அத்தியாயம்-19 “இங்க என்ன நடக்குது அப்பா.. இவனால இந்த வீட்ல எப்போதும் ஒரு பிரச்சனை நடந்துட்டே தான் இருக்கு.”என்றாள் அபூர்வா ஆதியை முறைத்துக்கொண்டே.. அதனை கேட்ட ஆதியின் கைகள் ஒரு நிமிடம் அப்படியே நிற்க….. பின் வழக்கம் போல சாப்பிட ஆரம்பித்தான்…ஆஸ்வதி அபூர்வாவை முறைத்து பார்த்தாள் தன்னவனை இனி யாரையும் எதும் சொல்ல விடக்கூடாது என்று மனதில் நினைத்தவள். தாத்தாவை ஆழமாக பார்க்க அவரும் இப்போது அபூர்வாவை தான் முறைத்துக்கொண்டு இருந்தார்.. “இந்த வீட்ல கொஞ்சமாச்சும் யாராலையாச்சும் நிம்மதியா இருக்க முடிதா. எப்போபாரு இந்த வீடு சந்தைக்கடை மாறி சத்தம் கும்மாளம்னு ஒரே இரிடேட்டிங்கா இருக்கு..”என்றாள் அபூர்வா “ம்ம்ம்.. அதுக்கு தான் மா சொல்றேன்,. இந்த சந்தைக்கடை மாறியான வீட்ல நீங்க ஏன் இருந்து கஷ்டப்படனும்.. உடனே உங்க வீட்டுக்கு கிளம்புங்க……”என்றார் தாத்தா. அதை கேட்டு அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள் பின் சுதாரித்தவர்கள்…அவரை சமாதானப்படுத்துவது பொருட்டு “என்னப்பா நீங்க….. எங்கள மிரட்டுறீங்க…. பேசாம ஆதிய நல்ல மென்டல் ஹாஸ்பிட்டலா பார்த்து அட்மிட் பண்ணுங்க….”என்றான் பரத் அதை கேட்டு தாத்தா கத்துவதற்குள்.. “ஷட் அப்..”என்ற குரல் அந்த ஹாலையே அதிர வைத்தது”ஷட்அப்.” என்று பெருங்குரல் எடுத்து கத்தினாள் ஆஸ்வதி.. அவளது குரலில் அனைவரும் அதிர்ந்து போனார்கள்.. பின் வந்ததில் இருந்து ஒரிரண்டு வார்த்தை பேசி இருப்பாள். அதும் பேசினால் வாயிற்கு வலிக்கும் என்பது போலவும். கேட்பவர்களின் காதிற்கு வலிக்கும் என்பது போல தான்.. ஆனால் இன்று அவளது குரலில் ஒரு கம்பீரம் இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஒரு வெறி இருந்தது அவள் குரலில்.. தன் ஆதியை மனநல மருத்துவமனையில் சேர்க்க சொல்ல இவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் என்பது போல அவள் மனம் குமுறிக்கொண்டு இருந்தது.. “என்ன சொன்னிங்க…..இப்போ என்ன சொன்னிங்க… என் ஆதிய பத்தி.”என்றாள் பரத்தை பார்த்து குரலை உயர்த்தி. அதில் அதிர்ந்த பரத் அப்படியே நிற்க… “ஏய் யாரப்பாத்து குரல ரைஸ் பண்ணி பேசுற……”என்றாள் பூனம். அதை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாத ஆஸ்வதி.“ம்ச் சொல்லுங்க…. என் ஆதிய பத்தி என்ன சொன்னிங்க….”என்றாள் துர்க்கை அம்மனின் அவதாரத்தில் நின்றுக்கொண்டு தன்னை கண்டுக்கொள்ளாத ஆஸ்வதியை முறைத்த வண்ணம் நின்றிருந்தார் பூனம்.பின் அவரால் என்ன செய்ய முடியும் கொஞ்சம் அழுத்தி கேட்டால் அடிப்பது போல அல்லவா நின்றுக்கொண்டு இருக்கிறாள். அதில் கடுப்பான பரத்.”என்ன அவன் இருக்குற நிலைய சொன்னேன். அதுல என்ன தப்பு.”