அத்தியாயம்-31 ஆஸ்வதியும் ஆதியும் கை கோர்த்துக்கொண்டு தங்களுக்குள் புன்னகைத்தபடி அந்த நிமிடத்தை சந்தோஷமாக நினைத்தபடி நடந்து வந்துக்கொண்டிருக்க…… அப்போது ஒரு நான்கு பேர் அவள் அருகில் வந்து அவளை இடித்துக்கொண்டு சென்றனர்.. அதனை கண்ட ஆஸ்வதி அவர்களை திரும்பி பார்க்க…. அவர்களோ அதனை பொருட்படுத்தாமல் மெதுவாக நடந்து இவளை பார்த்து இழித்துக்கொண்டே போக…. ஆஸ்வதிக்கு கோவம் வந்தது.. அது மட்டும் இல்லாமல் அசிங்கமாக அவளை வருணித்தும் சென்றனர். அதை கேட்ட ஆதியின் கைகள் இறுக்கிக்கொண்டு அவர்களை முறைத்துக்கொண்டும் நடந்தவாறே ஆஸ்வதியின் அருகில் நடக்க… ஆஸ்வதி வாயில் எதோ முனுமுனுத்துக்கொண்டே நடந்து வந்தாள். “ஏஞ்சல் என்னாச்சி”என்றான் ஆதி அவளது முனங்களை கேட்டவாறே… “அதலா ஒன்னும் இல்ல ஆதி நாம போலாம்.”என்றாள் “ம்ம்ம். என்று தலை ஆட்டிவிட்டு அவர்கள் செல்லும் போது அதே நான்கு பேர் வந்து மறுபடி அவளிடம் வம்பு செய்தனர் “என்னமா.. இவன் கூடவா வந்த”என்றான் ஒருவன் ஆஸ்வதி அதை கேட்டவனை பார்த்து முறைக்க….. “பாத்த தெரில ஆளு ஒரு மாறி இருக்கனே மா உனக்கு கஷ்டமா இல்ல” என்றான் ஒருவன் “அத விடு டா..ஆளு சும்மா சூப்பரா இல்ல”என்றான் ஆஸ்வதியை கீழ் இருந்து மேல் வரை பார்த்து. அதில் ஆஸ்வதி சற்றே கோவத்துடன் “கொஞ்சம் தள்ளுங்க நாங்க போகனும்”என்றாள். “எங்க போனுமா சொல்லு நாங்க கூட்டிட்டு போறோம்..”என்றான் “இங்க பாருங்க அவ என் ஏஞ்சல் அவள எதாவது சொன்னா அப்புறம் தாத்தூட்ட உங்கள சொல்லிவிட்றுவேன்”என்றான் ஆதி விரலை நீட்டி அவர்களை எச்சரித்தவாறே… “இங்க பாருடா மிரட்டுறத….”என்று ஆதி கையை பிடித்து முறுக்கினான் அதில் அவன் கை வலிக்கா”ஆஆ… வலிக்கிது ஏஞ்சல்”என்று கத்தினான் “அவர விடுங்க ப்ளீஸ் என்று அவனது கையை விடுவிக்க போராடிக்கொண்டு இருந்தாள் “என்னமா கண்ணு உன் புருசன விடனுமா. என்று அவன் அவளை ஒரு மாதிரி பார்த்துக்கொண்டே இப்பொது அவள் கையை பிடித்துக்கொள்ள… அதில் அவள் தன் கையை விடுவிக்க போராடிக்கொண்டு இருந்தாள்.. அதனை பார்த்த ஆதிக்கு அவர்களை இங்கயே கொல்லும் அளவிற்கு வெறி வந்தது ஆதியின் கண்கள் இரண்டும் கோவத்தில் சிவந்து போக… பின் அங்கு ஒரு காவலர் வருவதை பார்த்த அந்த நான்வரும் தங்களுக்குள் எதோ பேசிக்கொண்டு அவர்களை விட்டு விலகினர்.. அதில் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு ஆஸ்வதி அவனை அழைத்துக்கொண்டு காரில் ஏறி அமர்ந்தாள் அவள் கண்களில் மட்டும் கண்ணீர் வழிந்த வண்ணம் இருந்தது. அதை கண்ட ஆதி அவள் கண்ணீரை துடைத்துவிட்டு “அழாத ஏஞ்சல் நாம தாத்தூட்ட இவங்கள பத்தி சொல்லலாம் அவரு இவங்கள அடியடினு அடிச்சிடுவாறு”என்றான். அதில் அவன் புறம் திரும்பி உட்கார்ந்த ஆஸ்வதி அவன் கையை எடுத்து சுற்றி முற்றி பார்த்து “எங்கயாச்சும் வலிக்கிதா”என்றாள் அவன் அப்போதுதான் வலியை உணர்ந்தவன் போல “ஆஆஆ… ஆமா ஏஞ்சல் வலிக்கிது.”