அத்தியாயம்-25
ஆதியின் கேள்வியில் அதிர்ந்த ஆஸ்வதி அவனையே இமைக்காமல் பார்க்க… அதில் ஒருவன் வீழ்ந்தே போனான்.. ஆதியின் இதழ்களோ அவளின் அதிர்ச்சியை பார்த்து புன்னகையில் விரிந்தது. அவனின் இந்த புன்னகை அவளுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு படப்படப்பை ஏற்படுத்தியது
“ம்ம். என்ன செய்ய சொன்னாங்க……”என்ற ஆதியின் பார்வை முழுதும் ஆஸ்வதியின் பின்னால் நின்றிருந்த அந்த ஸ்வீட்டியின் க்ரூப்பிடம் தான் இருந்தது.
“அது.. வந்து சார்…”என்று ஆஸ்வதி தயங்கியவாறே ஆரம்பிக்க…
உடனே அவளை கை நீட்டி தடுத்த ஆதி…”என் நேம் ஆதித் முழு நேம் ஆதித் சர்மா உனக்கு எப்டி தோணுதோ அப்டிக்கூப்டு.. இந்த சார் மோர்லா வேணாம்..”என்றான் அழுத்தமாக….
அவன் பெயரை அவன் ஒரு தடவை தான் சொன்னான். ஆனால் ஆஸ்வதியோ அவனது பெயரை அந்த நொடியில் இருந்து பல தடவை சொல்லி பார்த்துவிட்டாள்.. அதும் ஆதி என்றே.
“ம்ம்ம்ம்..”என்று அவள் தலை ஆட்ட….. அதில் ஆதியின் முகம் புன்னகையை பூசிக்கொண்டது..
“ம்ம். அது அங்க இருக்காங்களே.. அந்த எல்லோ ட்ரேஸ் போட்ட சீனியர்..”என்று ஸ்வீட்டியை நோக்கி கை காட்டியவள் அதற்கு மேல் பேச வராமல் அப்படியே நிற்க…. அவளால் அதனை கூற முடியவில்லை அது எப்படி தன்னுடைய ஆதியை தன்னிடமே சொல்லி ப்ரோபோஸ் பண்ண வைக்கலாம் என்று ஸ்வீட்டி மீது கொலைவெறி ஆனது.
“ம்ம். அவங்க….”என்று ஆதி எடுத்துக்கொடுக்க…..
“ம்ம். உங்கள…. உங்கள…..”என்று அவள் தடுமாற…..
அவளின் தடுமாற்றம் ஆதியை இன்னும் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியது
“ம்ம்ம் என்னை என்னை.”என்று அவனும் அவள் சொன்னது போல ஆரம்பிக்க…..
“விடமாட்டாரு போலவே…”என்று மனதில் நினைத்தவள்…”உங்கள லவ்..”என்று இன்னும் திணற….
அவளின் திணறல் அவனுக்கு இன்னும் பிடித்து போனது..”என்ன லவ் ப்ரோபோஸ் பண்ண சொன்னாளா…”என்றான் ஸ்வீட்டியை காட்டி
“ம்ம் “என்று ஆஸ்வதி தலை ஆட்டினாள் ஒரு பெரும் மூச்சினை விட்டவாறே..
“ஓஓஓ…. சரி ப்ரோபோஸ் பண்ணிட்டேனு சொல்லிடு அவங்க கிட்ட…..”என்றான் ஆதி..
அதை கேட்டு ஆஸ்வதி குழம்ப….. அப்போது தான் தன்னை அவர்கள் ஆதியிடம் ப்ரோபோஸ் செய்ய சொன்னார்கள் என்று நினைத்துக்கொண்டான் என்பது புரிய…
“இல்ல சா இல்ல ஆதி.”என்று ஆஸ்வதி ஆரம்பிக்க…..
அவளின் ஆதி என்ற அழைப்பு ஆதியை அசைத்து போட்டது..
“இப்போ என்னனு என்னை கூப்ட்ட……”என்று ஆதி ஆஸ்வதியை உணர்வு பூர்வமாக கேட்க….
“இல்ல….. அது.வந்து ஆதினு. சாரி. நா எதோ…”என்று அவள் திக்கி திணற…
“ம்ச்.. அதவிடு “என்று அவள் திணறலில் அவளை இதற்கு மேல் படுத்தாமல்.”சொல்லு என்னமோ சொல்ல வந்தியே…”என்றான்
“ஹான் அது அவங்க உங்கள லவ் பண்றதா சொல்ல சொன்னாங்க…..”என்று ஒரு வழியாக ஆஸ்வதி சொல்லி முடிக்க… ஆதியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தாள்.
