அத்தியாயம்-20 ஆதி அறையில் நிலை அப்படி இருக்க……இங்கு கீழே ஒரு அறையில் தாத்தா..ஆதி ,ஆஸ்வதி,விஷால், ராக்ஷியை தவிர அனைவரும் நின்றிருந்தனர்.. அனைவரது முகமும் கோவத்தில் கொடூரமாக இருந்தது. அதும் அதிதி தன் அன்னையை அசிங்கப்படுத்திய ஆஸ்வதியின் மேல் கொலைவெறியில் இருந்தாள் அதிதி அப்படியே அபூர்வா போல தான் அவளுக்கே இங்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற சுயநலவாதி அவள்.. ராக்ஷி அப்படி இல்லை.. அவள் முழுதும் தாத்தாவின் வளர்ப்பு.. அது மட்டும் இல்லாமல் அவள் முழுநேரமும் இருப்பது விஷ்ணுவிடம் மட்டும் தான். அதனாலே ஆதியின் குணம் இவளுக்கும் இருக்கும் அதற்கு மேல் அமைதி தான் ராக்ஷி.. “எப்டிமா அவள இவ்வளவு தூரம் பேசவிட்டு வேடிக்க பார்த்துட்டு இருக்கிங்க….”என்றாள் அதிதி கத்தியவாறு.. அவளுக்கும் ஆதிக்கும் அனிக்கும் இங்கு கிடைக்கும் முன்னுரிமை வெறுப்பை அதிகப்படுத்தியது அதும் இல்லாமல் விஷ்ணுவை தூக்கி வைத்து பேசுவதும் தன் அம்மாவை ஒரு பொருட்டாக கூட நினைக்காத தாத்தாவை வெறுத்தே போனாள்.. விஷ்ணுவை கண்டால் முகம் திருப்பிக்கொண்டு போவாள். ஆனால் விஷ்ணு அப்படி இல்லை.. அவர் ஆதிக்கும் அனிக்கும் எதாவது வாங்குகிறார் என்றால் அதைப்போல அதிதி, ராக்ஷி,இஷானா,ப்ரேம்,விஷால் என்று அனைவரும் வாங்கி வந்துவிடுவார். அது ராக்ஷிக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அதிதி அந்த பொருளை தீண்ட கூட மாட்டாள் “ம்ச். நாங்க என்ன பண்றது அதிதி. ப்ரேமையே அவ கை நீட்டி அடிச்சிட்டா. இன்னும் எங்கள அடிக்க எவ்வளவு நேரம் ஆகும்.. அதா அமைதியா இருந்துட்டோம்.”என்றார் பூனம்.. அதை கேட்டு அதிதி ப்ரேமை முறைக்க….. அவனோ வந்ததில் இருந்து கோவத்தில் தலை தொங்கப்போட்டு நின்றிருந்தான்.. அவன் மனதில் வஞ்சம் வளர்ந்துக்கொண்டே போனது.. ஆஸ்வதியை பார்த்த உடனே அவளை கொல்லும் அளவிற்கு அவளது மீது வெறுப்பு வளர்ந்தது அதும் அனைவரது முன்னும் இப்படி அடித்ததற்கு அவளை கொடுமைப்படுத்தி கொல்ல நினைத்தான்.. “ம்ச். உனக்கு கொஞ்சம் கூட வீரமே இல்லையா.. ஒரு பொண்ணு அவ அடிச்சத வாங்கிட்டு வந்துருக்க…..”என்று அதிதி கத்த… ப்ரேம் அவளை கொலைவெறியுடன் முறைத்தான்.. அவன் கண்கள் கோவத்தில் சிவந்து போய் இருந்தது.. அதனை பார்க்க அங்கு இருந்த அனைவருக்கும் பயமாக தான் இருந்தது.. “ம்ச் என்னை முறைச்சி என்ன யூஸ். உன்ன அடிச்சவள உன்னால ஒன்னும் பண்ண முடில….”என்று அவனை கேவலமாக ஒரு லுக்கை விட்டு திரும்ப… ப்ரேம் அவள் கழுத்தை பிடித்திருந்தான் அவனின் அனைத்து கோவத்தையும் அதிதியின் கழுத்தில் காட்ட… அதில் அங்கு இருந்த அனைவரும் அதிர்ந்தனர். “ஏய் விடுடா..”