என்றான் உடனே அவள் அவன் கையை தேய்த்துவிட்டு “வீட்டுக்கு போய் மருந்து போட்டுவிடுறேன்.. ஆதி இது தாத்தூக்கு தெரிய வேணா”ஏன்றாள் “ஏன் ஏஞ்சல்”என்றான்.. “இல்ல ஆதி இது தாத்தூக்கு தெரிஞ்சா அப்புறம் தாத்தா நாமள வெளிய விடமாட்டாரு அப்பறம் எப்டி நாம உங்களுக்கு டாஸ்லா வாங்குறது”என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு அவள் சொன்னதை எல்லாம் கேட்டுக்கொண்டு “ஆமல இது தாத்தூ கேட்டிச்சி டாய்ஸ் வாங்க விடாது.”என்றான் ஆதி அவன் சொன்ன பாவனையில் இவ்வளவு நேரம் இருந்த சஞ்சலம் நீங்கி அழகாக புன்னகைத்தாள் ஆனால் ஆதியின் முகமோ கோவத்தில் கொடூரமாக மாறியது. “என் வதுவையாடா தொடுறீங்க….. இன்னிக்கி ஒரு நாள் தான்டா உங்க கை உங்க உடம்புல இருக்கும்…”என்று மனதில் கர்ஜீத்துக்கொண்டான்.. பின் வீட்டிற்கு சென்று இருவரும் உடை மாற்றி இரவு சாப்பிட கீழே வந்தனர். இருவரும் சிரித்து பேசி விளையாடிக்கொண்டே கீழே வந்ததை பார்த்து அங்கு இருந்த அனைவருக்கும் எரிச்சலாக வந்தது.. அதும் பூனம் அன்று தன் கணவனை ப்ரேமை பார்க்க சொல்லிவிட்டு தான் இன்று வீட்டில் உட்கார்ந்திருந்தார்.. தன் மகன் மட்டும் அங்கு கண் விழிக்காமல் செத்தவன் போல் கிடக்க….. இங்கு இவர்கள் ஊர் சுற்றி கொண்டாடுகிறார்களா.. என்று எண்ணியவள். எதோ பேச வர…. அப்போது தான் தன் கணவன் “எதும் இனி நீ அங்க பேச கூடாது.. நம்ம அவன தீத்துக்கட்டிட்டு அவள பார்த்துக்கலாம்…”என்று சொன்னது நியாபகம் வர… இருக்கு டி உனக்கு என் புள்ள மட்டும் சரி ஆகி வரட்டும் அப்புறம் இருக்கு உனக்கு.. என்று மனதில் வசைப்பாடிக்கொண்டாள்.. அபூர்வாவோ… ஒரு படி மேலே சென்று ஆதியை பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தாள். ஆனால் ஆதியோ ஆஸ்வதியோ அங்கு யாரையும் கவனிக்கவே இல்லை.. அவர்கள் உலகம் அனி விதுன். எப்போதாவது விஷால்…அவ்வளவே.. பின் அனைவரும் சாப்பிட்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டனர். விதுனும் வந்து அவர்களுடன் சாப்பிட்டு பின் சிறிது நேரம் பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டான் ஆதி அன்று ப்ரேம் தங்கள் அறையில் நுழைந்ததில் இருந்து ஆஸ்வதி உடன் தங்கள் அறையில் தான் தூங்குகிறான்.. தன்னவளின் சந்தேகப்பார்வை இன்னும் அவன் மீது அதிகமாகியதே தவிர குறையவில்லை.. ஆனால் தன் சந்தேகத்தை ஆஸ்வதி வாய் திறந்து அவனிடம் கேட்பது இல்லை. அதுதான் ஆதிக்கு ஆஸ்வதியை நினைத்து ஆச்சரியமாக இருந்தது அன்றும் ஆதி தன்னவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்க…. ஆஸ்வதி எப்போதும் போல அவனுக்கு தட்டிக்கொடுத்துக் கொண்டே தூங்க வைத்துக்கொண்டு இருந்தாள். சிறிது நேரம் சென்றதும் ஆஸ்வதி ஆதியின் பக்கம் படுத்து உறங்கிவிட….. ஆதி மூடிய கண்களை திற்ந்தவன்.. இமைக்காமல் ஆஸ்வதியை தான் பார்த்துக்கொண்டு இருந்தான். அதன் பின் ஆதி எங்கோ எழுந்து மெதுவாக சென்றுவிட்டான்… அங்கு ஒரு நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பாரில் நான்கு பேர் உட்கார்ந்து மது அருந்திக்கொண்டு தங்களுக்குள் பேசிக்கொண்டும், கத்திக்கொண்டும் இருந்தனர். “ச்ச நல்ல பீஸ்டா அது தப்பிச்சிட்டா.”