ஏனென்றால் ஆஸ்வதியை தான் ஆதி கண்கள் சிவக்க முறைத்துக்கொண்டு நின்றான்..
“என்ன சொன்ன….. அவ தான் உன்ன அப்டி சொல்ல சொன்னா.. உடனே நீயும் வந்து சொல்லிடுவீயா..”என்று கத்தினான் ஆதி.
அதில் ஆஸ்வதி பயந்து போக… ஆதியின் நண்பன் ஆதியின் தோளை தொட்டு
“ஹேய் ஆதி கூல் டா பாரு இந்த பொண்ணு பயப்படுது…”என்றான் ஆஸ்வதியை காட்டி
“ம்ச்.. இல்லடா அந்த ஸ்வீட்டிதான் சொன்னானா இவ வந்து அத சொல்றா பாறேன்..”என்று பற்களை கடித்தவாறே ஆஸ்வதியை முறைக்க….
ஆஸ்வதியோ உடல் நடுங்க அவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள்
“இன்னும் ஏன் இங்க நிக்கிற…. போ இங்க இருந்து.”என்றான் அவளை முறைத்தவாறே,.
அதில் ஆஸ்வதி கண்கள் கலங்க……”அவங்க பதில் தெரிஞ்சிட்டு தான் வரனும்னு சொன்னாங்க…..”என்றாள் நடுங்கிய குரலில்.
“ஓஓ… இதுவர சொல்லி அனுப்பிருக்காளா. நானே அவகிட்ட பதில் சொல்றேன்.”என்று அங்கிருந்து வேகமாக ஸ்வீட்டி இருக்கும் இடத்திற்கு சென்றான் ஆதி..
அவன் போகும் வேகத்தை பார்த்த அவனின் நண்பர்களும் அவன் பின்னால் ஓட….. ஆஸ்வதியும் ஆதியின் கோவத்தை பார்த்து அவன் பின்னாலே ஓடினாள் ஒரு வேளை அவனின் பதிலை தெரிந்து கொள்ள கூட இருக்கும்..
ஆதி நேராக போய் நின்றது ஸ்வீட்டியின் முன்னால் தான்.. ஆதியிடம் வெகுநேரம் பேசும் ஆஸ்வதியையே பார்த்துக்கொண்டு நின்ற அந்த கும்பல் ஆதி வேகமாக தங்களை நோக்கி வருவதை பார்த்த ஸ்வீட்டி.
“அய்ய்ய்.. என் ஆளு என்னை பார்த்து தான் வரான் அதும் வேகமா.”என்றாள் அவள்
“ஆமா ஸ்வீட்டி ஒரு வேலை உன்ன வேணானு சொல்லவா இருக்குமோ…”என்றான் ராகுல்.
அதில் ஸ்வீட்டி அவனை பார்த்து முறைக்க….
“நீ சும்மா இருடா. இல்ல ஸ்வீட்டி அவன் வர வேகத்த பார்த்தா அவன் உனக்கு ப்ரோபோஸ் பண்ண தான் வேகமா வரான்.”என்று ஒருத்தி சொல்ல….
ராகுல் அவளை பார்த்து முறைத்தவாறே நிற்க….
அதற்குள் அவள் அருகில் வந்த ஆதி ஸ்வீட்டியை பார்த்து முறைத்தவாறே.
“நீ தான் எனக்கு ப்ரோபோஸ் பண்ண சொன்னியா.”என்று கேட்க….
அவளோ அவன் மீது கொண்ட மயக்கத்தில் அவனின் முக மாற்றத்தை கூட கண்டுக்கொள்ளாமல்..
“ஆமா ஆதி உன்ன நான் 3வருஷமா லவ் பண்றேன்.அதும் சின்சியரா.. இத சொன்னா எங்க நீ என்னை ரிஜக்ட் பண்ணிடுவியோனு பயத்துல உங்கிட்ட சொல்லல……”என்றாள் ஸ்வீட்டி பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
“ஓஓஓ….. என்னை 3வருஷமா லவ் பண்றனா அப்போ உன் மாமா பையன் ப்ரதீப்ப எவ்வளவு வருஷமா லவ் பன்ற ஸ்வீட்டி..”என்றான் ஆதி நக்கலாக….
