில்…”ஆஆஆ….என்று வலியில் துடித்துப்போனான் விதுன் அதை பார்த்து அனி கூட பயந்து போனாள். அவள் எதோ கோவத்தில் செய்ய போக அது இவ்வளவு பெரிதாக முடியும் என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை.. அனி விதுனின் முகத்தை அதிர்ந்து பார்க்க….. அவன் முகம் வலியில் சுருங்கி இருந்தது.. அவள் எதோ சொல்ல வர…..
அதற்குள் ஆதி ஓடிவந்துவிட்டான்…தூரத்தில் இருந்து அனி பேசுவதை கேட்டவன் அனியின் மீது கோவத்தில் அவளை நெருங்குவதற்குள் அனி இப்படி செய்துவிட்டாள் ஆதியை பார்த்த அனி பயத்தில் நடுங்க.. அதை கண்ட விதுனின் மனம் அசைந்து கொடுத்தது
“ஆதி அது. நா தான் அத தனியா தூக்குறேனு கால போட்டு உடச்சிட்டேன்டா..”என்றான் தலையை குனிந்தவாறு…ஏனென்றால் விதுன் இதுவரை ஆதியிடம் பொய் சொன்னதே இல்லை.இதுதான் முதல் தரம்.
அவன் சொன்னதை கேட்ட ஆதி விதுனை அதிர்ச்சியாக பார்த்தான்.. அவனுக்கு தான் விதுனை பற்றி தெரியுமே.. அவன் தன்னிடம் பொய் சொல்லிவிட்டான் என்பதே ஆதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது இவர்களை விட அனி தான் அதிகம் அதிர்ந்துவிட்டாள்.. ஏன் தன்னை இவன் மாட்டிவிடவில்லை என்பதே அவளுக்கு அதிர்ச்சியாகவும் குற்றவுணர்ச்சியாகவும் இருந்தது அப்போது தான் அவள் விதுனை பற்றி அறிந்துக்கொண்டாள். ஆதி அவனது அதிர்ச்சியை ஒரம் கட்டிவிட்டு..
“விதுன் காலுல ரத்தம் வருதுடா.”என்றான் விதுன் காலை பார்த்தவாறு அவன் அருகில் ஓட…
அதில் அனியும் அதிர்ந்து விதுனின் காலை பார்க்க… விதுனால் வலி தாங்க முடியவில்லை.. நிற்கவே தடுமாற…. உடனே ஆதி அவனை தாங்கிக்கொண்டான்..
“வாடா நாம ஹாஸ்பிட்டல் போலாம்..”என்றான் விதுனின் அப்பாவை சத்தமாக கூப்பிட்டவாறே
“டேய் ஆதி இன்னிக்கி உனக்கு பிறந்த நாள் டா இந்த காயம்லா சின்னதுதான். வலிகூட எனக்கு அவ்வளவா இல்லை.. நா பாத்துக்குறேன். நீ போய் பார்ட்டிய எஞ்சாய் பண்றா.”என்றான் வலியில் முகம் சுருக்கியவாறு
அதிலே அவன் வலியை பற்றி தெரிந்தவன்.”டேய் உன்ன விட எனக்கு ஒன்னும் இந்த பார்ட்டி முக்கியம் இல்லடா வா போலாம்..”என்க….
“இல்லடா ஆதி இது முக்கியம் தான்.. தாத்தா உனக்காக எவ்ளோ ஏற்பாடு பண்ணிருக்காங்க….. போடா நீ..”என்றவன் தன் அப்பா ஓடி வரவும் அவரிடமும் ஆதியிடம் சொன்னது போல காலில் போட்டுக்கொண்டேன் என்று சொன்னவன் தன் தந்தையை பிடித்தவாறே மருத்துவமனை சென்றான்.. ஆதி எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவன் வர விதுன் அனுமதிக்கவில்லை.. விதுனின் அப்பாவும் விதுன் சொன்னதையே சொல்லி ஆதியை உள்ளே செல்லுமாறு சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்
ஆதி அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவன் தன் அருகில் அதிர்ச்சியாக இன்னும் நிற்கும் அனியை திரும்பி பார்த்தான். அதை பார்த்த அனி பயந்து போனாள்.. ஆனால் ஆதி அவளை அழுத்தமாக பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.. அனிக்கு தான் வருத்தமாக போய்விட்டது. தன் அண்ணன் தன்னை திட்டிருந்தால் கூட அனி மறந்திருப்பாள். ஆனால் பேசாமல் போனது அனிக்கு கவலையாக இருந்தது.