என்று அவன் கையை அடிக்க…. ஆனால் அவன் கையை ஒரு இன்ச் கூட அவளால் பிரிக்க முடியவில்லை. அவன் அவளது கழுத்தை பிடித்ததை அனைவரும் அதிர்ந்து பார்க்க….. பரத் தான் முதலில் நினைவிற்கு வந்து.. “டேய் ப்ரேம் அவள விடுடா.”என்றார் அவன் கையை அவள் கழுத்தில் இருந்து விடுவிக்க போராடியவாறு ஆனால் அதும் அவருக்கு எளிதானதாக இருக்கவில்லை.. அதில் தோற்றவர் தன் பின்னால் அதிர்ந்து நிற்பவர்களை பார்த்து. “ப்ச்.. எல்லாரும் ஏன் இப்டி மரம் மாறி நிற்கிறீங்க….வந்து அதிதிய காப்பாத்துங்க… இல்லனா அதிதிய இவன் கையாலையே கொன்றுவான்..”என்று பரத் கத்த…. அதில் அனைவரும் சுயநினைவிற்கு வந்தவர்கள்.. அவனை நோக்கி ஓடினர். “அய்யோ. அதிமா. அவள விடு ப்ரேம்…”என்று அபூர்வாவும் அவர் கணவரும் கத்த….. “விடு ப்ரேம் அவள……”என்று பூனம் கத்த…. “டேய் ப்ரேம்.. அதிதி பாவம்டா விடு…”என்று அஜய் கத்த….. “அண்ணா அவள விடுனா.”என்று இஷானா கத்த….. என்று அனைவரும் ஒருவழியாக போராடி ப்ரேம் கையில் இருந்து அதிதியை காப்பாற்ற….. “க்கு…க்கும்…”என்று அதிதி கண்கள் கலங்கி மூச்சை விடமுடியாமல் விட்டுக்கொண்டு இருந்தாள். அவளை அபூர்வா தாங்கிக்கொண்டு நின்றிருந்தார்.. ப்ரேமோ யாரையும் கவனிக்காமல் தன் கையை முருக்கி சுவற்றில் குத்திக்கொண்டு இருந்தான்…அவன் கோவம் அறிந்த யாரும் அவன் பக்கம் கூட போகவில்லை… “க்கும் உன்ன….. க்கும். க்கும்.. சும்மா விடமாட்டேன்டா என் மேலையே கை வச்சிட்டல……”என்று அதிதி எழும்பாத குரலில் கத்த… ப்ரேம் அவளை நோக்கி இன்னும் கோவமாக வர…. அவர்கள் இருவரது நடுவிலும் பரத் வந்து நின்று.. “ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா..”என்று கத்த… இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு நின்றனர்.. “ம்ச் என்ன இது அபூர்வா.. நாம எதிரிங்கள பாப்போமா.. இல்ல நமக்குள்ள இப்டி அடிச்சிக்கிட்டு சாவோமா..”என்று பரத் கர்ஜிக்க….. அதில் அபூர்வா தன் மகளை முறைத்தார்.. “அதானே.. அந்த ஆதி எப்டி உயிரோட வந்தானு நம்மளுக்கு தெரில….. வந்தவனுக்கு இப்டி கல்யாணம் பண்ணுவாங்கனு நமக்கு தெரில….. இப்போ அவ நம்மள எதிர்த்து நிக்குறதுக்கு பின்னால யார் இருக்கானும் நமக்கு தெரில….. இப்டி பல பிரச்சனைய வச்சிக்கிட்டு நாமளே சண்ட போட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கு..”