அத்தியாயம்-35 சர்மாவிற்கு முதல் மகள் தான் ரூபாவதி அமைதியானவர். யாரையும் எதிர்த்து பேசமாட்டார்.. அவரது குணமே அதுதான்.. அவரை அதனால் யாரும் கூடவே சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். விஷ்ணு மட்டும் தான் தன் அக்கா என்று அவரை எப்போதும் வெளியில் கூட்டிப்போவது. எதாவது வாங்கி தருவது என்று அவர் மீது பாசமாக இருப்பார்.. விஷ்ணு வாங்கிதருவதை கூட அபூர்வா எப்போதாவது பிடிங்கிக்கொள்வார்.. அதனை கண்டு ரூபாவதி பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் ரூபாவதிக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற போது தான்.. தன் அண்ணன் மகனை அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரின் தாயார் கூறி இருப்பார் ரூபாவதிக்கும் தன் அத்தை மகன் குணாலை மிகவும் பிடிக்கும். அவரது அமைதியான குணம் குணாலுக்கும் மிகவும் பிடிக்கும். எனவே இருவரும் விரும்பியே திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் குணாலை பரத், அஜய்,அபூர்வாவிற்கு கொஞ்சமும் பிடிக்காது.. குணால் கொஞ்சம் வசதியில் குறைவானவன் தான் ஆனால் குணத்தில் உயர்ந்தவன் அதனாலே அவனிடம் இருந்து ஒதுங்கி தான் இருப்பார்கள் இந்த மூவரும். ஆனால் விஷ்ணுவிற்கு குணாலை மிகவும் பிடிக்கும்.. எப்போதும் அத்தான் அத்தான் என்று அவன் பின்னாலே தான் விஷ்ணு சுற்றுவான் அவரே தன் அக்காவுக்கு கணவனாய் வந்ததும் விஷ்ணுவிற்கு அவ்வளவு பிடித்தம்.. இப்படியே இவர்கள் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்க….. எந்த இடைஞ்சலும் இல்லாமல் பெரியவர் அடுத்து அடுத்து பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.. பரத் தன்னுடன் காலேஜில் படித்த பூனத்தை திருமணம் செய்துக்கொள்வதாக கூற அதனை பெரியவர் ஒத்துக்கொண்டார். அடுத்து அஜய்க்கு பெரியவர் பெண் பார்க்க…. அந்த பெண் ஏழையாக இருக்கிறார் என்று அஜய் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.. உடனே பெரியவர் தன் செல்ல மகன் விஷ்ணுவின் முகம் காண… அவரோ..”நா கல்யாணம் செய்துக்கிறேன்ப்பா. ஆனா அஜய் அண்ணாக்கு மேரேஜ் செஞ்சதும் பண்ணிக்கிறேன்…”என்றார் அதில் பெரியவரின் மனம் சந்தோஷப்பட்டது.. அதன் பின் அஜய்க்கு பெரியவரின் பாட்னர் மகள் ரியாவை திருமணம் செய்து வைக்க… அதற்குள் பரத்திற்கு ப்ரேம் பிறந்துவிட்டான் ரூபாவதிக்கோ திருமணம் ஆகி 6ஆன்டுகள் ஆகியும் அவருக்கு குழந்தையே இல்லை.. அதனை பற்றி அவர் எப்போதும் கவலைக்கொள்ள…. குணால் தான் ரூபாவதியை தேற்றுவார் அடுத்து அஜய்க்கு பார்த்த பெண்…மதுரா.. இவர் மும்பையிலே ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர். நல்ல அழகானவர்.. ஆனால் அதற்கு மாறாக நல்ல பண்புகளை கொண்டவர்.. இவருக்கு அப்பா மட்டுமே.. அவரும் மிகவும் வயதானவர்.. சர்மா கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த இவரது அப்பா திடீர் என்று இறந்துவிட….. அப்போது தான் பெரியவரிடம் வேலை கேட்டு சென்ற மதுராவை மிகவும் பிடித்து போன பெரியவர் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க மதுராவிடம் கேட்க….. அவர் பணக்காரர்கள் பற்றி அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லை என்றாலும் தன் அப்பா பெரியவர் பற்றி அடிக்கடி சொல்லிருப்பதை கேட்டவளுக்கு பெரியவரை தட்ட மனம் வரவில்லை.. சரி என்று மதுரா சொன்னதும் அஜய் க்கு அவளை திருமணம் செய்விக்க நினைத்தவர். அவன் முடியாது என்றதும் தன் மகன் விஷ்ணுவிற்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். விஷ்ணுவிற்கு மதுராவை மிகவும் பிடித்துவிட்டது அவளிற்கும் தான் விஷ்ணுவின் அமைதியான குணம் அவளை ஈர்த்தது.. இருவரும் ஒருவரைக்கொருவர் அமைதியான முறையில் காதல் செய்தனர்..இருவரின் காதலின் சின்னமாக பிறந்தான் ஆதித் ஆதித் பிறந்த பின் தான் பரத்திற்கு இஷானா பிறந்தாள் அஜய் ரியாவிற்கு முதலில் லிசா பிறந்தாள் அதன் பின் தான் விஷால் பிறந்தான்… அவர்களின் வாழ்க்கை எப்போதும் போல அழகாக அதும் ஆதித்துடன் இன்னும் அழகாக போய்க்கொண்டு இருந்தது அதன் பின் தான் நிலைமையெ மாறிவிட்டது.. அபூர்வாவிற்கும் பெரிய தொழில் அதிபர் மகன் மித்ரனை பெரியவர் திருமணம் செய்து வைக்க…. அபூர்வாவோ தன் மாமியார் வீட்டிற்கு செல்லாமல் ஏழை அண்ணியான மதுராவை வாட்ட ஆரம்பித்தாள்.. அவளுக்கு பிடித்தது தான் அவ்வீட்டில் நடக்க வேண்டும்.. அதும் அதை மதுரா தான் இழுத்து போட்டு செய்ய வேண்டும். அதனை கண்ட பெரியவர் அவர்களிடம் சண்டை போட செல்ல….. ஆனால் விஷ்ணு தான் அதனை பற்றி கேட்கவே கூடாது என்று அவரை கண்டிப்பாக சொல்லிவிட்டான் “ப்பா. இத பத்தி கேட்டா வீணா வீட்ல பிரச்சனை தான் வரும். அதும் இல்லாம இப்போ அபூர்வா கன்சீவா வேற இருக்கா இத அப்டியே விடுங்க……”என்று விட்டான் அதனால் அவரும் அமைதியாக இருக்க… பெரியவர் வேறு மற்ற மருமகளை விட மதுராவையே தொட்டதற்கும் கூப்பிட அதில் கடுப்பானவர்கள். மதுராவை இன்னும் வேலை வாங்கினர். இப்படியே ஓடிக்கொண்டு இருக்கும் நேரத்தில் தான் மதுரா மறுமுறை கருவுற்றிருக்க… விஷ்ணு இன்னும் மக்ழ்ந்தார்.. ஆதியோ பிறந்ததில் இருந்து தாத்தா இல்லை என்றால் விஷ்ணுவிடம் தான் இருந்தான். அதனால் அவனை வேறு யாராலும் தொட முடியவில்லை.. “ப்பா.. அவன் என் பையன்ப்பா உங்க கிட்டையே இருக்குறத பார்த்து நா அவன மறந்தாலும் மறந்துடுவேன்..”என்று அடிக்கடி மதுரா தன் மாமனாரிடம் சொல்லி சிரிப்பார்.. அவர் தன் மாமனாரை தன் தந்தை போல தான் பார்த்தார்.