உயிர் போல காப்பேன்-34

5
(15)

அத்தியாயம்-34
அனைவரும் குரல் வந்த திசையில் அதிர்ந்து நோக்க… அங்கு ஆதி தான் கண்கள் சிவக்க….. உடல் இறுகிப்போய் நின்றிருந்தான்..
அவனின் உடல் இறுக்கத்தை கண்டுக்கொண்ட ஆஸ்வதி ஆதியை எந்த அதிர்வும் இல்லாமல் பார்த்தவள் கண்கள் கலங்கி முகத்தை கீழே நோக்கி குனிந்துக்கொண்டாள்..
ஆதியின் கண்களோ அபூர்வாவையும். ரியாவையும் தான் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.
“என்னடா உனக்கு. குரல் ரொம்ப உயருது..”என்று கத்தினார். ரியா
“அதானே என்ன….. உனக்கு பைத்தியம் ரொம்ப முத்தி போச்சா.”என்றார் அபூர்வா.
“முத்திபோல அத்த இப்போதா சரி ஆகிருக்கு…”என்றான் கம்பீர குரலில்.
அதில் அதிர்ந்த இருவரும் ஒருவரைக்கொருவர் முகத்தை பார்த்துக்கொள்ள…
“என்ன அதிர்ச்சியா இருக்கா. பெரியம்மா. அன்ட் அத்தை…”என்றான் அவர்களை ஒரு கேலியான பார்வை பார்த்தவாறெ.
அவர்களையும் அறியாமல் அவர்கள் தலை தன்னாளே ஆட….
“ம்ம்.. இதுக்கே அதிர்ந்தா எப்படி இன்னும் எவ்வளவோ அதிர்ச்சி காத்துட்டு இருக்கே. ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு பயங்கரமா பசிக்கிது.. ம்ம் என்றவாறே ஆஸ்வதி பக்கம் திரும்பி…”வது எனக்கு ரொம்ப பசிக்கிது.. சாப்டலாமா.”என்றான் தெளிவாக
ஆதி பேசுவதையே எந்த உணர்வும் காட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தவள். சரி என்று தலை ஆட்டிவிட்டு டைனிங் ஹாலை நோக்கி சென்றாள் அவள் பின்னால் ஆதியும் சென்றான். ரியா அபூர்வாவை முறைத்தவாறே
அதனை பார்த்த அவர்கள் இருவரும் அதிர்ந்து போய்..”என்ன அண்ணி இவன் திடீர்னு இப்டி தெளிவா பேசுறான்…”என்றாள் அபூர்வா
“அதா அபூர்வா எனக்கும் புரில….. காலையில வரைக்கும் பைத்தியமா சுத்திட்டு இருந்தான் இப்போ என்னனா.. இப்டி தெளிவா பேசிட்டு போறான் ஒன்னுமே புரிலையே. ம்ம். சரி நீ சீக்கரம் உங்க அண்ணங்களுக்கு போன் பண்ணி சொல்லு. அப்போதான் நாம அடுத்து என்ன பண்றதுனு புரியும்..”என்றாள் ரியா..
“ஹான் சரி அண்ணி..”என்றவர் தன் அண்ணன் பரத்திற்கு அழைத்தாள்.. ஆனால் அந்த பக்கம் அழைப்பு செல்லவில்லை என்ற பதில் தான் கிடைத்தது.
“அண்ணி பரத் அண்ணாக்கு போல….”என்றாள் அபூர்வா
“ஓஓஓ…. அப்போ. நா அஜய் க்கு கால் பண்றேன்…”என்றவர் அஜய்க்கு அழைக்க… ஆனால் அதற்கும் அதே பதில் தான் கிடைத்தது..
“என்ன அபூர்வா இது அஜய்க்கு போன் பண்ணாலும் அதே பதில் தான் வருது…”என்றார் புருவம் சுருக்கியவாறே..
“ம்ச் என்ற அபூர்வா திரும்பி ஆதியை பார்க்க… அவனோ. ஆஸ்வதி பரிமாறிய சாப்பாட்டை கையால் பிசைந்தவாறே. இவர்கள் இருவரையும் தான் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.. அதில் இருவரின் முகமும் வெளிறி போய் இருந்தது
“என்ன அண்ணி இவன் நம்மள இப்டி பாக்குறான்.”என்றாள் அபூர்வா பயந்தவாறே.
