அத்தியாயம்-18 “ஏஞ்சல் நா இங்க இருக்கேன்.”என்று குரல் வர…. அந்த குரல் வரும் திசை பார்க்க ஆஸ்வதி செல்ல….. அது அறையின் பால்கனி.. அங்கு அழகாக பூச்செடியால் அலங்கரித்து வைத்திருக்கும். பால்கனியை உரசியவாறு ஒரு மரம் அழகாக வளைந்து வளர்ந்திருக்கும் அந்த மரத்தில் இருந்து தான் சத்தம் வந்தது. ஆஸ்வதி சுற்றி முற்றி தேட….. “ஏஞ்சல் இங்க இங்கப்பாரு…”என்ற குரலில் ஆஸ்வதியின் பார்வை உயர…. அந்த மரத்தின் உச்சியில் தான் ஆதி நின்றுக்கொண்டிருந்தான் அதனை பார்த்த ஆஸ்வதி இதயம் நின்று துடித்தது அந்த உயரத்தில் இருந்து கீழே விழுந்தால் கண்டிப்பாக மரணம் நிச்சயம் அதை மிரட்சியுடன் பார்த்த ஆஸ்வதி…”ஆதி கீ.. கீழே இறங்குங்க……ப்ளீஸ்…அங்க ஏன் போனீங்க….இறங்கி வாங்க… ”என்றாள் திக்கி திணறியவாறு.. அதில் ஆதியின் கண்கள் அவளை அழுத்தமாக ஒரு நிமிடம் பார்த்து முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு.. “முடியாதே முடியாதே ஏஞ்சல் என்னை பிடி பார்ப்போம்…”என்றான் கையை கிளையில் இருந்து எடுத்துவிட்டு காலால் கிளையை பிடித்து வவ்வால் போல் தொத்திக்கொண்டு. அதில் ஆஸ்வதி ஒரு நிமிடம் அதிர…..”ஆதி.”என்றாள் சத்தமாக….. அவனது செய்கை அவளை பயத்தில் ஆழ்த்தியது.. அதும் அவன் நின்ற இடத்திற்கு சரியாக கீழே தோட்டத்தில் பூச்செடிகளை ஒட்டி கூரான கம்பிகளால் சுவர் எழுப்பப்பட்டு இருந்தது.. ஆதி தன் பிடியை விட்டால் சாதாரணமாக கீழே விழுவதை விட அந்த கூரான கம்பிகளில் தான் விழுவது போல் இருந்தது,.. அதனை பார்த்த ஆஸ்வதிக்கு ஒரு நிமிடம் உலகம் தட்டாமலை சுற்றியது.. ஆதி அவளை ஒரு கண்ணால் பார்த்தவாறு தன் சேட்டைகளை செய்துக்கொண்டு இருந்தான் அவனின் மனம் கொதித்துக்கொண்டு இருந்தது அவனது மனதில் தன் பாசமான அப்பாவை நினைத்து தவித்துக்கொண்டு இருந்தது.. அதற்கு அவன் மூளை இது போல எதாவது சேட்டை செய்துதான் கொதிப்பை அடக்க முயன்றது ஆனால் அவன் எதிர்ப்பார்க்காதது தன்னவளின் கண்ணீர் தான்.. அதனை பார்த்தவன் அவளை உள்ளுக்குள் இன்னும் ஆழமாக பதிய விரும்பினான் அவளின் வாய் சொல் அவனை மரத்தில் இருந்து இறக்க முயல….. அவள் கண்களோ தன்னவனுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்பதிலே குறியாக இருந்தது.. அவன் செய்யும் குரங்கு வேலையை பார்த்து நிமிடத்திற்கு நிமிடம் அவள் மனம் நின்று நின்று துடிக்க ஆரம்பித்தது.. ஆஸ்வதி போட்ட சத்தத்தில் தோட்டத்தில் வேலைப்பார்க்கும் அனைவரும் என்ன என்பது போல் மேலே பார்க்க… ஆதி அங்கு நிற்பதை பார்த்து இல்லை இல்லை மரத்தில் தொங்குவதை பார்த்து அதிர்ந்தனர்.. அந்த மரத்தின் அடியில் அனைவரும் நிற்க…. ஆதி அவர்களை பார்த்து கை தட்டி சிரித்தான். அவனின் பிடிமானம் கொஞ்ச கொஞ்சமாக இளகியதை பார்த்த ஆஸ்வதி..