அதனால் அப்பா என்று தான் அழைப்பார் மதுரா. “ஹாஹா.. அதுனால என்னமா என் விஷ்ணுவோட பையன் எனக்கு பையன் மாறி தானே.. என் உயிரே இவன் தான்…”என்றிடுவார் அப்போது தான் ரூபாவதி கிட்ட தட்ட பத்து வருடம் கழித்து கருவுற்றாள் அதனால் மதுரா தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும் ரூபாவதியை கண்ணில் வைத்து தாங்கினாள். ஆதிக்கு 5வயது இருக்கும் போது தான் அனிஷா பிறந்தாள்.. அவள் பிறந்ததும் தான் அனைத்து பிரச்சனையும் பிறந்தது.. அனிஷா பிறந்த 6நாட்களில் மதுரா எங்கோ தொலைந்து போனார்.. அவரை ஊரெல்லாம் தேடி அலைந்தனர் விஷ்ணுவிற்கு. சரமாவிற்கு ஒன்றும் புரியவில்லை “என்னப்பா விஷ்ணு. மதுரா எங்கதான் போனா.. உங்கிட்ட எங்கையும் சொல்லிட்டு போலையா…”என்றார் பெரியவர் “இல்லப்பா நா நைட் படுக்குறப்போ அவ ரூம்ல தான் இருந்தா.. நா அவள பார்த்துட்டு பாப்பாவ கொஞ்சிட்டு தான் படுத்தேன்.. இப்போ காலையில நா எழுந்து பார்த்தா பக்கத்துல அவ இல்லை சரி கீழ வேலையா இருப்பா. நாம ஆபிஸ் போறதுக்கு கிளம்பலாம்னு உள்ள போனேன். ஆனா திரும்பி வரும் போது அவ இங்க இல்ல….. குழந்தை மட்டும் தூங்கிட்டு இருந்தா.. ஆதியும் தூங்கிட்டு இருந்தான்.. அவன எழுப்பி கேட்டா இங்க தானே இருந்தாங்க அப்டினு சொல்றான்.”என்றார் விஷ்ணு பதறியவாறே. “என்னப்பா இது ஆச்சரியமா இருக்கே.”என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்க….. “ஒரு ஆச்சரியமும் இல்ல….. இங்க பாருங்க இத பார்த்தா உங்களுக்கு தெரியும்…”என்று ஒரு கடிதத்தை அபூர்வா அவரிடம் காட்ட….. அதை சந்தேகமாக வாங்கிய பெரியவர் படித்தார்.”எனக்கு இந்த வாழ்க்கையில் கொஞ்சமும் விருப்பம் இல்லை.. எனக்கு வேறு ஒருவரை பிடித்திருப்பதால் அவருடன் செல்கிறேன் அவரின் ஆசைக்கு பிறந்த குழந்தைகள் அவரிடமே வளரட்டும்” இப்படிக்கு மதுரா என்று எழுதி இருந்தது அதை கேட்ட விஷ்ணு அதிர்ந்து போய் விட்டார் என்றால் பெரியவர் தலையில் இடி விழுந்தது போல் சமைந்து நின்றுவிட்டார் “என்னடா விஷ்ணு இது…”என்று பரத் கத்த…. “அப்போவே சொன்னென் இவ குடும்பத்துக்கு ஏத்தவளா தெரிலனு. உங்க அப்பா தான் ஏழை வீட்டு பொண்ணு. புரிஞ்சி நடந்துப்பா. குடும்பத்த பாத்து நடத்துவானு சொன்னாரு.. இப்போ ஓரடியா அசிங்கப்படுத்திட்டு போய்ட்டா.”என்றார் பூனம். அதை கேட்ட பெரியவர்..”பூனம் பாத்து பேசு என் மருமக அப்டி பட்டவ இல்ல…. இதுல வேற எதோ இருக்கு..”என்றார் அவர்களை சந்தேகமாக பார்த்தவாறே.. “அதானே உன் அப்பா நம்மள நம்பிட்டாலும்…அவருக்கு அவரோட 3பையனும் அவரு மனைவியும் குழந்தைகளும் தான் முக்கியம்…”என்றான் மித்ரன் அபூர்வாவை முறைத்தவாறே “ஆமாப்பா உங்களுக்கு நாங்க தானே பிள்ளைங்க….. நாங்களே சொல்றோம் அவ கொஞ்ச நாளாவே சரி இல்ல….. விஷ்ணு அண்ணா அறையில் உள்ள பால்கனியில நின்னுட்டு யாரையோ ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கா இத நா முன்னாடியே சொல்ல வந்தேன். ஆனா நீங்க தான் எங்கள நம்பவே மாட்டீங்களே.”