அத்தியாயம்-36 “இல்லப்பா.. அது அவரா இருக்காதுப்பா.. குணாலா இருக்காதுப்பா நா சொல்றத கேளுங்கப்பா.. அவர் இன்னும் பூனேல தான்ப்பா இருப்பாரு.”என்று ரூபாவதி கத்த….. அதில் அந்த வீடே அதிர்ந்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து அழைப்பு வரவும்.. பெரியவரும், விஷ்ணுவும் தான் நேராக அடையாளம் காட்ட சென்றனர் அவர்கள் கேட்டது உண்மை என்பது போல அங்கு பிணமாக இருந்தது குணால் தான்.. அதனை பார்த்த இருவரும் கலங்கி போய் விட்டனர் பெரும்பாலும் குணால் ட்ரைனில் தான் தன் பயணத்தை வைத்துக்கொள்வான்.. அதனால் இது ட்ரைனில் வரும் போது தான் விபத்து ஏற்பட்டுவிட்டது என்று போலீஸ் கேஸை முடித்தது.. அதை தன் தந்தை சொல்லி கேட்ட ரூபாவதி அதிர்ந்து போய்விட்டார். “அய்யோ குணால்.. குழந்தை வேணும் வேணும்னு நினைக்கும் போதுலாம் குழந்தை இல்லையே. இப்போ குழந்தை வரும் போது நீங்க இல்லையே.”என்று அவர் கதறிய கதறல் அந்த வீடே அதிர்ந்தது.. பார்ப்போரின் மனதை கலங்க வைத்தது இப்படியாக நாட்கள் போக… அந்த வீடே எப்போதும் சோகத்தில் தத்தளித்தது. அதும் ஒரு சிலருக்கு தான்.. பாதிப்பேருக்கு ஆனந்தமாக நாட்கள் ஓடியது.. ஆதியும் தாய் இல்லாமல் கொஞ்ச நாள் தேட ஆரம்பித்தவன்.. பின் தன் தந்தை காட்டிய அன்பில் தாயை மறந்தே போனான்..அனிஷா சிறு குழந்தை என்பதால் அவளை பார்த்துக்கொள்ள ஒரு நானியை வைத்து பார்த்துக்கொண்டார் விஷ்ணு தன் தந்தையை தவிற வேற யாருடனும் ஆதியை அவர் நெருங்கவிடவில்லை.. பின் ரூபாவதிக்கு அஞ்சலி பிறந்தாள் இப்படியாக நாட்கள் ஓட… ஆதியும் நன்றாக ஸ்கூல் முடித்தான் அப்போது தான் அவனுடன் விதுனும் சேர்ந்துக்கொண்டான்.. பின் இருவரும் காலேஜ் படிக்க பிரிய அப்போது தான் ஆதி ஆஸ்வதியை பார்த்தது காதலித்தது அனைத்தும்.. பின் ஆதி பாரின் போக… விஷ்ணு தான் தன் மகனை பிரிய அவதிப்பட்டார்.. ஆனால் சர்மா தான் விடாபிடியாக ஆதியை பாரின் அனுப்பி வைத்தார்.. ஏனென்றால் கொஞ்ச நாளாக வீட்டில் உள்ளவர்களின் மேல் தாத்தாவிற்கு நம்பிக்கை இல்லை ஏனென்றால் அவர் தன்னிடம் வேலைப்பார்த்த கார் ட்ரைவர் ஒருவரை ஒரு சமயம் வெளியில் பார்த்தார் அதும் தன்னுடைய பிஸ்னஸ் பார்ட்டியில் அதும் பணக்காரனாக… அதில் தாத்தா அதிர்ந்து போய் அவனை நிறுத்தி பேச்சிக்கொடுக்க… “சார் உங்களால தான் நா இந்த அளவுக்கு உயர்ந்துருக்கேன்.. ஹான் உங்களால இல்ல… உங்க வீட்ல உள்ளவங்களால… ஹான் ஆமா ஆமா அப்டிதான் சொல்லனும். தெய்வம் சார் அவங்க…..”