உருகிய குரலில்…”ஆதி.”என்றாள். அதை கேட்ட ஆதியின் கண்கள் சிவந்து போய் முகம் வெறி பிடித்தவன் போல மாறியது. ஆனால் அதற்கு மாறாக அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தது அவன் முகத்தை பார்த்த ஆஸ்வதி பயந்தே போனாள்.. இதுவரை ஆதியை இப்படி ஒரு அவதாரத்தில் அவள் கண்டதே இல்லை “ஆதி.. கீழ இறங்குங்க…. ப்ளீஸ் எனக்கு பயமா இருக்கு.”என்றாள் அழுதவாறே ஆனால் அதனை ஆதி உணரும் நிலையில் இல்லை இவ்வளவு நாட்கள் அவன் எதை மறந்தானோ.. அதனை இன்று அவனுக்கு நினைவூட்டிவிட்டனர்.. அதற்காக அவன் அதனை நினைக்க விரும்பாமல் இல்லை.. மறந்துவிட்டிருந்தான் அவ்வளவே என்று அவன் ஆஸ்வதியை பார்த்தானோ அன்றே அவனுக்கு அனைத்தும் நினைவில் வர தொடங்கியது ஆனால் முழுதும் இல்லை சிறு கோடுகள் மட்டும் தான் கீழிருந்து பார்த்த சிலர் அவனின் செயலில் அதிர்ந்து போனார்கள்.. அதில் ஒருவர் உள்ளே ஓடினார். “என்ன இன்னும் ஆதியும் ஆஸ்வதியும் வரவில்லை…”என்று தாத்தா மேலேயே பார்த்த வண்ணம் இருக்க…. அதற்குள் ஓடிவந்தவர்.”அய்யா நம்ம ஆதி தம்பி பால்கனியில இருக்குற மரத்துல ஏறிட்டு வரமாட்டுறாருயா சீக்கரம் வாங்க…..”என்க… அதில் அதிர்ந்த பெரியவர்.”என்ன சொல்ற……”என்றவாறு அதிர்ந்து நின்றார்.. ஆனால் இந்த செய்தி அங்கு இருந்த பலர் முகத்தில் குரூரம் பரவியது . தாத்தாவிற்கு பிறகு அதிர்ந்து நின்றது விதுன்.. அனு இன்னும் கல்லூரியில் இருந்து வரவில்லை. அதனை கேட்ட வேகத்திற்கு விதுன் அடித்துப்பிடித்து வெளியில் ஓட….. தாத்தாவும் அவன் பின்னாலே ஓடினார்.. “ஆதி. ஆதி. இறங்கி வாங்க மா ப்ளீஸ்…”என்றாள் ஆஸ்வதி பயத்தில் உடல் நடுங்க….. “மாட்டேன் போ இங்க தான் நல்லா இருக்கு.. இங்க நா ரெண்டு குருவி வளக்குறேன் தெரியுமா உனக்கு காட்டவா…”என்றான் அதே உச்சியில் கிளைகளை சப்போர்ட்டுக்கு பிடித்துக்கொண்டு.. அதில் இன்னும் அவள் உயிர் பிரியாமல் ஒட்டிக்கொண்டு இருந்தது,.. இவனை பேசிதான் அழைக்க வேண்டும் என்பதை உணர்ந்த ஆஸ்வதி.. “ஹா ஹான் ஆதி நா பாக்குறேன்.. இங்க வந்துக்காட்டுங்க….. எனக்கு இங்க இருந்து நீங்க பாக்குற குருவி தெரில…..”