“அதான் எனக்கும் புரில…. அவன் முகம் எதோ வெறி பிடிச்சவன் மாறியே என் கண்ணுக்கு தெரிது அபூர்வா..”என்றார் ரியா
“அண்ணி நீங்க வேற பயமுறுத்தாதீங்க….”என்றவள் மறுபடி தன் போனில் இருந்து தன் கணவருக்கு அழைக்க…. அதும் அதே பதிலை தான் சொல்லியது
“அண்ணி என் வீட்டுக்காரருக்கும் போன் போல அண்ணி,,…”என்றார் அபூர்வா
“என்னது. அது எப்டி அபூர்வா ஒரே நேரத்துல எல்லாருக்கும் போன் போகாம இருக்கும்…”என்றார் ரியா
“அதானே எனக்கும் புரில….”என்றவர் முகம் வெளிறி போய் தன் போனை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாக நிற்க….
அப்போது வீட்டின் ஹாலில் வைக்கப்பட்டு இருந்த போன் ஒலித்தது.. அதனை அங்கு இருந்த அனைவரும் காண… ஆதியின் முகமோ கோவத்தில். பழிவெறியில் சிவந்து போய் இருந்தது..
ஆஸ்வதி போனை எடுக்க அங்கிருந்து நகர பார்க்க…. ஆனால் அவளால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை.. என்னவென்று ஆஸ்வதி குனிந்து பார்க்க…. அவளது கை ஆதியின் பிடியில் இருந்தது.. ஆஸ்வதி புரியாமல் அவனை பார்க்க….. அவனோ அவர்களையே வெறித்துக்கொண்டு.
“இது அவங்களுக்குனு வந்த போன். அத அவங்களே எடுக்கட்டும் வது…”என்றான் கோவத்தை அடக்கிய குரலில்.
அதை கேட்ட ஆஸ்வதியும் சரி என்ற தலை ஆட்டலுடன் அமைதியாக நின்றுக்கொள்ள…
“ம்ம்ம்.. அத்த…..”என்றான் ஆதி..
அவன் குரலில் இருவரும் அதிர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே
“என்னப்ப்பா. ஆதி”என்றார் அபூர்வா பயத்தை அடக்கியவாறே
“உங்களுக்கு தான் போன். உங்க ரெண்டு பேருக்கும்.. ஏதோ சோகமான செய்தினு நினைக்கிறேன்.. எடுத்து பேசுங்க….”என்றான் ஆதி
அதை கேட்ட இருவரும் மிரட்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு.. பின் தங்களை சமாளித்துக்கொண்டு அபூர்வா போனை எடுத்து காதில் வைத்தார்.. அதில் என்ன சொல்லப்பட்டதோ..
“அய்யோ. அண்ணா.”என்று அபூர்வா வீடே அதிரும் வண்ணம் கத்தினார்
அவர் அருகில் நின்றிருந்த ரியா அபூர்வாவின் தோளை பிடித்துக்கொண்டு.
“ஏய் அபூர்வா என்னாச்சி ஏன் இப்டி கத்துற….”என்றார்
அதை கேட்ட அந்த வீட்டில் மிச்சம் இருந்த அதிதி. விஷால்.. அனி என்று அனைவரும் தங்கள் அறையில் இருந்து கீழே ஓடிவர…. ஆஸ்வதி அபூர்வா கத்திய கத்தலில் அதிர்ந்து போனவள் ஆதிக்கு சாப்பாடி போட்டுக்கொண்டிருந்த கரண்டியை கீழே போட்டுவிட்டு அபூர்வா இருக்கும் இடம் நோக்கி ஓடி வந்தாள்
ஆதி மட்டும் அதிராமல் அப்படியே உட்கார்ந்திருக்க…. அதனை ஆஸ்வதியும் அப்போது தான் வீட்டின் உள் வந்த விதுனும் கவனித்துக்கொண்டு தான் இருந்தனர்.
“என்னாச்சிமா ஏன் இப்டி கத்துற…..”என்றாள் அதிதி கோவமாக
“அய்யோ.. அதிதி…”என்று அபூர்வா கலங்கிய குரலில் கத்த…
“என்னாச்சிமா ஏன் அழறீங்க…..”என்று அவள் அருகில் வந்து கேட்டாள் ராக்ஷி
“ராக்ஷி. அண்ணங்களுக்கு…”என்று அவர் திணற….