பின் பார்ட்டி முடிந்து அனைத்து விருந்தினர்களும் அங்கிருந்து சென்றுவிட ஆதி மட்டும் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தான்.. அவன் அப்பா அவனின் முகம் வாட்டமாக இருப்பதை கண்டு என்னவென்று கேட்க ஆதி சொல்ல மறுத்துவிட்டான்…அவரும் அவனே சரி ஆகிவிடுவான் என்று விட்டுவிட்டனர் ஆதி எப்போதும் ப்ரேம்.இஷானாவிடம் இருந்து விலகி தான் இருப்பான்.. அவர்களிடம் மட்டும் இல்ல அனைவரிடமும் சின்ன ஒதுக்கம் இருக்கும். அவன் நன்றாக பேசக்கூடிய நபர்கள் தாத்தா.. அவன் அப்பா அனி. விதுனிடம் மட்டும் தான் அதனால் அவன் மாற்றத்தை பெரிதாக கண்டுக்கொள்ள அங்கு யாரும் இல்லை
அனிதான் அவன் பின்னாலே சுற்றினாள். ஆனால் ஆதி அவளை கண்டுக்கொள்லவில்லை.
பின் அன்று இரவே ஆதி அனுவை அழைத்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க அதில் அனி அதிர்ந்துவிட்டாள்..
“ம்ம்ம் நீ தோட்டத்துல நீ விதுன்ட்ட பேசுனதையும் கேட்டேன்.. அவன் காலுல தட்டிவிட்டு அடிப்பட வைச்சதையும் பாத்தேன்.. ஏன் இப்டி பண்ணுன அனி…”என்றான் கோவமாக
அதில் நடுங்கியவாறே. தன் மனதில் இருப்பதையும் இஷானா சொன்னதையும் சொல்ல….. அதில் ஆதி அனுவின் அருகில் வந்து உட்கார்ந்து அவள் தலையை வருடியவாறு..
“அதலாம் இல்லடா விதுன் என் உயிர் நண்பன்.. நீ என் தங்கை.. அவன் மட்டும் எனக்கும் முக்கியம் இல்ல….. அவனும் தான் அப்டினா அதுல என் செல்ல தங்கச்சியும் தான் இருக்கா. எனக்கு இருக்கறது ஒரே தங்கை தான். யார் சொல்றதையும் கேட்காத….”என்றான் அவளை அணைத்தவாறு. அதில் அவ்வளவு நேரம் பயத்தில் இருந்தவள் கொஞ்சம் தெளிந்தாள்.. சரி என்று அவனிடம் தலை ஆட்ட….
“அண்ணா விதுன பாக்க கூட்டிட்டு போறீயா.. நா சாரி சொல்லனும்…”என்றாள்..
அதில் புன்னகைத்தவன்…”அவனுக்கு அடிப்பட்டதுல கொஞ்சம் பீவர் வந்துட்டாம்.. இன்னிக்கி ஒரு நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்க சொல்லிருக்காங்களாம்.. நாளைக்கு வந்ததும் பாக்கலாம்.. நீ போய் படு சரியா போ…”என்றான் ஆதி
அதில் அனியும் சரி என்று தலை ஆட்டிவிட்டு தன் அறைக்கு செல்ல….. அவளுக்கு கொஞ்சம் கூட உறக்கமே வரவில்லை.அவள் கண் மூடினால் விதுனின் வலி நிறைந்த முகம் தான் அவளுக்கு நினைவில் வந்தது. அதும் அவன் காலில் வந்த ரத்தம் வேறு அவளை இம்சித்தது.எப்போதடா அவனை பார்ப்போம் மன்னிப்பு கேட்போம் என்றே இருந்தது..
காலையிலும் விடிந்தது விதுன் காலில் கட்டுடன் வர அனி இரவு முழுவதும் முழித்திருந்து விதுன் வருகிறானா என்று வாசலையே பார்த்துக்கொண்டிருக்க…. அப்போது விதுன் உள்ளே வருவது தெரிந்து அவனிடம் ஓடினாள்.. அவன் காலின் வலி அவன் முகத்தில் தெரிந்தது.. அதை பார்த்து இன்னும் வருந்தியவள். அவன் முகம் பார்க்க……விதுன் அப்போது தான் அவளை பார்த்தான்.. அவன் முகம் எந்த உணர்வும் காட்டாமல் இருக்க….
“அது விதுன் சாரி..”என்று அனி தலை குனிந்தவாறு சொல்ல…..