என்றாள் அவனை எப்படியாவது திசை மாற்றி கீழே வர வைக்க…. அதை கேட்ட ஆதியின் முகம் புன்னகையில் விரிந்தது.. அவன் கண்கள் ஆஸ்வதியை மெச்சலாக பார்த்தது…தன்னவள் தனக்காக தவிர்ப்பது அவன் மனதுக்கு இதமாக இருந்தது.. ஆனால் அதற்கு மாறாக அவன் உள்ளம் கொதித்தது “ஹிஹி.. நீ பொய் சொல்ற…. என்னை கீழ வர வைக்கதான இப்டி சொல்ற….. போ. நீ பொய் சொல்ற ஏஞ்சல் பொய் சொன்னா தப்பு.. பொய் சொல்றவங்கல பார்த்தா எனக்கு பிடிக்காது.பொய் சொல்ல கூடாதுனு உங்க அம்மா சொல்லிக்குடுக்கல…..என் அம்மா..”என்று எதோ சொல்ல வந்தவன் அந்த வார்த்தையில் அப்படியே நிற்க….. அவன் கண்கள் கலங்கியது.. அவன் உடல் நடுங்க…. மரத்தின் கிளையை பத்திரமாக புடித்திருந்த அவன் கைகள் நடுங்கியது.. “என் அம்மா. அ… அம்மா..”என்று அவனின் ஒரு கை பிடிமானத்தை விட்டு தலையில் கைவைத்துக்கொண்டான்…அதனை எல்லாம் கீழே இருந்து பார்த்த ஆஸ்வதி இதயம் நின்று துடித்தது “ஆதி.. ப்ளீஸ் கீழ வாங்க……”என்றாள் சத்தமாக ஜபம் போல…. ஆனால் ஆதியோ.. ஆஸ்வதியை விரக்தியாக பார்த்தவாறு…”எனக்கு அம்மாவும் இல்ல….. இல்ல….. என் விச்சுவும் இல்ல……என்றான் உதட்டை பிதுக்கி அழுதவாறு இதில் ஆஸ்வதியும் முகம் கசங்க தன்னவனை பார்த்தவாறு..”நா இருக்கேன் ஆதி. எனக்கு நீங்க வேணும். இந்த ஏஞ்சலுக்காக இறங்கி வரமாட்டீங்களா..”என்றாள் கன்னத்தில் கண்ணீர் வழிந்தவாறு.. இதை எல்லாம் கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்த தாத்தா மனம் சொல்லாவன வேதனை கொண்டது அவர் செல்ல மகன் இறந்ததிலே பாதி உடைந்து போனவர்.. தன் செல்ல பேரனுக்கு இப்படி மனநிலை சரியில்லாமல் ஆனது இன்னும் வாட்டியது. ஆனால் என்றாவது ஒரு நாள் தன் செல்ல பேரனுக்கு சரி ஆகிவிடும் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்.. ஆனால் இன்று நடப்பதை பார்த்ததும் அவர் மனம் நம்பிக்கை அற்று போனது “கண்ணா ஆதித் இறங்கி தாத்தாட்ட வாப்பா.”என்றார் கலங்கிய குரலில் ஆனால் அதை எல்லாம் கேட்கும் நிலையில் ஆதி இல்லை அவன் கண்கள் ஆஸ்வதியை விட்டு இம்மியும் நகரவில்லை அவன் மனம் தன் இழப்புகளை தான் எண்ணிக்கொண்டு இருந்தது. அதற்குள் கீழே இருந்து விதுன் ஆதியின் பால்கனிக்கு ஓடிவர… அவனும்..”ஆதி இங்க வந்துடுடா.. ப்ளீஸ்.. உன் நண்பன் சொல்றேன்டா வாடா…”என்றான். ஆனால் ஆதியின் கவனம் முழுதும் ஆஸ்வதியிடம் மட்டும் தான் இருந்தது அவள் சொன்ன நா இருக்கேன் ஆதி என்ற சொல் மட்டும் அவனை அசைத்து போட்டுருக்க…. “நா பைத்தியமாம். நீ எனக்கு சரி ஆகலனா என்னை விட்டு போய்டுவியாம். இப்டி தான் என் விச்சி என்னவிட்டு போச்சி இப்போ நீய்ம் போய்ட்டா அப்புறம் நா என்ன பண்றது.