“என்னாச்சி அபூர்வா. சீக்கரம் சொல்லு…”என்று பதறினார் ரியா
“அண்ணங்க போன கார் ஆக்ஸிடன்ட் ஆகிட்டாம் அண்ணி.”என்றார் கதறியவாறே
அதை கேட்ட அனைவரும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள… அபூர்வாவும் ரியாவும் ஒரு சேர ஒரே நேரத்தில் ஆதியை தான் பார்த்தனர்.
அவர்களின் பார்வை தன்னை நோக்க காத்திருந்தவன் போல் அவன் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ் தெரிந்தது..அதை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவர் கதறியவாறே..
“என்ன அபூர்வா சொல்ற….. அவருக்கு அவருக்கு என்னாச்சி.”என்றாள் ரியா
“தெரில அண்ணி. ரெண்டு பேரையும் நம்ம ப்ரேம அட்மிட் பண்ணிருக்க ஹாஸ்பிட்டல தான் அட்மிட் பண்ணிருக்காங்களாம்”என்றார் அபூர்வா
“அய்யோ. நா உடனே அவர பாக்கனும்.”என்று ரியா கார் இருக்கும் இடத்தை நோக்கி ஓட…..
அவர் வீட்டின் படியை மிதிப்பதற்குள் வீட்டின் வெளியே காவலர்கள் வந்து குவிந்துவிட்டனர்
அதை பார்த்த ரியா மிரட்சியுடன். பின் பக்கம் கால் வைத்தவாறே உள்ளே வர…..
“எங்க போறீங்க….. பெரியம்மா.. அதுக்குள்ள….”என்ற ஆதி தான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து வேகமாக எழுந்து கம்பீரமாக ஆஸ்வதியின் பக்கம் வந்து நின்றுக்கொண்டான்
காவலர்களை பார்த்த அபூர்வாவும் மிரண்ட பார்வை ஒன்றை தன் அண்ணிக்கு கொடுத்துவிட்டு ஆதியை காண…
“ஆதி என்ன இது இப்போதானே போன் வந்துது. உன் பெரியப்பா ரெண்டு பேருக்கும் ஆக்ஸிடன்ட் ஆகிட்டுனு.. நாங்க போக வேணாமா எதுக்கு இவ்வளவு போலீஸ் வந்துருக்கு “என்றார் ரியா எச்சை விழுங்கியவாறே
“ம்ம் ஆமா நாங்க போகனும்ல ஆதி.”என்றார் அபூர்வாவும்
“ம்ம்ம் ஆமா ஆமா போய் தானே ஆகனும்.”என்று நக்கலாக சொன்ன ஆதி போய் தானே என்பதை அழுத்தி கூறினான்.. அதிலே அவர்கள் உடல் நடுங்கியது..
“அப்புறம் என்ன போலீஸ் எதுக்கு தானே கேட்டீங்க…..”என்றான் ஆதி ஆஸ்வதியின் புடவையில் தன் கைகளை துடைத்தவாறே.
அவனின் இந்த செயலில் ஆஸ்வதி முகம் அந்த நேரத்திலும் கனிந்து போனது
“ம்ம்ம்ம்.. எதுக்கு சார் வந்துருக்கீங்க….. எங்க பெரியம்மா கேட்குறாங்களே பதில் சொல்லுங்க….”என்றான் ஆதி காவலர்கள் மத்தியில் நிற்கும் உயர் அதிகாரி ஒருவரை பார்த்து
அவரும் ஆதியை பார்த்து தலை அசைத்தவாறே.
“நாங்க உங்க ரெண்டு பேரையும் அரஸ்ட் பண்றேம். மேடம்..”என்றார் அவர்
அவர் சொன்னதை கேட்ட ஆஸ்வதி அதிர்ந்து போய் விதுனை பார்க்க….. அவனோ எந்த அதிர்வும் இல்லாமல் இதெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியும் என்பது போல் போலீஸை தானே பார்த்துக்கொண்டு இருந்தான். அதிலே அவனுக்கு ஆதியை பற்றி அனைத்தும் தெரியும் என்று அவளுக்கு புரிந்து போனது
அப்போது தான் அனியும் விதுன் கூட வந்து இறங்கினாள். அதனால் அவளும் இதனை அதிர்ச்சியுடன் பார்த்தவாறே தன் அண்ணியின் பக்கம் போய் நின்றுக்கொண்டாள்..