“பரவால…..”என்று பட்டேன்று சொன்னவன் தன் வீட்டினை நோக்கி மெல்ல நடந்தான் அதில் அனி தான் என்னவென்று புரியாமல் போகும் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அதன் பின் விதுன் அனியே அவனிடம் பேச வந்தாலும் அவன் விலகி போக ஆரம்பித்தான் இதில் அனிதான் தவித்து போனாள்.. இப்படியே நாட்கள் போக இரண்டு வருடத்தில் விதுன் மருத்துவம் படிக்க பூனே போய்விட்டான்.. கடைசியாக இவளிடம் சொல்லாமலே சென்றுவிட்டான்
இவளுக்கு தான் விதுனின் நியாபகமாகவே இருந்தது.. இரவு தூங்கும்போது கூட அவன் வலி நிறைந்த முகம் நியாபகத்தில் வந்து அனியை வாட்டும். பின் அந்த முகம் மாறி அப்படியே புன்னகை முகமாக அவள் மனதில் பதிந்துவிட்டது. இப்படியாக விதுன் மருத்துவம் மூன்றாம் வருடம் படிக்கும் போது அவன் அப்பா தவறிவிட அதற்கு வந்தவனை பார்த்து அனி மயங்கிதான் போனாள்..
18வயதில் போய் 21வயதில் வர அவனின் கம்பீர அழகில் அந்த 16வயது பெண் மயங்கி போனாள்…அவனின் கம்பீரம் அவளை அசைத்தது. அதும் அவன் இவளை கண்டுக்கொள்ளாமல் போனது இவளை இம்சித்தது அவன் அனியின் மனதில் பதிந்து போனான்.பின் ஆதிக்கு இவ்வாறு ஆனதும் தான் அவனை திரும்ப பார்த்தாள். அவன் இன்னும் அப்படிதான் இவளை கண்டுக்கொள்ளவில்லை இவள் தான் அவனை உருகி காதலிக்கிறாள். ஆம் அனி அவனை காதலிக்கிறாள். இதனை அவன் அப்பா இறந்த போது வந்ததும் தான் உணர்ந்தாள்..
இப்போது விதுன் காரை அமைதியாக ஓட்ட…. அனியால் தான் அவனை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவனை பார்த்தவாறே இருக்க விதுன் பல்லை கடித்துக்கொண்டான்
“இப்போ ஏன் என்ன பார்த்துட்டே இருக்கீங்க அனிஷா மேடம்..”என்க
அதில் அனி மனம் வலித்தது.”விது..”என்று எதோ பேச வர…..
“என்ன விதுனு சொல்ல ஆதித்க்கு மட்டும் தான் உரிமை இருக்கு கண்டவங்களும் என்னை அப்டி கூப்ட நா அலோ பண்ணமாட்டேன்.”என்றான் கோவத்தில் இறுகிய குரலில்.
அதில் அனி அவனை அதிர்ந்து பார்த்தாள்.நா கண்டவளா என்று அவள் மனம் துடிக்க… கண்கள் தானாக கலங்கியது.
“நா கண்டவளா விது…”என்றாள்.
“பின்ன இல்லையா. என்னை படிக்க வச்ச முதலாளியோட பொண்ணுன்ற ஒரே உரிமை மட்டும் தான் இருக்கு…அதும் அப்போ.இப்போ கண்டவங்கதான்..”என்றான் முகத்தை நக்கலாக வைத்துக்கொண்டு.
அதில் அனி மனம் துடிக்க…. அவனை பார்க்காமல் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு.. கண்ணீரை அடக்க முயன்றாள். அதனை ஓரக்கண்ணால் பார்த்த விதுன் முகம் வேதனையில் சுருங்கியது. அவன் அனியின் காலேஜ் வாசலில் காரை நிறுத்த அனி அவனை திரும்பிக்கூட பார்க்காமல் உள்ளே சென்றுவிட்டாள் அதனை பார்த்த விதுன் முகம் கசங்கி,,,, அவன் கைகள் ஸ்டேரிங்கை அழுத்தமாக பற்றி இருந்தது..