என்று உள்ளே போன போதையில் அவன் ஏதோ உளற…. அவனை அடுத்த நாள் ஆட்கள் கொண்டு தேட அவனோ ஆள் தலை மறைவாகிவிட்டான். தாத்தாவிற்கு தன் வீட்டின் ஆட்கள் மீதே சந்தேகம் வந்தது அதும் தன் பிள்ளைகள் மேல் தான். அதனால் உடனே தாத்தா ஆதியை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார் அனிஷாவிற்கு எப்போதும் கூடவே ஒரு ஆள் பாதுகாப்பிற்கு ஆள் நியமித்தார்.. அது தான் வினிஜா இங்கு நடப்பது எல்லாம் வினிஜா.. தாத்தா இல்லாத நேரத்தில் அவருக்கு அழைத்து உடனே கூறிவிடுவார். முதலில் ஆஸ்வதி அந்த வீட்டிற்கு வந்ததும் வினிஜா அவளையும் சந்தேகமாக தான் பார்த்தார் ஆனால் போக போக அவளின் குணம் அறிந்து அவளை பிடிக்க ஆரம்பித்துவிட்டது.. இப்போது ஆதி அனைத்தையும் நினைத்து பார்த்தவன்.. “ஏன் இப்டி பண்ணிங்க….”என்றான் அபூர்வாவையும், ரியாவையும் பார்த்தவாறே. இல்லை முறைத்தவாறே.. “என்ன ஆதி என்ன சொல்ற….. எத சொல்ற…. எங்களுக்கு எதும் புரில……”என்றார் ரியா முழித்தவாறே.. “ஹாஹாஹ்ஹா..”என்று அந்த வீடே அதிர சிரித்த ஆதியின் கண்கள் கலங்கி போய் இருக்க…. அவன் உடல் நடுங்கிக்கொண்டு இருப்பதை பார்த்த ஆஸ்வதி அவன் அருகில் ஓடி வந்து “ஆதி.”என்று அவன் கையை இறுக்க பற்றிக்கொண்டாள் ஆதி ஆஸ்வதியின் கையை அழுத்திப்பிடித்தவாறே. தன் கண்களை ஆஸ்வதியின் புடவையில் துடைத்துக்கொண்டு.. “எ…. என் அம்மா என் அப்.பா..ஏன் ஏன் கொன்னீங்க….”என்று அந்த வீடே அதிர ஆதி கத்த…. அதில் அங்கிருக்கும் அனைவரும் அதிர்ந்து போனார்கள். ரியாவும், அபூர்வாவும் நடுங்கி போனார்கள்.. இவ்வளவு வருடம் காத்துவந்த ரகசியம்.. அந்த ரகசியம் வாங்கிய உயிர் பலி.. அதையும் தாண்டி வெளிவந்துவிட்டதே எப்படி.. என்று தான் இருவரின் மனதிலும் ஓடியது “என்ன இவ்வளவு வருஷம் காத்துட்டு வந்த ரகசியம் எப்டி வெளில வந்துதுனு யோசிக்கிறீங்களா..”என்று ஒரு குரல் வர அனைவரும் குரல் வந்த திசையில் பார்க்க அங்கு கம்பீரமாக நடந்து வந்தார் பெரியவர் அதனை கண்ட அபூர்வா மிரண்டே போனார்.. பெரியவர் நடந்து வந்தவர் நேராக போய் தன் மகள் அபூர்வா எதிரில் நின்று அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.. அதில் அதிர்ந்தவள் “ப்பா…”என்று ஏதோ சொல்லவர…. “கூப்டாத என்னை அப்டி கூப்டாத…..உன்ன என் பொண்ணுனு நினைக்கவே எனக்கு வெக்கமா இருக்கு. நீ என் பொண்ணும் இல்ல அவனுங்க என் பையனும் இல்ல…. ஏன் நீங்க மனுஷங்களே இல்லை.”