அதனை கேட்ட இருவருக்கும் அல்லு அள்ளிவிட்டது.
“எ… எதுக்கு சார் எங்கள அரஸ்ட் பண்றீங்க….. நாங்க என்ன தப்பு செஞ்சோம்…”என்றார் அபூர்வா துள்ளியவாறே
“ம்ம்ம்ம் எதும் தப்பு பண்ணாதவங்கள இங்க யாரும் அரெஸ்ட் பண்ண மாட்டாங்க அத்த….”என்றான் கேலியாக ஆதி
“ம்ச். ஆதி நீ எதோ மனசுல வச்சிக்கிட்டு எங்கள மாட்டி விட்றுக்கனு நினைக்கிறேன்…”என்றார் ரியா..
“ம்ச். என்ன பெரியம்மா இது,. அவங்க இன்னும் எதுக்கு உங்கள அரெஸ்ட் பண்றோம்னே சொல்லல அதுக்குள்ள…. நா தான் எதோ பண்றேனு முடிவு பண்ணிட்டீங்க…..”என்றான் ஆதி நக்கலாக
அதை கேட்ட இருவரும் வந்திருக்கும் போலீஸை பார்க்க…
“மிஸ்டர் சர்மா ட்ரெஸ்ட்ல நிறைய மோசடி நடந்துருக்கு. அதுக்கு காரணம் மித்ரன், பரத்,அஜய்,ப்ரேம்,அப்புறம் நீங்க ரெண்டு பேரும் தானு தெரிய வந்துருக்கு..”என்று அவர்கள் முடிப்பதற்குள்..
“இது அப்பட்டமான பொய் இத நாங்க ஏத்துக்க மாட்டோம்…”என்று அபூர்வா கத்த
“இருங்க அத்த இன்னும் அவர் சொல்லி முடிக்கல…. நீங்க சொல்லுங்க சார்…”என்றான் ஆதி
“அப்புறம் உங்க அண்ணன் மிஸ்டர் விஷ்ணுவ கொன்னதுக்கும். உங்க அக்கா ஹஸ்பன்ட் மிஸஸ் ரூபாவதி அவங்களோட வீட்டுக்காரர் மிஸ்டர் குணால் அவர ஆள் செட் பண்ணி கொன்னது இது எல்லாமே நீங்க தான் செஞ்சிங்கனு நாங்க நினைக்கிறோம். அதுனால உங்கள அரஸ்ட் பண்றேன்…”என்றார் அவர்
அதை கேட்டதும் ஆஸ்வதி முகம் அதிர்ச்சியில் உணர்வற்று நின்றாள் என்றால் ரூபாவதியோ.. அப்படியே மடிந்து உட்கார்ந்துவிட்டார் அவருக்கு இதுவரை இந்த சந்தேகம் கூட வந்தது இல்லை.. தன் கணவன் ஆக்ஸிடன்ட்டில் இறந்து விட்டதாக தான் இதுவரை அவள் நினைத்திருந்தார் ஆனால் இப்போது தன் தம்பி தங்கையே இப்படி பட்ட துரோகத்தை தனக்கு செய்திருப்பதை பார்த்து ரூபாவதி உடலில் உணர்வற்று கிடந்தார்
ஆஸ்வதி ரூபாவதி இதை கேட்டதும் தடுமாறி கீழே உட்காருவதை பார்த்தவள்…”மா.”என்ற அழைப்புடன் அவர் அருகே ஓடினாள் அஞ்சலியும் மா என்று கத்திக்கொண்டே அவர்கள் அருகே ஓடினாள்
அதை பார்த்த ஆதி முகம் கோவத்தில் சிவந்து போனது எவ்வளவு கொடுமை இது சொந்த அக்காவின் கணவரையே கொன்றுவிட்டார்கள்.. ஏன் தன் விச்சுப்பா.. சொந்த அண்ணன். தம்பி அல்லவா அவரையே இவர்கள் நினைக்கும் போதே ஆதிக்கு கண்கள் சிவந்து போனது கோவத்தில்
“ஏன் என் அப்பாவ கொன்னீங்க….”என்றான் ஆதி இருவரின் பக்கமும் கோவமாக நெருங்கியவாறே அதில் அவர்கள் இருவரும் அதிர்ந்து நின்றனர்..

(வருவாள்..)

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!