நா பாவம் இல்ல….. என்னை யாருக்கும் இங்க பிடிக்காது எனக்கு யாரும் இங்க சாப்பாடு போடமாட்டாங்க….. அப்புறம் அடிப்பாங்க…. அந்த இருட்டு ரூம்ல அடைப்பாங்க….. சூடு போடுவாங்க… எனக்கு வலிக்கும்…”என்றான் ஆதி அழுதவாறு. அதை கேட்ட ஆஸ்வதி அதிர்ந்து.யார் இப்படி இவரிடம் சொல்லி இருப்பார்கள். என்று தோன்ற அது இப்போது தேவையில்லாதது அப்புறம் கேட்டுக்கொள்வோம் என்று எண்ணியவாறு.”இல்ல…. ஆதி. இல்ல… யாரோ உங்க கிட்ட பொய் சொல்லிருக்காங்க… நா உங்கள விட்டு எப்போதும் போமாட்டேன்… இனி நீங்களே என்னை போ சொன்னாலும் உங்கள விட்டு எங்கையும் போகமாட்டேன்.. நா இங்க தான் இருப்பேன். இனி நீங்களே என்னை போனு சொன்னாலும் நா போகமாட்டேண்…”என்றாள் கதறியவாறு திரும்ப திரும்ப சொன்னவாறு.. “ஆமா ஆதித் ஆஸ்வதி இங்கதான் இருப்பா. அதும் உங்கூட தான் இனி இருப்பா உன்ன விட்டு எங்கையும் போகமாட்டா சொல்ற பேச்ச கேளுடா இறங்கி வாடா..”என்றான் விதுனும் கலங்கிய குரலில். “அப்போ ஏஞ்சல ப்ராமிஸ் பண்ண சொல்லு விதுன்..”என்றான் இறுகிய குரலில்.. “ஹான் ஹான் ஆஸ்வதி ப்ராமிஸ் பண்ணுவா டா ஆஸ்வதி பண்ணுமா…”என்றான் விதுன் ஆஸ்வதியை பார்த்து தலை ஆட்டியவாறு அதில் ஆஸ்வதியும் “ப்ர….ப்ராமிஸ் ஆதி. இனி என்ன நடந்தாலும் நா உங்கள விட்டு எங்கையும் போமாட்டேன்.”என்றாள் அழுதவாறு. அதில் மனதில் மகிழ்ந்த ஆதி…”அழாத ஏஞ்சல்.. நீ ரொம்ப அழறதுனால நா வரேன்.. ஆனா நீ என்னை விட்டு போகக்கூடாது…”என்றான் கட்டளையாக அதற்கு சரி என்று தலை ஆட்ட….உடனே அங்கிருந்து கீழே இறங்க ஆரம்பித்தான் அவன் கால்கள் தரையை தொடும்வரை ஆஸ்வதியின் உயிர் அவளிடம் இல்லை. அவன் பால்கனியில் இறங்கிய அடுத்த நிமிடம் புயல் போல் ஓடி வந்த ஆஸ்வதி ஆதியை இறுக்க கட்டிக்கொண்டாள்.. அவளால் இப்போதும் நம்ப முடியவில்லை. ஆதி உச்சியில் நின்றுக்கொண்டதே கண்களின் முன்னால் தோன்றி அவள் உடலை அதிர செய்தது.. அதனை ஆதியால் உணர முடிந்தது.. தன்னவளின் தவிப்பை இப்போதே போக்க வேண்டும் போல் ஆதிக்கு தோன்றியது அவளது முதுகை இறுக்க கட்டிக்கொண்டான் ஆஸ்வதியோ அவன் நெஞ்சிலே புதைந்து போவது போல் இறுக்கிக்கொண்டாள். தன்னவன்.. தன்னவன் கொஞ்ச நேரத்திற்கு முன் நின்றது அப்படியே அவள் இமைகளுக்குள் வந்து அவளை பயம் காட்டியது.