என்று கத்தினார் தாத்தா. “தாத்தா.”என்றாள் ஆஸ்வதி அவர் உடல் நடுங்குவதை பார்த்து. அதில் தன்னை சமாளித்தவர். இருவரையும் முறைத்துக்கொண்டே “சொல்லுங்க… ஏன் என் மருமகளையும், என் மருமகனையும், என் பையன் விஷ்ணுவையும் கொன்னீங்க…..”என்றார் கோவமாக…. ஆம் மூவரையும் கொன்றது பரத், அஜய்,ரியா,பூனம், அபூர்வா,மித்ரன் தான். ஆதியின் தந்தை விஷ்ணுவின் கொலையில் மட்டும் ப்ரேமின் பேரும் சேர்ந்திருந்தது அன்று.. மதுராவிற்கு அனிஷா பிறந்து 6நாட்கள் ஆகிருந்தது.. அன்று தான் மூவரின் வாழ்க்கையும் முடிந்த நாள் ஆம்.. மதுரா, குணால், அதன் பின் பரத்தின் பிஏவாக இருந்த அப்பாவி மாதவி. மாதவி பரத்திடம் பிஏவாக இருந்தாள்.. பாவம் ஏழை பெண்..அமைதியான குணம் அதே போல அனைவரிடமும் ஏமாறும் குணம் கொண்டவள்.. அவளிடம் யாராவது ஆசையாக பேசினால், வருத்தமாக பேசினால் பாவம் அவளால் அதை தாங்க முடியாத இளகிய மனம் கொண்டவள் அப்படிதான் அவள் பரத்தின் வலையிலும் சிக்கிக்கொண்டாள்.. ஆம் பரத் அவளின் அமைதியான உடல் அழகு அவனை ஈர்த்தது அவளின் அழகு தனக்கு வேண்டும் என்று அவன் மனம் பேயாட்டம் போட்டது.. அதன் படி அவளை தன் வலையில் சிக்க வைக்க பரத் முயன்றான்.. முதலில் பரத்தை கண்டுக்கொள்ளாதவள் அதன் பின் பரத் கைகளில் இருந்த காயத்தை பார்த்து என்ன ஏது என்று கேட்க ஆரம்பித்தாள். தன் மனைவி தன்னை கொடுமைப்படுத்துவதாகவும்.. தன் திருமண வாழ்க்கை தனக்கு நரகமாகிட்டது என்றும் அவளிடம் கூறி அதன் மூலம் அவளின் ஆதரவை தேடுவது போல் அவளை பயன்படுத்திக்க ஆரம்பித்தான்.. ஆரம்பத்தில் பரத்தின் இந்த முயற்சி பலன் அளிக்காமல் போக… பின் கரைப்பவர் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல அவளுக்கும் இவனை பார்க்கும் போது பாவமாக இருக்க…. அவனை ஆதரிக்க ஆரம்பித்தாள்.. எப்போதெல்லாம் அவன் டென்ஷனாகவும், வீட்டை பற்றி புலம்பலாகவும் இருக்கிறானோ அப்போதெல்லாம் அவனுக்கு மாலதி அனைத்துமாக இருந்தாள்.. அப்படி என்றால் தன்னையே அவனுக்கு கொடுத்தாள்.. இதற்கு இடையில் எப்போது என்னை திருமணம் செய்துக்கொள்வீர்கள் என்று வேறு கேட்பாள்.. அவன் தான் இடை இடையில் என் மனைவியை டைவர்ஸ் பண்ணிவிட்டு உன்னை கல்யாணம் செய்தால் என் வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்று அவளுக்கு ஐஸை தூக்கி வைப்பான்.. அதில் பாவம் அந்த அப்பாவி பெண் உருகிவிடுவாள்.. இப்படியாக இவர்கள் வாழ்க்கை