என்றார் பூனம் “நானும் அத தான் கேட்குறேன். இவ்ளோ நாளு நாம பண்ணுனத யாரும் தட்டிக் கேட்டது இல்ல….. ஆனா நேத்து வந்தவ என் பிள்ளைய அடிச்சி. நம்மள தலை குனிய வச்சிட்டா.. அவள நா சும்மா விடமாட்டேன்…”என்றார் பரத் “ம்ம்ம்ம் ஆமா அண்ண அப்பா இவள நமக்கு தெரியாம ஆதிக்கு கல்யாணம் பண்ணி வைக்கும் போதே எனக்கு மைல்ட் டவுட் இருந்துச்சி. வந்த அன்னிக்கி அமைதியா இருந்தவ இன்னிக்கி இப்டி எகுறுறானா.. என்ன அர்த்தம்.”என்றார் அஜய் “என்ன அர்த்தம் உங்க அப்பா அவ பக்கம் இருக்காருனு அர்த்தம்..”என்றாள் ரியா கிண்டலாக அதில் அஜய் அவளை முறைக்க….. “ம்ச் ரியாவ ஏன்டா முறைக்கிற…. அவ சொல்றது உண்மை தானே இந்த ஆஸ்வதிய அப்பா என்னவோ ப்ளான் பண்ணி கூட்டிட்டு வந்த மாறிதான் இருக்கு.”என்றார் பரத் அதில் அனைவரது முகமும் குழம்பி போய் நிற்க….. “ம்ச்.. என்ன நடந்து இருந்தாலும். அவள நீ சும்மா விட்டுருக்க கூடாது ப்ரேம்…”என்றாள் அதிதி முதலில் இருந்து அதில் அனைவரும் அதிதியை முறைக்க…..”அவ சொல்றது கரெக்ட் தான்.. நா அவள சும்மா விட்டுருக்க கூடாது தாத்தா மட்டும் குறுக்க வரல நா அவள அங்கையே எதாவது பண்ணிருப்பேன்..ஆனா இனி அவள நா விடமாட்டேன். பாக்குறேன் இனி அவ எங்கிட்ட இருந்து எப்டி தப்பிக்கிறானு..”என்றான் ப்ரேம் கண்களில் வெறியுடன். அதையே அனைவரது மனதிலும் ஓடிக்கொண்டு இருந்தது.. இங்கு ஆஸ்வதி வெகுநேரம் ஆதிக்காக காத்திருக்க… அவனோ இன்னும் பாத்ரூம் உள்ளையே நிற்க…. சரி அதற்குள் தாத்தாவை சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று மாடியில் இருந்து இறங்க…. ஹாலே வெறிச்சோடி கிடந்தது அதை பார்த்த ஆஸ்வதி கண்டுக்கொள்ளாமல் நேராக தாத்தா அறைக்கு செல்ல….. அங்கு தாத்தாவோ தன் அறையில் மாட்டி இருக்கும் விஷ்ணுசர்மாவின் போட்டோவை வெறித்துக்கொண்டு இருந்தார். அதை பார்த்த ஆஸ்வதிக்கு தாத்தாவின் கண்கள் கலங்கி இருப்பது நன்றாக தெரிந்தது.. ஆஸ்வதி மனதில்..”ம்ச் ஏற்கனவே தாத்தா மனசளவுல ரொம்ப உடைஞ்சி போய் இருக்காங்க….. அவங்க மகன் இழப்புல…. இதுல ஆதி வேற இப்டி இருக்காங்க….. இப்போ நான் வேற எதோ பிரச்சனை பண்ணி இருக்கேன் பாவம் தாத்தா இந்த வயசுல எவ்வளவு தான் தாங்குவாங்க……”என்று அவருக்காக வருத்தப்பட்டவள் அவர் அருகில் நெருங்கி அவர் காலடியில் உட்கார…. தன் அருகில் எதோ அரவம் தெரிந்து குனிந்து பார்த்தவர். அங்கு ஆஸ்வதி தன்னையே வருத்தமாக பார்ப்பதை பார்த்து ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்தவர் “நா கவலப்படுற அளவுக்கு இன்னிக்கி ஒன்னும் நடக்குல மா…”என்றார் அவள் தலையை வருடியவாறு அதில் ஆஸ்வதி அவரை கண்களில் கேள்வியுடன் பார்க்க…. “அப்புறம் ஏன் இப்போ திடிர்னு இப்டி வருத்தமா உட்கார்ந்துருக்கனு கேட்கிறீயா.”