என்றான் ஒருவன் “ஆமா டா அந்த போலீஸ் மட்டும் வரல அவள…”என்று ஒருவன் ரசித்து சொல்ல…. “டேய் விடுறா திரும்ப கைல மாட்டாமளா போவா.. அப்போ இருக்கு”என்றான் ஒருவன் நான்கு பேரும் எதோ எதோ பேசிக்கொண்டு பாரை விட்டு வெளியில் வந்து பேசிக்கொண்டே நடந்து சென்றுக்கொண்டு இருந்தனர்.. அப்போது ஒரு மரத்தின் பின்னால் இருந்து ஒரு உருவம் அந்த நான்கு பேரையும் கண்ணில் வெறியோடு பார்த்துக்கொண்டு நின்றிருந்தது.. அடுத்த நாள் காலையில்.. ஆஸ்வதி எப்போதும் போல பேட்டில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தாள் அவள் அருகில் ஆதியும் அவள் கையை பிடித்தவாறு உறங்கிக்கொண்டு இருந்தான்.. பின் ஆஸ்வதி முழிப்பு வந்து புரண்டு படுத்து கண்ணை கசக்கிக்கொண்டு எழுந்தாள். அங்கு அவளவன் காற்றில் அலை அலையாக கேசம் ஆட… அதை கை கொண்டு அடக்க அவளுக்கு ஆசையாக இருந்தது. பின் தூக்கத்தில் கூட மெலிதாக சிரித்த வண்ணம் தூங்கிக்கொண்டு இருந்தான்,.. அதை ரசித்துக்கொண்டே எவ்வளவு நேரம் உட்கார்ந்தாள். என்று அவளுக்கே தெரியவில்லை.. பின் பால்கனியில் ஒளித்த பறவைகளின் சத்தத்தில் தான் நினைவிற்கு வந்து.. தலையில் தட்டிக்கொண்டு குளியல் அறைக்குள்ளே சென்றுவிட்டாள் குளித்து முடித்து வெளியில் வந்து பார்க்கும் போதும் ஆதி நன்றாக உறங்கிகொண்டு இருந்தான். அவளும் அவனை பிறகு வந்து எழுப்பிக்கொள்ளலாம் என்று கீழே சென்றாள். அங்கு தாத்தா உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டு இருந்தார் ஆஸ்வதி சிரித்துக்கொண்டே அவர் அருகில் சென்று அவர் காலில் விழுந்தாள்.. இது எப்போதும் நடப்பது தான் தாத்தா மெலிதாக சிரித்துக்கொண்டே அவள் தலையில் கை வைத்து வாஞ்சயாக தடவினார்.. “சாரி தாத்தா.. நேத்து பீச் போய்ட்டு வர லேட் ஆயிட்டு.. உங்கள பாக்க முடில… “என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டே “அதுக்கு என்னடா எப்பவோ தான நீங்க வெளில போறீங்க..ஆமா நேத்து.. வெளில எதும் பிரச்சனை இல்லல…..”என்றார் தாத்தா. தாத்தா அப்படி கேட்டதும் ஆஸ்வதிக்கு நேற்று பீச்சில் நடந்தது நியாபகம் வந்தது இருந்தும் அதை தனக்குள் மறைத்துக்கொண்டு.. “அதலாம் எதும் இல்ல தாத்தா நாங்க ஹேப்பியா இருந்தோம் ஆதி கூட நல்ல ஹேப்பியா இருந்தாரு.”என்றாள் ஆஸ்வதி.. “சரிடாமா நீ போய் சாப்டு”என்றார் “ம்.”என்று தலை ஆட்டிவிட்டு கிட்சன் உள்ளே சென்றாள்..அப்போது டிவியில்.. “வணக்கம்.இன்றைய முக்கிய செய்திகள்..நேற்று இரவு கடற்கரையின் பக்கம் நான்கு பேர் உடம்பில் பயங்கர காயங்களுடன் மயங்கி கிடந்தனர்…அவர்கள் யார் என்று விசாரித்ததில் அவர்கள் நான்கு பேரும் அந்த பகுதியை சேர்ந்த மிகப்பெரிய ரவுடிகள் என்று தெரிய வருகிறது. அது மட்டும் இல்லாமல் அவர்கள் நான்கு பேருக்கும் யார் தாங்களை அடித்தது என்று தெரியவில்லை.”