போக….. அப்போது தான் ஒரு மாதம் ஓடிக்கொண்டு இருக்க….. மாதவி கருவுற்றாள் அதில் வந்தது வினை. மாதவி இதனை அன்று இரவு தான் தெரிந்துக்கொண்டாள்.. அவளுக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.. இப்போதே இதை பரத்திடம் சொல்ல வேண்டும் என்று தோன்ற… உடனே பரத்திற்கு அழைத்துவிட்டாள் பரத்தும் போனை எடுத்து என்னவென்று கேட்க….. அவள் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்துவிட்டான் அவன் பேசிக்கொண்டே இருக்க அவன் கையில் இருந்து போனை பிடிங்கிய பூனம் அவள் கூறிய அனைத்தையும் கேட்டு விட்டாள்.. ஆனால் அதனை கேட்டு அவள் அதிரவெல்லாம் இல்லை.. அவளுக்கு தான் காதலிக்கும் போதே பரத்தை பற்றி நன்றாக தெரியுமே அவன் லீலைகளும் தெரியும்.. அவள் பரத்தை முறைக்க….. அவன்”இப்டி ஆகும்னு நினைக்கல…..”என்றான் தயங்கியவாறே.. அதில் இன்னும் முறைத்தவள்…”உடனே அவள கிளம்பி இங்க வர சொல்லு.”என்றாள் பரத் அவள் முகத்தை ஏன் என்பது போல் பார்க்க….. அவள் முறைத்த முறையில் பரத் போன் செய்து உடனே வீட்டிற்கு வருமாறு கூறினான்.. அவளும் சரி என்று சந்தோஷமாக தன்னவனை காண வர… பாவம் அவளுக்கு தெரியவில்லை இது தான் அவளின் கடைசி நாள் என்று அதற்குள் பரத் தன் தம்பி அஜயிடமும், அவன் மனைவி ரியாவிடமும்.. தன் தங்கை அபூர்வாவிடமும், அவள் கணவனிடமும் கூறிவிட்டான்.. அவர்களும் இவனை காண இவன் அறைக்கு வர…. பூனம் தான் யாரையும் கவனிக்காமல் ஏதோ யோசனையிலே சுற்றினார் அப்போது இரவு மூன்று மணி ஆகி இருந்தது பூனம் அனைவரையும் அழைத்து வீட்டின் பின் பக்கம் இருந்த ஒரு க்வார்ட்டஸின் சாவியை கொடுத்து இங்கு அவளை அழைத்து போகும்படி தன் கணவனிடம் சொன்னவள் மற்றவர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு அவர்களின் இல்லீகல் வேலைக்கு எல்லாம் உதவும் ட்ரைவர் விக்னேஷை வர வைத்தாள்.. அவன் வந்ததும் சில வேலைகளை சொன்னவள்.. ஜன்னல் வழியாக மாதவி உள்ளே வருவதை பார்த்த பரத் அவளை அப்படியே குவார்ட்டஸ் நோக்கி அழைத்து சென்றான்.. அவளும் தன்னவனின் கரு தன் வயிற்றில் வளர்வதை பெரிதாக நினைத்து அவனுடன் செல்ல… கதவை திறந்த வேகத்திற்கு பரத்தை அணைத்துக்கொண்டாள்.. “பரத் நா இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.. நம்ம பாப்பா.. என் வயித்துல……”என்று எதோ பேசிக்கொண்டே போக… அப்போது தான் ஒன்றை அவள் கவனித்தாள். அவள் மட்டும் தான் அவனை அணைத்திருக்கிறாள். அவன் இல்லை என்பதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனை பார்க்க…. அவனோ அவளை பார்த்து நக்கலாக ஒரு புன்னகை உதிர்த்தவன் “இது மாறி குழந்தைகளுக்கு நா அப்பானா. இந்நேரம் நிறைய குழந்தைகளுக்கு நா அப்பனா ஆகிருக்கனும்..”