கொஞ்ச நேரத்தில் இவனை இழக்க இருந்தோமே.. கை சேராது என்று நினைத்த காதல் இவ்வளவு வருடத்திற்கு பின் கைகூடியது ஒரே நிமிடத்தில் கண் முன்னே முடிய அல்லவா இருந்தது.கண்களை அழுத்தி மூடிக்கொண்டு ஆதியை உணர்ந்துக்கொண்டு இருந்தாள்.. அவளது கண்ணீர் அவனது டீசர்ட்டை ஈரமாக்கிக்கொண்டு இருந்தது.. அவன் உணர்ந்த அவளின் கண்ணீரின் சிலுசிலுப்பு அவனின் உடலை சிலிர்ப்பில் ஆழ்த்தியது…அதுபோக அதன் ஈரம் அவனது நெஞ்சை குளிர செய்தது.. ஆதியும் அப்படிதான்.. தன்னவளின் தன் மீதான காதலை இவ்வளவு நேரம் மரத்தில் நின்றவாறு கண் கூடாக அல்லவா பார்த்தான்..அணைப்பு அவளிடம் இருந்தாலும் அவன் பார்வை முழுதும் தன் எதிரில் நிற்கும் விதுனிடம் தான் இருந்தது.. விதுனும் ஆதியை தான் சளைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.. அவனுக்கும் ஆதியின் மாற்றங்கள் அனைத்தும் தெரிந்துதான் இருந்தது.. இப்போது சிறிது நேரத்திற்கு முன் கூட அதனை கண் கூடாக பார்த்தானே. ஆதியின் கண்கள் ஆஸ்வதியை காதலாக வருடுவதை சாதாரணமான ஆட்கள் கூட அதனை கண்டுக்கொள்வார்கள்.. விதுனோ. மருத்துவன் அவன் கண்களில் மாட்டாமல் போகுமா. ஆனால்.. இருந்தும் ஆதியின் மனதில் எதோ இருப்பதாக தான் அவனுக்கு தோன்றியது தன்னவளை அழவைத்தது போதும் என்று தோன்றியதோ என்னவோ..“ஏஞ்சல் என் ட்ரெஸ்லா ஒரே ஈரமாச்சி. இப்டியே இருந்தேனா அப்புறம் எனக்கு ஃபீவர் தான் வரும். அப்புறம் தாத்தூ எனக்கு விதுன வச்சி ஊசி போட்டு விட்டுடும்…”என்றான் ஆஸ்வதியை இன்னும் இறுக்கிக்கொண்டு அப்போது தான் கொஞ்சம் அழுகை மட்டுப்பட்டு தேம்பலாக மாறி இருந்தவளை பார்த்து அவன் அப்படி சொல்ல அதில் ஆஸ்வதி புரியாமல் அவனை பார்த்தாள்.. “இங்க பாரு.. நீ ஒரே க்ரையிங்கா அதா என் ட்ரேஸ்லா ஒரே ஈரமாச்சி…”என்றான் சிரித்தவாறே. ஆஸ்வதி அவனின் பேச்சை கவனிக்காமல் இன்னும் ஆதியை தொட்டுப்பார்த்துக்கொண்டே இருக்க…. அதில் ஆதியால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.அவளிடம் இருந்து விலக அவன் போராட… ஆனால் அவள் அவனை விடுவது போல் தெரியவில்லை.. “ஆதித். கண்ணா.என்னடா இப்டி பண்ணிட்ட….”என்று தாத்தா மூச்சி இறைக்க ஓடிவர… அதனை பார்த்து ஆதிக்கு கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் இன்று அவனுக்கு தேவை இல்லாத நியாபகங்கள் நிறைய வந்ததின் தாக்கமும்.. தன் விச்சுவின் நியாபகங்களும் தாக்கமும் தான் இது. “தாத்தூ.. உனக்கு ஏன் இப்டி மூச்சி வாங்குது.. யாராவது உன்ன தொறத்துறாங்களா.”