ப்ரதீப் என்ற பெயரை கேட்டதும் அதிர்ந்து போனவள். ஆதியை அதிர்ச்சியாக பார்க்க…..
“என்ன ப்ரதீப்ப எப்டி எனக்கு தெரியும்னு பாக்குறீயா. அவன் என் ஸ்கூல் மெட் அவன் கூட நா உன்ன நிறைய தடவ வெளில பாத்துருக்கேன். அவன் எங்கிட்ட கூட உன்ன பத்தி சொல்லிருக்கான்.. அது அவன் நம்பர் கூட எங்கிட்ட இருக்குனு நினைக்கிறேன்.”என்று ஆதி தன் மொபைலை எடுக்க…
அதில் அதிர்ந்த ஸ்வீட்டி..”ஆதித் ஆதித் ப்ளீஸ் நா நா எதோ ஃபன் க்கு இப்டி பண்ணிட்டேன். ப்ளீஸ் அவங்கிட்ட மட்டும் சொல்லிடாத…..”என்று கெஞ்சினாள்..
ஏனென்றால் ப்ரதீப் ஒரு சைக்கோ போல…. இவளை பல தடவை பசங்களுடன் வெளியில் சுத்துவதை பார்த்து கண்டித்து இருக்கிறான் இவள் எங்கு அதை எல்லாம் கேட்டாள். அதனால் தான் அவன் கோவம் எல்லை தாண்டி செல்ல…. ஒரு நாள் இவளை வெளுத்துவிட்டான். இவள் குடும்பம் ஒரு பாரம்பரியமான குடும்பம் இவர்களுக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.. அதில் ஒன்று தங்கள் முறை பையன்களை தான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்பது.
இதில் ஸ்வீட்டியின் துர்தஷ்டம் என்னவென்றால் இவளுக்கு இருப்பது ப்ரவீன் மட்டும் தான் முறை பையன். அவனை விட்டால் யாரும் இல்லை.. எனவே இவளை சிறுவயதிலே அவனுக்கு பேசி முடித்தனர்.. ஆனால் ஸ்வீட்டிக்கோ அவனை கொஞ்சமும் பிடிக்கவில்லை.. ஏனென்றால் ப்ரவீன் அவளை யாரிடமும் தேவை இல்லாமல் பேச வேண்டாம்.. என்று சொன்னதால்.. அதை கேட்ட ஸ்வீட்டிக்கு அவனின் மீது வெறுப்பு தான் வந்தது. ஆனால் சில நேரத்தில் சிலர் சொல்வதை ஏற்க வேண்டும் தானே.
அப்படி தான் ஸ்வீட்டி இந்த காலேஜில் வந்து சேர்ந்த போது. அவளது உடை அழகிற்கே நிறைய பேர் அவள் பின்னால் சுற்றினர். அவளது உடை அவ்வளவு நாகரீகமாக இருக்குமோ என்றால் இல்லை. தான்.. ஆனால் அது தானே அவள் பின்னால் சுற்றுபவருக்கும் தேவை.. ஆனால் ப்ரவீன் இதனை பற்றி தெரிந்து அவளை கண்டிக்க….. அதனை அவள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனை அவள் ஆண் ஆதிக்கமாகவே நினைத்தாள். ஆனால் அதனால் அவளுக்கு தான் இழப்பு நேரிட இருந்தது
ஒரு நாள் அவள் பின்னால் சுற்றிய ஒருவன் ஸ்வீட்டியை டின்னருக்கு அழைக்க….. இவளும் தன் அழகின் மீது உள்ள கர்வத்தினால் கிளம்பி சென்றாள். ஆனால் அங்கோ. அவன் இவளுக்கு போதையை கொடுத்துவிட்டு தவறாக நடக்க முயல… ஸ்வீட்டியின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும் ப்ரவீன் அவளை பின் தொடர்ந்து சென்றவன். அவளுக்கு நடக்க இருந்ததை கண்டு கொதித்து போனான் ஸ்வீட்டியை அடைய நினைத்தவன் முகத்தை மாற்றிவிட்டு.. அவளை இழுத்து வந்தவன் வீட்டில் ஒரு போர்க்களத்தையே உண்டு பண்ணிவிட்டான்
அன்றிலிருந்து ஸ்வீட்டியை அவள் அன்னை கொஞ்சம் நாகரீகமான உடையை தான் அவளுக்கு வாங்கித்தருவார் அதனை ஸ்வீட்டி எதிர்த்து பேசினாள் உடனே அவர் ப்ரவீனுக்கு அழைத்துவிடுவார்.. அவனோ அன்று அவளை இழுத்து வந்ததுமே அவளின் உதட்டில் ரத்தம் வரும் அளவிற்கு அடித்து நொருக்கிவிட்டான் அவளது அன்னையோ தந்தையோ யாருமே அவனை அடக்கவில்லை அவர்களை பொருத்தவரை ப்ரவீன் நல்லவன்.