என்றார் கொஞ்சம் கூட குற்றயுணர்வு இல்லாமல். “என்ன நிலைமை உங்க எல்லாருக்கும் தான் பணப்பேய் பிடிச்சிருக்கு. அதுக்கு உங்க எல்லாரையும் கொண்டு போய் பேய் ஓட்டலாமா…”என்றாள் ஆஸ்வதி நக்கலாக… அதை கேட்டவர்கள் அனைவரும் அவளை எரித்துவிடுவது போல் பார்த்தனர் இதற்கு சம்பந்தமே இல்லாதது போல் ஒருவன் சாப்பிட்டுக்கொண்டே தன்னவளை ரசித்துக்கொண்டிருந்தான். அவன் கண்களுக்கு இளம் சிவப்பு நிறத்தில் புடவை கட்டி நிமிர்வாக நின்றுக்கொண்டிருக்கும் தன் ஸ்வா தான் கண்களுக்கு தெரிந்தாள் அவள் தனக்காக கோவப்படும் போது அவள் முகம் அவள் கட்டிருந்த புடவைக்கு டஃப் கொடுப்பது போல சிவந்து போய் இருந்தது. “உனக்கு எவ்வளவு தைரியம் எங்கள போய் பணப்பேய்னு சொல்ற…. “என்ற அபூர்வா.. தன் தந்தையின் புறம் திரும்பி.”பாத்தீங்களா ப்பா.. அவ எங்கள என்ன பேச்சி பேசுறானு.இதுக்கு தான இவள இந்த வீட்டுக்குள்ள கொண்டு வந்தீங்க…..”என்றார் ஆஸ்வதியை முறைத்துக்கொண்டே. அதில் கடுப்பான ஆஸ்வதி.”நா இப்போ உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன்.. ஏன் நீங்க தாத்தாவ இதுல இழுக்குறீங்க…..”என்றாள் அவள் சொன்னதுக்கு ஏற்றவாறு தாத்தாவும் அங்கு நடப்பதை பார்வையாளராக பார்த்துக்கொண்டிருக்க… அதில் பரத் அஜய்.அபூர்வா அனைவரும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் பார்த்துக்கொண்டனர். அனைவரது மனதிலும் ஆஸ்வதியின் மீது மலை அளவு வன்மம் கூடிக்கொண்டு போனது. “ம்ச். அப்பா. இங்க நடக்குறதுலா பாத்து ஏற்கனவே என் க்ளப் ஃப்ரன்ஸ்லா ஒரு மாறி பேசுறாங்கப்பா. வீட்ல ஒரு பைத்தியத்த வளர்க்குறீங்களாமே.. அத வீட்லையே வச்சிருந்தா என்னிக்காச்சும் உங்களையே அது கடிக்க போதுனு…”என்றார் அபூர்வா அமைதியான குரலில்.. “ம்ச். இன்னொரு தடவ அவர பைத்தியம்னு சொன்னீங்க,.”என்றாள் ஆஸ்வதி கர்ஜனையாக….. “சொன்னா என்ன பண்ணுவ….”என்றவாறு முன்னால் வந்தான் ப்ரேம். அவனை அழுத்தமாக பார்த்த ஆஸ்வதி..”இன்னொரு தடவ சொன்னா.”என்று விரல் நீட்டி அவனை எச்சரிக்க….. “ஓஓஓ…. அவன் பைத்தியம் தான்…பைத்தியம் தான் போதுமா..”என்று ப்ரேம் பைத்தியத்தை அழுத்தி சொல்ல…. பளார்..என்று அந்த ஹாலே அதிரும் அளவிற்கு சத்தம் கேட்டது. ஆம் ஆஸ்வதி ப்ரேமை அடித்திருந்தாள்.. இதனை யாரும் அவளிடம் எதிர்ப்பார்க்க வில்லை என்பது அனைவரின் அதிர்ந்த முகத்திலே தெரிந்தது. அதும் அறை வாங்கிய ப்ரேம் ஆஸ்வதியை முறைத்துக்கொண்டே “யார் மேலடி கை வச்ச……”என்று அவள் அருகில் வர…. அதற்குள் ஆஸ்வதி அவன் அருகில் போய் நின்று அவன் இன்னொரு கன்னத்தில் பளார் என்று அறைவிட்டாள். அதில் ப்ரேம் அசையாமல் நிற்க… அபூர்வா, பரத்,அஜய்,பூனம்,ரியா,இஷானா என்று அனைவரும் அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டனர். ஆதி கூட தன்னவளின் இந்த அவதாரத்தில் கொஞ்சம் அதிரந்து தான் போனான் தாத்தா அங்கு ஒரு பார்வையாளர் போல பார்த்துக்கொண்டு இருக்க….. ரூபாவதி இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல நின்றிருந்தார் “எவ்வளவு தைரியம் இருந்தா என் பையன அடிப்ப….”என்றார் பூனம் ஆஸ்வதியை முறைத்துக்கொண்டு. “ம்ச். யாரா இருந்தா என்ன என் ஆதிய யாராவது எதாவது சொன்னா அவங்களுக்கு இதுதான் நடக்கும்…”என்றாள் நிமிர்வாக நின்றுக்கொண்டு பின் தாத்தாவை அழுத்தமாக பார்த்துக்கொண்டே ஆதியின் கையை பிடித்து தன் அறைக்கு அழைத்து சென்றாள். இங்கோ அனைவரும் போகும் அவளை தான் க்ரோதத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர்.