என்றார் அவர் அதற்கு அவள் மெலிதாக தலை ஆட்ட….. “ம்ம்ம்ம்ம்…”என்று பெரும்மூச்சை வெளியிட்டவர். “ஆஸ்வதி இந்த குடும்பம் எப்போதும் ஒற்றுமையா இருக்கனும்னு தான் விஷ்ணு. எப்போதும் நினைப்பான்.. அதுக்காகவே அவன் எதையும் இழக்க தயாரா இருந்தான் ஆனா இன்னிக்கி அவனும் இல்ல இந்த குடும்பத்துல நிம்மதியும் இல்ல….. ஒற்றுமையும் இல்ல….”என்றார் வருத்தமாக “சாரி தாத்தா.. நா அப்டி நடந்துருக்க கூடாது..”என்று ஆஸ்வதி முடிப்பதற்குள். “இல்லமா இல்ல….. இதுல உன் தப்பு ஒன்னுமே இல்ல…. சொல்ல போனா உன் இடத்துல இருந்து இத நா பண்ணிருக்கனும். ஆனா எனக்கு அவன் போனதுக்கு அப்புறம் எதுலையும் பிடித்தம் இல்லாம போச்சி…”என்று விஷ்ணு போட்டோவை பார்த்து கூற…. ஆஸ்வதிக்கு மனம் கேட்கவில்லை. “தாத்தா திரும்ப நா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அது எதுக்குனா உங்க நிம்மதிய இன்னிக்கி கெடுத்ததுல நானும் இருக்கென் அதுக்காக மட்டும் தான் என் மன்னிப்பு.. அது போக வேற எதுக்கும் வேற யாருக்கும் நா மன்னிப்பு கேட்கல….. ஏனா அவங்க பண்ணுனது தப்பு தான்.”என்றாள் கோவமாக….. அதில் தாத்தாவின் முகத்தில் புன்னகை அரும்ப…. அவள் தலையை வருடியவாறு “உன் ஆதிய யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க மா அப்டி சொன்னா இனி யாரு கன்னம் பழுக்க அறை வாங்குறது”என்றார் கிண்டலாக…. அதை கேட்ட ஆஸ்வதி முகம் பூவாக மலர….”போங்க தாத்தா..”என்றாள் வெட்கப்பட்டு. அதில் இன்னும் சிரித்தவர்..”ம்ம்ம்.. ரொம்ப சந்தோஷமா இருக்குமா ஆதிக்கு இந்த கல்யாணத்த பண்ணி வைக்க நா நிறைய கஷ்டத்த அனுபவிச்சிட்டேன் மனசார….. அவனுக்கு இது சரி வருமா.. அவனுக்குனு பார்த்து உன் வாழ்க்கைய கெடுக்குறேனா அவனுக்கு சரி ஆகிட்டுனா என்னை ஏன் கேட்காம பண்ணிங்கனு கேட்பானா. இப்டி நிறைய கேள்விகள் என் மனசுல ஓடிச்சி.. ஆனா இதுல என்னை பாதிச்ச கேள்வி உன் வாழ்க்கைய நா அழிக்கிறேனோனு தான். ஏனா ஆதிக்கு நான் தான் எல்லாமே.. என் பேச்சிய அவன் தட்டவே மாட்டான் அதுனால அவன் சரி ஆகி வந்தாலும் அவன் என் விருப்பத்த வேண்டானு சொல்லமாட்டான்.. ஆனா உன் வாழ்க்கை..”என்று அவர் பேச ஆரம்பிக்க…. “இல்ல தாத்தா என் வாழ்க்கை இப்போதான் நல்ல காலம் நோக்கி போய்ட்டு இருக்குனு நா நினைக்கிறேன்.”என்றாள் ஆஸ்வதி டக்கென்று அதில் தாத்தா உள்ளம் குளிர அவளை பார்த்து…”இந்த தாத்தாவுக்காக சொல்லலையே டா.”