இங்கு ஆதியின் அறையில் இப்படியாக ஆஸ்வதி அரைமணி நேரம் இருக்க….. ஆதி தூக்கத்தில் அவளது இடையின் பிடியை தளர்த்த….. அதில் மூச்சை இழுத்துவிட்டு ஆஸ்வதி.. இன்னும் இங்கையே இருந்தால் சரி வராது.. மதியம் சமைக்க வேண்டும் என்று நியாபகம் வர….. மெதுவாக ஆதியை தன் அருகில் படுக்க வைத்தாள்.. அதில் ஆதி கொஞ்சம் அசைய….. அவனது நெஞ்சில் கை வைத்து குழந்தைகளுக்கு தட்டிக்கொடுப்பது போல அழகாக மென்மையாக தட்டிக்கொடுத்தாள்…அதில் ஆதி மீண்டும் தன் தூக்கத்தை தொடர….. ஆஸ்வதி மெதுவாக எழுந்து அறையை விட்டு வெளியில் வந்தாள்.
ஆஸ்வதி நேராக கிட்சன் செல்ல….. அங்கு வினிஜா மதியத்திற்கு காய்கறி அரிந்துக்கொண்டு இருந்தார்.. அவரை பார்த்ததும் ஆஸ்வதி மனதில் காலை வினிஜா ரகசியமாக எதோ பேசிக்கொண்டு இருந்தது நினைவில் வர….. அவள் முகம் யோசனையில் சுருங்கியது..
வினிஜா ஆஸ்வதியை அப்போதுதான் பார்த்தார் அவர் முகத்தில் அப்படி ஒரு கடுப்பு. அதை ஆஸ்வதியும் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள். ஆஸ்வதியின் மனதில் இவருக்கு நம்ம மேல ஏன் இவ்வளவு கோவம்.. என்று தான் நினைக்க தோன்றியது..பின் அதனை சட்டை செய்யாமல் வினிஜாவிடம் மதியம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டு செய்ய ஆரம்பித்தாள். அவள் செய்வதை அனைத்தையும் பார்த்த வினிஜாவே ஆச்சரியமாக ஆஸ்வதியை பார்த்தார்.. அவளது சமையல் அவ்வளவு பக்குவமாக இருந்தது.. இவ்வளவு வருடம் இந்த வேலையை தான் வினிஜாவும் பார்த்தார் ஆனால் அவரிடம் இல்லாத பக்குவம் கூட ஆஸ்வதியிடம் இருந்தது இதை எல்லாம் பார்த்து தான் வினிஜாவின் ஆஸ்வதியின் மேலான பார்வை கொஞ்சம் மாறியது..
மதிய உணவு அனைத்தையும் முடித்துவிட்டு ஆஸ்வதியும் வினிஜாவும் அனைத்தையும் டேபிளில் வைக்க….. அப்போது பெரியவர் வந்துவிட்டார். ஆனால் அவரது முகம் சரி இல்லாமல் இருந்தது. எதோ குழப்பத்தில் இருப்பது போல இருக்க…. ஆஸ்வதி அவரது முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள். பின் டேபிளில் இருந்த க்ளாஸில் தண்ணீர் ஊற்றி தாத்தாவிடும் கொண்டு போய் கொடுத்தாள்
இதனை பார்த்த வினிஜா “ம்ம் பெரியவர் தேர்வு தப்பா போல…..”என்று மனதில் நினைத்துகொண்டார்..
தனக்கு எதிரில் நீட்டப்பட்ட க்ளாஸை பார்த்தவர் நிமிர்ந்து ஆஸ்வதியை பார்க்க…. அவள் அழகிய புன்னகையுடன் “குடிங்க தாத்தா.”என்றாள்.. அதில் தாத்தாவும் கொஞ்சம் தன்னை சமாளித்துக்கொண்டு புன்னகையுடன் வாங்கி குடித்தார்.. பின் ஆஸ்வதி அவரை பார்த்துக்கொண்டே நிற்க….
“ப்ச். ஃபேக்டரில கொஞ்சம் பிரச்சனைமா அதா கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்…”என்றார்.
“மாத்திரை எதும் போடுறீங்களா தாத்தா.”என்றாள்
“இல்லமா. இப்பொ கொஞ்சம் பரவால…..என்று நிறுத்தியவர்…”மா ஆஸ்வதி கொஞ்சம் ஆபிஸ் ரூம் வர வரியாமா.. உன்ட கொஞ்சம் பேசனும்…”என்றார்
ஆஸ்வதியும் யோசனையுடன் தன்னை சுற்றி பார்க்க…. அங்கு யாரும் இல்லை “அப்புறம் ஏன் தாத்தா நம்மள தனியா கூப்டுறாங்க..”என்று திரும்ப சுற்றி பார்க்க.. கிடசன் மறைவில் இருந்து வினிஜா தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தார்.. அதை பார்த்த ஆஸ்வதி திடுக்கிட்டு போனாள்…

(வருவாள்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!