தாத்தா அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் அறைக்கு செல்ல… அதை பார்த்த அனைவரும் இன்னும் கடுப்பாகினர் மேலே ஆதி தன் அறையில் ஒரு பொம்மையை கையில் வைத்துக்கொண்டு கோவமாக கட்டிலில் உட்கார்ந்திருக்கும் தன் ஸ்வாவை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். கோவத்தில் முகம் சிவக்க…. அவளது சிவந்த அதரங்களோ எதோ திட்டிக்கொண்டே உட்கார்ந்திருந்தாள் அவளது சிவந்த அதரங்களை பார்வையால் ரசித்துக்கொண்டிருந்த ஆதிக்கு தன்னவள் கீழே நடந்துக்கொண்டதை நினைக்க நினைக்க ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது என்றால் ஒரு பக்கம் பெருமையாக இருந்தது.. தன் வீட்டினரை ஆவதி திட்டியதற்கு ஒரு சதவீதம் கூட அவளது மேல் கோவம் வரவில்லை.. அவர்களுக்கு இதெல்லாம் தேவை என்றே தோன்றியது.. ஆதியோ தன்னவளை இமைக்காமல் பார்க்க….. ஆஸ்வதியோ உச்சக்கட்ட கோவத்தில் இருந்தாள் தனது சுயம் மறந்து சில மணி நேரங்கள் ஆகியது.. எப்போதும் மென்மையாக இருந்தவள் ஏன் அவளை அவள் சித்தி கொடுமைப்படுத்திய போது கூட அமைதியாக கடந்து வந்தவள். ஆனால் இன்று ஒரே நாளில் எரிமலையாக சுழன்று அடித்ததை அவள் மனம் இன்னும் ஏற்கவில்லை தன்னை இது போல நடந்துக்கொள்ள வைத்தவர்கள் மீது தான் அவளுக்கு தான் அவளுக்கு உச்ச கட்ட கோவம் வந்தது தன் ஆதியை அவர்கள் எவ்வாறு நடந்து வந்துள்ளனர் என்று இங்கு வந்த இந்த இரண்டு மூன்று நாட்களிலே அவளுக்கு நன்றாக புரிந்துவிட்டது.. தன் ஆதியை எப்படி பார்த்தாள்.. இப்போது அவனை எப்படி பார்க்கிறாள் மலைத்து போனது அவளுக்கு. சிறிது நேரத்திற்கு முன்பு தன்னவனை எப்படி பட்ட சூழ்நிலையில் கண்டாள். அதை நினைக்க நினைக்க ஆஸ்வதியின் உள்ளம் நடுங்கியது. அவர்களது பால்கனிக்கும் கீழே தோட்டத்திற்கும் கிட்டதட்ட 100 அடி உயரம் இருக்கும். அதில் இருந்து தன்னவன் விழுந்திருந்தால் அதை நினைத்து கூட பார்க்க ஆஸ்வதிக்கு பயமாக இருந்தது. இதனை பற்றி கொஞ்சம் கூட நினையாமல். ஆதியை குறை சொல்ல மட்டுமே இவர்களால் எப்படி முடிகிறது. “இவங்களா என்ன நினைச்சிட்டு இருக்காங்க… ஆதி இப்போ ஒரு குழந்தை மாறி இருக்காரு.. அவர போய் பைத்தியம் அது இதுனு. தன் சொந்த தம்பி. அண்ண பையன இவங்களால எப்டி இப்டி பேச முடியிது..ச்ச இங்க உள்ளவங்களுக்கு பணம் தான் எல்லாம்.. அதுதான் வந்த உடனே நமக்கு தெரிஞ்சி போச்சே..இவங்க கிட்ட போய் அன்பு, பாசத்தை எல்லாம் எதிர்ப்பார்க்குறது நம்ம தப்பு தான்.இவங்களாம் பெரியவங்கனால சும்மா விட்டேன் இல்லை.. அந்த ப்ரேமுக்கு விழுந்த மாறி கன்னம் கன்னமா வெளுத்துருப்பேன்.”என்று ஆஸ்வதி மனதில் கோவத்துடன் முணுமுணுக்க… ஆதியோ தன்னவளின் அதரம் அசைவதை தான் அதிசயம் போல் பார்த்துக்கொண்டு இருந்தான். அதும் அவளின் அசையும் இளம் சிவந்த நிற உதடுகள் அவனை பித்துக்கொள்ள செய்தது..