என்றார் அவர் “ம்கும்.. இல்ல…. நா சொல்றத விட நீங்களா பார்ப்பீங்க…. எங்க வாழ்க்கை நல்லா இருக்கும்…”என்றாள் ஆஸ்வதி அவரை மென்மையாக பார்த்தவாறு.. அதில் தாத்தா புன்னகைக்க…. “ஏஞ்சல்..”என்று அவர்கள் அறைக்கு ஓடிவந்தான் ஆதி. அவன் சத்தம் கேட்டு ஆஸ்வதி பதறி எழ…. அவள் கால் தாத்தா அமர்ந்திருந்த சேரில் அடிப்பட்டது “ஆஆஆ…. அம்மா..”என்று ஆஸ்வதி முணகியவாறு அப்படியே கீழே உட்கார…… “அய்யோ ஆஸ்வதிமா.. என்னாச்சிடா..”என்றார் தாத்தா. அவளின் முனகல கேட்ட ஆதி அவளின் பாதத்தை பார்க்க…. அவளின் கால் சுண்டு விரல் சேரில் அடிப்பட்டு ரத்தம் கசிந்துக்கொண்டு இருந்தது…அதை பார்த்தவன் “அய்யோ ஏஞ்சல் ரத்தம்.”என்றான் அதிர்ந்தவாறு..அவள் அருகில் உட்கார்ந்து. “ச்சு சு. ஆதி இது சின்ன அடிதான் ஏன் இப்போ பதறிங்க……”என்றாள் ஆதியின் கையை பிடித்தவாறு “என்னமா இது ரத்தம் வருது இப்டி சின்ன காயம்னு சொல்ற… டேய் ஆதி கண்ணா எல்லாம் உன்னால தான்டா ஆஸ்வதிக்கு ப்ளட் வருது.”என்றார் தாத்தா அதில் ஆதி அவரை கோவமாக முறைத்தவாறு. “நானா.. உன்னால தான் தாத்தூ அவளுக்கு காலுல அடிப்பட்டுட்டு. உன்ன பாக்க அவ வரலனா அவளுக்கு அடிப்பட்டு இருக்காது.”என்றான் ஆதி தன் இடுப்பில் கை வைத்து அவரை முறைத்துக்கொண்டு.. “நானா இதுக்கு காரணம் நீதான்டா காரணம். ஏஞ்சல்னு கத்திட்டு ஓடி வந்தல….. அதுக்கு தான் இவ வேகமா எழறனு இப்டி அடிப்பட்டுகிட்டா இது உன்னால தான்…”என்றார் தாத்தா.. அவனை போல கோவமாக இடுப்பில் கை வைத்துக்கொண்டு.. “என்னாலையா இல்ல…. உன்னால….”என்றான் ஆதி “இல்லடா உன்னால தான்.”என்று தாத்தா கூற…. “நோ என்று ஆதி கத்த….. “ஆமா..டா.. உன்னால……”என்று தாத்தா கத்த….. ஆஸ்வதி இருவரையும் மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருந்தாள்.. அவளுக்கு இருவரையும் பார்க்க அப்படியே ஒரே போல தான் தெரிந்தது ஆதியை பார்த்தால் அப்படியே தாத்தாவிடம் வளர்ந்தவன் என்று யாருனாலும் அடித்து சொல்வார்கள் இருவரும் இன்னும் அதையே பேசிக்கொண்டு இருக்க….. “ம்ச். இப்படியே ரெண்டு பேரும் எவ்வளவு நேரம் பேசிட்டே இருப்பீங்க….”என்றாள் ஆஸ்வதி குறும்பு குரலில்.. அதில் இருவரும் அவளை பார்க்க… தாத்தா ஆதியை பார்த்து “அதானே.. எவ்வளவு நேரம் டா ஆஸ்வதிய பார்த்துட்டே இருப்ப….. அவள தூக்கிட்டு உன் ரூம்க்கு போ…”என்றார் தாத்தா,.. அதில் அதிர்ந்த ஆஸ்வதி…”அய்யோ தாத்தா எனக்கு அவ்வளவு வலிலா இல்ல….. நானே நடந்து போய்டுவேன்.”