அவன் நல்லவன் தான்.. தனக்கு மனைவியாக வருபவள். எந்த சிக்கலிலும் மாட்ட கூடாது என்று நினைக்கும் அனைவரும் நல்லவர்கள் தானே
அதனாலே பயந்து ஸ்வீட்டு வீட்டில் ஒழுங்காக நடந்துக்கொண்டாலும். கல்லூரியில் ஆதியை தொல்லை செய்வதை மட்டும் விடவில்லை.. இன்று ஆதி ப்ரவீனின் நண்பன் என்று தெரிந்தும் அவனிடம் இனிமேல் வம்பு செய்ய அவள் என்ன கிறுக்கியா.
“இனி உன்ன இப்டி யார் கிட்டையாவது பேசுறத பார்த்தேன். ப்ரவீன் நம்பர் எங்கிட்ட இருக்கு “என்றான் மிரட்டலாக
அதில் பயந்தவள் மறுப்பாக தலையை ஆட்ட…..”ம்ம்ம்ம்.. சரி.. நா வரட்டுமா என்று அங்கிருந்து கிளம்பியவன்.. பின் திரும்ப ஸ்வீட்டியை பார்த்து. இன்னும் 1இயர்ல உனக்கும் ப்ரவீனுக்கும் மேரேஜாமே…”என்றான் ஆதி
அதை கேட்டு அதிர்ந்தவள் ஆம். என்று தலை ஆட்ட….”ம்ம்ம் என்னை இன்வைட் பண்ணிருந்தான்.. சரி நா வரட்டுமா.”என்று அங்கிருந்து கிலம்பினான். கடைசியாக உன்னை ஒருமுறாய் எச்சரிக்கை செய்கிறேன் என்பதற்கு தான் அதை சொல்லிவிட்டு சென்றான் ஆதி.
ஆதி பேசுவதையே ஸ்வீட்டின் நண்பர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். அவர்களுக்கு கூட இது எல்லாம் தெரியாது. ஸ்வீட்டி மறைத்து இருந்தாள்.. அதனால் அவர்கள் ஸ்வீட்டியை பார்த்து முறைத்தவாறே அங்கிருந்து சென்றனர்.
ஆதி பேசுவதையே இமைக்காமல் பார்த்திருந்த ஆஸ்வதி ஆதி நடந்து வருவதையே ஆசையாக பார்க்க… ஆதி இவள் அருகில் வந்தவன்
“இன்னும் க்ளாஸுக்கு போகாம என்னை பண்ற…..”என்றான் அழுத்தமான குரலில்..
அதில் அதிர்ந்தவள் “ஹான் போய்ட்டேன் சீனியர்.. ச்ச…. ஆதி.”என்று அவனை மிரண்டு போய் பார்க்க…
அவளின் மிரண்ட பார்வையில் ஆதி தான் அசந்து போனான்.. “மை கேண்டி பேபி.. வாட் ய ஐஸ்…”என்றான் அவளது விரித்த இமைகளை ரசித்தவாறே
இன்னும் அதிர்ச்சியில் நிற்பவளை நினைவிற்கு கொண்டு வர…..அவளை பார்த்து ஒற்றை கண்ணை அழகாக சிமிட்ட…. அதில் அதிர்ந்தவள் அங்கிருந்து ஓடி இருந்தாள்..
அவளின் இந்த செயல் ஆதிக்கு புன்னகையை வரவழைத்தது.
ஆஸ்வதி இதையெல்லாம் நினைத்துப்பார்த்தவாறு பால்கனியில் நிற்க….அப்போது தான் உணர்ந்தாள். தன் பின்னால் எதோ அசைவு தெரியவும் திரும்பிப் பார்த்தாள். அங்கு ப்ரேம் இவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அதை பார்த்த ஆஸ்வதிக்கு உடல் நடுங்கியது..ச்ச வரும்போது கதவை தாப்பாள் போட மறந்துவிட்டிறிந்தாள்.. தன் மடதனத்தை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு அவனை பார்த்து “என்ன வேணும்”என்றாள்.
(உயிராய் காப்பாளா)