என்றான் அப்பாவியாக அதில் தாத்தா அவனை முறைத்துக்கொண்டு இருக்க…. அதில் சிறுபிள்ளை தனமான புன்னகை ஒன்றை கொடுத்துவிட்டு.. “தாத்தூ.. அங்க ஒரு குருவி இருக்கு.. உங்கிட்ட காட்டவா.”என்றான் ஆதி கொஞ்சலாக அனைவருக்கும் மறுபடியுமா அய்யோ என்று இருக்க… “நா அத அப்புறம் பாத்துக்குறேன் கண்ணா.. இப்போ தாத்தா கூட கீழ வாங்க…..”என்று ஆதியை கீழே அழைத்து சென்றார் போகும் போது ஆஸ்வதியை பார்த்து கண் அசைக்க….. அவளும் அவர்களுடன் கீழே சென்றாள்.அங்கு அனைவரும் கல் போல அசையாமல் டைனிங் ஹாலில் உட்கார்ந்து இருக்க….. தாத்தா அனைவரையும் ஒரு பார்வை பார்த்தார். இல்லை இல்லை முறைத்தார்.. அங்கிருந்த யாருமே ஆதியின் செயலை கண்டும் காணாதது போல உட்கார்ந்திருந்தனர் “இங்க எவ்வளவு பிரச்சனை நடந்துட்டு இருக்கு. இவங்களா கொஞ்சம் கூட அசையாம உட்கார்ந்துட்டு இருக்காங்க… இவங்களா என்ன மனுஷங்களோ. “என்று தான் ஆஸ்வதிக்கு தோன்றியது “ஆதி இங்க உட்காருப்பா..”என்று ஒரு சேரில் உட்கார வைத்துவிட்டு “ம்மா ஆஸ்வதி ஆதி பக்கத்துல உட்கார்ந்துக்கோமா.”என்றார் அவளும் அவருக்கு ஒரு சிறிய தலை அசைப்பை கொடுத்துவிட்டு ஆதி பக்கம் உட்கார…. “மா ஆஸ்வதி ஆதிக்கு சாப்பாடு போடுமா..”என்றார் ஆஸ்வதியும் கலங்கிய முகத்துடன் சரி என்று தலை ஆட்டிவிட்டு. அவனுக்கு உணவை அள்ளி வைக்க…. அவள் கைகள் இன்னும் நடுங்கிக்கொண்டு தான் இருந்தது. ஆதி அதனை ரசிக்க தான் செய்தான்.பின் இருக்காதா பல நாட்களுக்கு பின் தனக்காக ஒருத்தி இந்த அளவிற்கு பதைபதைக்கிறாள் என்றாள் அவனுக்கும் அது சந்தோஷமாக தான் இருந்தது ஆஸ்வதி தட்டுதடுமாறி எப்படியோ ஆதிக்கு உணவினை வைக்க….. அவனும் எப்போதும் போல் கீழே மேலே சிந்தி சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். அவனை இன்னும் விழிகள் அகலாது பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஸ்வதி. இதனை கண் கலங்கியவாறு பார்த்துக்கொண்டு இருந்த தாத்தாவின் உடலும் கூட தன் பேரன் சிறிது நேரத்திற்கு முன் இருந்த நிலையை நினைத்து பயந்து தான் போனார்.. அதே நேரம் ஆஸ்வதி ஆதிக்காக துடித்தது அவரின் பார்வையில் இருந்து தப்பவில்லை.. இன்று மட்டும் நூறாவது முறையாக ஆஸ்வதியை ஆதிக்கு திருமணம் செய்து வைத்ததை நினைத்து பூரித்து போனார் அங்கு ஒரு அசாதாரண அமைதி நிலவ…. அதை கெடுக்கும் வகையில் ஆரம்பித்தார் அபூர்வா.