என்று எழ நினைக்க…. “ம்ம்ம்.. ம்ம் ஏஞ்சல் உன்னை நா தான் உப்பு மூட்டை தூக்குவேன் அந்த பப்ளு இல்ல அவன் அவனோட சிஸ்டர அப்டி தான் தூக்குவான்.. என்னையும் தூக்குடானு சொல்வேன் அதுக்கு அவன் என் தலையில தட்டிட்டு ஓடிடுவான்.. அதுனால இப்போ நா உன்ன தூக்குறேன்.. ஏனா உனக்கு கால் அடிப்பட்டு இருக்குல….. உனக்கு கால் சரியானதும் என்னை நீ தூக்கனும் சரியா.”என்றான் பாவம் போல முகம் வைத்துக்கொண்டு.. அவன் கடைசியாக சொன்னதை கேட்ட ஆஸ்வதி அய்யோ இவரை நா தூக்கனுமா.. நல்ல பயில்வான் மாறி உடம்ப வச்சிட்டு இவர நா தூக்குனா என் நிலைமை என்ன ஆகுறது என்று மனதில் நினைத்துக்கொண்டு பின் தன்னவனை பார்த்து புன்னகையுடன் “இல்ல ஆதி எனக்கு அப்டி ஒன்னும் வலி இல்ல நானே நடப்பேன்…”என்றாள் ஆனால் அதற்கு அவளை ஒரு பார்வை பார்க்க….. அதில் ஆஸ்வதி அசையாமல் அப்படியே நின்றுவிட்டாள்.. அவள் மனதில்.. “என்ன ஆதி இன்னிக்கி நம்மள ஒரு மாறி பார்க்குறாரு.”என்று நினைத்தவள் அப்படியே உட்கார்ந்துருக்க… “ஆதி ஆஸ்வதி அப்டிதான் சொல்வா நீ அவள மேல தூக்கிட்டு போ…”என்றார் தாத்தா ஆதியை பார்த்து கண் சிமிட்டியவாறு. அதில் ஆதியும் அவரை பார்த்து தலை அசைத்துவிட்டு ஆஸ்வதியை நோக்கி குனிந்தான். ஆஸ்வதியோ ஆதியையே கண் சிமிட்டாமல் பார்க்க…ஆதி அவள பூப்போல கையில் ஏந்தினான்.. அவனின் ஒரு கை அவளது இடையை இறுக்கிக்கொண்டும் ஒரு கை அவளது இரண்டு கால்களின் முட்டியிலும் அழகாக பிடித்துக்கொண்டு இருந்தது,.. அவனின் இடையில் இருந்த கை சேலை மூடாமல் இருந்த பகுதியை வருட… அதில் ஆஸ்வதி உடல் ஒரு நிமிடம் அதிர்ந்தது.. அதனை ஆதியும் உணர்ந்து தான் இருந்தான் ஆஸ்வதியை தூக்கிக்கொண்டு தாத்தா அறையை விட்டு வெளியில் வர….. தாத்தா போகும் இருவரையும் பார்த்து மனதில் வேண்டுதலுடன் தன் மகன் புகைப்படத்தை பார்த்தார் “கடவுளே என் பேரனும் பேத்தியும் எப்போதும் சந்தோஷமா இருக்கனும். அவங்க வாழ்க்கையில இனி எந்த தடங்களும் வராம இனி நீதான் பாத்துக்கனும்…”என்று தன் மகனின் புகைப்படத்தை பார்த்தவாறு உட்கார… ஆதியோ.. தன் கையில் இருக்கும் தன்னவளை பார்வையால் வருடியவாறு அவளை அழகாக தன் அறைக்கு கொண்டு செல்ல மாடிப்படியை ஏற ஆரம்பித்தான். அவனின் நடை மெதுவாக மிக மெதுவாக இருந்தது இப்போதைக்கு தன் அறை வரவே கூடாது என்பது ஆதியின் மனதில் மந்திரம் போல ஓடிக்கொண்டு இருந்தது.. ஆஸ்வதியின் கைகள் இரண்டும் தன்னவனின் தோள்களில் அழுத்தமாக பற்றி இருந்தது. அவளின் பார்வை ஆதியின் கண்களை தான் உற்றுப்பார்த்துக்கொண்டு இருந்தது. இருவரும் தங்களின் உலகில் இருக்க…. அப்போது தான் மிகப்பெரிய திட்டத்தை போட்டுவிட்டு அறையில் இருந்து வெளி வந்த அனைவருக்கும் இந்த காட்சி இன்னும் வெறியை ஏற்றியது.