என்றார் அபூர்வா தன் தந்தையை முறைத்தவாறே “இல்ல இது எதுமே உண்மை இல்ல….. மதுராவும் நானும் விரும்பி தான் எங்க வாழ்க்கைய வாழ்ந்தோம். அவ அப்டி பட்டவ இல்ல….”என்றார் விஷ்ணு அமைதியாக அதே நேரம் அழுத்தமாக… “ம்ச். அப்போ இத நம்புறியா விஷ்ணு நீ..”என்றவாறே அங்கு வந்தான் அஜய் அனைவரும் அவனையே பார்க்க… தன் கையில் இருக்கும் லேப்டாப்பை ஆன் செய்து அதில் ஒரு வீடியோவை ஓட விட்டார். அது அந்த வீட்டின் சிசிடிவி கேமிராவின் காட்சிகள் அதில் மதுரா அவசரமாக தன் புடவையின் தலைப்பை கொண்டு தலை முகத்தை மூடிக்கொண்டு. விறுவிறுவென வீட்டின் வாயிலை தாண்டி.. கொஞ்ச தூரத்தில் நின்ற பைக்கில் ஏறி சென்றுவிட்டார். இதனை கண்ட அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனார்கள்.. ஏன் தாத்தாவே தான் தவறு செய்துவிட்டோமோ.. என்று தான் அவருக்கு தோன்றியது.. ஆனால் இதில் பாதிக்கப்பட்ட விஷ்ணுவோ.. அப்படியே அமைதியாக நின்றவன் தன்னை சமாளித்தவாறே. “இனி யாரும் இந்த வீட்ல மதுராவ பத்தி பேசக்கூடாது. என் பிள்ளைங்கள இனி நானே வளர்த்துப்பேன்.. முக்கியமானது என்னனா என் பிள்ளைங்க கிட்ட அவங்க அம்மா பத்தி யாரும் பேசவே கூடாது..”என்றவன் விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டான்.. இதை கேட்ட தாத்தா மனம் உடைந்து போனார்.. தன் மகனின் வாழ்க்கையை நானே கெடுத்து விட்டேனோ. என்று கூட நினைத்தார்.. விஷ்ணுவிடம் இதைப்பற்றி பேச பயந்தார்.. ஆனால் அதன் பின் விஷ்ணுவோ மதுராவை பற்றி பேச யாரையும் விடவே இல்லை அதன் பின் தான் ரூபாவதி தன் கணவன் குணாலை காணவில்லை என்று தன் தந்தையிடம் கூறினாள்.. அவள் ஒரு வாரமாக குணால் வீட்டிற்கு வரவில்லை.. என்றே தன் தந்தையிடம் கூறினார் ஏனென்றால் குணால் ஒரு மார்க்கெட்டிங் ஆபிஸில் வேலைப்பார்க்கிறான்.. அவனுக்கு ஒரு வாரம் இல்ல பத்து நாள் பூனேயில் வேலை இருக்கும். அப்போது எல்லாம் ரூபாவதியை அவள் தந்தை வீட்டில் விட்டுவிட்டு போவான்.. இது போல தான் அன்றும் பத்து நாட்களுக்கு முன் விட்டுவிட்டு சென்றான். ஆனால் இன்று வரை அவன் வீட்டிற்கு வரவில்லை ரூபாவதி அவன் ஆபிஸிற்கு அழைத்து கேட்க……”5நாளுக்கு முன்னாடியே அவர் வந்துட்டாறே மேடம்.. எங்களுக்கு மெயில் அனுப்பிட்டாறே பூனே ல இருந்து வந்துட்டேனு.”என்றனர்.. அதை கேட்டு அதிர்ந்த ரூபாவதி குணாலின் போனுக்கு அழைக்க….. அதுவோ அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று வந்தது அப்போது தான் ரூபாவதிக்கு பயம் ஒட்டிக்கொண்டது உடனே தன் தந்தையிடம் சென்று கூற…. சர்மாவோ.. அதிர்ந்துவிட்டார் உடனே அனைவரும் கிளம்பி போலீஸில் புகார் குடுக்க…. அப்போது தான் ரயில்வே ட்ராக்கில் ஒரு பிணம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என்றும் அது குணாலின் அடையாளத்துடன் ஒத்து போவதாக சொல்ல… குடும்பமே அதிர்ந்துவிட்டது. (வருவாள்.)
Super sis