தன்னவளை இன்னும் ரசிக்க தோன்றியது. பின் இருக்காதா கீழே அனைவரின் முன்னால் ஆஸ்வதி பேசியது ஆதிக்கு இனிக்க செய்தது.. சில மணி நேரம் முன்னால் தனக்காக அனைவரிடமும் தைரியமாக பேசிய அவளை அவனுக்கு பிடிக்காமல் போனால் தானே ஆச்சரியம். அதும் தனக்காக அந்த ப்ரேமை அடித்தது அவனுக்கு இன்னும் பிடித்துவிட்டது அதும் அவளின் இந்த செயல் அவனை அதிர்ச்சியாக்கியது என்னவோ உண்மைதான். ஏனென்றால் அவன்ப் அறிந்த ஆஸ்வதி மிகவும் மென்மையானவள்.. அவளின் பேச்சி கூட அதிர்ந்து வராது.. எப்போதும் அவள் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலெடியும் அவ்வளவு மென்மையாக இருக்கும்.. அப்படி பட்டவள் இன்று ஒருவனை அடித்திருக்கிறாள் என்றால் அது யாருக்காக என்று அவனுக்கு புரியாத அளவிற்கு அவன் என்ன அனைவரும் அவனை நினைக்கும் பைத்தியமா என்ன….. சூழ்நிலை காரணமாக பைத்தியமாக்கப்பட்டவன். ஆயிற்றே தனக்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்தால் ஆஸ்வதி சந்தோஷம் தான் படுவாள்.. ஆனால் இவ்வளவு நாள் தான் பட்ட கஷ்டத்திற்கு பயன் இன்னும் கொஞ்ச நாளில் கிடைத்துவிடும் அதற்குள் தான் அவசரப்பட்டால் அவ்வளவு தான். அனைத்தும் வீணாகிவிடும் அல்லவா.. “இன்னும் கொஞ்ச நாள் தான் வது கொஞ்சம் பொறுத்துக்கோ.. நம்ம பிரச்சனை எல்லாமே தீர்ந்து போய்டும்.. அதுக்கு அப்புறம் என்னை விட்டு ஒரு நிமிஷம் கூட நீ பிரிஞ்சிருக்க நா அலோ பண்ண மாட்டேன். என் வது.. நா நாலு வருஷமா நேசிச்ச என் வது”என்று மனதில் பேசியவாறு அவளை கண்களால் கபளீகரம் செய்துக்கொண்டு இருந்தவன் பார்வை அவளது உதட்டில் வந்து நிற்க….. அது அசையும் ஒவ்வொரு அசைவையும் அதிசயம் போல் பார்த்துக்கொண்டு நின்றான். அதனை அதிசயம் போல பார்க்க…. அதனை கெடுப்பது போல அவன் உடம்பில் எதோ வைபரேட் ஆகுவதை உணர்ந்தவன் அவசரமாக ஆஸ்வதியை நிமிர்ந்து பார்த்தான் அவள் இன்னும் அவர்கள் அனைவரையும் மனதில் வஞ்சிக்கொண்டு இருக்க… அதனை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டவன் உடனே பாத்ரூமில் போய் அடைந்துக்கொண்டான்.. ஆதி பாத்ரூம் கதவை அடைக்கும் சத்தம் கேட்பதில் நினைவு வந்தவள் நிமிர்ந்து பார்க்க அறை காலியாக இருந்தது அப்போது தான் அவளுக்கு இவ்வளவு நேரம் தன்னவனை கூட பார்க்காமல் தனக்குள் உலன்றுக்கொண்டு இருக்கிறோம் என்பதே அவளுக்கு நினைவு வந்தது தன் தலையில் தட்டிக்கொண்டவள். “உனக்கு என்னாச்சி. ஆஸ்வதி.. இவ்ளோ நேரம் ஆதிய கூட கவனிக்காம இருந்துருக்க… ம்ச் இதுலா நல்லா இல்ல… பாவம் அவரு எவ்ளோ நேரம் நமக்காக காத்துட்டு இருந்தாறோ..”என்று தன்னையே திட்டிக்கொண்டு இருக்க… அங்கு பாத்ரூமிலோ.. ஆதி தன் உடையில் மறைத்து வைத்திருந்த செல்போனை வெளியில் எடுத்தான் அதை ஆன் செய்து எதையோ பார்த்தவன் கண்கள் மின்னியது. அது ஒரு மெசெஜ் “டார்கெட் ஃபாலோவ்ட்.”என்று வந்த மெசெஜை பார்த்து தான் அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தது அவன் கண்கள் பழி உணர்வில் பளப்பளத்தது. “உங்க யாரையும் நா சும்மா விடமாட்டேன்…”என்று அமைதியாக கர்ஜித்தான்..