என்று நியூஸ் வாசித்துக்கொண்டே அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டனர் அப்போது தான் ஆஸ்வதி தனக்கு காபி போட்டுக்கொண்டு வந்து தாத்தாவிடம் உட்கார்ந்தாள்.. அவள் டிவியில் ஓடிய நான்கு பேரின் புகைப்படத்தையும் பார்த்து அதிர்ந்து போனாள். “இது நம்மக்கிட்ட நேத்து சண்டை போட்டவங்களாச்சே. அவங்களுக்கு எப்டி இப்டி ஆச்சி”என்று நினைத்துக்கொண்டே..”ஆமா அவங்களே ரவுடிங்க அவங்களுக்கு இப்டி ஆகலானாதான அதிசயம்”என்று அதனை பற்றி யோசிக்காமல் விட்டுவிட்டாள். “அப்புறம் மா ஆஸ்வதி நான் நாளைக்கி ஒரு வேலையா பூனே வரைக்கும் போனும் டா..வர எப்டியும் ஒரு வாரம் ஆகிடும்..அதுவரை நீதான் ஆதிக்கையும் , இந்த வீட்டையும் பாத்துக்கனும்”என்றார் தாத்தா.. அவர் சொன்னதை கேட்டு ஆஸ்வதி அதிர்ந்தாலும் அதை அவரிடம் காட்டாமல்.”ஏன் தாத்தா பெரிய வார்த்தையல்லாம் சொல்றீங்க நான் பாத்துக்குறேன்”என்றாள் ஆஸ்வதி “ம்ம்…அப்டியே உங்க பாங்க் அக்கவுண்ட் டீட்லை அப்புறம் இந்த வீட்டோட பத்திரம் அப்புறம் உங்க சொத்து எல்லாத்தையும் அவ கையில கொடுத்துட்டு போய்டுங்கப்பா நாங்களும் இனி அவ கீழ அவ கைய எதிர்ப்பார்த்துட்டு உட்கார்ந்துருக்கோம்..”என்றவாற அங்கு வந்தார் அஜய் அவரை கண்டதும் ஆஸ்வதி அந்த சோபாவில் இருந்து எழுந்துவிட்டாள்…அதை கண்ட அஜயும் பரத்தும் ஒருத்தரைக்கொருத்தர் பார்த்துக்கொண்டு. “போதும் போதும் எங்க முன்னாடி நடிச்சது.. என்று தன் தந்தையின் பக்கம் திரும்பி. “அப்பா உங்களுக்கு என்ன ஆச்சி.. உங்களுக்கு இவள எப்டிப்பா புடிச்சிது இவளும் இவ பார்வையும் கொஞ்சம் கூட சரி இல்ல…. இவள இங்க கூட்டிட்டு வந்து எவ்வளவு பெரிய வீட்ட நிர்வாகம் பண்ண சொல்றீங்கனு உங்களுக்கு புரிதா. அதும் இல்லாம நாங்க இந்த வீட்டுல இருக்கோம்.. போயும் போயும் இவள போய் இந்த வீட்ட பாத்துக்க சொல்றீங்க…..”என்றான் அஜய் கோவத்துடன் அதை கேட்ட தாத்தா அவரை பார்த்து முறைத்துக்கொண்டே இருந்தார்.. “என்னப்பா அவள கேட்காம என்னை முறைச்சி பாக்குறீங்க…..”என்றார் அஜய் “இந்த வீட்டோட உரிமையானவங்கள தான் நான் இந்த வீட்டோட பொருப்ப கொடுத்துருக்கேன்…அதுக்கு உங்க யாரோட சம்மதமும் எனக்கு வேணாம்…இந்த வீடு அனிஷா ஆதித்தோட வீடு..இதுல உரிமை கொண்டாட…. ஆதித்தோட மனைவியா ஆஸ்வதிக்கு எல்லா உரிமையும் இருக்கு…இத நான் உங்க எல்லார்கிட்டையும் முன்னாடியே சொல்லிருக்கேன் திரும்ப திரும்ப கேட்டா அதுக்கு என்னால எந்த பதிலையும் சொல்ல முடியாது”என்றார் தாத்தா கோவமாக….சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து கோவமாக சென்றுவிட்டார் “ச்ச….. இவள என்ன பண்றது..அண்ணா”என்றான் அஜய் தன் அண்ணன் பரத்தை பார்த்து “ம்ம் விடுடா அதான் அவரு ஊருக்கு போறார் இல்ல….. அது வர இவ எப்டி இந்த வீட்டுல இருக்கானு பாக்கலாம்..”என்றார் பரத் கோவமாக முகத்தை வைத்துக்கொண்டு ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. பெரியவர் ஊரில் இருந்து வரும் போது இருவரும் எந்த நிலையில் இருக்க போகிறார்கள் என்று.