என்றான் நக்கலாக பரத் அதில் அதிர்ந்த மாதவி.. அவனிடம் இருந்து பிரிந்து..”என்ன சொல்றீங்க பரத் எனக்கு புரில……”என்றாள். “நாங்க புரிய வைக்கிறோம்…’என்றவாறெ அங்கு வந்தாள் பூனம். அவளுடன் சேர்ந்து அஜய்,ரியா,அபூர்வா,மித்ரன் அந்த கார் ட்ரைவர் அனைவரும்.. அவர்களை கண்டு மிரண்ட மாதவி. பரத்தின் பின்னால் போய் ஒழிந்துக்கொள்ள… அதை கண்ட பூனம் ஹாஹா என்று பெரிதாக புன்னகைத்தாள்.. அதனை பயத்துடன் பார்த்த மாதவி.. “பரத்.”என்று அவனை கூப்பிட அவனோ. அவள் கையை தன் தோளில் இருந்து எடுத்து உதறிவிட்டு தன் மனைவி பின்னால் போய் நின்றுக்கொண்டான் அதிலே மாதவி அடிப்பட்ட பார்வை ஒன்றை பரத்தை நோக்கி வீச…. “என்ன இப்டி பாவமா பார்த்தா என்ன அர்த்தம்..”என்றார் ரியா “ஏன் பரத் என்னை ஏமாத்துனீங்க……”என்றாள் கலங்கிய குரலில் அதில் புன்னகைத்தவன்..”நா உன்ன ஏமாத்துல….. நீதான் என் பர்ஃபாமன்ஸ்ல ஏமாத்துட்ட……”என்றான் கெத்தாக… அதை கேட்ட மாதவிக்கு அப்படி ஒரு கோவம் வந்தது.. தன்னை ஏமாத்திவிட்டு எப்படி எல்லாம் பேசுகிறான்.. என்று எண்ணிக்கொண்டவள்.. அவனின் சட்டை காலரை பிடித்திக்கொண்டு “உன்ன நா சும்மா விடமாட்டேன்.. என்னை ஏமாத்துன உன்ன…..”என்று அதற்கு மேல் பேசமுடியாமல் அவள் வாய் அடைக்கப்பட… அவள் தலையில் ஓங்கி ஒரு போடு போட்டார் பூனம் ஒரு கட்டையால் அதில் அதிர்ந்த மாதவி வலியில் கத்த முடியாமல் அந்த ட்ரைவர் அவள் வாயை மூடிக்கொள்ள….. அவள் வலியில் அனத்தினாள். “என்ன என்னை சும்மா விடமாட்டீயா.. முதல இங்க இருந்து உன்னால உயிரோட போக முடியுமானு பாரு.. அப்புறம் என்னை என்ன பண்லாம்னு பார்க்கலாம்.”என்ற பரத் அவள் வயிற்றிலே காலால் எத்த….. அவள் வலியில் பெரிதாக அனத்தினாள் “ஏய் விக்னேஷ் அவள அமுக்கி பிடிடா”என்ற அபூர்வா.. அவளின் வயிற்றில் கத்தியை இறக்கினார்…”என் அண்ணனுக்கு மனைவி ஆகனுமோ. இந்த வீட்ல் எப்போதும் எங்க ராஜியம் தான் இருக்கனும்…உன்ன விட்டுடுவோமா..”என்று அபூர்வா திரும்ப குத்த….. அங்கையே மாலதி உயிர் பிரிந்தது. “அடப்பாவீங்களா…”என்றது ஒரு குரல் ஜன்னல் பக்கம் நின்றாவாறே அது குணால் அவன் அருகில் பயந்த மிரண்ட பார்வையுடன் மதுரா.
Adapavingala